• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன் விழிகளில் வீழ்ந்த நொடி- 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 48

நாட்டாமை
Author
Joined
Nov 5, 2021
Messages
80
Reaction score
138
அத்தியாயம்_8

இன்று நேத்திராவை பழிவாங்கியதிலும், தன்முன் அதிர்ந்து நின்ற பிரபுவின் முகமும் துருவின் கண்முன் வந்து கூத்தாட விசில் அடித்தபடி அறைக்குள் நுழைந்தவன். அங்கு சோபாவில் அமர்ந்து தன் மடிகணினியை தட்டிக்கொண்டிருக்கும் நேத்ராவை பார்த்தவுடன் குழம்பிய மனநிலையில் இதை யார் உனக்கு கொடுத்தது என கேட்டான்.

அவன் குரலில் நிமிர்ந்தவள், இதை யாரும் எனக்கு கொடுக்கல என் சம்பாதியத்தில நானே எனக்காக வாங்கியது என அழுத்தி சொல்ல.

எது அந்த பொட்டிகடை சம்பாதியமா.. என நக்கலாக சிரித்தவன். ஒரு நாளைக்கு எவ்வளவு ஒரு 500 ரூபாய் கிடைக்குமா என கேட்டு திரும்பியவன் முன்பு சென்று அந்த கவலை உங்களுக்கு எதுக்கு என்றபடி அவன் கையில் பணத்தை திணிக்க.

என்ன இது என்றபடி அவன் புருவம் உயர்த்த, இந்த வீட்டுக்கு நா என் தன்மானத்தை விட்டு வந்திருக்கலாம். ஆனா என் சுயகௌரவத்தை விட்டு அடுத்தவங்க முன்பு நின்னு பழக்கம்இல்ல, அதுவும் உன் முன்பு என சிரித்தவள். நீ வாங்கிவந்த துணிக்கான பணம். இன்னும் என் நிலையில இருந்து நான் தாழ்ந்து போகல, அப்படியே தாழ்ந்தாலும் உன்கிட்ட எல்லா வந்து நிற்க்கமாட்டேன். பணம் சரியா இருக்கா இல்ல இன்னும் தரனும்மா என அவள் பேசியதில், கழுத்து நரம்புகள் புடைக்க நின்றவன் தன் வலிமை முழுவதும் திரட்டி அவள் கன்னத்தில் தன் கரத்தினை பதித்தான்.

அவன் வலிமையில் தீப்பட்டது போல் கன்னம் எறிய. கண்கள் மூடி நின்றவளின் கழுத்தை பிடித்து சுவற்றில் சாய்த்து, உன் தன்மானம், சுயகௌரவம் இதையெல்லாம் உன் வீட்டோட வைத்துக்கொள். இங்க அதுவும், என் வீட்ல நீ இருக்கும் வரைக்கும் நீ ஒரு அடிமை, அதுவும் உன் அப்பாவுக்காக என்கிட்ட வந்த அடிமை அதை மனதில் வைத்துக்கொள் என அவனின் ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தத்துடன் கனலை கக்க. கை அவள் கழுத்தை இறுக்க, அந்த வலியிலும் அவள் முகத்தில் சிரிப்பை கண்டவன்.

தன் கையிலிருந்த பணத்தை பறக்கவிட்டு. உன் பணம் யாருக்கு வேணும். நீ என் அடிமை அதை உனக்கு புரிய வைக்கும் முதல் நிலைதான் நான் வாங்கி வந்த துணி. அதை நீ உணரனும் உணர வைப்பேன் என்றபடி தன் அலுவலக அறைக்குள் நுழைந்துக்கொண்டான்.

அவன் பேசிசென்றது அவளை உருக்க. அதைவிட அவன் வாங்கிதந்த உடை தன் உடலின் ஒவ்வொரு இடத்திலும் பட்டு அருவெருப்பை உண்டாக்க அதில் சினந்தவள். அதை கலைத்து தன் பழைய கல்யாண உடைக்கு மாறி இருந்தாள்.

