• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 35

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
ஹாய் பிரெண்ட்ஸ்...??? ஒரு வாரமா கதையை காணோம்னு நீங்க என்ன திட்டுறது எனக்கு தெரியுது??? ரொம்ப சாரி??? இதோ உங்க நதி உங்கள தேடி வந்துட்டா...??? க்ரிஷ் யாருங்கிற கேள்விக்கு இந்த எபில க்ளு இருக்கு... ??? ஆனா நதிக்கு இன்னும் யாருன்னு தெரியல...??? ஹ்ம்ம் எப்போ அவ கண்டுபிடிச்சு...??? வழக்கம் போல படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க ???

1579893709630.jpg

ஈர்ப்பு 35

யாருமற்ற ‘பொடிக்’கில் முற்றிலும் குழப்பமாக அமர்ந்திருந்தேன். சற்று நேரத்திற்கு முன்பு நேஹா கூறிய செய்தி என்னை நன்றாக குழப்பியிருந்தது. அவளைக் கல்லூரியில் இறக்கி விட்டு நான் எவ்வாறு ‘பொடிக்’ வந்து சேர்ந்தேன் என்பதே எனக்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது.

என் மனதினுள் ஆனந்தை சந்தித்ததிலிருந்து நடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தேன். சில நிகழ்வுகளினால் என் மூளை அவன் க்ரிஷாக இருக்கலாம் என்று கூறினாலும் என் மனம் அதை ஏற்க மறுத்தது.

‘ஆனந்த் தான் ‘பொடிக்’ஆரம்பிச்ச அன்னைக்கு வந்தான்… அந்த கிருஷ்ணா அன்னைக்கு வரலைல’

‘ஓ… ஆனா க்ரிஷ் என்கிட்ட அன்னைக்கு வர முடியாதுன்னு சொல்லி அதுக்கு அடுத்து தான வந்ததா சொன்னான்… அப்போ கிருஷ்ணாவா இருக்க தான நெறைய சான்ஸ் இருக்கு???…’

‘ஆனா கிருஷ்ணா ஒரு போலீஸ்… க்ரிஷ் என்ஜினியர் தான???…’

‘ஆமால… ஆனந்த் என்ன வேலை பாக்குறான்…??’

எவ்வளவு யோசித்தும் அவன் என்ன வேலையில் செய்கிறான் என்று தெரியவில்லை.

‘ச்சே இவ்ளோ நாள் பழகிருக்கோம்… என்ன வேலை பாக்குறான்னு கூட சொன்னது இல்ல… ஹ்ம்ம் இப்போ என்ன பண்றது…???’

மீண்டும் மூளையை குடைந்து யோசித்ததில், அவனைப் பற்றி ஷீலா சொன்னது நினைவு வந்தது…

‘மப்ச்… அவ பணக்காரன்னு தான சொன்னா…???’

‘இப்படி யோசிச்சு டைம் வேஸ்ட் பண்றதுக்கு அவன் கிட்டயே கேட்டுடலாம்….’ என்று நினைத்தவாறு அலைப்பேசியில் அவனை அழைத்தேன்.

“ஹலோ மிஸ்டர் ஆனந்த்…”

“சொல்லுங்க மிஸ் கரடி…”

“ஹலோ…” என்று கோபமாக நான் பேச…

“அதான் ஃபார்ஸ்டே ஹலோ சொல்லிடேல அப்பறம் எதுக்கு திரும்பியும் ஹலோ சொல்லுற…”

“இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு அனுபவிப்ப…”

“அம்மா தாயே தெரியாம ஒரு ஃப்லோல கலாய்ச்சுட்டேன்… நீ இதெல்லாம் மனசுல வச்சுட்டு என் வாழ்க்கைல கும்மி அடிச்சிறாத மா...”

“ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்… சரி என் கூட எவ்ளோ நாள் பழகிருக்கீங்க மிஸ்டர் ஆனந்த்…”

“அது இருக்கும் ஒரு மூணு மாசம்… ஏன் கேக்குற…”

“மூணு மாசம் என் கூட பழகிருக்கீங்க… ஆனா இன்னும் என்ன வேலை பாக்குறீங்க… எங்க வேலை பாக்குறீங்கன்னு சொன்னதே இல்லையே… ஏன்?”

“அ.. அத்…அது வந்து…. நதி மா… நீ தான் என்கிட்ட கேட்கவே இல்லையே…”

“ஓ அப்போ கேட்டா தான் சொல்வீங்க….”

