• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன் விழிகளில் வீழ்ந்த நொடி_6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 48

நாட்டாமை
Author
Joined
Nov 5, 2021
Messages
80
Reaction score
138
ஹாய் நட்பூஸ்;
காலம் தாழ்த்தி வந்ததற்கு மன்னிப்பு.. சில தவிர்க்க முடியாத வேலையில் இருந்தேன் இன்று தான் முடிந்தது, முடிந்தவுடன் ஓடி வந்துவிட்டேன்.
முன்பு போல் இந்த அத்யாயத்திற்கும் உங்களுடைய கருத்தை எதிர்பார்த்து காத்திருப்பேன் உங்கள் அனாமிகா48.

இனி தினமும் யுடிவரும் மக்கா...

கதை சுருக்கம்
பெங்களூர் சென்ற துருவ் அங்கு அக்னியை பார்த்து அவளுடைய விவரங்களை அறிந்து அவளுடன் தொழில் பேச விழைகிறார் ஆனால் அக்னி அவனுடனான தொழில் பேச்சை தவிர்த்து வெளியே செல்கிறாள் அங்கு அனிதா பிரசவலியில் துடிக்க அவளை மருத்துவமனையில் சேர்த்து துருவிற்கு தகவல் கூறி செல்கிறாள். சுஹா அவளை கண்டு அவளிடம் பேச அவளின் வீட்டிற்கு செல்ல பிரபு அவரின் பேச்சை தவிர்க்கிறார். தந்தையின் தவிர்பில் மனம் கலங்கி அக்னி தன் கடந்த காலத்திற்கு செல்கிறாள். அதில் அக்னி துருவின் முதல் சந்திப்பு தொழில் வட்டாரத்தில் துருவை பழிவாங்க சிலர் எடுக்கும் முடிவுகள் அதில் பிரபு வீழ்த்த அக்னியிடம் அவளுக்கு அறியாமல் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக் கொள்கிறான்.

இனி.....


அத்யாயம்_6

காலை வேளையில் சூரியன் தன் செந்நிறகதிரை விசும்பின் உள்ளிருந்து வீச. தனக்ககே உரித்தான பிரம்மாண்டங்களுடன் வாழை மரத்தூண்கள், தென்னபாளை தோரணம், எங்கும் வண்ண பூ அலங்காரம், மின்னும் வண்ண விளக்குகள், கேரள மோள வரவேற்பு என இருந்தது திருமண மண்டபம்.

பிரபு வாசலில் நின்று அனைவரையும் வரவேற்க அப்பொழுது வருகை தந்தான் துருவ். அவனை பார்த்தவர்

ஹாய் வாங்க வர்மா, என கைக்குலுக்கலோடு உள்ளே அழைத்து முதல் வரிசையில் அமரவைத்த பிரபுவை ஐயர் அழைக்க சென்றுவிட்டார்.

கரண் மேடையில் அமர்ந்து மந்திரம் சொல்ல, பச்சை (ம) வெள்ளை கலந்தப் பட்டில், துளசி மாலையுடன் மேடை ஏறி அனைவரையும் வணங்கி அமர்ந்தால் அக்னிநேத்ரா.

அங்கு அவளைக் கண்டவன் முதலில் வியந்து பிறகு குழம்பி ஷீலாவை பார்த்து சமையல்காரியா இவங்க பெண்ணு என்று கேட்க. ஷீலாவின் எஸ் சார் என்ற வாக்கியத்தில், கோபமானவன் முன்பே சொல்ல தெரியாதா என கடுகடுத்தான்.
வேறு வழியின்றி தொழில்வட்டத்தில் தன்னை நிலைப்படுத்த தனது திட்டத்தை செயல்படுத்த எண்ணி அமைதியானான்.


சடங்குகள் முடிய அனைவரின் ஆசியைப்பெற்ற மங்கலநாணை கையில் ஏந்திய ஐயர் கெட்டிமேளம் கெட்டிமேளம் என கூற. அனைவரும் அட்சதை தூவ எழுந்து நிற்க . எதற்காக இவ்வளவு நேரம் காத்திருந்தானோ அந்த நேரம் வந்தவுடன். தன் அழுத்தமான நடையில் ஷூ காலுடன் மேடை ஏறியவன் பிரபுவை நோக்கி என் பொண்டாட்டிக்கு நீங்க எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணலாம் என அமைதியாக அதே சமயம் அழுத்தமாக சொல் வெடியைப் போட்டான்.

