• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய்..! டீசர்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 30

புதிய முகம்
Author
Joined
Nov 2, 2021
Messages
15
Reaction score
36
உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய்..!

ஹாய் நட்பூஸ்.. உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய் எனது புது முயற்சி, அதற்கு நீங்கள் தங்களின் ஆதரவை தந்து, நிறை குறைகளை பகிர்ந்து என்னுடன் பயனிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

டீசர் 1:

சூரிய இளங்கதிர் இயங்க ஆரம்பிக்கும் அந்த காலைப் பொழுதில் அந்த பங்களாவின் கேட் முன்பு இவள் இப்படி ஒரு நாள் இந்த நிலைமையில் நிற்பாள் என்று முன்பு யாராவது சொல்லியிருந்தால் ஒத்துக் கொண்டிருப்பாளா..? இல்லையே.., அவளது நிலையை முன்பு உணர்ந்திருந்தவள் தான் ஆனால், இதுபோல் ஒரு இழிநிலை தனக்கு வருமென்று கனவிலும் அவள் நினைத்ததில்லையே..!
இதோ இங்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டுவிட்டாள், இனி நடக்கும் அனைத்திற்கும் அவள் பொறுப்பாக மாட்டால், இதுமட்டுமா.. இதுவரை நடந்த எதற்குதான் இவள் பொறுப்பானாள்..? ஆட்டுவிப்பவன் ஒருவன், ஆடுபவள்தான் இவள், அதற்கு மோசமாக அடிபடுபவளும் இவள் தான்.
………
”பாஸ்.. நீங்க சொன்ன வேலையெல்லாம் முடிச்சிட்டேன்.. உங்க அடுத்து திட்டம் என்ன..?” நகுன் தனது முதலாளியான மித்ரனிடம் வினவ..
அவனோ நகுனை நிமிர்ந்துப் பார்த்து, தனது கருப்புக் கண்ணாடியை எடுத்து அணிந்துக் கொண்டு, ”இனிதான் இன்னும் நிறைய வேலையை பார்க்க வேண்டியதிருக்கு நகுன்..” என்று தனது நெருங்கிய விசுவாசியாக இருக்கும் நகுனிடம் கூறிக் கொண்டே எழுந்து, தனது காரை நோக்கிச்சென்று ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை ஓட்டத் தயாராக..
முதலாளியின் செயல்களை நன்கு அறிந்துக் கொண்டிருந்த நகுன், மித்ரன் பின்னே சென்று அவனுடன் காரில் எறிக்கொள்ள.. அந்த பல லட்சம் விலைமதிப்புள்ள பி.எம்.டபுள்யூ கார் அவனது வீட்டிலிருந்து சீறிக்கொண்டு வெளிவந்தது. அவனது பின்னே அவனது பாதுகாவலர்கள் சில கார்களில் பயணிக்க அந்த தோற்றம் பழங்காலத்தில் மன்னர் பாதுகாவலர்கள் படைச்சூழ தேர்பவனி வருவதுப்போல் ஒரு காட்சியை பார்பவர்களுக்கு தந்தது. அது உண்மையும் கூடதான்.
மித்ரன் அவன் தான் தற்போது இந்த இடத்தில் முதலிடம் வகிப்பவன், இந்த இடம் அடைய அவன் இழந்தது மிகவும் பெரிதல்லவா..! தனது இழப்பிற்கு காரணமாவர்களை சும்மா விடுபவனும் இல்லை, அதே சமயம் அவர்களை மோசமாக பழிவாங்குவதை காட்டிலும் மிக மோசமான தண்டனைகளை கொடுக்க ஆரம்பித்திருப்பவனும் கூடதான்..
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
மித்ரன் வை ஆங்கிரி🙄🙄🙄 கோவத்தை குறை

Anti hero concept !

Yaaru 1st vandha papa???
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
சூப்பர் பா 😍 மித்ரன் னு அழகான பேர் வச்சிட்டு இப்படி அவனை டெரரா காட்டினா எப்படி 😑
 




S_Abirami

புதிய முகம்
Joined
Nov 2, 2021
Messages
7
Reaction score
8
Location
Dindigul
சூப்பர். அந்த பொண்ணை ஆட்டி வைக்கிறது மித்ரனோ!! பார்க்கலாம். கதைக்கு வெயிட்டிங்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top