• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன்னாலே உனதானேன் 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anu Chandran

மண்டலாதிபதி
Joined
Jun 1, 2019
Messages
226
Reaction score
697
Location
Srilanka
ஹாய் நட்பூஸ்...

இதோ அடுத்தபதிவு....
வாசித்து விட்டு மறக்காமல் கருத்து சொல்லுங்க.....

15

மடியில் விழுந்த மனையாள் எகிறி எழும்பும் முன் அவளை வளைத்து அணைத்திருந்தான் வினய்...

அவனது திடீர் செயலில் திடுக்கிட்டவள் தன்னிலை அடையும் முன் அவளது செவ்விதழ்களை கவ்வியிருந்தன அவனது அதரங்கள்....

கணப்பொழுதில் நிகழ்ந்து முடிந்திருந்த இந்த நிகழ்வுகளில் நிலை தடுமாறியவளை சிந்திக்கவிடவில்லை வினயின் அதிரடித்தாக்குதல்கள்...

இதழ் முத்தம் அவளை மதியிழக்க செய்ய அவனது இறுகிய அணைப்பும் அவளது மேனியில் ஊர்வலம் வந்த அவனது விரல்களும் அவளை வேறு எதை பற்றியும் சிந்திக்கவிடாமல் செய்தது...
கொஞ்சம் கொஞ்சமாக வேறு உலகத்திற்கு சஞ்சரிக்கத்தொடங்கியவளை நிஜ உலகிற்கு அழைத்து வந்தது வினயின் உலுக்கல்...

“ஷிமி என்னாச்சு??? எதுக்கு இப்படி ஜர்க் ஆகி இருக்க???ஆர் யூ ஆல் ரைட்??” என்று அவளது கையை தடவிக்கொடுத்தான் வினய்..

அப்போது தான் இவ்வளவு நேரம் தான் கண்டது கனவு என்று உணர்ந்தாள் ரேஷ்மி....

அவன் தன் கை பற்றி தன் நடையை தடை செய்தது மட்டுமே நிஜம் என்று உணர்ந்த அவளது மனம் சிணுங்கத்தொடங்கியது...

எவ்வளவு நாட்களுக்கு இவ்வாறு கனவிலேயே நாட்களை கழிக்கப்போகின்றாய் என்று அவளது மனம் வசை பாடவும் தவறவில்லை...
ஒருமனம் வசைபாட மறுமனம் எச்சரிக்கவும் தவறவில்லை...

மனபோராட்டத்தில் தவித்தவளை கலைத்தது வினயின் குரல்...

“ஷிமி என்னாச்சுமா...” என்று குரலில் ஒரு பரிதவிப்புடன் வினய் கேட்க ரேஷ்மிக்கு அவனது கலக்கம் மிகவும் பாதித்தது...

அவனது கலக்கத்தை பார்த்தவளுக்கு தனது மனப்போராட்டத்தை தீர்ப்பதை விட அவனது பரிதவிப்பை தீர்ப்பதே முக்கியமென தோன்றிய அடுத்த கணம் அவளது கையை பற்றியிருந்த அவனது கரத்தின் மேல் தன்கையை வைத்தவாறு அவனது அருகில் அமர்ந்தவள்

“ஒன்றும் இல்லை....நான் வேறொரு யோசனையில் இருந்தேன்... சரி.... நீங்க எதுக்கு என்னை கூப்பிட்டீங்க...??”

“அது வந்து...உன்கிட்ட மன்னிப்பு கேட்கத்தான் உன்னை கூப்பிட்டேன்....”

“மன்னிப்பா??? எதுக்கு?? அப்படி என்ன தப்பு செய்தீங்க??”

“உனக்கு நான் என்ன தப்பு செய்தேனு நியாபகம் இல்லையா???”

“நீங்க செய்தால் தானே நியாபகம் வருவதற்கு???”

“ஓ மை காட்... என் பொண்டாட்டிக்கு எதுவும் நியாபகம் இல்லையா...???? என்னை மாதிரி ஒரு அதிஷ்டசாலி இந்த உலகத்தில் யாருமே இல்லை.... உலகத்தில் உள்ள எல்லா கணவன்மாருக்கும் இப்படி ஒரு மனைவி கிடைத்தால் எவ்வளவு சூப்பரா இருக்கும்....” என்று விவரம் கூறாது உளறிவனை தடுத்தாள் ரேஷ்மி....

“ஏன் வினய்... எப்பவும் புரியாத மாதிரி தான் பேசுவேன் என்று ஏதும் சபதம் எடுத்திருக்கீங்களா??? இப்படி அடிக்கடி கன்பியூஸ் பண்ணுறீங்க...?”

