• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன்னாலே உனதானேன் 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anu Chandran

மண்டலாதிபதி
Joined
Jun 1, 2019
Messages
226
Reaction score
697
Location
Srilanka
ஹாய் மக்களே.....

இதோ அடுத்த எபி....
போன எபிக்கு லைக் என்ட் கமெண்ட் பண்ண எல்லா நல்ல உள்ளத்துக்கும் நன்றி நன்றி...??
இந்த எபியையும் வாசித்துவிட்டு கருத்து சொல்லுங்கோ??
மீ வெயிட்டிங்??

2

கல்யாண மண்டபத்திற்கு வந்திறங்கிய வினயையும் ரேஷ்மியையையும் வாசலில் நின்றிருந்த வினயின் சித்தி ரமாதேவி அவர்கள் இருவரையும் மண்டபத்தினுள் அழைத்து செல்ல அவர்கள் வருவதை பார்த்த வீரலட்சுமி வினய் அருகில் வந்து
“ஏன் கவின் இவ்வளவு நேரம்?? எப்போ புறப்பட்டதா சொன்ன??? புதுசா கல்யாணம் ஆனவங்க கட்டாயம் ஜோடியா கல்யாணத்தை பார்க்கனும்னு தான் முகூர்த்தம் ஆரம்பிக்கும் நேரத்துக்கே வர சொன்னேன்... நீங்க ரெண்டு பேரும் என்ன இப்படி ஆடி அசைந்து வர்றீங்க??”
“அம்மா ஒரு பத்து நிமிஷம் தானேமா லேட்டு...அதுக்கு ஏன்மா இப்படி...??”
“ஆரம்பத்துல இருந்து சடங்கை பார்க்கனும்னு சொன்னேன் தானேடா... இப்போ லேட்டா வந்துட்டு என்கிட்ட வாதாடிட்டு இருக்க???”
“வாதாடல மா... நாங்க டைமுக்கு வந்திருப்போம்...ஆனா டிராபிக்னு ஒரு சமாச்சாரம் நம்ம நாட்டுல இருக்கே.. அது எங்களை நகரவிட மாட்டேனு சொல்லிருச்சி... அதுகிட்ட உங்க பேரை சொன்னதும் தான் எங்களை நகர விட்டுச்சினா பார்த்துக்கோங்களே...” என்ற வினயின் விளக்கத்தில் கடுப்பான வீரலட்சுமி அவனை முறைக்க வினய்யோ
“அம்மா அங்க பாருங்க பெரியம்மா கூப்பிடுறாங்க..”என்று தன் தாயை திசை திருப்பிவிட்டு தன் மனைவியை அழைத்துச் சென்று அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து நடப்பவற்றை கவனிக்க தொடங்கினான் வினய். கவனித்ததோடு நில்லாது மணமேடையில் நடப்பவற்றை பற்றி தன் மனையாளுடன் விமர்சித்தப்படி இருந்தான்...
“ஷிமி நம்ம கல்யாணத்தப்போ என்னை என்னென்ன கலாட்டா பண்ணாங்க தெரியுமா?? உன்னை மணமேடைக்கு அழைச்சிட்டு வரும் போது உன்னை நான் சைட் அடிச்சிட்டு இருந்தேன்... அப்போ திடீர்னு கண்ணுல தூசு பட்டுருச்சி... அதுனால கண்ணு கலங்க அங்கே மேடையில நின்ற உதி அங்க பாரு அண்ணி வர்றத பார்த்து அண்ணாவுக்கு ஆனந்த கண்ணீரே வந்திருச்சு அப்படினு சொல்ல இந்த சுகன் அப்படியில்ல ஐயோ அண்ணியை நினைத்து அண்ணா மனசுல உருவான பயம் அண்ணா கண்ணுல தண்ணியா வெளிப்பட்டுருச்சினு சொல்லி கிண்டல் பண்ணான்... ஆனாலும் நான் அசருவேனா?? நானும் சேர்ந்து அதுங்களோட சிரிக்க உங்க அத்தை அதை பார்த்து முறைக்க ஒரே குதுகலம் தான் போ... அதெல்லாம் ஸ்வீட் மெமரிஸ் ஷிமி..”
“எது ஸ்வீட் மெமரிஸ்??? பப்ளிக்கா என்னை பார்த்து அநியாயத்திற்கு வழிந்து என்னை அவங்க கலாட்டா பண்ண களம் அமைத்து கொடுத்ததா??”
