• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னில் கலந்திடு உயிரே பாகம் 12 💙

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
Hai tholaas Epi evlo seekiram thara mudiyumo avlo seekiram thara try pannuren friends
அனைத்து நண்பர்களுக்கும் இனிய இரவு மலரட்டும்.

IMG-20210520-WA0106.jpg

பொழுது விடிந்ததும் மும்மூர்த்திகள் ஒன்று கூடினார்கள்.


"காலேஜ்க்கு இன்னும் ஒரு வாரத்தில் விண்ணப்பம் போட்டுருவோம். டா " முகிலன் ,


"கணக்கு பாடம் வகுப்பு அனுமதி வாங்க வேண்டும்டா எப்போது?" என்றான் கதிர் ,


'உனக்கு ஏன் இதில் அவசரம்னு எனக்கு தானே தெரியும்…! ' என்று மனதிற்குள் முகிலன் ,


இன்று போகலாம் என்றார்கள் சோமுவும் முகிலனும்,




பாடம் சொல்லித் தருவதற்கு மதியின் வீட்டிலும் சம்மதம் வாங்கி விட்டார்கள். முகில் வருவதை சாக்காக வைத்து கதிர் வருவது வழக்கமாயிற்று சோமுவிற்கு தான் சித்தி வீடாயிற்று அனுமதி வேண்டுமா என்ன ? ,


சேமியா , மதியுடன் இன்னும் இருவர் அவர்களின் வகுப்பு தான் சிவாவும் வித்யாவும் , இவர்கள் இருவரும்,

நன்றாக படிக்க கூடியவர்கள் இருந்தாலும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு இந்த வகுப்பில் சேர்ந்து விட்டார்கள்.


முகிலன் பாடம் கற்பிக்க ,


கதிர் மதியை சைட் அடிக்க,



சோமு அரட்டை அடிப்பது வழக்கம் ,




முகிலனும் அடிக்கடி சேமியாவை ஒரு கண்ணோட்டம் விடுவான்.

அவள் பார்க்கும் வேளையில் முறைத்து பார்ப்பான்.சிலவேளை சேமியா தூங்கி குட்டு வாங்குவது வழக்கம் ,


சோமுவிற்கு அவ்வப்போது சந்தேகம் வருகிறது மதியை கதிர் இப்படி பார்க்கின்றான். என்று நம்ம கண்ணுக்கு தான் தப்பா தெரிகிறது போலும் என்று விட்டு விடுவான் .


முகிலன் வட்டத்தை பற்றி விளக்க சேமியா கொட்டாவி விட ஆரம்பித்தாள் . வட்டத்தை பற்றி கூறும் போது இடையில் தூங்கி விட்டாள். மதி சேமியாவை எழுப்ப கையை நீட்ட முகிலனோ "வேண்டாம் மதி அம்மையார் தூங்கட்டும் என்று சொல்ல மதியும் பாடத்தில் மூழ்கினாள் . சிவாவுக்கும் மதியிக்கும் இருந்த சந்தேகங்களை முகிலனிடம் கேட்டு தெளிவு பெற்றனர்.


மதி , வித்யா , சிவா மூவரும் வகுப்பை முடித்து விட்டனர். சேமியா தூங்கும் அழகை ரசித்துக் கொண்டிருக்க கதிரும் சோமுவும் " இங்க நம்ம இருந்த சரி வராது " என்று படி கட்டுக்குள் குந்திக்கொண்டார்கள்.


சேமியா அருகில் சென்று முகிலன் இடது புற காதை ஒரு விரலால் நீவி விட்டு பெரும் விரலையும் நடு விரலையும் ஒன்று சேர்த்து கெராம்

காயை சுண்டுவதை போல் அவள் காதை சுண்டினான்.


சுண்டியதில் வீர் என்று இழுத்தது மூளைக்கு " ஐய்யோ…..அவ்ளோ சீக்கிரம் விடிஞ்சிருச்சா? என்று அலறிக்கொண்டு எழுந்தவள் . முகிலனை பார்த்து பேந்து பேந்து முழித்தாள். ' பக்கத்தில் இருந்தவர்கள் எங்கே?,


' மாட்டிக்கிட்டேன் மாட்டிக்கிட்டேன் வசம்மா மாட்டிக்கிட்டேன் மாமன் கிட்ட….! ' என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாள். பக்கத்தில் பிடாரி அம்மன் ஆலயமணி ஓசை ஓம் சக்தி…….. மாலை ஆறு மணி ஓம் சக்தி… என்று முடிவடைய ,



