• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 10

Messages
665
Likes
1,697
Points
133
Location
Bangalore
#1
ஹாய் பிரெண்ட்ஸ்...??? உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே கதையின் அடுத்த யூடி இதோ???
ஒரு வழியா Mr.Perfect பேரு என்னனு ஹீரோயினுக்கு தெரிஞ்சுடுச்சு???
அவனோட பேர கரெக்ட்டா கெஸ் பண்ண எல்லாருக்கும் வாழ்த்துக்கள்???

1574142946102.jpg

ஈர்ப்பு 10

கல்லூரி முடிந்து 1 வாரமானது. வீட்டிலேயே இருந்த எனக்கு ‘போர்’ அடித்தது. அப்போதெல்லாம் என் அண்ணனைக் கலாய்த்தும் அம்மாவிடம் அரட்டை அடித்தும் பொழுதை ஓட்டிக் கொண்டிருந்தேன். இவையெல்லாம் என் அப்பா இல்லாதபோது தான். அவர் இருந்தால் என் அறையை விட்டே வெளியே வரமாட்டேன்.

அந்த ‘காட்ஸில்லா’வோ எந்நேரமும் மொபைலே கதியெனக் கிடந்தாள். (‘ஷப்பா ஆனந்த் உனக்கெல்லாம் கோவில் கட்டி கும்பிடனும்… இவை பேசுறத 5 நிமிஷம் கூட என்னால கேக்க முடியாது… ஆனா நீ நாள் முழுக்க கேட்டுட்டு இருக்க???’)

அன்றும் அப்படி தான் என் அப்பா வேலைக்குச் சென்ற பின் மெதுவாக ஹாலை எட்டிப் பார்த்தேன். அபி காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நான் வேண்டுமென்றே அவன் காதில் விழுமாறு என் அம்மாவிடம், “அம்மா என்னால 1 வாரம் கூட சும்மா வீட்டுல இருக்க முடியல. சிலர் எப்படி தான் 2 வருஷமா இருக்காங்களோ?” -இடையில் என் அம்மா சைகை செய்ததை மதியாமல் பேசிக்கொண்டிருந்தேன்.

அப்போது ‘டைனிங் டேபிளில்’ சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தபோது அபி கோபத்தில் தட்டை தள்ளிவிட்டு சென்றிருப்பது புரிந்தது. ‘எப்பயும் அபி இதுக்கெல்லாம் கோச்சுக்க மாட்டானே… என்னாச்சு இன்னிக்கு… கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டோமோ….???’

“ஏன்டி நீயும் உங்க அப்பாவும் என் பையன் சாப்பிடுறப்போ தான் ஏதாவது சொல்லுவீங்களா? எப்போ பாத்தாலும் அவன குறை சொல்லிட்டே இருக்குறது…” என்று மகன் பாசத்தில் என்னைத் திட்டினார்.

“ஆமா உங்க பையன சின்னதா ஏதாவது சொன்ன கோபம் வந்துடுமே… சரி உங்க ஹஸ்பண்ட் என் அண்ணாவ என்ன சொன்னாரு?”

“அது என்னடி உங்க ஹஸ்பண்ட்… அப்பானு சொல்ல மாட்டியோ…”

“நீங்களும் தான முதல உங்க அப்பானு சொன்னிங்க… இப்போ அதுவா பிரச்சன… எதுக்கு திட்டுனாருன்னு சீக்கிரம் சொல்லுங்க…”

“வேற எதுக்கு திட்டுவாரு… அவன் வேலைக்கு போகாம இங்கயே சுத்திட்டு இருக்கான்னு அவரு பிரென்ட் கம்பெனில வேலைக்கு சொல்லிருந்தாரு. ஆனா உங்க அண்ணன் அங்க போகாம பிசினஸ் பண்றதுக்கு லோன் தேடி அலஞ்சுட்டு இருக்கான். அதான் மனுஷனுக்கு கோபம் வந்து திட்டிட்டாரு.”

