• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 44

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
ஹாய் பிரெண்ட்ஸ்??? அடுத்த எபியோடு வந்துட்டேன்??? இது ப்ரீ-ஃபைனல் எபி... அடுத்த எபி தான் ஃபைனல் எபி எபிலாக் எல்லாமே??? படிச்சுட்டு கமெண்ட் சொல்லுங்க...???

1581875287271.jpg


ஈர்ப்பு 44

நான் சிரிப்புடன் வீட்டிற்குள் நுழைவதைப் பார்த்த அபி, “என்ன மேடம் மொட்டைமாடில ஒரே ரொமான்ஸா…” என்றான்.

“ஹ்ம்ம் நீங்க ரூமுக்குள்ள பண்றத விட இல்ல டா அண்ணா…???”

அவனோ என்னைத் துரத்த, நான் ஓட… என்று அழகாக சென்றன அந்த நிமிடங்கள்.

“நதி மா, இப்போ ஹாப்பி தான… உனக்கு ராகுல பிடிக்கும்னு எனக்கு ஃபர்ஸ்டே தெரியும்... அதான் அவனும் உன்ன ஃபாலோ பண்ணது தெரிஞ்சதும், அவனுக்கும் உன்ன பிடிச்சுருக்கான்னு அவங்கிட்டயே கேட்கப் போனேன்… அப்போ தான் அவனோட லவ் ஸ்டோரிய சொன்னான். கேட்டதும் பிரமிச்சு போய்ட்டேன்… இப்படியும் ஒருத்தானால லவ் பண்ண முடியுமான்னு… உன்ன லவ் பண்ணது மட்டுமில்லாம உனக்காக காத்திருந்தது… அதுவும் லவ் கூட சொல்லாம…. ஹீ இஸ் ரியலி அ ஜெம்… உன்ன அவன தவிர யாராலையும் நல்லா பாத்துக்க முடியாது…” – ஒரு சிரிப்புடன் அவன் கூறியதைக் கேட்டேன்.

“அவனையும் உன்ன தவிர யாராலையும் நல்லா பாத்துக்க முடியாது… நேத்து தான் அவன் சொன்னான்… அந்த வயசுலேயே அட்வைஸ் பண்ற அளவுக்கு என் தங்கச்சி மெச்சூர்டா இருந்துருக்கா…” என்று அவன் பேசிக் கொண்டே போக…

“டேய் அண்ணா ஸ்டாப்… உனக்கு அவன் நேத்தே சொல்லிட்டானா…??? எனக்கு மட்டும் இன்னைக்கு தான் சொன்னான்… உனக்கு மட்டும் எப்படி நேத்தே சொல்லலாம்… ???”

“அடிப்பாவி நான் இங்க சென்டிமெண்டா பேசிட்டு இருக்கேன்… இப்போ அவன் எனக்கு ஃபர்ஸ்ட் சொன்னது தான் பெருசா…???”

“??? இன்னைக்கு என்ன டா அண்ணா தங்கச்சி மேல இப்படி ஒரு பாசம்…???”

“போடி…” என்று அவன் அறைக்குள் செல்ல…. அவன் பின்னாடியே சென்று அவனை சமாதானப்படுத்தினேன்.

அடுத்து நான் சென்றது என் அப்பாவிடம். அவரிடம் சென்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டு, “தேங்க்ஸ் ப்பா… ஒரு லவ்வப்பில் மொமெண்ட்ட எங்களுக்கு போட்டோ எடுத்து தந்ததுக்கு…” என்றேன்.

அவரும் வாஞ்சையோடு என்னைப் பார்க்க, “ப்பா… யாருக்காகவும் உங்க பாசத்த எங்ககிட்ட காமிக்காம இருக்காதீங்க…” என்றதும் அவரும் மெளனமாக தலையசைத்து என் தலையை தடவிக் கொடுத்தார்.

