• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உருகாதே வெண்பனிமலரே_2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

K

kavi sowmi

Guest
மதுசூதனன் ஹாலில் அமர்ந்தபடி நேரம் பார்க்க மாலை நான்கு மணியை தாண்டி இருந்தது. பார்த்து விட்டு வருவதாக சொன்ன அபிநந்தனும் எந்த தகவலும் தரவில்லை. மலரும் வீட்டிற்கு வருவதாக இல்லை . இத்தனை நாள் இல்லாமல் இப்போது தன் மேலேயே கோபமாய் வந்தது. தெரிந்தவர்களுக்கு
விஷயம் தெரிந்தால் என்ன சொல்வார்கள்... பொண்ணு பார்க்க வரும் போதே பார்க்க மாட்டேன் என வெளிய கிளம்பி போயிட்டா. இந்த பொண்ண கல்யாணம் பண்ணினா பையனோட வாழ்க்கை அவ்வளவுதான்.. ஒருவர் துவங்கி வைத்தால் போதுமே ஊரே பேசுவதற்கு... நாம் என்ன ஆட்கள் இல்லாத ஊரிலா குடி இருக்கிறோம்.
என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியாது என்ன நினைப்பதற்கு...

எதற்காகவும் இது வரை மகளின் மேல் கோபபடாதவர் தான். முதல் முதலாக
கோபம் வந்தது. என்ன பொண்ணு...
இப்படி செய்யாறா...அதிகமாக செல்லம் கொடுத்து விட்டோமோ!!!

சரியாக வளர்ப்பதில் தவறிவிட்டோமோ!!! பல வாராக மனதில் மகளை பற்றிய நினைவே ஓடிக்கொண்டு இருந்தது.பனிமலரின் தாயார் இறந்த போது அவளிற்கு
பன்னிரெண்டு வயது தான். ஒருவார காய்ச்சல் இவர்களது குடும்பத்தை உரு தெரியாமல் சிதைத்து போய் இருந்தது. இறக்கும் தருவாயில் இவனது கைகளை பற்றியபடி நம்ம பொண்ண பத்திரமாக பாத்துக்கங்க அவளை விட்டுடாதிங்க... என்றது தான் கடைசியாக பேசியது. அன்றிலிருந்து இன்றுவரை அவளுக்கு தாய் தந்தை இரண்டுமே இவரே ஆகி போனார்.

பனிமலரும் புத்திசாலி குழந்தை.. நடந்ததை புரிந்து கொண்டவள் எதற்காகவும் அடம்பிடித்து அழுதது இல்லை. இவருக்கு சிரமமாக இருந்தது அப்போது அவளது இடுப்பிற்கு கீழாய் வளர்ந்து இருந்த அவளது நீள கூந்தல் தான். தலைவாரி பிண்ண சிரமமாக இருக்க குதிரைவால் போடும் அளவிற்கு வெட்டியது தான் . மற்றபடி இன்று வரை எந்த சிரமமும் இல்லாமல் நாட்கள் சென்றிருந்தது.

கோவை கணபதியில் ஆரம்ப நாட்களிலேயே இந்த வீட்டை கட்டி இருந்தார். கிட்டத்தட்ட ஏழு சென்ட்டில் ஹால்,கிச்சன்,இரண்டு பெட்ரூம் சற்று பெரியதாய் இவர்களுக்கும் விருந்தினர் வந்தால் தங்குவதற்கு சிறியதாக இன்னொரு அறை என...அழகாய் அப்போதே வடிவமைத்து இருந்தார். வீட்டிற்கு பின் புறத்தில் சிறியதாய் ஒரு தோட்டம் அவரை பொறுத்தவரை நிறைவாய் வீட்டை கட்டி இருந்தார்.

உறவினர்கள் பலரும் இவரை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் எதையும் கேளாமல் மகளே உலகம் என
மாற்றிக்கொண்டவர். மணல்,ஜல்லி,செங்கல் மொத்த வியாபாரம் இவருடையது. பெரும்பாலும் அனைத்துமே போனிலேயே வியாபாரம் முடிந்து விடும். ஏற்றி அணுப்பும் போது குடோனில் இவர் இருந்தால் போதும்.

