• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உருகாதே வெண்பனிமலரே_5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

K

kavi sowmi

Guest
இரண்டு பேருமே குளியல் முடித்து வெளியில் வர.. இவனை பார்த்ததுமே அப்பா.. என மறுபடியும் கத்த ஆரம்பித்தாள். இவள் என்ன சொல்ல போகிறாள் என தெரிந்தவனோ அவளுக்கு முன்பே அங்கிள் என சத்தமிட்டு இருந்தான்.

இப்ப என்ன பிரச்சனை ரெண்டு பேருக்கும்.. வந்து சாப்பிடுங்க... சாப்பிட்டதற்கு அப்புறமா நானும் வரேன் மூனுபேரும் சேர்ந்து சமையல் ரூம்ப கிளின் பண்ணலாம்.

அப்பா... வயசு பொண்ணு இருக்கற இடத்துல இப்படி தான் டிரஸ் போடுவானா..நீங்க சொல்ல மாட்டிங்கலா..

அங்கிள் நானும் இதையே கேட்கலாம்ல.. நீ மட்டும் என்ன போட்டு இருக்கற...வயசு பையன் இருக்கற இடத்துக்கு இப்படி டிரஸ் போட்டுட்டு வருவியா...

யாரு... நீ உனக்கு அங்கிள் வயசாகுது. நீ வயசு பையனா வெளியே சொல்லாத... சிரிக்க போறாங்க..

பாப்பா இப்படியெல்லாம் பேச கூடாது. இதெல்லாம் ஒரு பிரச்சனையா...வந்து சாப்பிடுங்க...

அவள் போட்டு இருந்தது முட்டியை தாண்டிய சாட்ஸ் டீ சர்ட்.... அதே போல்
அவனும் ஷாட்ஸ் கையில்லா பனியன்
ஒன்று என்ன இவன் சற்று உயரம் ஆதலால் முட்டியோடு நின்றிருந்தது.
அவனது சிவந்த நிறத்திற்கு இன்னும் எடுப்பாய் அழகாக தான் இருந்தது.

அவனை முறைத்தபடி அப்பா... இப்ப சொல்லறது தான் இவன் கிளம்பற வரைக்கும் இது போல அரை குறையா டிரஸ் போட்டுவிட்டு என்
முன்னாடி வந்து நிற்க கூடாது.

இதையே நானும் சொல்லலாம்ல...
பாத்ரூம்குல்ல யார் இருக்கறாங்கன்னு தெரியாம பேச கூடாது. அப்புறம் மாவ தலையில கொட்ட கூடாது. முட்டையை தலையில் தேய்க்க கூடாது.

அத்தனையும் நீ தான் செஞ்ச... ஓகே வா. இனி பேசாத... நீ செஞ்சதுக்கு பதில் நான் செஞ்சிட்டுடேன். முடிஞ்சது. திரும்ப ஆரம்பிக்க கூடாது. வாங்கப்பா என்றபடி அழைத்து சென்றாள்.

அமைதியாக சாப்பிட்டு முடிக்க எதுவும் சொல்லாமல் சமையல் அறையை சரி செய்ய மலர் சென்றிருந்தாள். அவளை தொடர்ந்து வந்த மதுசூதனனை பார்த்து அப்பா... நீங்க எதுவும் செய்ய வேண்டாம் நானே பார்த்துக்கறேன் இப்படி ஓரமாக உட்காருங்கபா...
எப்படியும் அவரை அவள் வேலை எதையும் செய்ய விடுவதில்லை நீண்ட நாட்களாய் இன்றும் அதே போல் அமர...பின்னோடு வந்த அபியோ அணைத்து பாத்திரங்களையும் எடுத்து கழுவ ஆரம்பித்தான். சமையல் மேடையை சரி செய்து அணைத்தையும் ஒதுங்க வைக்கவும் இவள் தரையை துடைத்து முடிக்கவும் சரியாக இருந்தது.

எதுவும் பேசாமல் மலரின் முகம் பார்க்க அவள் கோபத்தில் இருப்பது நன்றாக தெரிந்தது நிறைய யோசிக்க வேண்டியது இருந்தது அவனுக்கு அமைதியாக வெளியேறியவன் நேராக மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்திருந்தான்.
பெளர்ணமிக்கு சில நாட்கள் இருக்க நல்ல வெளிச்சமாய் இருந்தது.