நானும் அவரைக் கண்டு சிரித்துவிட்டு, திரும்பினேன். அங்கு முகத்தில் அத்தனை அதிர்ச்சியையும் குத்தகைக்கு எடுத்தவாறு நின்றிருந்தார் என் அம்மா. அவரைப் பார்த்து கண்ணடித்துவிட்டு என் அறைக்குச் சென்றேன்.

அதற்கடுத்து வேலைகள் ஜரூராக நடக்க, ஒரு வாரத்தில் நிச்சயம் அடுத்த இரண்டு மாதங்களில் திருமணம் என்று நாள் குறிக்கப்பட்டது. எங்கள் காதலும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனது.

ஆனந்தும் கிருஷ்ணாவும் அந்த மினிஸ்டரின் கேஸை வெற்றிகரமாக முடித்தனர். அந்த மினிஸ்டருக்கு ஆயுள் தண்டனை என்று தீர்ப்பானது. அதைக் கேட்ட அனைவரும் சற்று ஆசுவாசமாக உணர்ந்தோம். ராகுலின் கேஸும் சில நாட்களில் முடிந்துவிடும் என்று என்னிடம் கூறியிருந்தான்.

‘பொடிக்’கில் வியாபாரமும் சூடுபிடிக்கத் துவங்கியது. அவ்வப்போது அங்கு வந்து தன் ஆலோசனைகளைக் கொடுத்து கொண்டிருந்தான் க்ரிஷான ராகுல் கிருஷ்ணா…. அன்றும் அவனும் கிருஷ்ணாவும் வந்திருந்தனர்.

சாண்டியின் நடவடிக்கைகளிலும் சிறிதளவில் மாற்றங்கள் ஏற்பட்டன. முன்போல கிருஷ்ணாவை ஒதுக்காமல் அவனிடம் பேசினாள். அதுவே எங்களுக்கு பெரிதாகத் தோன்றியது.

ஒரு நாள் அவளிடம் அதைப் பற்றி விசாரித்தேன்.

“ஹே என்ன டி… இப்போலாம் கிருஷ்ணாவ அவாய்ட் பண்ணாம அவன்கிட்ட பேசுற போல…”

“ஹ்ம்ம் ஆமா டி… அன்னைக்கு நீ சொன்னப்போ தான் நான் அவருக்கிட்ட எப்படி நடந்துகிட்டு இருந்துருக்கேன்னு புரிஞ்சது. அவரு இதுவரைக்கும் என்ன தப்ப கூட பார்த்தது இல்ல… ஏன் லவ்வுங்கிற மாதிரி கூட பேசுனது இல்ல… ஒரு பிரெண்டா தான் பேசிட்டு இருக்காரு… நான் தான் அத புரிஞ்சுக்காம ஏதேதோ நெனச்சு குழம்பிட்டு இருந்துருக்கேன்…”

“ஹப்பா இப்போவாவது புரிஞ்சுதே… ஆனா நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்காத…” என்று நிறுத்திவிட்டு, “தப்பா எடுத்துக்கிட்டாலும் பரவால…??? நான் சொல்லியே தீருவேன்…” என்றேன்.

“அட என்னனு சொல்லு டி…”

“ஹ்ம்ம் நீ ஏன் கிருஷ்ணாவ லவ் பண்ண கூடாது” என்று நான் கேட்டதற்கு முறைத்தாள்…

“ப்ச்… அதெல்லாம் சரியா வராது டி…”

“அது ஏன் அவருக்கிட்ட பேசிப் பார்க்காமயே சரியா வராதுன்னு சொல்ற…”

“அ…அது… வந்து… என்னால இன்னொரு ஏமாற்றத்த தாங்க முடியாது டி…” என்றாள் உடைந்த குரலில்.

அவள் அந்த ‘ரித்தீஷ்’ஷின் செயலால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பது எனக்குத் தெளிவாகப் புரிந்தது. ஆனால் அவளை இப்படியே விட்டால் அவளின் வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிக் கொள்வாள் என்று தெரிந்து அவளிடம் பேசினேன்.

