• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன் கண்ணில் என்னை கண்டேன் epi 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Karthik Priya

மண்டலாதிபதி
Joined
Sep 27, 2020
Messages
189
Reaction score
271
Location
Chennai
உன் கண்ணில் என்னை கண்டேன் 5 அடுத்த வாரம் ஞியாயிற்று கிழமை, விடுமுறை என்பதால் வர்ணா, சித்தார்த் சுபத்ரா மற்றும் பிரேம் என சிறுவர்கள் அனைவரும் சீக்கிரமே தயாராகி பெரியவர்களுக்கு முன் வண்டியில் ஏறி அமர்ந்திருந்தார்கள். சுபத்ராவின் மடியில் அமர்ந்திருந்த பிரேம், “எங்க போறோம் அக்கா” என கேட்க, சுபத்ரா, “வெளியில டா செல்லம். கோவிலுக்கு போய் சாமி கும்பிட போறோம் டா தங்கம்” என பதில் கூறினாள். பிரேம், “வெளிய போறோமா ஹையா, ஜாலி ஜாலி, அப்போ ஐஸ்கிரீம்லாம் கிடைக்கும் தான?”என ஆர்வமாக கேக்கிறான். சுபத்ரா, “கண்டிப்பா”என பதிலளிக்கிறாள். இதை அனைத்தையும் சித்துவும் வர்ணாவும் அமைதியாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அதற்குள் பெரியவர்கள் வர பயணம் தொடர்ந்தது. அதிகாலையில் கிளம்பி பதினோரு மணியளவில் பூதமங்கலம் என்னும் கிராமத்தை வந்தடைந்தனர். இந்த கிராமம் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ளது. ஜடாமுனி முனிஸ்வரர் குலதெய்வமாக வீற்றிருக்கிறார். முனீஸ்வரன் வழிபாடு என்பது காலம் காலமாக கிராம மக்கள் மட்டுமல்லாது நகரத்து மக்களும் பயபக்தியுடன் வணங்கக்கூடிய தெய்வ வழிபாடாகும். சுமார் 300 ஆண்டுக்கு முன்பிருந்தே நாம் முனீஸ்வரரை வழிபட்டு வருகிறோம். வீரமும், ஆவேசமும் நிறைந்த ஆண் தெய்வமாக, முனீஸ்வரர் கருதப்படுகிறார். முற்காலத்தில், ஒரு கிராமத்தையே இரவில் கொள்ளையர்களிடம் இருந்து காப்பவராக முனீஸ்வரர் இருந்துள்ளார். ஜடா முனி – நாதமுனி, வேதமுனி, பூதமுனி, சக்திமுனி, மாயமுனி, மந்திரமுனி, பால்முனி, கருமுனி, சுடலைமுனி என்று பல்வேறு வகையாக முனீஸ்வரன் அழைக்கப்படுகிறார். ஜடாமுனி சிவனுடைய அம்சம் நிறைந்தவர். அதாவது சுடுகாட்டு சாம்பலை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு, பாம்பைக் கழுத்தில் ஆபரணமாக அணிந்து, கையில் பலவிதமான ஆயுதங்களைக் கொண்டு அகோர ரூபத்தில் காட்சிதந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர் இந்த ஜடாமுனி. சிவபெருமானின் முழு அம்சம் பொருந்திய ஜடாமுனி, தன் காலினால் எமனின் உயிரையே வீழ்த்தும் அளவுக்கு அற்புத சக்திகள் நிறைந்தவர். எல்லாவிதமான தெய்வங்களும் இந்த ஜடாமுனிக்கு அடங்கும். எல்லா தெய்வங்களையும் ஜடா முனி கட்டுப்படுத்த முடியும். சடையுடன் கூடிய (தலைவிரி கோலமாக) இருக்கும் ஜடாமுனியை வணங்குவதால் நம்முடைய எல்லாவிதமான எதிரிகளும் ஒழிந்து விடுவர். தீமைகள் விலகும், வறுமை நீங்கும், பில்லி ஏவல் சூனியம் விலகும், எதிரிகள் செய்யும் கெடுதல்கள் விலகும், அனைத்து நன்மைகளையும் ஏற்படுத்தும் சக்தி படைத்தவர் இந்த ஜடாமுனி. ஜடாமுனியின் முக்கிய அம்சமாக கருதப்படுவது தண்ணீரில் தவம் இருக்கக் கூடிய