• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எக்ஸ்பிரஸ் வே சாலைகளில் உள்ள ஆபத்துக்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yazhini1

Moderator
Staff member
Joined
Nov 8, 2019
Messages
228
Reaction score
23
இந்தியாவின் எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் ஏராளமான ஆபத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்.

வாகனங்களின் விரைவான போக்குவரத்திற்காக நாடு முழுவதும் பல்வேறு எக்ஸ்பிரஸ்வே (Expressway) சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மற்ற வழக்கமான சாலைகளுடன் ஒப்பிடும்போது, எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் வாகனங்களை இயக்குவது வித்தியாசமானது. அத்துடன் மற்ற சாதாரண சாலைகளுடன் ஒப்பிடும்போது, எக்ஸ்பிரஸ்வேக்களில் பல்வேறு ஆபத்துக்களும் மறைந்துள்ளன. எனவே இந்தியாவின் எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் மறைந்துள்ள ஆபத்துக்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

எக்ஸ்பிரஸ்வேக்களில் நீங்கள் கவனமுடன் பயணிக்க இந்த தொகுப்பு உதவும் என நம்புகிறோம்.

டயர் வெடிக்கும் ஆபத்து
இந்தியாவின் எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் டயர் வெடிப்பு சம்பவத்தால் விபத்து என்பது போன்ற செய்திகள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. இதனால் பல உயிர்கள் பரிதாபமாக பறிபோகின்றன. இதன் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தியாவின் புதிய எக்ஸ்பிரஸ்வே சாலைகள் பெரும்பாலும் கான்கிரீட் மூலமாக கட்டமைக்கப்படுகின்றன. டார்மேக் (Tarmac) உடன் ஒப்பிடும்போது இது நீண்ட வருடங்கள் நீடித்து உழைக்கும். அத்துடன் இதனை பராமரிப்பதும் மிக எளிதானது. ஆனால் உலர்ந்த சூழ்நிலைகளில், டார்மேக்கை காட்டிலும் கான்கிரீட்டில் உராய்வு அதிகமாக இருக்கும். அதிகப்படியான உராய்வு காரணமாக டயர்கள் மிக வேகமாக சூடேறி விடும். இதனால் சில சமயங்களில் டயர் வெடிப்பு சம்பவங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதற்காக மிகவும் அச்சப்பட வேண்டாம். டயர்கள் மிக மோசமான நிலையில் இருந்தால் மட்டுமே இது நடக்கும். டயர்கள் புதியவை என்றாலோ அல்லது நல்ல நிலையில் இருந்தாலோ அச்சப்பட வேண்டியதில்லை.

ஆயில் கசிவு
எந்த சாலையாக இருந்தாலும் ஆயில் கசிவு என்பது மிகவும் ஆபத்தானதுதான். ஆனால் எக்ஸ்பிரஸ்வேக்கள் என்றால் ஆபத்து பல மடங்கு அதிகரித்து விடுகிறது. வாகனங்கள் அதிவேகத்தில் வருவது மற்றும் கான்கிரீட் மேற்பரப்பும் ஆகியவைதான் இதற்கு காரணம். சரி, சாலைகளில் ஆயில் ஏன் கசிந்து காணப்படுகிறது தெரியுமா? சில சமயங்களில் வாகனங்களில் இருந்து ஆயில் கசிந்து சாலையில் படர்ந்து விடுகிறது. இதுதவிர விபத்து காரணமாகவும், சாலையில் ஆயில் படர்ந்து விடுகிறது. எக்ஸ்பிரஸ்வேக்களில் பயணிப்பவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் விபத்தில் சிக்க நேரிடும்.

பெட்ரோல் பங்க் பற்றாக்குறை
இந்தியாவில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ்வேக்களில் காணப்படும் மற்றொரு முக்கியமான பிரச்னை பெட்ரோல் பங்க் பற்றாக்குறைதான். எனவே எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் உங்கள் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக நன்கு திட்டமிட்டு கொள்ளுங்கள். கூடுமான வரை எரிபொருள் டேங்க்கை முழுவதும் நிரப்பி விடுங்கள்.

கொள்ளையர்களின் அபாயம்
நகர எல்லையில் இருந்து தள்ளிதான் எக்ஸ்பிரஸ்வே சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எக்ஸ்பிரஸ்வேக்கள் சில இடங்களில் மிகவும் அபாயகரமான பகுதிகளின் ஊடாக செல்கின்றன. எக்ஸ்பிரவே சாலைகளை பெரும்பாலும் உள்ளூரை சேர்ந்த ஆட்கள் பயன்படுத்துவது கிடையாது. வெளியூர் நபர்கள்தான் எக்ஸ்பிரஸ்வே சாலைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது கொள்ளையர்களுக்கு சாதகமான விஷயம். சில இடங்களில் உள்ளூர் வாசிகளே கொள்ளையர்களாக உருவெடுப்பதாகவும் தெரிகிறது. எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் இரவு நேரங்களில் கொள்ளை சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். உங்கள் வாகனத்தை நிறுத்தி கொள்ளையடிப்பதற்காக கொள்ளையர்கள் பல்வேறு விஷயங்களை செய்வார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எக்காரணத்தை முன்னிட்டும் தனிமையான இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

தூக்கம் தானாக வரலாம்
வாகனம் ஓட்டும்போது டிரைவருக்கு தூக்கம் வருவது என்ற ஆபத்தான விஷயம் அனைத்து சாலைகளிலுமே நடக்க கூடியதுதான். ஆனால் எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது உங்களுக்கு தூக்கம் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? வழக்கமான சாலைகளில் அடிக்கடி வளைவுகள் வரும். ஆனால் எக்ஸ்பிரஸ்வே சாலைகள் பெரும்பாலும் வளைவுகள் இல்லாமல்தான் கட்டமைக்கப்படுகின்றன. அதாவது அவை மிக நேராக இருக்கும். எனவே எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் நீங்கள் வாகனங்களை இயக்கும்போது உங்களுக்கு அலுப்பு தட்டலாம். சுவாரஸ்யம் இல்லாமல் போர் அடிப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். இதன் காரணமாக உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சாலை மிக நேராக இருப்பதால் உங்களை அறியாமலேயே நீங்கள் தூங்கி விடுவீர்கள். அப்படி நீங்கள் தூங்கி விட்டால், அதன் பின் விளைவு மிகவும் மோசமானதாக இருக்கும். எனவே அலர்ட் ஆறுமுகம் போல் எப்போதும் அலர்ட் ஆக இருங்கள். இதற்காக குறிப்பிட்ட இடைவெளியில் ஓய்வு எடுத்து கொள்ளலாம்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top