You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


உன்னில் உறைந்தவன் நானே_13

#1
அரைமணிநேரமாக புறப்பட்டு கொண்டு இருந்தனர் இருவரும் இருவருமே ரெடி ஆகி வருவதற்கான அறிகுறி எதுவும் இல்லை. ஹாலில் தயாளன் தனது கையில் இருந்த வாட்சை ஐந்தாவது முறையாக திருப்பி பார்த்தான் மொத்த பொறுமையும் பறிபோய் கொண்டு இருந்தது அவனுக்கு.

பூர்ணிமா இதெல்லாம் ரொம்ப ஓவர் நீ தான் சீக்கிரமே கிளம்பிடுவேன்னு கேள்வி பட்டு இருக்கிறேன் இன்றைக்கு அநியாயம் பண்ணற..

ஹலோ தயா நான் வீட்டிலேயே கிளம்பி வந்துட்டேன் போறது அந்த அம்மாவோட வீட்டுக்கு அது சும்மாவே எல்லோரையும் கூப்பிட்டு வச்சு நக்கல்
அடிக்கும் அது முன்னாடி பவானியை ஒரு வார்த்தை கூட சொல்ல விட கூடாது அதுக்காக தான் இவ்வளவு நேரம் நான் தான் வந்ததும் சொன்னேனே அந்த அம்மா ஆறுமணிக்கு அழைச்சு இருக்கு நாம ஐந்தரைக்கு இங்கே இருந்து கிளம்பினால் போதும் முன்னாடி எல்லாம் போய் வரறவங்களுக்கு காத்திருக்க முடியாது. நானே பவானிக்காக மட்டும் தான் அங்கே வர்றேன். வேற யாருக்காகவும் இல்லை புரியுதா..

நீ இருக்கும் போது உன்னோட ப்ரெண்ட எதுவும் சொல்லிட முடியுமா என்ன ? இவ்வளவு பயம் தேவை இல்லை. சீக்கிரம் வாங்களேன். இன்றைக்கு அங்கே ரெண்டு மூன்று பேர்கிட்ட பேச வேண்டியது இருக்கு. முன்னாடி போனால் வசதியாக இருக்கும்ன்னு நினைச்சேன்.

இப்போது கதவை திறந்தவள் உங்க பிசினஸ்க்கு நாங்க ஊருகாயா தயா. ரெடி ஆகிட்டோம் என முன்னாடி வந்து நிற்க. பூர்ணிமா எப்போதும் போல ஒரு சுடிதார் கூடவே கொஞ்சம் காஸ்ட்லியான ஷால் ஒன்று அவ்வளவு தான். சிறு கிளிப்பில் கூந்தலை இழுத்து மாட்டி இருந்தாள்.

பவானியை மணப்பெண் போல அவ்வளவு அழகாக அலங்காரம் செய்திருந்தாள். அழகா இருக்கால்ல தயா என்றபடி இவனை பார்க்க.

ஏது..பூர்ணிமா பிரோவில் நகை ஏதாவது மிச்சம் இருக்கா என்ன? எல்லாத்தையும் எடுத்து மாட்டிட்ட போல இருக்கு.

தயா ரொம்ப ஓட்டாதிங்க போக போறது அந்த மாதிரி இடத்துக்கு இடத்திற்கு தகுந்த மாதிரி வேஷம் போட்டு தானே ஆகணும்.

ஆனால் உனக்கு பொருந்தாது அப்படித்தானே..இன்னும் கொஞ்சம் கிராண்டா டிரெஸ் போட்டுவிட்டு வந்து இருக்கலாம் இப்படி சொன்ன பவானியை பார்த்தவள் ஏய் இந்த டிரெஸ்க்கு என்ன குறைச்சலாம் இதோட ரேட் என்ன தெரியுமா.. இந்த ஷால் மட்டும் இரண்டாயிரத்து ஐநூறு ஒகே வா சும்மா குறை சொல்ல கூடாது. கூப்பிட்டு இருக்கறது உங்களை நான் வர்றது பவானி உனக்காக மட்டும் தான்.வாங்க போகலாம்.

