உன்னால உலகம் அழகாச்சே 5

Nachuannam

Author
Author
SM Exclusive Author
#1
நான் வந்துட்டேன் லட்டூஸ்... இந்த எபி கொஞ்சம் சின்ன எபினு நினைக்கிறேன்... எனக்கு கொஞ்சம் டைட் வொர்க்.. அதனாலதான் டைப் பண்ண முடியல😒😒.. மன்னிச்சு😉😉... போன எபிக்கு லைக் அண்ட் கமென்ட் பண்ண எல்லாருக்கும் பெரிய சாக்கி🍫🍫...
இந்த எபியும் படிச்சிட்டு மறக்காம உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்க... கருத்துக்களை எதிர்நோக்கி நான் 😉😉...
Also thanks for silent readers...

"ஹே!அமுலுஸ் குட்மார்னிங்…-அனு"

"வாடி நல்லவலே! என்ன அதிசயமா பத்து ஆகுறதுக்கு பத்து நிமிசம் முன்னாடியே வந்துட்ட….எப்பவும் கரைக்ட்டா டேன் ஓ கிளாக் தானே காலேஜ்குள்ள கால தூக்கி வைப்ப-அபி"

"அது ஒன்னும் இல்லடி தங்கம்…உங்களையேல்லாம் ரெண்டு நாள் பார்கலைல….யேன் கண்ணுக்குள்ளே இருந்திங்க…அதான்…-அனு"

"நெஞ்சு வலியே வந்துரும் போல இப்படி எல்லாம் பொய் சொல்லாத… உண்மைய சொல்லு உங்க அம்மா நீ வீட்லயிருந்தது போதும்னு சொல்லி துரத்தி விட்டாங்க தானே…-கலை"

"இஇஇஇ…கரெக்டா சொல்லிட்டடா அமுலு..ரெண்டு நாள் வீட்ல இருந்ததுக்கே ரொம்ப அவங்கள டார்ச்சர் பண்ணிட்டேன்னு ஒரு பொய் குற்றச்சாட்டை என் மேல வச்சு எங்க அப்பா கூட பத்த்த்துதுது நிமிஷத்துக்கு முன்னாடியே அனுப்பிவிட்டாங்க…-அனு"


"எது பொய் குற்றச்சாட்டா.. அது உண்மைனு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்! அப்புறம் என்ன இப்படி ஒரு டயலாக்கு-ஆனந்தி"


"சரி போதும் விடுங்கடி!என் மானத்த வாங்குறதுல அப்படி ஒரு ஆனந்தம் உங்களுக்கு எல்லாம்…


அதெல்லாம் இருக்கட்டும் இன்னிக்கி ஃபர்ஸ்ட் பீரியடு என்னடி-அனு"

"சாப்ட்வேர் இன்ஜினியரிங் நம்ம குப்புசாமி சார் கிளாஸ்-அபி"

"ஐயோ குப்பு கிளாஸ்ஸா! சாப்ட்வேர் இன்ஜினியரிங்கும் வேற வேற பெயர்ல மூனு செமஸ்டர்ரா வருது..


அது பேரு மாறி வந்தாலும் நம்ம குப்பு மூனே example வச்சு மூனு செமஸ்டரையும் ஓட்டுராரு…சத்தியமா பர்ஸ்ட் கிளாஸ்சே அவரோடது கவனிக்க முடியாது..அதனால எல்லாரும் கேன்டீன் போகலாம்டி...-அனு"


"லூசாடி நீ!மொத்தமா ஏழு பேரும் காணாம போனா…அந்த மனுசன் என்ன நினைப்பாரு...-சரண்"


"ஹான்…ஏழும் எங்கோ ஊர் சுத்த போயிடுச்சுனு நினைப்பாரு…ரொம்ப பேசாம வாடி..-அனு"


"வேண்டாம் அமுலு! ஃபர்ஸ்ட் கிளாஸ்சே பர்ஸ்ட் ரெண்டு பெஞ்சுல யாரும் இல்லனா தப்பாகிடும்…யாராது நாலு பேர் போலாம்…மீத மூனு பேர் இங்க இருக்கட்டும்-சரண்"


"சரண் சொல்லுறது கரைக்ட் தான்டி…நீ,அபி,கலை,ஆனந்தி போய்ட்டு வாங்க…நாங்க மூனு பேர் இங்க இருக்கோம்-நித்யா"

"சரி என்னத்தையோ பண்ணுங்க…நாங்க ஒரு ஹாவ்வனார் கழிச்சு வரோம்-அனு"

ஆனா அனுக்கு தெரியாது இன்னிக்கு ஃபர்ஸ்ட் கிளாஸ் அருள் நடத்துரான்னு…குப்புசாமி சார் லீவ்னு….கேன்டீன்ல அரட்டை கச்சேரிய முடிச்சிட்டு கிளாஸ்க்கு வந்தா அருள் அங்க ஸ்டூடண்ட்ச செமினார் எடுக்க சொல்லி நின்னு கவனிச்சுட்டு இருந்தான்.


