• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன்னாலே உனதானேன் 35

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anu Chandran

மண்டலாதிபதி
Joined
Jun 1, 2019
Messages
226
Reaction score
697
Location
Srilanka
அன்னையுடன் ரேஷ்மி இருந்த அறைக்கு வந்த வினய் உறங்கிக்கொண்டிருந்த ரேஷ்மியையே கண்டான். கால்களிரண்டில் ஒன்று மாவுகட்டு போடப்பட்டிருக்க மற்றொன்று பாண்டேஜினால் சுற்றப்பட்டிருந்தது. கைகளிலும் கட்டுகள் இருக்க ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டும் மறுகை கழுத்தோடு இணைக்கப்பட்டும் இருந்தது. தலையிலே பெரியகட்டுடன் கண்மூடியிருந்தாள் ரேஷ்மி. முள்ளந்தண்டிலும் அடிபட்டு இருந்ததால் அவள் படுத்திருந்த கட்டில் அவளுக்கு வாகாக சரிப்படுத்தப்பட்டிருந்தது.
கண்களால் தன் மனையாளை வருடியபடி அருகில் வந்தவன் அவள் தலையை தடவிக்கொடுத்தபடி ஷிமி என்று அழைக்க மூடிய இமைகளினுள் அவளது கருவிழி அசைவதை கண்டான் வினய். மெதுவாக தன் இமையிரண்டையும் பிரித்தவளது உதடுகளோ வினய் என்று உச்சரித்தது... சத்தம் எழாத போதிலும் அவளது இதழசைவு வினயின் உயிர்வரை ஊடுருவிச்சென்றது.
அவளது ஒரு கையினை மெதுவாக பிடித்தவன்
“ரொம்ப வலிக்கிதா ஷிமி..??” என்று வினவியவனின் வார்த்தைகளில் அத்தனை வலி.
“ஆமா வினய்.. இப்போ கொஞ்சம் முதல் வரை ரொம்ப வலித்தது.. ஆனா உங்களை பார்த்ததும் வலியெல்லாம் பறந்து போயிருச்சி...” என்று சிரிக்க முயன்றவளுக்கு வலியை மறைத்து சிரிக்கத் தெரியவில்லை.. அவளது முகபாவனையே அவளுக்கு வலிக்கிறதென்று காட்டிக்கொடுத்தது...
அவளது வேதனையை பொறுக்காதவன் “ஷிமி... நீ ஸ்ரெயின் பண்ணிக்காத... நீ நல்லா ரெஸ்ட் எடு... நாம பிறகு பேசிக்கலாம்...” என்று கூறிவிட்டு செல்லமுயன்றவனை தன் அடிப்பட்ட கையால் அவனை தடுத்தாள். அவளது தொடுகையின் அர்த்தம் புரிய அதுவரை நேரம் இவர்களது அன்பு பரிமாறலை கண்டு மனதில் மகிழ்ந்து கொண்டிருந்த வீரலட்சுமி ரேஷ்மியிடம் நலம்விசாரித்துவிட்டு அவர்களிருவருக்கும் தனிமையை ஏற்படுத்தி கொடுப்பதற்காக அறையிலிருந்து விரைந்து வெளியேறினார் வீரலட்சுமி.
அதுவரை வினயின் கையை விடாது பிடித்தபடி இருந்த ரேஷ்மி அவர் சென்றதும்
“வினய் இப்படி பக்கத்துல உட்காருங்களே... ப்ளீஸ்..” என்று கூற
“ஹேய்.. என்ன ஷிமி ப்ளீஸ்லா சொல்லிட்டு இருக்க. உட்காருனா உட்கார போறேன்..” என்றுரைத்துவிட்டு அவள் தலைமாட்டிற்கருகே உட்கார முயன்றவனை தன் முகத்திற்கு நேர அமரவைத்தாள்.
அவன் அமர்ந்ததும் அவனது கையை பிடித்தபடி எழ முயன்றவளை தடுத்த வினய்
“ஹேய் ஷிமி... எதுக்கு ஸ்ரெயின் பண்ணிக்கிற...ஆப்பரேஷன் பண்ண உடம்பு மா... இன்னும் காயம் எதுவும் சரியாக ஆறலைனு டாக்டர் சொல்லிருக்காங்க... இப்படி ஸ்ரெயின் பண்ணா பெயின் ரொம்ப அதிகமா இருக்கும்... என்ன வேணும்னு சொல்லு செய்றேன்.”