கரணிடம் உதவி கேட்கலாம் என மனம் கூற, மூளையோ அவன் மூலம் உன் நிலைமை குடும்பத்திற்கு தெரியவரும். அப்பாவுக்காக "பொறுத்து பழகு" என எச்சரிக்க. முகத்தை கழுவிக்கொண்டு வந்தவள்,

தன் கை கடிகாரத்தை பார்கக அது இரவு வெகு நேரம் ஆகவில்லை என அறிவிக்க. டேக்சியின் மூலம் ஒரு பிரம்மாண்ட கடைக்கு சென்று தனக்கு தேவையான ஆடைகளை வாங்கிக்கொண்டு தன் அறைக்குள் நுழைய, இன்னும் பணங்கள் அங்கங்கு விழுந்திருப்பதை பார்த்தவள். ஒரு பெரு மூச்சோடு அனைத்தையும் எடுத்து அங்கிருந்த புத்தகத்தினுள் வைத்தவள். அங்கிருந்த சோபாவில் உறங்கிவிட்டாள்.

வழக்கம் போல் கிழக்கில் சூரியன் உதிக்க, அனைவரும் அவர் அவர் வேலைக்கு சென்றனர்.

சாலையில் பயணம் செய்துக்கொண்டிருந்தவனின் கண்ணில்பட்டது நேத்ராவின் நோ பாய்லிங் ஃபூட் . அதை கண்டவன் மனதில் ஏதோ தோன்ற டிரைவரிடம் கையை காண்பித்து ஓட்டலின் முன் செல்ல சொன்னான். அவன் கூறியது போல் வண்டி அங்கு நிற்க. உள்ளே சென்றவன் அங்கிருந்த ஊழியரிடம் உங்க சமையல்காரிய கூப்பிடு என கூற.

அப்படி யாரும் இங்க இல்ல சார். பெயர் சொல்லுங்க என ஊழியன் கேட்க அவள மாதிரியே இங்க இருக்கவங்களுக்கும் திமீர் அதிகம் என முனுமுனுத்துக்கொண்டே.

அங்கு வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாமல் போக. சமையல்காரி...ஏய் சமையல்காரி எங்கடி இருக்க என உரக்க கத்தினான்.

அவன் குரலில் வேலையை பாதியில் விட்டு வந்தவளை பார்த்தவன். வாமா என் அடிமையே, யாரை கேட்டு நீ இங்க வந்த என புருவம் உயர்த்தி கேலி தொனியில் கேட்க.

அதில் வெகுண்டவள் அங்கிருந்த ஊழியரை பார்த்து நீங்க போங்க என கூறிவிட்டு. யாரை கேட்கனும் என்றாள் அவன் விழிகளை பார்த்து.

அவ்வளவு தைரியம் வந்திடுச்சா உனக்கு. இந்த பொட்டிகடையில சம்பாத்தித்த பணத்தை தானே நேற்று எனக்கு தந்த. அவ்வளவு பணம் இந்த கடையில என பேச்சை விடுத்து அமைதியாக சுற்றி பார்த்து புருவத்தை கேள்வி குறியாய் உயர்த்தி, எங்க வீட்டு வேலைக்காரன் சம்பளமே உன் சம்பாதியத்தை விட அதிகம் என்றபடி சிரிக்க.

அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் என அலட்சியமாக பதில் சொல்ல.

உன் அப்பாவோட மொத்த வரலாறும் என்கிட்ட இருக்கு அதுவும் இல்லாம நீ எனக்கு அடிமையா இருக்க, என அவளுக்கு கோபம் வரும் அடிமை என்ற வார்த்தையை அழுத்தி சொல்லி. இப்படி இருக்கும் பொழுதே உனக்கு இவ்வளவு திமீர் என்றாள் சுயமா இருந்த எவ்வளவு திமீர் இருக்கும் என அவன் கேட்டதில் ஆழ்ந்த மூச்செடுத்தவள்.

ராவணன் சீதையை அபகரிக்கும் பொழுதும், இம்சிக்கும் பொழுதும் எந்த இடத்திலும் பொறுமையை கைவிடாமல் பன்னிரு திங்கள் தன்மானத்தையும் சுயகௌரவத்தையும் எந்த இடத்திலும் யாருக்காகவும் விட்டு கொடுக்காமல் இராவணன் இடத்தில வாழ்ந்தா சீதை அதே போல் உன் "வஞ்சம்சூழ் படலம்" எவ்வளவு திங்கள் இருந்தாலும் நானும் அதே பொறுமையோட கௌரவமா தான் இருப்பேன்.