அவன் கேட்டதில் அனைவரும் அதிர்ந்து ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள.

வர்மா என்ன சொல்லுறிங்க ஒன்னும் புரியல என குழம்பிய மனதுடன் கேட்டார் பிரபு.

என் பொண்டாட்டிக்கு நீங்க எப்படி இன்னொரு கல்யாணம் பண்ண முடியும்? என மீண்டும் அதே கேள்வியை துருவ் ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தி சொல்ல. படபடத்த இதயத்துடன் ஒன்றும் புரியாமல், சாரி துருவ் இங்க என் மகளுக்கு தான் கல்யாணம் நடக்குது உங்க மனைவிக்கு இல்லையே என கூறி முடிக்க.

இதோ எங்க ரிஜிஸ்டர் மேரேஜ் சட்டிஃபிகேட் என பிரபுவின் முன் நீட்ட அதை வாங்கி பார்த்த பிரபு அதிர்ந்து மகளை பார்க்க. மேடையிலிருந்து எழுந்தவள் அதை வாங்கி பார்க்க துருவ்வர்மா உடன் அக்னிநேத்ரா என இருக்க ஒன்றும் புரியாமல் சிலையென நின்றாள்.

மேடையில் இருந்த துருவ் அங்கிருந்த அனைவரையும் நோக்கி எனக்கும் நேத்ராவிற்கும் முன்பே கல்யாணம் ஆகிவிட்டது. ஆனா இது எங்க குடும்பத்திற்கு தெரியாது. இது எங்க குடும்ப பிரச்சணை அதை நாங்க பார்த்துக்கொள்கிறோம். கல்யாணத்துக்கு வந்த எல்லாருக்கும் நன்றி எல்லாரும் சாப்பிட்டு போங்க என கூற அனைவரும் அரசல் புரசலாகப் பேசியபடி அவ்விடத்தை விட்டு சென்றனர்.

பிரபுவிடம் திரும்பிய துருவ் இப்ப என்ன சொல்லுறிங்க, சந்தேகம் தீர்ந்திருக்கும்னு நினைக்குறேன் இப்ப நான் அவள அழைச்சிட்டு போகலாமா என கேட்க.

அவன் புறம் திரும்பிய நேத்ரா ஏய், யார ஏமாற்ற வந்திருக்க உனக்கும் எனக்கும் எப்ப கல்யாணம் ஆச்சு என அவன் சட்டையை பிடித்து கேட்க. அதில் கடுப்பானவன் தன் வலிய கரத்தால் அவள் கன்னத்தை தாக்கினான்.

யாரு மேல கைய வைக்குற, கொன்னுருவ என சுட்டு விரல் காட்டு எச்சரிக்க, கன்னத்தை பிடித்து கண் மூடி நின்றிருந்தவளைப் பார்த்த கரண் ஒரு பொண்ணு மேல கை வைக்குறியே உன்ன என்றபடி கையை ஓங்கி செல்ல.

அதை தன் இட கரத்தால் பிடித்தவன் என் பொண்டாட்டிய அடிக்க எனக்கு உரிமை இருக்கு நீ யார் அதை கேட்க. என்றபடி அவனை தள்ளிவிட கரண் மண்டப தூணில் மோதி நின்றான்.

எப்படி நான் உனக்கு பொண்டாட்டி ஆக முடியும் இது பொய்.. பொய்... என அவள் வீங்கிய கன்னத்துடன் வன்மையான ஒலிக் கொண்டு கத்த.

தன் சுண்டு விரலால் காதை குடைந்தவன் ஏய் எதுக்கு கத்துற. இதை ப்ரு பண்ணணும்னா கோர்ட்டுக்கு தான் போகனும் ஆனா அதுக்கு முன்னாடி உன் கிட்ட பேசனும் அந்த ரூமுக்கு வா என அவன் செல்ல. அனைவரையும் ஒரு கணம் பார்த்தவள் அவன் என்ன கூற போகிறான் என்னும் ஆவலுடன் அவன் பின்னே சென்றாள்.

