• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உறவு பாலம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazee queen

மண்டலாதிபதி
Joined
Oct 14, 2019
Messages
129
Reaction score
827
Age
29
Location
Pudukkottai
"ஏண்டி பாத்திமா... என்ன தீர்மானம் செய்திருக்கிற? "

"எதைப் பற்றி மா ?"

" ஏண்டி ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குற...?"

"........."

"நீயே இங்க எப்ப வந்த... எத்தனை மாசம் ஆகுது ? எதையும் யோசிக்க மாட்டியா?"

"என்னமா சும்மா சும்மா அதே கேக்குற ! நான் இங்கே இருக்கிறது உனக்கு பிடிக்கலைன்னா சொல்லிட்டு. வேற எங்கேயாவது போயிடுறேன்."

" என்ன.... இப்படி எல்லாம் பேசுற ? மாப்பிள்ளையும் முன்ன போல அடிக்கடி வந்து போறதில்ல சம்பந்தியம்மா என்கிட்ட... 'சீக்கிரம் என் மருமகளையும், பேரனையும் கொண்டு வந்துவிடுங்க'ன்னு சொல்லிட்டு இருக்காங்க."

"அம்மா ... மாப்பிள்ளையும் அடிக்கடி வர முடியலைன்னா அவரோட வேலை அப்படி. பாதி நேரம் 'டூர்' அது இதுன்னு போயிடுவான். நானும் வேலைக்குப் போறேன் அதனால 'ஆபீஸ்'ல எத்தனை பிரச்சனை இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். சம்பந்தியம்மா மேல கரிசனம் இருந்தா நீயே போய் அவங்களுக்கு சமைச்ச போடு . நானே என்னையும் உன் பேரனையும் கவனிச்சுக்கிறேன்."

இந்த கால பெண்களை என்னவென்று சொல்ல...? வீட்டிலும் ,அலுவலகத்திலும் 'அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் ' எடுக்கிறார்கள். அவர்கள் திறமைசாலிகளாய். இருப்பதால், பல கணவன்மார்கள் மின்கட்டணம் கட்டுவதில் இருந்து 'இ-மெயில்' அனுப்புவது வரை என அத்தனையும் மனைவிமார்கள் தலையில் கட்டிவிட்டு அவங்க ஜாலியாக 'ஐ-பேட்' ,'டிவி' மொபைல் என்று காலத்தை ஓட்டுகிறார்கள்.

முன்பெல்லாம் வீட்டில் மருமகள் என்பவள் நாள் முழுவதும் வீட்டு வேலை கவனித்து பெரியவர்களையும் பணிவிடை செய்து... குழந்தைகளையும், கணவனையும் கவனித்து; வேறு எதிலும் ஆசை வைக்காமல் எந்திரத்தனமாய் வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

பிறந்த வீட்டிலிருந்து யாராவது பார்க்க வந்தால்... ' என்னடி இது தலை கூட சீவாமல் - சாயம் போன சேலையை கட்டிக்கொண்டு வியர்வை வழிய... எப்பப் பாரு அடுப்பங்கரையில... நாங்க என்ன இந்த வீட்டு சீர் செனத்தி கொடுத்து சம்பளம் இல்லாத வேலைக்காரியாக உன்னை அனுப்பி இருக்கிறோம் ? என்ன அக்கிரமம் இது ? என்று ரகசியமாக புலம்புவதை கேட்கலாம்.

இப்ப காலம் மாறி விட்டது. அவரையும் அவரது சுய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே பிறவி எடுத்த மாதிரி தன்னால் வாழ்க்கை வாழ்கிறார்கள் .என நினைக்கிறோமோ அதை உடனடியாக அடைந்து ஆக வேண்டும்.

'முடியுமா ...முடியாதா ? அவசியமா... இல்லையா? இதெல்லாம் நாம் வருமானத்துக்கு ஏற்ற செலவு தானா ? என யாரும் யோசிக்கிறார்கள் . 'டிவி ரிமோட் பட்டனை' அழுத்துவது போல மாற்றி மாற்றி அவசர கதியில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நினைவலைகளில் மிதந்துகொண்டிருந்த ஹனிபா... பேரனின் அழுகை குரலில் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

"ஏண்டி.... குழந்தை அழுகிறது அத கூட பார்க்காம அப்படி என்ன லேப்-டாப்'?

"சும்மா இரும்மா... இப்பதான் பால் கொடுத்துட்டு வர்றேன். அவன் ஒரு 'தொண தொண' பாப்பா ... !தானே அடங்கிடுவான்."

