• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னில் கலந்திடு உயிரே பாகம் 10 மற்றும் 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
அனைத்து நண்பர்களுக்கு EID MUBARAK
IMG-20210515-WA0009.jpg
அப்டியா முகிலா அதெல்லாம் நல்லா தான் வரும்

நீ தூங்க நிம்மதியா… என்றால் லட்சுமி


இனிதே பொழுது விடிந்தது


காலை கடன்களை முடித்து விட்டு தனது தாயிடம் முகிலன் " அம்மா நீங்களும் பள்ளிக்கூடத்துக்கு வாரீங்கள? " ,


"நான் வீட்ல கேசரி கிண்டி வைக்கிறேன். நீ போயிட்டு பரீட்சை பெறுபேறு பார்த்துட்டு வா முகிலா " ,வழக்கம் போல தந்தை படத்தை வணங்கி விட்டு கதிர் வீட்டிற்கும் சோமு வீட்டிற்கும் சென்று அவர்களையும் அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு சென்றான்.


ஆயிரத்து நூற்றி நாற்பத்தைந்து புள்ளிகள் பெற்று இருந்தான். முகிலன் ,


எண்ணூற்று எண்பது புள்ளிகளை கதிரும் ,


அறுநூற்று மூன்று புள்ளிகளையும் பெற்றிருந்தான். சோமு



முகிலன் பாஸ் பண்ணுவது அனைவரும் அறிந்ததே ,

கதிரும் ஓரளவு தேர்ச்சி பெற்றிருந்தான் .


சோமுவும் தட்டு தடுமாறி முட்டி மோதி பாஸ் பண்ணியதே ஆச்சர்யத்தக்க விஷயம் ,


பள்ளிக்கூடத்தில் முதலிடம் முகிலனுக்கு தான் , பாடம் கற்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கு குதூகலிப்பு , சில மணித்துளிகள் கழிந்து போக வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். முதலில் சோமு தாய் தந்தையிடம்

நற்செய்தியை கூறி விட்டு மூவரும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார்கள்.


அப்டியே கதிர் வீட்டிற்கு சென்றவுடன் கதிர் தனது தந்தை கட்டியணைத்துக் கொண்டான் . " அப்பா நான் பாஸ் ஆகிட்டேன். என்றான் மகிழ்ச்சியுடன் " , தந்தையும் சர்க்கரையை அள்ளி வாயில் தினித்தார் . மூவருக்குமே, முகிலனுக்கு கவலை தான் தோள் தட்டிக் கொடுக்க தந்தை இல்லை என்று , அவ்வண்ணமே முகிலன் வீட்டிற்கு சென்று அம்மத்தா , அம்மாவிடம் ஆசிகளை பெற

கதிர் சோமு இருவரும் சேர்ந்து ஆசி பெற்றனர்.


தனது தந்தை படத்தின் முன் நின்று முகிலன் ' நான் பாஸ் பண்ணிட்டேன் அப்பா இந்த சந்தோசத்தை உங்க கூட சேர்ந்து அனுபவிக்க எனக்கு குடுத்து வைக்கல காலம் உங்கள மறந்தாலும் நாங்க உங்கள மறக்கல , என் மேல் படிப்புக்கும் வேலைக்கும் நீங்க துணையா இருக்கணும். என்று மனதார வேண்டிக் கொண்டான்.


வீட்டில் காய்ச்சிய பாலில் ஆடையை பெற்று அதை சூடாக்கி நெய் எடுத்து மணக்க மணக்க கேசரி செய்து வைக்க நாவின் உமிழ்நீர் சுரப்பிகள் நாட்டியம் ஆட வைத்தது மூவருக்குமே , ஆசையோடு அம்மத்தாவின் கையால் உண்டு மகிழ்ந்தனர்.


அவ்வேளை பார்த்து சண்முகமும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். "பரீட்சை முடிவில் என்ன ஆச்சுன்னு கேட்க தான் வந்தேன். "


"நான் பாஸ் பண்ணிட்டேன் மாமா " என்று சட்டென்று கால்களில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டான்.


"அப்படியா "என்று சண்முகம் ஆச்சரியத்துடன் கட்டிக்கொண்டார் முகிலனை, முகிலனுக்கு தந்தை இல்லாத ஏக்கம் சற்று குறைந்தது.