நல்ல வருமானம். அதுவே அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள பலர் வற்புறுத்தும்படி இருந்தது. நாட்கள் செல்ல செல்ல அதுவும் குறைந்து ஒரு கட்டத்தில் கேட்பதையே நிறுத்தி இருந்தனர்.

தன் மேல் அவள் வைத்திருந்த பாசம்
அவளை இப்படி நடந்து கொள்ள செய்திருந்தது. முக்கியமாக தனது நண்பனிடம் எப்படி கூறுவது இதுவே தற்போது கவலை தந்து கொண்டு இருந்தது. இவரும் அபிநந்தனின் தகப்பனாரும் பள்ளியில் படித்த காலத்திலேயே நல்ல நண்பர்கள். அந்த உறவு இன்றும் தொடர்ந்து கொண்டிருந்தது. இவரை முழுவதும் தெரிந்ததால் அவரே தனது மகனுக்கு மலரை கேட்டிருந்தார்.

அவர் கேட்டபோது இருந்த அன்றைய
சந்தோஷம் மொத்தமாய் வடிந்திருந்தது தற்போது. அடிக்கின்ற போனின் சத்தத்தில் பழைய நினைவில் இருந்து மீண்டவர் யார் என பார்க்க அபிநந்தன் அழைத்திருந்தான்.

அங்கிள் உங்கள் பொண்ண பார்த்துட்டேன். முன்ன சொன்னது தான் எனக்கு உங்க பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு.. என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லை. நான் அப்பாகிட்ட பேசிட்டு மறுபடியும் உங்க வீட்டிற்கு வரேன். உங்க பொண்ணுக்கு கொஞ்சம் பிடிவாதம் மத்தபடி ரொம்ப பாசகாரின்னு நினைக்கிறேன். வொரி பண்ணிக்காதிங்க அங்கிள்

அபி அவ வேண்டாம்ன்னு சொன்னா என்ன செய்ய...

அங்கிள் அவளோட சம்மதம் இல்லாம எதுவும் நடக்காது. அவளே உங்க கிட்ட ஒரு நாள் சொல்லுவா அபிய எனக்கு கட்டி வைங்கன்னு..

ஆனாலும் உனக்கு நிறைய நம்பிக்கைபா....

வாழறதே நம்பிக்கையால தான... சொன்னவன் சிரித்தபடி கால்ஸை கட் செய்ய இப்போது தான் அவருக்கு ஒரு வித அசுவாசம், நிம்மதி தோன்றியது.

அடுத்த சில நிமிடத்தில் அபிநந்தனின் தகப்பனார் செல்வம் அழைத்திருந்தார் .

மது... இப்ப சந்தோஷமா... என்னவோ பயந்திட்டு இருந்தே... இப்பதான் என் பையன் கூப்பிட்டு பேசினான். எனக்கு
ரொம்ப சந்தோஷமா இருக்கு. எவ்வளவு நாளா டிமிக்கி கொடுத்துவிட்டு இருந்த பய இப்ப இப்படி சொன்னது நிம்மதியாக இருக்கு.. மறந்திடாத... முன்பு நீயும் நானும் பேசினதுதான். கல்யாணம் முடிஞ்சதும் நீயும் நானும் ஊர் ஊரா லாங்டூர் போகணும். அப்புறம் பேச்சு மாறக்கூடாது.

சரிடா.. சரிடா சொல்லும் போதே இதோ இப்போதே திருமணம் நடத்திய உணர்வில் லயித்திருந்தார். கொஞ்சமாய் நிம்மதி தோன்றி இருந்தாலும் இம்முறை
 




K

kavi sowmi

Guest
எப்போதும் போல மன்னிக்க தயாராய் இல்லை. நிச்சயமாக ரெண்டு நாளைக்கு இவகிட்ட பேச கூடாது. மனதில் தீர்மானம் எடுத்தாலும் அவரது மனசாட்சி யாரு ... நீ.... ரெண்டு நாளு... காமெடி பண்ணாதே மது..
உன் பொண்ண பார்த்தா போதும் அப்படியே பனிமாதிரி உருகிடுவயே..போ ... போய் வேற வேலை இருந்தா பாரு . உன் பொண்ணு வந்ததும் என்ன சாப்பிட வாங்கி வச்சிருக்கறேன்னு தேடுவா...

