• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 29

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
ஹாய் பிரெண்ட்ஸ்??? சண்டே ஸ்பெஷல்??? அடுத்த எபி??? இது கொஞ்சம் கனமான பதிவு தான்... நீங்க ரொம்ப மிஸ் பண்ணவங்க இந்த எபில வந்திருக்காங்க??? (ராகுல் இல்ல???) படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க???

1578240299006.jpg

ஈர்ப்பு 29

பொடிக்கில் வேலையை முடித்து விட்டு சோர்ந்து போய் வீட்டிற்கு வந்தேன். ஆனால் வீடோ அமைதியாக இருந்தது.

‘என்ன டா இது… முதல் நாள் பிள்ள வேலைக்கு போயிட்டு வந்திருக்கேன்… டையர்டா இருப்பாளே… வந்ததும் ஜூஸ் கொடுத்து கவனிக்கனும்னு இந்த அம்மாக்கு தோணுதா??? என்ன இது அதிசயமா இந்த நேரத்துல அபியோட பைக் இங்க நிக்குது… வழக்கமா இப்போ ரெஸ்டாரண்ட்ல கூட்டமா இருக்கும்னு அங்க தான இருப்பான்…??’

ஹாலிற்குள் சென்று பார்த்தபோது சோஃபாவில் அமர்ந்திருந்தார் என் அப்பா. அவர் முகத்தில் குழப்பம் சூழ்ந்திருந்தது. அருகிலுள்ள சோஃபாவில் அழுகையுடன் அமர்ந்திருந்தார் என் அத்தை. என் அம்மாவோ என்ன செய்வது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நின்றிருந்த அபியோ தீவிரமான சிந்தனையுடன் இருந்தான்.

‘இந்த அத்தை எதுக்கு இப்போ இங்க வந்திருக்காங்க…?? அடுத்த பிரெச்சனையோட வந்துட்டாங்களா…??? அதான் அப்பாவே அவங்கள வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களே… அப்பறம் எதுக்கு மறுபடியும் வந்து சீன் க்ரீயேட் பண்றாங்க… இதுல சிம்பத்திக்காக அழுகை வேற???’ என்று மனதிற்குள் அவரைத் திட்டிக் கொண்டிருந்தேன்.

இவையெல்லாம் ஹாலின் வாசலில் அவர்களைப் பார்த்தபோதே மனதில் தோன்றின. உள்ளே சென்றபோது தான் அங்கு சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த ஷீலா கண்ணில் பட்டாள்.

‘ஷீலா வா இது’ என்று ஆச்சர்யப் படும் வகையில் இருந்தது அவளின் தோற்றம். உடல் மெலிந்து கருத்து, உடையோ ஆங்காங்கே கிழிந்து என்று பார்க்கவே சகிக்க முடியாதவாறு இருந்தது அவளின் தற்போதைய நிலை.

இதற்கு முன்பு, லேசாக கிழிந்திருந்தாலும் அந்த உடையை தொடக்கூட மாட்டாள். ஆனால் இன்றோ கிழிசலில் பழைய துணியை ஒட்டுப் போட்டு தைத்து அணிந்திருந்தாள். இந்த நிலைமையே அவளின் திருமண வாழ்வின் அவலத்தைக் கூறியது.

நான் அதிர்ச்சியாகி நின்றதைப் பார்த்த அபி என்னை அங்கிருந்து அழைத்துச் சென்றான். அவன் ரூமிற்குள் சென்றதும், “என்ன ஆச்சு அபி? ஷீலா எப்படி இங்க வந்தா?” எனக் கேட்டேன்.

“எல்லாம் அவளா தேடிப் போய் விழுந்தாளே… அந்த வாழ்க்கை தந்த பரிசு…” என்றான் கோபமாக.

“ஸ்ஸ்ஸ் அபிண்ணா ஃபர்ஸ்ட் என்ன நடந்துச்சுன்னு சொல்லு…”

“அவள இழுத்துட்டு ஓடிப் போனவன் சரியான ஃபிராடு… பணக்காரன்னு ஏமாத்தி இவள கல்யாணம் பண்ணிருக்கான்... இவங்க லைஃப ஸ்டார்ட் பண்ணதுக்கு அப்பறம் தான் அவன் பணக்காரன் இல்ல சாதாரண மிடில்-கிளாஸ்ஸுக்கும் கீழன்னு தெரிஞ்சுதாம். இவளும் அதப் பொறுத்துக்கிட்டு வாழ்ந்துருக்கா… கொஞ்ச நாள் கழிச்சு தான் அவனோட உண்மையான முகம் தெரிஞ்சுதாம்… அவன்கிட்ட இல்லாத கெட்டப் பழக்கமே இல்லையாம்… தண்ணி, பொண்ணுங்க கூட பழக்கம்ன்னு எல்லா கெட்டப் பழக்கத்துக்கும் அடிமையா இருந்தானாம். இவ அதையும் சகிச்சுட்டு இருந்தாளாம்… அப்போ தான் அவ ப்ரேக்னன்ட்னு தெரிஞ்சுதாம்…”

“வாட் அவ ப்ரேக்னன்ட்டா இருக்காளா????”

