• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன்னாலே உனதானேன் 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anu Chandran

மண்டலாதிபதி
Joined
Jun 1, 2019
Messages
226
Reaction score
697
Location
Srilanka
ஹாய் மக்களே.....

இதோ அடுத்த பதிவு....
படிச்சிட்டு மறக்காமல் கருத்து சொல்லுங்க மக்களே...
சென்ற பதிவிற்கு லைக் அண்ட் கமெண்ட பண்ண அனைவருக்கும் நன்றிகள்❤❤❤

மறு நாள் காலை முதலில் துயில் கலைந்த ரேஷ்மி மெதுவாக தன் கண்களை திறந்து பார்க்க எதிரே ஏதோ இருப்பது போல் தெரிய அதை கை வைத்து பார்த்தவளுக்கு அப்போது தான் இரவு நடந்த சம்பவம் நினைவில் வந்தது..

அவள் வினயின் மார்பில் தலை வைத்து படுத்திருக்க வினயின் ஒரு கை அவளை அணைத்திருந்தது...
மெதுவாக அவனது தூக்கம் கலையாதவாறு கையை விலக்க அவனிடம் அசைவு தெரிந்தது...

எங்கே அவன் எழுந்துவிடுவானோ என்ற பயத்தில் மீண்டும் அவன் மார்பிலேயே படுத்துக்கொண்டாள்...
அவன் மூச்சு மீண்டும் சீராவதை உறுதிப்படுத்திக்கொண்டு மீண்டும் மெதுவாக எழும்பி அவன் காதருகே சென்றவள்
"டேய் திருடா..... நீ தூங்கலைனு தெரியும்.... கையை எடு... இல்லைனா கடிச்சி வச்சிருவேன்...” என்று அவள் கூறிய அடுத்த நொடி அவனது கை அவளை விடுவித்திருந்தது...

அவனது செயலில் சிரித்தவள் இரவு கொடுக்காத முத்தத்தை அவனது நெற்றியில் வைத்துவிட்டு எழுந்து குளியலறைக்குள் சென்றாள்....

அவள் சென்றதும் கண்விழித்தவன் இதழ்களில் புன்னகை ஒட்டிக்கொண்டது...
மனமோ
“ஷிமி இன்னும் கொஞ்ச நாள் தான்... அதுக்குள்ள உன் கூட்டில் இருந்து உன்னை முழுவதுமாக வெளிவர வைக்கின்றேன்... என்ன தான் நீ உன் காதலை என்கிட்ட சொன்னாலும் உன் கண்கள் அதை முழுதாக பிரதிபலிக்கவில்லை... ஏதோ ஒரு தயக்கம், ஒரு போராட்டம் உனக்குள் இருக்கிறதென்று எனக்கு தெரியும்.. அதை உன் வாயாலேயே வரவைத்து அந்த தயக்கத்தை உடைத்து எறிந்து என்னுடைய சரிபாதியாக உன்னை மாற்றிய பின் உனக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு...... ஆனா அந்த நாள் ரொம்ப தூரத்தில் இல்லை.... சீக்கிரம் உன்னை வழிக்கு கொண்டுவருகின்றேன் என் ஸ்வீட் பொண்டாட்டி....” என்று பேசிக்கொண்டவன் எழுந்து கட்டிலில் படுத்துக்கொண்டான்....

குளியலறையில் இருந்து வெளியே வந்தவள் வினயிற்கு காபி எடுத்துவருவதற்காக அறையில் இருந்து வெளியேறினாள்...

வெளியே வந்தவள் அங்கு சோபாவில் அமர்ந்து பூ தொடுத்துக்கொண்டிருந்த வீரலட்சுமி அருகில் சென்று அவரிடம் இன்று தன் பிறந்த நாள் என்று கூறியவள் அவர் காலில் விழுந்து வணங்கினாள்...

ரேஷ்மியை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்தவர் தன் சேலையில் முடிந்திருந்த அந்த ஐநூறு ரூபாய் நோட்டை அவளுக்கு பரிசாக கொடுத்தார்....

பின் அனைவருக்கும் காபி கலக்க சமையலறை சென்றாள் ரேஷ்மி...
ரேஷ்மி அனைவருக்கும் சேர்த்து காபி கலந்து விட்டு தன் காபியை அருந்தியவள் ரியாவிற்கும் அபியிற்கும் ப்ளாஸ்கில் காபியினை எடுத்துவைத்துவிட்டு வினயிற்கு எடுத்துக்கொண்டவள் வீரலட்சுமிக்கும் கொடுக்க தவறவில்லை..

