• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா -final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
அன்பு தோழிகளே!


ஜாலியா எழுத சொன்னங்கய்யா அதான் ஜாலியா எழுதி இருக்கேன்,கண்டாகாம படிக்கணும் சரியா,நோ கொலை வெறி மீ பாவம் .................... கதையை முடித்து விட்டேன் உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்.

எனக்கு ஆதரவு அளித்த அனைத்து தோழிகளுக்கும் நன்றிகள் பல......


என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா -10


ராஜேஷ் கோவிலுக்குச் சென்று இருந்தான்,ஒரு மாத காலம் விரதமிருந்து முருகனை காண சென்று இருக்கிறான்,இந்த ஒரு மாத காலம் மீனுவின் காதல் கரை புரண்டு ஓடியது, எதுவுமே பக்கத்தில் இருக்கும் வரை அதன் அருமை நமக்குப் புரிவதில்லை,சற்று விலகி இருக்கும் போது தான் அதன் அருமை பெருமை புரிக்கின்றது,அது போலத் தான் இத்தனை நாட்கள் தெரியாத ராஜேஷின் காதலும்,அவனின் நற்குணமும் அவன் தள்ளி இருக்கும் போது தெள்ள தெளிவாக புரிகிறது.



ராஜேஷும் அவளது மாற்றத்தையும்,பார்வையும் எண்ணி சிரித்துக் கொண்டான்,அவனுக்கும் இந்த ஒரு மாத காலம் அவளைப் பற்றி அறிய எதுவாக இருந்தது,அவள் வளர்ந்த விதத்திற்கும்,தான் வளர்க்க பட்ட சூழலையும் எண்ணி பார்த்தவனுக்கு அவளது தயக்கம் பெரிய தவறாகத் தெரியவில்லை,தானும் அவளை நெருக்கடி கொடுத்துத் திருமணம் செய்து இருக்கக் கூடாது என்று எண்ணி வருந்தினான்.



இனி எண்ணி என்ன பயன்,காலம் கடந்த ஞான உதயம்,தனது குடும்பத்தோடு அவள் இத்தனை பங்காகப் பொருந்தியது பெரிய விடயம் அல்லவா,தன்னுடன் அவள் பேச துடிப்பதும்,தன்னை பார்க்க தவிப்பதும்,தான் அதனை மதியாமல் செல்லும் போது உதடு துடிக்க அழுகையை விழுங்குவதையும் பார்க்கும் போது அள்ளி கொண்டு தான் போனது,தன்னை மறந்து அவளை ரசிக்கும் வேலையில் அவ்வப்போது வந்து முத்து இடையூர் செய்து விட்டு போவார்.



போன ஜென்மத்தில் தந்தையும்,மகனும்,பங்காளிகளாக இருந்து இருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு,ஒரு தகப்பன் போல் அல்லாது மகன் வாழ்க்கைக்கு முதல் எதிரியே அவர் தான்,அதை அவர் உணராமல் போனது தான் விதியின் சதி,அது சரி அவரைச் சொல்லி ஒரு பயனுமில்லை ,மன்மதன் இன்னும் ராஜேஷை நோக்கி காதல் அம்பை எய்தவில்லை.



மன்மதனையும் குற்றம் சொல்ல கூடாது ஒவ்வொரு முறை அவர் அம்பை எய்தும் போது இடையூர் வந்து விடுகிறது,ஒரு வழியாக அதனைத் தகர்த்தெறிந்து அவர் அம்பை விட,விதி அவர் கையைப் பற்றி உலுக்கிய உலுக்கில் அது முத்துவின் இதயத்தைத் தொலைத்து விட்டது,என்னடா இது மன்மதனுக்கே வந்த சோதனை.