"செங்கல்பட்டுக்கு பக்கத்தில் ஒரு சர்வதேச பள்ளிக்கூடம் இருக்கு . அங்கே 400 வீடுகள் கொண்ட பெரிய 'அப்பார்ட்மெண்ட் ' வரப்போகுதாம். அதெல்லாம் ஒன்னும் இப்போ 'புக்' பண்ணினாத்தான் ஹமீத் அந்தப் பள்ளிக்கூடத்துல சேர்க்கும்போது வசதியாக இருக்கும்"- அவள் பேசிக் கொண்டே இருந்தாள்.

இதற்கு மேல் அவளிடம் பேசி பயனில்லை என்பது புரிந்தது, பேச்சை வேறு விஷயத்திற்கு திருப்பினாள்.

"உன்னையும், குழந்தையும் எப்ப உங்க வீட்ல கொண்டு போய் விடுகிறது ? அதற்கு பதில் சொல்லு..."

"நீ திரும்பத் திரும்ப அதே கேட்டு தொந்தரவு பண்ணாத ! என்னால இனிமே அங்கே போயி வாழ முடியாது."

"என்னடி சொல்ற...! பிரசவத்துக்கு வந்த பொண்ண கைக்குழந்தையோடு மாமியார் வீட்டில் கொண்டுபோய் விடுவது தானே முறை."

" அம்மா ... தயவுசெய்து இந்தப் பேச்சை இதோட நிறுத்து. ஏதோ நீயும் , என் வீட்டுக்காரியும் சொன்னதால ஒன்றரை வருஷமா அங்கேயே இருந்தேன். இனிமே போக வாய்ப்பே இல்ல. என்னோட முடிவு என்னன்னு இப்பவே சொல்றேன் கேட்டுக்கோ...

குழந்தைக்கு ஆறு மாதம் வரையிலும் இங்கு தான் இருப்பேன். வேணும்னா. அவர் வந்து போய் இருக்கட்டும்.

இதுக்கு அவரும் 'ஓ.கே' சொல்லிட்டார். நீ பார்த்துக்கிறதா இருந்தா உன்கிட்டே குழந்தையை விடுவேன். பிறகு தனியாக வீடு பார்த்து 'செட்டில்' பண்ணிட்டு அவனை 'போர்டிங் ஸ்கூலில்' விட்டுட்டு நான் வேலைக்குப் போயிடுவேன்.

இதே மாற்றவோ இல்லை ... என் மனச திருப்பும் முயற்சி செய்தா... இப்பவே வேறு வீடு பார்த்து கிளம்பிடுவேன். அத்தையோட இனிமே என்னால ஒத்துப் போக முடியாது .எதற்கெடுத்தாலும் 'அந்தக் காலத்தில்'ன்னு ஆரம்பிச்சு 'டார்ச்சர்' செய்றாங்க"- சொல்லி விட்டு 'விர்' ரென்று உள்ளே சென்று விட்டாள்.

ஹனிபாவுக்கு தலை 'விண் விண்' என்று வலித்தது.

'இந்த காலத்து பெண்கள் ஏன் பொறுமை இல்லாதவர்களா... அவசர புத்தி கொண்டவர்களா இருக்காங்க. கூட்டுக் குடும்பத்தின் மகத்துவத்தை உணர மறுக்கறாங்க. அல்லாஹு... இவர்களுக்கு இதெல்லாம் எப்படி சொல்லி புரிய வைக்கிறது என வேதனைப்பட்டாள்.

அதன் பிறகு வந்த இரண்டு நாட்களில் அம்மாவும் பொண்ணும் பேசிக்கொள்ளவே இல்லை.
மூன்றாவது நாள், "பாத்திமா... நாளன்னைக்கு நல்ல நாளாக இருக்கு. உன்னையும் குழந்தையும் புகுந்த வீட்டில் கொண்டு விடுகிறேன். ஒரு வாரத்தில் உன்னை திரும்ப கூப்பிடுகிறேன்".

"சரிம்மா... ஏதோ நீ சொல்றேன்னு தான் சம்மதிக்கிறேன். ஒரு வாரத்தில் என்னை கூப்பிட வந்துடு."

அடுத்த இரண்டு நாட்களில் பாத்திமா தன் குழந்தையோடு மாமியார் வீட்டுக்கு சென்றாள். ஒரு வாரம் ஓடியது. அவளிடமிருந்து எந்த புகாரோ, புலம்பலோ இல்லை. 'போன்' செய்தால் ஹனிபா.

