எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல

#1
ஒரு நாள் சில ஆயிரங்களை கை நீட்டி வாங்கி விட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு எதையும் கேள்வி கேட்க முடியாத அடிமைகளாக இருக்க போகிறோமா?
காசு தான் ஓட்டு அரசியலை தீர்மானிக்கும் என்ற நிலை வந்தால் இனி நமக்கு நேர்மையாளர்கள் தலைவர்களாக எப்படி கிடைப்பார்கள்?????
ஓட்டுகளை சில ஆயிரங்களுக்கு விற்றுவிட்டு, நம்மை யார் வேண்டுமானாலும் வாங்கி விட மாட்டார்களா????
நாமே நோட்டிற்கு ஓட்டை விற்கும் போலி வாக்காளர்களாக இருக்கும் போது நமக்கு போலி அரசியல்வாதி தானே தலைவனாக வருவான்.
வ. உ. சி செக்கிழுத்ததும், இரத்தம் சொட்ட திருப்பூர் குமரன் கொடி காத்து நின்றதும், கிழிந்த சட்டையை தைத்தவாறே பட்டினியோடு பாரதி பாடி அலைந்ததும், மருதுபாண்டியர் தூக்கில் தொங்கியதும் இதற்கு தானா??
நம் கையில் இருக்கும் வாக்கு சீட்டு நமக்கு உடனே வந்ததல்ல. சுதந்திர போராட்ட தியாகிகள் முதல் காமராசர், கக்கன் வரையிலான இலட்சக்கணக்கானோரின் இரத்தம் தோய்ந்த வாழ்க்கையும், தியாகமும், வலியும் தான் அதை நம்மிடம் சேர்த்தது. அதை அற்ப சொற்ப பணத்திற்காக விற்கும் துரோகிகளா நாம்?

சிந்திப்போம்!!!!
நம் வாக்கு!! நம் தன்மானம்!!!
நம் வாக்கு!! நம் உரிமை!!
நம் வாக்கு!! நம் அடையாளம்!!
நம் வாக்கே!! நம் ஆயுதம்!!
 
#3
அருமை மச்சி, அப்பட்டமான உண்மைகள், இனியாவது சிந்தித்து வாக்களிக்கனும்,
ஆமாம் மச்சி நாமும் நிறைய பேரிடம் கொண்டு சேர்ப்போம் முடிந்த வரை
 
#5
நம்நாடு திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஓட்டுக்கு அவர்கள் கொடுக்கும் பணம் எத்தனை நாட்கள் வரும் என்று கேட்பதற்கு அதிக பட்சம் பத்து நாட்கள் வரும் என்று சொல்லும் ஒருவருக்கு பத்து நாட்களுக்கு வரும் பணத்திற்காக ஐந்து வருடங்களை வீண் செய்கிறீர்கள் என்று. இதை நாம் உணர வேண்டும்
 
#6

கண்டிப்பாக உணர வேண்டும்
 
#7
ஒரு நாள் சில ஆயிரங்களை கை நீட்டி வாங்கி விட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு எதையும் கேள்வி கேட்க முடியாத அடிமைகளாக இருக்க போகிறோமா?
காசு தான் ஓட்டு அரசியலை தீர்மானிக்கும் என்ற நிலை வந்தால் இனி நமக்கு நேர்மையாளர்கள் தலைவர்களாக எப்படி கிடைப்பார்கள்?????
ஓட்டுகளை சில ஆயிரங்களுக்கு விற்றுவிட்டு, நம்மை யார் வேண்டுமானாலும் வாங்கி விட மாட்டார்களா????
நாமே நோட்டிற்கு ஓட்டை விற்கும் போலி வாக்காளர்களாக இருக்கும் போது நமக்கு போலி அரசியல்வாதி தானே தலைவனாக வருவான்.
வ. உ. சி செக்கிழுத்ததும், இரத்தம் சொட்ட திருப்பூர் குமரன் கொடி காத்து நின்றதும், கிழிந்த சட்டையை தைத்தவாறே பட்டினியோடு பாரதி பாடி அலைந்ததும், மருதுபாண்டியர் தூக்கில் தொங்கியதும் இதற்கு தானா??
நம் கையில் இருக்கும் வாக்கு சீட்டு நமக்கு உடனே வந்ததல்ல. சுதந்திர போராட்ட தியாகிகள் முதல் காமராசர், கக்கன் வரையிலான இலட்சக்கணக்கானோரின் இரத்தம் தோய்ந்த வாழ்க்கையும், தியாகமும், வலியும் தான் அதை நம்மிடம் சேர்த்தது. அதை அற்ப சொற்ப பணத்திற்காக விற்கும் துரோகிகளா நாம்?

சிந்திப்போம்!!!!
நம் வாக்கு!! நம் தன்மானம்!!!
நம் வாக்கு!! நம் உரிமை!!
நம் வாக்கு!! நம் அடையாளம்!!
நம் வாக்கே!! நம் ஆயுதம்!!
Kandippa dr
 
Advertisements

Top