• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 41.2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
ஹாய் பிரெண்ட்ஸ்....??? அடுத்த எபியோட வந்துட்டேன் ???
படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க ???
ரீடெர்ஸ் எல்லாருக்கும் ஒரு டாஸ்க்??? 'ஹல்க்' பெயர் காரணம் என்னனு கண்டுபிடிங்க ??? எல்லாரும் அவங்க கெஸ்ஸ கமென்ட் பண்ணா தான், அதுக்கு நதியோட ரீசன கதைல சொல்வேன்:LOL::p:giggle:

IMG_20200209_215216.jpg

ஈர்ப்பு 41.2

நான் அவனை க்ரிஷாக நினைத்து பேசினால் ஒருமையிலும், ராகுலாக நினைத்து பேசினால் பன்மையிலும்பேசுவதாக அவன் விளக்கம் தந்த போது, எனக்கும் அப்படி இருக்குமோ என்று தோன்றியது. மேலும் என் மனநிலையையும் சரியாக யூகித்த அவனை எண்ணி, அவன் என்னவன் என்று சற்று கர்வமாகவும் இருந்தது. ஆனால் தற்போது அதைக் காட்டிக்கொள்ள கூடாது என்று யோசித்து முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டேன்.

அவனோ இன்னும் புன்னகையோடுஅதே ஓரடி இடைவெளியில் நின்றுக் கொண்டிருந்தான்.

“க்கும்… அதான் விளக்கம் கொடுத்தாச்சுல… இப்போ பழையபடி உங்க இடத்துல இருந்து எங்க விட்டீங்களோ அங்க இருந்து கன்டின்யூ பண்ணுங்க…???”

“??? நான் இவ்ளோ பக்கத்துல நிக்கிறது, உனக்கு பயமா இருக்கோ...??”

“எனக்கென்ன பயம்… அதுவும் உங்கள பார்த்து எதுக்கு பயப்படனும்…???”

“அப்போ நான் இங்க இருந்தே கன்டின்யூ பண்ணா உனக்கு ஒன்னும் ‘பயம்’ இல்லல…???”

‘அச்சோ இதுக்கு பயமா இருக்குன்னே சொல்லிருக்கலாமோ…??’

“அ…அத்….அது…” என்று நான் திக்கியதைப் பார்த்த அவன், அங்கிருந்து சிரிப்புடனே விலகி, “இன்னொரு நாள் இதுக்கான பதில உன்கிட்டயிருந்து தெரிஞ்சுக்குறேன்… இப்போ என் லவ் ஸ்டோரிய சொல்லி முடிக்கிறேன்…???” என்றான்.

‘ஷப்பா… இவன் கொடுக்குற ஷாக்ல என் ஹார்ட் தான் படப்படன்னு துடிக்குது….. ஆனாலும் நான் கம்ஃபர்ட்டபிளா இல்லனு அவனே விலகுனது…. சோ ஸ்வீட்…???’ என்று மனதில் அவனைக் கொஞ்சிக் கொண்டேன்.

அவன் தொடர்ந்தான்…. “இங்க வந்ததுக்கு அப்பறம் உன்ன பார்த்த நான் டோடல் ஃபிளாட் தான்… அப்போ உன்னோட க்யூட்நெஸ் பிடிச்சுருந்தது… ஆனா இப்போ மொத்தமா பிடிச்சுருக்கு…???” என்று என்னை மேலிருந்து கீழ்வரை பார்வையாலே வருடி கூறினான்.

நானோ வெட்கத்தில் பேசாமடந்தையாகிப் போனேன்.

