• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன்னாலே உனதானேன் 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anu Chandran

மண்டலாதிபதி
Joined
Jun 1, 2019
Messages
226
Reaction score
697
Location
Srilanka
ஹாய் மக்காஸ்....?
இதோ அடுத்த யூடியுடன் வந்துட்டேன்......
படிச்சுட்டு கருத்து சொல்லுங்கோ.....✌✌
போன எபிக்கு லைக் என்ட் கமென்ட் பண்ண அனைத்து நல்ல உள்ளத்துக்கும் நன்றி.....??
images (71).jpeg
5

ரேஷ்மியின் பெற்றோர் இறந்து அன்றோடு ஒரு வாரமாகிவிட்டது...
அவர்கள் இறந்த செய்தி கேள்விபட்டதும் ரேஷ்மியின் சித்தப்பாவும் வினயும் பிரேதங்களை வேண்டிய சட்டதிட்டங்களை நிறைவேற்றி வீட்டிற்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்..

வினயின் அன்னை வீரலட்சுமி ரேஷ்மியின் சித்தியுடன் தொடர்பு கொண்டு ரேஷ்மியின் தாய்வீட்டினை அதற்குரியபடி ஒழுங்கு செய்தனர்...
ரேஷ்மியின் நிலையறிந்து அவளுக்கு வினயின் தங்கை க்ருதிக்காவை துணையாக இருத்திவிட்டு வந்திருந்தார் வீரலட்சுமி....

விபத்தின் காரணமாக பிரேதங்களை பெற்றுக்கொள்ள ஒரு நாள் எடுத்தது... மறுநாள் வந்த பிரேதங்களை வரவேற்றது ரேஷ்மியின் ஓலக்குரல்....
அவளது கதறல் அங்கிருந்த அனைவரையும் உலுக்கிவிட்டது...

எப்போதும் தன் உணர்வுகளை வெளிப்படுத்துக்கொள்ளாத ரேஷ்மி தன் ஜீவனே பிரிந்த வேதனையில் கதறியது அங்கிருந்த அனைவரின் மனதையும் உலுக்கியது...
அதில் பெரிதும் பாதிக்கப்பட்டவன் வினயே.... தன் கண் முன் கண்ட தன்னவளின் அழுகையும் கதறலும் அவனை நிலை கொள்ளாமல் தவிக்கச் செய்தது... பிறப்பும் இறப்பும் மனிதனை மீறிய சக்திகள் என்று உணர்ந்த போதிலும் தன்னவள் துயரம் துடைக்க முடியாத தன் இயலாமையை எண்ணி நொந்தான்.... மூடத்தனம் என்று மூளை அறிந்த போதும் மனம் வருந்துவதை அவனால் தடுக்கமுடியவில்லை.....

ரேஷ்மியின் உறவினர்கள் அனைவரும் அவளைச்சுற்றி இருந்ததால் ஆறுதல் கூட சொல்ல முடியாத நிலையில் இருந்தான் ...

அவனை அச்சமூட்டிய இன்னொரு விடயம் அவளது உடல்நிலை மற்றும் மனநிலை.... தான் தாய் தந்தையர் இறந்த செய்தி அறிந்ததும் அவள் நடந்து கொண்ட விதமே அவனது பயத்திற்கு காரணம்... அதற்கு இன்னும் வலு சேர்க்கும் முகமாக பிரேதங்களை கொண்டுவரும் போது கதறியவள் அதற்கு பின் அமைதியாகிவிட்டாள்... பிரேதங்களை அடக்கம் செய்ய எடுத்துச்செல்லும் போதும் அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை...

ஒருவாரமாக தன் தாய்வீட்டிலே இருந்தவள் ஒரு உணர்வையும் பிரதிபலிக்கவில்லை.... தன் அன்னையின் ஆலோசனைக்கமைய வினயும் அங்கேயே ஒரு வாரமும் தங்கினான்...
மூன்று நாட்களுக்கு பின் உறவினர்கள் அனைவரும் சென்றுவிட ரேஷ்மியின் சித்தப்பா குடும்பம் மட்டும் அங்கு தங்கியிருந்தது...
அங்கிருந்த ஒரு வாரமும் ரேஷ்மி ரோஜாப்பூ மாலை தாங்கி நின்ற தன் பெற்றோர் படத்தின் முன் வீற்றிருந்தாள்....

இரண்டு நாட்கள் இது தொடரவே அவளை சகஜ நிலையடையச்செய்ய அவளது சித்தி வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தினார்... வினயிற்கு உணவு என்று அனைத்தையும் ரேஷ்மியையே செய்ய வைத்தார்... ஆனாலும் வேலைகளை ஒரு இயந்திரக்கதியுடன் செய்து முடிப்பவள் மீண்டும் தன் பெற்றோர் படத்தின் முன் அமர்ந்துவிடுவாள்... அப்படி அமர்பவள் அந்த படத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருப்பாள்... அந்த சந்தர்ப்பத்தில் யார் வந்து அழைத்தாலும் அவளது காதில் விழாது... இரவிலும் கணவனின் தேவைகளை கவனித்துவிட்டு அந்த படத்தை பார்த்துக்கொண்டே தரையில் படுத்துவிடுவாள்... அவளை தேடுக்கொண்டு வரும் வினய் அவளது நிலை கண்டு கலங்கிப்போவான்...