இருவரையும் அழைத்து கொண்டு அலமேலுவின் எஸ்டேட்டை நோக்கி புறப்பட்டான் தயாளன். அங்கு போன பிறகுதான் தெரிந்தது அழைத்தது இவர்களை மட்டும் அல்ல என்று முக்கியமான நிறைய பேர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.

வாசலிலேயே இரண்டு பெண்கள் வரவேற்க பலத்தட்டோடு மஞ்சள் குங்குமம் சந்தனத்தோடு நின்று இருக்க இதை பார்த்த பூர்ணிமா தயா ரொம்ப பெரிய பார்ட்டி போல இருக்கு நான் தான் சின்னதா உங்களுக்கு மட்டும்ன்னு நினைச்சிட்டேன் போல இருக்கு என்றபடி உள் நுழைந்தாள்.

உள் சென்ற இரண்டாவது நிமிடம் கிருஷ்ணபிரியா வீட்டின் உள் இருந்து வந்தவள் இவர்களை வரவேற்றாள். வா பூர்ணி வாங்க தயாளன் அண்ணா..பவானி வா வா வாழ்த்துக்கள் என லேசாக அணைத்து விடுவித்தாள். வாங்க உட்காருங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் பார்ட்டி துவங்கிடும் என்றபடி அடுத்து வந்தவர்களை வரவேற்க நகர்ந்தாள்.

தயாளன் கூட அறிமுகம் ஆகி இருந்தவர்களின் அருகே நகர்ந்து இருந்தான். அலமேலுவின் வீடே அரண்மனை போல பெரிதாக கட்டி இருந்தார் ஹாலே நூறு பேர் அமரும் வகையில் இருந்தது. பூர்ணிமா இங்கு வருவது இது தான் முதல் முறை.. பார்த்ததும் பிரமிக்க தோன்றவில்லை அவரின் திமிர் எங்கிருந்து வந்தது என்பது தெளிவாக தெரிந்தது. சிறு பார்ட்டி தான் அதற்கே ஹால் முழுக்க பூ தோரணங்கள் கட்டி பெரிதாக அலங்காரம் செய்து இருந்தனர்.

அந்த நிமிடம் பூர்ணிமாவிற்கு தோன்றியது இங்கே நான் வந்திருக்க கூடாது இது என் மனதிற்கு பொருந்தாத இடம் என்ன தோன்ற ஆரம்பித்தது. பதினைந்து வட்டவடிவமான டேபிள் அதில் நால்வர் ஐவர் அமரக்கூடிய இருக்கைகள் என அழகாகவே விழாவிற்கு அரேன்ஜ் செய்திருந்தனர். நால்வர் இருக்க கூடிய ஒரு இருக்கையில் அமரும் போதே வேகமாக லலிதா வருவது தெரிந்தது.

அவளது வேகம் பூர்ணிமாவிற்கு லேசாக சிரிப்பை தர பவானியின் பக்கமாக திரும்பியவள். பவானி இந்த லூசு ஏதோ ஒரு லூச பார்த்துடுச்சு போல இருக்கு அது தான் இப்படி ஓடுது .

பூர்ணிமா பேசாமல் இரு என்றபடி வாயிலை பார்க்க பூர்ணிமாவின் கண்களும் வாயிலை தான் நோக்கியது. இரண்டு கைகளில் மலர் கொத்துகளை வைத்தபடி உள் நுழைந்தது ரஞ்சன் கிட்டத்தட்ட பார்த்து நீண்ட நாட்கள் கடந்து இருக்க இங்கு நிச்சயமாக பூர்ணி இவனை எதிர் பார்க்கவில்லை.

தன்னை அறியாமல் கை அவளது தலையை தட்டியதுஇது அவனோட அத்தை வீடு எப்படி வராமல் இருப்பான் கிருஷ்ணபிரியா அக்கா வந்து இருக்கறாங்கன்னா இவனையும் தான் எதிர் பார்த்து இருக்கணுமே..
 