"போச்சு எரும மாடு அருள் சார் க்ளாஸ் எடுத்துட்டு இருக்காரு…உன் பேச்சை கேட்டு கேன்டீன் வந்தோம் இல்ல எங்களை சொல்லணும்டி-கலை"

"உன்ன நானாடி வருந்தி வருந்தி கூப்பிட்டேன்.. நீயா தானே டீ குடிக்கிற ஆசையில கேன்டீனுக்கு வந்த… இப்ப என்னத்துக்கு என்ன மட்டும் சொல்ற…-அனு"


"அடச்சீ லூசுகளா உங்க சண்டைய நிப்பாட்டுங்க! இப்ப கிளாஸ்குள்ள போலாம் வாங்க…-அபி"

“மே ஐ கம் இன் சார்”னு அபி, கலை,ஆனந்தி கேட்க அனு மட்டும் கடைசியா நின்னதால கேட்கல…
எல்லாரையும் உள்ள வர சொன்ன அருள்.. அனு அவன கிராஸ் பண்ணும் போது மட்டும் அவ காதுல கேக்குற மாதிரி மே ஐ கம்மின்னு கேட்கணும்ங்கிற மேனர்ஸ் இல்லையான்னு கேட்டுட்டான்…அதுக்கு பதில் சொல்ல அனு நினைச்சாலும்…எல்லாரும் அவுங்களே பார்கிறத பார்த்து போய் உட்கார்ந்திட்டா…

கிளாஸ் முடிஞ்சு அருள் கிளம்பினதுக்கு அப்புறம் தான்…அனுவுக்கு குப்புசாமி சார் அட்டனன்ஸ் சைன் வாங்கலைன்னு ஞாபகம் வந்துச்சு. ஏன்னா சாரோட அட்டனன்ஸ் எப்பயும் அனு கிட்ட தான் இருக்கும். கிளாஸ் டைம்ல அட்டனன்ஸ் போட்டுட்டு திருப்பி கொடுத்துடுவார்..

சைன் வாங்க ஸ்டாப் ரூம் போனா அங்க அருள் மட்டும் தான் இருந்தான்.


அட்டனன்ஸ் சைன் பண்ணாம வந்துட்டீங்க அப்படின்னு சொல்லி அட்டனன்ஸ்ஸ அருள் கிட்ட குடுத்தா…


தாங்கனு சொல்லி சைன் பண்ணி அருள் கொடுத்ததுக்கு அப்புறம்…


"அப்புறம் நீங்க மே ஐ கம் இன் கேட்கலைன்னு சொன்னிங்க… என் டிக்ஷனரியில் உங்ககிட்ட மே ஐ கம்மின்னு (may I come in) கேட்கணும்னா ஐ லவ் யூ ன்னு அர்த்தம்.. எல்லாருக்கும் நேர கேட்கலாமா…"


"ஹே லூசா நீ!படிக்கிற வயசுல என்ன லவ் உனக்கு…இப்டி தான் எல்லார்கிட்டயும் லவ் சொல்லிட்டு இருக்கியா…கொஞ்சம் கூட அறிவுங்கிறதே இல்ல… irresponsible idiot…படிச்சு முடிச்சு வேலைக்கு போய் உங்க அப்பா அம்மாக்கு பெரும சேர்க்க பாரு…"


