எனை பறித்த, காதம்பரியின் கொடிமலர் B.com? (விமர்சனம்)

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#1
எனை பறித்த காதம்பரியின் கொடிமலர் B.COM?(விமர்சனம்)

நாஞ்சில் நாட்டின் இனிமையான பேச்சு வழக்கொடு கதை ஆரம்பமாகிறது. வெற்று வார்த்தைகளில் கண்முன்னே வளர்ந்து வரும் அழகான மலை கிராமத்தை காட்சியாக்குகிறார் ஆசிரியர்.

தங்கராசு கதையின் தலைவன், அம்மாவுக்கு அடங்கிய பிள்ளை.
கொடிமலர் கதையின் தலைவி, ஐந்தாவது வருடம் B.com படிக்கும் துறுதுறு மாணவி, என்ற அறிமுகத்திலிருந்து மெல்லருவி போல கதை நகர்கிறது.

வசனங்கள் ஒவ்வொன்றும் நம் இதழின் புன்னகையை விரிய வைக்கும் மாய விசைகள். ஆம், அப்படித்தான் தோன்றுகிறது எனக்கு. படித்தவர்களும் அதை உணர்ந்து இருப்பர்.

நேர்த்தியான, சுவாரஸ்யம் கூட்டும் இனிமையான நாஞ்சில் நாட்டு தமிழ் வசன நடை நம் நினைவுகளில் தித்திக்கின்றது.

எப்போதும் போல வார்த்தைகள் பயன்பாட்டு நயத்தில் நம்மை சொக்க வைக்கிறார் காதம்பரி.

மலை கிராமத்து பழமை மாறாமல், புதுமையான கருத்துக்களின் இருப்பிடமாய் விளங்கும் ஆச்சிகளை பற்றி என்ன சொல்ல, பேச்சி, முத்து ஆச்சிகள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் வந்து ஒட்டிக்கொள்ள தான் செய்கிறது.

வழக்கமான காதல் கதை தான். அதை சொல்லும் ஆசிரியரின் பாங்கு வெகு அருமை, பேரழகு.

ரசனையான, நகைச்சுவை ததும்பும் கலகலப்பிற்கு பஞ்சமற்ற அற்புதமான குறுநாவல் படைப்பு????

போட்டிக்கான வெற்றி படியில் தங்களை முன்னேற்றி இருக்கிறது தங்களின் படைப்பு.????

இன்னும் படிக்காதவர்கள் விரைந்து வந்து படித்து விடுங்கள். உங்கள் மனதையும் கொடிமலர் இனிமையாய் கொய்திடுவாள்.????
 

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#3
மிகவும் அருமையான நாவல். அழகான விமர்சனம். வாழ்த்துக்கள் காதம்பரி.
தோணுச்சு எழுதிட்டேன், சொதப்பல் இல்லாம தந்து இருக்கேன்னு நினைக்கிறேன் சகி,?? நன்றி செல்வா சகி ??
 

Kathambari

Author
Author
SM Exclusive Author
#4
வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன் யூவா... எதிர்பார்க்கவே இல்லை... நிரம்ப சந்தோஷம்... நன்றிகள் பல டியர்
 

Kathambari

Author
Author
SM Exclusive Author
#5
மிகவும் அருமையான நாவல். அழகான விமர்சனம். வாழ்த்துக்கள் காதம்பரி.
நன்றி செல்வா அக்கா ?
 

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#6
வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன் யூவா... எதிர்பார்க்கவே இல்லை... நிரம்ப சந்தோஷம்... நன்றிகள் பல டியர்
மனமார்ந்த வாழ்த்துக்கள் சகி ???
????
 

Sponsored

Advertisements

Top