"என்னம்மா... ஏதாவது செய்தி உண்டா?" பயத்துடனேயே கேட்டாள்.

"ஒன்னும் இல்லம்மா ! இப்போதைக்கு நான் அங்கே வரதை இல்ல. அவரும் இந்த வாரம் மும்பை 'டிரிப்'முடிச்சிட்டு வந்துடுவார். அத்தைக்கும், குழந்தையுடன் நன்றாகப் பொழுது போகுது. அதனாலே, அப்புறமா பார்க்கலாம். முடிஞ்சா நீ இங்கே வா..." இன்று கச்சிதமாக பேசிவிட்டு வைத்து விட்டாள்.

ஹனிபாவுக்கு குழப்பமாக இருந்தது! அதே நேரம், 'நம்ம பொண்ணா இப்படி பேசுகிறாள்?' என அதிர்ச்சி வேறு. உடனே அவளைப் பார்க்க கிளம்பி விட்டாள்.

அங்கே சம்பந்தியம்மாள் இல்லை. கோவிலுக்கு சென்று இருக்கிறாராம். அம்மாவைப் பார்த்தவுடன் ஓடி வந்து கட்டிக் கொண்டாள் பாத்திமா. முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

" அம்மா உனக்கும் என் மாமியாருக்கும் நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கிறேன்."

"என்னடி சொல்ற ஒன்னும் புரியலையே!"

"சொல்றேன்ம்மா... அத்தை என்னை இங்கே கொண்டு வந்து விடுங்ன்னு அடிக்கடி சொன்னார்களே... அதன் பின்னணியில பெரிய கதை இருக்கும்மா. சொல்லவே கூச்சமா இருக்கு.

மாப்பிள்ளையும் கூட வேலை செய்யும் பொண்ணோடு நெருங்கிப் பழகுறாராம். அதே சாக்கா வச்சிக்கிட்டு அடிக்கடி அலுவலக விஷயமா வெளியே போறேன்னு அத்தை கிட்ட சொல்லி இருக்கிறார். இந்த குட்டு தெரிந்ததும்தான் உஷாராகி... என்னை கொண்டு விடும்படி வற்புறுத்தி இருக்கிறாங்க.

கல்யாணமான புதுசுல அத்தை அடிக்கடி சொல்லுவாங்க... 'இதோ பாரு பாத்திமா! உன் வீட்டுக்காரனை எப்போவும் பிரியக் கூடாது. எங்கேயோ பிறந்து வளர்ந்தவங்க மணவாழ்க்கையில் இணையும்போது, ஒருத்தர் மற்றவரோட விருப்பங்களையும், குணாதிசயங்களையும் புரிஞ்சிக்க சில வருஷங்கள் ஆகும். சில ஆண்களோட மனம் இயல்பாகவே 'கடிவாளம் இல்லாத குதிரை' போன்ற அது சீக்கிரம் சபலத்துக்கு ஆளாகி விடும்.

இந்த நேரத்துல மனைவியால் தன்னுடைய பொறுமை, அன்பால் கணவனுக்கு கடிவாளமிட்டு வாழ்க்கைப் பயணத்தை ஆனந்தமாக்கணும். வாழ்க்கையே வெறும் படிப்பறிவு மட்டும் புரிந்து கொண்டு வாழ்ந்துவிட முடியாது.

சங்கடங்கள், சிக்கல்கள் என்கிற முடிச்சுகள் விழும்போது... அனுபவசாலிகள் எளிதாக அவிழ்க்க முடியும். சமயோசித புத்தி என்பது அனுபவங்கள் தரும் தழும்புகள். அதைப் பெற்றவர்கள் சரியாக வழி காட்டுவார்கள். போகப் போக உனக்கு எல்லாம் புரியும் 'ன்னு! அது எனக்கு அப்ப தேவை இல்லாத உபதேசமாக இருந்துச்சு. இப்ப அதன் உள்ளர்த்தம் முழுமையாக விளங்குது. "

ஹனிபாவுக்கு எல்லாம் புரிந்துவிட்டது.

மருமகளையும், பேரக்குழந்தையும் வந்து ஒரு வாரம் ஆகியும் வீட்டுக்கு வராத மகனை வரவழைக்க சம்பந்தி போட்ட நாடகம் இது என்பது தெரிந்துவிட்டது.

(๑˙❥˙๑) முற்றும் (๑˙❥˙๑)

 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான சிறுகதை,
தஸீன் பாத்திமா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top