• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா – 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
அன்பு தோழிகளே !


மக்கா அடுத்துப் பதிவு "என்னம்மா இப்புடி பண்றீகளேம்மா" உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்.....................திட்டமா படிங்கய்யா,,,,,, என்ன..........


என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா – 2


"குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே கூடி இருக்கும் பெண்களுக்கு வண்டாட்டம் திண்டாட்டம் ..............குன்றத்திலே ………..ஹே ஹே குன்றத்திலே……………. ஹே ஹே………………… குமரனுக்கு ..........கொண்டா….. ட........... ம் ............... "முருகன் காதுகளை இறுக்க முடி கொள்ளும் அளவிற்கு இருந்தது ராஜேஷின் அப்பா காளை முத்து பாடிய பாடல்,கைலியை நெஞ்சு வரை ஏற்றி கட்டி கொண்டு நிற்க முடியாமல் தள்ளாடிய படியே வந்தார்.



பயத்தில் உணவு கூட உண்ணாமல் முழித்துக் கொண்டு இருக்கும் இரு ஜீவன்களும் இவரது பாடலில் அடுத்துப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தனர்,வழக்கம் போல் பாட்டியின் கையை இறுக்கப் பற்றிக் கொண்டால்,ஆனால் காமாட்சியும்,ராஜேஷும் ஒன்றுமே நடவாதது போல இருக்கவும்,இது தினமும் நடக்கும் கூத்து என்பது புரிந்தது.



"இன்னாத்துக்கு அலறிக்கினு இருக்க,சோறு போட்டு வச்சு இருக்கேன்,துண்ணுட்டு தூங்கு",என்று காமாட்சி சொல்ல அவரும் "டங்க்ஸ் காமு" என்று சலூட் அடித்தார்.



"முசரக்கட்டை எப்போ பாரு ஊத்திக்கினு வந்து உசுர வாங்குது", என்று புலம்பியவரே காமாட்சி செல்ல அவரும் அவர் இடத்திற்குச் சென்றார்,அப்போதுதான் பாட்டிக்கும்,பேத்திக்கும் நின்ற மூச்சு வந்தது,அவர் போன வேகத்தில் திரும்பவும் மீண்டும் பயம் வந்து ஒட்டி கொண்டது.



வந்தவர் கண்களைச் சுருக்கி, விரித்து, கசக்கி, மீனுவை உத்து பார்க்க,சரவமும் அடங்கியது நம் மீனுவிற்கு "யாருடி காமு இது கூவத்துக்குள்ள கோல்ட் பிஷ் ","யோவ்,புளகிட்ட முச்சிய காமிக்காதயா பயப்படப் போகுது,இந்தாண்ட வா, அரட்டிய காமாட்சி,”பார்த்தா தெரியல என் அண்ணே பொண்ணு மீனு".



"ஓ..................... அவன் பொண்ண நீ,என் தங்கச்சி பால் மாதிரி இருக்கும் போல,நல்ல வேலை நீ அவனை மாதிரி டிக்காசனா இல்ல".



“ஆமா எங்க அண்ணே கருப்பு ஐயா அப்புடியே சூர்யா குஞ்சு,அம்மி கல்ல எடுத்து மண்டியல போட்டுருவேன் கம்முனு போய் படுய்யா நாளைக்கி நம்ம பயனுக்கும் என் அண்ணே பொண்ணுக்கும் கண்ணாலம் சீக்கரம் தூங்கு".



"இன்னாது கண்ணாலமா என்னடி சொல்லுற "முத்து அதிர்ந்து கேட்க.



காமாட்சி பதில் சொல்லும் முன்னே ராஜேஷ் பேசினான்"எதுக்கு ஜெர்க் ஆகுற,ஒழுங்கா அப்பனா வந்து நின்னு கண்ணாலத்தை நடத்து,இல்ல" என்று பல்லை கடிக்க,ஜகா வாங்கினார் நமது முத்து, வீரமெல்லாம் வெளியில் மட்டும் தான்,மகனிடம் அவர்க்குப் பயம் கலந்த மரியாதை உண்டு,தனது பொறுப்பைத் தான் தட்டி கழிக்க,பொறுப்பான தலை மகனாகப் பி.இ.மெக்கானிக் படித்து இன்று பெரிய மெக்கானிக் ஷெட் வைத்து,குடும்பத்தைத் தாங்கும் மகனை அவரால் எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை.



