உன்னாலே உனதானேன் 34

#1
ஹாய் நட்புக்களே??
நேற்றைய எபியில் காண்டாகி?? கொந்தளித்த அனைவருக்கு இந்த எபி சமர்ப்பணம்??? வாசிச்சிட்டு மறக்காமல் கருத்து சொல்லிட்டு போங்க??
கேண்டின் சென்றுவிட்டு வந்த அபியும் வினயும் ஐ.சி.யூ வாசலிற்கு வர அங்கு நர்ஸ்சும் டாக்டர்சும் பதற்றத்துடன் அங்குமிங்கும் சென்றுக்கொண்டிருந்தனர். அதனை பார்த்தவர்கள் விரைந்து அங்கே சென்று விசாரிக்க முயல யாருமே சரியாக பதில் சொல்லவில்லை.
வினயோ ரேஷ்மிக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பதறிவிட்டான். அவனது பயம் தந்த அழுத்தத்தில் அவர்களுக்கு சரியாக பதில் சொல்லாத செல்ல முயன்ற நர்ஸிடம் கோபத்தில் கத்திவிட்டான்.
“உங்களுக்கு மத்தவங்க வேதனை புரியாதா?? உள்ளுக்கு படுத்திருக்கவ பிழைப்பாளா இல்லையானு தெரியாமல் நேற்றிலிருந்து துடிச்சிட்டு இருக்கிறேன்.நின்ற ஒரு வார்த்தை அவ நிலையை சொல்லிட்டு போக மாட்டேன்னு போறீங்க.... உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா?? உங்களுக்கு மத்தவங்க வேதனை துச்சமாக போயிருச்சில்ல...” என்றவனை தடுத்தான் அபி..
இவனது கத்தலில் ஐ.சி.யூவிலிருந்து வெளியே வந்த டாக்டர்
“மிஸ்டர்.கவினயன் இது ஹாஸ்பிடல்...உங்க வீடில்லை... எங்களை ட்ரீட்மண்ட் பண்ண இடம்கொடுத்தால் தான் எங்களுக்து உங்க மனைவியை காப்பாற்ற முடியும். இப்படி சத்தம் போட்டுட்டு இருந்தா எங்களால ஒன்னும் பண்ண முடியாது... உங்க மனைவிக்கு ட்ரீட்மென்ட் கண்டினியூ பண்ணவா வேண்டாமா??” என்று டாக்டர் மிரட்ட அமைதியாகிவிட்டான் வினய்.
வினய் அவ்வாறு நடந்து கொண்டதற்காக டாக்டரிடம் மன்னிப்பு கேட்ட அபி இனி அவன் அவ்வாறு நடந்துகொள்ளாமல் தான் பார்த்துக்கொள்வதாக வாக்களித்தான்.
டாக்டரும் நர்சும் உள்ளே சென்றுவிட வினயை அங்கிருந்து ஒரு ஓரமாக அழைத்து சென்றான் அபி.
“டேய் கவின் ஏன் இப்படி நடந்துக்கிற??? நர்சுகிட்ட போய் அப்படி சத்தம் போடுற???”
“என்னால முடியலை அபி.... ரேஷ்மிக்கு என்னவோ ஏதோனு பயத்துல அவங்ககிட்ட என்னானு கேட்க ட்ரை பண்ண அவங்க ஒழுங்கா பதில் சொல்லாமல்போனதும் பயத்துல அப்படி கத்திட்டேன். என்னால முடியலடா... எனக்கு பயமா இருக்குடா...” என்று தன் அண்ணனை அணைத்துக்கொண்டு அழுதான் வினய்.
அவனை ஆதரவாக தடவிக்கொடுத்த அபி
“உன் நிலை எனக்கு புரியிதுடா... ஆனா நாம டிஸ்டப் பண்ணா அவங்களால ட்ரீட்மென்டை கன்டினியூ பண்ணமுடியாதுடா... அதோடு டாக்டரோட பர்மிஷன் இல்லாமல் பாவம் அந்த நர்சால என்ன சொல்லமுடியும்... நீ அவங்ககிட்ட சத்தம் போட்டிருக்க கூடாதுடா..” என்று வினயை அமைதிப்படுத்த முயன்றான் அபி.
