• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 42

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
ஹாய் பிரெண்ட்ஸ்??? அடுத்த எபியோட நான் வந்துட்டேன்??? நிறைய பேர் அவங்க கெஸ்ஸ கமெண்ட் பண்ணியிருந்தீங்க...??? சிலர் இன்னும் கமெண்ட் பண்ணல??? அதனால இன்னைக்கு எபில 'ஹல்க்'க்கு காரணம் சொல்லல??? இன்னைக்கும் நிறைய கெஸ் எதிர்பார்க்கிறேன்???

1581486701853.jpg

ஈர்ப்பு 42

“எப்படி டி உனக்கு தைரியம் வந்துச்சு லவ் பண்ண…” என்று என் அம்மா என்னைத் திட்ட…

“ம்ப்ச்… ம்மா அப்பா போய் ரொம்ப நேரமாச்சு… உன் நடிப்ப கொஞ்சம் ஸ்டாப் பண்ணு???”

“ஹப்பா… ஒரு வழியா அந்த மனுஷன் ரூமுக்குள்ள போய்ட்டாரா… அவரு போறதுக்குள்ள நான் எவ்ளோ கஷ்டப்பட வேண்டியதாயிருக்கு…??? ஆமா நீ எப்படி டி என் நடிப்ப கண்டுபிடிச்ச…???”

நானும் அபியும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தோம்…

பின் நான், “ம்ம்ம்… உன் நடிப்பு தாங்க முடியாம தான் அப்பாவே உள்ள போயிருப்பாரு…???” என்றேன்.

“உனக்கு பொறாமை டி???”

“ஆமா ஆமா உன் நடிப்புக்கு ஆஸ்கார் அவார்ட் கொடுக்க பிளான் பண்ணிருக்காங்க… அத பார்த்து நான் பொறாமை படுறேன்???”

“விடு டி… ஆமா ராகுல் உன்ன உண்மைலேயே லவ் பண்றானா…”

“ம்மா… ஏன் இப்படி கேக்குற…”

“இல்ல டி… ராகுலுக்கு இருக்க அறிவுக்கும், அழகுக்கும், பதவிக்கும் உன்ன போய் லவ் பண்றானே…???”

“ஹ்ம்ம் அத உன் ராகுல் தம்பி கிட்டயே கேக்க வேண்டியது தான…???” என்று முணுமுணுத்துவிட்டு அறைக்குச் சென்றேன்.

அறைக்குச் சென்ற பத்து நிமிடத்திலேயே கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வந்தாள் ஷீலா. அவள் முகம் வாடியிருந்தது.

“நதி ரொம்ப சாரி…. உனக்கு எங்களால ரொம்ப கஷ்டம்ல… ஃபர்ஸ்ட் என்னால, இப்போ அப்பானால…” என்றாள் வருந்தியபடி.

“ஹே அதெல்லாம் ஒன்னும் இல்ல… நீயேன் தேவையில்லாததுக்கு ஃபீல் பண்ணிட்டு இருக்கு… இந்த டைம்ல இப்படி ஃபீல் பண்ணாம, எனக்கு எப்படி மகனையோ இல்ல மகளையோ பெத்துத் தரப் போறங்கிறத யோசி…” என்று அவளின் எண்ணத்தை அவள் வயிற்றில் வளரும் குழந்தையைக் காரணம் காட்டி திசைத் திருப்பினேன். அது நன்றாகவே வேலை செய்தது.

அவளிடம் சிறிது நேரம் பேசி, அவளின் குற்ற உணர்வை சற்று போக்கிய பின்னரே அவளை அவளின் அறைக்கு அனுப்பி வைத்தேன்.

இதே எண்ணங்களில் உழன்றபடி இருந்தததால், இரவு உறக்கம் வராமல் என் கட்டிலில் பிரண்டு கொண்டிருந்தேன். எப்படி என் அப்பாவை சம்மதிக்க வைப்பது என்ற யோசனையே எனக்குள் வியாபித்திருந்தது. அப்போது என் அலைப்பேசியின் சத்தம் என் கவனத்தை ஈர்த்தது.

