• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன்னாலே உனதானேன் 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anu Chandran

மண்டலாதிபதி
Joined
Jun 1, 2019
Messages
226
Reaction score
697
Location
Srilanka
ஹாய் நட்பூஸ்...
இதோ அடுத்த பதிவு....
படிச்சிட்டு மறக்காமல் கருத்து சொல்லுங்க.....
சென்ற பதிவிற்கு லைக் அன்ட் கமெண்ட் செய்த அனைத்து நல்ல உள்ளத்திற்கும் நன்றி...

18

அறையிலிருந்து வெளியே வந்த ரேஷ்மி சமையலறை நோக்கி சென்றாள்...
அங்கு சென்ற ரேஷ்மி லைட்டை ஆன் செய்யும் நோக்கத்தோடு சுவிட்சில் கையை வைக்க அதை கடதாசி துண்டொன்று திரையிட்டிருந்தது..
அதை ஒரு கையில் எடுத்தவள் மறுகையால் சுவிட்டை போட்டாள்...

மின்விளக்கு ஒளிர்ந்ததும் அதன் வெளிச்சத்தில் கையில் வைத்திருந்த கடதாசித்துண்டு என்னவென்று பார்த்தாள்...

அதில் “ ஷிமி பேபி லைட்டை ஆப் பண்ணிட்டு நம் ரூமிற்கு வா..” என்று எழுதியிருக்க ரேஷ்மி கடுப்பாகிவிட்டாள்...

நன்றாக தூங்கிக்கொண்டிருந்தவளை எழுப்பியது மட்டுமில்லாமல் இங்கு வா அங்கு வா என்று அலைக்கழித்தால் யாருக்கு தான் கோபம் வராமல் இருக்கும்???
ரூமிற்கு வந்தவள் அங்கேயும் விளக்கு அணைக்கப்பட்டிருக்க அவளது கோபம் எல்லை கடந்தது...

அறையின் விளக்கை ஒளிரச்செய்ய சுவிட்சின் மேல் கை வைத்தவளது கையில் மீண்டும் ஏதோ தட்டுபட்டது... அதை கையில் எடுத்தவள் சுவிட்சை ஆன் செய்துவிட்டு அந்த கடதாசித்துண்டை படிக்கத்தொடங்கினாள் ரேஷ்மி...

“என்ன ஷிமி காண்டாகிட்டியா??? சாரி மா... ஒரு சின்ன தப்பு பண்ணிட்டேன்... உன்கிட்ட சாரி கேட்கனும்... அதான் இந்த விளையாட்டு... உன்னிடம் கொஞ்சம் பேசனும்... துண்டு முடிஞ்சிருச்சுமா.. மீதியை தெரிஞ்சுக்க நம்ம பெட்டுல ஒரு துண்டு வைத்திருக்கேன்.... அதை படித்து தெரிஞ்சுக்கோ...” என்று இருக்க ரேஷ்மிக்கு என்ன ரியாக்ஷன் கொடுப்பதென்றே தெரியவில்லை... ஆனால் அடுத்த துண்டில் என்ன இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவளிடம் மேலோங்கியிருந்தது....

அதனால் கட்டிலருகே சென்றவள் அங்கு ஒரு பொதியின் மேல் ஒரு ஸ்டிக்கி நோட் ஒட்டப்பட்டு இருக்க அதை கழற்றி எடுத்தாள் ரேஷ்மி....

அதில் “வா ரேஷ்மி... எதுல விட்டேன்... ஹா.. நான் ஒரு தப்பு செஞ்சிட்டேன் .. அதை உன்கிட்ட நேரடியாக சொல்லி சாரி கேட்க எனக்கு ரொம்ப கில்டியாக இருக்கு... உன்கிட்ட சாரி கேட்க தான் இந்த கிப்டை வாங்கிட்டு வந்தேன்... நீ என்னை மன்னிச்சிட்டா இந்த ட்ரெஸ்ஸை அணிந்துக்கொண்டு வீட்டிற்கு பின்புறம் இருக்க நம்ம கார்டனுக்கு வா... மன்னிக்கவில்லை என்றால் வரவேண்டாம்... ஆனா என்ன தப்புனு தெரிந்துக்கொள்கின்ற ஆர்வத்துல நீ அந்த ட்ரெஸ்ஸை போட்டுக்காம வந்தா நான் உன் முன்னே வரமாட்டேன்... ஏன் இதை இப்பவே சொல்றேனா நீ ரொம்ப ஸ்மார்ட்னு எனக்கு தெரியும்.... ஹிஹி .. சோ இன்னும் டென் மினிட்சில் வந்துரு........” என்று முடிந்திருந்தது அந்த ஸ்டிக்கி நோட்...

