• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உள்ளம் விழித்தது மெல்ல - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,122
Reaction score
4,620
Location
Coimbatore
உள்ளம் விழித்தது மெல்ல 16





தன் அருகில் வந்து நின்ற காந்திமதியை வியப்பாகப் பார்த்தான் கிஷோர். இவர்களை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான் சார்லஸ்.



காந்திமதியை நோக்கி ‘ஏன் வந்தாய்?’ என்றது கிஷோரின் பார்வை.



“அப்பா உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க”



“ஏன் அதை ஃபோன்ல சொல்லலாமே? என் நம்பர் அவங்ககிட்ட இருக்கே? இல்லனா நேத்து பாத்தப்ப சொல்லியிருக்கலாமே?”



“அப்டி செஞ்சா நீங்க இதேமாதிரி கேள்வியா கேட்டு கொலையா கொல்லுவீங்கன்னுதான் அதெல்லாம் செய்யலை. வர்றீங்களா?”



‘ம்ஹ்ம்… இந்தப் பதினாறு பதினேழு வயது பயங்கரமான வயது. யாரையும் இலட்சியம் செய்யாது என்று நினைத்துக் கொண்டான் கிஷோர்.



“இங்க முக்கியமான விசயம் பேசறது தெரியலையா? அப்புறமா வாரேன்னு உங்கப்பாகிட்ட சொல்லு” என்றான்.



“என்ன முக்கியமான விசயம்?”



“அதெல்லாம் உனக்குப் புரியாது. நான் கடை நடத்தறேன். அவர் பெரிய கம்பெனில வேலை செய்தாரு. எங்க பேச்சுல எது உனக்குப் புரியப் போவுது சொல்லு?”



“அது எதுவும் புரியலனாலும் பரவாயில்ல எனக்கு. கோமா பத்தி ஏதோ பேசுன மாதிரி இருந்துதே?”



“ச்சீ… ச்சீ! என்ன பேச்சு பேசுதே? எப்ப இருந்து நாங்க பேசுதத கேக்க?”



“வந்து.. இப்பதான்…”



“இப்ப வந்துகிட்டு வாய் புளிச்சுதோ மாங்கா புளிச்சுதோன்னு பேசக் கூடாது. வயசுக்குத் தகுந்த மாதிரி பேசு” என்று மூச்சு விடாமல் அவளை அதட்ட காந்திமதியைப் பாவமாகப் பார்த்திருந்தான் சார்லஸ்.



என்ன ஒரு சுறுசுறுப்பான பெண்? அவளை அவள் பெற்றோரும் அண்ணனும் அவ்வளவு தாங்குகிறார்கள். பள்ளியில் நன்றாகப் படிக்கிறாள் என்று ஆசிரியர்கள் ஒரு பக்கம் அவளைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இங்கானால் இந்த கிஷோர் எந்த உரிமையில் இவளை இந்த அதட்டல் போடுகிறான்? இவளும் அமைதியாக இருக்கிறாள்?



“நீங்க என்னவோ பேசுங்க. எனக்கென்ன? சொல்ல வேண்டாம்னு பாத்தேன்… உங்க அம்மா எங்க வீட்டுக்கு வந்திருக்காங்க. ஏதோ பிரச்சனை போல. அதுல கோமா பேரும் வந்திச்சு. அதான் அப்பா உங்க அம்மா எதிர்ல உங்களை வரச் சொல்ல வேண்டாம்னு என் அண்ணனை விட்டு உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க. பேச்சு நடுல எந்திச்சு போக வேண்டாம்னு அம்மாவும் சொன்னாங்க. அண்ணன் ஏதோ துப்பறியறேன்னு என் கைல கால்ல விழுந்து உங்களைக் கூப்பிட என்னை அனுப்பி வச்சுது. அது சரி… வெள்ளி மற்றும் எல்லா அரசு விடுமுறை நாட்களும் லைப்ரரிக்கு லீவு நாளாச்சே? அதுனாலதான் இன்னிக்கு லைப்ரரி வந்தீங்களோ? ஏன்னா உங்களுக்குத்தான் படிக்கவேப் பிடிக்காதே?”



