• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னம்மா எப்புடி பண்றீங்களேம்மா -7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
அன்பு தோழிகளே !


என்னமா இப்புடி பண்றீங்களேமா? அடுத்தப் பதிவு கொடுத்துவிட்டேன் தோழிகளே உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்.




என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா -7



தலையில் துண்டை போட்டுகொண்டு அமர்ந்து இருந்த முத்துவை பார்க்க பாவமாகத் தான் இருந்தது,பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காய் மாறிய கதை தான் அவரது நிலை,தன் மகன் மருமகளுடன் ஒன்றி வாழவேண்டும் என்று அவரும்,சரோஜாவும் கூட்டு சேர்ந்து முடிவெடுத்து செயல் படுத்த,அது அவர்கள் வாழ்க்கைக்கே வெடி குண்டாக மாறும் என்பதை யார் அறிந்தார்.



பக்கத்தில் அவரைப் பார்த்த வாரே உட்காந்து இருக்கும் வனஜாவை குமுட்டில் குத்தினார் காமாட்சி "சேத்து வைக்குற முகரக்கட்டைய பாரு,இன்னாத்துக்குடி உனக்கு இந்த வேல","ஐயோ அயித்த நம்ம முண்டகண்ணியம்மன் மேல சத்தியமா அவுங்க நல்ல இருக்கணும் தான் நானும் மாமாவும் பண்ணுனோம் இப்புடி புட்டுக்கிச்சு",உண்மையான வருத்தத்துடன் அவள் சொல்ல அதுக்கு மேல் அவரால் கடிந்துக் கொள்ள முடியவில்லை,"சரிடி கெளம்பு உங்க வூட்டுக்கு போக நேரம் ஆகுது அப்புறம் உங்க ஆத்தா ஊர கூட்டி பஞ்சாயத் வச்சுடுவா",சரி என்பது போலத் தலையை ஆட்டியவள் அவளது வீட்டை நோக்கி சென்றால்,அவள் சென்ற பின்பு திரும்பிய காமாட்சி கணவனைப் பார்த்து.



"பரவாயில்லையா என்னைய தான் உனக்குப் புடுச்சுக்காது பாசம் கிடையாது,புள்ள மேலையாவது வச்சிக்கினியே சந்தோசம்",கண்ணைக் கசக்கியவரே பேச, அவருக்கு தொண்டையை அடைத்தது " காமு" முத்துவின் ஏக்கமான அழைப்பு அவரை அசைத்தாலும் வெளியில் ,"காமுவாம் காமு கம்முனு படுய்யா கொஞ்சம் பேசுனா போதுமே"கணவனை நொடித்துக் கொண்டு சென்றார் அவருக்கு உள்ளுக்குள் சந்தோசமே, இருக்காதா பின்ன அவருக்கு முத்துவின் மேல் கொள்ளை ஆசை, அவர் வேறு பொண்ணை விரும்பியவர் என்று தெரிந்தோ அன்று முதல் தான் அவரை ஒதுக்கினார் அதுவும் அளவு கடந்த அன்பினால் தான்.(என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்).



இங்கு……………..



தனது அறைக்குள் நுழைந்தவளை ஏக்கமாகச் சுற்றி வந்தது ராஜேஷின் கண்கள்,அவன் பார்ப்பது தெரிந்தாலும் அவனைக் கண்டு கொள்ளாமல் அவள் போக்குக்கு உடை மாற்றி வந்து கட்டிலில் படுத்து விட்டாள்,அவளது அமைதி அவனைக் கொள்ளாமல் கொன்றது,'அவன் அவன் கல்யாணம் பண்ணி மூணு மாசத்துல 90 இரவு கொண்டாடுறானுக,எனக்குக் கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகுது ஓர் இரவுக்கே வழியில்லை,கொசு சொன்ன மாதிரி எனக்கு இந்த விஷியத்துல கண்டம் இருக்குமோ,அந்த பொடி பையேல்லாம் காலாய்க்குற அளவுக்கு இருக்கு என் நிலமை'.



பலவாறாக மனதுக்குள் மருகியவன் மீனுவை பார்த்துக் கொண்டே தூங்கி போனான்.



