• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னுரை--******* கதைக்களம் உருவாக அடிப்படை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
இவ்வளவு தீவிரமாக தகவல்களை திரட்டி எழுதும் பொழுது நாங்கள் அதை எளிதாக படித்துத் தெரிந்துக் கொள்ள சந்தர்ப்பம் அமைவதற்கு மகிழ்ச்சி அனிமா. வரவேற்கிறேன்.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Welcome anitha dear????
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Technology misuse panarathu pattaya story honey
எனக்கே இதை எப்படி define செய்வது என்று தெரியவில்லை.

பெற்றோர்கள் பிள்ளைகள் கையில் அளவில்லா இன்டர்நெட், மொபைல் கொடுத்து விட்டு தாங்கள் கொடுத்திருப்பது ரைட்ஸ் இல்லை freedom என்று உணராத நிலை.

இது ரெண்டு குழந்தைகளை observe செய்த போது எந்த அளவிற்கு அவர்கள் மொபைல் addict ஆகி வாழ்வை இழந்து கொண்டு இருக்கிறார்கள் என்று கண்டு வருந்தியது.

ஸ்கூல் மிக நன்றாக படித்த பெண் பிள்ளை.அவர்கள் அம்மா ஸ்கூல் ப்ரினிசிபால்.நன்றாக படித்த பெண் இன்று எந்நேரமும் கையில் போன்,நண்பர்களுடன் வாட்ஸ் அப் அரட்டை, முகநூல் என்று போதை மருந்துக்கு அடிமையானது போல் இருக்கும் நிலை.ஸ்கூலில் மொபைல் அதிகம் பார்க்கிறாள் என்று மொபைல் பிடித்து வைத்து கொண்டு முதல் ரேங்க் எடு என்று சொல்லி இருக்கிறார்கள்.அந்த மொபைல் மீண்டும் வாங்க என்று படித்து முதல் ரேங்க் எடுத்த பெண்,மொபைல் கைக்கு வந்ததும் மீண்டும் அதனுடன் ஐக்கியமாகி விட்டாள்.


இன்னொரு பையன் மிகவும் தெரிந்தவன்.சொந்த வீட்டை விட்டு மகன் படிப்பிற்காக வாடகை வீட்டில் இருக்கும் பெற்றோர்.மகன் டாக்டர் ஆக வேண்டும் என்று கனவு கண்டு 5 லட்சம் கொடுத்து நீட் எக்ஸாம்க்கு சேர்த்தார்கள்.இன்றோ மகன் கவனம் மொபைல் மேல் மட்டுமே உள்ளது. முதல் ரேங்க் மட்டுமே எடுத்து வந்தவன் மார்க் 40 தாண்டவில்லை.

படிப்பு கெடுகிறதே என்று மட்டும் இல்லை காமத்திற்கு காதல் என்று பெயர் கொடுத்து,இரவுகளில் ஆடை இல்லா போட்டோ எடுத்து ஷேர் செய்து அது பரவி, பெண் தற்கொலை செய்து கொண்ட பல வழக்குகளை படிக்கும்போது எந்த தைரியத்தில் இந்த பெற்றோர்கள் குழந்தைகள் கையில் மொபைல் அதுவும் 40 ஆயிரம் ரூபாய் மொபைல் கொடுத்து உள்ளார்கள் என்று திகைக்காமல் இருக்க முடியவில்லை.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண்.அவர்கள் பெற்றோர் கடின உழைப்பாளி.காய் கரி தெருவில் விற்பவர்கள்.வேலையில் சேர்ந்ததும் அந்த பெண் முதல் வாங்கியது 30 ஆயிரம் ரூபாய் போன்.

இப்படி இன்றைய தலைமுறை எதை நோக்கி போகிறது என்பது மட்டும் இல்லாமல் இப்படி சிக்கும் பிள்ளைகளின் வாழ்வை கேள்விக்குறியாக்க நிறைய முதலைகள் சுற்றி கொண்டு இருக்கிறது.

மொபைல் காதல் என்று புது ட்ரெண்ட் வேற வந்து இருக்கிறதாம்.

இதன் excess அதிக பட்ச addiction தான் கதையின் கரு.

மொபைல் தானே,ஒரு கேம் தானே, ஒரு வீடியோ தானே என்று ஆரம்பிக்கும் இந்த பழக்கம் பல குற்றங்களுக்கு வழி வகுக்கிறது.

மேற்சொல்லப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் செய்த அரக்கர்கள் அனைவரின் மொபைல் போன் பல கன்றாவிகளுக்கு பயன் படுத்த பட்டு உள்ளது.அதன் அதீதம் தான் தான் காண்பதை practical லாக இன்னொரு பெண்ணிடம் செய்ய தூண்டுவதாக மனோதத்துவ நிபுணர் என்னிடம் சொல்லியது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top