நாற்காலியில் அமர்ந்திருந்தவன் சிவந்த விழிகளுடன் நின்றிருந்தவளைப் பார்த்து. ஏய் சமையக்காரி நீயினு எனக்கு முன்பே தெரிந்நதிருந்தால் இந்த கல்யாண நாடகம் நடந்திருக்காது. ஆனா எனக்கே இப்பதா, நீதான் பிரபு உடைய பெண்ணுனு தெரிந்தது அதானல எதுவும் செய்ய முடியல. உங்க அப்பாவால் எனக்கு இரண்டு ப்ராஜக்ட் லாஸ் அவரை பழிவாங்க வந்த இடத்தில நீ என உரக்க சிரித்தவனை செவ்வரி படர்ந்த உண்கண்ணில் (மையிட்ட கண்) பொசுக்க, சிரிப்பினூடே அப்புறம் எப்ப கல்யாணம் நடந்ததுனு கேட்ட இல்ல, இந்த பேப்பர்ஸ பாரு என அவன் நீட்ட. அதை பார்த்தவள் சிந்தனை அன்று ஷீலாவிற்கு கையொப்பமிட்டது ஞாபகம் வர அவள் புருவ முடிச்சைக் கண்டவன்.

வாவ்...வ்.. கண்டுபிடிச்சிட்டியே இப்படி இன்னும் இரண்டு பேப்பர்ஸ்ல நீ சைன் பண்ணியிருக்க அது என்னன்னு நேரம் வரும் பொழுது சொல்லுறேன்.

இனி நீ என் கூட தான் இருக்கனும் போலாமா என எழும்ப.

என்னால் உன் கூட வர முடியாது என்ன செய்ய முடியுமோ செய் என அவள் கதவை நோக்கி நகர.

உங்க அப்பா சட்ட விரோதமா சேர்த்து வைத்திருக்க சொத்துக்கு என் பக்கத்திலிருந்து ஒரு போன் கால் போதும்
கேரளாவில் இருந்து மும்பை வரைக்கும் ரைடு நடக்கும் அப்புறம் நியுஸ் சேனலுக்கு எல்லா உங்க அப்பா தான் தீனி. பாவம் அவரு ஹாட் பேஷன்ட் வேற நீ எடுக்க போற முடிவுதான் என வெளியே சென்றான்.

அவன் குரலில் வன்மத்தைக் கண்டவள் சிந்தித்து அமைதியாக வெளியே சென்றாள்.

அவள் குழம்பிய முகத்தை பார்த்தவர்கள் அவளிடம் சென்று என்னாச்சி என கேட்க.

துருவ் தன் கனத்த குரலில் போகலாமா என புருவம் உயர்த்தி கேட்க.

அவ உன் கூட வரமாட்டா என ஷேத்தரா கூற. அத அவ சொல்லட்டும் என அவளை பார்த்து என்ன? என கேட்க.

போகலாம், என்ற நேத்ராவின் சம்மதத்தை கேட்டவர்கள் அவளை அதிர்ந்து பார்த்தனர். ஷீலா அவள கூட்டிட்டு வா நேரமாகுது என்றபடி மண்டபத்தை விட்டு வெளியே சென்றான்.

அக்னி என்ன இது என பிரபு கேட்க, தன் கண்ணீரை மறைத்தவள் அப்பா இது என்னோட விருப்பம் நீங்க என்ன சொல்லுறிங்க என அவரின் சம்மதத்ததை கேட்க.

அதா நீ முடிவெடுத்திட்டியே மா, நான் என்ன சொல்ல முடியும் என கூறியவரை அணைத்து விட்டு, தாயிடம் செல்ல அவர் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றுவிட, கரணிடம் சென்றவள் சாரி என்று மேடையிலிருந்து இறங்கி செல்ல ஷீலா அவள் பின்னே ஓடினாள்.

