• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Matured content உயிர் 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
கொஞ்சம்‌ மருத்துவ அறிவு, உளவியல்‌ மற்றும்‌ சமூகவியல்‌ படிப்பு, சுமாரான அழகு, செக்ஸில்‌ ஈடுபாடு, அன்பாக பழகும்‌ குணம்‌ இவை இருக்கும்‌ யாரையும்‌ இப்படி செவிலித்‌ துணையாக பயன்படுத்தி பிரச்னைகளைத்‌ தீர்க்கலாம்‌ என்று நம்பினார்‌ மாஸ்டர்ஸ்‌.

ஆனால்‌, அவருக்கும்‌ சறுக்கியது. அவரிடம்‌ பயிற்சி பெற்று செவிலித்‌ துணையாக பணிபுரிந்த ஒரு பெண்‌ தன்‌ கணவரை விவாகரத்து செய்துவிட்டே இந்த வேலைக்கு வந்ததாக சொன்னார்‌. ஆனால்‌, அது உண்மையில்லை. இருவருக்குள்‌ ஏதோ சண்டை. கோபித்துக்‌ கொண்டு பிரிந்த அந்த பெண்‌ அப்படியே இந்த வேலைக்கு வந்துவிட்டார்‌.

திரும்பவும்‌ மனைவியைத்‌ தேடிக்‌ கொண்டு வந்த அவருடைய கணவர்‌, தன்‌ மனைவி செய்யும்‌ வித்தியாசமான வேலையைப்‌ பற்றிக்‌ கேள்விப்பட்டு ஷாக்‌ ஆகி கோர்ட்டில்‌ வழக்கு போட்டு விட்டார்‌. 'என்‌ மனைவிக்கு மாஸ்டர்ஸ்‌ தப்பான அட்வைஸ்‌ கொடுத்து, அவளைக்‌ கட்டாயப்படுத்தி பல ஆண்களோடு பழகச்‌ சொல்கிறார்‌. படுக்கைக்கு அனுப்புகிறார்‌' என அவர்‌ வழக்கு போட, அமெரிக்காவே அதிர்ந்தது. 'இப்படிக்‌ கூடவா சிகிச்சை தருவார்கள்‌?' என பலர்‌ முகத்தை சுளித்தனர்‌.

மாஸ்டர்ஸின்‌ வழக்கறிஞர்கள்‌ அட்வைஸ்‌ செய்தபோதுதான்‌ இதன்‌ விபரீதம்‌ அவருக்கு புரிந்தது. “இது சிகிச்சை என்று நீங்கள்‌ சொல்லலாம்‌ ஆனால்‌, சட்டம்‌ இதை அனுமதிக்கவில்லை. உங்கள்‌ பார்வையில்‌ இது சிகிச்சை... சட்டத்தின்‌ பார்வையில்‌ இது கிட்டத்தட்ட விபசாரம்‌. வழக்கு நடந்தால்‌ நமக்கு தோல்வி கிடைக்கும்‌. கோர்ட்டுக்கு வெளியே சமாதானம்‌ பேசி செட்டில்‌ செய்து கொள்ளுங்கள்‌” என்றனர்‌ அவர்கள்‌. அந்த தம்பதிக்கு பெரும்‌ தொகை கொடுத்து வழக்கை வாபஸ்‌ பெறவைத்து நிம்மதிப்‌ பெருமூச்சு விட்டார்‌ மாஸ்டர்ஸ்‌.

'இந்த சிகிச்சையில்‌ கொள்கைரீதியாக எனக்கு உடன்பாடு இல்லை' என்று சொல்லி அதோடு இதை நிறுத்திக்‌ கொண்டார்‌ அவர்‌.

எந்த செக்ஸ்‌ நிபுணரும்‌ மாஸ்டர்ஸின்‌ இந்த பரிசோதனை முயற்சியை ஏற்கவில்லை. 'இதெல்லாம்‌ அபத்தம்‌. சமூக நியதிக்கு எதிரானது' என கண்டித்து இந்தவகை சிகிச்சையை நிராகரித்து விட்டார்கள்‌. சட்டப்படியும்‌ இதற்கு தடை போடப்பட்டு விட்டது.

ஆபாச அலையை வளர்த்தவர்‌... சமூகம்‌ கெட்டுப்‌ போவதற்கு காரணமானவர்‌... ஒழுக்கக்கேட்டைத்‌ தூண்டியவர்‌... இப்படி பல பெயர்களைச்‌ சூட்டி மாஸ்டர்ஸை அமெரிக்காவில்‌ ஒரு குழுவினர்‌ திட்டினாலும்‌ கலிலியோ, டார்வின்‌ போன்ற அறிஞர்களுக்கு நிகராக அவரை மதிக்கும்‌ பலர்‌ அங்கே உண்டு.

ஆனால்‌, கின்ஸியோடு ஒப்பிடும்போது - மாஸ்டர்ஸ்‌ சந்தித்த எதிர்ப்புகள்‌ ரொம்ப குறைவு. மாஸ்டர்ஸ்‌ ஆராய்ச்சியை நடத்துவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க சமூகத்தின்‌ ஒழுக்கக்கேட்டை அம்பலப்படுத்திய கின்ஸி, தினம்‌ தினம்‌ நரக வேதனையை அனுபவித்தார்‌...

77 வயதில்‌ திருமணம்‌!

மாஸ்டர்ஸ்‌ ஏற்கெனவே திருமணமானவர்‌. வர்ஜீனியா ஜான்சனும்‌ ஏற்கெனவே திருமண பந்தத்தில்‌ இருந்தவர்‌. ஆனால்‌, மாஸ்டர்ஸும்‌ வர்ஜீனியா ஜான்சனும்‌ பல வருடங்களாக இணைந்து செக்ஸ்‌ பற்றி செய்த ஆராய்ச்சி, அவர்களுக்குள்‌ நெருக்கத்தை ஏற்படுத்தி விட்டது. தங்கள்‌ முதல்‌ துணைகளை இருவருமே விவாகரத்து செய்துவிட்டு, 1969-ம்‌ ஆண்டு திருமணம்‌ செய்து கொண்டனர்‌. அப்போது மாஸ்டர்ஸுக்கு 53 வயது. அதன்‌ பிறகு 23 ஆண்டுகள்‌ சேர்ந்து வாழ்ந்த அவர்கள்‌, கடந்த 92-ம்‌ ஆண்டு விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தனர்‌. அதோடு அவர்களது ஆராய்ச்சி, சிகிச்சை எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது.

“செக்ஸ்‌ ஆராய்ச்சி செய்து பல குடும்பங்களில்‌ படுக்கை அறையில்‌ சந்தோஷம்‌ நிலவ காரணமான ஜோடி இது. இவர்களாலேயே சேர்ந்து வாழ முடியவில்லை என்றால்‌ மற்றவர்கள்‌ என்ன செய்வார்கள்‌? திருமண அமைப்பின்‌ மீதே சந்தேகம்‌ வரும்‌ அல்லவா?” என அப்போது பல செக்ஸ்‌ நிபுணர்கள்‌ வெளிப்படையாகவே கவலைப்பட்டார்கள்‌.