“ம்ப்ச்… இங்க பாரு சாண்டி… எல்லாரும் அந்த பொறுக்கி மாதிரி இருக்க மாட்டாங்க… போயும் போயும் அவனையும் கிருஷ்ணாவையுமா கம்பேர் பண்ற…” என்று வேண்டுமென்றே போட்டு வாங்க முயன்றேன்.

“ச்சே என்ன டி இப்படி சொல்ற… நான் எப்போ ரெண்டு பேரையும் கம்பேர் பண்ணேன்… கிருஷ்ணா இஸ் அ ஜெண்ட்டில் மேன்… அவர போய் அவன் கூட எப்படி…” என்று அவள் கூற…

‘பரவாலையே இவள ஈஸியா நம்ம வழிக்கு கொண்டு வந்துடலாம் போலயே…???’

“அப்பறம் ஏன் டி… கிருஷ்ணா ஏமாத்திடுவாங்கன்னு பயப்படுறியா…”

“ஹே அப்படியெல்லாம் இல்ல டி…” என்று வேகமாக மறுத்தாள்.

“அப்பறம் என்னத்துக்கு டி அவன வேண்டாம்ன்னு சொல்ற…”

“அடிப்பாவி என்ன டி அவர மரியாதை இல்லாம பேசுற???…”

“இப்போ அது தான் முக்கியமா… அதான் நீ அவன வேணாமன்னு சொல்லிட்டேல… அப்பறம் என்ன…”

“அதுக்காக மரியாதை இல்லாம பேசுவியா…”

“அடியேய் உன்ன கொல்லப்போறேன் பாரு… ஒழுங்கா வேணுமா வேணாமான்னு சொல்லு டி???…”

“எ…என்…எனக்கு ஒரே குழப்பமா இருக்கு டி…”

‘நல்லவேல குழம்பி இருக்கா… குழம்பின குட்டைல தான் ஈஸியா மீன் பிடிக்க முடியும்…’

“சரி உனக்கு ‘அவர்’ர பிடிக்காத மாதிரி ஏதாவது தோணுதா…”

அவளோ மண்டையை ‘இல்லை’ என்னும் விதமாய் அசைக்க…

“அப்பறம் என்ன கொஞ்ச நாள் அவரு கூட பேசிப் பழகு… உனக்கே அவரு மேல நம்பிக்கை வந்ததுக்கப்பறம் உன் லவ்வ அவருக்கிட்ட சொல்லு… அவரு கண்டிப்பா அது வரைக்கும் வெயிட் பண்ணுவாரு…”

“ம்ம்ம் சரி டி…”

“எனக்கெனமோ ரொம்ப நாள் ஆகாதுன்னு தோணுது ???”

“ஸ்ஸ்ஸ் போடி… ???” என்றாள் வெட்கத்துடனே.

அதன்பிறகு அவர்களும் பேசி தெளிந்து இப்போது அவர்களின் காதலும் பகிறப்படாமலேயே (!!!) சரியான பாதையில் சென்று கொண்டிருந்தது.

அதை நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன். என் முன் சுடக்கிட்ட ராகுல், “என்ன மேடம் நீங்க இங்க இல்ல போல…” என்றான் சிரித்துக் கொண்டே…

நானும் சிரித்துவிட்டு, “கிருஷ்ணா ப்ரோ எங்க…” என்றேன்.

அவனோ கண்களாலேயே அவர்களை சுட்டிக் காட்டினான். அங்கு கிருஷ்ணாவும் சாண்டியும் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். சாண்டியின் முகமோ சிரிப்பில் விகசித்திருக்க, அதைப் பார்த்த எனக்கு மகிழ்ச்சி பெருகியது.

“என்ன பப்ளி முகமே டாலடிக்குது…”

“ம்ம்ம் சாண்டிய நெனச்சு தான்… அவ அந்த ரோக்னால ரொம்ப ஹர்ட் ஆகிருந்தா… அவள எப்படி அதுலயிருந்து மீட்கப்போறோம்னு ரொம்ப கவலையா இருந்தேன்… ஆனா இப்போ அவ சந்தோஷமா இருக்குறத பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு…” என்றேன் நெகிழ்ச்சியான குரலில்.