அப்புறம், என அவன் முன் கைகளை கட்டியபடி என் சுயகௌரவத்திற்கு நீ திமீர்னு பட்டம் கொடுத்தா அது உன் தப்பு நான் எதுவும் செய்ய முடியாது என அவள் கூறி முடிக்க. கடையின் உள்ளே நுழைந்த வாடிக்கையாளரை பார்த்து வாங்க என்றபடி அவர்கள் அருகே சென்றாள்.

இருடி உனக்கு இருக்கு என்றபடி அவன் கதைவை பட்டென்று அடித்து மூட அதன் ஓசையில் அனைவரின் கண்களும் மூடிதிறந்தது.

ஆர்கானிக் ஃபார்மில் கரணும் பிரபுவும் ஒவ்வொரு இடமாக நோட்டம்விட்டபடி ஏற்றுமதியும் சந்தை விற்பனை பற்றியும் பேசிக்கொண்டிருக்க, தீடிரென்று பிரபு கரணை நோக்கி இனி நாம அந்த கண்டெக்ஷன் ஆஃபிசுக்கு போக வேண்டாம் என கூற.

ஏன் மாமா அவன் சொன்னானா. என கரண் கோபமாக கேட்க.

அது நம்முடையது இல்ல கரண் நமக்கு சொந்தம் இல்லாத பொருளை நாம என்னைக்கும் அடையமுடியாது.

மாமா அது நம்ப சம்பாதியத்தில உருவானது லீகலா ஆக்ஷன் எடுக்கலாம் என வெகுண்டெழ,

அது உனக்கும் எனக்கும் தான் தெரியும்
இங்க சட்டத்தின் முன்பு ஆவணம் மட்டும் தான் பேசும். இப்ப அது நம்ம பெயர்ல இல்ல. இதெல்லா தெரிந்தும் நீ கேஸ் போட்டா உண்மைக்கும் ஆவணத்திற்கும் நடக்கும் துலாபாரம் போரில் ஆவணம் தான் வெற்றி பெறும். அவன் நம்மை வெளிய போனு சொல்லுவதற்கு முன்பு நாமளா வெளிய வந்திடனும் இல்லைனா நம்ப நிலைய நாமே தாழ்த்துவதற்கு சமம்.

ஆனா மாமா, அங்க வேலை செய்யும் எல்லோரும் நம்மை எதிர்பார்பாங்களே என கரண் கூற. எதிர்பார்பாங்க ஆனா சி.இ.ஓ வேற ஒருவர்னு தெரிந்ததும் அவங்க அவங்க வேலையை அமைதியா பார்ப்பாங்க. நீ இந்த காய் பழத்திற்கு ரேட் பிக்ஸ் பண்ணிடு என பேச்சை மாற்ற அவனும் அமோதிப்பாக தலையசைத்தான்.

நேத்ராவிடம் பேசிவிட்டு தன் அலுவலகத்திற்கு சென்றவன் தன் சுழல் நாற்காலியில் அரை வட்டம் அடித்தபடி கையில் பேனாவை சுழற்றிக்கொண்டு அவள் பேசிய தன்மானம் சுயகௌரவம் என்ற வார்த்தையே மூளையில் முனுமுனுக்க, உன்ன அப்படியே விட்டா நான் துருவ்வர்மா இல்லடி இனி இந்த வர்மா யாருனு உனக்கு தெரியும் என்றபடி திட்டம் வகுக்க செயல்பட்டான்.

பிரபுவிற்கு கரண் பேசியதே நினைவில் ஓட. தன் நானைவை மாற்ற எண்ணி கரணை பார்த்து அக்னிகிட்ட பேசினியா என்று கேட்டார்.

அவர் திடீர் கேள்வியில் முதலில் குழம்பி பின்பு சுதாரித்து ஹாஆ.. பார்த்து பேசினேன் மாமா என கூற.

எப்படி இருக்கா என்று கேட்டார்.

எப்படி இருக்கானா ரொம்ப மாறிட்டா ஒரு நாள்ள நம்ப அக்னியா இதுனு யோசிக்க வைக்கும் அளவுக்கு மாறிட்டா. என்ன சொல்லுற கரண் என பிரபு விழிக்க.

எனக்கும் அவ பேசிறது ஒன்னும் புரியமாட்டங்குது மாமா. ஆனா அவ நம்ப பழைய அக்னி இல்ல என அவன் கூற்றில் குழம்பியவர் அவளை பார்க்க முடியுமா என்று தன் மகளை பார்க்கும் ஆர்வத்துடன் கேட்டார். கரண் ஆம் என தலையசைக்க வேலையை முடித்தவர்களின் வண்டி மாலையில் அக்னியின் கடையின் முன் நின்றது.