அவரும் நல்ல பிள்ளையாகப் போய்ப் படுத்து கொண்டார்,மீனு தான் கண்ணீருடன் "என்ன பாட்டி நாளைக்கே கல்யாணமுன்னு சொல்லுறாங்க,நான் அவர்கிட்ட பேச போறேன்",மங்களம் தடுத்தும் அவள் அவனது அறைக்குச் செல்ல (இப்புடி தான் நீயா போய்ச் சிக்கனும்).



அங்கு அவனோ கல்யாண கனவில் மிதந்து கொண்டு இருந்தான்,கட்டிலில் படுத்துக் கொண்டு விட்டதை வெறித்தவனைக் கலைத்தது மீனுவின் குரல்,"உள்ள வரலாமா"அவள் குரலில் வேகமாக எழுந்தவன் "வா மீன்னு"என்று அழைக்க"கொஞ்சம் பயந்து கொண்டே தான் சென்றால்,'எங்க அம்மா அசையா மீனு பேரு வச்சா எப்படிக் கூப்புடுறான் பாரு அவளுக்குப் பத்தி கொண்டு வந்தது'



அவன் அருகில் சென்றவள் முதலில் தயங்கி பின் அவனது கண் பார்த்து "நேக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமில்லை,நான் பி.எ எக்னாமிக்ஸ் முடிச்சு இருக்கேன்,இங்கே கம்பெனி எந்த இடத்துல இருக்குனு சொல்லுங்கோ,நானே வேலை தேடுகிறேன்,அப்புறமா வேலை கிடைச்சதும் தனி விடு பார்த்து நானும் பாட்டியும் போயிடுறோம்,நான் உங்களண்டை அப்பா சொத்தையெல்லாம் கேட்க மாட்டேன்,நீங்களே வச்சுக்கோங்க,இந்த ஹெல்ப் மட்டும் பண்ணுங்களேன் ப்ளீஸ்".



அவள் பேச்சில் கோபம் கொண்டவன் அதனை வெளியில் காட்டிக்கொள்ளாமல்"ஓ.......... வேலை தானே என் பிரெண்டு தம்பி நல்ல கம்பெனில தான் வேலை பாக்குறான் அவனாடா சொல்லி வாங்கித் தரேன்,அம்மா கிட்ட சொல்லி கண்ணாலத்தை நிறுத்திடலாம் என்ன"அவன் சொல்லவே முத்துப் பற்கள் தெரிய சிரித்தவள் "ரொம்பத் தேங்க்ஸ் அத்தான்,பயந்துண்டே இருந்தேன் நீங்க உடனே சரினு சொல்லுவிங்கனு நெனைச்சு கூடப் பார்க்கலை,தாங்க யூ சோ மச்,நான் வரேன்"என்று செல்ல போனவளை தடுத்தவன்.



அவளை நெருங்கி அவள் முகம் நோக்கி குனிய பயந்து பின் வாங்கினால்,மீண்டும் அவளை நெருங்கியவன் அவள் இடை பற்றிக் குனிந்து காதில் எதுவோ சொல்ல கண்கள் பெரிதாகி அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தால் மீனு,அதே அதிரிச்சியுடன் அவனைப் பார்க்க அவனோ பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு "நானும் உன்னாண்ட சொல்ல கொடுத்தனு தான் இருந்தேன்,நீ தான் கண்ணாலம் வேணான்னு சொல்லிட்டியா அதான் மனசு கேட்கல".



அவன் சொல்லி முடிக்கவே உதடு துடிக்கக் கண்ணில் அக பட்ட தலைனையை எடுத்து அவன் மேல் எறிந்தவள்,"வாய்ல என்ன கொலுக்கட்டாயா வச்சு இருந்தேல் சொல்ல வேண்டியது தானே,நான் உள்ள இருக்கேனு,போச்சு போச்சு எல்லாம் போச்சு"என்று தலையில் கை வைத்து அமர்ந்து அழுக ஆரமித்து விட்டால்.



அவனும் அவள் பக்கத்தில் சரிந்து அமர்ந்து "நான் வேணாம் மறந்துடுறேன் மீன்னு"என்று சொல்ல எங்கு இருந்துதான் அவளுக்குக் கோபம் வந்ததோ,"சீ.......பொறுக்கி பொறுக்கி என்று சரமாரியாக அவனை அடிக்க ஆரமித்து விட்டால்.