வினயிற்கு காபியை எடுத்து சென்றவள் அவனை எழுப்ப முயல அவனோ எழும்ப மறுக்க கப்பில் இருந்து காபியில் ஒரு மிடறு குடித்தவள்

“ வினய் நீங்க ரொம்ப பாவம்...” என்று கூற அதில் கண்முழித்தவன்

“ஆமா ரேஷ்மி நான் ரொம்ப பாவம்... அது உனக்கு இப்போ தான் தெரிஞ்சதா???” என்று ஒப்புகொண்டான் வினய்..

“வேற எப்போ தெரியனும்...??”

“அதை பிறகு சொல்றேன்.... இப்போ நீ எதுக்கு என்னை பாவம்னு சொல்லுற??”

“நீங்க தான் காபி குடிக்கலையே... அதான் பாவம்னு சொன்னேன்...”

“எப்பவும் குடிக்கிறது தானே....”
“ஆமா... ஆனா இன்னைக்கு ஸ்பெஷலா உங்களுக்குனே ஒரு காபி... வினய்...”

“ஏன் ஷிமி காபியில் உப்பு ஏதும் கலந்துட்டியா???” என்று சிரித்தவனை முறைத்த ரேஷ்மி

“இல்லை... ஒரு போத்தல் பினாயில் கலந்துருக்கேன்..”

“ஏன் ஷிமி உனக்கு இந்த கொலைவெறி... இப்படி என் உயிரோட விளையாடுறியேமா.... உன் ஆத்துக்காரர் பாவமில்லையா??” என்று பாவமாக வினவியவனை ரேஷ்மி முறைக்க வினயோ

“ஹலோ மேடம் இது நான் கொடுக்க வேண்டிய ரியாக்ஷன்... இதெல்லாம் அக்கிரமம்...” என்றவன் தொடர்ந்து புலம்ப கையில் இருந்த காபி கப்போடு அங்கிருந்து விலகிச்சென்றாள் ரேஷ்மி....
 




Anu Chandran

மண்டலாதிபதி
Joined
Jun 1, 2019
Messages
226
Reaction score
697
Location
Srilanka
ஆனால் வினயோ அவளை கைபிடித்து தடுத்தவன் வசதியாக படுக்கையில் அமர்ந்து கொண்டு
“ஓய் பொண்டாட்டி... என்ன ஒன்னுமே சொல்லாம போற??? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த காபில??? சொல்லிட்டு போ செல்லம்....”

“நான் எதுக்கு சொல்லனும்..?? நான் சொல்ல மாட்டேன்....”

“ஐயோ ஷிமி மா..... எனக்கு சஸ்பன்ஸ் தாங்கலை மா... சொல்லிட்டு போ...”

“முடியாது..... நான் சொல்லமாட்டேன்.... நான் ஸ்பெஷல்னு சொன்னதும் நீங்க என்ன சொன்னீங்க??? உப்பு காபியானு கேட்டீங்க.... உங்களுக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா அப்படி கேட்பீங்க.... உங்களுக்கு காரப்பொடி போட்டு காபி கொண்டுவந்திருக்கனும்... அப்போ தான் நீங்க சரிப்படுவீங்க...” அவளது பதிலில் பதறியவன்

“ஐய்யய்யோ...... அப்படி ஏதும் பண்ணிறாத மா.... உன் புருஷன் பொழப்பு உன் காபியை நம்பி தான் மா இருக்கு...... அதில் உன் வில்லத்தனத்தை காட்டிராத மா... உனக்கு கோடி புண்ணியமா போயிரும்...”

“இது எப்போ இருந்து??? அப்போ இவ்வளவு நாளா ஏதோ கடமைக்கு குடிக்கிற மாதிரி கெத்து காட்டுனது எல்லாம் சும்மாவா????” என்றவளது கேள்வியில் தன் சிகையை லேசாக கலைத்தவன் அசடு வழிந்தான்....

“அடப்பாவி..... அப்போ என்னமோ எங்கம்மா காபி அப்படி... எங்கம்மா காபி இப்படினு சொன்னதெல்லாம் உல்டாவா???”

“ஈஈஈஈஈஈஈஈ......”

“ஏன் இப்படி....???”