“வினய் உங்க கையை என் முகத்துகிட்ட கொண்டுவாங்க...” என்று கூற அதன்படியே செய்தான் வினய். எக்கி அவனது புறங்கையில் இதழ் பதித்தவள் “உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் வினய்... ஆக்சிடன்ட் நடந்து நான் அன்கான்சியஸ் ஆகும் நேரத்தில் கூட உங்களை பார்க்காமல் செத்துடுவேனோனு ரொம்ப பயந்துட்டேன்...” என்றவளின் வாயை தன் கரங்களால் அரணிட்டான் வினய்..
“வேணாம் ஷிமி.. அப்படி பேசாத... எனக்கு ஒரு மாதிரி பீல் ஆகுது... ஆக்சிடண்ட் பத்தி பேசாதமா ப்ளீஸ்...” என்றவனது கண்கள் கலங்கியதை ரேஷ்மி கண்டாள். தன்னவனை கஷ்டப்படுத்த விரும்பாதவள் பேச்சை திசை திருப்பினாள்.
“வினய் நீங்க சரியில்லை...” என்று ரேஷ்மி ஆரம்பிக்க அவளது பேச்சின் அர்த்தம் புரியாதவன் என்னவென்று பார்க்க
“பின்ன என்ன ரொம்ப நாள் கழித்து பொண்டாட்டியை பார்க்கிறோமே.... அவ ரொம்ப ஏங்கிபோயிருப்பாளே... அவளை நல்லபடியா கவனிக்கனும் அப்படீங்கிற பொறுப்பு இருக்கா உங்களுக்கு?? நீங்க ரொம்ப மோசம்... போனில் என்னமோ அப்படி கவனிப்பேன்... இப்படி கவனிப்பேன்... என்று டயலாக் பேச தான் நீங்க சரிப்படுவீங்க போல... இது தெரியாமல் நானும் உங்களை என்னவோனு நினைச்சிட்டேன்...” என்று போலியாக புலம்ப வினயோ சிரித்துவிட்டான்.
“கள்ளி... அடிப்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கோம்னு நினைப்பில்லாமல் என்னை சீண்டி பார்க்கிறியா பேபி.. சரி உன் ஆசையை ஏன் கெடுப்பான்... இரு இப்போ உன்னை நான் கவனிக்கிற கவனிப்புல நீ அப்படியே மெர்சலாகிருவ...”என்றபடி அவளது வதனத்தருகே சென்றவன் காயம் படாத அவனது இதழ்களை சிறை செய்தான்.
உடலாலும் மனதாலும் வலியால் அவதிபட்டவளுக்கு அந்த இதழொற்றல் நிவாரணியாகியது...
சிறிது நேரத்தில் விலகிய வினயிடம்
“உங்க தாடி ரொம்ப குத்துது வினய்... நீங்க சரியாக சேவ் பண்ணலையா???” என்று அவன் முகத்தை ஆராய்ந்தவள் அதிர்ந்துவிட்டாள்.
கண்களை சுற்றி கருவளையங்களும் நான்கு நாட்கள் சவரம் செய்யப்படாத தாடியும் சிவப்பேறிய கண்களுமாய் இருந்தவனை பார்த்தவளுக்கு அவனது அயர்ச்சி புரிந்தது. அதுவே அவனது நிலையை எண்ணி கவலைகொள்ளச் செய்தது. வினயை கட்டிலில் தலைவைத்து படுக்கக்கூறியவள் அவனது தலையை தடவிக்கொடுக்க அது தந்த சுகத்தில் தன்னையறியாமல் உறங்கிவிட்டான் வினய். அவனுடனேயே மருந்து தந்த அயர்ச்சியில் ரேஷ்மியும் உறங்கிவிட்டாள்.
வினயை அழைப்பதற்காக வந்த வீரலட்சுமிக்கு இந்த காட்சி மனநிறைவை தந்தது. தனக்கு பின் தன் மகனுக்கு சரியான துணையொன்று கிடைத்ததை எண்ணி அந்த தாயுள்ளம் மகிழ்ந்தது. இருரையும் தொல்லை செய்ய விரும்பாதவர் நர்சிடம் சொல்லிவிட்டு அபியுடன் வீடு திரும்பினார்.
இரண்டு கிழமைகள் ஆஸ்பிடல் வாசம் முடித்துவிட்டு அன்று தான் வீடு திரும்பினாள் ரேஷ்மி. முதுகுத்தண்டில் அடிப்பட்டிருப்பதால் ஒரு மாதம் கம்ப்ளீட் பெட் ரெஸ்டில் இருக்கவேண்டுமென டாக்டர் அறிவுறித்தியிருந்தார். ஆதலால் வீட்டிற்கு அழைத்து வந்த ரேஷ்மியை கைகளில் தாங்கிச்சென்று படுக்கையில் படுக்க வைத்தான் வினய். அவளுக்கு ஏதுவாக படுக்கையை ஒழுங்கு செய்தவன் அவள் குடிப்பதற்கு ஜூஸ் எடுத்துவந்தான். அவன் கொண்டுவந்த ஜூஸை குடித்தவள் அவனிடம் கப்பை நீட்ட அதை வாங்கிக்கொண்டு செல்லமுயன்றவனிடம்
“சாரி வினய்..” என்று மன்னிப்பு கோற மீண்டும் அவளருகே அமர்ந்தவன்
“எதுக்குமா சாரி.. ?? அப்படி என்குட்டிமா என்ன தப்பு பண்ணாங்க??”
“உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல...”
“யாரு சொன்னா??? அதெல்லாம் ஒன்றும் இல்லை.. என் பேபிமா என்னை எப்பவும் கஷ்டப்படுத்தமாட்டாங்க...”
“இல்லை வினய்... என்னை பார்த்து பார்த்து கவனிச்சிக்கிறது எனக்கு ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபுறம் என்னால நீங்க ரொம்ப கஷ்டப்படுறீங்களோனு தோனுது... இந்த மூன்று வாரங்களா நீங்க எப்படி இருக்கீங்கனு நான் பார்த்துட்டு தான் இருக்கேன்... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு வினய்..”
“ஹேய் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைமா..”
“இல்லை வினய் நீங்க என்னதான் சொன்னாலும் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு..”
“சரி இந்த கேள்விக்கு பதில் சொல்லு.. எனக்கு இப்படி ஆகியிருந்தா நீ என்னை பார்த்துப்பியா மாட்டியா??”
“வினய் எதுக்கு எப்படி பேசுறீங்க..”
“ஹேய்... ஷிமி...நெருப்புனா வாய் சுட்டுடாதுமா... நான் கேட்டதுக்கு பதிலை சொல்லு...”
“நிச்சயமா பக்கத்தில் இருந்து பார்த்துப்பேன்..”
“ஹா.. பார்த்தியா அதே மாதிரி தான் நானும்... உனக்கு அடிப்பட்டிருக்கு..நான் பார்த்துக்கிறேன்... அவ்வளவு தான்..” என்றவனை தன் ஒரு கையால் அணைத்துக்கொண்டாள் ரேஷ்மி...
அவளது உணர்வுகள் புரிந்தவனும் அவளை அணைத்துக்கொண்டான்.
சிறிது நேரத்தில் வினயின் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு விலகியவளை கண்ணிமைக்காமல் பார்த்திருந்தான் வினய்.
அவனது பார்வை மாற்றத்தை கண்டவள் சிரித்தபடியே
“என்னடா புருஷா.. உன் பார்வையே ஒரு மார்க்கமா இருக்கு...??”
“இது நீ தானானு எனக்கு டவுட்டாவே இருக்கு... ஷிமி....”
“ஏன் வினய் உங்களுக்கு இப்ப இப்படியொரு டவுட்டு???”
“பின்ன என்னமா... லவ்வுனாலே கொல காண்டுல சுத்திட்டு இருந்த இப்போ தாறுமாறா லவ் பண்றேன் பேர்வழினு ரகளை பண்ணா யாருக்குனாலும் டவுட்டு வரத்தானேமா செய்யும்...” என்று கேலி செய்தவனை
“ஓ அப்போ லவ் பண்ணுறேனு நான் செய்றது உங்களுக்கு ரகளையா தான் தெரியிதா???”
“அப்படியில்லை ஷிமி.. நான் என்ன சொல்ல வந்தேன்னா..”
“நீங்க எதுவும் சொல்ல வேணாம்...நீங்க இப்போ சொன்னதே எனக்கு ரொம்ப நல்லா புரிஞ்சிது....” என்று முறுக்கிக்கொள்ள வினயோ மைண்ட் வாய்சில்
“டேய் கவின் உனக்கு வாயில தான்டா சனி... சும்மா இருந்தவளை இப்படி உசிப்பிவிட்டுட்டேனே... இப்போ இதுக்கு எப்படி வச்சி செய்வானு தெரியலையே..”
“ஆமா வச்சி செய்யதான் போறேன்...” என்று வினயின் கேள்விக்கு ரேஷ்மி பதில் சொல்ல திருதிருவென முழித்தான் வினய்...
“ஹேய் ஷிமி நான் பேசுனது உனக்கு கேட்டுச்சா???”
“ஆமா..” என்றுவிட்டு ரேஷ்மி தனக்குள் சிரிக்க
“நீ பொய் சொல்லுற..”
“எனக்கு பொய் சொல்லுறு புடிக்காதுனு உங்களுக்கு நல்லா தெரியும்..”