“இப்போவும் அதே க்யூட்நெஸோட மத்தவங்ககிட்ட நீ காட்டுற அன்பு, உன் பிரெண்டுக்காக எத வேணும்னாலும் செய்யற உன் பிரெண்ட்ஷிப், தெரிஞ்ச பொண்ணு தப்பான வழில போகக் கூடாதுன்னு அவளுக்காக கேர் பண்ண விதம், அண்ணனா பிரெண்டாங்கிற சிஷுவேஷன் வந்தப்போ ரெண்டு பேரையும் விட்டுக் கொடுக்காம, அவங்க லவ்வுக்கு பண்ண ஹெல்ப், தன்னோட கஸின் எவ்வளவு தான் அவமானப் படுத்திருந்தாலும், அத மனசுல வச்சுக்காம அவள இப்போவரைக்கும் சப்போர்ட் பண்ற அந்த மனசு…. என் பப்ளி எப்போவுமே எனக்கு ஸ்பெஷல் தான்???… இப்போகூட ‘என்ன ஒரு சூப்பர் கேரக்டர் டா என் பப்ளி’ன்னு வியக்க வச்சுகிட்டே தான் இருக்க…”

அவனின் இந்த பாராட்டால் கூச்சத்தில் நெளிந்த நான், அவன் சொன்ன ‘ஸ்பெஷ’லில் அவனைக் காதலாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது யோசித்துப் பார்த்ததில், அவனை ஈர்க்க நான் செய்த அலங்காரமும் அதற்காக அவனிடமிருந்து எந்தவொரு பெரிய வரவேற்பும் இல்லை என்று வருந்தியதும் நினைவிற்கு வந்தது. ஆனால் இப்போதோ அவன் கூறியதில் இருந்து, எந்த முயற்சியும் இல்லாமல், என் இயல்பிலேயே, அவன் என்னை ஈர்க்கும் முன்பே நான் அவனை ஈர்த்தது, உள்ளுக்குள் சற்று பெருமையாக இருந்தது.

நான் அவனைப் நோக்குவதும் பின் நிலத்தை நோக்குவதுமாகக் கழிந்தது அடுத்த இரண்டு நிமிடங்கள்.

“என்ன பப்ளி… இவ்ளோ பெருசா உன்மேல் இருக்க லவ்வ சொல்லிருக்கேன்… அதுக்கான எந்த ரெஸ்பான்ஸும் இல்லாம இருக்க…”

“எ…என்…என்ன ரெஸ்பான்ஸ்” - என் மனதிலோ ஏதோ வில்லங்கமாக கேட்கப் போகிறான் என்று நினைத்தேன்…

“ஹ்ம்ம் ஒரு ஹக் ஒரு கிஸ்… இப்படி எதுனாலும் எனக்கு ஓகே தான்…???” என்று அவன் கண்ணடிக்க…

“ஹான் இவ்ளோ லேட்டா சொன்னதுக்கு ஒரு அடி வேணா கிடைக்கலாம்…” என்று நான் அவனைப் பார்த்து ஒழுங்கு காட்டினேன்.

அவனோ முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு, “பப்ளி ஏற்கனவே நீ அடிச்சதுல உடம்பெல்லாம் ஒரே வலி… அதுக்கு மசாஜ் பண்ணாலும் எனக்கு ஓகே தான்…???” என்று குறும்பாகக் கூற…

அவன் குறும்பில் தொலையத் துடித்த மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “ஸ்ஸ்ஸ் ஹல்க் சும்மா இருங்க…” என்று என்னை மறந்து இன்னொரு முறை அவனின் செல்லப் பெயரைக் கொண்டு அழைத்தேன்.

“ஹ்ம்ம் டூ பேட் பப்ளி… இன்னும் அந்த ‘ஹல்க்’க்கு ரீசன் என்னனு சொல்லல…”

“ஹலோ நீங்களும் தான் ‘பப்ளி’ன்னு கூப்பிடுறீங்க… நான் அதுக்கு ரீசன் கேட்டேனா…” என்று கூறி, பின் குறும்பாக, “அதுக்கான ரீசன் கண்டுபிடிச்சா நீங்க கேட்ட ஒரு ஹக் ஒரு கிஸ் கிடைச்சாலும் கிடைக்கலாம்…” என்று அவனைப் பார்த்து கண்ணடித்தேன்.