காந்திமதி பேசுவதை சார்லஸ் ஆசையாகக் கேட்டான். அவள் ஆறாம் வகுப்பு படிக்கும் போதில் இருந்துதான் அவளை அவனுக்குத் தெரியும். அப்போது சிவலிங்கம் பள்ளியை விட்டு கல்லூரிக்குச் சென்றிருந்தான். காந்திமதியை நினைக்கும் போது துள்ளிச் செல்லும் செல்ல நாய்க்குட்டி ஒன்று அவன் நினைவில் வரும்.



அன்று மரத்தில் இருந்து குதிக்கவா வேண்டாமா என்ற பயந்த குட்டிக் குழந்தை, இன்று சைக்கிள் அட்டகாசமாக ஓட்டி வந்து, இவனுக்குத் தண்ணீர் காட்டும் கிஷோரை எதிர்த்துப் பேசியதும், சார்லஸ் அளவில்லா ஆனந்தம் அடைந்தான்.



“சரி… சரி வாயைக் கொஞ்சம் கட்டு. நான் வாரேன். நீ கௌம்பு” இதற்கு மேல் தன் மானம் சார்லஸ் எதிரில் கப்பலேறுவதுப் பிடிக்காமல் கிஷோர் எழுந்து கொண்டான்.



அவன் உள்ளுர அசடு வழிவதைப் பார்த்து சார்லஸ் மனதிற்குள் சிரித்துக் கொண்டான். ஆனால் இவன் இப்போது பேசப் போகும் பிரச்சனை தன்னுடையது அல்லவா? அதனால் முகத்தைக் கொஞ்சம் விறைப்பாக வைத்துக் கொண்டான். மனதிற்குள் ஜமாப் அடித்தாலும் வெளியே முகத்தைத் தெளிவாக வைத்துக் கொண்டான். மாப்பிள்ளை என்று பார்க்கும் போது இவனுடைய முக லட்சணமும் பார்;க்கப்படும் அல்லவா?



அது போக எப்படியும் சுபமஸ்து என்று தெரியும். அதனால் டென்ஷன் இல்லை அவனுக்கு. டென்ஷனைத்தான்; கிஷோருக்கு கொடுத்து விட்டானே? அவனும் அதை வாங்கிக் கொண்டானே? கிஷோர் இவனுடைய திருமணத்தை கோமதியுடன் முடித்து வைப்பான் என்று தெரிந்துவிட்டது. அன்னம்மாள் கிஷோரின் அம்மாவாயிற்றே? அவரும் அப்படித்தான். அப்புறம் என்ன? டென்ஷனைக் குறைக்கலாம் தப்பில்லை என்று அவன் மனம் சொல்லியது.



கிஷோரை கல்லூரிக் காண்டீனில் அடிக்கடிப் பார்த்திருக்கிறான். அவனுடைய குணம் பற்றி சார்லிஸிற்கு ஒரு கணிப்பு உண்டு. அதன்படி கிஷோர் நல்லவன்தான். ஆனால் அடங்காதவன். அன்பிற்கு மட்டும் அடங்குவான் போலும். ஆனால் அவனிடம் அன்பை வைத்து அவன் அடங்கும் விதம் பார்;க்க இவனுக்கு நேரமில்லாததால் நினைப்புடன் விட்டுவிட்டான்.



“நான் இங்க இருக்கது எப்படித் தெரியும்?”



“இது பெரிய சிதம்பர ரகசியமா? இருக்கது இம்புட்டோண்டு ஊரு. இங்கன இருக்க ஆளு தெரியமா போவுமா? இருந்தாலும் நீங்க இங்க இருக்கீங்கனு சொன்னது உங்க அம்மாதான்.”



“நானும் வாரேன்” என்று கிளம்பிய சார்லஸை யோசனையாகப் பார்த்த கிஷோர் “சரி வா”
என்றான்.



மூவரும் அவரவர் வாகனங்களில் கிளம்ப கிஷோருக்கு மனசு தாங்காமல் “வயசுப் புள்ளைய இப்படி தனியா அனுப்பி…” என்ற முடிப்பதற்குள்,



“தனியா எங்க அனுப்பிட்டாங்க? நீங்க இருக்க இடத்துக்குத்தானே? சும்மா புலம்பாம வாங்க“



அவள் பாட்டிற்கு சொல்லிவிட்டு மிதிவண்டியை மிதிப்பதில்; கவனத்தை செலுத்த கிஷோர் கொஞ்சம் அதிர்ந்தான்.



