• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எங்கள் ஊரு.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

K

k.s.srinivasan

Guest
திருநெல்வெலி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் காருகுறிச்சிதான் எங்கள் ஊர்.நான் சிறுவனாக இருந்தபொது இருந்த காருகுறிச்சியைப் பற்றித்தான் சொல்லப்பொகிறேன்.அழகிய சிறிய ஊர்.ஊருக்குள் நுழைந்தவுடன் குடியானவர்கள் வசிக்கும் பகுதி.உள்ளே வந்தால் கன்னடியன் வாய்க்காலும் குளமும்.அதைத்தாண்டி வந்தால் வட்க்கு தெற்க்காக இறண்டு தெருக்கள்.ஒன்று கிழக்குத்தெரு.மற்றொன்று மேற்க்குத்தெரு.இதுதான் அக்கிரகாரப் பகுதி.எங்கள் வீடு மேற்க்குத் தெருவில்தான் இருந்தது.
ஊரைச்சுற்றி பசுமையான் வயல்கள். வயல்களுக்கு நடுவில்,குளக்கரையில் சாஸ் தா ங்கொவில். அந்தக்க்ரைமேலே யே மேற்கு நோக்கி நடந்தால் வீரவனல்லூருக்குப் போகலாம். மேலத் தெருவில் நுழைந்தவுடன் கிருஷ்ணன் கோவில்.மேலத்தெருவின் தெற்க்குப் பகுதிக்கும் வடக்குப் பகுதிகும் இடையில் வரதராஜப் பெருமாள் கோவில். எதிரேயுள்ள குறுக்குச் சந்தில் போனால் சிவன் கோவிலுக்குப் போகலாம் .
மேலத்தெருவின் வடகோடியில் பள்ளீக்கூடம். மெல்நடுனிலைப்பள்ளி. எட்டாவதுவகுப்பு வரை இங்குபடிக்கலாம். அதற்குப் பிறகு மேல் படிப்புக்குப் பத்தமடைக்கோ,வீரவநல்லூருக்கோதான் .போகவேண்டும். கல்லூரிக்குத் திருநெல்வேலிக்குத்தான் போகவேண்டும்.
மேலத்தெருவின் தெற்க்குக்கோடியில்குளம். குளத்திற்கு எதிர் கரையில் சற்று தூரம் சென்றால் மலை.. "கொழுந்திருந்தான் மலை". மேற்குத்தொடர்ச்சிமலைகளின் ஒரு பகுதி இது.
எங்கள் ஊர்மலை,வாய்க்கால், குளம் ஆகியவற்றிற்கு ஒரு வரலாறூஉண்டு. அனுமன் ஔஷத மலையை இலங்கைக்குஎடுத்துச்சென்றபோது விழுந்த ஒரு சிறிய கல்தான் இந்த கொழுந்திருந்தான் மலையாம்! அதற்கேற்றபடி இந்த மலையில் இப்பொழுதும் மூலிகை மருந்துகள் கிடைக்கின்றன!
கன்னடியன் என்ற பெயருடைய குறுனில மன்னர் மக்களின் நலனுக்காக குளங்கள் வெட்ட நினைத்தபோது அவரின் கனவில், அவர் ஒரு பசுவின்வாலைப் பிடித்துக்கொண்டு அந்தப் பசு எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் பின் தொடர்ந்து செல்வதுபோல் தெரிந்ததாம்.பசு சென்ற் வழியில் அது சில இடங்களில் படுத்து பிறகு எழுந்து சென்று ஒரு இடத்தில் மறைந்து விட்டதாம்! பசு போன வழியெல்லாம் வாய்க்காலும் படுத்த இடங்களில் குளங்களும் வெட்டும்படி கனவில் தோன்றியதால் மன்னரும் அதுபோலவே செய்தாராம்.அவர் பெயரால் கன்னடியன் வாய்க்கால்,கன்னடியன் குளம் என்று இன்றும் வழங்கி வருகிறது!
குளற்று நீர் பாசனத்திற்கும் மற்ற உபயோகங்களுக்கும் உதவி வருகிறது. வளமான வயல்களில், ஆனைக்கொம்பன்,சம்பா நெற்பயிர்கள் செழித்து வளர்ந்தன. வயல்களில் நெல் அறுவடை ஆனதும் சாக்கு மூட்டைகளில் எடுத்து வந்து நில சொந்தக்காரர் வீட்டு வாயிலில் கொட்டி மரக்கால் அளவையால் அளந்து எடுத்துச் சென்று களஞ்சியத்தில் கொட்டுவார்கள்.
" காந்தி மதி யாம், ரெண்டுயாம்"என்று ராகத்துடன் நெல்லை அளப்பதை கேட்க இனிமையாக இருக்கும். எண்ணீக்கையை ஆரம்பிக்கையில் ஒன்று என்று சொல்லாமல் காந்திமதி அம்மன் பெயரைச் சொல்லுவார்கள்.