‘ஒரு ஹக் ஒரு கிஸ்ஸுக்காக என்னவெல்லாம் பண்ண வேண்டியதாயிருக்கு...’ என்று அவன் முணுமுணுப்பது கேட்டதும், “என்ன சிபிஐ ஆபீஸர், எந்த கஷ்டமான கேஸ்ஸையும் ஈஸியா சால்வ் பண்றீங்க… இத கண்டுபிடிக்குறதா கஷ்டம்…???” என்று வேண்டுமென்றே கூறினேன்.

“என்ன பப்ளி பழிக்குப் பழியா…???”

“ம்ம்ம் அப்படியும் வச்சுக்கலாம்…??? ஆனா டைம் ஒன் வீக் இல்ல… ஒன் டே… ???”

“??? அப்போ நாளைக்கு எனக்கு ஒரு ஹக் ஒரு கிஸ் உண்டு…???”

‘என்ன இவ்ளோ கான்ஃபிடெண்டா சொல்லுறான்… ஈஸியா கண்டுபிடிச்சுருவானோ…??? நான் தான் தேவை இல்லாம வாயக் கொடுத்து மாட்டிக்கிட்டேனோ…???’

“ஹலோ மேடம் என்ன பதிலே காணோம்…???”

“அ.. அது… நாளைக்கு பார்க்கலாம்…” என்றேன் முயன்று வரவழைத்த ‘கெத்து’ குரலில்…

“கெட் ரெடி ஃபார் அவர் ஃபர்ஸ்ட் ஹக் அண்ட் ஃபர்ஸ்ட் கிஸ் பப்ளி…???”

நானோ வெட்கத்ததை மொத்தமாக குத்தகை எடுத்திருக்க, தலை குனிந்து அமர்ந்திருந்தேன்.

அப்போது வெளியே கேட்ட, “டேய் எவ்ளோ நேரம் டா ரொமான்ஸ் பண்ணுவ… நானும் இப்போ முடிப்ப அப்போ முடிப்பன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தா… நீ முடிக்கிற மாதிரி தெரியல…” என்ற குரலில் இருவரும் அடித்துப் பிடித்து நகர்ந்து அமர்ந்தோம்.

“கரடி அதுக்குள்ள வந்துட்டான்…” என்று ராகுல் முணுமுணுக்க… நானோ பக்கென்று சிரித்தேன்.

“அடேய் எல்லாம் சொல்லி முடிச்சியா இல்ல ரொமான்ஸ் பண்ணதுல மிச்சம் மீதி ஏதாவது இருக்கா” என்று கூறியவாறே கண்ணை மூடிக்கொண்டு உள்ளே வந்து கொண்டிருந்தான் ஆனந்த்.

“டேய் கண்ணத் தொற டா பக்கி…”

“நான் மாட்டேன் பா… நீங்க பண்ற ரொமான்ஸ்ல இந்த சின்ன பையன் கெட்டு போய்டுவேன்… இதுல ரெண்டு பேரும் போட்டிப் போட்டு என்ன என் செல்லாக் குட்டி கிட்டயிருந்து என்ன பிரிக்கிறதுலயே குறியா இருக்கீங்க… அப்பறம் நீங்க பண்றதெல்லாம் பார்த்துட்டு என் மனசு கஷ்டப்படவா… நோ வே…”

“டேய் ஓவரா பண்ணாத டா… இப்போ ஒழுங்கா கண்ணத் தொறக்கல, நீ இன்னும் ஒரு வருஷத்துக்கு நேஹாவ பார்க்க முடியாத மாதிரி பண்ணிடுவேன்…”

“அடப்பாவி… நீயெல்லாம் ஒரு பிரெண்டா… மத்தவங்களெல்லாம் அவங்க பிரெண்டு லவ்வுக்காக என்னவெல்லாமோ பண்றாங்க… ஆனா நீ எப்படி பிரிக்கலாம்ங்கிறதுலயே இருக்க…???”