காலையில் வழக்கமான விடியல் தான் இன்று மீனு வேலைக்கு செல்லவில்லை என்று கூறிவிட்டாள்,அவள் முகமும் சரியில்லை,பாட்டியும்,காமாட்சியும் அத்தனை முறை கேட்டும் எதுவும் சொல்லவில்லை, ராஜேஷிற்கு அவள் முகம் வதைக்க அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை இன்று அவன் போயே ஆக வேண்டிய சூழ்நிலை வேறு தன்னுடைய தொழிலை விரிவு படுத்துவதற்காகப் பேங்க் மேனேஜரை சந்திக்கச் செல்கிறான், இவள் இப்படி முகத்தைத் தூக்கி கொண்டு திரிந்தால் அவனால் எப்படிச் செல்ல முடியும்.



"மீன்னு" அவன் அழைக்கவே வேகமாக மாடி எறியவள் அவனைப் பார்த்து அசந்து போய் நின்றாள்,பேங்க் செல்வதால் நீல நிற முழு கை சட்டையை இன் செய்து இருந்தவனைப் பார்க்க இரு கண்கள் போதவில்லை அவளுக்கு,அதையெல்லாம் உணராதவன் அவளிடம் நெருங்கி அவளது கன்னம் பற்றி "ஏண்டி மாமி சோகமா இருக்க,சத்தியமா அந்தப் புடவையை நான் எடுக்கலடி,எனக்கே எங்க அம்மா தான் எடுத்து கொடுக்கும் நம்புடி மாமி"அவன் குரல் அவளை வசியம் செய்ய.





"தேம்பியவரே நான் ஒன்னும் அதுக்குக் கோபமா இல்ல அத்தையும்,மாமாவும்,அந்த பொண்ணு சரோஜாவும் எல்லாம் சொல்லிட்டாங்க நான் உங்க மேல தான் கோபமா இருக்கேன்",இது என்ன புதுக் கதை என்பதைப் போலப் பார்த்தவன் "இன்னாடி இது வம்பப் போச்சு, அதான் அதுங்களே உண்மைய சொல்லுடுச்சே அப்புறம் ஏன் என் மேல கோபம்,நான் இன்னாடி மாமி பண்ணுனேன்" அழுது விடுபவன் போல அவன் கேட்க,கோபமாக நிமிரிந்தவள்.....



"உங்களுக்குத் தெரியாது பொய் சொல்லத்தேல்"கண்கள் கலங்க உதடு துடிக்கப் பேசியவளை பார்க்க மனம் அள்ளி கொண்டு போனது,"மெய்யாலுமே தெரியலடி"அவன் அலுத்துக் கொள்ள.



"நேத்து யாரு சமச்சானு தெரியுமா",அவள் கேட்கும் போதாவது சுதாரித்துக் கொண்டு இருக்கலாம் கொசு சொன்னது போல அவனுக்கு இந்த விஷியத்தில் கண்டம் உறுதி தான் போலும்,"அந்த கண்டராவிய யாரு சமச்சது " அவன் சொன்னது தான் தாமதம் கத்தி கதறி அழுக ஆரமித்து விட்டால்.



"பாத்திங்களா பாத்திங்களா நான் சமச்சது கண்டராவியா,என்னய்ய….. உங்களுக்குப் பிடிக்கல,என் சமையலும் பிடிக்கல,உங்களுக்கு நான் செட் ஆகல அப்புடி தானே,நேக்கு அடைக்கலம் கொடுத்து வேலை வாங்கி கொடுத்து இருக்கேள் அந்த நன்றிக்காக நான் ஓரமா இருந்துட்டு போறேன்,நீங்க நன்னா சமைக்குற பொண்ண பார்த்து கட்டிகோங்கோ "அவள் போக்கில் பேசி கொண்டு போக அதிர்ந்து போனான்.



அவனும் என்ன தான் செய்வான் விதி விட்டு விட்டு அடித்தால் பரவாயில்லை,தொடர்ந்து அல்லவா வெளுத்து வாங்குகின்றது,நேற்று நடந்தவை என்னவென்றால்.