" பட்டா பகல்ல தூங்கி சாயங்காலம் எழுந்துட்டு விடிஞ்சிருச்சானு கேக்குறியே? உனக்கே நியாயமா இது….! என முகிலன்,


"அது வந்து மாமா…. கணக்கு பாடம் நல்ல படிக்கணும்னு யோசிச்சிட்டே இருந்தேன அப்டியே தூங்கிட்டேன்…." சேமியா,


" சரி சேமியா வட்டத்தின் பரப்பளவு , சுற்றளவு சூத்திரம் சொல்லு ? முகிலன்,


'என்ன மாமா திடீரென இப்படி எல்லாம் வினவினா எப்படி சொல்லுவேன். நமக்கு தான் சமாளிக்கிறது அத்துபடி ஆயிற்றே….. !

சமாளிச்சிடு சேமியா ' என்று மனதிற்குள் சேமியா ,


" சொல்லுறேன்…….. மாமா பைவ் ஆர் வர்க்கம் " டுபை ஆர் (தூக்கத்தில் அரசல் புரசலாக கேட்டது இது தான் ) என்று சேமியா ,


முகிலனுக்கும் பை என்று காதில் விழ எங்கே "எழுதி காமி "என்றான் சந்தேகத்தில் ,


சேமியாவும் தைரியமாக எழுதினாள். RRRRR2 , 25R எழுதிட்டேன். " பாரு மாமா " ,


நோட்டை வாங்கி பார்த்தவன் ' என் மாமன் மகள் இப்டி மக்கா இருக்காளே ' மனதில் எண்ணியவன். சேமியா "இங்கே வா உனக்குக் இருக்கும் அறிவுக்கு நீ எங்கயோ இருக்கனும் " என்று அருகில் அழைத்து கையை குடு சேமியா வாழ்த்துக்கள்……! ,


சேமியாவும் ஆர்வமாய் கையை நீட்டினால் இடது கையால் அவள் கையை பிடித்து வலது கையால் முகிலன் வலிக்க கிள்ளினான்.


"ஐயோ அம்மா வ..லி..க்கு..து… ! என்று கத்தி விட்டாள். சேமியா,



"மக்கு கழுதை என்ன டி பண்ணி வைச்சிருக்க…. ? முகிலன் ,


நான் சொல்லு போது நீ எதும் சொல்லலயே…! சேமியா ,


சொல்லும் போது சந்தேகம் அதுக்கு தான் எழுத சொன்னேன்.

நீ என்ன எழுதி வச்சிருக்க இருக்க இங்கிலிஷ் எழுத்து R உம் 2 5 இது எழுதி குழப்பி வைச்சி இருக்க ….. ,


இப்பதான் புரியுது "அம்மணி பள்ளிக்கூடத்துலயும் வீட்லயும் நல்லா தூங்க வேண்டியது பரீட்சைய கோட்டை விடு வேண்டியது " ,


சேமியா ' மாமா எப்டி கரெக்ட்டா சொல்லுறாங்க ? ' மனதில் நினைத்துக் கொண்டு முட்டைகண்களை நன்றாக உருட்டிக்கொண்டாள் .


"இந்த கண்ணு தானே தூங்குது , பாட நேரத்துல தூங்கு பார்ப்போம்.

கண்ண நொண்டிபுடுவேன்" . என்று கருவினால் மனதில் முகிலன் ,


சேமியா தயவுசெஞ்சு ஒழுங்கா படிக்க முயற்சி பண்ணு மாமா பாவம் டி

உனக்காக தானே கஷ்டப்படுறதே எனக்கு புத்திமதி கூறினான்.


சரி பாடத்துக்கு வருவோம் .

வட்டத்தை பற்றி முதலில் இருந்த முழுமையாக விளக்கினான். ஒன்றுக்கு இரண்டு தடவை , " புரிந்தது மாமா" என்றால் சேமி


"நானும் நினைச்சேன் பை பைனு சொல்லும் போது கோணிபை, சாக்கு பை , மஞ்சள் பை , கட்டை பையா இருக்கும்னு மாமா ".


"ஐயோ மாரி ஆத்தா மறுபடியும் முதல்ல இருந்த " என்று தலையில் கையை வைத்தான் " முகிலன்


"இல்ல இல்ல மாமா புரிஞ்சுது இப்போ " என்றாள் சேமியா


அப்ப்ப்பா….. நிம்மதி டி சரி சேமிமா உன் சின்ன புள்ள தனம் எல்லாம் இனி வேண்டாம் டி கொஞ்சம் வளர்ந்த பொண்ணு மாதிரி நடந்துக்கோ மாமா பாவம் உனக்காக தானே கஷ்டப்படுறதே. …! மறுபடியும் ஒரு முறை கூறினான். முகிலன்,


"சரி மாமா " என்று கிளம்பி விட்டாள். சேமியா , அவள் கிளம்பியதும்

கதிர் மற்றும் சோமு வந்து சேர்ந்தார்கள்.