“அப்பறம் மச்சான் நீ இல்லாம நான் தனியா என்ன டா பண்ணுவேன்...” என்று சோகமாக ராகுல் சொல்ல…

“அடேய் தப்பு தப்பா பேசாத டா… அதான் உனக்கு உன் ஆள் இருக்கால… இவ்ளோ நேரம் அவக்கூட தான கடலை போட்ட… அப்பறம் என்ன ‘நீ இல்லாம என்ன பண்ணுவேன்’ன்னு ஃபீலிங்ஸ் வேற…???”

இவர்கள் இருவரது சம்பாஷனைகளைக் கேட்டு அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டிருந்தேன்.

“நீங்க ரெண்டு பேரும் இப்படி பேசுறத யாராவது கேட்டா, சத்தியம் பண்ணாக் கூட உங்க ரெண்டு பேரையும் சிபிஐ ஆபீஸர்னு யாரும் நம்ப மாட்டாங்க…???”

“ஹே நதி மா… இப்போ ஓகே வா…” என்றான்.

“ஹான் வந்து ஐஞ்சு நிமிஷமாச்சு… இப்போ தான் உங்க கண்ணுக்கு நான் தெரியறேனோ… அதுவும் இல்லாம இந்த கடத்தல் பிளான போட்டுக் கொடுத்ததே நீங்க தானாமே…” என்று கூறி ராகுலைப் பார்த்துக் கண்ணடித்தேன்.

“அடப்பவிங்களா… இப்படி வேற இந்த தடியன் உன்கிட்ட போட்டுக் கொடுத்துருக்கானா… நதி மா நீ யார வேணும்னாலும் நம்பு… ஆனா இவன மட்டும் நம்பாத…”

“அதெல்லாம் இல்ல… நான் இவன தான் நம்புவேன்…” என்று ராகுலின் கையோடு என் கையைக் கோர்த்துக் கொண்டேன்.

“என்ன கொடுமை டா இது… இதுக்கு தான் நல்லதுக்கே காலம் இல்லன்னு சொல்றாங்க போல…” என்று அவன் புலம்பவும், நாங்கள் இருவரும் சேர்ந்து நகைத்தோம்.
 




Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
பின் இருவரும் சீரியஸாக அந்த மினிஸ்டர் கேஸைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

“வெளிய என்ன நடக்குது ஆனந்த்… எல்லாம் நம்ம பிளான் படி போகுதா…”

“ம்ம்ம் ஆமா ராகுல்… அவங்க இப்பவும் கன்ஃப்யூஸ்டா தான் இருக்காங்க… இன்னும் அந்த மினிஸ்டரோட ஆளுங்க கிட்ட பேசலன்னு நினைக்கிறேன்… அப்படி அவங்க கான்டாக்ட் பண்ண ப்ரூஃப் மட்டும் கிடைச்சா அந்த மினிஸ்டர் இனி எப்போவுமே வெளிய வரமுடியாத மாதிரி பண்ணிடலாம்…”

“நாளைக்கே அந்த ப்ரூஃப் கிடைச்சா தான் நாளை மறுநாள் அந்த மினிஸ்டர் கோர்ட் போறதுக்கு முன்னாடி அத எவிட்டேன்ஸா கொடுக்க முடியும்…”

“ரெண்டு பேரும் ஏன் இவ்ளோ கவலை படுறீங்க…. அதெல்லாம் நாளைக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்… சோ டோன்ட் ஒர்ரி…” என்றேன்.

இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து மெல்லிதாக சிரித்துக் கொண்டனர்.

பின் ஆனந்த் என்னிடம், “எங்களுக்கு நல்லதா நடக்கும்… ஆனா உனக்கு உன் வீட்டுல என்ன நடக்கும் தெரியுமா…” என்று அவன் கூறியதும் தான் எனக்கு என் வீட்டின் நினைவே எட்டிப் பார்த்தது.