" லட்சுமி பட்ட பாட்டுக்கு எல்லாம் ஒரு தீர்வு கிடைச்சிட்டு சரி முகிலா உனக்கு என்ன வேணும் கேளு ? என்று சண்முகம் கூற,


முகிலனோ மனதிற்குள் ' உங்க பொண்ணு தான் வேணும் '


" அது வந்து மாமா எனக்கு புல்லட் வாங்கி தரீங்களா "


" வாங்கி தந்துட்டா பேச்சு " என்றார் சண்முகம் ,


லட்சுமிக்கு இதில் விருப்பம் இல்லை " வேண்டாம் அண்ணா " முகிலனுக்கு வண்டி எல்லா ஓட்ட தெரியாது ! "


" நல்ல பொண்ணு மா நீ இன்னும் கொஞ்ச நாள் போக முகிலன் எனக்கு வண்டி ஓட்ட கத்து தருவான் போல,


"சரி லட்சுமி இன்னும் ஒரு வருடம் போகட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்"


"சரி அண்ணா" என்றால் லட்சுமி ,


சண்முகம் தான் வந்த விஷயத்தை கூற ஆரம்பித்தார்.


சீர் செய்தவர்களுக்கு விருந்து வைக்கனுமாம். லட்சுமி , அங்க பத்மா

அவங்க தங்கைக்கு செய்ற , நான் என் தங்கைக்கு செய்யும் ஆசை இங்கே விருந்து வைக்கிறேன். அம்மா என்றார்.


சீதா பாட்டியும் சரி என கூறி விட்டார்.


கதிர், சோமு விருந்துக்கு கண்டிப்பா வரணும் என்று அன்புடன் அழைத்தார் சண்முகம் ,


முகிலன் மேல் படிப்புக்கு என்ன உதவினாலும் கேளு லட்சுமி மா ?

தயக்கத்துடன் லட்சுமியும் சரி என்றால் ,


சண்முகமும் வீட்டிற்கு சென்றார்.


லட்சுமி முகிலன் அருகில் சென்று " உனக்கு புடிச்சது நீ படி முகிலா" என்றார். அம்மத்தாவும் " காசு பணம் பத்தி நீ யோசிக்காம படி ராசா என்றார்.


சூரியன் நிலவுக்கு இடம் கொடுப்பதற்காக மெதுவாக நகர்ந்து செல்ல மாலை பொழுது வந்து சேர்ந்தது ,


சண்முகமும் விருந்திற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு தானும் தயாராகினர். சேமியாவோ "அப்பா வீட்ல இருக்க புடிக்கல நானும் வாரேன் "


"உங்க சின்னம்மாக்கு விருந்து நீ இங்கவே இரு மா " என்றார் சண்முகம் ,


"அதுனாலதான் வரேன்னு சொன்னேன் " சலிப்புடன் சேமியா,


"சரி மா நீயும் சீக்கிரம் கிளம்பி வா " வேறு வழியின்றி சண்முகமும் ,

சேமியா தான் பிடிவாதக்காரி ஆயிற்றே. .!,


முகிலன் வாங்கி கொடுத்த சுடிதாரை தைத்து வைத்திருந்தாள் அதை தான் உடுத்தினால் , பொட்டு மாத்திரம் வைத்து கிளம்பிவிட்டாள்.


அலங்காரம் செய்ய பிடிக்கும் ஆனால் இன்று எதுவும் செய்யவில்லை.





லட்சுமி வீட்டை அடைந்தனர் ,


சேமியாவை கண்டவுடன் லட்சுமி வாம்மா என்று பாசமாக அழைத்தாள். அம்மத்தாவோ உணவு கொண்டு வந்த பாத்திரங்களை எடுக்க சென்றுவிட்டார். அவர் பின்னாடி சோமுவும் ,


முகிலனோ குறுக்கி குறுக்கி சேமியாவை பார்த்து கொண்டிருக்க ' அவள் அழகா இல்லை சுடிதார் அழகா ' என்ற குழப்பம் வேறு மனதில்


" என்னடா கருவாயா என்னை அப்படி பார்க்குற "?என்று சேமி கேட்க


என்னடா வாவாவாவா…….. குண்டச்சி குண்டச்சி. ……! பதிலுக்கு முகிலனும் ,


"உண்மைக்கும் நான் குண்டாகிட்டனே மாமா ? "


"ஆமாம் டி கொழுப்பும் கூட கொஞ்சம் ஏறி இன்னும் குண்டா கிட்ட…! "


அத்தததத. ……. என்று சேமியா லட்சுமியிடம் வந்து முறையிட்டால் "உங்க வளர்ப்பு சரியில்ல அத்தை எப்ப பார்த்தாலும் மாமா கண்ணுக்கு குண்டாவே தெரியிறேன்…..! :என்றாள் பரிதாபமாக


"ஏன்டா அவ எப்பவாவது வீட்டுக்கு வரா நீ எப்பயும் வம்பு இழுக்குரியே..? "


"அம்மா சேமியா தான் முதல் வம்பு இழுத்த"…. என்று முகிலன் கூற ,


அம்மத்தா " லட்சுமி நீ இதெல்லாம் கண்டுகாத இளசுகள் அப்படித்தான் இருக்கும்" என்றவுடன் முகிலன் அம்மத்தாவை கொஞ்சினான்.