“ச்ச அப்படி எல்லாம் இல்ல… கொஞ்சம் பிஸியா…”

“எது டிரைவர் வேல பாக்குறது தான் உங்க ஊருல பிஸியா இருக்கிறதோ…”

“இப்படி எந்த பக்கம் போனாலும் கேட் போட்டா எப்படி…” என்று அவன் பாவமாக கூறவும்… நானும் சிறிது மனமிரங்கி, “சரி சரி ஓவர் ஃபீலிங்ஸ் உடம்புக்கு ஆகாது… இப்போ சொல்லுங்க என்ன வேலை பாக்குறீங்கன்னு…” என்றேன்.

“அச்சோ இப்படி திடீர்னு கேட்டா நான் என்ன சொல்வேன்…”

“ஹலோ உண்மைலேயே நீங்க வேலை பாக்குறீங்களா… இல்ல… ஹே அப்போ நீங்க உண்மைலேயே டிரைவரா… அதான் எப்போ பாத்தாலும் ‘பிக்-அப்’பு ‘ட்ராப்’புன்னு பேசுனீங்களா...”

“எம்மா கொஞ்சம் உன் கற்பனைய ஸ்டாப் பண்ணு மா… நீ பேசுறத பார்த்தா எனக்கே நான் டிரைவரான்னு சந்தேகம் வந்துடும் போல...”

“சார் இன்னும் உங்க ஜாப் பத்தி சொல்லையே…”

“ஹான் அது வந்து… நான் என்ஜினீயர்…”

“ஹப்பா இத சொல்றதுக்கு இவ்ளோ நேரமா… சரி எங்க ஒர்க் பண்ணுறீங்க…”

“ஹே அதான் என்ன வேலை பாக்குறேன்னு சொல்லிட்டேன்ல… அப்பறம் என்ன…”

“ஹ்ம்ம் என்ஜினீயர்னு சொன்னா போதுமா… என்ன ப்ரான்ச்னு சொல்ல வேணாமா…”

“இப்போ அத தெரிஞ்சுட்டு நீ என்ன எனக்கு வேலை தர போறீயா…”

“ம்ம்ம் ஆமா இங்க ‘பொடிக்’க கிளீன் பண்ண ஆள் வேணும்… அதான் போன்ல இன்டெர்வியூ எடுத்துட்டு இருக்கேன்…”

“அந்த பொட்டிக் கடைய கிளீன் பண்ண ஒரு இன்டெர்வியூ… அதுக்கு குவாலிஃபிகேஷன் என்ஜினீயரா… ச்சே என்ன ஒரு கிரேட் இன்சல்ட்…”

“ஹலோ கிளீன் பண்ணுறதுனா என்ன அவ்ளோ மட்டமா… வெளிய போய் பாருங்க நெறையா என்ஜினீயர்ஸ் வேலை இல்லாம அத தான் பண்ணிட்டு இருக்காங்க… ‘பொடிக்’னு வாயில வராததெல்லாம் என்ஜினீயரா…”

“அச்சோ நதி மா… மைண்ட் வாய்ஸ்ன்னு நெனச்சு சத்தமா பேசிட்டேன்… ??? நீ ஒன்னும் தப்பா எடுத்துக்காத… சரி எனக்கு வேலை இருக்கு நான் அப்பறமா கால் பண்ணட்டா…”

“ஓ அப்போ எங்களுக்கெல்லாம் வேலை இல்லையா…”

“அச்சோ வேலை இருந்தா அத பாரு டா நதி… நான் அப்பறம் கூப்பிடுறேன்… பை…”

“ஹலோ… ஹலோ…” என்று நான் கத்த கத்த அலைபேசியைத் துண்டித்து விட்டான்.

‘ச்சே எங்க வேலை பாக்குறான்னு சொல்லாம கால கட் பண்ணிட்டானே… சரி அவன் ஒரு என்ஜினீயருன்னாவது தெரிஞ்சுதே…’

‘அப்போ ஆனந்த் தான் க்ரிஷ்…’

‘இல்ல இல்ல… ஆனந்த் க்ரிஷா இருக்க இது மட்டும் போதுமா…’

‘க்ரிஷ் தான் இந்த ஒன் வீக்ல எப்போவாவது பொடிக்குக்கு வரேன்ன்னு சொல்லிருக்கான்ல… அப்பறம் என்ன இன்னும் ஒன் வீக் இருக்கு....ஈஸியா கண்டுபிடிச்சுடலாம்…’