சக்தி படைத்தவர் மேலும் எப்போதும் தவக்கோலத்தில் இருப்பார். இப்படி இருக்கும் ஜடா முனியை வழிபடுவதால் நமக்கு வேண்டிய பலன்கள் உடனே கிடைக்கும் என்பது ஐதீகம். தோஷங்கள் விலகுவதற்கு ஜடாமுனிக்கு வடை, பால், பாயாசம், சுருட்டு, கொழுக்கட்டை, இறைச்சி, அவல், பொரி, கடலை இவற்றை வைத்து படையல் செய்து வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகும். இதனால்தான் அனைத்து கிராமப்புறங்களிலும் ஜடாமுனி, பல்வேறு விதமான முனீஸ்வரன் பெயர்களில் வைத்து பூஜிக்கப்படுகிறார். எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத பிரச்சனையாக இருந்தாலும், ஜடாமுனியின் அருளைக் கொண்டு அனைத்து தீய சக்திகளையும் வீழ்த்தி விடலாம். எந்த ஒரு தீய சக்தியையும் அழித்து நல்வழிப்படுத்தக் கூடிய அருள் கொண்டவர் இந்த ஜடாமுனீஸ்வரர். ஜடாமுனியை வழிபட்டால் அனைத்து எதிரிகள் தொல்லைகள் நீங்கும், சங்கடங்கள் விலகி சகல சௌபாக்கியம் ஏற்படும்.(உபயம் கூகிள்)
Screenshot_20201007-190421_01.png
பூதமங்கலத்தில் ஏற்கனவே வெங்கட் மற்றும் விஜயாவின் தாய் வழி சொந்தங்கள் பலர் வந்திருந்தனர். பெரியவர்கள் அனைவரும் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்ய, சிறியவர்கள் ஓடி பிடித்து விளையாடி கொண்டிருந்தனர். இவர்களை பார்த்த அமுதா இங்கிருந்தவாறே, “பிள்ளைகளா பார்த்து விளையாடுங்க ஆத்து தண்ணி ஓடுது பக்கத்துல போகாதீங்க சரியா?” என கேட்டு அவர்கள் சரி என்று கூறி உறுதி செய்த பிறகே மற்ற வேலையில் ஈடுபட்டார். சிறிது நேரத்திற்கெல்லாம் பூஜைக்கு தேவையான அனைத்தும் தயாராக இருந்தது. குழந்தையை ஆற்றங்கரை அருகில் தூக்கி வந்து தாய்மாமனின் மடியில் அமர்த்தி தாய்மாமன் சீராக வந்த புத்தாடை அணிவித்து ஆசாரியை வைத்து மொட்டை அடித்து காது குத்தி தாய் மாமன் வாங்கி வந்த தங்கக் காதணியை காதில் அணிவித்தனர். குழந்தையின் அழுகையை நிறுத்த தாய்மாமன் சீராக வந்த தட்டுகளில் இருந்து சாக்லேட் மற்றும் ஸ்வீட் எடுத்து கொடுத்து சமாதானம் செய்துக்கொண்டிருந்தார் விஜயா. காது குத்துவதில் அறிவியல் ஒளிந்துள்ளது. நம் உடம்பானது வெறும் எலும்பும் தோலும் மட்டுமே நிறைந்தது கிடையாது. நமது உடலை ஒரு சக்தி மண்டலம் இயக்குகிறது. அந்த சக்தி மண்டலத்தை சீராக வைத்துக்கொள்ள நாம் சிலவற்றை செய்தாக வேண்டி உள்ளது. அதில் ஒன்று தான் காது குத்துதல் என்னும் சடங்கு. குழந்தைகளுக்கு சிறு வயதிலே காது குத்துவதன் மூலம் அவர்களது மூளை வளர்ச்சி மற்றும் நியாபக சக்தி அதிகரிக்கிறது. இடது மற்றும் வலது முலையை ஒன்றிணைக்கும் மையப்பகுதியாக காது விளங்குவதால் காது குத்தவதன் மூலம் நியாபக சக்தி அதிகரிக்கும் என்று விஞ்ஞானபூர்வமாக கூறப்படுகிறது. காது குத்தி தோடு அணிவதன் மூலம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறையும் என்று கூறப்படுகிறது. அதோடு காது குத்துவதன் மூலம் செரிமான மண்டலம் சரிவர இயங்குகிறது என்றும் கூறப்படுகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ஆகையால் காது