• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உதிரி - 2 - ‘கள்’ (பன்மை) விகுதி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஹலோ எழுத்தாளர்ஸ்ஸ்ஸ்...

இந்த உதிரில நாம் ‘கள்’ விகுதி பற்றிப் பேசுவோமா?

போன பகுதில நாம பார்த்த விகுதிகள் வினைச்சொல்லுக்கானது.

‘கள்’ ஒரு பெயர்ச்சொல் விகுதி.

இது பன்மையைக் குறிக்கப் பயன்படுது.

எடுத்துக்காட்டுகள்:

ஒருமை - பன்மை

மாடு - மாடுகள்
பூ - பூக்கள்
எழுத்து - எழுத்துகள்

’கள்’ விகுதி பற்றி நான் சொல்ல விரும்புவது இரண்டுதான்:

1: ‘கள்’ பன்மை அஃறிணைக்கு மட்டுமே உரியது:

தமிழில் மனிதர், தேவர், நரகர் அல்லாத பிற அனைத்துமே அஃறிணைதான்.
(இது கொஞ்சம் குத்துமதிப்பான வரையறைதான்!)

உயிருள்ள விலங்குகள், பறவைகள், பூச்சிகள் போன்றவையும், உயிரற்ற பொருள்களும் அஃறிணை.
(சில சமயம் விலங்கு பறவைகளையும் நாம் உயர்திணை போலப் பேசலாம், தப்பில்ல! இதற்கு வழுவமைதினு பேரு!)

ஆடு - ஆடுகள், கிளி - கிளிகள், எறும்பு - எறும்புகள், மரம் - மரங்கள், சட்டை - சட்டைகள்...

உயர்திணையில் உள்ள மனிதரின் உறுப்புகளைத் தனியாகக் குறிப்பிடும்போதும் அஃறிணையாகச் சொல்வதுதான் வழக்கு. எனவே அவற்றுக்கும் இந்தக் ‘கள்’ விகுதி பொருந்தும்.

கைகள், கண்கள், கால்கள்...

ஆனால், உயர்திணைக்குக் ‘கள்’ விகுதி சேர்க்கக் கூடாது என்பதுதான் இலக்கணம்.

உயர்திணையின் ஒருமையில் ஆண் / பெண் வேறுபாட்டைக் காட்டும் விகுதிகளையும் (அன்/ஆன், அள்/ஆள்/தி),
உயர்திணையின் பன்மையில் அவ்வேறுபாடில்லாத ‘அர்/ஆர்’ விகுதிகளையும் பயன்படுத்த வேண்டும்.

எனவே,

மனிதர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், வாசகர்கள், ஆண்கள், பெண்கள்... என்று ‘கள்’ சேர்ந்து வரும் அனைத்து உயர்திணை பன்மை சொற்களும் பிழையானவைதான்!

மனிதன் - ஒருமை,
மனிதர் - பன்மை!

எழுத்தாளன் / எழுத்தாட்டி - ஒருமை
எழுத்தாளர் - பன்மை
(இதையே gender neutral ஆகவும் பயன்படுத்தலாம்!)

மாணவன் / மாணவி - ஒருமை
மாணவர் - பன்மை

வாசகன்/ வாசகி - ஒருமை
வாசகர் - பன்மை

ஆண் / பெண் - ஒருமை
மக்கள் - பன்மை

இந்த ‘மக்கள்’ளில் வரும் ‘கள்’ நாம் மேலே குறித்த அஃறிணைப் பன்மை விகுதி அல்ல, அது சொல்லோடே இருக்கும் பகுதி. இதனைத் தனியாகப் பிரித்தால் (மக்) பொருளே இருக்காது! (எனவே குழம்பிக்கொள்ள வேண்டா!)

எனவே, ‘கள்’ விகுதியை உயர்திணைக்குச் சேர்க்காமலே எழுதிப் பழகுவோமே?

(ஆனால், இவ்வாறு உயர்திணைக்கும் ‘கள்’ளைச் சேர்ப்பது பெருகிவிட்டதனால், ‘வழுவமைதி’ என்ற வகையில் இதனையும் இலக்கணம் ஏற்றுக்கொள்கிறது. ஆக, இவ்வாறு எழுதுவது பிழை என்று ஆகாது, ஆனால், இதைத் தவித்தால் நன்றாக இருக்கும் என்பதே என் கருத்து!)

2: ‘கள்’ விகுதிக்கு முன் வல்லினம் மிகாது (பெரும்பான்மையாக!):

பெரும்பான்மையும் ‘கள்’ விகுதிக்கு முன்னர் வல்லினம் மிகாது.