“அதெல்லாம் குடும்பஸ்தன் ரகசியம்.... யாருக்கும் சொல்லக்கூடாது....”

“பார்டா.... அப்போ நான் அத்தை கிட்ட போய் நீங்க சொன்னதை சொல்றேன்...” என்று செல்லத்திரும்பியவளை மறுபடியும் தடுத்தான் வினய்...

“ஏன் ஷிமி இப்படி எல்லாத்துக்கும் அவசரப்படுற???? இப்போ என்ன உனக்கு அந்த ரகசியம் தெரியனும் அதானே... சொல்லுறேன்...” என்று வினய் கூறத்தொடங்கிய அடுத்த நொடி அவனை உரசிக்கொண்டு கட்டிலில் அமர்ந்தாள் ரேஷ்மி...

“ஏன் ஷிமி உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா????”

“இப்போ நான் என்ன செஞ்சிட்டேனு இப்படி கேட்குறீங்க....???” என்று ஷிமி கேட்க வினயோ மனதினுள்

“ஆமா இவளுக்கு ஒன்னும் தெரியாது பாரு..... எப்பபாரு இப்படி ஏதாவது எசகுபிசகாக செய்து மனிஷனை காயவிடுறதே இவளுக்கு வேலையா போச்சு.. இவ தெரிஞ்சு தான் இப்படி நடந்துக்கிறாளா இல்லை புரியாம இப்படி பண்ணுறாளா???? இல்லை இல்லை.... இவ தெரிஞ்சி தான் இப்படி நம்மை வகையா வச்சி செய்றா... கட்டின பொண்டாட்டியை பக்கத்தில் வைச்சிக்கிட்டு கைகட்டி வேடிக்கை பார்க்கிற மாதிரி ஒரு கொடுமை வேறு எங்கயுமே இல்லை....”

“ என்ன பண்ணுறது வினய் எல்லாம் உங்க தலை விதி...” என்றவளின் பதில் அதிர்ந்தான் வினய்..

“ஹேய்... என்ன சொல்லுற...???”

“அதான் நீங்க புலம்பிட்டு இருந்தீங்களே..அதுக்கு பதில் சொன்னேன்...”

“ஐயோ மைண்ட் வாய்சுனு நினைத்து வெளியில பேசிட்டேனோ...” என்று மறுபடியும் மனதில் நினைக்க

“இல்லை வினய் நீங்க சரியா தான் நினைச்சீங்க...” என்று ரேஷ்மி வினயின் மைண்ட் வாயிசிற்கு பதிலளிக்க அதிர்ச்சியில் கட்டிலில் இருந்து எழுந்தவன் ரேஷ்மியை மேலும் கீழும் பார்த்துவிட்டு தன் கையை கிள்ளிப்பார்த்துக்கொண்டான்..
அவனது செயலில் சிரித்தவள் அவன் கையை பிடித்து அமரச்செய்தவள் எக்கி அவனது முன்னுச்சியில் தன் முத்திரையை பதித்து விட்டு

“இப்போவாவது நம்புறீங்களா வினய்???” என்றவளது கேள்விக்கு வினயிடம் பதிலில்லை...
அசைவில்லாது அமர்ந்திருந்தவனை உலுக்கி நிதானமடையச்செய்தாள் ரேஷ்மி......

அப்போதும் அவளை பார்த்து பேந்த பேந்த முழித்தவனிடம்

“என்ன வினய் ஒன்றுமே பேச மாட்டேன்கிறீங்க....???”

“நான் நிஜமாவே தூங்கலையே ஷிமி..??? எனக்கு என்னவோ டவுட்டாவே இருக்கு....”

“ஹாஹா... நீங்க முழித்து தான் இருக்கீங்க....சோ பயப்படாதீங்க...”

“அப்போ எப்படி நான் மைண்ட் வாயிசில் பேசுனது உனக்கு கேட்டுச்சு??”

“அது சீக்ரட்.... அதெல்லாம் வெளியே சொல்லப்படாது...”

“ஐயோ சஸ்பன்ஸ்ஸா வைத்து ஆளை கொல்லுறாளே..... அம்மாடி ஷிமி.... ப்ளீஸ்.... இதுக்கு மேலே என்னால சஸ்பன்ஸ் தாங்க முடியாது....சோ ப்ளீஸ் சொல்லிருமா.... உன் வீட்டுக்காரர் பாவம்...” என்று கிட்டத்தட்ட அழாத குறையாக கெஞ்சிய வினயிடம்

“ சொல்ல மாட்டேனே..... என்ன பண்ணுவீங்க????” என்று வினவியளிடம்

“வேற என்ன பண்ணுறது காலில் விழுந்திட வேண்டியது தான்...”