அவளுக்கு உண்மை தெரிந்த பின்பு ராஜேஷின் மேல் இருந்த சிறு வருத்தமும் தூரமாகச் செல்ல,பட்டம் பூச்சியாகச் சுற்றி வந்தாள்,"அத்தை நான் இன்னக்கி சமைக்கட்டுமா",ஆசையாகக் கேட்ட மருமகளைக் கட்டி கொண்டு ஒப்புதல் தந்தார் காமாட்சி,ஆசை ஆசையாகச் சமைத்துக் கணவனுக்கும்,அவளுக்குமாக உணவை எடுத்து வைத்தால் ,"என்னடி உன் ஆம்படையானுக்குச் சமைச்சியா,பரவாயில்லையே நொக்குச் சமைக்கத் தெரியுமா என்ன "கேலி போல் பாட்டி கேட்க "போங்க பாட்டி"அழகாக வெட்க பட்டாள்.



அன்று முழுக்க சிரித்த முகமாக வளைய வந்தவள்,அன்று மாலை ஆவலாக வீட்டுக்குள் நுழைய ,ராஜேஷ் கத்தி கொண்டு இருந்தான்,"அம்மா....................இன்னா இது",எது இன்று புரியாமல் முழிக்க "இது" தனது டிபன் சம்படத்தைத் தூக்கி கட்டினான்,"ஏன்டா? ".......



“இன்னா ஏன்?,நான் என்ன ஆடு,மாட பருப்பு,சாம்பார் ,பச்சை பச்சையா காய் வச்சுருக்க",பருப்புக் கடைந்து,வடகம் தாளித்து மணக்க மணக்க சாம்பார் வைத்து,பீன்ஸ்,கேரட் பொரியல் செய்து வைத்தாள் மீனு,அதற்குத் தான் எப்போது குதித்து கொண்டு இருந்தான், மீனுவை சங்கடமாகப் பார்த்து வைத்தார் காமாட்சி ,'மட பைய கரெக்டா அவ வர நேரத்துக்கா இதப் பேசணும்'"இப்போ இன்னா நாளைக்கி வேற ஆக்கி தரேன் போ போய்க் குளி",அங்கிருந்து அவனை அகற்ற பார்க்க.



“அவனோ இனிமே இது மாதிரி சமைச்ச” என்று எச்சிரித்து விட்டு வேறு சென்றான்,காமாட்சி மீனுவிடம் வர அவள் அழுது கொண்டே சென்று விட்டாள்,அவனுக்கு என்ன ஜோசியமா தெரியும் இன்று தனது மனைவி சமைத்து இருப்பாள் என்று,அவனையும் சொல்வதற்கில்லை தினமும் கவுச்சியில்லாமல் சோறு இறங்காது,தொட்டுக்கொள்ளக் கருவாடு கண்டிப்பாக வேண்டும் அப்புடி இருப்பவனிடம் பருப்பு சோறு கொடுத்தால்.............



அவள் அழுது கொண்டே இருக்க எழுந்து வந்தவன் அவளிடம் நெருங்கி “எனக்கு நேரமே சரில்லடி மாமி,நான் நேரா வண்டி ஓட்டுனாலும்,அது கோணலா தான் போகுது,வண்டிய மாத்துறத,ஹண்ட் பார மாத்துறதானு தெரியல,அதற்கும் அவள் சிலிர்த்துக் கொண்டு” என்ன மாத்துங்கோ வண்டி நேரா ஓடும்” அவன் மீது பாயாத குறையாக சொல்லி விட்டு சென்றால்.



தலையில் கை வைத்து அமர்ந்தவனை சோதிப்பது போல் பக்கத்து விட்டு ரேடியோ பொட்டி பாடியது சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி.
 




Last edited:

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
பாவம் மா ராஜேஸ்... இப்படி ஆட்டி படைக்கக்கூடாது...?? ஏதாவது கொஞ்சம் பார்த்து செய்யுங்க மா?

அருமையான பதிவு ??
 




Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
பாவம் மா ராஜேஸ்... இப்படி ஆட்டி படைக்கக்கூடாது...?? ஏதாவது கொஞ்சம் பார்த்து செய்யுங்க மா?

அருமையான பதிவு ??
? senjuralam Premi akka ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top