#2
இவளது மனது இதை யோசிக்கும் போதே லலிதா அவனது அருகில் நெருங்கி இருந்தவள் யோசிக்காமல் அருகில் இருந்த குங்குமத்தை எடுத்து அவனது நெற்றியில் வைக்கிறேன் என்றபடி அவனது கன்னத்திலும் லேசாக தேய்த்திருந்தாள்.

உள் நுழையும் போதே பூர்ணிமா முதலில் கொண்டு இருந்தான். கண்கள் இவளை மட்டுமே பார்த்தபடி வர லலிதாவின் செய்கையை மறந்து இருந்தான். முன்பு கோபமாக பேசியது எதுவுமே ரஞ்சனின் நினைவில் இல்லை இவளிடம் நேராக வர.. அவனது முகத்தில் தெரிந்த குங்குமத்தை பார்த்து சிரிப்பு தோன்றி இருந்தது பூர்ணிமாவிற்கு..

என்ன செம சந்தோஷமாக இருக்கற போல என்ன விஷயம்..

ஒன்றும் இல்லையே என்றவள் அருகில் நின்றிருந்த பவானியை பார்த்தாள்.
பவானியோ அது என ஆரம்பிக்கும் போதே பவானி தயா கூப்பிடறாங்க என அவளை நகர்த்தி இருந்தவள் தி கிரேட் ரஞ்சன் உள்ளே போங்க ஸார் என சிரிப்பை அடக்கியபடி கூற..

அவளது சிரித்த முகத்தை பார்த்தபடியே இத கொஞ்சம் பிடி பூர்ணிமா என கையில் இருந்தது மலர் கொத்தை நீட்ட தன்னை அறியாமல் தந்ததை இரண்டு கையில் வாங்கவும்..

இத பார்த்து தானே சிரிச்ச என்றபடி கொஞ்சமும் யோசிக்காமல் நீளமாக கழுத்தோடு தொங்கிக்கொண்டு இருந்தது ஷாலை எடுத்து முகம் துடைக்க ஆரம்பித்தான்.

என்ன செய்யறிங்க என்ற அவளது சத்தம் அவனை எதுவும் செய்யவில்லை. துடைத்து முடித்தவன் முகத்துல போயிடுச்சு தானே தேங்க்ஸ்.. இனி எப்போதும் இப்படியே சிரி.. பார்க்க ரொம்ப அழகாக இருக்கற என நகர்ந்தான்.

அவனின் பின்னோடு சென்றவள் ரஞ்சன் இப்படி அதிக உரிமையை என்கிட்ட எடுக்கிற வேலை வச்சிக்காதிங்க எனக்கு பிடிக்காது..

அப்படி சொல்ல முடியாதே பூர்ணி நாளைக்கு என்னோட ப்ரெண்ட் உன்னோட அக்காவை கல்யாணம் பண்ணினா நானும் உங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து தானே ஆகணும்.

கல்யாணம் அக்காவுக்கு தான் உங்களுக்கு இல்லை. புரியுதா.

வராதேன்னு சொல்லற.. எப்படி வீட்டுக்கு வர்றவங்கல இப்படி கூட சொல்வாயா..நல்ல வளர்ப்பு இதுக்கே உங்க அம்மாவை பார்த்து பாராட்டனும்.

தப்பு பண்ணிட்டேன் நீ வருவேன்னு தெரிஞ்சு இருந்தா வந்தே இருக்க மாட்டேன் பூர்ணிமா இப்படி சொல்லவும்..

அதெப்படி அத்தை வீட்டோட ஃபங்சன் நான் இல்லாம.. ஒரு வேளை நான் வர்றது தெரிஞ்சுதான் வந்தியோ..அந்த நேரம் அவள் கூட வம்பிலுப்பது அவனுக்கு அவ்வளவு பிடித்தது.

பேசாமல் போயிடுங்க என்றபடி நகர்ந்து இருந்தாள்.பாதி தூரம் போன பிறகு கூட இவளை பார்த்து கண்களை சிமிட்டி இன்னும் அவளது கோபத்தை தூண்டிவிட்டபிறகே நகர்ந்தான்.

