• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னை ஆளும் காதலே 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Theeba

நாட்டாமை
Author
Joined
Dec 4, 2019
Messages
46
Reaction score
174
காதல் 10

மறுநாளே பெங்களூரூலிருந்து வந்திறங்கினாள் மிருணாளினி. அவளது தாய் அம்ருதாவின் சாயல். ஆனால், அவரைவிட நிறத்தில் சற்று வெண்மை அதிகம். பார்ப்பவரை கிறங்க வைக்கும் அழகு. நீண்ட விழியும் வளைந்த புருவமும் அவளது ஸ்பெஷல். ஸீரோ சைஸ் உடலமைப்பு. இடையை இருந்த கூந்தலை கேர்லிங் செய்து விட்டிருந்தாள். அல்ட்ரா மாடல் பெண்ணவள். அவளது உடையும் மொடேர்னாகவே இருக்கும். தனது அழகில் எப்போதும் கர்வம் அதிகம்.
தன் அழகிற்கு ராஜகுமாரனே கணவனாய் வருவான் என்று தந்தையைப் போலவே பேராசை கொண்டவள். அதனாலேயே காலேஜில் தன் பின்னால் சுற்றிய யாரையும் அவள் ரசிக்கவில்லை. தன்னை நெருங்க விடுவதுமில்லை. தன் அழகிற்கு அவர்கள் எல்லாம் தனது காலைப் பிடிக்கக் கூடத் தகுதியற்றவர்கள் என்பது அவளது கணிப்பு.

ஊருக்கு வந்து இறங்கிய உடனேயே தனஞ்சயன் வீட்டிற்கு வந்துவிட்டாள். வேதாசலம் தம்பதிகளுக்கு மருமகன் மீது வெறுப்பும் கோபமும் இருந்தாலும் தம் மகள் வயிற்றுப் பேர்த்தி மீது அளவற்ற பிரியம் இருந்தது. அவள் வந்ததும் மகிழ்ச்சியில் அவளைத் தங்களுடன் இருத்தி அளவளாவினர். அவளுக்கும் அவர்கள் மீது பாசம் இருந்தாலும் இப்போது அவள் வந்த வேலையே வேறு என்பதால்
“சரி தாத்தா, நான் அப்புறமா வந்து உங்ககூட பேசுறன். இப்போ தனாத்தானை பார்த்திட்டு வாறன். அவர் லண்டன் போக முதல் பார்த்தது. ஃபோர் இயர்ஸ் ஆச்சு.” என்று கூறிவிட்டு மாடியிலிருந்த அவனது அறைக்குச் சென்றாள்.

அன்று ஞாற்றுக்கிழமை என்பதால் ஆபிஸ் போகவேண்டிய தேவை இல்லை. எனவே உடற்பயிற்சியை முடித்து விட்டு தனது ரூமில் ரிலாக்ஸாக அமர்ந்து மொபைலில் அவனுடைய பாப்புவிற்கு மெசேஜ் அனுப்பி விட்டு ருவிற்றரில் வந்த பதிவுகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

அவன் அமர்ந்திருந்த சோஃபாவில் நெருங்கி வந்து அமர்ந்தவள், அவனது புஜங்களைப் பற்றியபடி
“தனாத்தான்..” என்று தன் இனிய குரலை மேலும் குழைவாக்கி அவனை அழைத்தாள்.
அந்த இடத்தில் வேறு யார் இருந்தாலும் அவளது அழகும் அந்தக் குரலும் அதன் நளினமான குழைவும் அப்படியே அவர்களை சொக்கிப் போகச் செய்து அடிமையாய் ஆக்கியிருக்கும்.
ஆனால், அங்கே இருந்தது தனஞ்சயனல்லவா? சும்மாவே அவன் அழகால் ஈர்க்கப்படாதவன். இப்பொழுது அவன் மனதில் பேரழகியாக, மகாராணியாக வீற்றிருக்கின்றாள் நிசாந்தினி. இப்பொழுது உலக அழகியே அவன் எதிரில் வந்தாலும் அவனுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எனவே அவளது கையை மெதுவாக விலக்கி விட்டவன்,
“எப்போது பெங்களூரில் இருந்து வந்தாய்? எக்ஸாம் எல்லாம் நல்லா எழுதினாயா?” என்று கேட்டான்.
“எக்ஸாம் ஓகே..ஏர்லி மோர்னிங்தான் வந்தேன். உடனேயே உங்களைப் பார்க்க ஓடி வந்திட்டேன்.” என்றாள்.