“ஹாஹா... அப்படி ஒரு சபதம் எடுத்துட்டு நான் இந்த வீட்டில் இருந்துவிட முடியுமா?? நீயும் தான் என்னை சும்மா விட்டுவிடுவாயா??”

“தெரியிதில்ல.. அப்போ எதுக்கு இப்படி பண்ணுறீங்க...???”

“நான் ஒன்றும் பண்ணவில்லை ஷிமி... உண்மையை தான் சொன்னேன்...”

“அப்படி என்ன உண்மையை சொன்னீங்க??”

“பொதுவாக பொண்ணுங்களுக்கு அவங்களோட ஹேர்பின் எங்கே வைத்தார்கள் என்று நியாபகம் இருக்காதாம்... ஆனா அவங்களுக்கு அவங்க லவ்வர் ஏதாவது சொல்லியிருந்தால் அது எப்போ, எங்கே வைத்து, எப்படி சொன்னாங்க என்பது வரை நியாபகம் இருக்குமாம்... அதுவும் மனைவிமார் இன்னும் ஷாப்பாம்... அவங்க சொன்ன டைமில் என்ன கலர் டிரஸ் அணிந்திருந்தார்கள் என்பது வரை தெளிவாக சொல்வார்களாம்... அப்படி உலகம் போய்கிட்டு இருக்கு....ஆனா என் பொண்டாட்டி காலையில் நடந்ததையே மறந்துட்டானா எனக்கு சந்தோஷம் இல்லையா??” என்றவனை பார்த்து தலையில் அடித்துக்கொண்டாள் ரேஷ்மி....

“ஏன் வினய் இப்படி இருக்கீங்க??? கொஞ்சமாவது ரோஷம் வேண்டாம்...??? இப்படியா நான் ஹார்ஸ்ஸா நடந்துகொண்டதற்கு நீங்க வந்து என்னிடம் மன்னிப்பு கேட்பீங்க...??? சொல்லப்போனால் நான் நடந்துகொண்ட முறைக்கு நீங்க என்னை திட்டனும்.... ஆனா இது வரைக்கும் கோபமா ஒரு வார்த்தை கூட நீங்க சொல்லவில்லை... அப்போ நான் செய்தது சரியென்று சொல்கின்றீர்களா??” என்றவளின் கேள்வியில் சிரித்துவிட்டான் வினய்...

“நீ இப்படி கூட பேசுவியா ஷிமி.... எனக்கு இவ்வளவு நாள் தெரியாமல் போயிருச்சே... இப்போ நான் உன்கிட்ட இருந்து எதிர்பார்த்த ரியாக்ஷன் வேறு... ஆனா உன்னோட ரியாக்ஷன் வேறு.... நீயும் என்கூட சேர்ந்து நல்லா தேறிவிட்டாள்...” என்றவனை தன்னால் முடிந்த மட்டும் முறைத்தாள் ரேஷ்மி....

அவளது முறைப்பில் சிரித்தவன் “ஷிமி முறைக்காதமா... இப்போ என்ன நான் உன்னை ஏன் திட்டவில்லை என்று தெரியனும்.... அவ்வளவு தானே... சொல்லுறேன்... நீ உன்னுடைய தவறை ரியலைஸ் செய்தபின் நான் ஏன் உன்னை திட்டனும்.... ??” என்றவனது பதிலில் குழம்பினாள் ரேஷ்மி..

“நான் ரியலைஸ் செய்ததாக உங்களுக்கு யாரு சொன்னா???”

“அதை யாரும் சொல்ல வேண்டியதில்லை....நானே தெரிந்துகொண்டேன்...”

“வினய் கொஞ்சம் புரிகின்ற மாதிரி சொல்லுங்க...”

“சரி சொல்கின்றேன்.... அதற்கு முதல் இந்த கேள்விக்கு பதில் சொல்லு... நீ ஏன் காபி கப்பை எடுத்துக்கொண்டு நம்ம ரூமிற்கு வராமல் ஹாலில் அமர்ந்திருந்தாய்??”

“அது வந்து...”

“என்ன ஷிமி நான் சொல்லவா?? நீ என்னிடம் தேவையில்லாமல் கோபப்பட்டதால் கில்டியா பீல் பண்ணி தான் வெளியே அமர்ந்திருந்தாய்... சரியா???” என்றவனது பதிலில் அதிர்ச்சியடைந்தாள் ரேஷ்மி..

