• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா -9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
அன்பு தோழிகளே !

என்னம்மா இப்புடி பண்றீங்களேமா அடுத்த பதிவு,இதை படுச்சுட்டு யாரும் என்ன அடிக்க வரக்கூடாது,நம்ப மூளை இப்புடித்தான் யோசிக்குது நான் என்ன பண்ண,திட்டனும் தோணுச்சுனா அந்தாண்ட இன் பாக்ஸ் வாங்க....................


என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா -9


தன் முன் அமர்ந்து இருக்கும் நண்பனை அதிர்ச்சி விலகாமல் பார்த்து கொண்டு இருந்தான் முகேஷ் "டேய்,புதுசா கல்யாணம் ஆனவன் பண்ணுற வேலையடா இது",ராஜேஷை விட முகேஷ் தான் நொந்து போனான்,முருகனுக்கு மாலை அணிந்து இருந்தான் ராஜேஷ்,வாழ்க்கையே வெறுத்து போய் தான் இந்த முடிவை எடுத்து இருந்தான்.



மச்சி,இப்போ என்ன ஆச்சுன்னு இப்புடி வந்து நிக்கிற,வாய்ய திறந்த சொல்லி தொலைடா",முகேஷ் பொறுமையை இழுத்து பிடித்து கேட்டு கொண்டு இருந்தான்.



இன்னாத்த சொல்ல சொல்லுற,வுடு மச்சி இப்புடியே எங்கயாவது போய்டலாமான்னு இருக்கு, ராஜேஷ் கலங்கி கல்லூரி காலத்தில் பார்த்ததே இல்லை எது நடந்தாலும் தனது வசீகரச் சிரிப்பால் கடந்து செல்லும் நண்பன் உடைந்து பேசுவதை பார்க்க மனம் பிசைந்தது.



தனது கையில் உள்ள டீ டம்பளரை உருட்டியவரே இரு தினங்களுக்கு முன்பு நடந்தவற்றைச் சொல்லலானான்.



நடந்து முடிந்த கூத்தில் அனைவரும் விடிய விடிய மருத்துவமனையில் இருந்தனர்,மீனு அழுது கரைந்தாள்,ராஜேஷ் எத்தனை சமாதானம் சொல்லியும் அவனை முறைத்து விட்டு சென்று தனது அத்தையிடம் அமர்ந்து கொண்டாள்,அவளை எப்புடி கையாள்வது என்று தவித்துப் போனான்,'நான் என்ன செஞ்சேன்னு முறுக்கிட்டு போரா'அதன் பின் ஒரு முடிவு செய்தவனாக அவனும் அவளைக் கண்டு கொள்ளவில்லை.



அவளுக்கு அவனது அருகாமை தொலைந்து கொண்டே போவது ஆற்றாமையாக இருந்தது,அது தான் அவனிடம் கோபமாக வெளிப்படுகிறது என்று அவளும் அறியவில்லை அவனுக்கும் உணர்த்தவில்லை.



பாட்டி அனைவரையும் கலங்க வைத்து விட்டு அதிகாலை ஆறு மணிக்குக் கண் முழித்தார்,மருத்துவர் வந்து பார்த்துவிட்டு அதிர்ச்சி மயக்கம் தான் வீட்டுக்குச் செல்லலாம் என்ற போதுதான் உயர் வந்தது ,அதன் பின் அவர்களை வீட்டுக்கு கூட்டிவர மதியம் ஆகிவிட்டது,வந்த உடன் காமாட்சி முத்துவை ஒரு வழி செய்துவிட்டார்.



யோவ் உனக்கு அறிவு இருக்கா,குடுச்சா இல்லத்தையும் மறந்துடுவியா நீ,அந்த அம்மாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா இன்னாயா பண்ணுவ, குடிக்காரா.............முத்து தலையைத் தொங்க போட்டுகொண்டார்,அவர் என்ன கனவா கண்டார்,பாட்டி வந்து கதவை திறக்குமென்று,தன்னை கண்டால் காது தூரம் ஓடும் இந்த பாட்டி.