ஒருவாறு வினயை அமைதிப்படுத்தி கூட்டி வந்த அபி அவனை ஐ.சி.யூ வாசலில் இருந்தை இருக்கையில் அமர செய்து தானும் அருகில் அமர்ந்துகொண்டான்.
சிறிது நேரத்தில் வெளியே வந்த டாக்டர் இருவரையும் தன்னறைக்கு வருமாறி கூறிவிட்டு சென்றார்.
வினய் தாமதிக்காது டாக்டரை பின்தொடர அவனுடன் கூடச்சென்றான் அபி.
தன்னறைக்கு சென்ற டாக்டர் அபி மற்றும் வினயை அமரச்சொன்னார்.
அவர் முன் அமர்ந்தவர்களிடம் ரேஷ்மியின் நிலையை எடுத்துரைக்க தொடங்கினார் டாக்டர்.
“மிஸ்டர் கவினயன் உங்க வைய்ப்புக்கு திடீர்னு பிட்ஸ் வந்திடுச்சி....” என்று டாக்டர் கூற வினயோ
“டாக்டர்...” என்று வினய் பதற
“பதறாதீங்க கவினயன்.. அவங்களுக்கு இப்படி திடீர்னு வரும்னு நாங்க எதிர்பார்க்கலை... ஆனா அது தான் அவங்க ரெக்கவரிக்கு எங்களுக்கு கிடைத்த முதல் சிம்டம். பிட்ஸ் வந்ததும் நாங்க கூட ரொம்ப பதறிட்டோம். அவங்க நிலை இன்னும் மோசமாகிரும்னு நினைத்தோம். ஆனா அப்படி ஏதும் ஆகாமல் அவங்க ரெக்கவரிக்கு ஒரு ஸ்டார்டா இருக்கு... இது ஓரு நல்ல முன்னேற்றம் தான்... ஆனா அவங்களுக்கு கான்சியஸ் வரும்வரை என்னால எதுவும் உறுதியா சொல்லமுடியாது... அவங்களோட ஸ்கேன் ரிப்பேர்ட்ஸ் பார்த்தப்போ அவங்களோட தலைக்குள் எந்தவித இன்ஜரீசும் இல்லை.. பலமா அடிப்பட்டதால வெளிக்காயம் மட்டும் தான் மற்றபடி உள்காயம் இல்லை.... இப்படி நடக்குறது ரொம்ப ரேர்.. ஆனா காட்ஸ் கிரேஸ் அவங்க இன்டர்னல் இன்ஜரீஸ் இல்லாமல் தப்பிச்சிட்டாங்க.... இப்போதைக்கு ட்ரீட்மண்ட் போய்கிட்டு இருக்கு... அவங்க கண்முழிச்சதும் தான் மற்றையதை பற்றி யோசிக்கனும். அவங்க எவ்வளவு சீக்கிரம் கண்முழிக்கிறாங்களோ அவ்வளவு சீக்கிரம் அவங்க அபாய கட்டத்தை தாண்டிருவாங்க...” என்று டாக்டர் கூற வினயோ
“டாக்டர் நான் ரேஷ்மியை பார்க்கலாமா????” என்று கேட்க
“இல்லை கவினயன் அவங்க இன்னும் எங்க ஆப்சவேஷனில் இருக்காங்க.. அதனால இப்போ பார்க்கமுடியாது”
“ப்ளீஸ் டாக்டர்... ஒரே ஒரு தடவை ரேஷ்மியை பார்க்கிறேன் டாக்டர். என்னால் உங்க ட்ரீட்மண்ட் எந்தவிதத்திலும் இன்டரப்ட் ஆகாது... ப்ளீஸ்” என்று வினய் மன்றாட அவனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டவர் ஐந்து நிமிடங்களுக்கு அதிகமாக அங்கு இருக்ககூடாது என்ற அறிவுறுத்தலோடு வினயை செல்ல அனுமதித்தார்.
தாமதிக்காது டாக்டருக்கு நன்றியுரைத்துவிட்டு ஐ.சி.யூ அறைக்கு சென்றான். அங்கு அவனை தடுத்து நிறுத்த முயன்ற நர்சிடம் டாக்டரிடம் அனுமதி பெற்றதை கூறியவன் அங்கு ஓரமாய் பாதி திரையால் மூடப்பட்டிருந்த கட்டிலினுருகே சென்றான்.