மணியைப் பார்த்தால், அது ஒன்பதைத் தாண்டி பத்து நிமிடங்கள் ஆகின்றன என்று காட்டியது.

“அச்சச்சோ போச்சு இன்னைக்கு ஹிட்லர் கிட்ட நல்லா மாட்டினேன்…” என்று நான் புலம்ப ஆரம்பிக்க…

“எதுக்கு டா இப்போ அவள பயமுறுத்துற…” என்று ராகுல் ஆனந்திடம் கேட்டான்.

“ஹ்ம்ம் என்ன உன் ஆளு எவ்ளோ ஓட்டுன்னா… அப்போலாம் வாயத் தொறக்காம… இப்போ வந்து ஏன்னு கேக்குறியா…” என்று ஆனந்த் அங்கலாய்க்க...

இவை எதுவும் என் காதில் விழவில்லை. என் வீட்டைப் பற்றிய பயமே முதன்மையாகத் தோன்றியது.

“ஹே பப்ளி இப்போ எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற… அவன் சும்மா சொல்றான்… உங்க வீட்டுல இங்க நடந்தத ஓரளவுக்கு உண்மையும் பொய்யும் கலந்து சொல்லியாச்சு… இப்போ கூட நீ சேஃப்பா இருக்கன்னும்… உன்ன கூட்டிட்டு வரேன்னும் சொல்லிட்டு தான் ஆனந்த் வந்துருக்கான்…” என்று அவன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் என் பயம் போகவில்லை…

பின் அவன், “உன் Mr.Perfectஅ நம்ப மாட்டியா…” என்று அவன் கேட்க, சட்டென்று அவனைப் பார்த்தேன் நான். அதிசயமாக அவ்வளவு நேரம் இருந்த பயம், பதட்டம் அனைத்தும் குறைவது போல இருந்தது.

நான் ஒரு பெருமூச்சு விட்டு என்னை இயல்பிற்கு கொண்டு வந்தேன். பின் ராகுலைப் பார்த்து தலையசைத்து கிளம்பலாம் என்று சைகையில் கூறினேன்.

நாங்கள் இருவரும் எழுந்து வெளியே செல்ல எத்தனித்த போது தான், எதிரில் இருந்த ஆனந்தைப் பார்த்தோம். அவனோ வாயைக் கைகளால் மூடி இருந்தான்.

“இப்போ எதுக்கு டா இப்படி வாய மூடி இருக்க…”

“ஹ்ம்ம் இந்த ரணகளத்துலையும் உங்களுக்கு கிளுக்கிளுப்பு கேட்குது…” என்று அவன் கூறவும், ராகுல் அவனைத் துரத்த அதைப் பார்த்து நான் சிரிக்க என்று என் மனநிலையை மாற்றியே என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

வீட்டிற்கு சென்றவுடன் அங்கிருந்த சூழ்நிலையே அவர்களின் மனநிலையை உணர்த்தியது. நான் உள்ளே நுழைந்ததும் என் அம்மா என்னை கட்டிக்கொண்டு அழுதார். என் அப்பாவோ இறுகிப்போய் இருந்தார். அபி அம்மாவை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.

நானும் என் அம்மாவிடம், ‘எனக்கு ஒன்றும் இல்லை... நன்றாகத் தான் இருக்கிறேன்…’ என்று கூறிக் கொண்டிருந்தேன்.

அவரோ கைகளால் என்னை தடவி அதை உணர்ந்து கொள்ள முயன்றார். நான் என்ன தான் நன்றாக இருப்பதாகக் கூறினாலும் தாயின் மனம் அதை உணர்ந்தால் மட்டுமே திருப்தியடையும் என்று புரிந்ததால் அவரின் கைகளில் என்னை ஒப்படைத்து அமைதியாக நின்றிருந்தேன்.