காமாட்சி என்று நினைத்து பாடி கொண்டே கட்டி பிடிக்க எண்ணி அவர் பாயா,வந்தது பாட்டி என்று அறிந்தவர் சுதாரிக்க முடியாமல் தடுமாறி அவர் மேல் விழுக போனார் , பாட்டி நகரவே கொஞ்சம் தள்ளி அவரது கால் பகுதியில் விழுந்து வைத்தார்.



தன் மீது முத்து விழுக வரவும் பாட்டி அதிர்ச்சியில் கத்தி கொண்டே கீழே சாய்ந்து மட்டை யாகி விட்டார் பாவம்,இது தான் நடந்தது.



ராஜேஷிற்குத் தெரிந்து விட்டது இனி எதுவும் தனக்கு நடக்கப் போவதில்லையென்று,தனது தந்தையை முடிந்த மட்டும் முறைத்து விட்டுச் சென்றான்.



மீனு பாட்டியுடன் இருந்து அவரைக் கவனித்துக் கொண்டாள்,ராஜேஷ் கிளம்பி செல்லும் வரை தங்களுது அறைக்குச் செல்லவில்லை,அவனும் அவளை எதிர்பார்க்காமல் காலை உணவை கூடத் தவிர்த்து சென்று விட்டான்.



நடந்ததை சொல்லி முடிந்த நண்பனை கண் இமைக்காமல் பார்த்த கொண்டு இருந்தான் முகேஷ்,இதற்கு என்ன சொல்வது அவனுக்கு மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது,"மச்சி,என்ன சொல்லுறதுனே தெரியலடா,விடு என்ன நடக்குமோ நடக்கட்டும் எதையும் நினைச்சு கவலை படாத மச்சி,உங்க அப்பாவா என்ன பண்ணுறது எனக்கே பயங்கரம் கோவம் வருது அவரு மேல".



அவன் சொல்லவே ராஜேஷிற்கு உதட்டில் ஒரு புன் முறுவல் "என்னடா நான் இங்க கொதுச்சு போய் இருக்கேன் நீ என்னடானா சிரிக்கிற,உனக்கு உங்க அப்பா மேல கோவமே இல்லையா",முகேஷ் கேட்கவே "இருந்துச்சு இப்போ இல்ல ஆனா ஒன்னுடா எனக்கு மகன் பொறக்காரனோ இல்லையோ எனக்குத் தம்பி கண்டிப்பா உண்டு".



என்ன?..... அதிர்ந்தவனை பார்த்து இப்போது பலமாக சிரித்தான் ராஜேஷ்.



ஒண்ணுமில்லை வா முகேஷின் தோள் மீது கை போட்டு அழைத்துச் சென்றான் முகத்தில் உறைந்த புன்னகையோடு,இத்தனை நேரம் எதையோ பரி கொடுத்தவன் போல் தன்னிடம் அமர்ந்து இருந்தவன் இப்பொழுது சிரித்துக் கொண்டே வருவதைப் பார்த்த முகேஷ் ராஜேஷை மார்கமாக பார்த்து வைத்தான்.




ராஜேஷின் சிரிப்பிற்குக் காரணம் முத்துவின் அதிரடி தான்,அன்று காமாட்சி முத்துவை சரமாரியாகத் தீட்டிய பின் அவர் உணவு உண்ண கூட வெளியில் வரவில்லை,"இன்னாச்சு இந்த ஆளுக்கு,நாஷ்டா துண்ண கூட வரல" அவர் அறைக்குச் சென்றவர் மெதுவாகக் கதவை தட்ட அது திறக்க படவில்லை,குடுச்சுட்டு மட்டையா கிடக்கும்.தனக்குள் புலம்பியவரே இரண்டு அடி எடுத்து வைத்தவரை,வேகமாக உள் இழுத்துக் கொண்டது முத்துவின் கரங்கள், எதார்த்தமாக இதைப் பார்த்த ராஜேஷ் திகைத்துப் பின் சிரித்துக் கொண்டு சென்றான்.