“ம்ம்ம் ஆமா 6 மந்த்ஸ்…”

நான் அவளைப் பார்க்கும்போது தலை குனிந்து அவள் தன் உடலைக் குறுக்கி அமர்ந்திருந்ததால் சரியாகக் கவனிக்கவில்லை.

“ம்ம்ம் சொல்லு” என்றேன் நான் வேதனையான குரலில்.

“இவ ப்ரேக்னன்ட்ன்னு சொன்னதும் அவன் ரொம்ப கோபப் பட்டானாம். அன்னைலயிருந்து டெய்லி அவளுக்கு அடி உதை தானாம் . ஒரு நாள் பொறுக்க முடியாம எதிர்த்து கேள்வி கேட்டதும், அவன் சொன்னதக் கேட்டு எனக்கே கோபம் வந்துச்சு…” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டே.

“அப்படி என்ன சொன்னானாம்…” என்றேன் சிறிது நடுக்கத்துடனே.

“அவள பணக்காரன் ஒருத்தனுக்கு வித்துட்டு அதுல வர காச வச்சு ஜாலியா வாழ நெனச்சானாம்… ஆனா அதுக்குள்ள அவ ப்ரேக்னன்ட் ஆகி அவனோட திட்டத்துல மண்ணள்ளிப் போட்டாளாம்…”

“ச்சே ரோக்… மனுஷனா அவனெல்லாம்???…”

“ம்ம்ம் இன்னும் இருக்கு… அடுத்த நாளே அவள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் அபார்ட் பண்ண சொன்னானாம்… ஆனா டாக்டர் தான் அபார்ட் பண்ணா உயிருக்கே ஆபத்துன்னு சொல்லி அத தடுத்தாங்களாம்…”

“ம்ச்ச் இவனெல்லாம் அவங்க அம்மா வயித்துல இருக்குறப்போவே அபார்ட் பண்ணிருக்கனும்… இப்போ எப்படி இங்க வந்தா…”

“டாக்டர் சொன்னதுனால கொஞ்ச நாள் அமைதியா இருந்த அவன் திரும்பியும் அவள டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சானாம்… ஒரு நாள் தெருவே நின்னு வேடிக்கைப் பார்க்க அவள அடிச்சானாம். தடுத்து நிறுத்த வந்தவங்களை அவக்கூட சேர்த்து அசிங்கமா பேசுனானாம். கொஞ்ச நாள் கழிச்சு அவ வெளிய வரவே இல்லன்னு சந்தேகப்பட்டு போலீஸ கூப்பிட்டு பார்த்தபோ தான், உள்ள இவ மயங்கி கிடந்தாளாம். அந்த பொருக்கி குடிச்சுட்டு அவன் ஒரு பக்கம் மயக்கமா இருந்தானாம். அப்பறம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் ட்ரீட்மெண்ட் கொடுத்து அப்பறம் விசாரிச்சதுல அவன் இது மாதிரி ஏற்கனவே பல பொண்ணுங்கள ஏமாத்தி கல்யாணம் பண்ணி அவங்கள மத்தவங்களுக்கு வித்தது தெரிய வந்துச்சாம்… இவளுக்கு மயக்கம் தெளிஞ்சுவோடனே விசாரிச்சு அப்பாவ கூப்பிட்டு நடந்தத சொன்னங்களாம்…”

“அந்த பொறுக்கி இப்போ எங்க இருக்கானாம்???…” என்றேன் கோபத்துடன்.