இவ்வாறு எனக்குள்ளேயே இரு பக்கமாக பிரிந்து ஆலோசித்து அப்போதும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் இருந்தேன். எதர்ச்சியாக வாசலைப் பார்த்த போது அங்கு சாண்டி என்னையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹே என்ன டி ஏதோ ஏலியன பார்க்குற மாதிரி பார்த்துட்டு இருக்க…”

“ஷப்பா ஒரு வழியா ரியாலிட்டிக்கு வந்துட்டீயா… நான் உன்னை பார்க்க ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷமாச்சு… உன் பேர சொல்லி பத்து தடவ கூப்பிட்டுட்டேன்… இப்போ தான் அதுக்கு ரியாக்ட் பண்ணிருக்க நீ…”

“அது… ஒன்னும் இல்ல… சும்மா யோசிச்சுட்டு இருந்தேன்… ???”

“என்னாது யோசிச்சியா???… நீ யோசிச்சு நான் பார்த்ததே இல்லையே டி???…”

“ஹே நீ வேற ஏன் டி கடுப்பேத்துற…” என்று சலித்தவாறே நடந்ததை சொன்னேன்.

“ஹாஹா இதெல்லாம் உனக்கு தேவையா???… நமக்கு நைட் வச்ச பொருள காலைல கண்டுபிடிச்சு எடுக்கவே கஷ்டமா இருக்கும்… இதுல நீ இது வரைக்கும் நேர்லயே பார்க்காத ஒருத்தன கண்டுபிடிக்க போறீயா???… அதுவும் ஒன் வீக்ல… ஏன் டி காலைலேயே காமெடி பண்ணிட்டு இருக்க..???”

“ஓய் என்ன உங்களுக்கெல்லாம் இந்த நதிய பார்த்தா காமெடியா இருக்கா… இன்னும் ஏழே நாள்ல அவன கண்டுபிடிச்சு காட்டுறேன் டி.. இது உன் மேல சத்தியம் டி…”

“அடிப்பாவி… நீ கண்டுபிடி இல்ல கண்டுபிடிக்காம தோத்து போ… அதுக்கு ஏன் டி என் உசுர பணயம் வைக்கிற… எரும மாடு…” என்று அவள் என்னை துரத்த நான் ஓடினேன். இவ்வாறு கலகலப்பாக ஆரம்பித்தது அந்த நாள்…

அன்று முழுக்க ‘பொடிக்’கிற்கு வருவோரையெல்லாம் ஆராய்ச்சிப் பார்வை பார்த்தபடியே இருந்தேன் நான். சாண்டி கூட என்னைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள். ஆனால் அதற்கெல்லாம் கொஞ்சமும் அசராமல் என் வேலையைத் தொடர்ந்தேன்.

சிறிது நேரம் கழித்து, “என்ன உங்க ‘பொடிக்’ல நடமாடும் ‘சிசிடிவி’யா நீ???…” என்ற குரலில் திரும்பிப் பார்த்தேன்.
 




Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
அங்கு கிருஷ்ணாவும் ஜீவியும் நின்றிருந்தனர்.
அவர்களைப் பார்த்ததும், “ஹே ஜீவி வா…” என்று அவளை லேசாக அணைத்து வரவேற்றேன்.


“ஹ்ம்ம் ஃபர்ஸ்ட் பேசுனது நான்… ஆனா கட்டிப்பிடிச்சு வரவேற்குறதெல்லாம் அவளையா…???”

“??? ப்ரோ உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க… உள்ள ஒருத்தி இருக்கா… அவ உங்களுக்கு ‘நெறையா’ கொடுத்து வரவேற்பா… அவகிட்ட சொல்லட்டா…??”

“ஏன் மா ஏன் இந்த நல்லெண்ணம்… ஒரு போலீஸ்காரன் பப்ளிக் பிளேஸ்ல திட்டு வாங்குறத பார்க்க அவ்ளோ ஆர்வமா...???”

“ஹாஹா ??? ப்ரோ என்ன இப்படி ஆகிடீங்க… உங்கள கெத்து போலீஸ்ன்னு நெனச்சேன்… கடைசில திட்டப் போறா அடிக்கப் போறான்னு பயந்துட்டு இருக்கீங்க???”

“நதிக்கா நீங்க வேற… எங்க அண்ணன் எப்பவும் கஞ்சி போட்ட சட்டை மாதிரி வெறப்பா தான் இருப்பாரு… யாரு செஞ்ச மாயமோ…??? இப்படி கொழஞ்சு போய் இருக்காரு…???” என்று ஜீவி கூற நாங்கள் இருவரும் ஹை-ஃபை அடித்துக் கொண்டோம்.

