You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


உன்னில் உறைந்தவன் நானே_14

#1
அந்த நிமிடம் சொல்லிவிட்டு நகர்ந்து இருந்தாலும் அடுத்த நாளில் அவளுக்கு வேறு விதமான தகவல் வந்து இருந்தது தகவல் வந்த நேரம் முதலே மகிழ்ச்சியில் சுற்றி கொண்டு இருந்தாள் பூர்ணிமா. வினோத் முறைப்படி பெண் கேட்டு வருவதற்கான தகவல் அது. அன்றே நிச்சயம் செய்து திருமணத்தை உறுதி செய்வதாக கூறி இருக்க மகிழ்ச்சியோடு காணப்பட்டாள்.

இந்த செய்தி தெரியவும் ரஞ்சன் மேல் இருந்த சிறு கோபம் கூட சுத்தமாக மறைந்து இருந்தது. கொஞ்சம் நல்லவன் தான் போல இருக்கு. என்னோட ஷாலை அழுக்கு பண்ணினத கூட மன்னித்து விட்டுவிடலாம் என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள்.

அவர்கள் பக்கத்தில் இருந்து இருபது பேர் வருவதாக கூறி இருக்க இவர்களும் இவர்களது உறவில் ஐம்பது பேர் வரை அழைத்து இருந்தனர். முதல் நாள் இரவிலேயே துளசியின் இரண்டு கைகலுக்கும் மெகந்தி அழகாக வைத்து விட்டிருந்தாள் பூர்ணிமா.

வரவேற்பாக நிறைய ஏற்பாடுகளை சங்கரன் தம்பதிகள் செய்து வைத்திருந்தனர். பூ தோரணம் அங்கங்கே தொங்கவிட்டு கூடவே நடு கூடத்தில் பெரிய சிவப்பு கம்பளம் விரித்து வீட்டின் தோற்றத்தையே மாற்றி இருந்தனர்.

காலை முதலே தயாளனுக்கு அங்கே தான் வேலை செய்து கொண்டு இருந்தான்.

"தயா டிபனுக்கு சொல்லியாச்சு தானே எந்த குறையும் இருக்க கூடாது."

"நானே நேரடியாக பார்த்துக்கறேன் அங்கிள்". நீங்க வர்றவங்கல நல்ல விதமாக வரவேற்றா போதும்.

சரிபா பார்த்துக்கறேன் என்ன உள் செல்ல.. "அப்பா இது ஓகே வா என்ன துளசி முன் வந்து நின்றாள்".தேவதை போன்ற அலங்காரத்தோடு..மகளை பார்க்கவும் லேசாக கண் கலங்கியவர் "அழகா இருக்கறடா உனக்கு எந்த குறையும் வராது" என கூறவும் பூர்ணிமா வரவும் சரியாக இருந்தது.

"போச்சுடா .. அப்பா முன்னாடி இன்னும் கொஞ்ச நேரத்தில் வர ஆரம்பிச்சுடுவாங்க அவங்கல கவனிங்க". நீ வா துளசி இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு லேசான லிப்ஸ்டிக் போட்டா இன்னும் அழகான இருப்ப..என்னுடைய அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள் பூர்ணிமா..

உறவினர்கள் கூட ஒவ்வோருவராக வர ஆரம்பித்தனர். பத்தரை மணிக்கு
வருவதாக சொல்லி இருக்க இவர்கள் பக்கம் அனைத்து வேலைகளையும் முடித்து காத்திருக்க ஆரம்பித்தனர்.

நேரம்தான் வேகமாக நகர்ந்து கொண்டு இருந்ததே தவிர வருவதற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை. பதினோரு மணியை தொடும் போது வந்தவர்கள் பலர் மெதுவாக முனுமுனுக்க ஆரம்பித்தனர். மாப்பிள்ளை வீட்ல வருவாங்க தானே நல்ல நேரம் கடந்துட்டு போகுது.