அவனோ அதை உணர்ந்து என் மனநிலையை மாற்றவே, “என்ன பப்ளி அந்த ரித்தீஷுக்கு என்ன ஆச்சுன்னு இந்நேரம் கேப்பன்னு நெனச்சேன்…???” என்றான்.

“ஹே ஆமா... அவன எப்படி உங்களுக்கு தெரியும்…”

அவனோ எதுவும் கூறாமல் சிரிக்க… “அப்போ தாமோ அங்கிளுக்கு ஹெல்ப் பண்ணது நீங்களா???…” என்றேன்.

“ம்ம்ம் ஆமா பப்ளி… உன்ன ஃபாலோ பண்ணதுல அவன் ஆக்ட்டிவிட்டீஸ் தப்பா தெரிஞ்சுது…. அதான் அவன வார்ன் பண்ணேன்… அப்பறம் ஒரு நாள் என் (க்ரிஷ்) கிட்ட நீ அவன பத்தி சொன்னதும், அவன திரும்பி வார்ன் பண்ண போனேன். அங்க போனப்போ தான் அவனோட கல்யாணத்துலயிருந்து அவன காணோம்னு தெரிஞ்சுது…. இப்போ வரைக்கும் அவன தேடிட்டு தான் இருக்காங்க… ஆனா கிடைக்கல…”

“ஹ்ம்ம் எத்தன பேர ஏமாத்திருப்பான்… அதான் அவனால பாதிக்கப்பட்டவங்க யாராவது ஏதாவது பண்ணிருப்பாங்க???…” என்றேன் அலச்சியத்துடன்.

“ம்ம்ம் பப்ளி இந்த விஷயம் சாண்டிக்கோ நேஹாவுக்கோ தெரிய வேண்டாம்…”

“ச்சே இத போய் எதுக்கு அவங்ககிட்ட சொல்லப் போறேன்…” என்றேன்.

“ஆனா சார் இன்னும் நிறைய விஷங்கள என்கிட்டயிருந்து மறைச்சுருக்கீங்க போலயே…???”

“ச்ச நான் ஏதாவது உன்கிட்டயிருந்து மறைப்பேனா… பிலீவ் மீ பப்ளி மா…???”

“இதப் பார்த்தா தான் என் டவுட் கன்ஃபார்ம் ஆகுற மாதிரி இருக்கு.. ???”

“அச்சோ… அன்னைக்கு உன் வீட்டு பால்கனில உன் கஸின பாக்குறேன்னு நீ நெனச்சப்போ உன்ன பார்த்து சைட் அடிச்சது, ஊட்டில நீ விழுகப்போனப்போ உன்ன தாங்கிபிடிச்சு அதுக்கு மேல என்னையே கண்ட்ரோல் பண்ண முடியாம உன்ன திட்டி விலகுனது, ஊட்டிலேயே நீ என்ன அப்பட்டமா சைட்டடிச்சது தெரிஞ்சாலும் தெரியாத மாதிரியே காட்டிக்கிட்டு உள்ள அத அனுபவிச்சது, அபியோட பார்ட்டில நீ பண்ண சேட்டையெல்லாம் உனக்கே தெரியாம ரசிச்சது, க்ரிஷா உன்கிட்ட சாட் பண்ணப்போ நீ ராகுல் பத்தி உன் லவ் பத்தி ஃபீல் பண்ணி சொன்னப்போ அத அனுபவிச்சது, ஃபைனலி உன் பொடிக் திறப்பு விழா அப்போ உனக்கான ட்ரெஸ உனக்குன்னு சொல்லாம உன்னையவே செலக்ட் பண்ண வச்சதுன்னு இத தவிர வேற எதுவும் உன்கிட்டயிருந்து மறைக்கல பப்ளி???”