“ஜெயில்ல தான் இருக்கான்…”

“ச்சே அவனெல்லாம் என்கவுண்டர்ல போட்டுத் தள்ளனும்???… எத்தன்ன பொண்ணுங்கள ஏமாத்திருக்கான்…”

அப்போது உள்ளே வந்த அம்மாவும் சிறிது நேரம் புலம்பினார். “உங்க அத்தை ரொம்ப ஓஞ்சு போயிட்டாங்க டி… உங்க அப்பா முகத்த பார்க்க முடியல… ஹ்ம்ம் எல்லாம் அவங்கவங்க விதி படி தான் நடக்கும்…”

“ம்மா ஷீலா எதுவும் சொல்லலையா…”

“ஹ்ம்ம் உங்க அப்பாகிட்ட மன்னிப்பு கேட்டுட்டு அந்த செவத்தோரமா போய் தலை குனிஞ்சு உட்கார்ந்தவ தான்… இப்பவரைக்கும் தலையைத் தூக்கல... இப்போ தான் ரெஸ்ட் எடுக்கட்டும்னு உனக்கு பக்கத்து ரூம்ல படுக்கச் சொன்னேன்…”

“சரி ம்மா… நான் போய் பாக்குறேன்…”
அங்கு அவளோ கட்டிலில் சாய்ந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.


“ஷீலா…” மெதுவாக அழைத்தேன் நான்.

அவள் என்னைப் பார்த்து லேசாக சிரித்தாள். முன்போ அவளின் சிரிப்பில் ஆணவம் கலந்து இருக்கும். இன்றோ விரக்தி தான் இருந்தது.

“வா நதி…” அவளின் குரலே நடுங்கியது.

“எப்படி இருக்க…” கேட்ட பின்பே கேள்வியின் அபத்தம் புரிந்தது.

“ஏதோ இருக்கேன் நதி… உங்க கிட்ட எல்லாம் சண்டை போட்டு பொறாமைப் பட்டு எனக்குன்னு சுயநலமா இருந்து, கடைசில என் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு…”

“ஷீலா இப்போ ஏன் பழசெல்லாம் பேசிட்டு இருக்க… எல்லாம் சரி ஆகும்… கவலைப் படாத… எப்பவும் போலவே இரு..”

“இதான் நதி நீ… முன்னாடி உன்ன எப்படியெல்லாம் ட்ரீட் பண்ணிருக்கேன்… ஆனா அதெல்லம் மனசுல வச்சுக்காம இப்போவும் எனக்காக ஃபீல் பண்ற பாத்தியா… நீ உண்மைலேயே கிரேட்… என்ன சுத்தி இப்படி எனக்கு நல்லது நினைக்குறவங்களா இருந்தாலும், என் விதி இப்படி போய் மாட்டிக்கிட்டேன்… இப்போ என்னோட சேர்ந்து என் குழந்தையும் இந்த உலகத்துல கஷ்டப்படனும் … இதை நெனைக்குறப்போ எனக்கு வாழவே பிடிக்கல…”

“ம்ச்ச் என்ன பேச்சு பேசுற… இப்போ என்ன… உன் மேரேஜ் லைஃப் சரி இல்ல… இப்போ அதுலயிருந்து வெளிய வந்துட்ட… இனிமே உன் குழந்தைக்காக வாழு… எதையும் ஃபேஸ் பண்ண கத்துக்கோ… அத விட்டுட்டு வாழவே பிடிக்கலன்னு என்ன பேச்சு இது... இப்போ ஒழுங்கா வந்து சாப்பிடு…” என்றேன் கோபத்தில் சற்று குரலை உயர்த்தி…

“இல்ல இங்க ரூம்லயே சாப்பிட்டுக்குறேனே…”

“ஏன் இனி லைஃப் ஃபுல்லா ரூம்லயே அடைஞ்சு கிடக்கப் போறியா… இல்லல அப்பறம் என்ன… ஃப்ரெஷ்-அப் ஆகிட்டு வா…” என்று கூறி வெளியே சென்றேன்.

நான் வெளியே வந்த போது ஹாலில் ஆனந்த் அமர்ந்திருந்தான். எனக்கு அப்போது தான் அவனை அழைத்தது நியாபகம் வந்தது.

‘ச்சே இந்த நேரத்துலயா அவன் வரனும்…’

அத்தையோ அவனிடம் நடந்தவற்றைக் கூறிப் புலம்பிக் கொண்டிருந்தார். அவனோ தர்மசங்கடமாக இருந்ததை என்னால் உணர முடிந்தது.

நிலைமையைக் கையாள நான் ஆனந்திடம் சென்று, “ஹாய் ஆனந்த்… எனக்காகத் தான் வெயிட் பண்றீங்களா…” என்றேன்.
அவனோ புரியாமல் ‘ஆம்’ எனத் தலையாட்டினான்.