அது மட்டுமா இந்த ஒரு மாத காலமும் முத்துவின் ரகளைத் தாங்க முடியவில்லை பாட்டியே வாய்விட்டு புலம்பும் அளவுக்கு இருந்தது அவரின் செய்கை,கூடல் முடிந்த பின்பு காமாட்சி அவரை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்து விட்டார்,முத்துவும் குடிப்பதை நிறுத்திவிட்டதால் அவரது தெளிவும்,காம பார்வையும் காமாட்சிக்குப் பயத்தைக் கொடுத்தது,அவர் காதலும்,அன்பும் புரிந்தாலும்,மகன்,மருமகளை வைத்துக் கொண்டு இவர் சேட்டை அவருக்கு ஒரு வித சங்கடத்தைக் கொடுத்தது.



அவரும் என்ன தான் செய்வார் பாவம்,தொலைத்த வருடங்களை ஈடு செய்யும் வகையில் காதல் போர் செய்து கொண்டு இருந்தார்,அதில் ஒரு நாள் காமாட்சி காபி கொண்டு வந்து முத்துவிடம் கொடுக்க,தலையைக் குனிந்து கொண்டே கொடுக்கும் மனைவியைப் பார்த்து மனதில் சிரித்துக் கொண்டவர், காமாட்சியின் கையை இறுக்கி பற்றிக் கோப்பையை வாங்கிக் கொண்டார்.



அவர் செயலில் பதட்டம் கொண்ட காமாட்சி நிமிர்ந்து பார்க்க,கண் அடித்து உதடு குவித்து காற்றில் முத்தமிட காமாட்சி அந்த இடத்தை விட்டு விரைந்து சென்று விட்டார்,இதை பார்த்த ராஜேஷ் சிரிப்பை அடக்கி கொண்டு தனது அறைக்குச் செல்ல,பாட்டி தான் வாயை பிளந்தார்,"அடப்பாவி மனுசா,பேரப்புள்ள எடுக்குற வயசுல இந்த ஆளுக்கு லொள்ள பாரு,சிறுசுங்க இரண்டும் தண்டவாளமா பிரிஞ்சு நிக்குது,இந்த ஆளு என்னனா ஈசுண்டு நிக்குறான்,கருமம் கருமம் பெருமாளே காலம் போன கடைசில இதெல்லாம் நான் பாக்கணுமா,அதுக்கு நேக்கு மோச்சம் கொடுத்துடுடா அப்பா",மனமுருகி வேண்டி கொண்டார்.



கோவிலுக்குச் சென்ற ராஜேஷின் மனம் அமைதியில் திளைத்தது,எப்போதுடா தனது ஆசை மனைவியைப் பார்ப்போமென்று மனம் அடித்துக் கொண்டது,இன்னொரு மனமோ அமைதி மனமே பொறுமையைக் கையாளு என்று எடுத்துரைத்து,அதுவே சரியெனப் பட முயன்று தன்னை அடக்கி கொண்டான் ராஜேஷ்.



மறு நாள் காலையில் விடு திரும்பி குளித்து முடித்துப் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டவன்,மாலையைக் கழற்றி வைத்து விட்டு தனது வேலையைப் பார்க்க சென்று விட்டான், அவனுக்காக காத்துக் கொண்டு இருந்த மீனுவின் கண்ணில் மெல்லிய நீர் படலம்,அவனது வருகைக்காகத் தான் இன்று வேலைக்கு விடுமுறை சொல்லிவிட்டு வீட்டில் இருந்தால்,அதையெல்லாம் எண்ண எண்ண அழுகை வந்தது அறைக்குச் சென்று கதவை சாத்திவிட்டு அழுக தொடங்கி விட்டால்.





காலை உணவையும் தவிர்த்து,மதிய உணவையும் தவிர்த்து உண்ணா விரதம் இருக்க,இரவு நெருங்கும் நேரம் தான் ராஜேஷ் வந்தான்,வந்தவனைப் பாட்டி கோபமாக முறைக்க,அவரை புரியாத பார்வை பார்த்தவன் தாயை நோக்கி சென்றான்.