சுற்றிலும் பார்க்க தோட்டத்தில் இருந்து ஜாதி பூ செடியை கொடியாக மாடி வரை இழுத்து விட்டிருந்தனர். பூக்களின் சீசன் ஆதலால் காற்றோடு சேர்த்து பூவின் வாசம் அவனின் குழப்பமான மனதை அமைதி படுத்தியது. அமைதியாக ஓரமாக அமர்ந்தவன் ஹெட்செட்டை காதில் மாட்டியவன் தனது மொபைலில் தனக்கு பிடித்த பாடலை போட்டபடி கண்கள் மூடி அமர்ந்திருந்தான்.

பாடல்கள் இனிமையாய் காதில் ஒலிக்க மூளை தன் போக்கில் யோசித்து கொண்டிருந்தது. வந்ததிலிருந்து இந்த நிமிடம் நடந்த சண்டை வரை யோசித்தவனுக்கு தனது செயலின் தவறு நன்றாக புரிந்தது. தொடர்ந்து இது போல் சண்டையிட்டு கொண்டிருந்தால் இந்த திருமணம் நடக்க வாய்ப்பு குறைவதை உணர்ந்தவன். இனி எங்காரணம் கொண்டும் சண்டையிட கூடாது தீர்மாணித்தபடி இருந்தான்.

அதே நேரம் இரவு மலரோ தனக்கும் தந்தைக்கும் பால் காய்ச்சியவள் டம்ளரில் ஊற்றியபடி தந்தையின் அருகில் அமர்ந்திருந்தாள். இவளது குழப்ப முகத்தை பார்த்தவர்...

ஸாரிமா அவன் இங்கே தங்கறது உனக்கு பிடிக்கலையா... நாளைக்கு வேணும்னா போக சொல்லிடறேன்.

இல்லைபா.. வேண்டாம். பத்து நாள் தங்க சொல்லிட்டு போன்னு சொன்னா நல்லா இருக்காது. நீங்க உங்க ப்ரெண்டுக்கு என்ன பதில் சொல்லுவிங்க...இங்கேயே இருக்கட்டும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

சரிடா.. அவனுக்கும் ஒரு டம்ளர் பால் குடுத்திடு...****** மாடி பக்கம் போறத பார்த்தேன்.

சரிபா கொடுத்துடறேன் என்றவள் அவனுக்கானதை எடுத்தபடி மாடிப்படி ஏறினாள். அங்கே அவன் அமர்ந்திருந்த தோற்றம் இவன் தான் அங்கு அத்தனை ரகளை செய்தான் என்றால் யாரும் நம்மி இருக்க மாட்டார்கள்..இதமான காற்றா நிலவு வெளிச்சமாக ஏதோ ஒன்று அவனை மோனநிலையில் ஆழ்த்தி இருந்தது.

இவளும் தன்னை அறியாமல் அவனது முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தாள். கண்கள் மூடி இருக்க காற்றில் லேசாக கலைந்தாடிய தலைகேசம்... இருக்கம் குறைந்து முகத்தில் தெரிந்த அமைதி அவனை இளமையாய் இன்னும் அழகாய் காட்டியது.தானும் அவரையே பார்ப்பதை உணர்ந்தவள் அவனின் பெயர் சொல்லி அழைத்தாள்.அவளது சத்தம் மட்டுமே தனியாய் கேட்டது.

அவன் கண் திறப்பது போல் தெரியவில்லை..
 




K

kavi sowmi

Guest
அவன் வேறு உலகத்தில் இருந்தான். இம்முறை அவன் அருகில் போனவள் அபி... என்றபடி தோள் தொட்டு அழைக்கவும் கண் திறந்தவன் வேகமாக எழுந்தான்.

ஸாரி வந்து ரொம்ப நேரம் ஆச்சா நான் கவனிக்கல...

இல்லல்ல இப்ப தான் வந்தேன். நீங்க உட்காருங்க என்றவள் கையில் இருந்ததை அவன்புறம் நீட்ட...

தேங்க்ஸ் என்றபடி வாங்கியவன் இவள் புறம் பார்த்து ஏதாவது வேலை இருக்குதா மலர்..

இல்ல.. எல்லாம் முடிஞ்சது... ஏன்..