“ஹாஹா... இதை நாங்க நம்பனும்....???? எல்லா கணவன்மாரும் சொல்லுற டயலொக்கை எடுத்துவிட்டா நீங்க செய்யப்போறதா அர்த்தமா???”

“அப்போ நான் செய்யமாட்டேன்னு சொல்லுறியா??”

“இல்லை.... உங்களால் செய்ய முடியாதுனு அர்த்தம்....” என்று அவள் கூறிய அடுத்த நொடி வினய் கட்டிலில் இருந்த நிலையில் கீழே குனிந்தான்...
அதை பார்த்து பதறிய ரேஷ்மி கால்களை மேலே தூக்கிக்கொண்டு

“டேய் என்னடா செய்ற???? ஒரு பேச்சுக்கு சொன்னா அதை அப்படியே செய்வியா????” என்றவளின் பேச்சில் நிமிர்ந்தவன்

“என்னது டேய் யா???? என்ன ஷிமி வரவர மரியாதை குறைந்திட்டே வருது....”

“நீங்க பண்ணுற காரியத்துக்கு உங்களுக்கு இது ரொம்ப கம்மி தான்...”

“அப்படி என்னமா பண்ணிட்டேன்...???” என்று தெரியாதது போல் வினவியவனை முறைத்தாள் ரேஷ்மி.....

“இப்போ எதுக்கு முறைக்கிறனு சொன்னா தானே புரியும் ஷிமி????”

“இப்போ எதுக்கு என் காலில் விழப்போனீங்க???”

“நா எப்போ விழப்போனேன்???”

“வினய்ய்ய்ய்ய்.....”

“ஆமா ஷிமி என் பெயர் வினய் தான் இப்போ அதுக்கு என்ன???” என்றவன் ரேஷ்மியை வெறுப்பேற்ற அதில் வெகுண்டவள்

“டேய் பொறுக்கி உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னை கடுப்பேற்றுவ???? எல்லாத்தை செய்துட்டு தெரியாத மாதிரியா நடிக்கிற???” என்று அவன் தலைமுடியை பிடித்து ஆட்டினாள் ரேஷ்மி...

“ஐயோ ஷிமி விடுமா.... வலிக்குது... தெரியா சொல்லிட்டேன் என்னை விட்டுரு...இனிமே இப்படி பண்ண மாட்டேன்....”என்று அவன் வாக்குறுதி கொடுத்த பிறகு அவனை விட்டாள் ரேஷ்மி....

“அந்த பயம் இருக்கட்டும்... இப்போ செல்லுங்க.... எதுக்கு அப்படி செய்தீங்க??”

“சும்மா உன்னை பயமுறுத்தி பார்க்க தான்...”

“வினய்ய்ய்ய்.....”

“சரி கோபப்படாத..... உனக்கு இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் புடிக்காதுனு எனக்கு தெரியும்... எல்லோரும் சமமானவர்கள் என்ற கருத்து உன்னிடம் இருக்குனு எனக்கு தெரியும்...”

“அப்போ எதுக்கு அப்படி பண்ணீங்க...??” என்று கோபமாக வினவிவளிடம் சிரித்துக்கொண்டே பதில் சொன்னான் வினய்....

“அது வந்து ஒரு வாட்டி நான் செய்றேனு சொல்லிட்டேனா.... என் பேச்சை நானே கேட்கமாட்டேன்....”

“என்ன நேத்து ரஜினி படம் பார்த்தீங்களா....??”

“இல்லை ஷிமி.... ஏன் கேட்குற?? என் டயலொக்கை அவர் படத்துலயும் போட்டுட்டாங்களா???”

“ஓ... உங்களுக்கு அப்படி ஒரு நினைப்பும் இருக்கா??? சரி இப்போ எனக்கு புரியிற மாதிரி சொல்லுங்க....??”