“அம்மா சரியான ஆளு நீ. அவன கொஞ்சுரப்போ ‘உன் பையன்’னு சொல்லிட்டு இப்போ திட்டுறப்போ ‘என் அண்ணனா’. ஆனா உன்ன திட்டினாலும் நீ ‘உன் ஹஸ்பன்ட்’ க்கு தான சப்போர்ட் பண்ணுற”

“போடி வாயடி… இங்க நின்னு வம்பளக்குறத விட்டுட்டு அங்க போய் உங்க அண்ணனை சமாதானப்படுத்து.”

அபியோ அவன் கட்டிலில் கைகளில் தலையைத் தாங்கி குனிந்து அமர்ந்திருந்தான். நான் அவன் அருகில் சென்று அமர்வது தெரிந்திருந்தும் எந்தவித எதிர்வினையும் இல்லாமல் இருந்தான்.

“டேய் அண்ணா ஏன்டா இப்படி இருக்குற. நம்ம அப்பா தான திட்டுனாரு. என்னமோ இதான் ஃபர்ஸ்ட் டைம் திட்டு வாங்குற மாதிரி ஃபீல் பண்ணிட்டு இருக்க. ஃப்ரீயா விடுடா…” என்று அவனை சாதாரணமாக்கக் கூறினேன்.

“இன்னிக்கு ரொம்ப திட்டிட்டாரு… என்னமோ நான் பணம் சம்பாதிக்க துப்பில்லாத மாதிரி ரொம்ப பேசிட்டாரு…”

“விடு அபிண்ணா அப்பாவ பத்தி தான் உனக்கு தெரியும்ல… லோன் மேட்டர் என்னாச்சு?”

“சீக்கிரம் கிடைச்சுரும்னு சொல்றாங்க… நேத்து கூட என் பிரென்ட் தான் ‘ஷ்யூரிட்டி சைன்’ போட்டான்.”

“யாருடா அண்ணா அது உன்ன நம்பி சைன் பண்ண பிரென்ட்…???”

“அடிங்க்… இது என்னோட புது பிரென்ட். அவனும் இன்ஜினியரிங் தான் படிச்சான்… அவன்…”

“ஸ்டாப் ஸ்டாப் உன் பிரென்ட் புராணம்லாம் எனக்கு வேண்டாம்டா அண்ணா…”

“மேடம் சமாதானப்படுத்துறேன்னு அடிக்கடி என்ன ‘டா’ போட்டு கூப்பிட்ட மாதிரி இருக்கே…”

“??? அதெல்லாம் ஒரு ப்லொவ்ல வந்திருக்கும் டா அபி” என்று கூறிவிட்டு ஓடி வந்துவிட்டேன்.
ஹாலில் பேச்சு சத்தம் கேட்டவுடன் அங்கு சென்று பார்த்தேன். அங்கே என் பள்ளித் தோழி ப்ரியா அமர்ந்திருந்தாள். நாங்கள் 6ஆம் வகுப்பு படிக்கும்போதே அவள் வீட்டில் மாற்றலாகி டெல்லி சென்றுவிட்டனர். அதற்குப்பின் இன்று தான் நேரில் பார்த்தேன். (முகநூல், புலனம் ஆகியவற்றில் தொடர்பில் தான் இருந்தோம்)


“ஹே ப்ரியா வாட் அ சர்ப்ரைஸ்… எப்படி இருக்க? எப்போ இங்க வந்தீங்க? இங்க வரீங்கன்னு ஒரு போன் கூட பண்ணி சொல்லல…”

“வந்து 1 மாசம் ஆச்சு டி. திடீர்னு பிளான் பண்ணது டி. அதான் சொல்ல முடியல. எல்லாம் செட் பண்ணுறதுக்கு இவ்ளோ நாள் ஆச்சு.. நீ எப்படி இருக்க?”