அங்கு ரேஷ்மி உடல் முழுவதும் கட்டுக்களுடன் வாடிய கொடியாய் கட்டிலில் படுத்திருந்தாள். அதை பார்த்தவனுக்கு வேதனையை அடக்கமுடியவில்லை..
தன்னை சுற்றி நடப்பவற்றை அறியாது உணராது உணர்வின்றி படுத்திருந்தவளுக்கு தன் தொடுகையால் உயிர் கொடுத்தான் வினய். ரேஷ்மியின் அருகே சென்றவன் ஸ்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த கையில் தன் கையை வைக்க ரேஷ்மியின் இரு கண்களில் இருந்து விழியோரமாய் நீர் சொட்டியது...
உயிரே இல்லாமல் கிடந்தவளுக்கு தொடுகையால் உயிர் கொடுத்தவனோ அதை அறியாது அவள் முன் பிதற்றிக்கொண்டிருந்தான்.
“ஷிமி... கண்ணை முழிச்சி பாருமா... உன் வினய் வந்திருக்கேன்.. என்னை அழைச்சிட்டு போக வர்றேனு சொன்னவ இங்க வந்து படுத்துக்கிட்டியே... உன்னை எவ்வளோ தேடுனேன் தெரியுமா??? உனக்காக நீ கேட்டது எல்லாம் வாங்கிட்டு வந்தேன்... சீக்கிரம் எழுந்திரு மா.. உன் வினய் பாவமில்லையா??? உன் வினய்க்காக நீ இதை கூட செய்யமாட்டியா??? நான் உன்னை அவாய்ட் பண்ணிட்டு போயிருக்ககூடாது... எங்க உன்னை ஹேர்ட் பண்ணிருவேனோனு பயந்து தான் நான் யூ.எஸ் போனேன்... ஆனா அங்க போனதுல இருந்து உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்.. அதுவும் உன் குரல் சோகமா கேட்கும் போது உள்ளுக்கு அப்படியே உடைஞ்சி போயிருவேன்... ஆனா நமக்குள்ள உள்ள அந்த சின்ன இடைவெளியை இல்லாம பண்ண தான் நான் யூ.எஸ் ட்ரிப்பை அக்சப்ட் பண்ணேன். ஆனா அதுவே உன்னோட இந்த நிலைமைக்கு ஒரு காரணமாகிவிட்டது... என்னை பார்க்கிற ஆசையில் வந்த உனக்கு ஏன் இந்த நிலைமை...???? இது எனக்கு நடந்திருக்ககூடாதா??? உன்னால சின்ன அடியை கூட தாங்கமுடியாது..... உனக்கு..... ஐயோ....” என்று பிதற்றியபடி ரேஷ்மியை அணைத்து கதறியவனை தடுத்தார் அங்கிருந்த நர்ஸ். உணர்ச்சிபிடியில் சிக்கியிருந்தவன் தான் செய்வதை உணராதிருக்க அவனை கஷ்டப்பட்டு ரேஷ்மியிடம் இருந்து பிரித்து அறைக்கு வெளியே அனுப்பினார் அந்த நர்ஸ்.
வெளியே வந்தவன் இருக்கையில் அமர்ந்து தன்னுள் உழன்றான்.
மூன்று நாட்கள் இதே நிலை தொடர்ந்தது... மூன்று நாட்களும் அபியும் வினயும் ஆஸ்பிடலே கதியென்று இருந்தனர். ரியாவும் வீரலட்சுமியும் இடையிடையே வந்து சென்றனர். ரேஷ்மி ஐ.சி.யூவில் இருந்ததால் ஆண்களே தங்க வேண்டியநிலை... வினயோ உணவு உறக்கம் மறந்து இருந்ததால் அபி அவனுக்கு துணையாய் அங்கிருந்தான்.
மூன்றாம் நாள் காலை ஐ.சி.யூ அறையிலிருந்த வெளியே வந்த நர்ஸ் விரைவாக சென்று டாக்டரை அழைத்து வர அங்கு அமர்ந்திருந்த வினயும் அபியும் ஐ.சி.யூ அறையின் அருகே சென்று டாக்டரை பார்ப்பதற்காக நின்றிருந்தனர். சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்த டாக்டர் ரேஷ்மிக்கு கான்சியஸ் வந்துவிட்டதாகவும் இனி பயமில்லை என்றும் கூறினார். உள்ளே சென்று பார்க்கலாமா என்று கேட்ட வினயிடம் இப்போது வேண்டாம் மாலை நார்மல் வாடிற்கு மாற்றியதும் சென்று பார்க்கலாம் என்று கூறினார்.