அங்கே சென்றால் வீடு பரபரப்பாக இருப்பது வெளியே இருந்து பார்;க்கும் போதே தெரிந்தது. அன்னம்மாவின் குரல்தான் ஒலித்துக் கொண்டு இருந்தது.



“எலுமிச்சம்பழ சாறுல ரெண்டு துண்டு ஐஸ் போடு லட்சுமி. இன்னும் கொஞ்சம் தெம்பு வேணும் உன் புருசன்கிட்ட இந்த விசயம் பேச எனக்கு” என்று லட்சமியை விரட்டிக் கொண்டு இருந்தார்.



காந்திமதியின் தாயும் அங்கே ஆஜராகி இருந்தார். அவள் அப்பாவும் அண்ணனும் ஒரு சோபாவில் இருந்தனர். சீனிவாசன் ஒரு பிளாஸ்டிக் சேரில் இருந்தார். அன்னம்மாவுக்கு தனி சோபா ஒதுக்கப்பட்டு இருந்தது.



மிக முக்கியாக அங்கே இவன் தாத்தா இருந்தார். வயதான அவருக்கு காது சற்று மந்தம் என்பதால் குழப்பத்துடன் ஒரு சோபாவில் இருந்தார்.



பாரதியும் கோமதியும் உள் அறையில் இருந்து எட்டிப்பார்த்துக் கொண்டு இருந்தனர். பாரதி துறுதுறுப்பு தாங்காமல் அவ்வப்போது வெளியே ஓடி வந்து அப்பாவின் பின் நிற்பதும் பின் அம்மாவின் முறைப்பிற்கு பயந்து உள்ளே ஓடுவதுமாக இருந்தாள்.



காந்திமதியின் தாய் ராஜேஸ்வரியும் கோமதியின் தாய் லட்சுமியும் சமையலறையில் நின்றது ஜன்னல் வழி தெரிந்தது.



இத்தனையும் வண்டியை நிறுத்தும் சாக்கில் கவனத்தில் பதித்துக் கொண்டான் கிஷோர். சார்லஸ் பதட்டமாக இருந்தாலும் இந்த ரணகளத்திலும் கோமதியை அவன் கண்கள் தேடி சலித்தது.



அதற்குள் பாரதியை அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்குச் சென்றிருந்தாள் காந்திமதி. அப்படித்தான் அவள் அப்பா நம்பியின் உத்தரவு அவளுக்கு.




கிஷோரைப் பார்த்து தெம்பு பெற்றவரானார் சீனிவாசன். “உள்ள வா கிஷோரு. உங்க அம்மா என்ன புதுசா சொல்லுது? உனக்கு ஏதும் தெரியுமா?” என்று வினவினார்.





என்னதான் வயதும் அனுபவமும் இருந்தாலும் கிஷோரைக் கலந்து ஆலோசிப்பது சீனிவாசனுக்கு ஒரு நிறைவைத் தரும். சில ஆண்டுகளாக அவனிடம் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள பழகி இருந்தார். அவனைத் தலைச்சான் பிள்ளையாக நினைக்கத் தொடங்கி இருந்தார். அதற்கு அவனும் அவரைப் போல கடை வைத்திருப்பது ஒரு காரணம் என்றாலும் தந்தை இல்லாத அவனிடம் ஏற்பட்ட வாஞ்சையும், தனக்கும் ஆண்பிள்ளை இல்லாததால் ஏற்பட்ட ப்ரியமும் முக்கிய காரணமாக இருக்கலாம்.



டீபாயில் வாட்டர் பாட்டிலில் இருந்த ஐஸ் வாட்டாரைக் குடித்துவிட்டு நிமிர்நதான் கிஷோர். அதற்குள் சார்லஸ் உள்ளே வந்திருந்தான். அவனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார் சீனிவாசன். அவன் அதை சட்டையில் ஒட்டிய தூசியாகத் தட்டி விட்டு கிஷோரைத் தொடர்ந்து ஐஸ் வாட்டார் குடிக்க எரிமலை ஆனார் சீனிவாசன்.