ஒரு முறை சுற்றிவிட்டு, “அப்படியே தான் இருக்கேன்னு நினைக்குறேன்” என்று கண்ணடித்தேன்.
இருவரின் சிரிப்பு சத்தம் கேட்டு என் அம்மாவும் அண்ணனும் வெளியில் வந்தார்கள்.


“அம்மா இது யாருன்னு தெரியுதா. ப்ரியா மா…”

“அதெல்லாம் நாங்க முன்னாடியே பேசிட்டோம் டி. இந்த மா காபி எடுத்துக்கோ… வீட்டுல அப்பா அம்மாலாம் நல்லா இருக்காங்களா?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க ஆண்ட்டி. நீங்க அங்கிள்லாம் எப்படி இருக்கீங்க?”

“எல்லாரும் நல்லா இருக்கோம் மா…”

“அம்மா நான் வெளியே கிளம்புறேன்” என்ற அபி ப்ரியாவைப் பார்த்து வரவேற்பாக தலையசைத்துவிட்டு கிளம்பிவிட்டான்.

நாங்களும் பத்து வருட கதையைப் பேசிக்கொண்டிருந்தோம். நேரமாகியதை உணர்ந்த ப்ரியா, “ஹே நாளைக்கு எனக்கு பர்த்டே… அதுக்கு ஒரு சின்ன பார்ட்டி இருக்கு. அதுக்கு உன்ன கூப்பிட தான் நான் வந்தேன். ஆண்ட்டி எல்லாரும் கண்டிப்பா வரணும்.” என்று கூறினாள்.

“நான் வரது கஷ்டம் மா. உன் பிரெண்ட அனுப்பி வைக்கிறேன்.”

“ஓகே ஆண்ட்டி… நான் கிளம்புறேன். நாளைக்கு 6 மணிக்கு ஹோட்டல் **** வந்துடு டி பை…”

“பை டி… அப்பறம் அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே???”

“அத நாளைக்கு வந்து சொல்லுடி பை…”

அடுத்த நாள் பார்ட்டிக்கு என்ன உடை அணிவது என்று குழப்பமாக இருந்தது. வழக்கம் போல என் அம்மாவை அழைத்து ஆலோசனை கேட்டேன். என் அம்மா ஒன்று தேர்ந்தெடுத்தால் அது எனக்கு பிடிக்கவில்லை. இப்படியே கால் மணி நேரம் சென்றது. கடைசியாக ‘லெமன்’ எல்லோ கலரில் ஒரு சேலையை இருவரும் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தோம்.

அதற்கேற்ற நகைகளை போட்டு கண்ணாடியில் பார்த்தேன். ‘ஓரளவுக்கு ஓகேவா தான் இருக்க. பர்த்டே பார்ட்டிக்கு இது போதும்.’ என்று என்னை நானே கமெண்ட் பண்ணிவிட்டு சென்றேன்.

அபி வெளியே சென்றுவிட்டதால் நானே செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி ஸ்கூட்டியில் செல்ல அனுமதி வாங்கினேன். (ஸ்கூட்டி பழைய மாடலாக இருக்கிறது என்று அந்த ‘காட்ஸில்லா’ அதை பயன்படுத்துவது இல்லை)

சேலை கட்டியிருந்ததால் என்னால் ஸ்கூட்டி ஓட்டுவது சற்று சிரமமாக இருக்கும் என தோன்றியது. நான் யோசனையுடன் திரும்பியபோது Mr.Perfect என்னையே பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்தேன். அப்போது தான் இதே மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் அவனிடம் ‘பல்ப்’ வாங்கியது நினைவு வந்தது. பின்னாடி திரும்பி பார்த்தேன் யாராவது இருக்கிறார்களா என்று. யாரும் இல்லை.???

‘அப்போ என்ன தான் அப்படி பாத்தானா… ???’ என்று சந்தோஷப்பட்டுக்கொண்டே திரும்பி பார்த்தால் அவனின் முகம் நிர்மலமாக இருந்தது.