ஆனால்‌, அந்த 77 வயதில்‌ மூன்றாவதாக ஜெரால்டின்‌ என்ற பெண்மணியைத்‌ திருமணம்‌ செய்து கொண்ட மாஸ்டர்ஸ்‌ 85 வயதில்‌ இறக்கும்‌ வரை அந்தப்‌ பெண்ணோடு வாழ்ந்தார்‌.

நம்ப முடியாத உண்மை।

'கர்ப்பம்‌' - இந்த வார்த்தையை உச்சரிக்கவும்‌, ஒரு கர்ப்பிணியை டி.வி-யில்‌ காட்டவும்‌ அமெரிக்காவில்‌ தடை இருந்தது. லூசில்லே பால்‌ அமெரிக்காவின்‌ புகழ்பெற்ற டி.வி. நடிகை. கடந்த 53-ம்‌ ஆண்டு இவர்‌ தயாரித்து நடித்த 'ஐ லவ்‌ லூசி' என்ற தொடர்‌ பரபரப்பாக போய்க்‌ கொண்டிருந்தபோது இவர்‌ கர்ப்பமானார்‌. தொடரை நிறுத்த விரும்பாமல்‌, இவரது கேரக்டரே கர்ப்பமாவது மாதிரி கதையை மாற்றினார்‌ டைரக்டர்‌.

ஆனால்‌, 'கர்ப்பம்‌' என்ற வசனமும்‌, கர்ப்பிணியின்‌ திரைத்‌ தோற்றமும்‌ ஆபாசமானது என்று தடை செய்தார்கள்‌ டி.வி. நிலையத்தினர்‌. பாதிரியார்கள்‌, யூத மதகுருக்கள்‌ பலரை சந்தித்து, கர்ப்பம்‌ என்பது ஆபாசமான விஷயம்‌ இல்லை. இது மத நம்பிக்கைகளுக்கு எதிரானதும்‌ இல்லை. இதை தாராளமாக டி.வி-யில்‌ காட்டலாம்‌' என லூசில்லே பால்‌ விளக்கம்‌ கொடுத்தார்‌. இதை தொடர்ந்து லூசில்லேவுக்கு ஆதரவாக கருத்து சொன்னார்கள்‌ - பாதிரியார்களும்‌ மத குருமார்களும்‌. இதன்பின்‌ லூசில்லே கர்ப்பிணியாக தோன்றுவதற்கு அனுமதித்த டி.வி. நிலையம்‌, 'கர்ப்பம்‌' என்ற வசனத்தை மட்டும்‌ சென்ஸார்‌ செய்துவிட்டது. அதற்கு பதிலாக, 'நான்‌ எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்‌' என்ற வசனத்தை பயன்படுத்தச்‌ சொன்னது. அதை திக்கித்‌ திக்கி பேசி காமெடி ஆக்கினார்‌ அவர்‌.

உலகிலேயே டி.வி-யில்‌ தோன்றிய முதல்‌ கர்ப்பிணி அவர்தான்‌!


**************

கிட்டத்தட்ட பதினான்காயிரம்‌ ஆண்களிடம்‌ இன்டர்வியூ நடத்தி, அவர்களது பழக்கவழக்கங்களைத்‌ தொகுத்து, ஆண்களின்‌ செக்ஸ்‌ பழக்கம்‌ எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும்‌ ஒரு புத்தகத்தை எழுதினார்‌, டாக்டர்‌ ஆல்‌ஃபிரட்‌ சார்லஸ்‌ Sletodl. ‘Sexual behaviour in Human Male’ creim HSU புத்தகம்‌ 1948-ல்‌ வெளிவந்தது. கின்ஸி அதில்‌ சொல்லியிருந்த எல்லாமே வெடிகுண்டு சமாசாரங்கள்‌. புத்தகம்‌ வெளியான அடுத்த நொடி, அமெரிக்காவே பற்றி எரிந்தது. நான்‌ பேசிய அத்தனை ஆண்களில்‌ 95 சதவிகிதம்‌ பேர்‌ வாழ்க்கையில்‌ ஒரு தடவையாவது சுயஇன்பம்‌ அனுபவித்ததாக ஒப்புக்கொண்டார்கள்‌. ஐந்து சதவிகிதம்‌ பேர்‌ அவசரமாக, சேச்சே! எனக்கு அப்படி எந்த பழக்கமும்‌ இல்லை' என்று மறுத்தார்கள்‌. அநேகமாக, அவர்கள்‌ பொய்‌ சொல்கிறார்கள்‌ என்றுதான்‌ எனக்குத்‌ தோன்றுகிறது”. அதேபோலவே ஆண்களில்‌ பெரும்பாலானவர்கள்‌ ஓரினச்‌ சேர்க்கை எப்படிப்பட்ட உணர்வுகளைத்‌ தரும்‌ என ஒரு தடவையாவது முயற்சித்துப்‌ பார்த்ததாகச்‌ சொன்னார்கள்‌. இதுதவிர, அமெரிக்க ஆண்களில்‌ பத்து சதவிகிதம்‌ பேர்‌ பெரியவர்கள்‌ ஆனதும்‌, ஓரினச்சேர்க்கைப்‌ பிரியர்களாக இருக்கிறார்கள்‌.'

ஆண்களில்‌ எண்பத்தைந்து சதவிகிதம்‌ பேர்‌ கல்யாணத்துக்கு முன்பே செக்ஸ்‌ உறவை அனுபவித்து இருக்கிறார்கள்‌. தங்கள்‌ மனைவி கற்போடு இருக்க வேண்டும்‌ என எதிர்பார்க்கும்‌ இவர்கள்‌ அப்படி இல்லை.

முப்பது முதல்‌ நாற்பத்தைந்து சதவிகித ஆண்கள்‌ திருமணத்துக்குப்‌ பிறகு மனைவியைத்‌ தவிர வேறு பெண்களோடு உறவு வைத்திருக்கிறார்கள்‌.'