ராகுல் தான் மெசேஜ் பண்ணியிருந்தான்.

ஆர்.கே : பப்ளி, எதையும் நினைக்காம தூங்கு… எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்…

நான் : ம்ம்ம்…

ஆர்.கே : இன்னும் ரெண்டு நாள்அந்த கேஸ் விஷயமா கொஞ்சம் பிஸியா இருப்பேன்… சோ சாட் பண்ண முடியாது… ஏதாவது இம்போர்டண்ட் மேட்டரா இருந்தா ஆனந்துக்கு கால் பண்ணு…

நான் : ம்ம்ம்…

ஆர்.கே : பப்ளி அப்படியே என்ன நெனச்சுட்டே தூங்கு… ட்ரீம்லயாச்சும் எனக்கு ஹக், கிஸ் குடு…

நான் : ம்ம்ம்…

என் கவனமோ வேறு எங்கோ இருந்ததால், அவனின் செய்திகளை சரியாக வாசிக்காமல் பதில் அனுப்பிக் கொண்டிருந்தேன். அப்போது வந்த அழைப்பில் முழுதாக என்னை மீட்டேன். நான் அனுப்பிய விடைகளைப் பார்த்து தலையிலடித்துக் கொண்டேன்.

‘லூஸி… இப்படியா மெசேஜ் பண்ணுவ… சும்மாவே அவன் ஓட்டுவான்… நீ அவனுக்கு எக்ஸ்ட்ரா ரீசன் வேற கொடுத்துருக்க…???’

அழைப்பு ஒரு முறை நின்று பின் மீண்டும் ஒலித்தது. ‘அச்சோ இவன் வேற திருப்பி திருப்பி கால் பண்றானே…?? இப்போ எடுத்தா ரொம்ப ஓட்டுவான்… எடுக்கலைனா அதுக்கும் ஏதாவது சொல்வான்…???’

இந்த முறை அழைப்பு நின்று, செய்தி வந்தது.

ஆர்.கே : இப்போ நீ கால் அட்டெண்ட் பண்ணலைனா நேருல வருவேன்…

‘என்னாது நேருல வருவானா??? அதுக்கு போன் காலே பெட்டர்???’

அடுத்த அழைப்பில் முதல் ‘ரிங்’கிலேயே எடுத்துவிட்டேன்.

“இத முதலேயே செஞ்சுருக்கலாம் பப்ளி…”

“ம்ம்ம்…” என்று அப்போதும் ‘ம்ம்ம்’ கொட்டினேன்.

என்னாச்சு உனக்கு… ஏன் ரெஸ்ட்லசா இருக்க…”

“பயமா இருக்கு ராக்கி…” அவனின் பெயரை சொல்லிக் கூப்பிட்டதை கூட உணரவில்லை நான்.

“ஹே பப்ளி… இப்போ என்னனு கூப்பிட்ட…”

“ஹான்… என்னனு கூப்பிட்டேன்… ராக்..கி... ஸ்ஸ்ஸ்…”

“??? ஃபர்ஸ்ட் ஹல்க்… இப்போ ராக்கியா… ???”

“அது… ராகுல் கிருஷ்ணா – ரொம்பபப நீளமா இருக்கு… அதான்???…” என்று இழுத்தேன்…

“நீ சொன்ன ‘ஹல்க்’க்குகே இன்னும் ரீசன் கண்டுபிடிக்கல…”

“??? நாளைக்குள்ள கண்டுபிடிச்சா தான் நீங்க கேட்டது கிடைக்கும்…???”

“??? நானே அந்த நெனப்பு இல்லாம இருந்தாலும் நீ விட மாட்ட போலயிருக்கு???”

‘ஸ்ஸ்ஸ் சும்மா இருந்தவன டெம்ப்ட் பண்ணிட்டயே…’

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல…???”

இப்படியே பத்து நிமிடங்கள் பேசினோம். “என்ன பப்ளி… இப்போ நீ ஓகேவா…” என்று கேட்டான்.