என்ன செய்ய அவர் அப்படிதான். அவளது கோபத்தை கூட ரசிக்க முடியும் என்றால் அவரால் மட்டுமே முடியும்.

மாலை நேரம் நான்கு முப்பதை நெருங்க அனைவரும் மாலின் வெளிப்புறத்தில் கூடிய இருந்தனர். நிஷா அணைவரையும் பார்த்தபடி மலர்,நந்து ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக சொல்ல முடியாது. எல்லோரும் என்னுடைய என்கேஜ்மெண்டுக்கு வந்திடுங்க. இனி என்ன வெளியே விட மாட்டாங்க. அப்புறம் இன்னும் நாலு நாள் கழிச்சு நம்ம ப்ரெணடுங்களுக்கு மட்டும் சின்னதாய் கெட் டூ கெதர் பார்ட்டி நானும் கிஷோர்ரும் சேர்ந்து அரேன்ஜ் பண்ணி இருக்கறோம்.

நம்ம ப்ரெண்டுங்க எல்லோரையும் வரச் சொல்லி இருக்கிறேன். ஏழு டூ ஒன்பது பாப்பீஸ் ரெஸ்ட்டாரண்ட்... யாரும் மிஸ் ஆக கூடாது. வரலைன்னா லைப்லாங் அவங்க கிட்ட பேச மாட்டேன். பார்த்துக்கங்க...

இன்னோரு தோழி பிருந்தாவோ....
நிஷா சாப்பாடு போடுவல்ல... நீ சொல்லாட்டி கூட நான் வருவேன். ஏன்னா நமக்கு சாப்பாடு தான் முக்கியம்...

பிருந்தா உனக்கில்லாததா.. உனக்கு பிடிச்சதும் இருக்கு.

இன்னொரு தோழி... நிஷா தயிர் சாதகமா... இதை சொன்னதும் மறுபடியும் ஒரு சிரிப்பலை துவங்கி இருந்தது. பேசியபடியே நேரம் பார்த்தபடி ஒவ்வொருவராய் புறப்பட்டு கொண்டிருந்தனர்.

அனைவரும் கிளம்பி விட கடைசியாக இவளோடு நந்தினி மட்டும் எஞ்சி இருந்தனர். அழைத்து செல்ல கேப்ஸ் புக் செய்திருக்க வெளிப்புற இருக்கையில் அமர்ந்தபடி... மலர் நீ பண்ணினது பெரிய தப்பு அப்பாவோட இடத்தில் இருந்து பாரு... அங்கே இருந்துவிட்டு பையனை பிடிக்கலைன்னு சொல்லி இருந்தா வேற விதம். நீ வந்தவங்கல மட்டும் இல்லை உன் அப்பாவையும் அசிங்கபடுத்திட்ட...

இத பாரு நானே வீட்டுக்கு போய் அப்பாவை எப்படி சமாளிக்கறதுன்னு யோசிட்டு இருக்கிறேன். நீ வேற என்ன குழப்பி விடாத.. குழந்தை மாதிரி முகத்தை தூக்கி வச்சிட்டு உட்கார்ந்து இருப்பாங்க.. அவங்கல பழையமாதிரி கொண்டு வர ரெண்டு நாள் போராடணும். இன்னும் ரெண்டு நாளைக்கு என்னுடைய பேச்சு சத்தம் மட்டும் தான் வீட்டில கேட்க போகுது. இத நினைச்சாலே எனக்கு கவலையா இருக்கு.
நீ வேற... யாரு நான்... செஞ்சது சரின்னு சொன்னேனா. நான் பண்ணினது பெரிய தப்பு தான். ஆனா அந்த பையன் எப்படியும் இந்த பொண்ணு வேணாம்ன்னு போயிருப்பான்ல எனக்கு அது தானே வேணும்.