அவனும் இந்த மூன்று நாட்களாகப் பார்க்கிறான் தான்,தனது தந்தையின் பார்வை தாயை தொடர்வதை, அதுமட்டுமில்லை காலையில் அவர் குடிப்பதில்லை.



அன்று காமாட்சி பேசியதை எண்ணிய முத்து 'தான் எத்தனை அன்பு வைத்து இருக்கிறேன் என்பதைக் காட்டியே ஆக வேண்டும் என்று உறுதி செய்து கொண்டார்'.



"யோவ்,இன்னாயா ",காமாட்சி பதறி தனது கையை விடுவிக்கப் போராட அவரோ இன்னும் இறுக்கி பிடித்து அவரை இழுத்து அனைத்து கொண்டார்,காமாட்சிக்கு உடல் உதறல் எடுத்தது .



பலம் கொண்டு அவரைத் தள்ளி விட்டு உடல் நடுங்க "யோவ் வயசு புள்ளைய வச்சுக்கினு இன்னாயா பண்ணுற,புள்ள இல்லாத வூட்டுல கிழவன் துள்ளி விளையான்டானம்,அவர் இறுக்கி பிடித்தது வலி கொடுக்கக் கையைத் தேய்த்துக் கொண்டார்.



காமாட்சி பேச்சு காற்றோடு போச்சு என்பது போல் மேலும் மேலும் அவரை நெருங்கி வந்தார் முத்து,அவரது உயரத்திற்குக் காமாட்சி இடுப்பளவு தான் இருந்தார்,"யோவ்,உன் பார்வையே சரியில்ல இன்னாயா இது எதுவும் மண்டையில அடி பட்டுருச்சா",அவருக்கு அப்புடி தான் தோன்றியது.



மீண்டும் அவரை இழுத்து அனைத்துக் கட்டிலில் சரிந்தார் முத்து,முகம் முழுதும் அவர் ஆவேசமாக முத்தமிட காமாட்சிக்கு வேர்த்து கொட்டியது,"யாருக்குடி உன் மேல பாசமில்லை,ஆசையில்லை,என்ன எங்கடி உங்கிட்ட நெருங்க விட்ட,பாசத்தைக் காட்ட, எப்போ உனக்கு தாலி கட்டுனேனோ அன்னைக்கே லலிதாவா மறந்துட்டேண்டி,இத்தனை வருடம் சொல்லாமல் உள்ளுக்குள் குடித்துக் குடித்து மருகியவர்,இன்று சொல்லிவிட்டார்.



காமாட்சி அதிர்ந்து அவரைப் பார்க்க அவர் மேலும் தொடர்ந்தார் "ஆத்தாளும்,மவனும் என்ன ஒதுக்கி வச்சிட்டீங்களேடி,என் இத்தனை வருஷ வாழ்க்கையே போச்சுடி",அவரின் கழுத்தில் முகம் புதைத்தவர் குலுங்கி அழுக,"யோவ்,இன்னாயா இது,நான் சொல்லுறதை கேளுய்யா",கோபமாக நிமிர்ந்தவர்,"நீ கேட்டியாடி அன்னைக்கு எப்புடி கெஞ்சுனே",அவருக்குப் பதில் சொல்ல முடியாமல் காமாட்சி திகைக்க,அதனை வாகாகப் பயன் படுத்திக் கொண்டவர் தனது வயதையும் மறந்து வன்மையாக அணுகினார்.



பல ஆண்டுகள் பிரிவை ஒரே நாளில் ஈடுகட்ட அவர் எண்ண,காமாட்சி ஓய்ந்து போனார்,களைந்து கலந்த பின்பு நிம்மதியுடன் அவர் உறங்க,காமாட்சியும் உறங்கினார் இருவர் கண்களிலும் கண்ணீர் தடம்...........



