• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உருகாதே வெண் பனிமலரே_3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

K

kavi sowmi

Guest
காலை எட்டு மணியை நெருங்கி கொண்டிருக்க விடாது ஒலித்த ஹாலிங்பெல் சத்தம் கேட்டு வேகமாக வந்து கதவை திறந்தாள் மலர். நேற்று பார்த்தவன் தான். இன்றும் அதே கோலத்தில் நின்றிருந்தான். முகத்தில் எந்த வித உணர்வும் காட்டாமல் கண்களில் நேற்றைய போல அதே ரீபேக் கண்ணாடி கவ்வியிருந்தது. யார் என்ன... ஏது எதுவும் கேட்க தோன்றாமல் ஒரு நிமிடம் நின்றவள்..
கேள்விகளை கேட்கும் முன்னமே அவன் பேசி இருந்தான்.

வீட்டுக்கு வந்தா வாங்கன்னு கேட்கிற பழக்கம் இல்லையா.. இப்படி முழிக்கற..வழிய மறிச்சிட்டு நின்னா எப்படி உள்ள வர்றது...நகரு... என்றபடி எளிதாக அவளின் தோள் தொட்டு நகர்த்தியவன் உள் நுழைய போக ..

ஏய்... நில்லு ....ப்ராடு நேற்று கண் தெரியாதவன் மாதிரி நடிச்சவன்தான நீ.. இங்கே எதுக்கு வந்திருக்கிற...

என்ன... யாரை பார்த்து ப்ராடுங்கற.. நானா வந்து உன்மேல மோதினேன். வாங்கின பாப்கார்னை பார்த்துட்டே வந்து நீ இடிச்ச.. நீயா கண்ணு தெரியாதுன்னு முடிவு பண்ணினா நான் எப்படி பொறுப்பாக முடியும். நீ எவ்வளவு தூரம் பேசுவன்னு பேசாமல் வேடிக்கை பார்த்தேன். உடனே முடிவு பண்ணிடுவயா. எங்கே என்ன பார்த்து சொல்லு... கண் தெரியாதுன்னு. கண்களில் மறைத்திருந்த கூலரை கலட்டியவன்
அவளது முகத்திற்கு அருகே கொண்டு சென்று இரண்டு கண்களையும் மாற்றி மாற்றி கண் சிமிட்டி காட்டினான்.

அப்பா... என வேகமாக கத்தினாள் பனிமலர். சத்தம் கேட்டு வேகமாய் தனது அறையில் இருந்து வெளிவந்தவர் இவனை பார்த்து அட... அபி வா.. வா என்றபடி இவனை நோக்கி வர...

ஒரு நிமிடத்தில் இவளை கடந்தவன் ஹாய் அங்கிள்... ஆசீர்வாதம் பண்ணுங்கள் என்றபடி பாதம் தொட்டு வணங்க... மும்பையில் இவன் பழகி இருந்தது வயதில் பெரியவர்கள் யாரை பார்த்தாலும் ஆசீர்வாதம் வாங்குவது மும்பையில் நண்பர்கள் பலர் இருக்க அவர்களின் பழக்கம் இவனை தொற்றிக் கொண்டு இருந்தது. நேற்று போலவே இன்றும் இயல்பாகவே அவனுக்கு வந்தது.

நல்லா இருப்பா... நல்லா இரு என்றபடி அப்பா நேற்று பேசினாங்க. பத்து நாள் தங்கறேன்னு சொன்னியாம் உன்னோட அப்பா எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்கறான். ஏதோ என்னாலான சின்ன கைமாறு...

என்ன அங்கிள் பெரிய வார்த்தை எல்லாம் சொல்லறிங்க...தோளோடு அணைத்து அழைத்து சென்றவரை பார்த்தவள்... மலர் பேபி வீட்ல என்ன நடக்குது. இந்த குரங்கு யார்ன்னு தெரியலை. ஓரே நிமிடத்தில் அப்பாவை இப்படி இம்பரஸ் பண்ணறான் தப்பாச்சே... என்றபடி அவர்களோடு இவளும் பின் தொடர்ந்தாள்.