“இங்க என்ன பிரச்சனை ஓடுது தெரியுமா உங்களுக்கு? கிஷோர் அம்மா …வந்து என் பொண்ணை உங்களுக்கு….” என்ற தடுமாறினார்.



ஓரளவு தன் பதட்டத்தைக் குறைத்தவன் இந்த இடத்தில் தடுமாறக் கூடாது எனற உறுதி மொழி எடுத்தான்.



தாத்தாவின் அருகில ஒரு சேரில் அமர்ந்து கொண்டான். அவர் இவனைப் பாhத்துப் புன்னகைத்து தன் தெம்பையும் இவனுக்கான ஆதரவையும் கண்ணாடிக் கண்கள் வழி தெரிவித்தார்.



“வெளிய இருந்து வந்தா தண்ணி குடுப்பாங்க. நீங்க தரல. நான் எடுத்துக்கிட்டேன். அது தப்புனா ஸாரி.” என்று சார்லஸ் அமைதியாகக் கூறியதைக் கேட்டு அவர் கொஞ்சம் சங்கடமாக நெளிந்தார். அந்த அவரின் தடுமாற்றத்தை சட்டெனப் பற்றிக் கொண்டான். அவர் அசந்த நேரத்தில் தான் சொல்ல வந்ததைச் சொன்னால் காது கொடுத்துக் கேட்பார் என்பதால் கடகடவென பேச ஆரம்பித்தான்.



“அங்கிள் பெரியம்மா சொன்னது உண்மைதான்.” என்றான்.





‘ யாருடா பெரியம்மா?’ என்பதாக சீனிவாசன் பார்;க்க, அது அன்னம்மாள் என்பது அவர் பெருமையாகச் சிரித்ததில் புரிந்ததும் தலையை அசைத்துக் கொண்டார்.



“என் ஜாதி மதம் வேற. எனக்கு தாய் தகப்பன் இல்ல. இது எல்லாம் நீங்க சொல்லுமுன்ன நான் சொல்லுதேன். ஆனா நானும் மனுசந்தான். நாயோ நரியோ இல்ல. ஓரளவு படிச்சிருக்கேன். நல்ல வேலை பாக்கேன். முன்னேற வாய்ப்பு இருக்கு. வீட்ல பிக்கல் பிடுங்கல் கிடையாது. சொத்துபத்து உங்க அளவு இருக்கு. கண்டிப்பா இன்னும் நல்லா இருப்பேன்… நீங்க உங்க பொண்ணை எனக்குக் கட்டிக் குடுத்தா. குடுப்பீங்களா?” என்ற கேட்டு முடித்தவன் சுற்றுப்புறம் அமைதியாக இருப்பதை உணர்ந்தான்.



அனைவரும் அவனையேப் பார்த்திருக்க கோமதி உள் அறையை விட்டு வெளியே வந்திருந்தாள். நேற்றுதான் பூத்தவள் இன்று கல்யாணம் பேசினால் அதிர்ச்சியை அவளால் எப்படித் தாங்க முடியும்? வயதுக்கு வந்த அந்தப் பண்பாடே இன்னும் புரியவில்லை. இதில் இதுவேறா?



ஆனால் ‘என்னைக் கட்டிக்கிறயா?’ என்று அவன் கேட்டதும்…இவள் உணர்ந்ததும்…



வந்தவளைப் பார்த்து இவன் புன்னகைக்க, கிஷோர் இவன் சட்டையைப் பிடித்து விட்டான்.



“என்ன தைரியம் இருந்தா எங்க வீட்டுப் புள்ளையப் பாத்து எங்க முன்னாடியே சிரிப்பே? ஏதோ தன்மையா பேசுதியேன்னு பாத்தா யாருகிட்ட உன் காவாலித் தனத்தைக் காட்டுதே?” என்று எகிற, மற்றவர் அதிர கோமதி பதறிவிட்டாள்.