அவள் மண்டையில் கொட்டியவாறே, “ஒரு வாலு இருந்தாலே தாங்க முடியாது… இதுல ரெண்டு… அதுவும் அறுந்த வாலா வேற இருக்கீங்க… இனிமே என் நிலைமை ரொம்ப பாவம்???…” என்று கூறினான் கிருஷ்ணா…

“ஹலோ ப்ரோ… என்ன ரெண்டு வாலா… அப்போ உங்க ஆளு மட்டும் என்ன ரொம்ப சமர்த்தா… அவ தான் எல்லாருக்கும் சேர்த்து பெரிய வாலு… பார்க்கத்தான போறேன் அவள எப்படி சமாளிக்கப் போறீங்கன்னு…???”

“நீங்க ரெண்டு பேரும் இப்படியே வெட்டியா பேசிட்டே இருங்க… நான் என் அண்ணிய பார்க்கப் போறேன்….”

“ஜீவி எப்பவும் அண்ணியா அக்காவான்னு குழப்பிட்டே இருப்ப… எப்போ அண்ணின்னு கன்ஃபார்ம் பண்ண???”

“என் அண்ணா முகத்துல எரிஞ்ச பல்ப பார்த்ததுல இருந்து தான்…???”
என்று கூறி உள்ளே ஓடிவிட்டாள்.


“ப்ரோ உங்க முகத்துல பல்பு எரியுறது இருக்கட்டும்… அவ முகம் டல்லாவே இருக்கே… அப்படி என்ன பேசுனீங்க ரெண்டு பேரும்…”

மெல்ல சிரித்த அவன், “உன் பிரெண்டுட்ட நீ கேட்டுருப்பியே…” என்றான்.

“அதெல்லாம் அன்னைக்கே கேட்டுட்டேன்…?? எல்லாம் சொன்ன மேடம் கடைசியா ஏதோ சொல்ல வந்து அப்பறம் மறைச்சுட்டா… அதான் அத உங்க கிட்ட கேக்குறேன்???… என்னாச்சு ப்ரோ… ஏதாவது ரொமான்ஸ் சீன்னா???…”

என் மண்டையை லேசாக தட்டி, “ரொமான்ஸ் கதைய கேக்குறதுல அவ்ளோ ஆர்வமா… ஆனா அப்படி எதுவும் நடக்கல… ரொம்ப கஷ்டப்பட்டு அவள நார்மலா பேச வச்சேன்… அப்படி பேசிட்டே நடக்கும்போது கீழ ஏதோ தட்டி விட்டு விழப்போனவல தாங்கி பிடிச்சேன்… உடனே மேடம் கோபமா ஏதோ திட்டுனாங்க…”

“ஓ அப்போ ஏற்கனவே திட்டெல்லாம் வாங்கிட்டேங்களா…??? அவ திட்டுனதும் நீங்க சும்மாவா விட்டீங்க…”

“அது எப்படி சும்மா விடுறது… நானும் பதிலுக்கு திட்டிட்டு அவ சொல்றத கூட கேட்காம வந்துட்டேன்…”

“??? மறுபடியும் திட்டிடுவான்னு தான ஓடி வந்துட்டீங்க…???”

“??? அவ ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்க மாதிரி தெரிஞ்சது… அதான் வேற எதுவும் பேசாம வந்துட்டேன்…”

“ப்ரோ உங்களுக்கு அவ பாஸ்ட் பத்தி…”

“எல்லாம் தெரியும் நதி… ஆர்.கே சொன்னான்…”

“ஆர்.கேவா???”

“ஓ சாரி ராகுல் சொன்னான்…”
அவன் சொன்னதில் ஏதோ தோன்ற, ஆனால் அதை ஆழமாக அலச முற்படவில்லை நான்.


“அவள உங்கள நோக்கி அடியெடுத்து வைக்க நீங்க ரொம்ப கஷ்டப்படனும் ப்ரோ…” என்றேன் மெல்ல…

“லைஃப்ல எல்லாமே சேலஞ் தான் எனக்கு… அதே மாதிரி இதையும் எடுத்துக்குறேன்… மோரோவர் ஐ லவ் சேலஞ்ஸ்…???”

“ஆல் தி பெஸ்ட் ப்ரோ???”