அவன் உடற்பயிற்சி செய்வதற்கு வசதியாக அணிந்திருந்த கையில்லாத பனியன் அவனது முறுக்கேறிய உடலின் திண்மையையும் உடற்பயிற்சி மீது அவன் கொண்டிருந்த நேசத்தையும் பறைசாற்றியது.
அதில் கவரப்பட்டவள் அவனது புஜத்தைத் தனது கைகளால் தொட்டு
“வாவ் தனாத்தான் எவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கிறிங்க.” என்றாள்.
“தாங்ஸ்” என்று வாய் வார்த்தையாக சொன்னவன், எழுந்து மொபைலை கட்டிலில் போட்டுவிட்டு குளியலறைக்கு போக தயாரானான். அவனது கைகளை விடாமல் பற்றியபடியே சென்றவள் “என்னத்தான்.. நான் வந்தது உங்களுக்கு ஹாப்பி இல்லையா? வீட்டில் அப்பா கூடவே சரியா பேசாமல் உங்களைப் பார்க்க ஓடி வந்தால் நீங்க பேசவே மாட்டேங்குறிங்க..”
“ஓகே.. நான் ஃபிறஷ்ஷப் ஆகிட்டு வாறன். வந்து உன்கூட பேசுறன். ஓகே யா? இப்போ வெளியில வெயிட் பண்ணு வாறன்” என்று விட்டு அவன் குளியலறைக்குள் புகுந்து விட்டான்.

சில நொடிகள் அவன் உள்ளே போவதை வெறித்துப் பார்த்து நின்றவள் திரும்பி வெளியே போக எத்தனித்தாள். அப்போது அவன் கட்டிலில் போட்டு விட்டுச் சென்ற மொபைலில் மெசேஜ் வந்ததுக்கான ஒலி கேட்டது. திரும்பி வந்து மொபைலை எடுத்தாள். அவனது மொபைலில் தெரிந்த வோல்பேப்பர் அவளைக் கொதிப்படைய வைத்தது.

அவன் நேற்று ஹோட்டலில் நிஷாந்தினியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்திருந்தான். அதனையே தனது மொபைல் வோல்பேப்பராக செட் பண்ணியிருந்தான்.

'ஓகோ… இவள்தானா அப்பா சொன்னவள்? தனாத்தானை பிடிச்சிருக்கும் பீடை. என் அழகு முன் இவளெல்லாம் ஒன்றுமேயில்லை. முதல்ல இவளை ஒழிக்கணும். அப்போதான் நான் அவரை அடையலாம்' என்று எண்ணியவள், வந்திருந்த மெசேஜை பார்த்தாள். பாப்பு என்ற பெயரில் வந்திருந்தது. 'குட்மோர்னிங் மாமா. இன்று மோர்னிங் எனக்கு கிளாஸ் இருக்கு. ஆஃப்ரனூன் ஹோல் பண்றன்' என்று இருந்தது.
'மாமாவா..? இருடி. நான் யாருன்னு உனக்குக் காட்டுறேன். தனாத்தானை இதுவரை நான் விரும்பியதில்லை. பட் இப்போ அவர் எனக்கு வேண்டும். நான் பிக்ஸ் பண்ணிட்டேன். எப்படியாவது அவரை நான் மேரேஜ் பண்ணி இந்த சொத்துக்கெல்லாம் ராணியாவன். உன்னை அவரிடம் இருந்து விலக்கி வைப்பதே என் முதல் வேலை' என்று உள்ளூரக் கறுவியவள், வந்திருந்த மெசேஜை அழித்துவிட்டு ரூமில் இருந்து வெளியேறினாள்.