துளசி கூட கொஞ்சம் டென்சனோடு அமர்ந்து இருந்தாள். பூர்ணிமா துளசியின் அருகில் வந்தவள் ஃபோன் பண்ணி பாரேன் துளசி வெளியே எல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க..

ஃபோன் எடுக்கலை பூர்ணிமா எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியவில்லை.

ஏய் ஒரு வேளை இங்கே கிளம்பி இருக்கலாம் அதனால போன் எடுத்து இருக்க மாட்டாங்க இரு நான் அப்பாவை பார்த்து கேட்டுட்டு வரேன் வெளியே தந்தையை பார்க்க விரைந்தவள் அங்கே சற்றே கவலையோடு தாயாரும் தந்தைக்கு அருகில் நிற்பதை பார்க்கவும் ஏன்மா என்ன ஆச்சு ஏன் இங்கே நிற்கறிங்க மாப்பிள்ளை வீட்டில் எத்தனை மணிக்கு வர்றதா சொன்னாங்க ,ஏன் இன்னும் வராமல் இருக்கறாங்க..

"தெரியலை பூர்ணிமா இங்கே எல்லோரையும் அழைத்து உட்கார வச்சி இருங்கறோம். ஒன்றும் புரியவில்லை",தாயாரின் பதிலுக்கு தயாளனோ நான் வேணும்னா போய் என்னன்னு பார்த்துவிட்டு வரேன் அங்கிள்.

தயா நானும் வரேன் அவனோடு பூர்ணிமாவும் புறப்பட தயார் ஆனாள்.ரஞ்சனின் நம்பருக்கு அழைத்தபடி தயாளன் புறப்பட்டான்.

ஸார் நான் தான் இங்கே எத்தனை மணிக்கு வர்றிங்க உங்களோட ப்ரெண்ட அழைச்சிட்டு என்றபடி வண்டியை ஸ்டாட் செய்திருந்தான்.
அவனது இருப்பிடம் கேட்டு வண்டியை நகர்த்தினான்.

முகம் கொஞ்சமாக கவலையை பூசி இருந்தது தயாளனுக்கு..

என்ன சொன்னாங்க தயா என்ற கேள்விக்கு கூட அங்கே வரச்சொல்லி இருக்கறாங்க போய் பேசிக்கலாம் என வண்டியை செலுத்தினான்.

இவர்கள் அலமேலுவின் வீட்டிற்கு முன்பு நிற்கவும் இவர்களுக்கு எதிரில் புதிய கார் புறப்பட்டு செல்லவும் சரியாக இருந்தது. ஒன்றும் புரியாமலேயே உள் நுழைந்தனர் இருவரும். இவர்கள் வீட்டில் இருந்து புறப்பட்டு வருவதாக முதலில் சொல்லி இருக்க இங்கே இவர்களை தவிர வேறு யாரும் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

தயக்குதுடனே இருவரும் உள் செல்ல வேலை செய்யும் பெண்மணி இருவரையும் அங்கிருந்த ஷோபாவில் அமரவைத்து விட்டு உள் சென்றார்.ரஞ்சன் மட்டும் வேகமாக உள் அறையில் இருந்து வந்து கொண்டு இருந்தான். அவனை பார்த்ததும் தயாளன் எழுந்து இரண்டு அடி அவனை நோக்கி நகரவும்.. வேகமாக இவனது கையை பற்றியபடி பேச ஆரம்பித்தான்.
 