பெற்றோரை இழப்பது எந்தவொரு மனிதனுக்கும் ஒரு பெரிய இழப்புதான்.... அதுவும் ஒருசேர இருவரையும் இழப்பது கொடுமையான தண்டனை.... ஆனால் அதே சோகத்தில் உழன்று தன் நலத்தை கெடுப்பது எவ்விதத்தில் நியாயம்?? இல்லாதவர்களுக்காக வருந்தி இருப்பவர்களை துன்பப்படுத்துவதில் என்ன பயன்??? இதை எவ்வாறு அவளுக்கு புரியவைப்பது??? அவன் புரிய வைக்க முயன்ற சந்தர்ப்பங்களை எண்ணிப்பார்த்தான் வினய்...

அன்று வேலை முடிந்து வந்ததும் தன் பெற்றோர் படத்தின் முன் அமர்ந்திருந்த ரேஷ்மியின் அருகில் சென்றான் வினய்..

“ஷிமி..” என்று வினய் அழைக்க அவளிடம் பதிலில்லாமல் போக அவளது தோளில் கை வைத்தான்...அதில் சிந்தனை கலைந்தவள்

“வாங்க வினய்.... நீங்க ப்ரெஷ் ஆகிட்டு வாங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்...” என்றவாறு எழும்பியவளை கைபிடித்து தடுத்தவன்

“ஷிமி நான் உன்கூட பேசனும்... கொஞ்சம் ரூமிற்கு வா...” என்றுவிட்டு முன் செல்ல அவனை பின்தொடர்ந்தாள் ரேஷ்மி...

அறையினுள் சென்றதும் கதவை அடைத்துவிட்டு பேசத்தொடங்கினான் வினய்..

“ஏன் ஷிமி இப்படி இருக்க??? இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இப்படியே இருக்கப்போற??? அத்தை மாமாவோட மறைவு உனக்கு ஆற்ற முடியாத துன்பம் தான்.... ஆனா அதையே நினைத்துக்கொண்டு இருப்பதால் நடந்தது எதுவும் மாறப்போவதில்லை... நீ உன்னை இதில் இருந்து மீட்டு எடுக்கனும் ஷிமி... உனக்காக நான் இருக்கேன்.....எப்பவும் இருப்பேன்... உனக்கு எல்லா விதத்திலும் சப்போர்ட்டா இருப்பேன்.... இதில் இருந்து நீ வெளிய வரனும் ஷிமி...

எனக்காக ஷிமி..ப்ளீஸ்...நிதர்சனத்தை புரிந்துக்கொள்..” என்று அவன் கூறிய போதும் அவளிடம் எந்த மாற்றமும் இல்லை... அவன் பேசிமுடிந்ததும் கதவை திறந்துக்கொண்டு வெளியே சென்று விட்டாள் ரேஷ்மி....

அந்த நிகழ்வை நினைத்தவனுக்கு அவளது நடவடிக்கைகள் ஒரு வித பயத்தை தோற்றுவித்தது... அவளை எவ்வாறு தேற்றுவது என்று தெரியாது தவித்தான்...

அந்த சம்பவத்தின் பின் அவளை நெருங்க முடியாத படி அவனை ஒதுக்கினாள் ரேஷ்மி... அதில் இன்னும் நொந்து போனவன் அவளை இங்கிருந்து தம் வீட்டிற்கு அழைத்து சென்றாலே அவளை தேற்ற முடியும் என்று எண்ணி தன் அன்னைக்கு அழைத்து விவரம் கூறினான் வினய்...
அவரும் தான் வந்து அழைத்து செல்வதாக கூறியவர் அந்த வார இறுதியில் ரேஷ்மியின் வீட்டிற்கு வந்தார்... வந்ததும் ரேஷ்மியின் சித்தி மற்றும் சித்தப்பாவிடம் கூறிவிட்டு ரேஷ்மி அழைத்து வருமாறு வினயிடம் கூறினார் வீரலட்சுமி...
வினய் அழைத்ததும் அவனுடன் வர மறுத்துவிட்டாள் ரேஷ்மி...

“இல்லை வினய் நான் வரவில்லை... நீங்க போங்க...நான் இங்கு அம்மா அப்பாவோட இருக்கப்போறேன்.... அவங்க சாகவில்லை.. அவங்க இன்னும் இங்கு தான் இருக்காங்க.... நான் அவங்களோடு தான் இருக்க போறேன்... நான் அவங்களை விட்டுட்டு வந்ததால தான் அவங்களுக்கு ஆக்சிடன்ட ஆனது... மறுபடியும் அவங்க என்னை விட்டு போக விடமாட்டேன்... நான் இங்கு தான் இருக்க போறேன்...என்னை இப்படியே விட்டுருங்க....நான் வரலை...”

