• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உனை சேர தவமிருப்பேன்-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

VarshaShiv

நாட்டாமை
Joined
Jul 31, 2019
Messages
30
Reaction score
68
Location
Karnataka
காலையிலேயே தளிரகத்திற்கு(சுகு அனி வீடு)தன் ட்ரேட்மார்க் புன்னகையோடு வந்துவிட்டாள் சின்மயி.எங்கோ தொலைவிலிருந்து வரவில்லை அவள்.ஒரு பெரிய காம்பௌன்ட் உள்ளே முப்பது அடி தூரத்தில் இரு பங்களாக்களாக கட்டிக் கொண்டிருந்தனர் அவர்கள் தந்தையர்.நடுவில் சிமெண்ட் பாதை இரு வீட்டையும் இணைத்தது.தளிரகத்தை விட சின்மயியின் வீடு நடராஜனின் விருப்பப்படி சிறியதாக கட்டப்பட்டது.அவர்கள் மூவரின் இறப்பிற்குப் பின் மரகதம் லஷ்மியை தளிரகத்திற்கே வந்துவிடும்படி கூறினார்.ஆனால் ஏழை என்ற தாழ்வு மனப்பான்மையில் முதலிலிருந்தே ஊறிய லஷ்மி அதற்கு ஒப்பவில்லை.சுகேத் படிப்பு முடிந்து அனி வளர்ந்து வாலிபனாகவும் தங்கள் வீட்டிற்கே மகளோடு வந்துவிட்டார் அவர்.ஆனால் சின்மயியால் அப்படி அவர்களைப் பிரிந்து இருக்க முடியவில்லை.

முடிந்தவரை அங்கேயே இருக்க முயன்றாள் அவள். அவர்கள் வேறு வீடு என்பது பெயரளவில் தான்.தூங்கும் சமயம் தவிர பெருமளவு சின்மயி இருப்பது தளிரகத்தில் தான் என்று கூற வேண்டியதில்லை.சுகேத்தோடு செல்லம் கொஞ்சுவது அனியோடு கோழி சண்டைப் போடுவது அத்தை மரகதத்தோடு சமைக்கிறேன் என்று சமையலறையை ரணகளப்படுத்துவது என அவளுக்கு அங்கே வேலை அதிகம்.

அன்று அவள் வந்த போது சகோதரர்கள் இருவரும் காலை உணவுக்கு அமர்ந்திருந்தனர்.சூடான தோசைகளை அவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தார் மரகதம்.சின்மயியைக் கண்டவர்,

"சின்னும்மா!வாடா நீயும் டிபன் சாப்பிடு" வந்து சுகேத் அருகில் அமர்ந்தவள்,

"இல்ல அத்தே!நா இப்போதான் டிபன் சாப்பிட்டு வந்தேன்..வயிறு ஃபுல்...உங்க ஸ்பெஷல் காப்பிக் கொடுங்க போதும்"என்றாள்.

மணம் கமழும் அவர் காப்பியை எப்போதும் போல ரசித்துக் குடித்தவள் அனிகேத் டிபன் முடிந்து எழவும், "அனி அனி!நீ காப்பிய குடி...நா போயி உன் பேக் எடுத்திட்டு வரேன்..ஓகே.."என்று மீதமிருந்த காப்பியை ஒரே மடக்கில் குடித்தவள் அவன் அறை நோக்கி விரைந்தாள்.

அங்கே அவனின் பேக் பீரோ டேபிள் என எங்கேயும் அவள் தேடும் பொருள் கிடைக்கவில்லை.

"என்னத்த தேட்ற சின்னு?"என்ற அனிகேத்தின் குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்.

"என்ன திருதிருன்னு முழிக்கற... என்னிக்கும் இல்லா திருநாளா நீ பேக் எடுத்திட்டு வரேன் சொல்லும் போதே ஏதோ விஷயம்னு தெரிஞ்சிடுச்சி...ம் சொல்லு எத தேட்ற?"

முதலில் சிறிது தயங்கியவள் பின் அவளின் பிறவி குணமான தைரியம் வரப் பெற்றவளாக,

"வேற எத தேடுவேன்...எல்லா ப்ரியங்களுடன் ப்ரியா எழுதின லவ் லெட்டர தான் தேடினேன்...எங்கடா அது? எங்கேயும் காணோம்!"

"அது போக வேண்டிய இடத்துக்கு போயாச்சு"என்று குப்பைக் கூடையைப் பார்த்தான்.

அவன் பார்வை போன திசையை பார்த்து விழிவிரித்த சின்மயி அதில் சுக்குநூறாக கிழித்து எறியப்பட்ட லெட்டரை பரிதாபமாகப் பார்த்தாள்.

"டேய் அணுகுண்டு!ஏன்டா இப்படி பண்ண?பாவம்டா அவ..."

"இத பார் சின்னு!நீ அவளுக்கு சப்போர்ட்டா பேசாதே! காலேஜுக்கு வரது படிக்க...லவ் லெட்டர் கொடுக்க இல்ல...அப்பாம்மா எவ்வளவு கனவுகளோட பசங்கள படிக்க வைக்கறாங்க...இவங்க என்னடான்னா லவ்வு கிவ்வுன்னு வாழ்க்கையே வீண்ணடிக்கறாங்க... எனக்கு இப்ப படிப்பு அது முடிஞ்சதும் பிஸ்னஸல அண்ணாக்கு ஹெல்ப் பண்றது எல்லாத்த விட முக்கியமா அண்ணனோட கல்யாணம்...வேற எதுக்கும் இப்போதைக்கு என் வாழ்க்கைல இடமில்லை...புரிஞ்சுதா...போயி அவளுக்கும் இத புரிய வை"என்று படபடத்தவன் தன் பேக்கை எடுத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியேறினான்.