கின்ஸி, அடிப்படையில்‌ ஒரு விலங்கியல்‌ ஆராய்ச்சி யாளர்‌. அவர்‌ செக்ஸைப்‌ பற்றி ஆராய வந்ததே தனிக்‌ கதை. பள்ளிக்கூடத்தில்‌ படிக்கும்‌ போதே அவரை ஈர்த்த விஷயம்‌ அது! பள்ளியில்‌ அவர்‌ சாரணர்‌ படையில்‌ சேர்ந்தார்‌. அதில்‌ சேரும்‌ விடலைப்‌ பள்ளிப்‌ பையன்களுக்கு ஒரு ஒழுக்கக்‌ கையேடு கொடுப்பார்கள்‌. அதில்‌ ஒரு பாரா அவரைக்‌ குழப்பியது. மீசை அரும்பும்‌ வயதில்‌ பையன்கள்‌ தப்பான வழிகளில்‌ போகக்‌ கூடாது என்பதற்காக கொடுக்கப்படும்‌ கையேடு அது! அதில்‌, 'பையன்கள்‌ விடலைப்‌ பருவத்தைத்‌ தொடும்‌ சமயத்தில்‌ கடவுள்‌ அவர்களுக்கு ஓர்‌ அற்புதமான திரவத்தைப்‌ பரிசாகக்‌ கொடுப்பார்‌.

அது அவர்கள்‌ உடம்பில்‌ சுரக்க ஆரம்பிக்கும்‌. அவர்கள்‌ வேகமாகவும்‌, உயரமாகவும்‌ வளர்ந்து திடகாத்திரமான வாலிபன்‌ ஆவதற்கு, இந்தத்‌ திரவம்தான்‌ உதவுகிறது. அதை எந்த வழியிலும்‌ வீணாக்காமல்‌ பத்திரமாக சேமித்து வைத்தால்‌, மட்டுமே அவர்கள்‌ வளரமுடியும்‌. அதை வீணாக்குபவர்களை கடவுள்‌ தண்டித்து விடுவார்‌' என்றிருந்தது. வளர்ந்து கல்லூரிக்குப்‌ போனபிறகு அதுபற்றி மேலும்‌ தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார்‌ கின்ஸி. ஆனால்‌, விலங்குகளின்‌ செக்ஸ்‌ உறுப்புகள்‌, பழக்கங்கள்‌ பற்றிய‌ புத்தகங்களதான அவருக கிடைத்தன. மனிதர்கள்‌ பற்றிய எடு புத்தகங்களைத்‌ தேடிய அவருக்கு ஏமாற்றம்தான்‌ மிஞ்சியது.

ப்ளுமிங்டன்‌ நகரில்‌ இருக்கும்‌ இண்டியானா பல்கலைக்கழகத்தில்‌ விலங்கியல்‌ பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தபிறகு, அவர்‌ தனது பாடத்துக்கு வெளியிலும்‌ ஆர்வம்‌ காட்டத்‌ தொடங்கினார்‌. 'திருமணம்‌ மற்றும்‌ குடும்ப உறவு' என்ற தலைப்பில்‌ செக்ஸ்‌ உணர்வுகள்‌ பற்றி அவர்‌ கொடுக்கும்‌ உரை, இண்டியானா பல்கலைக்கழகத்தில்‌ ரொம்ப பாப்புலர்‌. மாணவர்கள்‌ மட்டுமின்றி, வெளிநபர்களும்கூட வந்து கேட்குமளவு அவரது உரை சுவாரஸ்யமானது. தனது உரையைக்‌ கேட்க வருகிறவர்களிடம்‌ தனிப்பட்ட முறையில்‌ பேசி அவர்களது செக்ஸ்‌ அனுபவங்களை விசாரிப்‌ பார்‌ கின்ஸி. அப்போதுதான்‌ அவருக்கு அந்த உண்மை புரிந்தது. முறைகேடான செக்ஸ்‌ உறவுகள்‌ பற்றி மக்கள்‌ நினைப்பதற்கும்‌, நிஜமாக நடப்‌பதற்கும்‌ இடையே ஏகப்பட்ட இடைவெளி இருந்தது.

'ராக்‌ஃபெல்லர்‌ அறக்‌ கட்டளை அப்போது செக்ஸ்‌ தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி செய்து கொண்டிருந்தது. தனது ஆராய்ச்சி குறித்து அந்த அறக்‌கட்டளைக்கு எழுதி நிதியுதவி கேட்டார்‌ கின்ஸி. உடனே அது கிடைத்தது. பல்கலைக்கழகத்தின்‌ தலைவர்‌ ஹெர்மன்‌ வெல்ஸ்‌ அனுமதி கொடுக்க, ஆராய்ச்சியை ஆரம்பித்து விட்டார்‌ கின்ஸி. 1938-ம்‌ ஆண்டு தொடங்கிய அந்த ஆராய்ச்சி அவர்‌ இறக்கும்‌ வரை தொடர்ந்தது.

கின்ஸியின்‌ ஆராய்ச்சி, மாஸ்டர்ஸ்‌ செய்ததைப்‌ போல பரிசோதனைக்கூட செக்ஸ்‌ இல்லை. அவரது காலத்தில்‌ அதைச்‌ செய்திருக்கவும்‌ முடியாது. அவர்‌ மனிதர்களின்‌ செக்ஸ்‌ மனோபாவத்தை அம்பலப்படுத்த விரும்பினார்‌. அதனால்‌ முழுக்க இன்டர்வியூக்கள்தான்‌!

அதற்கு மூன்‌ நடந்த செக்ஸ்‌ சர்வேக்கள்‌ வேறுவிதமாக இருந்தன. ஆராய்ச்சியாளர்‌ ஆணாக இருந்தால்‌, பெண்களை முகத்துக்கு நேரே பார்த்து அந்தரங்கமான கேள்விகள்‌ கேட்க கூச்சப்படுவார்‌. ஆண்களிடமே ஆண்கள்‌ கேட்கத்‌ தயங்கும்‌ சந்தர்ப்பங்களும்‌ உண்டு. இதற்காக பொத்தாம்‌ பொதுவாகக்‌ கேள்விகள்‌ அடங்கிய ஒரு படிவத்தைக்‌ கொடுத்து, அதில்‌ tick அடிக்கச்‌ சொல்வார்கள்‌. இப்படி பலரும்‌ டிக்‌ அடித்துக்‌ கொடுக்கும்‌ படிவங்களை வைத்து ஆராய்ச்சி இறுதி செய்யப்படும்‌.

ஆனால்‌, கின்ஸிக்கு இந்த டைப்‌ ஆராய்ச்சியில்‌ விருப்பம்‌ இல்லை. அவர்‌ ஒவ்வொருவரையும்‌ முகத்துக்கு நேரே பார்த்துக்‌ கேள்விகள்‌ கேட்டு தகவல்‌ திரட்ட விரும்பினார்‌. இப்படிப்பட்ட நேரடி இன்டர்வியூக்களில்‌ யாரும்‌ பொய்சொல்ல மாட்டார்கள்‌ என அவர்‌ நம்பினார்‌. மொத்தம்‌ 521 கேள்விகள்‌ அடங்கிய படிவத்தை அவர்‌ வடிவமைத்தார்‌. அதில்‌ முந்நூறு கேள்விகள்‌ செக்ஸ்‌ தொடர்பானவை... மற்றவை, தகவல்‌ கொடுப்பவர்‌ பற்றிய தகவல்‌ குறிப்புகள்‌.