“அய்யோ மாமா… அவங்க தப்பா ஒன்னும் சிரிக்கல” என்றாள்.



“உன்னைப் பாத்து சிரிச்சதே தப்புங்ககேன். அதுல சரி என்ன தப்பு என்ன?”



கோமதி கையைப் பிசைய “உள்ளே போ” என்று கர்ஜித்தார் சீனிவாசன். அவர் சிம்மக் குரலைக் கேட்டு லட்சுமியும் ராஜியும் சமையல் அறையை விட்டு வெளியே வந்திருந்தனர். அங்கே அவர்களுக்கு ஒரு வேலையும் இல்லை. இருந்தாலும் பெரும்பாலான நம் பெண்களின் புகலிடம் அதாகத்தானே இருக்கிறது?



லட்சுமி கோமதியைப் பிடித்து அறைந்து விட்டார். “புள்ள முளைச்சிருக்கிற லட்சணத்தைப் பாரு? கழுதைக்குப் பின்னங்கால் முளைச்ச மாதிரி. உங்கூட படிச்ச பிள்ளைகதானே காந்திமதியும் செல்வமும்? அதுங்க என்ன பொட்டாட்டம் இருக்குங்க? நீ நேத்துதான் வயசுக்கு வந்த? இன்னிக்கு எங்களை இந்தக் கேவலப்படுத்துதே!” என்று குமுற அன்னம்மாள் ஓடிப்போய் அவளைப் பிடித்துக் கொண்டார். லட்சுமி கோமதியை மீண்டும் அடிக்க கை ஓங்கியதே அதற்குக் காரணம். சார்லஸ் மனம் ரணமாக வலிக்க இவைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.



கோமதி கன்னத்தைப் பிடித்துக் கொண்டு உள் அறைக்குப் போய்விட்டாள். கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. இதைல்லாம் அவள் யோசித்ததே இல்லையே? அவள் பாட்டிற்கு விஸ்காம் படிக்க எப்படி அப்பாவை தாஜா பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தாள். இங்கானால் சூறாவளி சுற்றி சுற்றி அடிக்கிறது அவளை!



“ஊர்ல எனக்கு ஒரு கவுரவம் இருக்கு. உங்க தாத்தாவை நினைச்சு உங்களை விடுதேன். இந்தப் பேச்சை விடுங்க. இதுக்கு உங்க அம்மா வேற ஜால்ராவா? என்று சீனிவாசன் கிஷோரை முறைத்தார்.



அவனும்தான் ஜால்ரா. அதனால்தான் சார்லஸ் கோமதியைப் பார்த்து இந்த இடத்தில் அதிகப்பிரசங்கித் தனமாக சிரித்ததை சமாளிக்க இவன் எகிறினான். கொஞ்சம் அடக்கமாக இருக்கக் கூடாதா இந்த சார்லஸ்?



இப்போது அன்னம்மாள் பேச ஆரம்பித்தார்.



“உங்க கோபத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு கொஞ்சம் யோசனை பண்ணிப் பேசுங்க. கோமதி வயசுக்கு வராம எத்தனை பேச்சு கேட்டிங்க. அது தன்னைப் போல நடக்க விசயம். அதுக்கே இந்த ஊரு அந்தப் பேச்சு பேசுச்சு. ஆனா கல்யாணம் அப்படி இல்ல. நாமா பாத்து பண்றது. என் மவளுக்கு எத்தனை வருஷம் கல்யாணம் ஆகாம நான் எந்த விஷேசத்துக்கும் போகம இருந்தேன்னு தெரியுமா? அப்புறம் குழந்தை விசயம்! இப்படி அவ எல்லாத்துக்கும் ரொம்ப கஷ்டப்பட்டா. இப்ப நல்லா இருக்கா. ஆன பட்ட கஷ்டம் பட்டதுதானே? உங்க மகளுக்கு தானா வரன் வந்திருக்கு. ஜாதிலாம் ஒரு காரணமா? அவங்க மதத்தில சேருதது சேராதது உங்க மக விருப்பம். இப்ப இல்ல அவ படிச்சு முடிக்கட்டும். உங்களுக்கும் சார்லஸை பிடிக்காம போக வேற எந்தக் காரணமும் இல்லை. “