“ஓ... உனக்கு இப்படி சொன்னா புரியாதில்ல....??? சரி உனக்கு புரிகின்ற மாதிரி சொல்லுறேன்....
ஸ்வீட் ஸ்ராபரியை ருசிக்க போறேன்னு முடிவெடுத்துட்டேனா யாருக்காகவும் அதை கிவ்வப் பண்ணமாட்டேன்” என்று அந்த ஸ்ராபரியை அழுத்தி கூறியவன்

“என்ன ஷிமி இப்போ புரிஞ்சிதா??” என்று கேட்டு கண்ணடிக்க அதில் கன்னம் சிவக்க வெட்கிக்குனிந்தாள் ரேஷ்மி... அதில் கிளர்ந்தெழுந்த அவனது உணர்ச்சிகள் அவளை முத்தமிட தூண்ட அவளது முகத்தை தன் இரு கரத்தால் ஏந்தி அந்த ஸ்வீட் ஸ்ராபரியை ருசிபார்க்க முயன்றான்...

அவனது அந்த முற்சியை தடுக்கும் விதமாக பூஜை வேளை கரடியாய் அனு கதவைத்தட்ட கடுப்பின் உச்சத்துக்கே சென்றுவிட்டான் வினய்.... வினயை தன்னிடம் இருந்து விலக்கிய ரேஷ்மி எழுந்து சென்று கதவை திறக்க அவளை கட்டிக்கொண்ட அனு

“ஹேபி பர்த்டே சித்தி.....” என்று வாழ்த்த அவளை தூக்கிய ரேஷ்மி அவளுக்கு நன்றியுரைத்து விட்டு அவளது இரு கன்னங்களிலும் முத்தமிட அதை பார்த்துக்கொண்டிருந்த வினயிற்கு குபுகுபுவென எரிந்தது.....
அதை கவனித்த ரேஷ்மி குழந்தை தூக்கியவாறு வந்து வினய் அருகில் அமர்ந்தவள்

“வினய் எனக்கு ஏதோ கருகும் வாடை வருது..... உங்களுக்கு அப்படி ஏதும் வருதா???” என்று சிரித்தவாறு கேட்க அவளை முறைத்தான் வினய்...
அவனது கோபம் அவளிடம் சிரிப்பை உண்டு பண்ண சிரித்துவிட்டாள் ரேஷ்மி...
இந்த ஊடல் புரியாத குழந்தையோ என்னவென்று வினவ ஏதோ கூறி சமாளித்தாள் ரேஷ்மி...
பின் குழந்தை கையோடு ரேஷ்மியை அழைத்து செல்ல விழைய குழந்தையிடம் கெஞ்சி கொஞ்சி ரேஷ்மியை இருத்திக்கொண்டவன் குழந்தை அங்கிருந்து சென்றதும்

“ஓய் பொண்டாட்டி எங்கே போற??? உன் காபியோட ஸ்பேஷாலிட்டியை சொல்லிட்டு போ...”

“அப்போ நீங்க உங்க குடும்பஸ்தனா சீக்ரட்டை சொல்லுங்க...”

“அது கொஞ்சம் பெரிய கதை ஷிமி.... இப்போ அதை சொல்ல டைம் இல்லையே ஷிமி....”

“அப்போ என்னாலயும் சொல்ல முடியாது....”

“ஐயோ ஷிமி ப்ளீஸ் சொல்லிட்டு போ...” என்று ரேஷ்மியிடம் கெஞ்சிக்கொண்டிருக்க மீண்டும் வந்தாள் அனு...

ரேஷ்மியை ரியா அழைப்பதாக கூறியவள் அவளை மீண்டும் கையோடு கூட்டிச்செல்ல முயல அவளுடன் செல்ல முயன்ற ரேஷ்மி ஒரு நிமிடம் என்றுவிட்டு வினய் அருகே வந்தாள்... அங்கே கட்டிலின் அருகே இருந்த காபி கப்பை எடுத்து வினயிடம் நீட்டியவள் அதை அவன் வாங்க முயலும் போது கப்பை தன்புறம் இழுத்து அதில் ஒரு மிடறு குடித்துவிட்டு மீண்டும் அவன் கையில் திணித்துவிட்டு அனுவை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள் ரேஷ்மி..
முதலில் அவளது செயலின் அர்த்தம் புரியாதவன் பின் அன்றொரு நாள் நடந்த காபி சம்பவம் நினைவில் வர அதை அனுபவித்தவாறு அந்த காபியை ரசித்து குடித்தவன் ஒரு துண்டில் ஏதோ எழுதி மேசையின் மீது அந்த காபி கப்பின் கீழ் வைத்துவிட்டு குளியலறைக்குள் புகுந்தான் ...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
அனு டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top