உன் மீது இல்லை ... மச்சான் ....

Premalatha

General
SM Team
#1
உன் எழுத்தின் மீது தான் தீராத காதல், மயக்கம்

மோதலில் காதல் மட்டும் அல்ல...
நட்பும் தொடங்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் எங்கள் நட்பு....

என் மச்சான் எழுதுற கதை என்று தான் படிக்க ஆரம்பிச்சேன் ஆனந்த பைரவி..... ஆனந்தனுடன் ஆரம்பித்தது தான் இந்த பயணம்... இப்ப மித்ரன் மேல அத்தனை அன்பு...அவனை யாராவது கதையில் திரட்டினாள் கூட மனசு தாங்க மாட்டேங்கிறது... அதற்கு காரணம் நீங்க அந்த கதாபாத்திரத்துக்கு கொடுத்த உயிரோட்டமும், செதுக்கிய விதமும் தான் காரணம்...

இப்ப இந்த கதையை என் மச்சான் எழுதுறாங்க என்பதற்காக கண்டிப்பாக நான் படிக்கவில்லை .... அந்த எழுத்து மேல் இருக்கிற காதல் மட்டுமே காரணம்.... நீங்க மென்மையானவரா என்று எனக்கு தெரியாது ஆனால் உங்க எழுத்து ...

அத்தனை மென்மை...
அத்தனை இனிமை...
படிக்கும் போது மனதிற்குள் அத்தனை குளுமை....

உங்களுக்கு என்று ஒரு தனி எழுத்து பாணியை அமைத்து .... இத்தனை வாசகர்களை வசியம் செய்து இருக்கிறீர்கள் என்றால் அதற்கு முழுக்க முழுக்க உங்க எழுத்து மட்டுமே காரணம்....

வில்லனையும் ரசிக்கும் படியான கதாபாத்திரமாக உருவாக்க முடிகிறது என்றா அதற்கு எத்தனை இளகிய மனசு வேண்டும் .... “நமக்கு கேடுதல் நினைதாலும் பதிலுக்கு அவர்களுக்கு நன்மையே செய்” என்று ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதை அத்தனை இனிமையாக அடுத்தவர்களுக்கு சொல்ல முடிகிறது என்றால் அதற்கு எத்தனை பக்குவம் வேண்டும் .... அந்த பக்குவம் தான் என்னை உங்களின் பக்கம் இழுத்தது....

மயங்காதே மனமே என்று ‘statutory warning’ போட்டு தான் இந்த கதையை ஆரம்பிச்சாங்க... ஆனால் மித்ரனை பார்த்த நாளில் இருந்து அவனின்பால் கொஞ்சம் கொஞ்சமாக என் மனம் சரிந்துவிட்டது என்பது தான் உண்மை....🤩🤩 இப்படி உருகி உருகி ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி விட்டு அதன் மேல மயங்காதே என்று சொன்னால் இது நியாயமா....

பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்ந்தேன் காட்சி பிழை போலே

ஒரு அலையை வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே....

இது தான் என் மனதில் மித்ரனுக்கான இடம்...

அஃறிணைக்கு கூட உயர்திணை என்கிற உயரத்தை கொடுத்த பிரம்மா...Black Audi யை பார்க்கும் போது எல்லாம் ஹாய் சொல்ல தோணுது🤩🤩🤩

இன்னும் நிறைய நிறைய கதைகள் எழுதி எங்களை எல்லாம் உங்கள் எழுத்தின் மூலம் வசியம் செய்ய என்னுடைய வாழ்த்துக்கள் 🍫🍫🍫🍫💐💐💐💐
 
Last edited:

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#5
சைட்டுக்கு புதுசா வர்றவங்க யாராவது இதைப் பாத்தா... ஏதோ லவ் லெட்டர்னு நினைப்பாங்க மச்சான்.😄😄😄
Thank you so much Prema.💟💟
நான் மென்மையானவளா...?😉
 

Premalatha

General
SM Team
#6
சைட்டுக்கு புதுசா வர்றவங்க யாராவது இதைப் பாத்தா... ஏதோ லவ் லெட்டர்னு நினைப்பாங்க மச்சான்.😄😄😄
Thank you so much Prema.💟💟
நான் மென்மையானவளா...?😉
அது தான் தெரியவில்லை என்று சொல்லிவிட்டேனே🤪🤪😜

காதல் கடிதம் தான்... உனக்கு இல்லை... உன் எழுத்துக்கு🤩🤩🥳🥳
 

Advertisements

Latest updates

Top