என் அப்பாவோ ராகுலிடம் சென்று, “என் பொண்ண இந்த இக்கட்டான சூழ்நிலைலயிருந்து காப்பத்துனதுக்கு ரொம்ப தேங்க்ஸ்…” என்றார்.

“அங்கிள், இன்னும் அந்த மினிஸ்டர் கேஸ்ல ஃபைனல் ஜட்ஜ்மெண்ட் வரல… அது வரவரைக்கும் உங்க பொண்ணு பத்திரமா தான் பாத்துக்கனும்... ஐ வில் ஹாண்டில் இட்… நீங்க கவலை படாதீங்க…”

“ஒரு போலீஸா நீங்க உங்க கடமை… அதாவது என் பொண்ணோட பாதுகாப்ப யோசிக்கிறது ஓகே… ஆனா வேற எந்த காரணத்துக்காகவும் என் பொண்ணோட உங்கள சேர்த்து வச்சு பார்க்க எனக்கு விருப்பமில்ல… நீங்க புரிஞ்சுக்குவீங்கனு நினைக்கிறேன்...” என்று கூறி ராகுலை வழியனுப்பி வைத்தார்.

அவர் அப்படி சொன்னதும், அவருக்கு எங்கள் இருவரின் காதல் தெரிந்திருக்கிறது என்பது புரிந்தது.

ராகுல் செல்லும்போது என்னைப் பார்க்க, நான் அவனிடம் ‘சாரி’ என்று உதட்டைசைக்க... அவனோ தான் பார்த்துக் கொள்வதாய் தலையசைத்து சென்றான்.

“ப்பா அது…” என்று செல்வதற்குள் என் அப்பா, “நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்… எல்லாம் எனக்குத் தெரியும்….” என்று என்னை திட்டிவிட்டு, “பொண்ணு காலைல எழுந்து எங்க போறா… யாரு கூட போறான்னு கூட தெரிஞ்சுக்காம நீயெல்லாம் வீட்டுல என்ன பண்ற…” என்று என் அம்மாவையும் திட்டினார்.

“ஏன் டி எங்க மானத்த வாங்கனும்னே இருக்கீயா… இதுக்கு தான் காலைல வேகவேகமா கிளம்பி போறீயா… எல்லாம் என்ன சொல்லனும்… நீ எங்க போற என்ன பண்றன்னு உன்ன கேட்காம… உனக்கு ‘ப்ரைவசி’ கொடுத்தா அத இப்படி தான் மிஸ்யூஸ் பண்ணுவியா... “ என்று என் அம்மா புலம்ப ஆரம்பிக்க… என் அப்பாவோ வேறு எதுவும் சொல்லாமல் அவரின் அறைக்குச் சென்று விட்டார்.

மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்த என் மனநிலை முற்றிலுமாக மாறியிருந்தது. எப்படி என் அப்பாவின் சம்மதத்தைப் பெறுவது என்ற தீவிர ஆலோசனைக்கு இப்பொழுதே தள்ளப்பட்டேன்...

ஈர்ப்பான்(ள்)…
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
நதிக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையா????? அதான் அபி இருக்காங்க ? , ஆனந்த் , கிருஷ்ணா , சாண்டி , சாண்டியோட டாடி இப்படி ஏகப்பட்ட அடிமைகள் இருக்க நதிக்கு பயமேன்:unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Enna pa Nalla thaan ah pochu Ippo Appa speed break podurar. Nan hulk name kandu piduchiten. Rahulkrishna. Center la irruka four letters Ra hulk rishna.
 




Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
நதிக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையா????? அதான் அபி இருக்காங்க ? , ஆனந்த் , கிருஷ்ணா , சாண்டி , சாண்டியோட டாடி இப்படி ஏகப்பட்ட அடிமைகள் இருக்க நதிக்கு பயமேன்:unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
Main ah oru adimaiya vitutenga Mr.Perfect @ Rahul Krishna???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top