“ப்பா ஆனந்த் கிட்ட பொடிக்க்கு ஒரு ஹெல்ப் கேட்டிருந்தேன்… அதப் பத்தி அவரு கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு வரேன்…"

“ம்ம்ம் ரொம்ப தூரம் போகதீங்க… சீக்கிரம் வீட்டுக்கு வரப் பாருங்க…”
அவருக்கும் சூழ்நிலை புரிந்திருக்கும். அதனாலேயே இந்த நேரத்திற்கு வெளியே சென்று பேசுமாறு கூறுகிறார் என்பது புரிந்தது.


நாங்கள் வெளியே செல்லும்போது, உள்ளே “இந்த நேரத்துல பொண்ண அவன் கூட அனுப்பி வச்சுருக்கீங்க அண்ணா… யாராவது பாத்தா என்ன சொல்வாங்க… அப்பறம் அவளும்…” என்ற அத்தையின் குரலும் அதற்கு அதட்டலான என் அப்பாவின் குரலும் கேட்டது.

‘சிலர் என்ன பட்டாலும் திருந்த மாட்டாங்க???’
 




Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
நாங்கள் அருகில் இருக்கும் பூங்காவினுள் நுழைந்தோம். பின் மாலை நேரமானதால் அவ்வளவாக கூட்டம் இல்லை. அங்கிருந்த மேசையில் அமர்ந்தோம்.

“சாரி ஆனந்த்… நீங்க வந்தப்போ வீட்டுல சிஷுவேஷன் சரி இல்ல… அதான்…”

“பரவால நதி… எனக்கு புரியுது… இப்போ ஷீலா எப்படி இருக்காங்க…”
அவனிடம் நடந்த அனைத்தையும் கூறினேன்.


“ரொம்ப கஷ்டமா இருக்கு அவள இப்படி பாக்க… பாவம் ரொம்ப அனுபவிச்சுட்டா இந்த ஆறு மாசத்துல… அந்த பாஸ்டர்ட்ட எல்லாம் நடு ரோட்டுல வச்சு என்கவுண்டர் பண்ணனும்???…”

“ஹே நதி ரிலாக்ஸ்… அதான் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துருக்கீங்கள… அப்பறம் என்ன…”

“இது வரைக்கும் எத்தனயோ கேஸ் இது மாதிரி நடந்துருக்கு… எத்தன கேஸ்ல குற்றவாளிக்கு தண்டனை கிடைச்சுருக்கு...???”

பேசிக் கொண்டேயிருக்கும்போது அவனிடமிருந்து எந்த சத்தமும் வராததால் திரும்பிப் பார்த்தேன். அவனோ முழித்துக் கொண்டிருந்தான்.

“என்னாச்சு…”

“இல்ல டாபிக் வேற எங்கேயோ போய்டுச்சே அதான்…”

“ஹ்ம்ம்… சாரி ஆனந்த் உங்கள கூப்பிட்டது வேற விஷயத்துக்காக… ஆனா இப்போ அதப் பத்தி பேசுற மூட்ல நான் இல்ல…”

“ரிலாக்ஸ் நதி… நீ கேட்டாலும் என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல…” கடைசி வரியை முணுமுணுத்தான்.

“என்னது…”

“ஒன்னும் இல்ல… கிளம்பலாமா…”
“ம்ம்ம்”


வீட்டிற்கு வந்ததும் அவன் வெளியிலேயே விடைபெற்றுக் கிளம்பி விட்டான். நானும் நிலைமை அறிந்து வீட்டிற்குள் வர வற்புறுத்தவில்லை. அவன் கிளம்பும் போதும், “சாரி ஆனந்த்…” என்றேன்.

“ஹே லூசா நீ… எனக்கு தான் ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல… திரும்பவும் ஏன் சாரி கேட்டுட்டு இருக்க…” என்றான்.

“இருந்தாலும்… “ என்று இழுக்க…

“ஸ்ஸ்ஸ் இந்த குட்டி மூளைக்குள்ள எதப் பத்தியும் யோசிச்சு குழம்பாம இரு…” என்று கூறியவாறு சென்றான்.

‘இவனுக்கு அவ ஓடிப் போனதோ… திரும்ப வந்ததோ எதுக்கும் எந்த ஃபீலிங்கும் இல்லையா…’ என்று யோசித்துக் கொண்டே உள்ளே சென்றேன்.

அங்கு டைனிங் டேபிளில் ஷீலா அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். யாரையும் பார்க்காமல் தான்… அவளிடம் தெரிந்த இந்த மாற்றமே பெரிது என்று நினைத்துக் கொண்டு நானும் சாப்பிட்டேன்.