‘பாரு டா… என் ஆளு என் மூட மாத்துறதுக்காகத் தான் இந்த நேரத்துல போன் பண்ணிருக்கானா… ஹ்ம்ம் யூ ஆர் ஆல்வேஸ் ஸ்வீட் ரகு….???’

“ம்ம்ம் ஓகே ஓகே…”

“என்ன மேடம் ஓகேய ஒரு மாதிரி சொல்ற…”

‘இதுக்குமேல பேசுனா நானே ஏடாகூடமா ஏதாவது பேசிடுவேன் போல???… ஃபர்ஸர் கால கட் பண்ணனும்…???’

“எனக்கு தூக்கம் வருது…. பை… குட் நைட்… ஸ்வீட் ட்ரீம்ஸ்…” என்று வேகவேகமாக ஒப்பித்தேன்.

“??? குட் நைட் பப்ளி… உனக்கு இந்த ‘ஹல்க்’ ட்ரீம்ஸ் தான்…???”

“ஹான் ஆச தான்…???” என்று கூறியவாறே அழைப்பைத் துண்டித்தேன்.

அடுத்த இரு நாட்கள் வேகமாக கழிந்தன. அவன் கூறியதைப் போல அந்த இரு நாட்களும் அவன் என்னிடம் பேசவில்லை. வேலைக்காரணமாததால் நான் எதுவும் கண்டுகொள்ளவில்லை.

அந்த இரண்டு நாட்களும் என் அப்பா என்னிடம் பேசவில்லை. அவர் இறுகியே இருந்தார். அதனால் எனக்கு சிறிது கவலை இருந்தாலும், ராகுல் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.

மூன்றாம் நாள் காலை…. ஞாயிற்று கிழமை என்பதால் பொடிக்க்கும் செல்ல வேண்டியிறாததால் அந்த நாளை எப்படி கழிப்பது என்ற யோசைனையில் மூழ்கியபடி நடந்து வந்துக் கொண்டிருந்தேன்.

எதிரில் வந்த என் அப்பா, கொஞ்சமும் என்னை கண்டுக்கொள்ளாமல் சென்றது மனதிற்கு வருத்தமாகத் தான் இருந்தது. இந்த இரண்டு நாட்களும் இவ்வாறு தான் சென்றது என்றாலும், உள்ளுக்குள் அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் இன்று ஏனோ இந்த நிகழ்வு என்னை வேதனைக்குள்ளாக்கியது. அதன் காரணம் அவன் மீது நம்பிக்கை குறைந்தது என்பதல்ல... அவன் என்னிடம் பேசி இரண்டு நாட்கள் ஆனதால் இருக்கலாம்.

ஆம் அவன் காதலை உணர்த்தியதிலிருந்து அவனை மிகவும் தேடுகிறேன். என் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்விலும் அவனின் இருப்பை உணர துடிக்கிறேன். இது தான் காதலோ….

செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லாததால், ஹாலில் அமர்ந்து என் நினைவுகளோடு பயணித்துக் கொண்டிருக்க, என்னை யாரோ பார்ப்பது உணர்ந்து திரும்பிப் பார்த்தேன்.
 




Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
அங்கு அபி காதில் அலைப்பேசியை வைத்துக் கொண்டு என்னை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான். நான் ‘என்ன’ என்று சைகையில் கேட்டதும், ‘ஒன்றும் இல்லை’ என தலையசைத்துவிட்டு அவனின் அறைக்குச் சென்று விட்டான்.

‘இவன் எதுக்கு இப்போ என்ன பார்த்து ஓடுறான்…???’

சிறிது நேரம் கழித்து வாசலில் அழைப்பு மணி அடிக்க, என் அம்மா சமையலறையில் இருந்ததால் என்னை யாரென்று பார்க்கச் சொன்னார். என் நினைவுகளைத் தடை செய்ததால் ஏற்பட்ட கோபத்துடன் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே கதவைத் திறந்தேன்.

அங்கு நின்றிருந்ததோ சுதா ஆண்ட்டி. அவரைப் பார்த்த அதிர்ச்சியில் சிலையாக நின்றுக் கொண்டிருந்தேன்.