“அடப்பாவி… ஃப்ராட்… இத்தன தடவ என்ன சைட்டடிச்சுருக்க… ஆனா நான் பாக்குறப்போ மாட்டும் மூஞ்சிய வெறப்பா வச்சுட்டு சுத்த வேண்டியது…???”

“??? நாங்க எல்லாம் கெத்தா இருக்கனும்ல…???”
 




Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
இவ்வாறு ‘ஸ்வீட் நத்திங்ஸ்’ பேசியவாறே அந்த ஒரு வாரமும் கழிந்தது. அன்று எங்கள் நிச்சயதார்த்த நாள். வழக்கம் போலவே லேட்டாகத் தான் எழுந்தேன். (ராகுல் தான் ‘காலைல உன்ன பார்க்கனும்னு தான் நீ ‘வெயிட்’டா இருக்கன்னு சொன்னேன்… உனக்கு சீக்கிரம் எழுந்துக்க கஷ்டமா இருந்தா நீ வர வேண்டாம்’னு சொல்லிவிட்டான். எப்படியும் மாலை இருவரும் சந்திப்போம் என்பதால் காலை நடைப்பயிற்சி கட்…. நதி சோ ஹாப்பி…☺☺☺)

“ச்சே ஒரு வாரமா சீக்கிரம் எழுந்தத பாத்து திருந்திட்டான்னு நெனச்சது என் தப்பு தான்… இன்னைக்கு கூட இழுத்து போத்திட்டு தூங்குறா… இவள எழுப்புறதுக்குள்ள என் ஜீவன் தான் போகுது…” என்று புலம்பியவாறே என் அம்மா வர…

அங்கு எழுந்தமர்ந்திருந்த நான், “ம்மா கொஞ்சமாச்சும் என் மேல பாசமிருக்கா உனக்கு… இன்னும் ரெண்டு மாசத்துல நான் இங்கயிருந்து போய்டுவேன்னு கொஞ்சமாச்சும் ஃபீல் பண்றீயா… இப்போ கூட என்ன திட்டிட்டு தான் இருக்க…” என்று வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.

“ஆமா இவ இங்கேயிருந்து ஃபாரினுக்கு போறா நான் ஃபீல் பண்ண… இதோ இங்கேயிருக்க எதிர்த்த வீட்டுக்கு போற…??? அங்க போய் என் மானத்த வாங்க போற… உங்க அத்த நீ பண்றதுக்கெல்லாம் ‘என்ன உங்க வீட்டுல இப்படி வளர்த்துருக்காங்க’னு என்ன தான் திட்டப்போறாங்க…???”

“ம்மா… அத்த சோ ஸ்வீட்… அப்படியெல்லாம் என்ன திட்டவே மாட்டாங்க…???”

“ஆமா ஆமா திட்டாம கொஞ்சுவாங்க…???”

“ம்மா உனக்கு பொறாமை தான… எங்க நானும் என் அத்தையும் உன் மாமியார்-மருமகள் கூட்டணிக்கு போட்டியா வந்துடுவோம்னு…???”

“அடியேய் வாய் பேசாம எழுந்து கிளம்புற வழியப் பாரு டி…???”

இவ்வாறு காலையிலேயே அனைவரையும் வம்பிழுத்துக் கொண்டு இருந்தேன். என் அப்பா கூட சன்னமாக சிரித்துவிட்டு சென்று விட்டார். அவரே கண்டுகொள்ளவில்லை என்றான பின் என் சேட்டைகளின் அளவை சொல்லவும் வேண்டுமா…

அபியோ நான் கிண்டலடிப்பதை தாங்க முடியாமல், ராகுலுக்கு அழைத்து, “டேய் உன் ஆளா சீக்கிரம் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போடா… இங்கயிருந்து எங்க உசுர வாங்குறா…” என்று புலம்பியதும் தான் சற்று அமைதியானேன்.