மேலத்தெருவிலும்,கீழத்தெருவிலும் இரு வரிசைகளில் வீடுகள் அமைந்துள்ளன. எங்கள் ஊரில் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் இருக்கிறது. எங்கள் ஊருக்கு பல பெருமைகளுண்டு.
வைணவர்களின் புனித இடமான அகோபில பீடத்தை எங்கள் ஊரிலிருந்து இரு அழகியசிங்கர்கள்(குருமார்கள்) அலங்கரித்திருக்கிறார்கள். பெயரும் புகழும் பெற்ற நாதஸ்வர வித்வான் திரு. அருணாசலம் எங்கள் ஊர் காரர்தான் . வருடத்திற்கு ஒருமுறை மலை மேலிருக்கும் முருகப் பெருமான் ஊருக்குள் வீதி உலா வருவார். ஊருக்குள் வரும் போது இரவுநெடுநேரம் ஆகிவடும் .
கரகாட்டம்,மயிலாட்டம் எல்லாமிருக்கும்.எல்லவற்றையும் விட முக்கியமான ஒன்று காருகுறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரக் கச்சேரி. இரவு என் நேரமானாலும் மலையிலிருந்து முருகப்பெருமானுடன் கூடவே நடந்து நாதஸ்வரம் வாசித்து வருவார்.
எங்கள் ஊர் பள்ளி த் தலைமை ஆசிரியர் சங்கீத ஞானமிக்கவராக இருந்தார்.. அவர் வீட்டு வாயிலிலும் இன்னும் சில முக்கிய மனிதர்கள் வீடுகளின் முன்பும் அமர்ந்து சிறிது நேர்ம் நாதஸ்வரக் கச்சேரி செய்வார் வித்வான் அருணாச்சலம்.
மேலும் கோட்டுவாத்தியம்,வயலின்,புல்லாங்குழல், வாய்ப்பாட்டு ஆகியவற்றிலும் தேர்ச்சிபெற்றவர்களும் இருந்தனர் . அக்கிரகாரத்தின் இரண்டு தெருக்களிலும் இரண்டிரண்டு வரிசையில் வீடுகள். மேலத்தெருவின் மேல வரிசை வீடுகளின் பின்புறம் சிறிய பாசன வாய்க்கால் ஓடும். அந்த வீடுகளின் பின் வரிசை முழுவதும் தென்னை, மா பொன்று மரங்களும், செடி,கொடிகளும் நிறைந்து நன்றாக இருக்கும். வாய்காலுக்கு மறுபுறம் வயல் வெளிகள்.
கிருஷ்ணன் கோயிலிலும் வரதராஜப் பெருமாள் கோயிலிலும் திருவிழா தேரோட்டம் எல்லாம் உண்டு.பத்து நாட்க்ள் திருவீதி உலா இருக்கும். வருடத்தில் ஒரு நாள் சிவனும் வீதி உலா வருவார். குளத்தில் பதினோரு மாதங்கள் தண்ணீர் இருக்கும்.ஒரு மாதம் தண்ணீர் இருக்காது. அந்த ஒரு மாதத்தில் தூரெடுத்து குளத்தை ஆழப்படுத்தி புது நீர் வரவுக்கு ஒழுங்கு படுத்தி வைப்பார்கள்.சரியாக மே மாதம் ஒன்றாம் தேதி கன்னடியன் வாய்க்காலில் புது வெள்ளம் பாய்ந்து வரும்.
ஊருக்கு சற்று தூரத்தில் தாமிரபரணி ஆறு ஓடுகிறது. எங்கள் ஊர் அருகில் புதுக்குடி எனற சிறிய கிராமம் இருக்கிறது.இங்கு தரமான மண் பாண்டங்களும் செங்கற்கலும் கிடைக்கும்.பக்கத்திளுள்ள பத்தமடை பாய் தயாரிப்பில் பிரசித்தி பெற்றது. வீரவநல்லூர், வேஷ்டிகள்,துண்டுகள் தயாரிப்பில் பெயர் வாய்ந்தது.
இப்பொழுது சமீபத்தில் சென்றபோது ஊரில் நிறைய மாற்றம் தெரிந்தது. மண்தெரு சிமெண்ட் சாலையாக மாறியிருந்தது. தாமிரபரமி தண்ணீர் குழாயில் ஊருக்குள் வந்து விட்டது. அக்ரஹாரத்தில் அந்தணர்களே இல்லை எனலாம்.காலம் மாறிக்கொண்டிருக்கிறது.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,017
Location
madurai
Nice...?? தவறாக என்ன வேண்டாம்... எழுத்துப் பிழைகளை சரி பார்த்த பின் பதிவிடவும்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top