“என்னமோ உன்னை மட்டும் கலாட்டா பண்ண மாதிரி சொல்லுற??? உன்னை கூட பரவாயில்லை... என்னை அநியாயத்திற்கு கலாய்த்தாய்ங்க... ஆனாலும் நான் ஸ்டெடியா நிற்கலையா??”
“ஆ... நின்னீங்க... நின்னீங்க... உங்க ஸ்டெடினஸ்ஸை நாங்களும் தான் பார்த்தோமே..” என்று அன்றைய நாளின் நியாபகத்தில் ரேஷ்மி பேச
“ஷிமி நம்ம கல்யாணம் நடக்கும் போது உன்னோட மைன்ட் எப்படி இருந்தது?? நீ என்ன பீல் பண்ண??”
“ரொம்ப எரிச்சலா இருந்தது... ஏன்டா இப்படி படுத்துறாங்கனு இருந்தது..”
“ஏன் ஷிமி இப்படி சொல்லுற... உனக்கு கல்யாணத்துல விருப்பம் இருக்கலையா?? பிடிக்காம தான் வந்து மேடையில உட்கார்ந்தியா??”
“ஏங்க எப்பவும் நெகட்டிவ் சைடா தான் யோசிப்பீங்களா?? நான் என்ன சொல்ல வர்றேனு புரிஞ்சிக்காம நீங்க நான் சொன்னதை வேறு எதனோடோ லிங்க் பண்ணுறீங்க.. ஏங்க தெரியாம தான் கேட்குறேன்...கல்யாணத்துல இஷ்டம் இல்லாட்டி தான் எரிச்சலாக இருக்கனுமா?? வேற காரணங்கள் எரிச்சலூட்ட முடியாதா??” என்று கேட்க அவளது பதிலில் தன் கேள்வியின் விபரீதத்தை உணர்ந்தவன்
“சாரி ஷிமி.... நான் அந்த ஏங்கலில் இருந்து யோசிக்கலை.. உன் புருஷன் தத்தினு உனக்கு தெரியும்ல.. நீ தான் மண்டையில தட்டி டேய் கிறுக்கா இது தான் சரி அது தப்புனு சொல்லனும்... அதைவிட்டுட்டு இப்படி பொசுக்குனு கோவிச்சுக்கிட்டா எப்படி??
“நல்லா சமாளிக்கிறீங்க வினய்... எங்க இருந்து இதெல்லாம் கத்துகிட்டீங்க???”
“அதெல்லாம் சம்சாரியா பிரமோஷன் வாங்குனதும் தானா வருது... சரி இப்போ சொல்லு உனக்கு எதுக்கு எரிச்சலானது??”
“அதுவா காலையிலேயே பட்டினி போட்டுட்டாங்க... அதுக்கு பிறகு பட்டு சாரி, மேக்கப், ஜுவல்ஸ் அப்படினு ஒரு வெயிட்டை காவிக்கிட்டு அலைய வைத்தார்கள்... இது போதாதுனு ஐயர் வராத புகையை ஊப்பூ ஊப்பூனு ஊதி டாச்சர் பண்ணாரு.... இதை விட கொடுமை வர்றவங்க காலில் எல்லாம் விழவைத்தது... நீங்க தடார் தடார்னு விழுந்து கும்பிட்டடீங்க.. எனக்கு தான் வாழ்க்கையே வெறுத்து போயிருச்சி ..”
“ஹாஹா... இவ்வளவு கஷ்டப்பட்டியா?? இதை நான் கவனிக்கலையே...”
“எப்படி கவனிப்பீங்க?? உங்களுக்கு அந்த ஐயரோட வம்பளந்துட்டு இருக்கவே நேரம் சரியா இருந்தது... அதுல எப்படி என்னை கவனிப்பீங்க...”
“சாரி ஷிமி... எங்க அதுங்க மறுபடியும் கலாட்டா பண்ணுங்களோனு பயத்துல தான் உன்னை திரும்பி பார்க்கல... ஆனா நம்ம சேர்ந்து செய்த ஒவ்வொரு சடங்கையும் ரசிச்சிட்டு தான் இருந்தேன்... அதை ரசித்ததுல உன்னை ரசிக்க மறந்துட்டேன்... அது சரி உனக்கு எரிச்சலா இருந்துச்சினு சொன்னியே... அப்போ எப்படி நம்ம கல்யாணம் நடந்திருந்த உனக்கு ஹாப்பியா இருந்திருக்கும்...”