சற்று நேரம் அமைதியாய் இருந்தவள் தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்தாள். இதை பார்த்த நந்தினி.. ஏன்டி இப்படி சிரிக்கற. எதை பண்ணினாலும் சொல்லிட்டு செய்.. பயமா இருக்குல்ல..

சிரிப்பை அடக்கியபடி நந்தினி அந்த பையனை நினைச்சு பார்த்தனா சிரிப்பு வந்திடுச்சி. பொண்ணு இல்லைன்னதும் அவனோட முகம் எப்படி போயிருக்கும் பார்க்க கொடுத்து வைக்கல ..

சரிடி வண்டி வந்துடுச்சி..நானும் புறப்படறேன். மறுபடியும் பார்க்கலாம். போன் பண்ணுடி. அப்பாவ சமாதானம் பண்ணு. இன்னும் நாலுநாள் கழிச்சி பார்ப்பமே அப்போ சொல்லு பை என்றபடி அவளும் புறப்பட பனிமலரும் அவளது ஸ்கூட்டி பெப்பை எடுத்து கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டாள்.

வீட்டின் அருகில் நெருங்க நெருங்க லேசான படபடப்பு தோன்றியது. அதுவும் உள் நுழையும் வரையே... ஹாலில் அமர்ந்திருந்த தந்தையை பார்த்தவள் அவரது அருகில் அமர்ந்தபடி... அப்பா... அப்பா... என அழைக்க எந்த சலனமும் இல்லாமல் அமைதியாய் அமர்ந்திருந்தார்.

கோபமாக திட்டுவார். ஏன் அடித்தால் கூட வாங்கிக்கலாம் என நினைத்தவள் நிஜமாகவே பேசாமல் அமர்ந்து இருந்தவரை பார்க்கவும் எப்படி சரி செய்ய... என யோசித்தவள் ஸாரிபா.. ஸாரி இனி இத மாதிரி பண்ண மாட்டேன். இப்படி பேசாம இருக்காதிங்க... படபடவென அவள் மட்டும் தான் பேசிக்கொண்டு இருந்தாள். சற்று நேரம் இருந்தவர் தனது அறைக்குள் அமைதியாக செல்ல... அப்பா என்ன செய்சிட்டேன்னு இப்படி இருக்கறிங்க. நான் தான் ஸாரி கேட்டேன்ல. வேணும்னா ரெண்டு அடி கூட அடிச்சிக்கோங்க... பேசாமல் இருந்தா என்ன அர்த்தம் சின்ன வயதில் இருந்து பார்க்கறிங்கல்ல. எனக்கு பிடிக்கலைன்னு சொல்லியும் நீங்கள்தான் கேட்கல ... இப்போ முகத்தை தூக்கி வச்சிகிட்டா... நான் யார் கிட்ட பேசுவேன்.
குழந்தை போல் சத்தமாக கத்தியபடி கேட்க...

பாப்பா இத நான் உன்கிட்ட எதிர் பார்க்கல என்றபடி தனது அறைக்குள் நுழைந்தவர்கள் கதவை சாத்தி இருந்தார்.

கதவிற்கு வெளியே நின்றவளோ...
மலரு தம் கட்டி இவ்வளவு நேரம் பேசினதுக்கு இவ்வளவு தான் ரீயாக்ஷனா... நோ... தப்பாச்சே...

அப்பா... அப்பா...
 




K

kavi sowmi

Guest
சும்மா கத்தாத பாப்பா. சமையற்கட்டுல சாப்பிட சினாக்ஸ் வாங்கி வச்சிருக்கறேன் எடுத்து சாப்பிடு. எனக்கு மனசு சரியில்லை. கொஞ்ச நேரம் தனியா இருக்க விடு.

ப்பா... நீங்க இல்லாம எப்போ தனியா சாப்பிட்டு இருக்கிறேன் கதவைத் திறக்க வைக்க...சத்தமிட்டு கொண்டிருந்தாள்.