"இன்னம்மா பாட்டி என்னடா ரொமான்டிக் லுக் உடுது","விளையாடாத ராஜேஷு மீனு குட்டி காலைல இருந்தது பச்ச தண்ணி கூடக் குடிகள,இன்னான்னு கேட்டா ஓ………..ன்னு அழுகுது பயந்து வருதுடா போய் இன்னான்னு பாரு",அவர் சொல்லுவே ஒரு புண் சிரிப்புடன் முன் எச்சரிக்கை முனி சாமியாக,"அதெல்லாம் நான் பாத்துக்குறேன்,இந்த பாட்டி,நீ,உன் புருஷன் மூணு பேருக்கு எது நடந்தாலும் என்ன கூப்புடாத".



"இன்னாடா உளறிக்கினு இருக்க",அவனை ஒரு மார்கமாகப் பார்த்துக் கொண்டே கேட்க,"நான் சொன்னதை உன் வூட்டுக்கருக்கு சொல்லு புரியும் என்றவன் சிட்டாகப் பறந்து சென்றான்.



அழுது அழுது தூங்கி இருப்பாள் என்பதை அவளது கண்ணீர் தடமே கூறியது,மெதுவாக அவளின் புறம் வந்தவன்,அவளது காது மடல் மூடியை ஒதுக்கி அதில் மெதுவாக முத்தமிட்டு மாமி தூங்குனது போதுடி,அவன் மீசை மூடி உரச,அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தாள்,தன் முன் நிற்கும் கணவனை மலர்ந்த முகத்துடன் பார்த்தவள்,பின்பு கோபமாகத் திரும்பி கொண்டாள்.



அவளை இடித்துக் கொண்டு அமர்ந்தவன்,அவர் நகரப் போகவே அவளை இழுத்து அனைத்துக் கொண்டான்,"விடுங்கோ,என்னை விடுங்கோ நேக்கு நீங்க வேணாம்,உங்கள பிடிக்கல",அவனை அடித்துக் கொண்டே சொல்லியவள் அவன் நெஞ்சின் மீதே சரிந்து அழுக தொடங்கினாள்.





“மாமி நீ என்னடா வச்சுக்கிற லவ் எனக்குத் தெரியும்,அழுது,பேசி நேரத்தை வீணாக்காதடி,பேச நேரம் நெறைய இருக்கு, எவன் எப்ப வந்து பிரச்சன பண்ணுவான்னு தெரியாது,இனியும் தள்ளி போன,எனக்குக் கவி உடை தான் பாவம்டி உன் மாமே”,அவன் சொல்லவே வாய் பொத்தி சிரித்தாள் மீனு," என் பொழைப்பு உனக்கு சிரிப்பா இருக்கா",கேட்டுக்கொண்டே அவள் மீது பாய்ந்தான்.



காத்திருந்து கை கூடிய கூடல் சொல்லவா வேண்டும்,அகநானுரைம், காமத்து பாலையும் கலந்தடித்து அவன் புகட்ட,மிச்சம் வைக்காமல் அதனை அள்ளி பருகினால் அவனது மனையாட்டி,இரவின் குளுமையும்,இளமையின் இனிமையும் அவனைத் தீ மூட்டி செல்ல,அதனை தனது மனைவிக்கும் உணர செய்தான்.....



எங்குப் பிறந்தால் என்ன,எங்கு வளர்ந்தால் என்ன ராஜேஷின் உயர்ந்த குணமும்,நடத்தையும் மீனுவை சுண்டி இழுக்க,மீனுவின் பொறுமையும்,அமைதியும்,குடும்பம் செய்யும் பாங்கும்,அவனைச் சுண்டி இழுக்க மதம் கடந்து,சாதி கடந்து,காதலே அங்கு முதன்மையாக.....