குளித்துவிட்டு ரெடியாகி வந்தவன் தன் பாப்பு ரிப்ளை அனுப்பியிருப்பாள் என்று ஆர்வத்தோடு மொபைலை எடுத்துப் பார்த்தான். ம்கூம் எதுவும் வரவில்லையே. என்னாச்சு பாப்பு என்று யோசித்தவன் 'என் பாப்பு ஏன் ஒரு ரிப்ளை கூட அனுப்பல. ஐ மிஸ் யூ செல்லம்' என்று மீண்டும் மெசேஜ் அனுப்பிவிட்டு கீழே வந்தான். அங்கே கவிப்பிரியாவும் மிருணாளினியும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

கவிப்பிரியாவிற்கு சிறு வயது முதல் மிருணாளினி மீது ஒரு கிரஸ் என்றே சொல்லலாம். அவளது அழகு எப்போதும் கவிப்பிரியாவை வியக்க வைக்கும். இதனை நன்கு புரிந்து கொண்டிருந்த மிருணாளினியும் தான் செய்யப்போகும் காரியத்திற்கு துணையாக அவளை இணைத்துக் கொண்டாள். வந்தவுடனேயே மிருணாக்கா என அழைத்தவளிடம்
“எப்போதும் நான் உன் அக்காவாக மட்டுமே இருக்கணும் என்று ஆசைப்படுகின்றாயா?” என்று மறைமுகமாகக் கேட்டாள். அவளும் மிருணாளினியின் மறைமுக கேள்வியின் அர்த்தத்தை உடனேயே புரிந்து கொண்டாள். இந்த அழகு தேவதை என் அண்ணியாக வந்தால் எவ்வளவு சந்தோசம் என்று பூரித்துப் போனாள். ஆனால் வாழ்வை இனிமையாக்குவது அழகல்ல அவர்கள் கொண்டுள்ள குணமும் அவர்களின் நடத்தையும் தான் என்பதை அவள் புரிந்து கொள்ளும் பக்குவம் இன்னும் ஏற்படவில்லை.
“ஐயோ மிருணாக்கா, நிஜமாத்தானா? நீங்க அண்ணியா வந்தால் நான் எவ்வளவு ஹாப்பியாக இருப்பேன் தெரியுமா?”
“ம்ம்” என்று பெருமையுடன் தலையாட்டியனாள்.
கீழே வந்த தனஞ்சயன் அவரது அறைக்குள் இருந்து வந்துகொண்டிருந்த பாட்டியிடம் தான் வெளியில் பிரண்டைப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறி புறப்பட்டான். உடனேயே துள்ளி எழுந்த மிருணாளினி
“தனாத்தான் இன்று ஃபுல் டைம் நீங்க என் கூடத்தான் ஸ்பென்ட் பண்ணனும். நான் எவ்வளவு ஆசையா வந்தன்”
“இல்லை மிருணா, நான் இன்று வருவதாக அவனிடம் கூறிவிட்டேன். அவன் எனக்காக வெயிட் பண்ணுவான்”
“பாருங்க பாட்டி.. நான் எவ்வளவு ஆசையா அத்தானைப் பார்க்க ஓடி வந்தன். இவர் என்னை விட்டு தன் ஃபிரன்டை பார்க்க போறார்” என்று ராஜலட்சுமியை ஆதரவுக்கு அழைத்தார்.