சேமியாவோ " என்ன அப்பத்தா இப்டி கவுத்துட்டியே ….! ,


லட்சுமி ,சேமியா பூ வைத்து வரவில்லை என்பதால் பூ கட்ட சென்றால்,



அம்மத்தா " இரவு சாப்பாட்டுக்கு இன்னும் நேரம் காபி கலந்து எடுத்து வாரேன் என்றார். நானும் வரேன் என்று சேமியாவும் சீதா பாட்டி பின் ஓடி விட்டால்


முகிலனின் காதின் அருகில் கதிர் வந்து" என்ன மச்சி அன்னை விட்டத இன்னைக்கு சரி பண்ணுறியா?"


"ஆமா மச்சி கொஞ்சம் " என்று ஒரு கண்ணை மூடியவாறு முகிலன். 😉😉😉




"ஐய்யோ அப்பத்தா மாமாகிட்ட ஒன்னு கேட்க மறந்துட்டேன். இரு கேட்டு வாரேன்." என்று சமையல் கட்டில் இருந்து நகர்ந்தாள்.


" முகில் மாமா….. என்று வந்தால் வாழ்த்துக்கள் மாமா வந்து உடனே சொல்லுவோம்னு நினைச்சேன். மறந்துட்டேன். "

நன்றி சேமி. … என்றான் முகிலன்


அருகில் சண்முகம் இருக்க " அப்பா மாமாக்கு எதும் வாங்கிட்டு வருவோம்னு சொன்னேன் நீங்க தான் மறந்துடீங்க. என்றால் சேமி

நாளை வாங்கி கொடுக்கலாம் டா. … என சண்முகம் கூற சரி என்றால் சேமியாவும்,


"ஆமாம் மாமா கணக்கு பாடம் நல்ல செய்வியா? எவ்வளவு மார்க் வாங்கவ? என்று சேமி ஆர்வமாய் கேட்க


" ஓரளவு செய்வேன் எண்பதெட்டு மார்க் , நீ எவ்வளவு மார்க் வாங்குவ? வாயை பிளந்தாள் சேமியா...😲😲,


"அது வந்து…. மாமா ஐம்பத்தி…. ஐம்பத்தி… "என்று சேமி இழுத்து கொண்டிருக்க ,


சண்முகம் முந்திக்கொண்டார் "நீ வேற முகிலா அவள் வேறும் எட்டு மார்க் தான் வாங்குவார்கள். ..! மத்த பாடங்கள ஓரளவு மார்க் வாங்குவா அவ்வோ தான். ..!,


சேமியா மனதில் 'தவளை தன் வாயால கெடும் நீ உன் வாயால கெட்ட டி',


"அப்போ ஆங்கில பாடம் எப்டி மாமா .? என்று முகிலன் வினவ ,


"அத நானே சொல்லுறேன் …….இருபத்தைந்து என்றால் சேமி ,


அம்மணிக்கு ரோஷம் வேற வருகிறதோ…! என்று கிண்டலடித்தான். முகிலன், சரி எதிர்காலத்தில் என்ன செய்வதாய் உத்தேசம்? , இலட்சியம் என்று ஒன்றுமில்லை நல்லா சமைக்க கத்துகனும் ஒரு ஆசை அவ்வளவு தான் மாமா. ….! ,


ஐயா ராசா… சேமியாவை கணக்கு பாடம் மட்டும் பாஸ் பண்ண வச்சிரு என்றார் சண்முகம் , இடையில் கதிரும் சோமுவும்

" ஆமா மாமா முகிலன் தான் எங்களுக்கு கணக்கு சொல்லி தருவான்.நாங்களும் பாஸ் ஆகிட்டோம். "


இவ்வனைத்தும் பூ கட்டிக்கொண்டே பார்த்துக் கொண்டிருந்தா

லட்சுமி " சேமியா இங்க வா மா " பூ வைப்பதற்கு ,


"பூவை வைத்து விட்டு நெட்டி முறித்தால் கண்ணுக்கு கொஞ்சம் மை போட்டுக்கோ அழகா இருப்ப ," சேமியாவை தன் பிள்ளையாய் எண்ணினால் ,