முடுச்சு போட்டவன் சரியாகத் தான் முடித்திருக்கிறான்,புரிந்தவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்,புரியாதவன் அவனை நீந்திதே வாழ்க்கையை தொலைகிறான்.........



"இந்தத் தபா மன்மதன் கரெக்டா அம்பா உட்டாரு பா,சாமி"





இவர்கள் கூடி கலந்த பின்,அவனது நெஞ்சில் முகத்தைப் புதைத்துச் சுகமாகத் தேய்த்துக் கொண்டால் மீனு,"அடியே ஏய் மாமி,இப்புடி எல்லாம் பண்ணாதடி அப்புறம் அடுத்த ரவுண்டு கேட்பேன், அவனை தலையை தூக்கி பார்த்தவள் "சீ .............போங்கோ பேட் பாய்",அவள் சிணுங்கிய தினுசில் வாய்விட்டுச் சிரித்தான் ராஜேஷ், முத்து பற்கள் மின்ன சிரித்த கணவனைக் கண் இம்மைக்காமல் பார்த்தால் மீனு,அவர்கள் மோன நிலையைக் கலைத்தது முத்துவின் அலறல்.



ராஜேஷும்,மீனுவும் ஒருவரை ஒருவர் பார்த்து முழித்துக் கொண்டனர்,பின்பு நிலை உணர்ந்து உடையை வேகமாகச் சரி செய்து கீழே சென்றனர்,இந்த முறை பாட்டி முறைத்துக் கொண்டு இருக்க,காமாட்சி மயங்கி இருந்தார்,பார்த்த மீனுவுக்கு ஒரு புறம் நிம்மதி,ஒரு புறம் தனது அத்தையை எண்ணி கலக்கமாக இருந்தது.



முத்துவிற்குப் பால் எடுத்துச் சென்ற காமாட்சி மயங்கி சரிய,முத்து அலறிவிட்டார் பாட்டிக்கு ஒருவாறு விடை தெரிந்து விட்டது,அதனால் தான் கோபமாக முத்துவை முறைத்துக் கொண்டு இருந்தார்,ராஜேஷ் மருத்துவ மனைக்கு விரைய அவரைத் தொடர்ந்து சென்றனர் அனைவரும்.





அங்கு மருத்துவர் சொன்ன விடயத்தைக் கேட்ட ராஜேஷும்,மீனுவும் நினைத்து நினைத்துச் சிரித்தனர்,காமாட்சி தலையில் கையை வைத்து உட்காந்துவிட்டார்,முத்துவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை,மறந்தும் மகன் மருமகள் இருக்கும் பக்கம் தலையைத் திருப்பவில்லை,பாட்டி தான் காமாட்சியைத் தேற்றினார்,"என்னடிம்மா அந்தக் காலத்துல மகளும்,அம்மாவும் ஒண்ணா தான் குழந்தை பெத்துண்டா,அது மாதிரி நெஞ்சுண்டு போடி,அவ அவ புத்திர பாக்கியம் இல்லனு கோவில் கோவிலா சுத்திண்டு இருக்கா,நீ என்னடானா கண்ணுல தண்ணி விட்டுண்டு இருக்க",ஆம் காமாட்சி இப்போது கர்ப்பம்.



"என்னம்மா இப்புடி பண்ணிறீங்களேமா"...............
 




Last edited:

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
Vanthuten ka ??

அக்கா செம எபி ????...

கடைசியா வச்சிங்கல டிவிஸ்ட்டு அது தான் செம.... கர்ப்பம்மா????

சூப்பர் ஸ்டோரிக்கா... அண்ட் குட் என்டிங்??..
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
சிரிச்சு முடியலே என்னால??... ராஜேஷ் குடுத்து வச்சவன்?... தம்பி & மகன் on the way... Time முன்னே பின்னே ஆனாலும கரெக்டா வந்துருவாங்க...????... பாட்டி தான் பாவம்... ரெண்டு பிரசவம் பாக்கணுமே..??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top