“சரி... எங்கே அப்போ நான் என்ன நினைச்சேனு சொல்லு...” என்று கேட்டவனிடம் அவன் நினைத்ததை ரேஷ்மி கூற அதிர்ந்துவிட்டான் வினய்..
“ஹேய் ஷிமி உனக்கு எப்படி நான் நினைத்தது தெரியும்...???”
“நான் சைக்காலஜி ஸ்டூடண்ட்னு உங்களுக்கு நியாபகம் இருக்கா...??”
“அதுக்கும் இதுக்கும் என்னமா சம்பந்தம்...”
“எனக்கு மைண்ட் ரீடிங் கொஞ்சம் தெரியும்...” என்று கூற
“ என்னது மைண்ட் ரீடிங்கா...”
“ஆமா... எல்லாரோட மைண்டையும் ரீட் பண்ண முடியாது... எனக்கு ரொம்ப நெருக்கமானவங்களோட மைண்டை ரீட் பண்ணிருவேன்... வெளியாட்களை பற்றி நல்லா தெரிஞ்சா அவங்களோட மைண்டையும் ரீட் பண்ண முடியும்... சிறுவயதிலேயே மற்றவங்க முகத்தை வைத்து கெஸ் பண்ணுற அபிலிடி என்கிட்ட இருந்தது... அது தெரிஞ்சிக்கிட்ட என்னோட அம்மா என்னை சைக்கோலஜி படிக்க சொன்னாங்க... எனக்கும் அதுல இன்ட்ரெஸ்ட் இருந்ததால அதையே படிச்சேன்.. அதோடு வீக்கொண்ட் சைல்ட் சைக்காலஜி டிப்ளோமா, பேசிக் கவுன்சிலிங் டிப்ளோமானு என்னோட சிகில்ஸை இவோல் பண்ணிக்கிட்டேன்.. அதான் உங்க மைண்ட் வாயிசை என்னால் சரியாக கேட்ச் பண்ண முடிந்தது..”
“அப்போ இவ்வளவு நாள் நான் நினைத்தது எல்லாம் தெரியுமா???”
“ஆமா..நீங்க என்னை அவாய்ட் பண்ணுறதுக்காக தான் யூ.எஸ் போனீங்கனு கூட தெரியும்....” என்று ரேஷ்மி புதுத்தகவலை கூற மேலும் அதிர்ந்தான் வினய்....
“சாரி ரேஷ்மி.. நான் பண்ணது தப்புதான்... ஆனா எனக்குள்ள ஒரு பயம்.. எங்க உன்னை ஹர்ட் பண்ணிருவேனோனு பயம்... அதோடு தூரமாகும்போது அன்பு அதிகமாகும்னு சொல்லுவாங்க... அதான் அப்படி பண்ணேன்மா...”
“கூல் வினய்... உங்க நிலை எனக்கு புரியிது... எனக்கும் அது தான் சரினு தோன்றியது... அதான் உங்களை போக அனுமதிச்சேன்... இல்லைனா பஞ்சாயத்தை கூட்டிருக்க மாட்டேன்...” என்று சிரித்தவளை கண்ணிமைக்காமல் பார்த்திருந்தான் வினய்...
“வினய் இவ்வளவு நாள் உங்களை சுத்தலில் விட்டதுக்கான காரணம் என்னான்னு கண்டுபிடிச்சிட்டீங்களா???”
“ஆமா ஷிமி... நீ ஆஸ்பிடலில் இருக்கும் போது அண்ணா சொன்னான்... மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு... ரொம்ப சிலியான விஷயத்துக்கு அவங்க அப்படி பண்ணியிருக்ககூடாது... ஆனா காதல்னு வரும்போது அது எப்படி ஒருத்தரோட எண்ணத்தை மாற்றும்னு யாராலும் சொல்லமுடியாது... அவங்க நிலையில் இருந்து பார்த்தா அது சரியா தோன்றியிருக்கலாம்...” என்று வினய் கூற மெதுவாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் ரேஷ்மி...
“என்ன பேபி பீல் ஆகிடுச்சா... சரி இந்த டாபிக்கை விடு...நாம வேற பேசலாம்..” என்றுவிட்டு வேறு கதை பேசினர் இருவரும்...

நெருப்பினால் நனைந்திடுவேனா
உன் அணைப்பினில் எறிந்திடுவேனா
சிறகுகள் விரித்திடுவேனா
அந்த வானில் காதல் புரிய
பாலில் விழும் தேனை போல
காற்றில் விழும் ஓசை போல
நீரில் விழும் வண்ணம் போல
நீ என்னுள் விழுந்துவிடு
இதுவரை வழி தாங்குவேன்
உன் ஆண்மையை நான் கேள்வி கேட்க
விடை அளித்திட போகிறாய்
நீ கூறினால் என்னாகுவேன்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top