தகவல்‌ தரும்‌ யாருடைய பெயரையும்‌ அவர்‌ பதிவு செய்யவில்லை. வயது, இனம்‌, தொழில்‌, குடும்ப உறுப்பினர்கள்‌ எத்தனை பேர்‌... என்கிற மாதிரி தகவல்களாகத்தான்‌ அவை இருக்கும்‌. இப்படி ரகசியம்‌ காக்கப்படும்‌ என நம்பினால்தான்‌ அவர்கள்‌ உண்மை பேசுவார்கள்‌ என்பது கின்ஸிக்கு தெரியும்‌ (இண்டியானா பல்கலைக்கழகத்தில்‌ கின்ஸி ஆராய்ச்சி நடத்திய மையம்‌ இன்னமும்‌ கின்ஸி செக்ஸ்‌, பாலினம்‌ மற்றும்‌ மகப்பேறு ஆராய்ச்சி நிலையம்‌' என்ற பெயரில்‌ இயங்கிவருகிறது. அங்கு இந்த எல்லா படிவங்களும்‌ பொக்கிஷம்‌ போல பாதுகாக்கப்படுகின்றன. யார்‌ வேண்டுமானாலும்‌ போய்‌ இவற்றைப்‌ படிக்கலாம்‌)

ஒரு நபரிடம்‌ இன்டர்வியூவை முடிக்க ஒரு மணி நேரத்துக்கும்‌ மேல்‌ ஆனது. இந்த வேகத்தில்‌ போனால்‌, இந்த ஒற்றை ஆராய்ச்சியை முடிக்கவே தன்‌ வாழ்நாள்‌ போதாது என்பதை உணர்ந்த கின்ஸி மூன்று உதவியாளர்களை செலக்ட்‌ செய்து, அவர்களுக்கும்‌ பயிற்சி கொடுத்துத்‌ தன்னைப்‌ போலவே இன்டர்வியூ செய்ய சொன்னார்‌.

கின்ஸி ஒருநாளில்‌ பதினாறு, பதினேழு மணி நேரம்‌ உழைக்கிற டைம்‌. பல்கலைக்கழகத்துக்கு தேடிவரும்‌ நபர்கள்‌ குறைவாக இருந்ததால்‌, அவர்‌ அமெரிக்கா முழுக்க சுற்றி பலரை சந்தித்தார்‌. குறிப்பாக சிறைக்கைதிகள்‌. செக்ஸ்‌ தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில்‌ இருந்த பலரை அவர்‌ சந்தித்து இன்டர்வியூ செய்தார்‌. அதோடு ஆண்‌ செக்ஸ்‌ தொழிலாளர்களையும்‌ விட்டு வைக்கவில்லை. அவரது டீம்‌ எடுத்த மொத்த இன்டர்வியூக்களில்‌ இருபத்தைந்து சதவிகிதம்‌ கைதிகளுடையது. ஐந்து சதவிகிதம்‌ செக்ஸ்‌ தொழிலாளிகளுடையது.
 




SSuba

Moderator
Staff member
Joined
May 13, 2018
Messages
170
Reaction score
18
Location
Coimbatore
நம்ப முடியாத உண்மை!

கின்ஸியின்‌ ஆராய்ச்சி முடிவுகள்‌ கொடுத்த உத்வேகத்தில்‌ ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைதான்‌ நிர்வாணப்‌ படங்களுக்குப்‌ புகழ்பெற்ற 'பிளேபாய்‌.' இதை ஆரம்பித்த ஹ்யூச்‌ ஹெஃப்னர்‌ பள்ளிக்கூடத்தில்‌ படு மக்கு. அவருடைய அம்மா ஆசிரியை. குழந்தை “பிளேபாய்‌' புத்தகத்துடன்‌ ஹ்யூச்‌ ஹெப்னர்‌... ஹெஃப்னரின்‌ அறிவில்‌ ஆச்சர்யமான அந்த நிபுணர்‌, “இவனுக்குப்‌ பாடம்‌ மட்டும்தான்‌ பிடிக்கவில்லை. மற்றபடி, இவன்‌ ஜீனியஸ்‌. ஒரு சராசரி பையனைவிட இவனது அறிவுத்திறன்‌ அதிகமாக இருக்கிறது. பின்னால்‌ இவன்‌ பெரிய ஆளாக வருவான்‌” என்று சொன்னார்‌.

பெரியவன்‌ ஆனதும்‌ ஹெஃப்னர்‌ செய்த முதல்‌ வேலை, தன்‌ வீட்டில்‌ இருந்த பர்னீச்ச்களை அடமானம்‌ வைத்து அறுநூறு டாலர்‌ கடன்‌ வாங்கியது. அந்தப்‌ பணத்தில்‌ ஐந்நூறு டாலரை மொத்தமாக ஒரு ஸ்டூடியோவில்‌ கொடுத்து, ஒரு காலண்டருக்காக எடுக்கப்பட்ட நடிகை மர்லின்‌ மன்றோவின்‌ நிர்வாணப்‌ படங்களை வாங்கினார்‌.

நண்பர்கள்‌ அவரைப்‌ பைத்தியம்‌ மாதிரி பார்க்க, அவர்‌ மீதி நூறு டாலரை பேப்பருக்கும்‌, அச்சுக்கூலிக்கும்‌ செலவழித்து, 'பிளேபாய்‌' முதல்‌ இதழைக்‌ கொண்டு வந்தார்‌. மக்கள்‌ ஏற்பார்களா... போலீஸ்‌ வந்து பிரச்னை செய்யுமா... விற்க எத்தனை மாதமாகும்‌?' என பல கேள்விகளோடு 53-ம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதம்‌ மார்க்கெட்டுக்கு வந்த முதல்‌ இதழ்‌, சில நாட்களில்‌ காலி. அடுத்த ஆறு மாதங்களில்‌ அந்த பத்திரிகைக்கு அமெரிக்கா முழுக்க டிமாண்ட்‌ அதிகமானது.

நகைச்சுவை கலந்த செக்ஸ்‌ பத்திரிகையாக அதை நடத்த விரும்பிய ஹெஃப்னர்‌, தன்‌ பத்திரிகையை எந்த மாதிரி மனிதர்கள்‌ வாங்குகிறார்கள்‌ என தெரிந்துகொள்ள ஒரு சர்வே நடத்தினார்‌. ஆபாச பத்திரிகை என முத்திரை குத்தப்பட்ட பிளேபாயை, படுக்கையில்‌ திருப்தியடைய முடியாத கிழவர்கள்‌, வக்கிரபுத்தி கொண்ட அடித்தட்டு இளைஞர்கள்‌, அதிகம்‌ படிக்காதவர்கள்‌... இப்படிப்பட்டவர்கள்தான்‌ வாங்கிப்‌ படிப்பார்கள்‌ என நினைத்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்தப்‌ பத்திரிகையை அதிகம்‌ வாங்கியது- கல்லூரி பேராசிரியர்கள்‌, நடுத்தர வர்க்கத்தில்‌ இருக்கும்‌ கம்பெனி நிர்வாகிகள்‌, குடும்பத்‌ தலைவிகள்‌... இப்படிப்பட்டவர்கள்தான்‌.