‘இவங்க எதுக்கு இப்போ வந்திருக்காங்க…???’ என்று நான் யோசித்துக் கொண்டிருந்ததில், அவரை வாசலிலேயே காத்திருக்க வைத்திருந்ததோ, அருகில் நின்றிருந்தவனையோ நான் கவனிக்கவில்லை.

பொறுத்துப் பார்த்த அவர், “என்ன மருமகளே, என்ன உள்ள கூப்பிட மாட்டியா…” என்றார்.

அதிர்ச்சியில் இருந்த எனக்கு அவரின் பேச்சு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்த முழித்துக் கொண்டிருந்தேன் நான். அப்போது தான் அருகில் இருந்தவனைக் கவனித்தேன். அவனோ வழக்கம் போல் புன்னகையில் என்னை ஈர்த்துக் கொண்டிருந்தான்… (இந்த ரணகளத்துலயிலும் உனக்கு ரொமான்ஸ் கேக்குதா???)

சட்டென்று நிகழ்விற்கு வந்த நான் அவர்களை காத்திருக்க வைத்ததில் என்னையே மனதிற்குள் திட்டிக் கொண்டு, “சாரி ஆண்ட்டி… உ..உள்ள வாங்க…” என்று அவருக்கு வழிவிட்டு நின்றேன்.

பின்னால் வந்த அவன் என்னைக் கடக்கையில் நெருங்கி வந்து, வேண்டுமென்றே என் தலையில் முட்டி, “என்ன பப்ளி உங்க ஆண்ட்டிய மட்டும் தான் வெல்கம் பண்ணுவியா… உங்க ஆண்ட்டியோட பையனலாம் வெல்கம் பண்ண மாட்டியா…” என்றவாறே கண்ணடித்து உள்ளே சென்றான்.

அவன் என் தலையில் முட்டியபோது அதிர்ந்த நான் யாராவது பார்த்துவிட்டார்களா என்று சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் அடுத்து பேசியதில் அவனை முறைத்தவாறு நானும் உள்ளே சென்றேன்.

வாசலில் யாரென்று பார்க்கச் சென்று ரொம்ப நேரம் ஆகிவிட்டிருந்ததால் என்னைத் தேடி என் அம்மாவும் ஹாலிற்கு வந்தார். அங்கு வந்திருந்த சுதா ஆண்ட்டியையும் ராகுலையும் பார்த்தவர், “வாங்க வாங்க…” என்றழைத்தார் மகிழ்ச்சியாக.

அம்மாவும் சுதா ஆண்ட்டியும் ஏற்கனவே அறிமுகமாகியிருந்ததால் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அங்கு வந்த அபியும் ராகுலிடம் பேசிக் கொண்டிருந்தான். நான் மட்டுமே என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தப்படி நின்றுக் கொண்டிருந்தேன்.

அப்போது அப்பா அவரின் அறையிலிருந்து வரும் சத்தம் கேட்டதில் சுதாரித்த என் அம்மா தன் பேச்சை நிறுத்திக் கொண்டார்.

அங்கு வந்த என் அப்பா அந்த சூழ்நிலையைத் தன் கூரிய பார்வையால் கிரகித்துக் கொண்டிருந்தார். அவர் வந்து அமர்ந்ததும் சுதா ஆண்ட்டி பேச ஆரம்பித்தார்.

“அண்ணா நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். பிள்ளைங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விரும்புறாங்க… அவங்களோட விருப்பத்த ஏன் மறுக்கனும்… அவங்க சந்தோஷம் தான நமக்கு முக்கியம்…. நாங்க இத்தன வருஷம் எதிர் வீட்டுல தான் இருக்கோம்…. உங்களுக்கே எங்கள பத்தி தெரிஞ்சுருக்கும்… உங்களுக்கு எங்கள பத்தி விசாரிக்கனும்னு தோணுச்சுனாலும் தாராளமா விசாரிங்க… ஏன்னா பொண்ண பெத்தவங்க அவ்ளோ சீக்கிரமா யாரையும் நம்ப மாட்டாங்கன்னு தெரியும்…” என்று அவர் நீளமாக பேச, என் அப்பா அப்போதும் அமைதியாகத் தான் இருந்தார்.