இவ்வாறு சிறிது நேரம் சென்றது. அதற்குள் ஜீவி அவளுக்கு தேவையானதை சாண்டியின் உதவியோடு எடுத்தாள். சாண்டியோ கிருஷ்ணாவைப் பார்ப்பதையே தவிர்த்தாள். எனக்கு அது புரிந்தாலும், அது அவர்கள் இருவருக்கும் உள்ள பர்சனல் என்பதால் நான் அதில் தலையிடவில்லை.

எல்லாம் முடிந்து அவர்கள் கிளம்பும்போது, ஜீவி எங்கள் இருவரையும் அணைத்து விடைபெற்றாள். கிருஷ்ணாவோ என்னிடம் கூறிவிட்டு சாண்டியிடம் சிறிய தலையசைப்புடன் விடைபெற்றான்.

அதுவரை அமைதியற்ற நிலையிலிருந்த அவள், கிருஷ்ணாவின் தலையசைப்பில் சற்று இயல்பானாள். இதைக் கண்ட எனக்கு அவளின் வாழ்க்கையும் சிறிது நாட்களிலேயே இயல்பாகும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.

அந்த நாள் அதற்கு மேல் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் சென்றது. நான் தான் க்ரிஷிற்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தேன். ஆனால் அன்று அவன் வருவான் என்று நான் ஏமாந்தது தான் மிச்சம்.
அன்று இரவு அவன் மீது கோபத்தில் இருந்தேன். அவன் ஆன்லைனும் வராததால் இன்னும் டென்ஷன் ஆனேன்.


‘ஹ்ம்ம் இன்னும் ஒன் வீக் தான்… அதுக்கு அப்பறம் இருக்கு அவனுக்கு…???’

அடுத்த நாள் காலை… அதிகாலை… இல்லை எனக்கு அது நள்ளிரவு தான்???… சரியாக பத்தாவது அலார சத்தத்தில் எழுந்தேன்…??? நேரம் 5.30 மணி…

‘ச்சே என்ன இப்படி இருட்டா இருக்கு???… ஹ்ம்ம் எப்படி தான் இவ்ளோ சீக்கிரம் எழுந்து வாக்கிங் போறாங்களோ???…’ என்று சலித்துக் கொண்டே காலைக் கடன்களை முடித்து ‘வாக்கிங்’கிற்கு தயாரானேன்.

ஆம் என் வாழ்நாளிலேயே முதல் முறையாக 5.30 மணிக்கு எழுந்து கொண்டேன்… நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக… எனது இந்த முடிவிற்கு காரணம் ராகுல் தான்.
அன்று இரவு நான் அவன் மேல் விழுந்தபோது நான் ‘வெயிட்’டாக இருப்பதாகக் கூறியது என்னை உசுப்பேற்றிவிட்டது.


‘என்னையா வெயிட்ன்னு சொன்ன… இன்னும் ஒரே மாசத்துல ‘ஸிரோ’ சைஸ் ஆகி காட்டுறேன்…’ என்று எனக்குள் நானே சபதம் எடுத்துக் கொண்டேன். (பின்ன அது நடக்காம போய்ட்டா???)

என் அறையிலிருந்து வெளியே வந்த நான், எதிரில் வந்த என் அம்மாவின் ஆச்சர்யப் பார்வையை கண்டுகொள்ளாமல் வீதில் இறங்கி மெதுவாக நடந்தேன்.

‘ஸ்ஸ்ஸ் என்ன இப்போவே தூக்கமா வருது???… சரி வழில தான் யாரும் இல்லையே… லைட்டா கண்ண மூடியே கொஞ்ச தூரம் நடப்போம்???…’

மெல்ல நடந்த நான் எப்போது ஒரே இடத்தில் நின்று தூங்கினேன் என்று தெரியவில்லை. யாரோ என்னை உலுக்கியதும் சுயநினைவிற்கு வந்த நான், கண்களைக் கசக்கியவாறே சுற்றுப்புறத்தை உணர முயன்றேன். அப்போது தான் என் சபதம் நினைவிற்கு வந்தது.

‘ச்சே எப்படி நின்னுட்டே தூங்கிருக்கேன்???… ஐயோ எத்தன பேரு பார்த்தாங்களோ???... என் மானமே போச்சு… அச்சோ இப்போ யாரு என்ன எழுப்புனாங்க…???’ என்று நிமிர்ந்து பார்த்தபோது கஷ்டப்பட்டு புன்னகையை அடக்கியபடி நின்றிருந்தான் ராகுல்.