செக்ஸ்‌ என்பது வாழ்க்கைக்குத்‌ தேவையான அம்சம்‌ என அமெரிக்கர்கள்‌ உணர்ந்துவிட்டதாக அவர்‌ தீர்மானித்தார்‌.


******************************************

இது தவிர பல கல்லூரிகளுக்கு சென்று உரை நிகழ்த்துகிற பழக்கம்‌ அவருக்கு இருந்தது. ஆனால்‌, இந்த உரைகளுக்காக கட்டணம்‌ எதையும்‌ அவர்‌ வாங்கியதில்லை. அதற்கு பதிலாக அதைக்‌ கேட்கும்‌ மாணவர்‌களையும்‌ மற்றவர்களையும்‌ வந்து தங்கள்‌ அனுபவங்களைச்‌ சொல்லும்படி அழைப்பு விடுத்தார்‌.

இவ்வளவு அனுபவங்களையும்‌ அவர்‌ தொகுத்துப்‌ புத்தகமாக வெளியிட்ட போதுதான்‌ அமெரிக்கா பற்றி எரிந்தது. அது தடிமனான புத்தகம்‌... சாதாரண ஆசாமிகள்‌ படித்தாலே கொட்டாவி வருகிற அளவுக்குக்‌ கடினமான மருத்துவ பாஷை. பல பக்கங்களை புள்ளிவிவர வரைபடங்கள்‌ அடைத்துக்‌ கொண்டிருந்தன. இவ்வளவும்‌ இருந்தும்‌ அந்தப்‌ புத்தகம்‌ ஐந்து மாதங்களில்‌

இரண்டு லட்சம்‌ பிரதிகள்‌ விற்றுத்‌ தீர்ந்தன. இதன்‌ விற்பனை வேகம்‌ அதிகரித்த அதே அளவுக்கு எதிர்ப்புகளும்‌ அதிகரித்தன. ஆனால்‌, முரட்டுப்‌ பிடிவாதக்காரரான கின்ஸி அசரவில்லை. ஆண்களை அம்பலப்படுத்திய அவர்‌, அடுத்துக்‌ குறிவைத்தது அமெரிக்க பெண்களை!

முந்தைய விவகாரம்‌ அணுகுண்டு என்றால்‌ இது ஹைட்ரஜன்‌ குண்டு...

கின்ஸி, ஆண்களைப்‌ போலவே அமெரிக்கப்‌ பெண்களைப்‌ பற்றியும்‌ ஆராய்ச்சி செய்கிறார்‌ என்ற தகவல்‌ பரவியதும்‌, நாடு முழுக்கப்‌ பதற்றம்‌ தொற்றிக்‌ கொண்டது. தங்கள்‌ தாயின்‌, மனைவியின்‌, மகள்களின்‌ அந்தரங்க வாழ்க்கையை கின்ஸி கிளறுவதாகப்‌ பலரும்‌ உணர்ந்தனர்‌. பெண்கள்‌ இயக்கங்கள்‌, சமூக அமைப்புகள்‌, மதவாதிகள்‌ என பலரும்‌ அவருக்கு எதிராகக்‌ கொடிபிடித்தனர்‌.

கின்ஸி வேலைபார்க்கும்‌ இண்டியானா பல்கலைக்கழகத்துக்கு எதிராக அவர்கள்‌ கொதிக்க, பல்கலைக்கழகத்தின்‌ தலைவர்‌ ஹெர்மன்‌ வெல்ஸ்‌ கவலையோடு கின்ஸியைக்‌ கூப்பிட்டுப்‌ பேசினார்‌. 'இனிமேல்‌ எந்த ஆராய்ச்சி செய்தாலும்‌ அதைப்‌ புத்தகமாக வெளியிட வேண்டாம்‌' என்று கேட்டுக்‌ கொண்டார்‌. அந்தக்‌ இண்டியானா கத்தோலிக்க பெண்கள்‌ அமைப்பு, கின்ஸிக்கு எதிராகக்‌ காட்டமாக அறிக்கை விட்டது. “ஆராய்ச்சி என்ற பெயரில்‌ தப்புத்தப்பாக எதையோ செய்கிறார்‌ கின்ஸி. இதனால்‌ எங்கள்‌ பெண்கள்‌ கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது. அவர்‌ அந்த ஆராய்ச்சியை நிறுத்திவிட்டு, பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால்தான்‌ எங்கள்‌ பெண்களை அங்கு படிக்க அனுப்புவோம்‌' என்று அறிவித்தது, அந்த அமைப்பு. ஆனால்‌, இதற்கு கின்ஸி அசரவில்லை. கடைசியில்‌ போராட்டம்‌ பிசுபிசுத்துப்‌ போனது.

ஆனால்‌, அவருக்கு அடுத்த சோதனை, அமெரிக்க கஸ்டம்ஸ்‌ ரூபத்தில்‌ வந்தது. செக்ஸ்‌ தொடர்பான ஓவியங்கள்‌, புத்தகங்கள்‌, வரைபடங்கள்‌ என பலவற்றை பல நாடுகளிலிருந்து வரவழைத்துத்‌ தன்‌ ஆராய்ச்சிக்‌ கூடத்தில்‌ வைத்திருந்தார்‌ கின்ஸி. 1950-ம்‌ ஆண்டு அவரது ஆராய்ச்சிக்‌ கூடத்தை அமெரிக்க கஸ்டம்ஸ்‌ அதிகாரிகள்‌ ரெய்டு செய்தனர்‌. அவர்‌ ஆபாசமான பொருட்களை சேகரித்து வைத்திருப்பதாகச்‌ சொல்லி, எல்லாவற்றையும்‌ அள்ளிக்கொண்டு போய்விட்டனர்‌ (கின்ஸி பொங்கி எழுந்து கஸ்டம்ஸ்‌ மீது வழக்கு போட்டார்‌. ஏழு ஆண்டுகள்‌ சட்டப்‌ போராட்டத்துக்குப்‌ பிறகு, 'அவை ஆராய்ச்சி நோக்கில்‌ கொண்டு வரப்பட்டவை. ஆபாச எண்ணம்‌ இல்லை. அதனால்‌ எல்லாப்‌ பொருட்களையும்‌ திருப்பிக்‌ கொடுங்கள்‌' என கோர்ட்‌ உத்தரவிட்டது. அவை திரும்பி வரும்போது கின்ஸி உயிருடன்‌ இல்லை!) .