எப்படி தன் மனவோட்டத்தை அவன் கண்டுகொண்டான் என்ற கேள்வியில் அவனை பார்க்க

“எனக்கு எப்படி தெரியும் என்று பார்க்கிறாயா??? ஷிமி உன்னோட அனைத்து அசைவுகளும் எனக்கு அத்துபடி.... நான் உன்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டவன் மா... இதுகூட தெரியாவிட்டால் எப்படி..??? அதோட இந்த மாதிரி வீட்டிற்கு தூரமாக இருக்கும் நேரங்களில் பொண்ணுங்களுக்கு கோபம் அதிகமாக வரும் என்று கேள்விபட்டிருக்கின்றேன்.... அதான் நானே உன்கிட்ட வந்து சாரி கேட்டேன்...” என்று கூறி புன்னகைத்தவனை கண்ணிமைக்காமல் பார்த்தாள் ரேஷ்மி...

உலகில் எத்தனை பேர் இப்படி ஒரு புரிந்துணர்வுடன் நடந்துகொள்கின்றார்கள்...?? மனைவியின் மனநிலையை புரிந்து கொண்டு அவளின் நிலையை மனதிற்கொண்டு அதற்கு ஏற்றாற்போல் நடந்து கொள்ளும் கணவன்மார்கள் எத்தனை பேர் இருக்கின்றனர்??? திருமணமாகி பல வருடங்கள் கடந்த போதிலும் பலரிடம் இந்த புரிந்துணர்வு இல்லாத பட்டசத்தில் திருமணம் முடிந்து இரண்டரை மாதங்களே ஆகியிருக்க தனது கோபதாபங்களை சரிவர புரிந்து தன் மனநிலையை அறிந்து நடந்து கொள்ளும் வினயை பார்க்கும் போது ரேஷ்மியில் இன்னதென்று சொல்லமுடியாத ஒரு உணர்வு...
இந்த இரண்டரை மாதகாலத்தில் தான் மனதால் அவனை நெருங்காத போதிலும் தன் உணர்வுகளை படித்து அதற்கேற்ப நடப்பவனை கண்டு வியக்காமல் இருக்கமுடியவில்லை... இத்தனை தூரம் தான் அவனை படுத்தியபின்பும் தன்னை கோபித்து கொள்ளாதவனை கண்டவளுக்கு அவளது தந்தையின் நியாபகம் வந்தது.....

அதில் அவளது முகம் சோகத்தை தத்தெடுக்க அதை கண்டுகொண்ட வினய்
“சாரி ஷிமி... நான் உன்னை ஹர்ட் பண்ண எதுவும் சொல்லவில்லை... எனக்கு மனதில் தோன்றியதை தான் கூறினேன்..”

“இல்லை வினய்... எனக்கு அப்பா நியாபகம் வந்துவிட்டது... அவரும் உங்களை மாதிரி தான்... நான் எப்போ கோபப்பட்டாலும் எனக்கு சப்போர்ட்டா தான் பேசுவாரு.. என்னோட கோபம் தப்பென்று தெரிந்தால் நான் தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தில் பொறுமையாக என்னுடைய தவறை விளக்குவார்...” என்றவளது கண்கள் கலங்கத்தொடங்கியது...
அவளது மனநிலையை மாற்ற எண்ணியவன்

“எங்க மாமனாரு வேறு என்ன தான் பண்ணுவாரு... நீ தான் கோபம் வந்தா பத்ரகாளி ஆகிவிடுகிறாயோ... நீ கோபமாக இருக்கும் போது உன்கூட சண்டை போட்டால் ருத்ர தாண்டவம் ஆடிவிட மாட்டாய்?? அதான் என் மாமனாரு நீ காம் டவுன் ஆனதும் வந்து பேசியிருப்பார்...”

“டேய் புருஷா... என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு?? நான் உனக்கு பத்ரகாளியா??? இப்போ இந்த பத்ரகாளி என்ன பண்ணுறானு பாரு..” என்றுவிட்டு கட்டிலில் இருந்து எழும்பியவள் சுற்றும் முற்றும் எதையோ தேட அதில் அவளின் எண்ணம் புரிந்தவன்

“அம்மா தாயே... என்னை மன்னித்துவிடு... உன் பக்தன் தெரியாமல் அப்படி சொல்லிட்டேன்...” என்று சிரிப்புடன் கெஞ்சியவனை அடிக்க கட்டிலில் இருந்த தலையணையை எடுத்தாள் ரேஷ்மி.

ரேஷ்மி துரத்துவதற்குள் கட்டிலின் மறு கோடிக்கு சென்று கீழே இறங்கியவன் துவாயை எடுத்துக்கொண்டு குளியலறையை தஞ்சமடைந்தான்...

கையில் எடுத்த தலையணையை கட்டிக்கொண்டவள் ஒரு சிரிப்புடன் கட்டிலில் அமர்ந்துவிட்டாள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top