‘என்னடா இது இப்போ தான என்ன ‘நல்லா’ பாத்த மாதிரி இருந்தது… இப்போ என்னடானா கல்லையும் மண்ணையும் பாக்குற மாதிரி பாக்குறான்.’ என்று குழம்பியபடியே அந்த ஹோட்டலிற்கு சென்றேன்.

அங்கு வாசலிலேயே ப்ரியா அழகான ‘பிங்க்’ லெஹங்காவில் காட்சியளித்தாள். அவளிடம் சென்று பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு அவளை அணைத்தேன்.

“என்ன டி தனியாவா வந்த” அவள் கண்கள் வாசலில் யாரையோ தேடின.
“ஆமா டி அபிக்கு ஏதோ வேல இருக்குனு வெளிய போய்ட்டான். அதான் நான் மட்டும் ஸ்கூட்டில வந்தேன்.”


“ சரி வா உள்ள போகலாம்.”
உள்ளே ப்ரியாவிற்காக காத்திருந்த அவள் பெற்றோரிடம் சென்று நலம் விசாரித்தேன். பின் அவளை கேக்கை வெட்ட சொன்னார்கள். எல்லாரும் பிறந்தநாள் வாழ்த்துப்பாடல் பாட ப்ரியா அந்த ரெட் வெல்வெட் கேக்கை வெட்டினாள்.


கேக்கின் முதல் துண்டை எடுத்துக்கொண்டு அந்த பார்ட்டி ஹாலின் ஓரத்திற்கு சென்றாள். அவள் பெற்றோருக்கு கூட கொடுக்காமல் யாருக்கு எடுத்துச் செல்கிறாள் என்று ஆர்வமாக பார்த்தேன்.

அங்கு அவனே… ஆம் Mr.Perfect டார்க் ப்ளூ ஜீன் மற்றும் க்ரீம் ப்லேசர் அணிந்து கம்பீரமாக நின்றிருந்தான். அவனின் அர்மானி கூலர்ஸும் ஒமேகா கடிகாரமும் அவனின் அழகை தூக்கிக் காட்டியது.

அவனை இங்கு கண்டது எவ்வளவு ஆச்சர்யம் அளித்ததோ அதை விட ப்ரியா அவனிடம் நெருக்கமாக இருப்பது எனக்கு அதிர்ச்சியளித்தது. நானோ அதிர்ச்சியில் உறைந்திருக்க ப்ரியா வந்து என்னை உலுக்கி இவ்வுலத்திற்கு அழைத்து வந்தாள்.

“உன்ன அப்போ இருந்து கூப்பிட்டுட்டே இருக்கேன். நீ என்னடானா ஷாக்காகி நிக்கிற. வா உன்ன எனக்கு ரொம்ப முக்கியமான ஒருத்தருக்கு இண்ட்ரோ பண்ணுறேன்.” என்று என்னை இழுத்துக்கொண்டு சென்றாள். நானோ அவள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் சென்றேன்.

Mr.Perfect முன்பு என்னை நிறுத்தி, “மீட் ராகுல். என்னோட வாழ்க்கையிலேயே ரொம்ப முக்கியமான பெர்ஸன்.”

ஆம் அவள் பள்ளியிலேயே ராகுலை பற்றி கூறுவாள். சில நாட்கள் அவளின் அம்மாவின் அடியிலிருந்து காப்பற்றியிருப்பான். சில நாட்கள் கூட விளையாட யாரும் இல்லாத போது விளையாட்டுத் தோழனாக இருப்பான். இப்படி அவள் அவனைப் பற்றி சொன்னது அதிகம். ஆனால் அது Mr.Perfect என்று எனக்கு தெரியாது. (அப்போது ராகுலை நான் நேரில் பார்த்ததில்லை)

இடைப்பட்ட நாட்களில் நாங்கள் கைப்பேசியில் உரையாடும்போது கூட அவனின் புகழைப் பாடுவதைக் கேட்டு காண்டாகி அவனையே கல்யாணம் பண்ணிக்கொள்ளுமாறு கூறியிருக்கிறேன். அதற்கு ஒன்றும் சொல்லாமல் சிரித்தே மழுப்பி விடுவாள்.