இவை அனைத்தும் நாடகம் போல் நடந்தேற ஏதும் புரியாமல் விழித்து நின்றனர் அக்னியின் குடும்பத்தினர்.

காரின் அருகே சென்றவளுக்கு கதவு திறந்துவிட்ட ஷீலா தானும் அவள் அருகே அமர்ந்தாள். வண்டி துருவின் வீட்டை அடைந்தவுடன் ஷீலாவும் ஓட்டுநரும் இறங்க, திரும்பி அக்னியை பார்த்தவன் இங்கு நான் என்ன சொல்லுறனோ அதுக்கு தலைய மட்டும் ஆட்டனும் அங்க நடந்ததை எல்லாம் சொல்லனும்னு நினைத்த உன்னோட குடும்பம் என பாதியில் பேச்சை நிறுத்தியவனைப் பார்த்து முரைத்தவளை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் வா என இறங்கினான்.

உள்ளே நுழைந்தவர்களை ஹாலில் இருந்த பார்த்த சுஹா யாருடா இந்த பொண்ணு அதுவும் கல்யாணக்கோலத்தில என கேட்க.

அம்மா இவ அக்னிநேத்ரா என்னுடைய மனைவி என அறிமுகப்படுத்தியவனை குழம்பிய முகத்துடன் பாரத்தார் சுஹா. என்டா சொல்லுற என்றபடி அருகே வந்தாள் அனிதா.

நானும் இவளும் இரண்டு வருஷமா லவ் பண்ணோம் எங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் ஆகிடுச்சி வாழ்க்கையில ஒரு பெரிய இடத்துக்கு வந்த பிறகு உங்க கிட்ட சொல்லானு இருந்தோம் அதுக்குள்ள இவ வீட்ல கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டாங்க. அதா இப்படி, இனி நம்ப வீட்ல தான் இருப்பா என கூற.

என்னதா விடுதியில தங்கி படித்தாலும் கல்யாணத்திற்குகூட குடும்பத்தை அழைக்காத பழக்க என்ன மேலை நாட்டு பழக்கம் என கடிந்து செல்ல.

நேத்ராவின் வெளிறிய முகத்தை பார்த்த அனிதா ஓடிச்சென்று அக்னியை கட்டிக்கொண்டாள். அந்த அணைப்பு அவளுக்கு ஏதோ ஒரு வகையில் ஆறுதலாக இருக்க அவளை மீறி வழிந்த கண்ணீர் அனிதாவின் தோளில் பட்டது.

ஏய் எதுக்கு அழற, நாங்களும் உன்னோட குடும்பம் தான் இரு வரேன் என்றவள் ஆரத்தி தட்டுடன் வெளியே வந்து இருவருக்கும் ஆரத்தி சுற்றி அழைக்க. அக்னி கலசத்தை தட்டி செவ்வண்ண பாதங்களுடன் உள்ளே நுழைந்தவளிடம் பூஜை அறைக்குள் அழைத்து சுஹா விளக்கேற்ற சொல்ல.

தனக்கு பிடித்த பரந்தாமன் சிலையின் முன் விளக்கேற்றியவள் இனி என் வாழ்க்கை எப்படி இருக்கும்னு எனக்கு தெரியல எதுவாக இருந்தாலும் அது என் குடும்பத்தை எந்த விதத்திலும் பாதிக்ககூடாது என கண்களை மூடி நின்றாள்.

துருவ் அலுவலகம் சென்றதும் சுஹா நடந்த அனைத்தையும் கல்யானுக்கு சொன்னார்.

கண்களை மூடி அமர்ந்திருந்த நேத்ரா அருகே சென்ற அனிதா சாப்பிடலாம் வா என அழைக்க. இல்ல வேண்டாம் என கூற. வாமா சாப்பிடலாம் துருவ் இப்ப வரமாட்டான் வா என சுஹாவும் அழைக்க.

அவனுக்காக யாரு இங்க காத்திட்டு இருக்கா என எண்ணியபடி அமைதியாக சென்றாள். அப்பொழுது பிளே ஸ்கூலில் இருந்து யாழினியுடன் வந்த சூர்யா அக்னியை பார்த்து நிற்க.