மாடு - மாடுகள்
எழுத்து - எழுத்துகள் (’எழுத்து*க்*கள்’அல்ல!)

ஆனால்,

பூ - பூக்கள்

இது ஏன்?

’பூ’ என்பது ஓரெழுத்து ஒருமொழி என்ற சொல். ஒரே எழுத்தே ஒரு சொல்லாக இருந்து பொருள் தருவது. (தீ, நீ, வா, போ, பை... என்று இப்படித் தமிழில் 50 மேற்பட்ட ஓரெழுத்தொரு மொழிகள் உள்ளன. உங்கள் நினைவிற்கு வருவனவற்றைக் கருத்தில் பட்டியலிடுங்கள் பார்ப்போம்...)

ஓரெழுத்தொருமொழிகளை அடுத்து வல்லினம் மிகல் வேண்டும்.

‘கள்’ளுக்கு முன் வல்லினம் மிகாது x ஓரெழுத்தொரு மொழிக்கு முன் வல்லினம் மிகும்

இந்த இரண்டு விதிகளும் மோதிக்கொள்கையில் (priority clash) இவற்றில் எதற்கு முன்னுரிமை அளிப்பது?

இதன் விடை நமக்கு முன்பே தெரிந்ததுதான்: உச்சரிப்பு!

பூகள்’ என்பதைவிட ‘பூக்கள்’ உச்சரிக்க ஏற்றதாய் இருக்கிறதல்லவா? எனவே, இங்கு வல்லினம் மிகும்!

மற்றபடி, பொதுவாய் ‘கள்’ விகுதிக்கு முன் வல்லினம் மிகாது என்றே கொள்க!

ஆக,

வாழ்த்துக்கள் அல்ல, வாழ்த்துகள்.

அவ்வாறே, நம்மில் பலரும் ‘நாட்கள்’ என்று எழுதுகின்றோம்.

’நாட்கள்’ என்று எழுதினால் அது வேற்றுமை புணர்ச்சி.

‘நாளினது கள்’ என்று 6ம் வேற்றுமையாக விரியும்.

(அதாவது, அந்த நாளில் புதிதாக இறக்கிய fresh கள் (palm juice) என்று பொருள்தரும்!

(இங்கே ‘கள்’ என்பது பனங்கள் / தென்னங்கள்ளைக் குறிக்கும் சொல்லாகிறது!)

‘கள்’ என்ற பன்மை விகுதி சேர்கையில் ‘நாள்கள்’ என்று வருதலே சரி!

எனவே, ‘நாட்கள்’ பிழை, ‘நாள்கள்’ சரி!

----

கொசுறு-1:

பல இடங்களில் ‘சுவற்றில்’ என்று எழுதுவதைக் காண்கிறேன்.

சுவர்’ என்பதுதானே அசல் சொல்?

எனில், அதனோடு ‘இல்’ (7ம் வேற்றுமை உருபு) சேர்கையில் எப்படி வரும்?

சுவர் + இல் = சுவரில்

இப்படித்தானே?

இங்கே ‘சுவற்றில்’ என்று ஏன் வருகிறது?

(அதாவது, இடையின ரகரம் இருக்குமிடத்தில் வல்லின றகரம் எப்படி வருகிறது?!)

வயிறு - வயிற்றில்,
கயிறு - கயிற்றில்
எயிறு - எயிற்றில் (எயிறு - பல்)
கிணறு - கிணற்றில்

என்று வருதல் சரி,

சுவர் - சுவரில் என்றுதான் வர வேண்டும்!

(ஒரு வேளை ‘சுவறு’ என்று இருந்தால் ‘சுவற்றில்’ என்று வருதல் சரி, ஆனால் அப்படி இல்லையே!)

இடையின (ர்) வல்லின (ற்) ர/றகரங்களைப் பற்றி விரிவாக இன்னொரு பதிவில் பேசுவோம்...
---

கொசுறு-2:

ஆண்/ பெண் விகுதி பற்றிக் குறிப்பிட்டேனல்லவா. இதிலும் ஒரு குழப்பம் அடிக்கடி வருகிறது.

ஒருவன்’ - இதன் பெண்பால் என்ன?

பலரும் ‘ஒருவள்’ என்று பிழையாக எழுதுகின்றனர்!

ஒருத்தி’ என்பதே சரி!

‘ஒருவனுக்கு ஒருத்தி’ (பண்பாடு மட்டுமல்ல, இலக்கணத்திலும் இதுதான் சரி!)

அவ்வாறே, ‘ஒருவர்’ என்பது இலக்கணப்படி குழப்பமான ஒரு சொல், ‘ஒரு’ என்ற ஒருமைக்கு ‘அர்’ என்ற பன்மை விகுதியைச் சேர்க்கிறோம்!