கொஞ்சம் நேரம் இப்படி உட்காரு மலர். நிலா வெளிச்சம் இந்த குளுமை இந்த காற்று நல்லா இருக்கு ஏனோ ரசித்து சொன்னதை கேட்டவள் மறுமொழி பேசாமல் சற்று நகர்ந்து அமர்ந்தாள். இருவருக்கும் ஒன்றும் பேச தோன்றவில்லை ஆனாலும் அந்த நிமிடத்தை இருவருமே ரசித்தனர். சற்று நேரம் செல்லவும் அபி ..மலரிடம் திரும்பி அமர்ந்தவன்.

ஸாரி மலர் உன்ன ஹாட் பண்ணறமாதிரி ஏதாவது பேசியிருந்தா...ஸாரி இனிமேல் இத மாதிரி பேச மாட்டேன். உன்னோடது புரியுது.... அப்பாவே உலகம் அப்படின்னு இருந்துட்ட... புதுசா யாராவது வந்தா ஏற்றுக்கொள்ள முடியாது தான். இனிமேல் உன் கிட்ட வம்பு இழுக்க மாட்டேன். அதிகபட்சம் இன்னும் ஒரு வாரம்... அப்புறம் ஊருக்கு போயிடுவேன்.

இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை மலர். இவன் ஸாரி கேட்பான் என்பதை...அவனும் வருந்துகிறான்..
அமைதியாக கேட்டிருந்தவள். நானும் ஸாரி அபி... இவ்வளவு மோசமா நானும் நடந்து இருக்க கூடாது.

இல்ல . உன் மேல தப்பு இல்ல. நான் தான் கேரட்டை எடுத்து... ஸாரி என்னாலதான் எல்லாம்... உன்னை பார்த்தா தெரியாத பொண்ணுங்கற ப்வில் வரல... ரொம்ப வருஷம் கூட இருந்தமாதிரி... ஈசியா சண்டை போட வருது.

அவளுக்கும் அது போல உணர்வு தான் தோன்றுகிறதோ.. தன்னிடமே கேள்வி கேட்டவள். . பேச்சை மாற்ற வேண்டி உங்க வீட்ல யாரெல்லாம் இருக்கறிங்க அபி.. ஸாரி உங்க அப்பா அப்பாவோட ப்ரெண்டு தான். எனக்கு அவ்வளவா தெரியாது.

அதனால என்ன மலர் எங்க வீட்ல நான் தான் முதல் பையன். எனக்கு கீழே என்னுடைய சிஸ்டர் பேரு தாரிகா அவளோட கணவர் ரஞ்சன் அப்புறம் குட்டி செல்லம் பூஜா... அப்பா பேரு...மூர்த்தி அம்மா கோமதி,முக்கியமான ஆள் எங்கே பாட்டி வேதவல்லி... அவ்வளவு தான்.

எனக்கு மும்பையில் வேலை... சிஸ்டர் டெல்லியில் இருக்கறா...அவளுக்கும் எனக்கும் டெலிபதி செமையா ஓர்க் ஆகும் தெரியுமா...

எப்படி...

எப்படின்னா... நான் அவள எப்ப நினைச்சாலும் அவள் எனக்கு உடனே கால் பண்ணிடுவா தெரியுமா...
இப்போ அவள பத்தி பேசறோம்ல்ல இன்னும் ரெண்டு நிமிஷத்தில அவள் என்ன போன்ல கூப்பிடுவா பாரேன்.

பொய்... பொய் சொல்லறிங்க. நான் நம்ப மாட்டேன்.

நிஜமா மலர் வேணும்னா இப்ப போன் வரும் பாரு... சொன்னது போலவே போன் வந்தது தாரிகாவிடம் இருந்து...

எஸ் போன் வந்துடுச்சி இரு என்றவன் கொஞ்சம் நகர்ந்து அட்டென் செய்ய...வழக்கம் போல சத்தமாக அவளது குரல் காதில் பாய்ந்தது.

டேய் அண்ணா... எதுக்குடா போன் பண்ண சொல்லி மெசேஜ் பண்ணின ... எங்க இருக்கற நீ...

மொட்டை மாடியில் உன்னோட அண்ணி என சொல்ல வந்தவன் நிறுத்தி மலர் கூட என முடித்தான்.

டேய் அண்ணா இதெல்லாம் சரியில்லை. ரொம்ப வேகமா போற...தூங்கறவள எழுப்பி கடுபேத்தாத சரியா...

தாருமா நான் உன்னை ஆகா ஓகோ புகழ்ந்து இருக்கறேன். என்னை அதல பாதாளத்துல தள்ளிடாத என்றவன் நிஜமாடா...அவள் கிட்ட பேசறையா.. போன் வரவும் நகர்ந்து இருந்து பேசியவன் இவள் அருகில் வந்து போனை நீட்டினான்.