சிரித்துக் கொண்டே அவளது அடியை வாங்கியவன்"பின்ன என்னடி மாமி,உன்ன பார்த்ததுல இருந்து கிறுக்கு புடுச்சு போய் நான் தெரியுறேன்,அசலாட்ட கண்ணாலத்தை நிறுத்த சொல்லுற,நானே உன்ன புடிக்கலைனு தான் சொன்னேன் உன்ன பாக்குறதுக்கு முன்னாடி,பருப்பும் ,நெய்யும் சாப்பிட்டு சாப்பிட்டு சும்மா கும்முனு இருக்குற உன்ன பார்த்த உடனே முடிவு பண்ணிட்டான் நீ தான் என் இதயத் தேவதைனு".



அவன் பேசியது கேட்டு கதை பொத்தியவள்,"ச்சே கசமா பேசத்தேல் நேக்கு கஷ்டமா இருக்கு".



"உங்கிட்ட பேசாம வேற யாருகிட்டடி பேசுறது,சரி சரி காலையில சுருக்கா கிளம்பனும் போய்ப் பாட்டியாண்ட படுத்துக்கோ ஓடு ",சொன்னவன் அவள் அசையாமல் இருக்கவும் “ஐய்த்தான் தூக்கிக்கினு போனாதான் வருவியா மீன்னு,சரி வா",என்று அவளைத் தூக்க வர அந்த இடத்தை விட்டு ஓடியே விட்டால்.



"ஒய் ....................மாமி ஓடிரிய.....ஓடு ஓடு .........இன்னக்கி ஒரு நாள்,அப்புறம் பேசிக்குறேன் உன்ன".



அழுது வடிந்து கொண்டு வரும் பேத்தியை பார்த்த மங்களம் பதிரி கொண்டு "என்னடி ஆச்சு கண்ணுல ஜலத்தை விட்டுண்டு இருக்க" அவர் கேட்டது தான் தாமதம் அவள் அனைத்தையும் கொட்டிவிட,அவளை தான் இரண்டு அடி அடித்தார்.



"ஏண்டி ஜடம் ஜடம்,ரூமுக்குள்ள யாரும் இருக்காங்களா இல்லையானு பார்த்து துணிய மாத்தமாட்டா என்ன பொண்ணுடி நீ,பொண்ணுகளுக்கு நாளா பக்கமும் கண்ணு இருக்கணும்,ஐயோ நான் என்னத்த சொல்ல",என்று தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டார்.



அவளும் சிறுது நேரத்திற்கு முன் ராஜேஷ் சொன்னதை அசை போட்டாள்,காலையில் இவர்களைத் தனது தாயிடம் ஒப்படைத்தவன் மதிய உணவிற்கு முன்னதாகவே வீட்டுக்கு வர அப்போதுதான் குளித்து முடித்து ராஜேஷின் அறையில் துணியை மாற்றிக் கொள்ளச் சென்றால் மீனு,காமாட்சி தான் ‘ராஜேஷ் இப்பொழுது வர மாட்டான் நீ அந்த ரூமில் மாற்றிக் கொள்’ என்று சென்று விட்டார்.



அது தெரியாத ராஜேஷ் அவனது ரூமின் ஒரு புறத்தில் உள்ள மர தடுப்பில் துணிகளைக் கலைத்து அதில் போட்டுக் கொண்டு இருந்தான்,தாழ்பாள் சத்தம் கேட்கவும் அவன் எட்டி பார்க்க மார்பு வரை பாவாடையை ஏற்றி கட்டி கொண்டு மீனு வருவது தெரிந்தது,சத்தம் செய்யாமல் அவன் அங்க தங்கவே இவன் இருப்பது அறியாமலே அவள் உடைகளை மாற்ற,அவன் ரெத்த நாடியெல்லாம் பித்தாகி போனது தான் மிச்சம்'அதை இப்போது எண்ணியவள் கண்களை இறுக்க மூடி கொண்டாள்.

விடிந்தால் திருமணம்....................
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அடப்பாவி இப்படி எல்லாம் செஞ்சு அந்த பிள்ளைய கட்டிகனுமா ??? வேற ஐடியா தோணலையா உனக்கு ?? கடவுளே கடவுளே ??
 




Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
அடப்பாவி இப்படி எல்லாம் செஞ்சு அந்த பிள்ளைய கட்டிகனுமா ??? வேற ஐடியா தோணலையா உனக்கு ?? கடவுளே கடவுளே ??
Avana thetthappa enaku thonala ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top