“ஐயோ நான் அதை மீன் பண்ணல வினய்... கொஞ்சம் அன் கம்பட்டபலா பீல் பண்ணேன்...அதோட நான் யூஸ்வலி அப்படி ஹெவி ஜூவல்ஸ் போட மாட்டேன்.... சேலை கூட அம்மா கூட சண்டை போட்டு காட்டன் தான் உடுத்துவேன்.. இப்படி பட்ட என்னை போய் ஒரு நாள் புல்லா அப்படி இருனு சொல்லவும் தான் கடுப்பாகிருச்சி.. ஆனா நாம செய்த சடங்கு எல்லாம் நான் பிரே பண்ணி முழுமனதோடு தான் செய்தேன்...கல்யாணங்கிறது வாழ்க்கையில் ஒருமுறை செய்றது... அதுவும் நம்ம வாழ்க்கை நல்லா இருக்கனும் அப்படீங்கிறதுக்காக நம்ம பேரண்ட்ஸ் இவ்வளவு சடங்கு செய்றாங்க... அதனால தான் நான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு அமைதியாக எல்லா சடங்கையும் முழுமனதோடு செய்தேன்...”
“ஹாஹா... ஏன் ஷிமி இவ்வளவு டென்சன் ஆகுற??? உன்னோட எண்ணம் எனக்கு புரியிது... ஆனா நான் என்ன கேட்குறேனா நம்ம கல்யாணம் இப்படி நடந்திருந்தா நல்லா இருக்குமே அப்படி உனக்கு ஏதாவது தோன்றிருக்குமே...அதை பற்றி சொல்லு...அதான் என்னோட கேள்வி??”
“அதுக்கு முதல்ல நீங்க சொல்லுங்க வினய்...உங்களுக்கு அப்படி ஏதாவது பிளான் இருந்ததா??”
“எனக்கு ரிஜிஸ்டர் மேரஜ் பண்ணிக்க சொல்லியிருந்தா கூட நான் சந்தோஷமாக பண்ணியிருப்பேன்... எனக்கு நீ வேணும் அவ்வளவு தான்.. வேற எதுக்கும் நான் ஆசைப்படல... உன்னோட காதலை பெற்ற பிறகு தான் கல்யாணம் பண்ணும்னு இருந்தேன்...ஆனா அது தான் நடக்காம போயிருச்சு.... அதுனால என்ன இனிமே கதற கதற லவ் பண்ணிற வேண்டியது தான்...” என்ற வினயின் ஏக்கத்தில் ரேஷ்மியின் மனம் குற்றவுணர்ச்சியை தாங்கி நின்றது... திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆகிய பின்னும் தன்னிடம் காதல் யாசகம் வேண்டி நிற்கும் வினயிற்கு தான் என்ன செய்துவிட்டோம் என்று தோன்றியது... முதலிரவன்று தான் கேட்ட கால அவகாசத்திற்காக இன்னும் வரை அமைதியாய் இருப்பதோடன்றி அவனது உணர்வுகள் எல்லை கடக்கும் போதெல்லாம் தன்னை அவன் தவிர்த்த விதமும் அவள் உணர்ந்து தான் இருந்தாள்... மாதவிடாய் காலத்தில் தான் அவதிப்பட்டதை பார்த்தவன் அருகிலேயே இருந்து கவனித்துக்கொண்டான்..... அவனது அந்த ஆறுதலான வார்த்தைகளும் தூங்க முடியாமல் தடுமாறும் வேளைகளில் அவன் வருடிக்கொடுத்து தூங்க உதவிய விதமும் அவளுக்கு தன் அன்னையின் அரவணைப்பை உணர்த்தியது..... என்ன தான் வார்த்தைக்கு வார்த்தை வம்படித்தாளும் அவன் தன் காதலை வெளிப்படுத்தும் வேளைகளில் அவளால் அமைதியைத் தவிர வேறேதையும் பதிலாக தர முடியவில்லை.... அவளது அமைதியை கூற பொறுக்க முடியாதது போல் அவன் தன் பேச்சை திசைத்திருப்பும் விதம் அவளது உணர்வுகளை அவன் மதிக்கின்றான் என்ற உணர்வையே அவளுள் ஏற்படுத்தியது.... கணவனாய் அல்லாது ஒரு அன்னையாய் தந்தையாய் நண்பனாய் அவனது அன்பு, உரிமை , கண்டிப்பு, கேலி என்பன வெளிப்படும் சந்தர்ப்பத்தில் அவள் ஏதோ ஒரு பாதுகாப்பான தன் சுதந்திரம் பறிக்கப்படாத கூட்டில் இருப்பது போல் உணர்ந்தாள்.... இதில் அவளை ஆச்சரியப்படுத்திய விடயம் இரண்டு மாத கால இடைவெளியில் அவன் என்னவன் என்ற எண்ணத்தை அவள் மனம் தத்தெடுத்ததே...... தன் பெற்றோர் தவிர்த்து வேறு யாருடனும் அவ்வளவு நெருக்கிப்பழகாதவளை அவன் புறம் இழுத்ததோடு நில்லாமல் அவனுக்காக ஏங்கவும் செய்துவிட்டான்.... ஆனாலும் ஏதோ ஒன்று அவனிடம் அவளை நெருங்க விடாமல் தடுத்தது.... அது என்னவென்று அவளுக்கே புரியவில்லை.... ஆனால் அவனை அவள் காதலிக்கத்தொடங்கியது உண்மை. இவ்வாறு அவளது எண்ணப்போக்கு சென்ற வண்ணம் இருக்க அதனை கலைத்தது வினயின் குரல்...
