• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க சொல்ல வேண்டிய அன்னபூரணி மந்திரம்!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பிரம்மாவின் தலையைக் கொய்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க சிவனுக்கே அன்னம் வழங்கியவர் அன்னபூரணி. ஒரு கையில் அட்சய பாத்திரமும், மற்றொரு கையில் தங்கக் கரண்டியும் வைத்து உயிர்கள் அனைத்துக்கும் தொடர்ந்து உணவு வழங்கி வருகிறார் அன்னை. நம் இல்லங்களிலும் உணவு பற்றாக்குறை வராமல் தடுக்க அன்னையின் திரு மந்திரத்தை தினமும் சொல்லி வர வேண்டும். தினமும் 16 முறை இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் உணவு பற்றாக்குறை நம் இல்லங்களில் வராது. மேலும் அன்னபூரணியின் அருளால் ஆரோக்கியம், ஆயுள் கூடும்.

மந்திரம்:

அர்காபாமருணாம் பராவ்ருததநூமாநந்த பூர்ணாநநாம்

முக்தாஹார விபூஷிதாம் குசபராநம்ராம் ஸகாஞ்சீகுணாம்

தேவீம் திவ்யரஸாந்ந பூர்ணகர காம்போஜ தர்வீகராம்

த்யாயேச் சங்கர வல்லபாம் த்ரிநயநாமம்பாம் ப்ரவலம்பாலகாம்

பொருள்:

சூரியனைப் பழிக்கும் செந்நிறத்தோடு மந்தஹாஸம் ததும்பும் பூரண சந்திரனைப் போன்ற திருமுகத்தோடு முக்தாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு அன்னபூரணி காட்சியளிக்கிறாள். அவளின் கைகளில் அமிர்தம் போன்ற அன்ன பாத்திரம் பிரகாசிக்கின்றது.

அதிகாலையில் எழுந்து குளித்து பூஜை அறையில் அமர்ந்து, அன்னபூரணி படத்தைப் பார்த்து இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். 16 முறை சொல்லி முடிக்கும் போது நமக்கு வேண்டிய வரத்தை நினைத்து அன்னையை வணங்க வேண்டும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top