“முக்கியான காரணமே ஜாதிதான். படிப்பு வேலை ரெண்டாவது. முதல்ல என் ஜாதி எனக்கு முக்கியம்” என்று சுரத்தில்லாமல் பேசியவரை அன்று பொருட்காட்சியில் இவனைப் பார்த்து தங்கள் மகளுக்குப் பொருத்தமாக இருப்பான் என்று சொன்னதும் இவரேதானா? எனப் பார்த்தார் லட்சுமி. அவர் பார்வையை உணர்ந்த சீனிவாசன் ;அன்று நிலைமை வேறு இன்று வேறு’ என்பதாகத் தோளைக் குலுக்கினார்.



ஆயிரம் இருந்தாலும் இதைப் பற்றிப் பேசித்தானே ஆக வேண்டும் அவர்? அவர் ஜாதியில்லை மதமில்லை என்றாலும் அதைப் போற்றும் இந்த சமூகத்தில்தானே அவர் வாழ வேண்டும்? அவராவது பரவாயில்லை. மகள் தாங்குவாளா?



லட்சுமிக்கு கிட்டத்தட்ட இதில் சம்மதம்தான். ‘ஊர்… உலகம் ‘என்று கொஞ்சம் பயம். தவிர தன் கணவரின் முடிவு தெரியமல் அவரால் பேச முடியவில்லை.



“என்ன அத்தான் பேசுதீங்க? நம்மளையும் நம்ம பொண்ணையும் மதிச்சு வீட்ல வந்து பொண்ணு கேக்கான். தன் வீட்ல தகுந்த ஆள் இல்லன்னு உங்க அத்தையை ஆள் பிடிச்சிருக்கான். நமக்கு ஒண்ணுனா இந்த ஊரும் உலகமா வந்து நின்னுச்சு? எல்லாரும் தேவைதான். ஆனா நமக்கு அப்புறந்தான். எனக்கு இவனைப் பிடிச்சிருக்கு. நல்ல பையன்தான். என்ன அத்தான் ஊரு? நாலு நாள் பேசும். நாலாவது நாள் வேற சப்ஜெக்ட்டுக்குப் போயிரும். உங்களுக்கு எப்போதும் நான் துணைக்கு இருப்பேன் அத்தான். நீங்க துணிஞ்சு செய்யலாம்”



அப்படியும் சீனிவாசன் சிந்தித்துக் கொண்டிருக்க, “நீங்க இவ்வளவு யோசிப்பங்கனு தெரியும். ஆனாலும் என்னை நம்புங்கனு சொல்லுதது தவிர வேற எனக்கு ஒன்னும் தெரியலை. உங்க பொண்ணை நான் நல்லா பாத்துக்குவேன். உடனே உங்க முடிவை சொல்ல வேண்டாம். யோசிச்சு சொல்லுங்க. எனக்கு உங்க பொண்ணைத் தர சம்மதம்னு சொல்லுங்க. இதுல கோமதியைத் திட்டாதிங்க. அவளுக்கு ஒன்னும் தெரியாது. நான்தான் அவ மேல ஆசைப்படுதேன். இன்னிக்கு நேத்து இல்ல, ரெண்டு வருஷமா” என்று அவன் நிறுத்தியபோது அனைவரும் அதிர்ந்து விட்டனர்.



லட்சுமிக்குக் கொஞ்சம் சந்தோசம்தான். பெற்றவளுக்கு தன் பிள்ளைகள் குடும்பமாக இருப்பதுதானே ஆனந்தம்? ராசியில்லாதவள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட தங்கள் மகளை இத்தனை ஆசையாக மணமுடிக்க ஒருவன் முன்வந்தால் அதைவிட வேறு என்ன வேண்டும்?



சொன்னால்தானா? கோமதியை ஒவ்வொரு இடத்தில் ஒதுக்கி வைத்ததை அவர் அறியாமாலா இருந்தார்?



ஆனால்…



“சரி சரி. இதை அப்புறம் பாப்போம். காபித் தண்ணி போடுதேன். குடிங்க. மத்தது அப்புறம் பேசலாம்.”என்றவரை சீனிவாசன் கூர்ந்து நோக்க அதில் அவரது சம்மதம் தெரிந்ததில் ஆச்சரியம்தான் அதிகமாக இருந்தது இவருக்கு.