“ஷிமி ஆர் யூ தேர்?? என்னமா இப்படி பப்ளிக்கா சைட் அடிக்கிற?? பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க???”
“நான் யாரை சைட் அடித்தேன்???”
“என்ன ஷிமி இப்படி கேட்டுட்ட...”
“வேற எப்படி வினய் கேட்கனும்??”
“அப்போ நீ இவ்வளவு நேரம் என்னை சைட் அடிக்கலையா??”
“அப்படினு யாரு சொன்ன??”
“ என்ன ஷிமி குழப்புற??”
“நான் என்ற குழப்பினேன்??”
“சரி விடு.. இப்போ சொல்லு... உனக்கு உன்னோட வெடிங் எப்படி நடக்கனும்னு ஆசைப்பட்ட???”
“எனக்கு இந்த வெளிநாட்டுக்காரங்க பண்ணுற மாதிரி பீச் சைடில் மணமேடை அமைத்து பஞ்ச பூதங்கள் சாட்சியாக கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன்...”
“ஏன் ஷிமி நம்ம கல்யாணம் கூட பஞ்ச பூதங்கள் சாட்சியாக தானேமா நடந்தது..”
“ஆமா வினய்... ஆனா நாம தேடிப்போய் தான் சாட்சியாக்குனோம்... ஆனால் பீச் வியூவில் செய்யும் போது அந்த கடல், ஆகாயம், கடல் தரை, அக்னிகுண்டமும் ஆகாயச்சூரியனும், கடல்காற்று இப்படி எல்லாம் நமக்கு சாட்சியாக இருக்க அதோடு வானில் தேவர்கள் சாட்சியாக கல்யாணம் பண்ணுறது வித்தியாசமான அனுபவமாக இருந்ததுஇருக்கும்னு எனக்கு தோன்றியது... அதுனால அப்படி கல்யாணம் நடக்கனும்னு ஆசைப்பட்டேன்...”
“அப்போ அதை நீ என்கிட்ட சொல்லிருக்கலாமே...”
“வினய் திருமணம் இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட விடயம்... இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்ட விடயமில்லை... நமக்காக எல்லாவற்றையும் பார்த்து செய்து நம்ம விருப்பங்களை நிறைவேற்றிய நம்மை பெற்றவர்களுக்கு நாம கொடுக்கக்கூடிய ஒரு சந்தோஷம் இது மட்டும் தான்... அதுதான் அவங்க விருப்பத்திற்கு விட்டுட்டேன்... இதுல எனக்கு எந்த வருத்தமோ ஏமாற்றமோ இல்லை.... இப்ப கூட நீங்க கேட்டதால தான் சொன்னேன்...சோ நோ வொரிஸ்..”
“நீ ஏன் ஷிமி எப்பவும் வித்தியாசமாகவே யோசிக்கிற???”
“அது தான் நான்.... உங்க ஷிமி...” என்று கூறி சிரிக்க வினயும் அவளது சிரிப்பில் இணைந்து கொண்டாள்....
 




Attachments

Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Congratulations dearfriend.your story is superb.wonderful love story.loved it.keep on writing.
Waiting eagerly for the next ud.all the very best
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top