எரிவதைப்‌ பிடுங்கினால்‌ கொதிப்பது அடங்கும் என்று கணக்குப்‌ போட்டனர்‌, கின்ஸிக்கு எதிரானவர்கள்‌. இந்த ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்யும்‌ ராக்‌ஃபெல்லர்‌ அறக்கட்டளைக்கு எதிராகவும்‌ அவர்கள்‌ பிரச்னை செய்ய, அந்த அறக்கட்டளை கின்ஸியின்‌ ஆராய்ச்சிக்கு நிதியுதவி தருவதை நிறுத்தியது. ஆனால்‌, அதற்குள்‌ கின்ஸி ஆராய்ச்சியை முடித்துவிட்டார்‌. சுமார்‌ ஆறாயிரம்‌ பெண்களிடம்‌ இன்டர்வியூ செய்து முடித்த அவரது குழு, புத்தகத்தைத்‌ தயாரிக்கும்‌ வேலையில்‌ இறங்கியது. ஆனால்‌, அதற்கு வேட்டுவைக்கும்‌ விதமாக ஒரு காரியம்‌ நடந்தது.

கின்ஸி தனது ஆராய்ச்சியை முடித்து விட்டார்‌. அவரது கணிப்பின்படி பல பெண்கள்‌ விதம்விதமான தப்பு செய்கிறார்கள்‌. அமெரிக்க பெண்களின்‌ மோசமான நடத்தை பற்றி 'ஷாக்‌' தகவல்கள்‌ அடங்கிய அவர்‌ புத்தகம்‌ விரைவில்‌ வரப்‌ போகிறது' என்கிற ரீதியில்‌ பயங்கரமான யூகங்களை பல பத்திரிகைகள்‌ விதம்விதமாக அள்ளிவிட்டுக்‌ கொண்டிருந்தன. இப்படி ஒவ்வொரு செய்தி வரும்போதும்‌ பெண்கள்‌ அமைப்புகள்‌ கோபத்தில்‌ கொதித்தன.

இதை இப்படியே விட்டால்‌, தன்‌ புத்தகமே வரவிடாமல்‌ செய்து விடுவார்கள்‌ என்பதை உணர்ந்த கின்ஸி, முன்னணிப்‌ பத்திரிகைகளின்‌ நிருபர்களை ஒருநாள்‌ தன்‌ ஆராய்ச்சிக்‌ கூடத்துக்குக்‌ கூப்பிட்டார்‌. ஆராய்ச்சி முடிவுகளை உங்களிடம்‌ வெளிப்படையாகச்‌ சொல்கிறேன்‌. அதற்கான ஆதாரங்களையும்‌ நீங்கள்‌ பார்க்கலாம்‌. இதை அடிப்படையாக வைத்து நீங்கள்‌ அதிகபட்சம்‌ ஐயாயிரம்‌ வார்த்தைகளுக்கு மிகாமல்‌ கட்டுரை எழுதிக்‌ கொள்ளலாம்‌. ஆனால்‌, புத்தக ரிலீஸுக்கு ஒருநாள்‌ முன்னதாகத்தான்‌ உங்கள்‌ கட்டுரை வெளியாக வேண்டும்‌' என நிபந்தனைகளை விதித்தார்‌. உஷாராக அதை அப்படியே ஒரு ஒப்பந்தமாக டைப்‌ அடித்து அவர்களிடம்‌ கையெழுத்தும்‌ வாங்கிக்‌ கொண்டார்‌. அதன்பிறகே பத்திரிகைகள்‌ அந்த ஆராய்ச்சி பற்றிய யூகங்களை எழுதுவதை நிறுத்தின.

1953-ம்‌ ஆண்டு செப்டம்பர்‌ 14-ம்‌ தேதி அந்தப்‌ புத்தகம்‌ வெளிவந்தது. பெண்களும்‌ திருமணத்துக்கு முன்பே செக்ஸ்‌ அனுபவங்களைத்‌ தேடுகிறார்கள்‌. திருமணமான அமெரிக்க பெண்களில்‌ இருபத்தைந்து சதவிகிதம்‌ பேர்‌ தங்கள்‌ கணவனுக்கு உண்மையாக இல்லை. திருமண பந்தத்துக்கு வெளியே அவர்கள்‌ வேறு யாரோ ஓர்‌ ஆணுடன்‌ தொடர்பு வைத்திருக்கிறார்கள்‌' என்ற அதிரவைக்கும்‌ உண்மையை சொன்னது, அந்தப்‌ புத்தகம்‌.

அதோடு மட்டுமில்லை... “அமெரிக்க பெண்களில்‌ 62 சதவிகிதம்‌ பேர்‌ திருமணத்துக்கு முன்போ, திருமணமான பின்னரோ சுயஇன்பம்‌ அனுபவித்து இருக்கிறார்கள்‌. கணிசமானவர்கள்‌ இதைத்‌ தொடர்ச்சியான பழக்கமாக வைத்திருக்கிறார்கள்‌. ஓரினச்சேர்க்கையில்‌ நாட்டமுள்ள பெண்களும்‌ நிறைய பேர்‌ உண்டு' என்பதையும்‌ அம்பலப்படுத்தினார்‌ கின்ஸி. குறிப்பாக, அதிகம் படித்த பெண்கள்தான்‌ விதம்விதமான செக்ஸ்‌ அனுபவங்களில்‌ ஆர்வம்‌ காட்டுகிறார்கள்‌ என்றார்‌ கின்ஸி.

சுயஇன்பம்‌ அனுபவிக்க அவர்கள்‌ பயன்படுத்திய முறைகள்‌ குறித்தும்‌ கின்ஸி சதவிகித வாரியாக பட்டியலிட்டு விலாவாரியாக எழுதியிருக்க, அமெரிக்க சமூகம்‌ கோபத்தின்‌ உச்சிக்கே போனது.

அமெரிக்கா மட்டுமில்லை... அவரது ஆராய்ச்சி முடிவுகள்‌ பல நாடுகளுக்கும்‌ போக, அமெரிக்க மக்கள்‌ தாங்கள்‌ அவமானப்படுவதாக உணர்ந்தனர்‌.

புகழ்பெற்ற பிரிட்டன்‌ பத்திரிகையான தி பீப்புள்‌- கின்ஸியின்‌ புத்தகம்‌ வெளியானதும்‌ அவசரமாக ஒரு சர்வே எடுத்தது. பதினெட்டு முதல்‌ ஐம்பது வயது வரையிலான பிரிட்டன்‌ பெண்கள்‌ ஆயிரம்‌ பேரிடம்‌ எடுக்கப்பட்ட சர்வே அது! தனது சர்வே முடிவுகளை வெளியிட்ட அந்தப்‌ பத்திரிகை, 'அமெரிக்க பெண்களைப்‌ போல பிரிட்டன்‌ பெண்கள்‌ மோசமானவர்கள்‌ இல்லை. நம்‌ பெண்கள்‌ இன்னமும்‌ ஒழுக்கத்தோடுதான்‌ இருக்கிறார்கள்‌. குடும்ப அமைப்பு, கற்புநெறி போன்ற பாரம்பரியமான மதிப்பீடுகள்‌ மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள்‌. கணவனுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்‌. திருமணமாகாத பெண்கள்‌ கன்னித்தன்மையைக்‌ காக்கிறார்கள்‌' என்று எழுதி, எரிகிற அமெரிக்கக்‌ கொள்ளியில்‌ எண்ணெய்‌ வார்த்தது.