“என் பையங்கிறதுக்காக சொல்லல, ராகுல் ரொம்ப நல்லவன்… உங்க பொண்ண நல்லா பார்த்துப்பான்…” என்று அவர் கூற என் அப்பாவின் முகம் யோசனையில் சுருங்கியது.

நானோ அவர் என்ன கூறப் போகிறாரோ என்ற பீதியில் நிற்க, ராகுல் என்னை புன்னகையுடன் பார்த்துக் கொண்டே எழுந்து நின்றான்.

அனைவரும் அவனை நோக்க, அவனோ என் அப்பாவிடம், “அங்கிள் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசனும்…” என்றான்.

அவர் கொஞ்சம் யோசித்தாலும் மறுக்காமல் அவனுடன் சென்றதே எனக்கு சிறிது நம்பிக்கையைத் தந்தது.

பத்து நிமிடங்கள் கழிந்தது. நானோ அவர்கள் சென்ற அறையைப் பார்ப்பதும் பின் எனக்குள்ளே பேசுவதுமாக இருந்தேன்.

என்னிடம் வந்த அபியோ, “என்ன நதி மா ரொம்ப பரபரப்பா இருக்க போல…???” என்றான்.

“ஆமா ஆமா… இன்னும் கொஞ்ச நாள்ல உன் லவ்வ அப்பாகிட்ட சொல்றப்போ எப்படி நீ பரபரப்பா இருப்பியோ அப்படி தான் நானும் இருக்கேன்…???”

“அடப்பாவி… எதுக்கு டி இப்போ கத்துற… நீயே அப்பாகிட்ட சொல்லிடுவ போல…”

“ம்ம்ம் இது கூட நல்லா தான் இருக்கு… அப்பா என் லவ்வுக்கு ஒத்துக்கலைனா சொல்லிடுறேன் ப்ரோ… யான் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம்???”

“நீ டென்ஷனா இருப்பன்னு மச்சான் உன்ன கூல் பண்ண சொன்னாருன்னு வந்து பேசுனேன் பாரு… எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்???”

அப்போதும் என்னை சரியாக கணித்து நான் பதட்டப்படுவேன் என்பதை உணர்ந்து அவன் நடந்து கொண்ட விதம் என்னுள் புன்னகையைத் தோற்றுவித்தது.

பழையபடி ரிலாக்ஸாகிய நான், “என்ன ப்ரோ… இன்னும் வேணுமா… நான் வேணா அப்பாகிட்ட எக்ஸ்ட்ரா ரெண்டு பிட் சேர்த்து போடவா???” என்றேன்.

“அட கொரங்கே உன் வாய வச்சுக்கிட்டு சும்மா இரு…” என்று திட்டியபடி அங்கிருந்து நகர்ந்தான்.

நேரம் ஆக ஆக மீண்டும் நான் அலைப்புறுவதைக் கண்ட சுதா ஆண்ட்டியோ என்னை அழைத்து அவரின் அருகில் அமரச் சொன்னார்.

“என்ன மருமகளே… ஒரே நாள் கேசரி கொடுத்து என் பையன கரெக்ட் பண்ணிட்டியா…???”

“அச்சோ அப்படியெல்லாம் இல்ல ஆண்ட்டி….”

“அப்பறம் எதுக்கு மா அன்னைக்கு எனக்கு கூட மிச்சம் வைக்காம அவனே அந்த கேசரிய ஃபுல்லா சாப்பிட்டுருக்கான்… “

‘அட ஆண்ட்டி உங்க பையன பத்தி உங்களுக்கு சரியா தெரில…. பக்கா ஃப்ராட் அவன்… உங்ககிட்ட இப்படி சீன்ன போட்டு அன்னைக்கு கதற கதற எனக்கு தான அந்த கேசரி ஊட்டிவிட்டான்…??’ என்று மனதிற்குள் அவனை திட்டிவிட்டு வெளியில் இளித்து வைத்தேன்.

அப்போது வெளியே வந்தனர் என் அப்பாவும், ராகுலும்.