"சேமியா என்னடா சொன்ன ?" கதிர்,


"நீ வேற டா அதெல்லாம் இப்ப கேட்க மாட்டேன். அதான் முன்னாடி உன்கிட்ட சொல்லிட்டேனே"….! என்றான் முகிலன் ,


"அப்புறம் என்னாச்சு சேமியா ஏன் கத்தினா ?" என்று ஆர்வத்துடன் சோமு ,



"கிள்ளி வெச்சுட்டுடேன் டா பார்முலா கூட தப்பா சொல்லுறா தப்பா எழுதுறா டா முடியலடா " நடந்ததை விளக்கினான் முகிலன்,


இருவரும் வயிறு குலுங்க சிரித்தனர் . "இதுக்கு அப்புறம் அவள தூங்க விடாமல் பார்த்துக்கொள் " என்றான் கதிர் ,



"கணினி வகுப்பு பரீட்சை எழுதி முடிச்சிட்டோம் . முடிவு வந்து இருக்கும்

நாளை அங்கு செல்வோம் " . சோமு


"அதெல்லாம் எப்பயோ வந்துட்டு சோமு " சேமிக்கு பொருட்கள் வாங்க கடைக்கு போன நேரம் நம்ம சார பார்த்தேன். அப்பவே சொல்லிட்டாரு

நம்ம மூவரும் பாஸ் பண்ணிட்டோம்னு "என்றான் . முகிலன் ,


"அப்புறம் யேன்டா எங்ககிட்ட சொல்லல?" என்று சோமு கேட்க ,


"சொல்லலாம்னு தான் முகிலன் நினைச்சேன் ஆனா அதுக்குள்ள என்ன என்னமோ நடந்திருச்சி என முகிலா ?" என்றான் கதிர் ,


"ஆமா டா "என்றான் முகிலன்,


"வாங்கடா எல்லாம் வீட்டுக்கு கிளம்புவோம். மதி அம்மா காய்ந்த துணி எடுக்க பார்த்துட்டு இருக்காங்க "என்றான் கதிர்,


" வருங்கால அத்தைக்கு என்னமா மாரியதை பண்ணுற கதிரு " என காதில் கிசுகிசுத்தான் முகிலன் ,


சோமு கண்டுகொள்ளவில்லை சித்தி இருப்பதால் கீழே இறங்கிவிட்டான்.


தத்தமது இல்லத்திற்கு சென்றனர்.


சேமியாவுக்கு மாமாவின் இன்னும் ஒரு முகம் இதுதானா என்பது போல் தோன்றியது. முகிலன் கிள்ளி வைத்து அடையாளம் வெண்ணிற கைகளுக்கு சிவப்பாக காட்சி அளித்தது.


" மாமாவ சும்மா விட கூடாது எதாவது பண்ணணும் . உனக்கு பாடம் எடுக்க மாட்டேனு மாமா வாயலயே சொல்ல வைக்கிறேன் " என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். தனக்குள் ,


"பத்மாவ கூட இப்படி கிள்ள விட்டது கிடையாது". என்று கருவிக்கொண்டாள். சேமியா


முகிலனோ பாவம் கிள்ளிவிட்டோம் . வலிகிறதோ என்னவோ? என்று நினைத்துக் கொண்டிருக்க , அவள் போட்டிருக்கும் திட்டம் அவனுக்கு எங்கே தெரியும் ? சேமியாவுக்கு நான் பாடம் கற்பிக்கிறேன் .என்று தெரிந்தால் போதும் அவ்வளவு தான்…..! கதிர் பெயரை சொல்லி சமாளித்து வைத்து இருக்கிறார் சண்முகம் மாமா ,


பத்மா அத்தை மனது மட்டும் மாற்றிவிட்டால் போதும் என்று எண்ணிக்கொண்டான் .


இன்னைக்கு சேமியா கிள்ளுவதற்காக தொட்டு பார்த்தது களிப்பு வேறு .....!


பூவின் அனுமதி வேண்டி

பூவை நனைக்கும்

பனியை காத்திருப்பேன்

மார்கழி மாதம் வரை. ….


மறவாது உங்க கருத்துக்களை பகிருங்க தோழாஸ் 💘


Thamil kawshi 😍
உங்களில் ஒருத்தி 😍
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top