ஊடல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

JeyaBharathi

Well-known member
Joined
Jun 24, 2019
Messages
149
Reaction score
331
Points
63
Location
Muscat
அன்பின் தேவைகள்
உரிமையாய் உருமாறும் கணம்
ஊடலின் முதல் புள்ளியாய்...

மொழியப்படும் சாடல் மொழிகள்
ஊடலில்
எழுதா சாத்திரங்களாய்...

ஊடல் நிமிடங்களில்
மட்டுமாய் முகம் காட்டும்
குறைமன தளும்பல்களுடன் ..
இயல்பாய் பின்னி பிணையும்
என்றோ நீர்த்த
இளமை காதல் கணங்களின்
விழிமொழி களவுகள்...

எவரெவருக்காகவோ
தொடங்கிய கலகமது.,
அவனுக்காக அவளுள்ளும்
அவளுக்காக அவனுள்ளும்
சமாதான துளிர்விட்டு
காதலாய் கிளைபரப்பும் ஊடல்..

கண்ணீரும் கதறலுமாய்
கணங்கள் கனமாய்
கரைந்தாலும்.,
ஊடலது உவகையே...

முற்றுப்புள்ளியாய் கூடல்
முற்றாமல் தொடர
காற்புள்ளியாயொரு ஊடல் ❤ ❤
 
Last edited:

Kathambari

Author
Author
SM Exclusive Author
Joined
Feb 1, 2019
Messages
5,542
Reaction score
17,793
Points
113
Location
Mumbai
அருமை
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top