கம்யூனிச செல்வாக்கோடு வல்லரசாகி அமெரிக்காவை ரஷ்யா மிரட்டிக்‌ கொண்டிருந்த சமயம்‌ அது! கம்யூனிச தத்துவம்‌ அமெரிக்க ஆட்சியாளர்களுக்குப்‌ பிடிக்கவில்லை. அமெரிக்காவிலும்‌ அந்த சித்தாந்தம்‌ நுழைந்துவிட்டால்‌ என்ன செய்வது என்ற பயம்‌ அமெரிக்காவை ஆட்டிப்‌ படைத்தது. அப்போது அரசுக்கு எதிராகச்‌ செயல்பட்ட பலரையும்‌ கம்யூனிஸ்ட்கள்‌ என சந்தேகித்து, கேள்வி கேட்காமல்‌ சிறையில்‌ அடைக்கும்‌ பழக்கம்‌ இருந்தது.

ஜோ மெக்கார்தி என்ற செனட்டருக்கு இதுதான்‌ வேலை. கின்ஸியின்‌ ஆராய்ச்சி அவரை கொதிக்க வைத்தது.ஆராய்ச்சி செய்ய வைத்தது கம்யூனிஸ்ட்கள்தான்‌. அமெரிக்க சமூகத்தை அழிக்க திரைமறைவில்‌ கம்யூனிஸ்ட்கள்‌ செய்த சதிதான்‌ இது” என்றார்‌ அவர்‌. “ரஷ்ய கம்யூனிஸ்ட்‌ தலைவர்கள்‌ யாரையாவது கின்ஸி தற்செயலாக எப்போதாவது ரோட்டில்‌ பார்த்து சும்மா ‘ஹலோ சொன்னார்‌' என செய்தி கிடைத்திருந்தால்‌ கூட போதும்‌... கின்ஸியை சிறையில்‌ தள்ளி கொன்றே போட்டிருப்பார்கள்‌. ஆனால்‌, கின்ஸியை சிறையில்‌ அடைக்கும்‌ அளவுக்கு மெக்கார்திக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அதனால்‌ கின்ஸி தப்பித்தார்‌.இருந்தாலும்‌ மதத்‌ தலைவர்கள்‌ அவரை சும்மா விடவில்லை.

ஏற்கெனவே ஒழுக்கக்‌ கேடு மலிந்திருக்கும்‌ நாட்டில்‌, இந்தப்‌ புத்தகங்கள்‌ மோசமான விளைவுகளைவை‌ ஏற்படுத்தும்‌ என கொதித்தார்கள்‌.

அதனை கின்ஸி அவர்களை அலட்சியம்‌ செய்தார்‌. “என்னுடைய ஆராய்ச்சியை விமரிசனம்‌ செய்யும்‌ தகுதி உங்களுக்கு இல்லை. விஞ்ஞானிகள்‌ சமுதாயம்‌ அதை மதிப்பீடு செய்யட்டும்‌. அவர்கள்‌ என்‌ ஆராய்ச்சியில்‌ தவறு இருப்பதாக சொன்னால்‌ நான்‌ ஏற்றுக்‌ கொள்‌கிறேன்‌” என்றார்‌.

மார்கரெட்‌ மீட்‌ என்ற பெண்மணி அந்த சமயத்தில்‌ அமெரிக்காவே மதித்த மானுடவியல்‌ அறிஞர்‌. அவர்தான்‌ அறிஞர்‌ சமூகத்திலிருந்து முதன்முதலாக கின்ஸிக்கு எதிராகக்‌ குரல்‌ கொடுத்தவர்‌. “கின்ஸியின்‌ புத்தகங்‌ களை தடை செய்ய வேண்டும்‌. அதற்காக நான்‌ போராடுவேன்‌” என அவர்‌ குரல்கொடுக்க, பெண்கள்‌ அமைப்புகள்‌, தங்களுக்கு வலுவான ஆதரவு கிடைத்த தெம்பில்‌ இன்னும்‌ ஆக்ரோஷம்‌ காட்டின.

மார்கரெட்கூட கின்ஸியின்‌ புத்தகங்களில்‌ புள்ளிவிவரக்‌ குறைகளையோ, அறிவியல்‌ ரீதியான தவறுகளையோ சொல்லவில்லை. சமுதாயத்தில்‌ தவறான பழக்கங்களை இது வளர்த்துவிடும்‌ என்றுதான்‌ அவர்‌ கவலைப்பட்டார்‌. “நிறைய பெண்கள்‌ தப்பு செய்யலாம்‌. நான்‌ இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால்‌, அவர்கள்‌ பயந்துகொண்டுதான்‌ தப்பு செய்கிறார்கள்‌. மற்ற பெண்கள்‌ எல்லாம்‌ கற்புநெறியோடு வாழும்போது நான்‌ மட்டும்‌ ஏன்‌ இப்படி மாறிவிட்டேன்‌' என்ற குற்ற உணர்ச்சி தப்பு செய்யும்‌ பெண்களை அடிக்கடி முள்ளாகக்‌ குத்துகிறது. இதனால்‌ அவர்கள்‌ காலப்போக்கில்‌ திருந்த வாய்ப்பிருக்கிறது. ஆனால்‌, இந்தப்‌ புத்தகம்‌ அந்த குற்ற உணர்ச்சியைப்‌ போக்கிவிடும்‌. கணவனை விட்டு அடுத்த ஆணுடன்‌ முறைகேடான தொடர்பு வைத்திருக்கும்‌ ஒவ்வொரு பெண்ணும்‌, 'நான்‌ மட்டுமா தப்பு செய்கிறேன்‌? அமெரிக்க பெண்களில்‌ நான்கில்‌ ஒருத்தி செய்யும்‌ அதே விஷயம்தானே இது!' என நினைக்க ஆரம்பித்து விட்டால்‌, அவ்வளவுதான்‌... அமெரிக்காவில்‌ குடும்ப அமைப்பே உடைந்து சிதறிவிடும்‌. இதைத்தான்‌ கின்ஸி விரும்புகிறாரா?” என்று கேள்வி எழுப்பினார்‌ மார்கரெட்‌.