பொய் சொல்லாத பாப்பா... மதியம் நான் இல்லாமதான அங்க சாப்பிட்ட... அது மாதிரி சாப்பிடு.

அப்பா வர வர ஓவர் ஸ்மார்ட் ஆகிட்டு வர்றிங்க இது தப்பு. நான் ஹால்ல உட்கார்ந்து இருக்கிறேன். ரொம்ப நேரம் காக்க வைக்காமல் வந்து சேருங்க .. ஹாலில் இருந்த ஷோபாவில் தஞ்சம் அடைந்தவள் நகம் கொறித்தபடி அடிக்கடி அவளது தந்தை அறையை பார்த்து கொண்டிருந்தாள். நேரம் பார்க்க அரை மணி நேரம் ஒடி இருந்தது. வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

மலர் பேபி இந்த முறை செம கோபம் போலயே. வெளியே வர்ற ஐடியாவே இல்ல போல இருக்கு. இப்போ எப்படி சரிபண்ண... கையில் இருந்த பொபைலை சுத்தியபடி யோசித்து கொண்டிரூந்தாள். மேலும் பத்து நிமிடம் தாண்டி இருக்க கதவைத் திறந்தபடி வெளியில் வந்தார் மதுசூதனன்.

நகத்தை கொறிக்காதன்னா கேட்கவே மாட்டியா என்றபடி எதுவுமே நடக்காதது போல் சமையலறைக்கு சென்றவர் இரண்டு ஃபவுலில் ஐஸ்கிரீம் நிறைத்தவர் எடுத்து வந்து இவளுக்கு அருகில் ஓன்றை வைத்தவர் தனக்கும் ஒன்றை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்.

மலருக்கு ஒரு நிமிஷம் ஒன்றுமே புரியவில்லை. எப்போதுமே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது அவர் எடுத்து கொண்டு வந்து இருவரும் இணைந்து சாப்பிடுவது ...இன்று இவர் இருக்கின்ற கோபத்திற்கு... ஐஸ்கிரீமா... என்னங்கடா நடக்குது.
ஓரு வேளை பையன் சரியில்லையோ...பொண்ணு தப்பிச்சிட்டா அப்படின்னு நினைக்கறாரோ... ஐஸ்கிரீமை உண்டபடி கடைகண்னால் அவரை பார்க்க முகத்தில் மகிழ்ச்சி மட்டுமே இருந்தது.

என்னடா... ஹேப்பியா தான் தெரியறாங்க. ப்பா... என்ன மேல கோபம் இல்லையே...

இல்லைடா... நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.

என்னபா விஷயம். ஏதாவது பெரிய ஆர்டர் கிடைச்சிருக்குதா..

ஆர்டர் தான் தினமும் கிடைக்குதே இது வேறமா. புரிஞ்சிக்கற மனுசங்க கிடைச்சா சந்தோஷம் தான...

யாருடா அது நம்மல விடவும் புரிஞ்சிகிட்டவங்க... மனதிற்குள் நினைத்தவள். யாரா இருந்தா என்ன நம்ம கிட்ட மாட்டாமலா போயிடுவாங்க. ஆளை பார்க்கும் போது தெரிஞ்சுக்கலாம்.

யார் என்பதை தெரிந்து கொள்ள அதிக சிரமப்பட தேவையில்லாமல் அடுத்த நாள் காலையில் முதுகில் சுமந்த டிராவல்ஸ் பேக்கோடு வாசலில் நின்றிருந்தான் அவளது நாயகன்..

உருகிடுமோ பனிமலர்!!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கவி சௌமி டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மூணு பார்ட்டா பிரிச்சு கொடுத்த
2nd அப்டேட்டை இதிலே ஒரே
பதிவாகக் கொடுத்திருக்கீங்க
ரிப்பீட்டடு Repeated அப்டேட்,
சௌமி டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹா ஹா ஹா
ஹீரோயினைத் தேடி
ஹீரோவே வந்துட்டாரு
சூப்பருங்கோ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top