யாழி என குழந்தையை தூக்கிய அனிதா. சூர்யா இது நேத்ரா நம் துருவுடைய மனைவி என அவள் கூற. அவள் கூற்றில் அதிர்ந்தே விட்டான்.

என்னடி சொல்லுற என அவன் கேட்க. அவள் துருவ் சொன்ன அனைத்து கதையையும் சொல்லி முடிக்க, நேத்ராவை பார்த்தவன் ஹாய் நான் சூர்யா என அறிமுகம் செய்துக் கொண்டான்.

மாலையில் வீட்டிற்கு வந்த கல்யான் அங்கிருந்த நேத்ராவிடம் சென்று சாப்பிட்டியா மா என அவர் கேட்டது அவளுக்கு தன் தந்தையை நினைவு படுத்தியது. அவர் அவளுக்கு சொல்லிக்கொடுத்த முதல் பாடம் நம்ப வீட்ல புதியவர் யாரை பார்த்தாலும் முதலில் சாப்பிட்டியானு கேட்கனும் இல்லைனா சாப்பிட வைக்கனும் என்ற பிரபு கற்பித்தது நினைவில் ஓட. சாப்பிட்டேன் என கூறினாள்.

யாழி செல்லம் என அழைத்தபடி உள்ளே நுழைந்த துருவனைப் பார்த்த நேத்ராகவிற்கு மிகுந்த ஆச்சரியம். இதுவரை அவனை விரைத்த முகத்துடன் பார்த்தவளுக்கு இந்த முகம் புதிது.

தேனீரோடு அனைவரும் அவள் அருகே அமர்ந்தனர். கல்யான், அம்மா நேத்ரா மதியம் சாப்பாடு எப்படி இருந்தது, வீடு எப்படி இருக்கு என அவளிடம் பேசி பேசி இலகுவான மனநிலைக்கு மாற்றியிருந்தார் .

அவளின் முகம் சற்று தெளிந்ததைக் கண்டவர் நீ ரெஸ்ட் எடு சாப்பிடும் போது கூப்பிடுறோம் என அவர் கூற அங்கு வந்த அனிதா உன்னோட துணியெல்லாம் எங்க இருக்கு என கேட்க.

துணி எதுவும் கொண்டு வரல என அக்னி கைகளை பிசைந்தபடி நின்றாள். கல்யான் துருவை அழைத்து நேத்ராவிற்கு துணி எடுக்கும்படி கூற அவளை பார்த்து முரைத்தவன் போகலாமா என அழுத்தமாக கேட்க. அவன் பார்வையில் மிரண்டவள் அப்படியே நின்றுவிட்டாள்.

நொடிக்கும்.....
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
ரைட்டர் ஜீ, லாங் டைம் நோ சீ.....

அக்னி இப்ப கூட ரொம்ப சாப்ட் ஆ தான் இருக்கா, ஆன இந்த துரு தான்🙄🙄🙄🙄

ஏண்டா இது எல்லாம் ஒரு காரணமா டா உனக்கு, பழிவாங்க பக்கி பயலே😒😒😒

ஆன உன் குடும்பம் சோ ஸ்வீட்.....

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Anamika 48

நாட்டாமை
Author
Joined
Nov 5, 2021
Messages
80
Reaction score
138
ரைட்டர் ஜீ, லாங் டைம் நோ சீ.....

அக்னி இப்ப கூட ரொம்ப சாப்ட் ஆ தான் இருக்கா, ஆன இந்த துரு தான்🙄🙄🙄🙄

ஏண்டா இது எல்லாம் ஒரு காரணமா டா உனக்கு, பழிவாங்க பக்கி பயலே😒😒😒

ஆன உன் குடும்பம் சோ ஸ்வீட்.....

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
Tq so much for your comments sis
Today eve epi varum padiyukal
 




Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,313
Location
Sri Lanka
ஏதோ இந்த அரை மண்டையனை அக்னி ழவ் டார்ச்சர் செய்து கட்டிக்கிட்ட மாதிரில முறைக்கறான் இவன் 🙄🙄 அவ ட்ரெஸ் கூட எடுக்காம வந்ததுக்கு காரணம் நீ தான் மேன்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top