#2
ஸாரி தயாளன் இன்றைக்கு இந்த ஃபங்சன் நடக்க வாய்ப்பு இல்லை. வினோத்தோட அம்மாவுக்கு இந்த சம்பந்தத்தில் விருப்பம் இல்லையின்னு கோச்சிட்டு கிளம்பிட்டாங்க..எவ்வளவோ சொல்லி பார்த்தோம் எங்களால் கன்வீன்ஸ் பண்ண முடியவில்லை. வினோத்தும் கூட போயிட்டான். என்ன சொல்ல ..இன்னும் கொஞ்சம் டைம் வேணும். மறுபடியும் அவங்க கிட்ட பேசிட்டு இன்னோரு நாள் பார்த்து இந்த ஃபங்சனை வச்சிக்கலாம்.
உங்களுக்கு எதிர்த்த மாதிரி தான் போனாங்க நேரா ஏர்போர்ட் போறாங்க. நானும் அங்கே தான் புறப்பட்டுட்டு இருக்கிறேன். ஸாரி நான் உடனே புறப்படணும் என்று நகரவும் அமர்ந்து இருந்த பூர்ணிமா எழுந்து நிற்கவும் சரியாக இருந்தது.

ரஞ்சனின் பதில் கேட்டு என்ன பதில் சொல்வது என தெரியாமல் கொஞ்சம் வருத்தத்தோடு தயாளன் வாசலை நோக்கி செல்ல.. இவளோ கோபத்தோடு ரஞ்சனின் சட்டையை கொத்தாக பற்றி இருந்தாள்.

என்ன மனுசங்க நீங்க பணம் இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணுவிங்கலா முதலிலேயே படிச்சுபடிச்சு சொன்னேனே இது வேண்டாம் சரிவராதுன்னு நீ கேட்டியா இப்ப பாரு நான் இனி அவளை எப்படி சமாதானம் பண்ணுவேன். வீடு முழுக்க ஆட்கள் இருக்கறாங்க..அவங்களுக்கு என்ன பதில் சொல்லறது. ஏன் இப்படி செஞ்ச.. எத்தனை நாள் காத்திருந்த எங்களை அசிங்கபடுத்த..

உளராதே பூர்ணி நடந்ததுக்கு முழு காரணம் நீதான். நேற்று நீ பார்ட்டியில் பேசினது தப்பு. ஏற்கனவே அந்தஸ்து ஈக்கலா இல்லைன்னு அவ்வளவு யோசிச்சாங்க.. உன் பேச்சை கேட்டு இந்த பொண்ணு வேண்டாம்ன்னு போயாச்சு..

அந்தஸ்து எது இந்த மாதிரி பெரிய வீடும் நிறைய பணமுமா.. இத சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா.. அவளோட குணத்திற்கு கால்தூசிக்கு வருமா உங்களோட பணம்.கட்டிக்க போறது என்ன இல்லையே அவளை பற்றி அவங்களுக்கு என்ன தெரியும்...சொல்லு இன்னமும் அவனது சட்டையை விடவில்லை.

உன்னப்போல ஆளுங்களோட தப்பு என்ன தெரியுமா? இடத்திற்கு தகுந்தமாதிரி பேச தெரியாது. எஸ்.. இதோ கொஞ்சமும் நாகரிகம் இல்லாம சட்டையை பிடிக்கிற பாரு இது தான். சட்டென இவளை உதர இரண்டு அடி நகர்ந்து விலப்போனவள் கடைசி நேரத்தில் தடுமாறி நின்றாள்.

இந்த வேலையை வேற யாராவது செஞ்சிருந்தா இந்நேரம் என்ன நடந்து இருக்கும்ன்னு எனக்கே தெரியாது. முதலில் இங்கிருந்து போயிடு ..

நானும் அதை தான் சொல்லறேன் இனி தயவு செய்து எப்பவுமே என் முன்னாடி வராத.. ஐ ஹேட் யூ..இவள் சத்தமாக சொல்லும் போதே மறுபடி தயாளன் உள் நுழைந்தான். பூர்ணிமா வீட்டுக்கு போகலாம் எதுவும் பேசாத..என்றபடி இவளது கரம் பற்றி அழைத்து சென்றான்.கண் கலங்கியபடி இவனை பார்த்தபடியே நகர்ந்து சென்றாள் பூர்ணிமா.

தொடரும்.
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top