ஒரு பெருமூச்சுடன் நான் ப்ரியாவை பார்த்தபோது அவள் தூரத்தில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். ராகுல் மட்டுமே என் அருகில் இருந்தான். இந்த சூழ்நிலையில் என்னால் அவனிடம் பேச இயலவில்லை.

ஆனால் மரியாதைக்காக அவனிடம் ஹாய் சொன்னேன். அதற்கு எதுவும் கூறாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். அது என்ன மாதிரி பார்வை என்று என்னால் வரையறுக்க முடியவில்லை. அவனின் ‘அந்த’ பார்வையை எதிர்கொள்ள முடியாமல் வேறு பக்கம் திரும்பிக்கொண்டேன்.
என்னால் அந்த சூழ்நிலையைக் கையாள முடிய(தெரிய)வில்லை. இன்னும் கொஞ்ச நேரம் அங்கிருந்தால் அழுது விடுவேன் என்று தோன்றியது. ப்ரியாவின் பர்த்டே பார்ட்டியை கெடுக்க விரும்பாமல் அவள் பெற்றோரிடம் வீட்டிற்கு செல்ல வேண்டும் எனக் கூறி வெளியே வந்துவிட்டேன்.


அங்கு வராண்டாவில் ராகுல் கைப்பேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான். இன்று எனக்கு அவன் பெயர் தெரிந்துவிட்டது. அப்போது மூளையில் அந்த சிறுவர்களின் ‘ராகுல் அண்ணா’ என்ற விளிப்பும் வந்து சென்றது. அதுவும் இவனாக தான் இருக்கும். இப்படி ஒரு நிலையில் அவனின் பெயர் தெரிந்ததற்கு நான் சந்தோஷப்படுவதா இல்லை துக்கப்படுவதா என்று தெரியவில்லை.
அங்கிருந்து நகரவே எனக்கு சிரமமாக இருந்தது. என் கால்கள் என்னை சுமப்பதற்கு கூட சக்தி இல்லாது வலுவிழந்தது போல தோன்றியது. ஒருவாறு கஷ்டப்பட்டு வீட்டிற்கு வந்து என் அறையில் அடைந்துக்கொண்டேன்.


அன்று இரவு நன்றாக அழுதேன். கடைசியாக அவ்வாறு எப்போது அழுதேன் என்று தெரியவில்லை. அப்படி இருந்தது என் கண்ணீர். யாரிடமாவது இந்த பாரத்தை இறக்கி வைக்கவேண்டுமென க்ரிஷ்ஷைத் தேடினேன். ஆனால் என் கேட்ட நேரம் அவனும் ‘ஆன்லைனில்’ இல்லை.

அழுது அழுது சோர்வடைந்து ஒரு வழியாக தூங்கிப் போனேன். கனவில் ப்ரியாவும் ராகுலும் வந்தனர். என்னால் இருவரையும் நெருக்கமாக பார்க்கமுடியவில்லை. அதில் ஒருவர் என் உயிர்த்தொழி மற்றோருவர் என் முதல் காதல்???

ஈர்ப்பான்(ள்)…
 
Messages
10,072
Likes
27,671
Points
589
Age
35
Location
Tirunelveli, manimutharu
#4
???? Enna ஹீரோயின் a feel panna vaichutinga.. கொஞ்சம் weight தான் athukaga azhutha poruthuka mudiyathu sister ????

Waiting for hero performance, nalla counter kodupaana illa vaangivano????
 
Advertisement

Latest Episodes

Advertisements

Top