‘அச்சோ இவன் முன்னாடியா நான் அசிங்கப்படனும்…’ என்று நினைத்தவாறே அவனைப் பார்த்து இளித்து வைத்தேன்…???

“மேடம் என்ன நின்னுட்டே தூங்குற மாதிரி புது யோகாவா…???”

அவனைப் பார்த்து முறைத்தேன். பின்பு இருவரும் மெல்ல நடந்தோம்.

“மேடம்க்கு இது மிட் நைட்டாச்சே???… எப்படி இவ்ளோ சீக்கிரமா எழுந்த…”

“அதெல்லாம் இல்லையே… இவ்ளோ நாள் வீட்டுக்குள்ளேயே எக்சர்சைஸ் பண்ணிட்டு இருந்தேன்… இப்போ ஃப்ரெஷ் ஏர் ஃபீல் பண்ணனும்ன்னு
வெளிய வாக்கிங் வந்தேன்???…” என்று அலுங்காமல் பொய்யை சொன்னேன்.


“??? உன்ன எழுப்ப உங்க அம்மா கத்துற கத்து அந்த தெருவுக்கே கேட்கும்... இதுல மேடம் என்ன சொன்னீங்க… ‘ஃப்ரெஷ் ஏர் ஃபீல் பண்ண’ வாக்கிங் வந்தீங்களா…???”

‘அச்சோ இந்த அம்மாவால திரும்பவும் என் இமேஜ் டேமேஜ் ஆகிடுச்சு???’

நான் உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருக்க, “என் பாடு தான் ரொம்ப மோசம்…” என்று அவன் முணுமுணுத்தது எனக்குக் கேட்டது.

“என்ன சொன்னீங்க…” நான் கேட்டது சரி தானா என்று உறுதிப்படுத்திக் கொள்ள அவனிடம் கேட்டேன்.

“ம்ம்ம் உன் ஃபியூச்சர் ஹஸ்பண்ட் ரொம்ப பாவம்ன்னு சொன்னேன்…???”

இப்பொழுதெல்லாம் அவனிடம் சற்று சகஜமாக பேசினேன். “ஹ்ம்ம் என் ஹஸ்பண்ட், அவரே எல்லா வேலையும் செஞ்சுடுவாறு… எனக்காக…” என்று சிரிப்புடன் கூறினேன்…??? ‘எனக்காக’ என்பதில் சற்று அழுத்தம் கொடுத்து…

“ஹ்ம்ம் நெனப்பு தான்???…”

அவனுக்கு முன்னாள் நடந்துக் கொண்டிருந்த நான், குறும்பு தலைத்தூக்க, “ஏன் எனக்காக நீங்க எல்லா வேலையும் செய்ய மாட்டீங்களா???…”என்று கண்ணடித்துக் கேட்க… இம்முறை அதிர்ச்சியடைவது அவன் முறை…

ஈர்ப்பான்(ள்)…
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
Nice update,,nathi remba thivirama Krishna yarunu kandipa Padikka muyarchi panra ,ithula yearly morning jaking vera raghul kitta pannatha katti bulb vangra avanikku feature husband nenga ariyama things nu nall balb avnuikku therippi guduthudang??????? eagerly waiting next update ????
 




Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
Nice update,,nathi remba thivirama Krishna yarunu kandipa Padikka muyarchi panra ,ithula yearly morning jaking vera raghul kitta pannatha katti bulb vangra avanikku feature husband nenga ariyama things nu nall balb avnuikku therippi guduthudang??????? eagerly waiting next update ????
Tq so much???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹா ஹா ஹா
நதிப் புள்ளை வாக்கிங் ஜாக்கெட்
சேச்சே ஜாக்கிங்-லாம் போவுதா?
அய்யோ எனக்கு நெஞ்சு வலிக்குதே
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏன் மா clue கொடுத்து இருக்கேன்னு சொன்னியே எது????? ராகுலா இல்லை ஆனந்தானு குழம்புறதையா ???
ஹா ஹா ஹா
சூப்பர் க்வ்ஸ்ஸ்ட்டின் கேட்டீங்க, குகப்ரியா டியர்
இதிலே மூணாவது ஒரு கிருஷ்ணா சாண்டியின் லவ்வரை விட்டுட்டீங்களே
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
ஹா ஹா ஹா
பானுமா நீங்களே சொல்லுங்க ??? நானும் யோசிச்சு யோசிச்சு மூளை heatahஆகி வழியுது. மீ பாவமில்லை மா????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top