இவனை அழைத்து சென்றவர் விருந்தினர் தங்குவதற்கு இருந்த அறையை திறந்து விட்டபடி...அபி நீ வர்றேன்னதும் இந்த ரூமை நானே ரெடி பண்ணினேன் நேற்று நைட்...
உனக்கு ஓகே தான ஏதாவது வேணும்னா சொல்லு நான் சரி பண்ணி தந்திடறேன்.

ஐயோ அங்கிள்... என்ன நீங்க. .. அதெல்லாம் வேண்டாம். பத்து நாளைக்கு இதுவே அதிகம்.. தேவைபட்டா சொல்லறேன் என்றபடி அவன் ரூம்பிற்குல் நுழைய பின்னோடு நுழைய போன தந்தையை இழுத்துக் கொண்டு அடுத்து இருந்த தந்தையின் அறைக்குள் அழைத்து சென்றாள்.

அப்பா உங்களுக்கு பைத்தியமாப்பா. வயசு பொண்ணு இருக்கற வீட்டுக்கு கூப்பிட்டுட்டு வந்து தங்க வைக்கறிங்க.. பார்க்கறவங்க என்ன சொல்வாங்க...

இதுல சொல்ல என்னடா இருக்கு. பத்து நாள் தங்கி ஊட்டி, கொடைக்கானல்,கேரளான்னு சுற்றி பார்க்கணுமாம் . ஒவ்வொரு வருசமும் ஒவ்வொரு ஊரை சுற்றி பார்ப்பானாம்.இந்த தடவை இங்கே வந்து இருக்கறான் யாரோ மாதிரி வெளிய தங்கிக்கோன்னு விட முடியாதுல்ல..

ஆனா அவன் நல்லவன் இல்லைபா. நான் நேற்று அவன அந்த மால்ல பார்த்தேன்பா. கண்ணு தெரியாத மாதிரி நடிச்சான். ப்ராடுபா அவன் எப்படியாவது அவனை புரிய வைத்திட வேண்டும் என வேகமாக கூறிக்கொண்டு இருந்தாள்.

சிரிக்க வைக்காத பாப்பா. அவனுக்கு கண்ணு தெரியாதா. அவன் சிரிக்கும் போது அவனோட கண்ணும் சேர்ந்து சிரிக்குது அத நீ கவனிச்சயா. சுவிட்பாய்... அவன் கூட இருந்தா நேரம் போறதே தெரியாதுன்னு என்னோட ப்ரெண்டு சொல்லுவான் அது எவ்வளவு சரின்னு இந்த பத்து நாள்ல பார்க்க போறேன். சொல்லியவர் இவளை தாண்டி வெளியேறியபடி அபி.. அபி என அழைத்தபடி செலல...

சுத்தம் ...விட்டா இந்த அப்பா அவன் பேர்ல் ரசிகர்மன்றமே ஆரம்பிப்பார் போலவே...இனி இவரை நம்பி பிரயோஜனம் இல்ல நாமதான் ஏதாவது செய்யணும் மலர் இன்றையில் இருந்து உனக்கு இதுதான் வேலை அவனை வீட்டை விட்டு அணுப்பின பிறகுதான் தூங்கணும். யோசி யோசி ... ஏதாவது ஐடியா கிடைக்கும் என்ன... பண்ணலாம். அறையை அளந்தபடி
இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தாள்.

நடந்து நடந்து கால்தான் வலிக்குது
எதுவும் தோணமாட்டேங்குது தந்தையின் கட்டிலில் அமர்ந்தவள் அன்றைக்கு மாப்பிள்ளை போட்டோன்னு ஒன்றை காட்டினாங்கலே... ஒரு வேளை இவன் அவனா இருப்பானோ.. தோன்றவும் வேகமாக தந்தையின் அறையில் தேட ஆரம்பித்தாள். டேபிளில்,கட்டில் அடி என தேட.. பாப்பா ஏதாவது வேண்டுமா...
 




