உலக புத்தக தினம்

#1
ஏப்ரல் 23 இன்று உலக புத்தக தினம். புத்தகங்கள் சாகாவரம் பெற்றவை. மனிதனை புதுப்பிக்கும் மாண்பு நல்ல புத்தகங்களுக்கு உண்டு.

பாரீஸ் நகரில் கடந்த 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் ,25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28 வது மாநாட்டில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அறிவை பரப்புவதற்கும் உலகெங்கும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கும், புத்தகம் சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும் என்று யுனெஸ்கோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலக்கிய மாமேதை ஷேக்ஸ்பியர் மறைந்த தினமும் ஏப்ரல் 23 தான்
 

Advertisements

Top