ஆனால், பண்டைய காலந்தொட்டே ‘அர்’ என்பது பன்மையாக மட்டுமின்றி மரியாதையைக் குறிக்கும் விகுதியாகவும் பயன்பட்டு வந்துள்ளது.

எனவே, ஒருவர், ஆசிரியர், எழுத்தாளர் என்பன மரியாதையான வழக்காகவும், ஆண்/பெண் பேதம் காட்டாத (gender neutral) சொற்களாகவும் இன்று வழங்கப்படுகின்றன. இது பொருத்தமானதுதான்!
---

நன்றி
--வி
 
Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
மிகப் பயனுள்ள பதிவு ஆசிரியரே......தை கை மை வை தை பை கோ ஆ மா இவையெல்லாம் எனக்குத் தெரிந்த சில ஓரெழுத்து ஒருமொழிகள்
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சியோ அதிர்ச்சி.. ????.. தனியா ஒரு நோட் போட்டு குறிப்பு எடுக்கணுமே. ??
 
இதெல்லாம் 11 மற்றும் 12 வகுப்பு இலக்கணம் தான் ஆசிரியரே....ஆனால் இலக்கணம் நடத்தும் அளவுக்குப் பல ஆசிரியர்களுக்குப் பொறுமை இல்லை என்பதை விடப் பல இடங்களில் தமிழ் வகுப்புக்கென மிகக் குறைவான பாடவேளைகளே ஒதுக்கப்படுகிறது....
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
மிகப் பயனுள்ள பதிவு ஆசிரியரே......தை கை மை வை தை பை கோ ஆ மா இவையெல்லாம் எனக்குத் தெரிந்த சில ஓரெழுத்து ஒருமொழிகள்
அருமை... (y)(y)

பொருளோடு சொன்னால் பிறருக்கும் உதவும்!

(சிலது நன்கு அறியப்பட்ட சொற்கள்தான்!)
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சியோ அதிர்ச்சி.. ????.. தனியா ஒரு நோட் போட்டு குறிப்பு எடுக்கணுமே. ??
ஆமா, நோட்டு வேணா, ஒரு A4 தாளில் குறித்து, அத்தாளைக் கண்ணில் படும்படி ஒட்டி வைத்துக்கொள்க. அடிக்கடிப் பார்த்தால் சில நாள்களில் மனத்தில் பதிந்துவிடும்!

வல்லினம் மிகல் / மிகாமைக்கு நானே ஒரு ‘விரைவுக் குறிப்பு’ தயாரித்து வைத்துள்ளேன்... அதை இறுதியில் பகிர்கிறேன்...
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
இதெல்லாம் 11 மற்றும் 12 வகுப்பு இலக்கணம் தான் ஆசிரியரே....ஆனால் இலக்கணம் நடத்தும் அளவுக்குப் பல ஆசிரியர்களுக்குப் பொறுமை இல்லை என்பதை விடப் பல இடங்களில் தமிழ் வகுப்புக்கென மிகக் குறைவான பாடவேளைகளே ஒதுக்கப்படுகிறது....
ஒரு சப்பானிய பழமொழி இருக்கு: சிங் மங் ஜுன்... சரி சரி, தமிழ்லயே சொல்றேன் :LOL::LOL::LOL::

மனிதன் மலைகள் தடுக்கி விழுவதில்லை, சிறு கற்கள் தடுக்கித்தான் விழுகிறான்!

அடிப்படை இலக்கணத்தில்தான் நாம் அதிகம் பிறழ்கின்றோம்... எனவேதான் இவற்றில் கவனம் செலுத்துங்கள் என்கிறேன்!
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஆமா, நோட்டு வேணா, ஒரு A4 தாளில் குறித்து, அத்தாளைக் கண்ணில் படும்படி ஒட்டி வைத்துக்கொள்க. அடிக்கடிப் பார்த்தால் சில நாள்களில் மனத்தில் பதிந்துவிடும்!

வல்லினம் மிகல் / மிகாமைக்கு நானே ஒரு ‘விரைவுக் குறிப்பு’ தயாரித்து வைத்துள்ளேன்... அதை இறுதியில் பகிர்கிறேன்...
சரிங்க ஆசிரியரே... அப்படியே செய்து பார்க்கிறேன்.

விரைவுக் குறிப்பிற்கு நன்றி. ?? நான் கொஞ்சம் கொஞ்சமாக உச்சரித்து பார்த்து எழுதத் தொடங்கிவிட்டேன். ☺☺
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top