அவர்களின் முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறு செருமலுடன் ஆரம்பித்த என் அப்பா, “நான் கொஞ்சம் யோசிக்கனும்...” என்றார்.

அவர் ‘யோசிக்க’ வேண்டும் என்று சொன்னதே என் நம்பிக்கையை அதிகப்படுத்தியத்தியது. அதே மகிழ்ச்சியுடன் ராகுலைப் பார்த்தேன். அவனோ ஏதோ யோசனையில் இருந்தான்.

நான் ‘என்ன’ என்று கண் ஜாடையில் கேட்க, ‘ஒன்றும் இல்லை’ என்று தலையசைத்தான்.

நாங்கள் இவ்வாறு மௌன மொழியில் பேசிக் கொண்டிருக்க, சுதா ஆண்ட்டியோ, “அதனால என்ன அண்ணா… இது உங்க பொண்ணோட வாழ்க்கை… நல்லா யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க… அப்போ நாங்க கிளம்புறோம்…” என்றார்.

என் அம்மாவோ, “அண்ணி என்ன அதுக்குள்ள கிளம்பிட்டீங்க… சாப்பிட்டு போகலாம்…” என்றார், என் அப்பா அவரை முறைத்துக் கொண்டிருப்பதை அறியாமல்.

‘அச்சோ அம்மா… ஓவர்-எக்ஸ்ஸைமெண்ட்னால உன் வேஷம் கலஞ்சுருச்சே... ???’

“பரவால இருக்கட்டும் அண்ணி… இனி அடிக்கடி இங்க வரத்தான போறோம்…???” என்று கூறியவாறே கிளம்பினார்.

செல்லும் போது கூட அவனின் முகம் யோசனையில் சுருங்கியிருக்க, லேசாக தலையசைத்து சென்று விட்டான்.

‘என்னாச்சு இந்த ரணுக்கு… எத நெனச்சு இவ்ளோ யோசிச்சுட்டு இருக்கான்???’

அங்கு என் அம்மாவோ என் அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தார். திட்டி முடித்து அவர் உள்ளே சென்றதும், நான் என் அம்மாவிடம் சென்று, “என்ன ம்மா… ஆஸ்கார் அவார்ட் கிடைச்சுருச்சு போல???” என்றேன்.

“என்ன டி கொழுப்பா… உங்க அப்பா இன்னும் ஓகே சொல்லல…???”

“??? அதெல்லாம் என் லவர் பார்த்துப்பான்???” கனவுகளுடனே என் அறைக்குச் சென்றேன்.

ஈர்ப்பான்(ள்)…
 




Nagajoithi

நாட்டாமை
Joined
Jul 25, 2019
Messages
23
Reaction score
35
Location
Madurai
Super ராகுல் அதிரடியா நதியை அம்மாவுடன் பெண் கேட்டு வந்துவிட்டான், நதி அப்பா யோசிக்கிறேன் சொல்லிட்டாரு நதி அதுகே happy யைட, ராகுல் நதி அப்பாகிட்ட என்ன சொல்லிருப்பான்( நான் நல்லவரு நாளும் தெரிந்தவர் என கவுண்ட மணி பாணியில் சொல்லிருப்பானோ ???? ) ????????????
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
என்ன மா இப்படி epiஐ shortah முடிச்சிட்டீங்க???? ராகுல் கிட்ட நதி அப்பா என்ன சொல்லிருப்பார்??? நான் தப்பிக்க வைக்க பார்க்கிறேன் நீ wanted ah வந்து மாட்டிறீயேனு சொல்லிருப்பாரோ??????
 




GayuR

இணை அமைச்சர்
Joined
Oct 25, 2018
Messages
825
Reaction score
1,827
Location
India
என்ன மா இப்படி epiஐ shortah முடிச்சிட்டீங்க???? ராகுல் கிட்ட நதி அப்பா என்ன சொல்லிருப்பார்??? நான் தப்பிக்க வைக்க பார்க்கிறேன் நீ wanted ah வந்து மாட்டிறீயேனு சொல்லிருப்பாரோ??????
:D:LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top