அந்த ஸ்டிக்கி நோட் ஒட்டியிருந்த பொதியை எடுத்தவள் அதை பிரித்து பார்க்க அதில் வெள்ளை நிற குர்த்தியும் இளஞ்சிவப்பு நிற லாங் ஸ்கர்ட்டும் இருந்தது... அதோடு அதற்கு ஏற்றாற் போல் ஒரு செம்பு நிற பேன்சி நெக்லசும் பேன்சி வளையல்களும் இருந்தது....

அதை எடுத்து பார்த்தவளுக்கு அது கடையில் தான் பிட்டோன் பார்த்து வினய் வேண்டாம் என்று கூறிய உடை என்று நியாபகம் வந்தது...
இவ்வளவு நேரம் வினய் ஏதோ தனக்கு தெரியாமல் செய்கின்றான் என்ற சந்தேகம் இப்போது உறுதியானது... இருப்பினும் அவன் கூறியபடி பத்து நிமிடத்தில் தயாராகியவள் அவனை தேடி பின்புற தோட்டத்திற்கு சென்றாள்...

அங்கு இருள் சூழ்ந்திருக்க வீட்டினுள் சென்று தோட்டத்தினுள் இருந்த விளக்கிற்கான சுவிட்சினை தட்டிவிட்டு மீண்டும் தோட்டத்திற்கு வந்த ரேஷ்மி அதிர்ந்து நின்றுவிட்டாள்...

அந்த தோட்டம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது....
தோட்டத்தினுள் வந்தவளின் கண்களை துணியினால் கட்டினான் வினய்...
அவனது திடீர் செயலில் பயந்தவள் வினய் வினய் என்று கத்த அவளது வாயை கைகளால் பொத்தியவன்

“ஹே ஷிமி கத்தாத... வீட்டில் எல்லாம் எழுந்துப்பாங்க...” என்றவன் அவன் பிடியில் இருந்து அவளை விடுவிக்க

“எதுக்கு வினய் நடுராத்திரியில இப்படி விளையாடுறீங்க?? உங்களுக்கு வேறு நேரமே கிடைக்கலையா??”

“ஏன் ஷிமி கோபப்படுற... வா இங்க வந்து உட்காரு...” என்று அங்கிருந்த ஒரு ஸ்டூலில் ரேஷ்மியை அமர வைத்தான் வினய்..

“அதுக்கு முதலில் இந்த கட்டை அவிழ்த்து விடுங்க... இல்லைனா நான் அதை அவிழ்த்துவிடுவேன்...”

“ஏன் மா டென்ஷனாகுற??? நானே அவிழ்த்து விடுகிறேன்.... ஆனா ஒரு டூமின்ஸ்... “ என்று கூறியவன் தன் கைக்கடிகாரத்தை பார்த்தவன் அங்கிருந்து சென்று எதையோ ஒழுங்கு செய்தான்.....

தன் வேலையை முடித்தவன் அவளிடம் வந்து அவளை வேறொரு இடத்திற்கு அழைத்து சென்றான்...

“வினய் இன்னும் எவ்வளவு நேரம் நான் இப்படியே இருப்பது?? சீக்கிரம் கட்டை அவிழ்த்துவிடுங்க...” என்று கூறிய மறுநொடி அவளது கண் கட்டு அவிழ்க்கப்பட்டது...

கட்டு அவிழ்ந்ததும் தன் கண்களை தடவிக்கொடுத்துவிட்டு இமைகளை பிரித்து பார்த்தவளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது...