என்னுடைய சிஸ்டர் கிட்ட பேசு மலர் ...

அவள் பேசுவதா வேண்டாமா என தயங்கி கொண்டு இருக்கும் போதே அவளது கைகளில் தந்தவன் கீழே அப்பாகிட்ட பேசிட்டு இருக்கிறேன் பேசிட்டு வா என இறங்கி இருந்தான்.

ஹலோ என ஆரம்பித்தது தான் அடுத்த சில நிமிடத்திலேயே இருவரும் நெருங்கி இருந்தனர். அவ்வளவு இனிமையாக பேசினாள் தாரிகா சின்ன சின்ன விஷயத்தை பற்றி கேட்கும் போதும் சொல்லும் போதும் அவ்வளவு ரசனை இழையோடியது அவளது பேச்சில்...

அண்ணா அவன் சரியான ப்ராடு நிறைய பொய் சொல்லுவான். உங்கள் மிரட்டினா சொல்லுங்க நான் அவன்கிட்ட பேசிக்கறேன்.

அதெல்லாம் இல்ல... பிரச்சனை ஒன்றும் இல்ல...

சரி உங்களோட போன் நம்பர் என்ன..
நம்பர் தாங்க ப்ரீயா இருக்கும் போது பேசலாம். இருவரும் தங்களது செல்பேசி நம்பர்களை பரிமாறி கொண்டனர்.

தாரிகாவோ அண்ணனிடம் துவங்கி
நண்பர்கள், காலேஜ் எனக்கு சுழன்று இறுதியில் பூஜாவின் சேஷ்டைகளை சொல்லி சிரிக்க வைத்து பேச்சை முடிக்க அரை மணி நேரம் தாண்டியிருந்தது. அதே சிரிப்போடு கைகளில் மொபைலை தாங்கியபடி இறங்கி வீட்டிற்குள் வந்தவளை பார்த்த போது அபிக்கும் நிறைவாய் இருந்தது.

தேங்க்ஸ் அபி... உங்க சிஸ்டர் சோ ஸ்விட்.. பேசாமல் இருந்து இருந்தா நல்ல ப்ரெண்ட மிஸ் பண்ணி இருப்பேன் கூறியவள் அவனது கைகளில் போனை தந்து விட்டு குட் நைட்பா...குட் நைட் அபி என்றபடி தனது அறைக்குள் நுழைந்தாள்.

அபி தனது அறைக்கு தூங்க செல்ல
 




K

kavi sowmi

Guest
சென்றவன் நிம்மதியாக தூங்கினான். இனி மேல் பயப்பட தேவையில்லை என்கிற அளவிற்கு நிம்மதியாக இருந்தது.

அங்கே மலரும் படுத்த உடனே தூங்கி இருந்தாள். கனவு கூட வந்தது அதே மாடியில் வெண்ணிலா வானில் காய.. ஜாதிமல்லியின் வாசனை முகத்தில் அலைமோத .. கூடவே சில பூக்களும் காற்றின் வேகத்தில் இவளது மேல் வந்து விழுந்தது. ஏனோ ஒரு மோன நிலை... ஒரு வித்தியாசமான மயக்கம். கண்கள் கூட லேசாக சுகமாய் மூடியபடி இருந்ததோ....என்ன அவளது மனநிலை என உணராத அளவிற்கு நின்றிருக்க... மிக நெருக்கமாக அவளது மயக்கத்தை மேலும் அதிக படுத்துவது போல அவளது கைகோர்த்தபடி அவளை முழுவதுமாய் ரசித்தபடி அபி...

தூங்கிக்கொண்டு இருந்தவள் சட்டென எழுந்து அமர்ந்தாள். முகம் முழுவதும் லேசாக வியர்த்து இருந்தது நேரம் பார்க்க மூன்று மணியை தொட்டு இருந்தது. அவசரமாக தண்ணீர் எடுத்து குடித்தவள் ...கொஞ்ச நேரம்அவன் கூட தனியா இருந்தது கனவு தப்பு தப்பா வருது.
நியாயமா சண்டை போட்டது தானே கனவில் வரணும் நினைத்தவள் ஒன்றை மறந்து விட்டாள் ஆழ்மனதில் பதிந்தது தான் கனவாய் வரும் என்பதை...

உருகாதே!!!!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
சௌமி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கவி சௌமி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top