அங்கு மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தவள் தன் தந்தை உள்ளே நுழைவதைக் கண்டவள் அப்பா..ஆ என்று ஓடிசென்று கட்டிக்கொண்டாள். அவளை அணைத்து உச்சி முகர்ந்தவர். அவள் கூந்தலை ஒதுக்கி எப்படி இருக்க என்று கேட்டார்.

அவர் கேள்வியில், அவர் விழிகளை ஆழ்ந்துப் பார்த்தவள் வாங்க உட்காரலாம் என தன் அறைக்குள் அழைத்து சென்றாள்.

உள்ளே நுழைந்தவள் அம்மா எப்படி இருக்காங்க என கேட்க. இன்னும் தன் கேள்விக்கு பதில் வராததை எண்ணியவர். ரொம்ப மாறிட்ட என்றார்.

என்ன மாறிட்ட என அவள் கேட்க. என் கேள்விக்கு பதில் சொல்லாமல் நீ இதுவரைக்கும் இருந்தது இல்ல. என அவள் விழிகளை பார்த்து சொல்ல. அதில் மௌனம் ஆனவள். தன்நிலை பெற்றோரை பாதிக்கும் என அறிந்து நீர் திரையிட்ட கண்களை பெருமூச்சின் மூலம் உள்ளிழுத்துக் கொண்டு.

நம்ப தோட்டம் எப்படி இருக்கு இன்னைக்கு எல்லாம் அறுவடை செய்யனும் ரேட் பிக்ஸ் பண்ணணும். என தங்கள் தொழில் விவரத்தை பற்றி பேசியவளின் சாமர்த்தியத்தை எண்ணி தந்தையானவர் என்றும் போல் இன்றும் வியந்துபோனார்.

தந்தையை பார்த்த மகிழ்வில் மாலை இருள் சூழும் முன் துளசி செடியுடன் வீட்டிற்கு வந்தவளை பார்த்த சுஹா என்னமா செடியெல்லாம் என்று தேட்டத்தில் அமர்ந்தபடி கேட்க.

சிரித்தபடி அவர் அருகே சென்றவள். காலையில துளசி மாலையும் தீர்த்தமும்
கடவுளுக்கு சமர்பிப்போம், காலையில தோட்டத்த பார்த்தேன் துளசி செடியே இல்ல அதான் இங்க வளரகலானு வாங்கிட்டு வந்தேன்.

கருந்துளசியும் வாங்கிட்டு வந்திருக்க என சுஹா கேள்வியாக கேட்க .ஆமா இந்த மழை காலத்தில் ஏற்படும் ஜலதோஷத்தைப் போக்க இதை விட சிறந்த மருந்து வேற என்ன இருக்கு என்றபடி யாழினி அனிதா உதவியுடன் தோட்டத்தின் முகப்பு முழுவதும் துளசி வனத்தை உருவாக்கியிருந்தாள்.

இவள் இங்கு துளசி வனத்தை உருவாக்க துருவன் அங்கு நேத்ராவையும் அவன் தந்தையையும் வீழ்த்த திட்டம் தீட்டினான்.

துருவன் வகுத்த திட்டத்தின் முதல் படி நாளை அரங்கேற தன்னால் ஏதும் செய்ய முடியாத சூழலில் நின்றிருந்தாள் அக்னிநேத்ரா.

நொடிக்கும்.....
 




Anamika 48

நாட்டாமை
Author
Joined
Nov 5, 2021
Messages
80
Reaction score
138
ஹாய் நட்பூஸ்,
முன் அத்யாயத்திற்கு லைக் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்....

இந்த பதிவிற்கும் தங்கள் நிறை குறைகளை சொல்லுங்கள் பிரண்ஸ்....
 




Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,313
Location
Sri Lanka
இந்த அரை மண்டையன் துருவ் ரொம்ப தான் ஓவரா போறான் போஸ்டிங்க பிடிக்க பிடிக்க ஒரு பொண்ணு வாழ்க்கைய இப்படஎல்லாமா அழிப்பாஙக சேடிஸ்ட் ...
 




Saki B

மண்டலாதிபதி
Joined
Nov 12, 2021
Messages
406
Reaction score
406
Location
Tamilnadu
avana aniku nethra aranjathoda vitruka kudathu...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top