"சரி அத்தை…… நல்ல வேளை கூப்பிடீங்க அத்தை உங்க மகன் அறுவை தாங்க முடியல " என்று நொந்து கொண்டாள் . சேமியா ,


சீதா பாட்டி காபி அருந்த உள்ளே வர சொன்னார். லட்சுமியையும், சேமியாவையும்


முகிலன் சேமியாவை விடுவதாக இல்லை " மேடம் இந்த வருஷம்10 ந்து பாஸ் பண்ணுற ஐடியா இருக்கா ?


" அதெல்லாம் அவ பாஸ் பண்ணுவா நீ கொஞ்சம் உதவி பண்ணு முகிலா " என்றால் லட்சுமி


சேமியா பாஸ் பண்ணுவது ஆசை தான் ஆனால் அத்தை நினைக்கும் போது தான்…. என முகிலன் கூற அதை பற்றி நீ கவலை படாதே

மதி பாப்பா வீட்டின் மாடியில் சேமிக்கும் மதிக்கும் பாடம் சொல்லி குடு முகிலா என்றார் சண்முகம் "சரி மாமா" என ஒப்புக்கொண்டான். முகிலன்,


"சரி சரி காபி சீக்கிரம் குடிங்க எல்லாம்" என்றார் சீதா பாட்டி ,


காபியை அருந்தி விட்டு சண்முகம் "அம்மா, லட்சுமி ,பசங்களா நாங்க கிளம்புறோம். மணி ஆறரை ஆகிவிட்டது அம்மா "


"ஆமாம் பா சேமியாவ பத்திரமா அழைச்சிட்டு போ" என்றார். சீதா பாட்டி, அவர்களும் கிளம்பி விட்டார்கள் .


சிறு சிறு வேலைகளை முடித்து விட்டு லட்சுமியும் சீதா பாட்டியும் அமர்ந்தனர் . ஐவருக்கும் கலந்துரையாடல தான்.


சரி விசயத்துக்கு வருவோம். என்று லட்சுமி பேச ஆரம்பித்தாள்.

யார் யார் என்னவாக போறீங்க ? அம்மா நாங்க மூவரும் ஒரே துறைதான் ஆசான் ஆவதே எங்கள் விருப்பம்…! என்றான் முகிலன்


கேட்கும் போதே ஆசையாக இருக்கிறது. நம ஊரில் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கணும் அதுவே எங்கள் ஆசை என்றான் கதிர் , "நல்லது ராசா" நான் பள்ளிக்கூடம் போகும் போதும் பஸ் கூட எங்களுக்கு கிடையாது. அருமையான யோசனை என்று பெருமிதம் லட்சுமிக்கு , இதற்கு உதவி செய்யனும் லட்சுமி மா என்றான் சோமு என்னால் முயன்றவரை உதவி செய்கிறேன்.


அம்மத்தா " சரி கண்ணுங்களா சாப்பாட்டுக்கு தயாராகுங்க ,


லட்சுமி இலை போட அம்மாத்தா பரிமாறினார்.


அருமையான உணவு என மூவரும் உண்டனர், பிறகு அம்மத்தாவும் லட்சுமியும் உணவருந்தினர்.


கதிர் " முகிலா சேமியாக்கு கணக்கு பாடம் சொல்லி தர போறியா?


"ஆமா டா கதிரு மாமா பாவம் டா அதுக்காக தான்….!" என்றான் முகிலன்


அப்படியா முகிலா பார்ப்போம். கணக்கு கற்ப்பிக்கிறியா ? கரட் பண்ணுறியா ? என்று கிண்டலாக கதிர்


முகிலன் அவள கரட் பண்ணுறானா? அத்தை முகிலன கட் பண்ணுறாங்களானு பாரு ….!என சோமு கூற , அதுவும் வாஸ்தவம்தான் என்றான் கதிர் ,


சரி டா நாங்களும் கிளம்புறோம். என்று கதிரும் சோமுவும் அவரவர் இல்லத்திற்கு சென்றனர்.


அம்மா நான் தூங்குறேன் என்று சாய்ந்தாவன் .


கண்ணை மூடி

மூச்சு விட்டால்

கனவில் அவள் முகம்

கையில் ஏந்தி

காதல் பாட

ஏங்கும் என் மனம்……!



Thamil kawshi 💙
உங்களில் ஒருத்தி 💙

Marakkama comments pannunga friends
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top