ஆனால்‌ கின்ஸி தெளிவாக இருந்தார்‌. “அமெரிக்கர்களை அசிங்கப்படுத்தவோ, குடும்ப அமைப்பை சிதைக்கவோ நான்‌ ஆசைப்படவில்லை. நானும்‌ அன்பான மனைவி, மூன்று குழந்தைகள்‌ என இனிமையான குடும்ப வாழ்க்கை நடத்தும்‌ அமெரிக்கன்தான்‌. ஆனால்‌, குடும்பம்‌ வேறு... ஆராய்ச்சி வேறு. சமூகத்தில்‌ அமைதியாக நிகழ்ந்து வரும்‌ மாற்றங்களையும்‌, அவலங்களையும்‌ கண்டும்‌ காணாமல்‌ விட்டு, எல்லோரும்‌ ஒழுக்கமான பாதையில்‌ போகிறார்கள்‌' என்று குருட்டுத்‌ தனமாக நம்புவது, அறிஞர்களின்‌ வேலை இல்லை. மக்கள்தொகை கணக்கில்லாமல்‌ பெருகுவது, புதிது புதிதாக பால்வினை நோய்கள்‌ வருவது, இளம்‌ வயதிலேயே பெண்கள்‌ கர்ப்பமாவது, பிஞ்சுக்‌ குழந்தைகள்‌ மீது செக்ஸ்‌ சித்வதை என ஏராளமான விஷயங்கள்‌ தப்புத்தப்பாக நடக்கின்றன.

எதிர்காலத்தில்‌ இவை இன்னும்‌ மோசமாகலாம்‌. இதற்கெல்லாம்‌ என்ன காரணம்‌... யார்‌ குற்றவாளி... இந்தத்‌ தவறுகளை தவிர்க்க என்ன வழி என ஆராய்ச்சி செய்யாமல்‌ விட்டால்‌, இன்னும்‌ சில தலைமுறைகள்‌ தாண்டி உலகமே வெறியர்களின்‌ கூடாரமாகி விடும்‌. மனிதர்களின்‌ செக்ஸ்‌ பழக்கங்கள்‌ பற்றி ஆராய்ந்தால்தான்‌ இதன்‌ பின்னணி புரியும்‌. அடுத்த தலைமுறைக்கும்‌ சேர்த்து நன்மை செய்யும்‌ ஆராய்ச்சியைத்தான்‌ நான்‌ செய்தேன்‌” என்றார்‌ அவர்‌.

செக்ஸாலஜியின்‌ thanthai என்று இப்போது கின்ஸி புகழப்படுகிறார்‌. பக்தர்கள்‌ புண்ணியத்‌ தலங்களுக்கு யாத்திரை போவதுபோல, உலகெங்கும்‌ இருக்கும்‌ செக்ஸாலஜி நிபுணர்கள்‌ வாழ்க்கையில்‌ ஒரு தடவையாவது போக நினைப்பது, அவர்‌ நிறுவிய கின்ஸி ஆராய்ச்சி நிலையத்துக்குதான்‌! அமெரிக்க சமூகம்‌ பற்றி அவர்‌ சொன்ன எல்லாமே, உலகத்துக்கே பொருந்தும்‌ உண்மை என்பது ஐம்பது ஆண்டுகள்‌ கழித்து இப்போது புரிகிறது.

ஆனால்‌, அவர்மீது 'செக்ஸ்‌ வெறிபிடித்த மனநோயாளி', குழந்தைகளை செக்ஸ்‌ கொடுமைக்கு ஆளாக்கியவர்‌' என ஏகப்பட்ட குற்றங்களை பலர்‌ சுமத்த, இன்றைய தேதிவரை அதற்கெல்லாம்‌ பதில்‌ சொல்லியபடி இருக்கிறது கின்ஸி நிலையம்‌.

அந்தக்‌ குற்றச்சாட்டுகளின்‌ பின்னணி...

நம்ப முடியாத உண்மை।

செக்ஸ்‌ ஆராய்ச்சி செய்ததற்காக சிறையில்‌ அடைக்கப்பட்டு செத்துப்‌ போனவர்‌, வில்ஹெம்‌ ரீக்‌. ஆஸ்திரியாவைச்‌ சேர்ந்த உளவியல்‌ நிபுணரான இவர்‌, உயிர்களின்‌ தோற்றம்‌ பற்றிய சீரியஸான ஆராய்ச்சியில்‌ முதலில்‌ இறங்கினார்‌. செக்ஸாலஜி தொடர்பான கருத்தரங்குகள்‌, புத்தகங்கள்‌ என இவர்‌ செய்த பல விஷயங்கள்‌ அரசுக்கு பிடிக்காமல்‌ போக, அங்கிருந்து அமெரிக்காவுக்கு தப்பித்து வந்தார்‌.

அமெரிக்காவில்‌ அவர்‌ செய்த ஆராய்ச்சிதான்‌ சிக்கலுக்கு காரணம்‌. உயிர்கள்‌ தோன்றக்‌ காரணம்‌ விண்வெளியிலிருந்து வரும்‌ ஒருவித சக்திதான்‌ என்று சொன்ன அவர்‌, இந்த சக்தியை நாம்‌ பெற்றால்‌ தாம்பத்ய உறவுக்கு நல்லது என்று வலியுறுத்திய அவர்‌, அதை தடங்கல்‌ இல்லாமல்‌ பெறுவதற்கு ஒரு உலோகப்‌ பெட்டியையும்‌ செய்தார்‌. வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட இந்த பெட்டியில்‌ உட்கார்ந்தபடி அந்த சக்தியைப்‌ பெறமுடியும்‌ என்றார்‌ இவர்‌.

இவரே முதலில்‌ இந்த பெட்டியில்‌ உட்கார்ந்து பரிசோதனை செய்து பார்த்தார்‌. ஆனால்‌ விதி விளையாடியது... ரீக்‌ ரகசியமாக ஒரு பெட்டி செய்திருக்கிறார்‌. இதில்‌ ஆண்கள்‌ கொஞ்ச நேரம்‌ உட்கார்ந்தாலே போதும்‌. விறைப்புத்‌ தன்மை அதிகரிப்பதுடன்‌ வீரியம்‌ கூடும்‌ என்று சொல்லி இதை அவர்‌ விற்கத்‌ திட்டமிட்டு இருக்கிறார்‌' என்றெல்லாம்‌ வதந்திகள்‌ கிளம்பியது. அதை நம்பி அவரைக்‌ கைது செய்து சிறையில்‌ போட்டு விட்டனர்‌, அமெரிக்க மருந்து மற்றும்‌ உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள்‌.

அறிவியல்‌ ஆராய்ச்சி செய்யும்‌ தன்னை அரசு கேவலப்படுத்துவதாக சொல்லி விசாரணைக்குக்கூட கோர்ட்டுக்கு வராமல்‌ அடம்பிடித்தார்‌. கடைசியில்‌ சிறையிலேயே பரிதாபமாக இறந்து போனார்‌!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top