ராஜலட்சுமிக்கும் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் தன் பேர்த்தியை தனஞ்சயனுக்கே கட்டி வைக்கும் ஆசை இருக்கு. அதன் மூலம் தன் குடும்பம் எப்போதும் பிரியாமல் இருக்கும் என்று நினைத்தார். மிருணாளிக்கு அவளது தந்தையைப் போல் பேராசையும் பகட்டும் இருந்தாலும் இந்த குடும்பத்திற்குள் வந்ததும் அவளது குணம் மாறிவிடும். தனது மருமகள் சுபத்திராவைப் போல இவளும் ஆளுமையுள்ளவளாக வாழ வேண்டும் என்று அந்தப் பாசமுள்ள மனம் ஆசைப்பட்டது. அதற்கெல்லாம் இருவரும் நெருங்கிப் பழகினாலே முடியும் என நினைத்தவர்,
“தனா, பாவம் பிள்ளை… இவ்வளவு நாளும் எங்கேயோ ஒரு ஊரில் யாரும் இல்லாமல் தனியா இருந்து கஸ்ரப்பட்டு படிச்சிட்டு வந்திருக்கு. கொஞ்சம் அதுக்கும் ரிலாக்ஸாக இருக்குமே… அவளையும் வெளியில கூட்டிப் போய் வாவன் தனா..” என்று நைச்சியமாக கேட்டார்.
ஏதோ சொல்ல வாயெடுத்தவன், பாட்டியின் முகத்தைப் பார்த்ததும் அதைவிடுத்து
“ஓகே வா… பட் அதிக நேரம் என்னால் உன் கூட சுத்த முடியாது. எனக்கு ஆஃப்ரனூன் ஒரு இம்போர்டன்ட் மீட்டிங் இருக்கு.” என்றவன் விறுவிறுவெனத் தன் காரிற்கு சென்றான்.
'ஓகோ… அந்த சனியனைப் பார்ப்பதுதான் உங்களுக்கு இம்போர்டன்டா? இன்று எப்படி அவளை சந்திக்கிறிங்க என்று நானும் பார்க்கிறேன்' என்று மனதிற்குள் கறுவியவள் அங்கிருந்தவர்களுக்கு டாடா காட்டிவிட்டு அவன் பின்னால் ஓடினாள்.

காரில் செல்லும்போது
“தனாத்தான் நான் இன்று எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? இன்று முழுவதும் இருவரும் ஜாலியா சுத்தலாம். முதல்ல தியேட்டர் போவோம். நல்ல ரொமாண்டிக் மூவிஸ் போகும் தியேட்டருக்கு விடுங்க தனாத்தான்” என்றாள்.
அவனும் கைபோன போக்கில் ஏதோ ஒரு தியேட்டரில் தனது காரை விட்டான். உள்ளே சென்று அமர்ந்ததும் முதல் வேலையா அவனை நெருங்கி அமர்ந்தவள் தனது மொபைலில் விதவிதமா செல்ஃபி எடுத்தாள்.

பின்னர் அவனது கையுள் தனது கையை கோர்த்தவள், காதலாய் அவனது முகத்தைப் பார்த்து
“தனாத்தான், இப்படியே நாம் இருவரும் காலம் முழுவதும் காதலுடன் உலகம் பூரா கைகோர்த்து சுத்த வேண்டும்” என்றாள்.
சடாரென அவளது கையை விலத்தியவன்
“என்ன உளறுகிறாய் மிருணா, நாம் காதலர்கள் இல்லை. நீ என் அத்தை மகள். அவ்வளவுதான் நமக்குள்ளான உறவு. அதைத் தாண்டி எதுவும் இல்லை. இனி இருக்கப் போவதுமில்லை” என்றான்.
“உளறவில்லை தனாத்தான். என் லவ் உங்களுக்குப் புரியவில்லையா? இப்போ நீங்க என்னை லவ் பண்ணாவிட்டாலும் பரவாயில்லை, இனி பண்ணுங்க. ஐ லவ் யூ” என்றவள் அவன் கன்னத்தில் எக்கி முத்தமிட்டாள்.
அவளை தள்ளி விட்டவன்,
“ஷட்டப் மிருணா.. இனி ஒருமுறை இப்படி நடக்காதே.. எனக்கு எப்போதும் பொறுமை இல்லை… வா போகலாம்..” என்று கோபத்துடன் மொழிந்தவன் எழுந்து வெளியேறினான். அவன் பின்னாலேயே வந்தவள் அவன் காரிற்குள் ஏறி அமர தானும் ஏறியபடி
“தனாத்தான், நான் என்ன தப்பாக சொல்லிவிட்டேன். என் லவ்வைத் தானே சொன்னேன். அதைப் புரிந்து கொள்ளாமல் பேசுறிங்க”
“இதோ பார் மிருணா, என் மனதில் வேறு ஒருத்தி இருக்காள். அவள்தான் என் லைவ். சோ நீ வீணா எந்தவித ஆசையையும் வளர்த்துக்காதே.” என்றான்.

ஏற்கனவே அவள் அறிந்ததுதான் என்றாலும் அவன் வாயால் அதைக் கேட்கவும் அவளுள் பொறாமையும் எரிச்சலும் கனன்றன.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top