இதை அனைத்தையும் பார்த்தபடி இறங்கி வந்து கொண்டிருந்தார் அலமேலு . அவரது கண்கள் கோபத்துடன் பூர்ணிமாவை முறைத்து கொண்டு இருந்தது. அவரது பார்வைக்கான விளக்கம் பார்ட்டி முடியும் போது அப்பட்டமாக தெரிந்தது அவரது பேச்சில்..

பெரிய கேக் இரண்டு ஹாலில் எடுத்து வந்திருக்க முதலில் கிருஷ்ணபிரியா,ராமை கொண்டு வந்திருந்த கேக்கை வெட்ட அடுத்ததாக இருந்ததை பவானி, தயாளனை வெட்டவைத்த பிறகு பஃப்பே முறையில் உணவு வழங்கப்பட மகிழ்ச்சியாக நேரம் கடந்தது.

ஏழு மணியை தொடும் போது அங்கிருந்த மியூசிக்கல் இன்சியூமெண்டை ஒவ்வொருவராக இசைக்க ஆரம்பித்தனர். அங்கிருந்த பலருக்குமே அது பொழுது போக்கு..பூர்ணிமா முறையாக கற்று இருந்தாலும் ஆர்வமாக என்றுமே வாசித்தது இல்லை அவளை பொறுத்தவரையில் வேலை இல்லாதவர்களின் பொழுது போக்கு அது என்பது..

ஒவ்வொருவரும் இசைத்து முடிக்கவும் லேசான கைதட்டல் மறுபடியும் அடுத்தவர் என்ன நகர்ந்து கொண்டு இருந்தது. கடைசியாக பூர்ணிமாவிடம் வரும் போது அலமேலு சற்றே நக்கல் குரலில் பூர்ணிமா உன்னோட வீட்டில் மூன்று பெண்கள் இல்லையா.. இதெல்லாம் தெரியுமா என கேட்க..

அந்த குரலே இவளது கோபத்தை தூண்ட போதுமானதாக இருந்தது.

ம்.. இதெல்லாம் தெரிஞ்சாதான் சாப்பிட்டது ஜிரனம் ஆகுமா என்ன?
எனக்கு தெரிஞ்சு எங்க அப்பா உழைப்பு தான் உடலுக்கு நல்லதுன்னு சொல்லி தந்து இருக்கறாங்க.. இதற்காக நேரம் ஒதுக்க எனக்கு நேரமும் இல்லை விருப்பமும் இல்லை.

சங்கரனுக்கு பொண்ணுங்கல வளர்க்க தெரியவில்லை எனக்கு இப்படி தான் தோணுது அலமேலு இதை சொல்லவும் கோபம் முழுக்க தோன்றி இருந்தது.

எங்க அப்பா வளர்ப்பில் என்ன குறை கண்டிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா..இதை கேட்கவும்..

பெரியவங்க கிட்ட பதிலுக்குபதில் பேசறையே உன்னோட வீட்டில் நீ மட்டும் தான் இப்படி பேசுவியா இல்லை உன்னோட அக்காவுமா..

பத்து சொல்ல அவரின் முகம் பார்க்கும் போதே ரஞ்சன் நடுவில் நுழைந்து இருந்தான் அத்தை இந்த பேச்சு இப்போது முக்கியமா என்ன? எல்லோரும் புறப்பட வேண்டாமா.. மியூசிக் எல்லோருக்கும் பிடிக்கணும்ன்னு அவசியம் இல்லையே..அலமேலுவை நகர்த்தி விட்டவன் இவளிடம் நீயும் இடம் பார்த்து பேசியிருக்கலாம்.

ஏன் அவங்க கேட்டது சரியா நான் எதுவும் தப்பா கேட்கலை..

உனக்கு சொன்னால் புரியாது கிளம்பு என்றபடி அப்போது நகர்ந்தான்.
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top