ஒரு செட் விளக்கை தவிர மீது அனைத்தும் அணைக்கப்பட்டு அவள் முன்னே ஒரு மேசையில் ஒரு வட்டவடிவ கேக்கும் அதன் மீது ஒரு பட்டாளம் மெழுகுதிரி ஏற்றப்பட்டிருந்தது. அதன் அருகே ஒரு ரோஜா பூங்கொத்தும் சில்வர் நிற தாளினால் பொதிசெய்யப்பட்டிருந்த ஒரு பரிசுப்பொதியும் அத்தோடு பெரிய வெள்ளை நிற டெடிபெயாரும் அமர்த்திவைக்கப்பட்டிருந்தது.. அவற்றுடன் ஒரு கனோன் பிரோபஷனல் கேமராவும் இருந்தது... ரேஷ்மியை கேக் அருகே கொண்டு சென்று நிறுத்தியவன் கேமராவை வீடியோ மோடில் வைத்துவிட்டு அவளுடன் வந்து நின்று கொண்டான்...

அதுவரை அதிர்ச்சியோடு நின்றவளது கண்ணில் கண்ணீர் பெருகியது.... அதை பார்த்து பதறியவன் அவளை அணைத்துக்கொண்டு

“ஹேய்... ஷிமி எதற்காக இப்போ அழுகின்றாய்?? இன்று உன்னுடைய பிறந்த நாள்.... இன்று நீ அழவே கூடாது .... கண்ணை துடைத்துக்கொள்.....” என்றவன் அவளை தன்னிடம் இருந்து விலக்கி அவளது கண்களை துடைத்துவிட்டு

“ஹாப்பி பர்த்டே மை ஸ்வீட் லவ்லி பொண்டாட்டி... எப்பவும் என்னோட காதலியாக மனைவியாக என்னுடைய தோழியாக என்னோட குழந்தையாக என்னோட இரண்டாவது தாயாக நீ இருக்கவேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.... என் இதயம் துடிக்கும் கடைசி நொடிவரை உன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் காக்கும் அரணாக நான் உனக்காகவே இருப்பேன்னு உனக்கு நான் ப்ராமஸ் பண்ணி தருகிறேன்..... இப்போ நாம கேக்கை கட் பண்ணலாம்...” என்றவன் கத்தியை எடுத்து அவள் கையில் திணித்துவிட்டு பிறந்தநாள் கீதம் பாடினான்...

அவனுக்கு நன்றி உரைத்துவிட்டு ரேஷ்மியும் கேக்கினை வெட்டி ஒரு துண்டினை அவன் வாயில் வைக்கப்போக

“ஷிமி ஒரு நிமிஷம்” என்று தடுத்தவன் ஓடிச்சென்று வீடியோ மோடில் இருந்த கேமராவை கேமரா மோடிற்கு மாற்றிவிட்டு டைமர் செட் பண்ணிவிட்டு வந்தவன்

“இப்போ ஊட்டு ஷிமி...” என்றவன் வாயில் கேக் துண்டை வாங்கும் போது கேமரா சரியாக பிளாஸ் அடித்தது..
ரேஷ்மிக்கு வினய் ஊட்டும் போது, பரிசு வழங்கும் போது என்று அனைத்து செயலின் போதும் இதே நிகழ்ந்தது...

பின் இருவரும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வோம் என்று வினய் கூற டைமரை செட் செய்துவிட்டு வந்து ரேஷ்மி பக்கத்தில் நின்றவன் அவள் எதிர்பாராத நேரத்தில் அவளை இழுத்து அவளது இதழ்களை சிறையிட்டிருந்தான்...
இந்த அதிரடி யுத்தத்தை அந்த புகைப்படக்கருவி அழகாக தன்னுள் புகைப்படமாய் சேமித்திருந்தது....
நேரமும் காலநிலையும் அந்த யுத்தத்திற்கு படைபலம் சேர்க்க இருவரது படையெடுப்பும் தீவிரமடைந்தது... ஒரு கட்டத்தில் ரேஷ்மி மூச்சு விடமுடியாமல் தடுமாறியபோதும் அவள் விலக முயலவில்லை... மாறாக அவனுள் கரைய நினைத்தவளை வலுக்கட்டாயமாக பிரித்தான் வினய்..