“ஷிமி நீ புரிந்துதான் பேசுறியா??? அத்தையும் மாமாவும் நம்மை விட்டுட்டு போயிட்டாங்க... அதை புரிந்துகொள்... அவங்க இங்க நம்ம கூட இல்லைமா... புரிந்துகோ ஷிமி... நாம நம்ம வீட்டுக்கு போகலாம் ஷிமி... வா... “ என்று அவள் கை பற்றி அழைக்க அவனது கையை உதறியவள்

“இல்லை... நான் வரமாட்டேன்.... நான் இங்கே தான் இருப்பேன்... என் அம்மா அப்பா கூட .... அவங்களை விட்டு நான் எங்கேயும் வரமாட்டேன்.... என்னை விட்ருங்க.... நான் வரலை...” என்று சத்தமிட்டவளின் குரல் கேட்டு வீரலட்சுமி, மற்றும் ரேஷ்மியின் சித்தப்பா குடும்பத்தினர் அனைவரும் வந்துவிட்டனர்...

அவர்களை கண்டதும் கதறி அழுதவள் அங்கேயே மயங்கிவிட்டாள்... அதில் பதறியவன் அவளை மடிதாங்க ரேஷ்மியின் சித்தி தண்ணீர் எடுத்துவந்தார்...
தண்ணீர் தெளித்தும் ரேஷ்மிக்கு மயக்கம் தெளியாது இருக்க விரைந்து அவளை தன் காரில் ஆஸ்பிடலுக்கு அழைத்து சென்றான் வினய்.... அவனுடன் துணைக்கு சென்றார் வீரலட்சுமி...

அருகிலிருந்து வைத்தியசாலையில் அவளை அனுமதித்தவர்கள் வைத்தியரின் வார்த்தைகளுக்காக காத்திருந்தனர்....
ரேஷ்மியை பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர்

“அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க... அதான் இந்த மயக்கம்... அதோடு பீ.பி யும் ரொம்ப லோவா இருக்கு.... அவங்க ரொம்ப டிப்ரெஷனில் இருப்பது போல் இருக்கு.... கவுன்சிலிங் கொடுப்பது நல்லதுனு தோனுது....குளுக்கோஸ் ஏறிட்டு இருக்கு... ஒரு டூ டேஸ் அவங்க ஆப்சர்வேஷனில் இருக்கட்டும்.... பிறகு டிஸ்சார்ஜ் பண்ணிரலாம்... அப்புறம் நான் ஒரு சைக்காட்டீஸ்டை ரெகமண்ட் பண்ணுறேன்... அவங்களை போய் பாருங்க... அவங்க உங்க வைப்பின் மென்டல் ஹெல்த்தை அனெலைஸ் பண்ணி ட்ரீட்மண்ட் தருவாங்க....அவங்களுக்கு வேறு எந்த ப்ராப்ளமும் இல்லை...நீங்க இப்போ அவங்களை போய் பாருங்க.....” என்றுவிட்டு வைத்தியர் நகர அவருக்கு நன்றி உரைத்துவிட்டு வினயும் வீரலட்சுமியும் ரேஷ்மியை பார்க்க அறைக்குள் சென்றனர்...

அங்கு அறையினுள் சென்ற வினய் ரேஷ்மியின் அருகில் சென்று அவளது தலையை வருடிக்கொடுக்க மறுபுறம் சென்று நின்றார் வீரலட்சுமி...
தலையை வருடியவன் கைகள் நடுக்கத்தை தத்தெடுத்திருந்தது... அவளது வேதனை அவளை இந்தளவு பலவீனப்படுத்தும் என்று அவன் நினைக்கவில்லை.... இந்த இரு மாதங்களில் அவளது சிரிப்பினை மட்டுமே கண்டவனுக்கு அவளது அழுகையும் அவளது அரற்றல்களும் சொல்லொண்ணா வேதனையை உண்டாக்கியது...

இவற்றைவிட அவனது துயரை அதிகப்படுத்தியது ரேஷ்மி அவள் பெற்றோர் மட்டுமே போதும் என்று கூறி அவனை புறம் தள்ளியது.. அவள் வேதனையின் உச்சகட்டத்தில் கூறிய வார்த்தைகள் என்ற போதும் காதலை தாங்கி நின்ற அவன் உள்ளம் அவளது வார்த்தைகளை எண்ணி நொந்தது....

இந்த இரண்டு மாதங்களில் அவள் தன் காதலை கொஞ்சம் கூடவா உணரவில்லை என்று வருந்தியது.... ஆனால் அவன் உணராத விடயம் இருபத்தியிரண்டு வருட அன்பிற்கு முன் இரண்டு மாத கால வாழ்க்கை ஈடுகொடுக்க முடியாது என்பதே...
ஆனால் காதல் கொண்ட நெஞ்சம் எந்த சமாதானத்தையும் ஏற்பதாக இல்லை.. இவ்வாறு அவன் சிந்தனை ஓடிய வண்ணம் இருக்க அதனை கலைத்தது வீரலட்சுமியின் குரல்..

“கவின் அம்மா வீட்டு போய் உங்களுக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வர்றேன்... நீ ரேஷ்மி சித்தப்பாவிற்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லிரு...நான் கிளம்புறேன்...” என்றுவிட்டு கிளம்பினார் வீரலட்சுமி...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top