K

kavi sowmi

Guest
என்ன தேடற பாப்பா.. என்றபடி மதுசூதனன் வந்து நிற்க..

இல்லைபா ஒன்றும் இல்லையே .

நீ டிரைவிங் கிளாஸ் கிளம்பலையா வரச் சொல்லி இருந்தாங்கல்ல...

இதோ கிளம்பறேன்பா... என்றவள் தனது அறைக்குள் சென்றவள் தனது அறையில் போட்டோவை தேட ஆரம்பித்தாள். போட்டோ இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

அங்கே மால்ல ஓருத்தன்... ஓரமாக வந்து உட்காருங்க ப்ரோன்னு கூப்பிட்டுட்டு போனானே இவனும் அவனோட கையை பிடிச்சிட்டு போய் உட்கார்ந்தான். எஸ் இத சொல்லலாம் இவன் ப்ராடுதான் யார் என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். ஒரு வேளை இவன் திருடனா இருப்பானோ அப்பாவுக்கு தெரிஞ்சவனோட பேரை சொல்லிட்டு இங்கே வந்து ஏதாவது திருடிவிட்டு போயிட்டா... பத்து நாள் தங்கறவன் வெறும் ஒரு செட் துணியோடவா வருவான். மறுபடியும் அப்பாகிட்ட பேசிப்பார்க்கலாம். இத சொன்னா யோசிப்பாங்கல்ல...

அப்பா அப்பா மறுபடியும் தனது தந்தையின் அறைக்குள் நுழைந்தாள். ...அறையில் அவளது தந்தை இல்லை. பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டது.

அப்பா அப்பா.. என சத்தமாக பாத்ரூம் கதவருகே கூப்பிடவும் இவள் கூப்பிட்டதற்கான சத்தம் கேட்ட அடையாளமாய் நீர் விழும் சத்தம் நின்றிருந்தது. அப்பா என ஆரம்பித்தவள்... இந்த பையன் ப்ராடுபா. பத்து நாள் தங்கறவன் ஒரு செட் துணியோடவா வருவான் உங்களோட தெரிஞ்சவர் பேரை தெரிஞ்சிட்டு ஏமாத்த வந்து இருக்கறான். நீங்க அப்பாவிபா. யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவிங்க... இவன் வீட்டுல எதையாவது திருட்டிட்டு போக போகிறான். முதலில் அவனை வீட்டைவிட்டு போக சொல்லுங்கள். போகலைன்னா போலீஸ்ல சொல்லிடுவேன்னு சொல்லலாம். என்னபா... நான் சொன்னது கேட்குதா... என கேட்டபடி தந்தையின் வரவுக்காக அருகில் இருந்த கட்டிலில்
அமர்ந்திருந்தாள்.

ரொம்ப நல்லா தெளிவா கேட்டது என்றபடி கதவை திறந்தவன் அபிநந்தன். இடுப்பில் கட்டிய டவளோடு ஈர தலையோடு முகத்தை
சிரிப்போடு... அவன் வந்த கோலத்தை பார்த்தவள் திகைத்து திரும்பி நின்றிருந்தாள் . எதிர்பாராத வகையில் அவன் வந்து நின்ற தோற்றம் இவளது முகத்தை சிவக்க வைத்திருந்தது.

என் மேல தான் உனக்கு எவ்வளவு நம்பிக்கை....

நீ...நீ ...எப்போ இங்க வந்தே.. உள்ளே நான் தான் இருக்கறேன்னு சொல்ல மாட்டியா.

உங்க அப்பா எனக்கு தந்த ரூம்ல பைப் இறுகி இருக்கு. ரொம்ப வருஷம் யூஸ் பண்ணல போல.. அங்கிள் இங்க குளிக்க சொன்னாங்க... யார் உள்ள இருக்கறாங்கன்னு கூட பார்க்க மாட்டியா.. எவ்வளவு வேகமா பேசற..
மொதல்ல பதில் சொல்ல விட்டயா.. அப்புறம் நீ வெளியே போறியா.