அறுபது வயது என்றால் எண்ண காதலுக்கு கண் மட்டுமில்லை வயதும் கிடையாது,காலம் கடந்தாலும் தாம்பத்தியம் புனிதம் அல்லவா,அன்பின் அளவு,காதலின் அளவு,கோபத்தின் அளவு,தாபத்தின் அளவு என்று வரையறை தெரியாமல் சென்றது இவர்களுது காதல்........



"ஏண்டி,உன் ஆம்படையான் மாலை போட்டுருக்கார்,கல்யாணம் முடுஞ்சு மூணு மாசத்துல யாராவது மாலை போடுவாளா",பாட்டி கேட்டதற்கு தலையை குனிந்து கொண்டாள் மீனு "மீனு "என்று அழுத்தமாக அழைத்தவர் அவள் கண்களை உத்து பார்த்த "நீயும்,உன் ஆம்படையானும் இன்னும் தனி தனியா தான் தூங்குறேளா",அவர் கேட்க கண்ணில் இருந்து கரை புரண்டு ஓடியது ஆறு.



அவள் அமைதியே உண்மையை உரைக்க தவித்து போனார் பாட்டி,"ஏண்டி,குழந்த நோக்கு ராஜேஷை பிடிக்கலையா",அவர் கேட்கவே பதறி கொண்டு வந்தது பதில் ,"நேக்கு ரொம்ப புடிக்கும் பாட்டி",அவள் பதிலில் தான் பாட்டிக்கு மூச்சு வந்தது "பின்ன ஏண்டி",அவர் ஆற்றைமையாக கேட்க நடந்தவை அனைத்தையும் சொல்லி முடித்தால் மீனு ,"இது என்னடீ சோதனை தினுசு தினுசா, இதுல உன் மாமனார் கடங்கரான் வேற நேத்து பதற அடுச்சுட்டான்",அப்போதும் தான் பாட்டியும் மீனுவும் ஒரு சேர பார்த்து கொண்டனர்.



"எங்கடி உன் மாமி,ரொம்ப நாழியா காணோம்","ஆமா எங்க போனாங்கனு தெரியல சொல்லாம எங்கையும் போக மாட்டாளே",மீனுவும் பாட்டியும் நடு கூடத்தில் உட்காந்து வள வளத்துக் கொண்டு இருக்க,அவர்கள் எதிர் திசையில் இருக்கும் அறையில் கதவு திறக்க பட்டது,அதில் இருந்து சோம்பல் முறிந்து கொண்டே முத்து வர,அவருக்குப் பின்னால் சங்கடமாகத் தலையைக் குனிந்து கொண்டு காமாட்சி வந்தார்,கண் இமைக்கும் நேரத்தில் அவர்களைக் கடந்து சென்று விட்டனர் இருவரும்.



அவர்களது நிலையை பார்த்த பாட்டியும்,பேத்தியும் அதிர்ச்சியில் பேச்சு வராமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்................



என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா………………………………………………………………
 




Last edited:

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Me first ??

பாவமய்யா.. ராஜேஷ்.. கட்டம் சரியில்லை என்று இப்படி உனக்கு பட்டையை போட்டாங்களே டா..

ஆத்தர் மேடம் ஏன்மா இப்படி பண்ணிடீங்களே மா ??
 




Last edited:

nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலையே தனு டியர் ??? கணவன் மனைவி உறவு எத்தனை வயசானாலும் புனிதமானதுதான் அதிலே இந்திய திருமணங்கள் சான்சே இல்லை ??? ராஜேஷ் மீனு கூடிய சீக்கிரம் ஒரு முடிவு எடுக்கணும் இல்ல நடக்க போறதுக்கு யாரும் பொறுப்பாக முடியாது ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top