நான் என் அறைக்குச் செல்லும்போது, என் அம்மா என்னிடம் ஷீலாவிற்கு பால் கொடுத்து விட்டார். அதைக் கொடுக்க அவளின் அறைக்குச் சென்றபோது அவள் வலியில் முனங்கும் சத்தம் கேட்டு உள்ளே விரைந்து சென்றேன்.

அங்கு நான் பார்த்த காட்சியில் உறைந்து விட்டேன். அப்படி உறைந்து போய் நான் பார்த்தது சூட்டின் தடங்கள்… அவளின் முழங்காலிலிருந்து பாதம் வரையிலும் தொடர்ந்து காணப்பட்டன. என்னைப் பார்த்ததும் சேலையை இறக்கிவிட்டாள்.

“என்ன நதி…” என்ன முயன்றும் அவள் குரலில் அப்பட்டமான வலி தெரிந்தது.

“இது…” என்று நான் தடுமாறினேன்.

“ம்ம்ம் எல்லாம் ஓடிப் போனதுக்கு எனக்கு கிடைச்ச பனிஷ்மெண்ட் தான்…” அதே விரக்தி சிரிப்புடன்.

“டாக்டர்ட காமிக்கலையா...”

“எத்தன தடவ காமிக்க… ஃபர்ஸ்ட் டைம் வாங்குன ஆயின்மெண்ட் பேரு தெரியும்… அத தடவிக்குவேன்…”
இதைக் கேட்ட எனக்கு எப்படி ‘ரியாக்ட்’ செய்ய என்பது கூட தெரியவில்லை.


“நதி ஒரு ஹெல்ப்… அந்த டேபிள் ட்ராயர்ல ஆயின்மெண்ட் இருக்கு… அத மட்டும் எடுத்து தா..”

அதை எடுத்து தந்ததும், “பால் தான நதி… நான் குடிச்சுக்குறேன்… நீ கிளம்பு…” என்றாள்.

“நான் வேணா போட்டு விடவா ஷீலா…”

“இல்ல நதி நா.. நானே போட்டுக்குறேன்…” என்றாள் ஷீலா நெளிந்துக்கொண்டே.

அப்போது தான் ஊன்றிக் கவனித்தேன், அவள் கழுத்திலும் அது போன்ற தழும்புகளை.. மேலும் அங்கிருந்து அவளை சங்கடப் படுத்தாமல் வெளியில் வந்து விட்டேன்.

அவளின் காயங்களும் வலிகளும் சகப் பெண்ணாக எனக்கும் வலித்தது. இது போன்ற காட்டு மிராண்டி செயல்களைச் செய்யும் அரக்கர்கள் கோட் சூட் போட்டுக் கொண்டும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக் கொண்டும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நமக்குத் தான் அவர்களை அடையாளம் தெரியவில்லை.

மனது பாரமாக இருந்ததால் அதை லேசாக்க முகநூலிற்குள் நுழைந்தேன். சிறிது நேரத்திலேயே க்ரிஷிடமிருந்து வாழ்த்துச் செய்தி வந்தது. அப்போது தான் காலையில் நடைப்பெற்ற துவக்க விழாவும் அதன் பின் நடந்த கலாட்டாக்களும் நியாபகம் வந்தது. ஒரே நாளில் எவ்வளவு மாற்றங்கள், எவ்வளவு உணர்ச்சிகள்…

இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்களில் ஒன்றாக கண்டிப்பாக இருக்கும்….

ஈர்ப்பான்(ள்)...
 




Nagajoithi

நாட்டாமை
Joined
Jul 25, 2019
Messages
23
Reaction score
35
Location
Madurai
Feeling update,sheela pavam than inemalathu nallmurail threnthi vantha sare than,avalud amma Kunam marathu pola ,nathi aval ikku kaka varuthu ladies????next update waiting????
 




Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
Feeling update,sheela pavam than inemalathu nallmurail threnthi vantha sare than,avalud amma Kunam marathu pola ,nathi aval ikku kaka varuthu ladies????next update waiting????
Tq so much??? Sheela ku help panna nathi irukkale... Seekirama theriduva nu nambuvom???
 




Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
Pavam sheela. Mathavanga unarvukaluku maryathai kodu kama irrundha thu punishment romba jasthi thaan. Ana real life la ethana yo per poi ippadi thaan mattikaranga. Evalo news vandalum nattil nadakum oru vysayam.
Mmm s idhu therinjum silar ippadi poi maatikuranga... Yemaruravanga irukkara varaikum yemathuravanga irukka dhan seivanga???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top