வினயோ அபியை கட்டிக்கொண்டு
“அபி ரேஷ்மிக்கு ஒன்னும் இல்லைனு டாக்டர் சொல்லிட்டாருடா... என் ஷிமி என்கிட்டயே திரும்பிவந்துட்டா டா... நான் சொன்னமாதிரியே அவ திரும்பி வந்துட்டா டா..” என்று ஆனந்தத்தில் கண்ணீர் விட்டவனை ஆறுதலாக அணைத்துக்கொண்டான் அபி.
பின் வினயை வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தவன் ரியாவிடமும் தினேஷிடமும் செய்தியை பகிர்ந்தான்.
வீட்டிற்கு வந்த வினய் ரேஷ்மி பிழைத்துவிட்ட செய்தியை வீரலட்சுமியிடம் பகிரந்தவன் தன்னறைக்குள் புகுந்து கொண்டான். அறைக்குள் சென்றவனுக்கு கண்களில் நீர் முட்டியது... இந்த நான்கு நாட்களாக அவன் அனுபவித்த துன்பத்தை வார்த்தைகளால் சொல்லிடமுடியாது... அது தந்த மன அழுத்தம் அவனை அவனுள் இறுகவைத்து ஊண் உறக்கம் மறந்திடசெய்தது... ரேஷ்மியின் நினைவுகளும் பிம்பகங்களும் அவனை கண்மூடவிடவில்லை.. அதிலும் அவள் அடிப்பட்டு கிடந்த தோற்றம் அவனது இதயத்தில் குருதி வடியச்செய்தது... நொடிக்கொடி அதிகரித்த கலக்கத்தின் விளைவே அவனது ஆர்பரிப்பும் கதறலும்...
எப்போதும் வரும் துன்பத்தை தூசி போல் தட்டிவிட்டு செல்பவனால் இன்று இந்த துன்பத்தை சுமக்கும் நிற்கும் மனோதிடம் இல்லை... அதுவே அவனது இன்றைய கண்ணீருக்கு காரணம்.
மனம் லேசாகும் வரை அழுதவன் குளிக்க சென்றான். குளித்து முடிந்து வந்தவனுக்கு உணவு பரிமாறினார வீரலட்சுமி...சாப்பிட்டுவிட்டு கிளம்பமுயன்றவனை கட்டாயப்படுத்தி சிறிது நேரம் உறங்குமாறு கூறினார் வீரலட்சுமி...
அவரின் சொல்லுக்கு மதிப்பளித்து கட்டிலில் விழுந்தவனுக்கு மனது இலேசானதால் உறக்கம் வந்து தழுவிக்கொண்டது. நான்கு நாட்கள் தூக்கமின்றி இருந்தவனை நித்திராதேவி தன்னுள் இழுத்துக்கொண்டாள்.
நன்கு தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பினார் வீரலட்சுமி...
“ஷிமி கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன் மா... ரொம்ப டயர்டா இருக்குமா..” என்றுகூறி மறுபுறம் திரும்பி படுத்தவனுக்கு அடுத்த நிமிடம் தூக்கம் கலைந்தது. எழுந்து அமர்ந்தவன் எதிரே தன் அன்னையை கண்டதும்
“ஏதோ நினைவுல...” என்று கூற
“கவின் ரேஷ்மியை ரூமிற்கு மாத்திட்டாங்களாம். இப்போ தான் அபி சொன்னான். நானும் வர்றேன். வா ஆஸ்பிடலுக்கு போகலாம் ...” என்று வீரலட்சுமி அழைக்க அவரை தயாராகச்சொன்னவன் அவனும் தயாராக இருவரும் ஆஸ்பிடல் சென்றனர்.
அங்கு அபியிடம் விசாரித்து ரேஷ்மியிருந்த அறைக்கு தன் அன்னையுடன் சென்றான் வினய்.
 

Sponsored

Advertisements

Top