"போதும் நிப்பாட்டுயா…அந்த பெரும பொறும எல்லாம் எங்களுக்கு தெரியும்…நீ ஒன்னும் சொல்லனும்ங்கிறது இல்ல…அப்புறம் என்ன சொன்ன🤔🤔…எல்லார்கிட்டையும் லவ் சொல்லிட்டு இருக்கேன்னா…நா எத்தன பேருக்கு சொல்லி நீ பார்த்த…சும்மா தெரிஞ்ச மாதிரி சொன்ன கண்ண நொண்டிடுவேன்…நான் முதல்ல லவ் சொன்னதும் உனக்கு தான்…முடிவ்வா சொல்லுறதும் உனக்கு மட்டும் தான்…நானும் இந்த ஒரு மாசம்மா உங்க பின்னாடி தான் சுத்துரேன்னு உங்களுக்கும் தெரியும்…அப்புறம் எதுக்கு என்ன ஹர்ட் பண்ற மாதிரியே பேசுற…"


"இது லவ் கிடையாது.. infatuation…அத முதல்ல புரிஞ்சிக்கோ…படிக்கிற வயசுல வரதுலாம் லவ்வே இல்ல…இது தெரியாம...இது தான் லவ்வுனு நினைச்சு உங்க வாழ்கையவே கெடுத்துக்குறிங்க…அப்புறம் ஐயோ அம்மானு சொன்னாலும் வாழ்க்கை இன்னொரு சான்ஸ் குடுக்காது…"


"அது சான்ஸ் குடுக்குதோ இல்லயோ…நீ குடுப்பியா மாட்டியா…"


"ஹே பொண்ணா நீ! இவ்வளவு நேரம் என்ன சொல்லிட்டு இருக்கேன்…நீ திருப்பியும் அதே கேட்குற…"


"ஆமாயா!நான் பொண்ணு இல்ல பைய்யன்னு சொன்னா என்ன பண்ண போற…ஆனா நீ சொல்லுறதும் உண்ம தான்…படிக்கிற வயசுல்ல லவ் வேண்டாம்கிறது…பட் என் படிப்பு முடிய இன்னும் நாலு மாசம் தான் இருக்கு…அதுக்கு அப்புறம் நா வந்து லவ் சொன்னா ஏதுக்குவியா…"


"சான்ஸ்சே இல்ல!உன்னலாம் திருத்தவே முடியாது…"


"என்ன பெத்த தேவியாலே என்ன இன்ன வரைக்கும் திருத்த முடியல…அதுனால நீ என்ன தேவ இல்லாம திருத்த முயர்ச்சி பண்ணி டையர்ட் ஆகிடாத…"


"பொண்ணு மாதிரி ஃபர்ஸ்ட் நடந்துக்கோ…அப்புறம் சார்க்கு கொஞ்சம் மரியாத குடுக்க கத்துக்கோ…"


"இதுவே ஒரு பையன் பொண்ணு பின்னாடி அலஞ்சு…லவ் சொல்ல வச்சிருந்தா அது கரைக்ட்…அதுவே ஒரு பொண்ணு பண்ணா தப்பு…என்ன லாஜிக் யா உங்களோடது…சூப்பர்…ஆனா நீ கொஞ்சம் வேற மாதிரினு நினைச்சேன்….ஆனா அப்டிலாம் இல்லனு சொல்லுற…அப்புறம் என்ன சொன்ன…சார்க்கு மரியாத குடுன்னா…நா எல்லா சாருக்கும் மரியாத கொடுத்து தான் பேசுவேன்…உன்கிட்ட பேசும் போது மட்டும் தான் இப்டி வந்துடுது…"


இதுக்கு மேலயும் இரண்டு பேரும் என்ன பேசிருப்பாங்களோ…அதுக்குள்ளயும் ஸ்டாப் ரூம்முக்கு இன்னோரு சார் வந்துட்டாரு…அவரா வந்தாரா இல்ல கியூபிட் நீங்க ரெண்டு பேரும் பேசின வரைக்கும் போதும்…இல்ல இல்ல சண்ட போட்ட வரைக்கும் போதும்னு அனுப்பி விட்டுச்சானு தெரியல…
 
Last edited:

Nachuannam

Author
Author
SM Exclusive Author
#8
Nice epi 😍 sis🌹 ஆனா எனக்கு ஒரு டவுட்டு 🤔அனு love மட்டும் தான பன்னா பிரபோஸ் எப்போ பன்னா🤔 ஒரே குழப்பமா இருக்கே😇😇
பிரபோஸ் பன்னிட்டா கா...அது சஸ்பென்ஸ்... நெக்ஸ்ட் எபில சொல்லுரேன்😉😉....இந்த எபிலே சொல்லிடலான்னு பார்த்தேன்... பட் டைப் பன்ன முடியல😒😒..

😍😍🍫🍫கா...
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top