எனவே அவரும் தன் மனைவியைப் பின்பற்றி,



“சரி சரி எதா இருந்தாலும் இன்னும் ரெண்டு மூணு வருசம் கழிச்சுதான் பேச முடியும். காபி குடிங்க. நான் யோசிச்சு சொல்லுதேன்” என்று முடித்தார்.



அறை வாங்கிய கோமதி இப்போது அதிர்ந்து விழிக்க, சார்லஸ் யோசனையாகப் பார்த்தான் . கிஷோர் திருப்தியாகச் சிரித்துக் கொண்டான். ‘இதை சரி பண்ணரலாம்’ என்ற அவன் சந்தோசம் அதில் தெரிந்தது.



நிலவரம் கலவரமாகாததில் தாத்தாவும் நிம்மதியாக உணர்ந்தார். ஒருவாறு விசயத்தை கிரகித்திருந்த அவர் இதுகாறும் அமைதியாகவே இருந்தார். பேரனது விருப்பம்தான் அவர் விருப்பம். அதில் மாற்றம் இல்லை. எனவே கோமதியைப் பார்க்க ஆவலாக உள் அறையைப் பார்க்க அதை உணர்ந்த லட்சுமி “ கோமதி ஃப்ரிட்ஜ்ல இருந்து பால் எடுத்துக்குடு” என்று வேலை ஏவினார்.



சூழ்நிலை சுமுகமாக மாறியதில் சார்லஸ் நிம்மதி அடைந்தான். அவன் தேவி வெளியே வர அவளை சைட் அடிக்கும் வேலையை கமுக்கமாகச் செய்தான். அதைக் கண்டு கொண்ட கிஷோர் ஒரு விரலை நீட்டி அவனை எச்சரித்துச் சிரித்தான். இதைக் கண்டும் காணாமல் அன்றைய தினசரியை எடுத்துப் பிரித்தார் சீனிவாசன்.



நண்பனுக்குத் துணையாக வந்திருந்த நம்பியும் அதேப் பணியில் ஈடுபட்டார். இத்தனையையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த சிவலிங்கம் ‘அப்பாடா’ என நிம்மதி அடைந்தான். இதே மாதிரிதானே அவனும் பேச வேண்டும்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமா லக்ஷ்மி டியர்
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Evlo days wait panninen theriyuma akka 😶😶😶😶😶

So gandhimadhi daan kishore ku jodiyaa

Adhane ivaru daane charles nallavan vallavan nu pesinaaru ipo ipdi solluraaru

Jaadhi madham idhu ellam engaiyum illa ipo aana kalyanam nu aarambikumbodhu vandhurudhuuu enna solla mostly paiyan veetula enga cast ku ponna anupunga solluvanga but ne cast laiye iru na en cast laiye iriken sonna endha problem um illaiye

Bold attempt akka intercast and intracast pathu pesuradhulam sadharansma vishyam illa thani guts venum

All set ivan route clear ipo edhuku andha pacha pullaiya adicha nga too bad ava enna pannina
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,122
Reaction score
4,620
Location
Coimbatore
Evlo days wait panninen theriyuma akka 😶😶😶😶😶

So gandhimadhi daan kishore ku jodiyaa

Adhane ivaru daane charles nallavan vallavan nu pesinaaru ipo ipdi solluraaru

Jaadhi madham idhu ellam engaiyum illa ipo aana kalyanam nu aarambikumbodhu vandhurudhuuu enna solla mostly paiyan veetula enga cast ku ponna anupunga solluvanga but ne cast laiye iru na en cast laiye iriken sonna endha problem um illaiye

Bold attempt akka intercast and intracast pathu pesuradhulam sadharansma vishyam illa thani guts venum

All set ivan route clear ipo edhuku andha pacha pullaiya adicha nga too bad ava enna pannina
Sorryda. Konjam work. Ini seekkiram poduren😌

Kadalukku guts illamala?❤

Thank you so much for your lengthy comment dear. It is a boost to me ❤🌺
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top