குத்துவதற்கு முன்பு காது சுத்தமாக இருக்கிறதா, காது குத்தும் ஊசி சுத்தமாக இருக்கிறதா என்பதை பரிசோதிப்பது அவசியம். இல்லையேல் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. காதில் அணிவிப்பதற்காக வாங்கும் தோடு தொங்குவது போல் இல்லாமல் எவ்வளவு சிறியதாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது. குழந்தைகள் புதிதாக தோடை அணிவதால் அவர்களுக்கு அதை இழுக்க வேண்டும் என்ற எண்ணம் வர வாய்ப்புள்ளது. ஆகையால் அவர்கள் கையில் சிக்காத வகையில் தோடு இருப்பது நல்லது. (உபயம் கூகிள்)
Screenshot_20201007-192637_01.png
காதுகுத்து முடிந்ததும் குலதெய்வத்தின் முன் வந்து பொங்கல் வைத்து கெடா வெட்டிற்கு தயாராக ஆட்டை இழுத்து வந்தார்கள்.பெரியவர்கள் சிறியவர்களை மறைத்தவாறு அவர்களுக்கு முன் நின்று வழிபட்டனர். என்ன தான் நடக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்தில் தன் அம்மாவின் பின்னால் இருந்து சிறிது நகர்ந்து வந்து எட்டி பார்க்கிறாள் வர்ணா. சரியாக அதே நேரம் கெடா வெட்டு நிகழ்கிறது. அங்கு இருந்த இரத்தத்தை பார்த்த வர்ணா, “அம்மா” என கத்தியவாறே மயங்கி சரிகிறாள். அங்கு இருந்த அனைவரும் உடனடியாக வர்ணாவை சூழ்ந்து கொள்கின்றனர். உடனடியாக பக்கத்து தவலையில் இருந்த தண்ணீர் எடுத்து அமுதா வர்ணாவின் முகத்தில் தெளிக்குறார். குழந்தையின் முகத்தில் தண்ணீர் தெளித்தும் எந்த அசைவும் இன்றி மயக்கத்தில் இருந்தால். விஜயாவும் ப்ரேமும் பயத்தில் அழ, சேகர் உடனடியாக தன் காரை எடுத்து வந்து வர்ணாவையும் இன்னும் சிலரையும் ஏற்றி கொண்டு மருத்துவமனைக்கு விரைகிறார்.மற்ற அனைவரும் தத்தமது வண்டியில் அவரை பின் தொடர்க்கின்றனர்.
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
Google aandavar iruka payamenn!???????????

Google vaalga vaalga vaalga!???????????????

Enna akka information laiyaa full ottiteengaaa??????????????????

But pudhusa neraya teeinjukitten!

Varna achoo chinna kutty ama indha sid paya enga ?????????Varna mayangunadhuku avan reaction enna????

Idhu naala Varna ku edhachum probsss varumaa???????

Awesome
 




Karthik Priya

மண்டலாதிபதி
Joined
Sep 27, 2020
Messages
189
Reaction score
271
Location
Chennai
Google aandavar iruka payamenn!???????????

Google vaalga vaalga vaalga!???????????????

Enna akka information laiyaa full ottiteengaaa??????????????????

But pudhusa neraya teeinjukitten!

Varna achoo chinna kutty ama indha sid paya enga ?????????Varna mayangunadhuku avan reaction enna????

Idhu naala Varna ku edhachum probsss varumaa???????

Awesome
Thank you ???
Sidhuvum hospital poran varna koodave
Kandippa problems varumnu dhan ninaikiren ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top