“டேய் அண்ணா ஓவரா பேசாத… எதிர்த்த வீட்டுல தான் இருப்பேன்… இப்படியே பேசிட்டு இருந்த அடிக்கடி வந்து உனக்கு தொல்ல கொடுப்பேன்… சாம்பிளுக்கு நீ அண்ணி கூட ரொமான்டிக்கா பேசிட்டு இருக்கும்போது தான் எனக்கு ஷாப்பிங் போகனும்னு தோணும்… அதுக்கு அண்ணிய கூப்பிடனும்னு தோணும்…???”

“அம்மா தாயே… இன்னைக்கு தான் என் மாமா அப்பா கிட்ட பேசப்போறாங்க… அதுக்குள்ள என் வாழ்க்கைல கும்மி அடிச்சுறாத மா…”

ஆம் இன்று தான் ப்ரியாவின் அப்பாவும் என் அப்பாவும் அவர்களின் திருமணம் பற்றி பேசப் போகின்றனர். என் அப்பாவிற்கு இவர்களின் காதல் லேசாகத் தெரிந்தாலும், இதுவரை அவராக அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.

“??? அந்த பயம் இருக்கட்டும்…”

இப்படியாக அன்று மாலையும் வந்தது. இராமர் பச்சை நிற சேலை உடலைத் தழுவியிருக்க, அதற்கேற்ற நகைகளோடும், ப்ரியா மற்றும் சாண்டியின் கை வண்ணத்தாலும் ஜொலித்தேன் நான்.

“அண்ணா இன்னைக்கு ஃபிளாட் தான் போ???…” என்று சாண்டி என்னை கிண்டலடிக்க…

“இவ தான் ராகுல பாத்து ஃபிளாட் ஆவான்னு நான் நினைக்கிறேன்…” என்றாள் ப்ரியா…

அவர்களின் பேச்சிற்கு செவி சாய்த்தாலும், என் மனமோ நடக்கப்போகும் விழாவிற்காக காத்திருக்க துவங்கியது. அவனை சந்தித்ததிலிருந்து இன்று காலை அவனிடம் அலைப்பேசியில் பேசியது வரை அனைத்தையும் என் மனதிற்குள் ஓட்டிப் பார்த்துக்கொண்டேன்.

“என்ன மேடம் இப்போவே ட்ரீம்ஸா???… கொஞ்சம் இங்க வாங்க… மாப்பிளை வீட்டுலயிருந்து எல்லாரும் வந்துட்டாங்களாம்…” என்றாள் சாண்டி.

என்றுமில்லாமல் இன்று எனக்கு தானாக வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டது. அப்போது அங்கே வந்த சுதா ஆண்ட்டி, “அழகா இருக்க நதி மா…” என்று எனக்கு திருஷ்டி கழிக்க, “தேங்க்ஸ் ஆண்ட்… ஸ்ஸ்ஸ் அத்த…” என்றேன்.

“பரவால நதி மா உனக்கு எப்படி வருதோ அப்படியே கூப்பிடு…” என்றார்.

நேஹாவும் அவருடன் வந்திருக்க, “அழகாயிருக்கீங்க நதிக்கா…” என்றாள்.

அவளிடமும் சிரிப்பையே பரிசளித்தேன்..

“சாண்டி அக்கா… நதிக்கா இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்காங்களே… என்ன விஷயம்…???” என்றாள் நேஹா…

“அதுவா நேஹா… மேடம் கல்யாணப் பொண்ணுல… அது மட்டுமில்லாம இவ பேசுறத பாத்து மாப்பிள்ளை பயந்து ஓடிப் போய்ட்டா???… அதான் அடக்க ஒடுக்கமா இருக்காங்க… ???” என்று சாண்டி கூறவும் அவளைத் துரத்திக் கொண்டு நான் ஓடினேன்.

என் அறைக்கு வெளியே சென்ற அவள் சற்று விலகவும் நான் எதிரில் வந்து கொண்டிருந்த அவன் மேல் மோதவும் சரியாக இருந்தது.