“ஷிமி.... கொஞ்சம் கேப் விடுமா... பாரு உனக்கு மூச்சு முட்டுது...” என்றவனின் குரலில் அவள் மோகம் கொழுந்துவிட்டெரிய மீண்டும் அவனது இதழ்களை கவ்வினாள் ரேஷ்மி... ஆடு புலியாட்டம் போல் ஒருவர் மாற்றி ஒருவர் தொடர அந்த இடம் அவர்களது பள்ளியறையாக மாறத்தொடங்கிய நேரம் அவர்களை நினைவுலகத்திற்கு கொண்டு வந்தது மழைமேகம் பொழிந்த சிறு தூரல்கள்....

இடம் உணர்ந்து விலகியவர்கள் விரைந்து அங்கிருந்த பொருட்களை ஒழுங்குபடுத்தினர்.... ரேஷ்மி கேக்கினை கொண்டுச்சென்று ப்ரிஜ்ஜில் வைத்துவிட்டு வந்தவள் வினயுடன் சேர்ந்து மற்ற பொருட்களை ஒழுங்கு படுத்தினாள்...
வேலையை முடித்துக்கொண்ட இருவரும் பரிசுப்பொருட்களை எடுத்துக்கொண்டு தங்களறைக்கு வந்தனர்...

அந்த ரோஜா மலர்கொத்தில் இருந்து சிவப்பு நிற ரோஜாக்களை வெளியே எடுத்த ரேஷ்மி அதை வினயிடம் நீட்டி

“ஐ லவ் யூ சோ மச் ஹபி... ஐயம் பாலிங் கிரேஸி அபௌட் யூ.... எனக்கு என்ன சொல்லுறதுனு தெரியவில்லை.... நான் எவ்வளவு விலகி போனாலும் நீங்க என்னை விலகவிட்டதில்லை..... என் அம்மா அப்பா கூட நான் இவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பேனானு எனக்கு தெரியவில்லை... பட் இந்த நிமிஷம் என்னை விட சந்தோஷமாக யாரும் இருக்க மாட்டாங்கனு தோனுது... என்னோட மனசு உங்க காதலை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று இரண்டு புறம் பந்தாடப்பட்டு ஒரு குழப்பநிலையில் இருக்கு.... ஆனா இந்த நிமிஷம் என் மனசு நீங்களும் உங்க காதலும் இன்கிரெடிபல் என்று சொல்லுது... ஆனா அது சரியா தவறானு கூட என் மனசுக்கு தெரியவில்லை.... ஆனா ஐ லவ் யூ.... தட்ஸ் த ட்ருத்...” என்று காதல் உரைத்தவளை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தான் வினய்....

உணர்ந்து சொன்னாளா...?? மகிழச்சியில் உணராமல் உளறுகிறாளா என்று வினயிற்கு புரியவில்லை.... ஆனால் அவனுக்கு புரிந்த ஒன்று அவள் தன் மனதை திறந்துகாட்டிவிட்டாள்... அவளது பெற்றோரின் இறப்பிற்கு பின் இறுக மூடியிருந்த அவளது மனக்கதவு இன்று தன் காதல் என்ற சாவியினால் திறக்கப்பட்டுவிட்டது..... இனிமேல் அவளை பழைய நிலைக்கு மாற்றிவிடலாம் என்ற எண்ணமே வினயின் மனதில் ஓடியது...

அவள் கொடுத்த ரோஜாப்பூக்களை வாங்கியவன் அவளை இறுக அணைத்துக்கொண்டான்...
அவனுக்கு இதுவே போதும் என்ற நிலை....
அந்த அணைப்பு இருவருக்கும் ஒருவித நிம்மதியுணர்வை கொடுத்தது....
நேரமாவதை உணர்ந்த வினய்

“ஷிமி நாம தூங்கலாம்... டைமாருச்சி...” என்று அவளை விலக்கியவன் அவளது கண்கள் ஏதோ யாசிக்க அதை புரிந்துகொண்டவன்

“ஷிமி நான் உன்கூட தரையில் படுத்துக்கவா???” என்று வினய் கேட்க தாமதிக்காது தலையை ஆட்டவிட்டு அவனுக்கு ஒரு படுக்கையை விரித்தாள்...

விளக்கை அணைத்துவிட்டு இருவரும் மற்றவரை அணைத்துக்கொள்ள நித்திராதேவி அவர்கள் இருவரையும் ஆக்திரமித்துக்கொண்டாள்.....
 




stella

அமைச்சர்
Joined
May 21, 2018
Messages
1,458
Reaction score
2,327
Age
28
Nice update sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top