'டேய் நீ இப்படியே முறுக்கிக்கிட்டு திரிஞ்சே ப்ரியா என்ன பல்லு போன பாட்டிக் கூட உன்ன திரும்பி பாக்காதுடா'என்று மனதில் அவனை திட்டியவள் நேரமானால் தன்னை விட்டுவிட்டு அவன் சென்றுவிடும் அபாயமிருந்ததால் வாயிலை நோக்கி புள்ளிமானாய் ஓடினாள்.

"ஆல் தி பெஸ்ட் குட்டிம்மா!"

"பரிட்சை நல்லா எழுதுடா கண்ணு" என்ற சுகேத் மரகத்தின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தபடி 'ட்ரும் ட்ரும்'என பைக்கை சத்தம் செய்த அனியின் பின்னே சென்று அமர்ந்தாள்.

????????????

பௌர்ணமி நிலவின் ஒளியில் கடல் வெள்ளி பாளமாக ஜொலித்தது.மும்பையின் அமைதியான பீச்சான கோரையில் கடலின் அழகை ரசித்தவாறு அமர்ந்திருந்தனர் சுகு அனி மற்றும் நம் வாயாடி சின்னு.

அதுவரை அவர்கள் அரட்டையை கேட்டவாறு மவுனமாக இருந்த அனி,

"அண்ணா!இனிமே என்னால பொறுக்க முடியாது.."என்று அவன் முடிக்கும் முன்பே

"முடியாது என்றால் பொங்கியெழு தமிழா! பொங்கியெழு!"என்று வாக்கியத்தை முடித்தாள் சின்னு.

"ஏய் ஏதாவது சீரியஸா ஒரு டாபிக் பேச விட மாட்டியா... எல்லாத்துக்கும் கவுண்ட்டர் கொடுக்க வேண்டியது... கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா?"

"சரிங்க ஆபிஸர்...கப் சிப் காரா பூந்தி"என்று வாய் மேல் விரல் வைத்துக் கொண்டாள் அவள்.

அவள் சைகையில் சிரிப்பு வந்தாலும் அதை காட்டினால் மீண்டும் அவள் குறும்பை ஆரம்பித்து விடுவாள் என்ற நிச்சயத்தில் அதை வாயினுள் அடக்கிக் கொண்டான் அனி.

"ஹாஹாஹா... நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்களே...திருத்தவே முடியாது..அனி நீ என்ன சொல்ல வந்த?"என்றான் சுகேத்.

"அண்ணா இன்னும் எத்தனை நாள் தனியாளா இருக்கப் போற? சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க... என்ன சொல்ற பொண்ணு பாக்க ஆரம்பிக்கலாமா?"

"இப்ப அதுக்கு என்னடா அவசரம்?நீ படிப்ப முடிச்சு ஆபிஸ்ல வந்து சேரு...குட்டிம்மா படிப்ப முடிக்கட்டும்... அப்புறம் இத பத்தி யோசிக்கலாம்.."

"ஆமா இன்னும் பக்கத்து வீட்டு நாய் குட்டி வளர்ந்து குட்டி போடட்டும்...சின்னு சமையல் கத்துக்கட்டும்... இப்போதைக்கு ஆகாததையெல்லாம் காரணம் சொல்லு...அண்ணா அம்மா போனப்புறம் களையிழந்து போன வீடு அண்ணியால மறுபடியும் ஒளிவீசனும்...ப்ளீஸ்ணா ஒத்துக்க"என்ற அவன் குரல் மறைந்த தாயை எண்ணி தழுதழுத்தது.

சுகேத் சின்மயியின் கண்களும் கலங்கி விட்டது சகுந்தலாவை நினைத்து.அவர் உயிரோடு இருக்கும் வரை அவர்கள் மூவரையும் தன் அன்பைப் பொழிந்து வளர்த்தார்.லஷ்மியை விட சகுந்தலாவே சின்மயிக்கு பாசமிகு அன்னை.

உயிரான அந்த தாயின் நினைவில் மவுன கண்ணீர் விட்டனர் மூவரும்.

"குட்டிம்மா!அம்மா எப்பவும் பாட்ற அந்த பாட்ட பாடுடா...கேக்கனும் போல இருக்கு"என்றான் சுகேத் கலங்கிய குரலில்.

கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட சின்மயி தன் தேன்மதுரக் குரலில் அவளின் சக்கும்மா எப்போதும் அவர்களுக்காக பாடும் பாடலை பாடினாள்.

"பிள்ளை நிலா இரண்டும்

வெள்ளை நிலா லல ல்லா பிள்ளை
நிலா இரண்டும் வெள்ளை நிலா


அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண்மேலே துள்ளும் மான்போலே

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா

என்னாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம் தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும் தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும் ஏதேதோ ஏழை மனம் நினைக்கும் தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை கையிரண்டில் காதோறம் அன்னை மனம் பாடும் கண்கள் மூடும்

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா

அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண்மேலே துள்ளும் மான்போலே

ஆளான சிங்கம் இரண்டும் கைவீசி நடந்தால் காலடியில் பூமி எல்லாம் அடங்கும் சிங்காரத்தங்கம் ரெண்டும் தேர்போல வளர்ந்தால் ஆகாயம் வந்து இங்கே வணங்கும்

எங்களால் தாயே உயிர் சுமந்தாயே எங்களால் தாயே உயிர் சுமந்தாயே

கண்களிலேயே முத்துச்சுரம் காப்பாத்தி கட்டிவைத்தாய் நீயே எங்கள் தாயே

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண்மேலே துள்ளும் மான்போலே"

சுகேத்தின் தோளில் சாய்ந்தவாறே பாடி முடித்தாள் சின்மயி.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
வர்ஷா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
வர்ஷாஷிவ் டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top