அங்கு என்னை எப்போதும் போல தாங்கிப் பிடித்தான் ராகுல். நான் அவனைப் பார்க்க, அவன் என்னைப் பார்க்க… எங்களை சுற்றி இருந்தவர்கள் எங்களை ஓட்ட என்று அந்த இடமே களேபரமாய் இருந்தது.

“என்ன அண்ணா கண்ணும் கண்ணும் நோக்கியா சீன் முடிஞ்சதா…???” – சாண்டி

“அது எப்படி அதுக்குள்ள முடியும்… இப்போ கூட நம்ம இங்க இருக்குறது தான் இடைஞ்சலா இருக்கும்… அப்படி தான ராகுல்…???” – ப்ரியா

“என்ன அக்காஸ் அத்துவ மட்டும் ஓட்டுறீங்க… நதிக்காவும் பாவம் தான…???” – நேஹா

இவர்கள் இதையெல்லாம் பேசிக் கொண்டிருந்த நேரம், நான் அவனை அளவிட்டுக் கொண்டிருந்தேன்.

அவனும் அதே இராமர் பச்சை நிற ஃபுல் ஸ்லீவ் ஷிர்ட்டும் ஹாஃப் வைட் பாண்ட்டும் அணிந்திருந்தான். கூலர்ஸை சட்டையில் சொருகியபடி ஆண்மையின் இலக்கணமாக அங்கு நின்றிருந்தவனை என் கண்களால் களவாடிக் கொண்டிருந்தேன்.

நாங்கள் இருவரும் இன்னும் மோன நிலையிலேயே இருக்க, எங்களை உலுக்கி நிகழ்விற்கு அழைத்து வந்தனர் அவர்கள் அனைவரும். பின் வெட்கத்துடன் அவனைப் பார்க்காமல், அறைக்குள் சென்று மறைந்தேன்.

சிறிது நேரத்திலேயே நிச்சயப் பத்திரிகை வாசிக்கப்பட, எங்கள் வீட்டினர் தட்டை மாற்றிக் கொண்டனர். முதலில் அதில் பங்கேற்க மறுத்த என் அத்தையையும் நான் பேசியே சம்மதிக்க வைத்தேன். அதற்கு ஒரு பாராட்டும் பார்வையும் அவனிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.

அது முடிந்ததும் எங்கள் இருவரையும் மோதிரம் மாற்ற அழைத்தனர். அன்று அவன் போட்டுவிட முயன்று நான் மறுத்த அதே மோதிரத்தை இன்று அனைவரின் முன்பும் போட்டுவிட்டான் என்னவன்... மோதிரம் போட்டபின்பும் கைகளை விடாமல், அதற்கும் அனைவரின் கேலியையும் பரிசாகப் பெற்றோம்.

சுற்றிலும் எங்கள் உறவுகள், நட்புக்கள், நலம் விரும்பிகள் (என் அப்பா அம்மா, சுதா அத்தை, அபி – ப்ரியா, ஆனந்த் – நேஹா, கிருஷ்ணா – சாண்டி, தாமோ அங்கிள், ஷீலா) அனைவரின் ஆதரவோடு அழகாக நடைப்பெற்றது எங்களின் நிச்சயதார்த்தம்.

ஈர்ப்பான்(ள்)...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அச்சோ நம்ம நதிப் பொண்ணுக்கு வெட்கமெல்லாம் வருதா?
தப்பாச்சே
இன்னும் ஒரு அப்டேட்தானா?
ஸோ சேடு ஸோ சேடு, பார்கவி டியர்
 




Last edited:

Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore

Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
இனிமை♥♥♥ கோலாகலம்மாகா மகிழ்ச்சி யாக ராகுல் & நதி நிச்சயதார்தம் நடந்து முடிந்தது, இனி அடுத்து கல்யாணம் தன ????????????
 




Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
இனிமை♥♥♥ கோலாகலம்மாகா மகிழ்ச்சி யாக ராகுல் & நதி நிச்சயதார்தம் நடந்து முடிந்தது, இனி அடுத்து கல்யாணம் தன ????????????
??? Avanga kalyanamum kalakalanu irukum???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top