யார பார்த்து வெளியே போக சொல்லற... இது என்னுடைய அப்பா ரூம். என்ன போக சொல்லுவயா.கோபமாக பேசியவள் திரும்பி அவன் முகம் பார்க்க கைகளை கட்டியபடி அதே கோலத்தில் நின்றிருந்தான் வேகமாக மறுபடியும் திரும்பி நின்றவள்.

நான் டிரஸ் மாத்தனும்மா... இங்கே
தான் இருப்பன்னா இரு எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல...

பொறுக்கி... பொறுக்கி என்றபடி வேகமாக வெளியேறியவள் ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்தபடி நகம் கொறிக்க ஆரம்பித்தாள் .

பாப்பா நகம் கொறிக்காத எத்தனை தடவை சொல்லறது.

அப்பா..அவன் பொறுக்கிபா. அவனை போக சொல்லுங்க..

பாப்பா சின்ன குழந்தை மாதிரி பேச கூடாது காதில் கேட்டா சங்கட படுவாங்கல்ல .

அப்போது அங்கிள் நான் வரலாமா... ஏதாவது முக்கியமாக பேசறிங்களா என்றபடி வந்தவனிடம்..

ஏம்பா நீ வேற.. வா..வா.. பாப்பா நீ சாப்பிட்டயா.. டிரைவிங் கிளாஸ் போகணும்ல. இரு எடுத்துவிட்டு வரேன். சமையல்கார அம்மா லீவா.
இன்னும் வரல.

அப்பா நீங்க தான் ஒரு வாரம் லீவு கொடுத்திங்க. இப்ப இப்படி கேட்கறிங்க...

மறந்துவிட்டேன் பாப்பா... தோசை ஊத்தவா சட்னி ரெடி பண்ணி தர்றேன்.

பாப்பா சொல்லாதிங்கன்னு எத்தனை தடவை சொல்ல ..

அப்படியே சொல்லி பழகிடுச்சுடா...மாத்திக்கேறன் பாப்பா என்றபடி சிரித்தபடி நகற...

ம்... ம்... என்றபடி அமர்ந்திருந்தாள்.

டீப்பாயில் இருந்த அன்றைய நாளிதலை எடுத்தவன் ஏழு கழுதை வயசாகுது பாப்பாவாம். பீப்பா மாதிரி இருக்கறவங்களுக்கு பேர் பாப்பாவாம்..ராகமாக கூறியபடி நகற..

என்னுடைய அப்பா எப்படி வேணும்னாலும் கூப்பிடுவாங்க... உனக்கென்ன பிரச்சினை.. நீ உன் வேலையில் மட்டும் பாரு. சரியா...

எப்படி ...நீ என்ன பொறுக்கின்னு சொல்லலாம் நான் எதுவும் திருப்பி பேசக்கூடாது அப்படிதான...

நான் என்ன சொல்லறேன் நீ என்ன கேட்கற..
ஆமாம் அப்படி தான் உனக்கு பிடிக்கலைன்னா எங்கேயாவது போய் தங்கு நான் ஓன்னும் உன்ன கேட்க மாட்டேன். நூறு தடவை சொல்லுவேன் பொறுக்கி பொறுக்கி...நீ பொறுக்கி தான்.

ஏய்... யாரை பார்த்து பொறுக்கிங்கற
பொறுக்கி என்ன பண்ணுவான் தெரியுமா... கிட்டே நெருங்கியவனை பார்த்து பயத்தில் கண்கள் மூடியபடி அப்பா... என வேகமாக கத்தி இருந்தாள்.

என்னடா.. எடுத்துவிட்டு வர்றதுகுல்ல இப்படி சத்தம் போடற.. இந்தா..
 




K

kavi sowmi

Guest
அப்பா இதுக்காக கூப்பிடல.. இவன்... இவன் என்ன கிட்ட வந்து...வந்து..கண்களை திறந்து பார்க்க...

தனக்கும் இதற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்பது போல சற்று தொலைவில் அமர்ந்திருந்தான்.

இப்பதான கிட்டவந்தான் அதுக்குல்ல அவ்வளவு தூரம் எப்படி போணான் குழப்பத்தோடு அவனை பார்க்க... ஒருவேளை அவன் அருகில் வரவே இல்லையோ..
நாம தான் ஓவரா கற்பனை செய்யறமோ.. நினைத்தபடி திரும்பவும் பார்க்க தன் புறம் பார்ப்பதை உணர்த்தவன் இவள் புறம் திரும்பி இவளை பார்த்து கண் அடித்தான்..

அதுவும் ஒரு நிமிடம் தான் இவளது தந்தை வரும் அரவம் கேட்டு மறுபடியும் பேப்பரில் முழுகி இருந்தான்.

இம்சை இம்சை நல்லா நடிக்கறான் இந்த அப்பா வேற இவனைபோய் நம்பறாங்க...என மனதிற்குல் அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்..

அப்போது கையில் தோசை தட்டோடு வந்தவர் இவளது கைகளில் தந்தபடி...

நீ சாப்பிட்டுவிட்டு கிளம்புமா. எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு. நானும் குடோன் வரை போகணும் அப்படியே ப்ளம்பர பார்த்து வர சொல்லணும்.. அபியும் என் கூட வர்றேன்னு சொல்லி இருக்கிறான்.

சரிபா... மதியம் எத்தனை மணிக்கு வருவிங்க... சாப்பாடு செஞ்சிடவா...

சரிடா.. செஞ்சிடுமா... அபி என்ன பொண்ணு நல்லா சமைப்பா தெரியுமா!!! குடோனில் இருந்து வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம். இரு இன்னோரு தோசை எடுத்துவிட்டு வரேன் என்றவர் சமையல் அறைக்குள் நுழைய...

பாப்பு... பாப்புமா....பாப்புக்கு சமைக்க கூட தெரியுமா...ராகமாக பாடி வம்பிழுத்துக்கொண்டு இருந்தான்.

என் அப்பாவுக்கு மட்டும் தான் பாப்பா. நீ என்ன கூப்பிட்ட எதையாவது எடுத்துவிட்டு மண்டைய உடைச்சிடுவேன் பார்த்துக்கோ...இம்சை... இம்சை..

ஐயோ பயமா இருக்கே... யாராவது இருக்கறிங்களா... என்ன காப்பாத்த...

இந்த பாப்பா ரெண்டே தோசைதான் சாப்பிடுமா .. ஓ... அதனால தான் கூப்படறது பாப்பாவோ....

டேய்... வாய கிண்டாத ஏதாவது சொல்லிட போறேன். அப்பா எனக்கு போதும்பா சத்தமாக சொன்னவள். இந்த வீட்ல நிம்மதியா சாப்பிட கூட முடியல..அவனுக்கு கேட்கும்படி சொல்லிவிட்டு கிளம்ப...

அவளைப் போலவே அங்கிள் உங்க பொண்ணு போகட்டும். எனக்கு நானே தோசை ஊத்திக்கறேன். நானெல்லாம் மினிமம் பத்தாவது சாப்பிடுவேன் உங்க பொண்ணு அத பார்த்தா எனக்கு தான் வயிறு வலிக்கும்.

ஐயா... சப்பாட்டு ராமனே எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடு தயவு செஞ்சு நான் இருக்கும் போது மட்டும் சாப்பிட்டுடாத.. வரேன்பா என்றவள் தனது பெப் சாவியை எடுத்து கொண்டு வெளியேறினாள்.

உருகாதே!!!! வெண்பனிமலரே!!!!
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஏன் மலர் இப்டி எண்ணைல போட்ட கடுகாட்டம் பொரிர...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
சௌமி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கவி சௌமி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top