• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னை ஆளும் காதலே 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Theeba

நாட்டாமை
Author
Joined
Dec 4, 2019
Messages
46
Reaction score
174
கோகிலம் என்னும் தனஞ்சயனின் மாளிகை அன்று விழாக் கோலம் பூண்டிருந்தது. அவ் வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் பரபரப்புடன் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். ஏற்கனவே அழகாக இருந்தத அவ்வீட்டை மேலும் அழகுபடுத்தும் விதமாக மலர்களும் அழகிய வண்ண விளக்குகள் கொண்டும் அழகுபடுத்திக் கெண்டிருந்தார்கள். அதனை மேற்பார்வை செய்து பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தனர் சிதம்பரம் தம்பதியினர். சுபத்திரா யாருடனோ தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். அவரிடம் வந்த பிரசாந்த்
“அம்மா..” என்று மெல்ல அழைத்தான். எதிரில் இருந்தவரிடம் அப்புறமாகப் பேசுவதாகக் கூறிவிட்டு வைத்தவர், அவனிடம்
“என்ன பிரசாந்த் நான் சொன்ன வேலையெல்லாம் முடித்துவிட்டாயா?” என்று கேட்டார்.
“எல்லாம் முடிச்சாச்சு. மாலை மட்டும் ஈவினிங் போய் வாங்கி வந்தால் ஓகே…”
“அப்புறம் என்ன?”
“என் பிரண்ட்… ராகேஷ் தெரியும் தானேம்மா.. பெங்களூரில் படிக்கிறானே. அவன் இப்போ ஊருக்கு வந்திருக்கான். அவனையும் ஃபங்ஷனுக்கு இன்வைட் பண்ணலாம்?”
“இன்வைட் பண்ணவும் என்னிடம் கேட்கணுமா? தாராளமாய் கூப்பிடு” என்றவர் வேறு ஒருவருக்கு அழைப்பை ஏற்படுத்தி பேச ஆரம்பித்தார்.
அன்று தனஞ்சயனுக்கும் மிருணாளினிக்கும் நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடாகிக் கொண்டிருந்தது.

அன்றுடன் தனஞ்சயன் சிங்கப்பூரிலிருந்து திரும்பி வந்து சில மாதங்கள் ஓடி விட்டன. ஆமாம் அவன் நிஷாந்தினியின் வீட்டிற்குப் போய் அவளது திருமணச் செய்தியைக் கேட்டு மனதில் ரணத்துடன் திரும்பி வந்து சில மாதங்கள் ஓடிவிட்டன.

அவனால் நடந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை. யாரைத் தன் உயிராகக் கருதி காதலித்தானோ, யார் இல்லாமல் இனி தன்னால் ஒரு நிமிடம் கூட வாழ்ந்து விட முடியாது என்று எண்ணியிருந்தானோ அவளே அவனை நிராகரித்தது அவனை நிலைகுலையச் செய்து விட்டது. அவளுடன் காதல் மொழி பேசி மகிழ்ந்திருந்த நாட்கள் அவன் கண்முன்னால் விரிந்து அவனை இம்சித்தன. என்னை நிராகரித்து விட்டாளே, அவ்வளவுதான் அவள் காதலா? ஏன்டி இப்படி பண்ணினாய். ஏன் என்னை விட்டு விலகிப் போனாய். நான் உன் மீது எவ்வளவு காதலை வைத்துள்ளேன் என்று தெரிந்த பின்னும் எப்படியடி என்னை விட்டுப் போக உனக்கு மனம் வந்தது. இன்னுமொருவனை மனசார ஏற்க எப்படி உன்னால் முடிந்தது.

என் உயிரில் கலந்த நீ இன்று என் உயிரையே பறித்து விட்டாயே…

என்னவள் என்று எண்ணியவள் அமெரிக்கா செல்லும் ஆசையில் என் காதலைத் துச்சமாக மதித்து விட்டாளே. என்னிடம் கேட்டிருந்தால் அமெரிக்கா என்ன இந்த உலகத்தையே சுற்றிக் காட்டியிருப்பேனே என்று தினம் தினம் தனக்குள் எண்ணி மருகினான்.

அவனால் அன்றிலிருந்து யாருடனும் சகஜமாகப் பேச முடியவில்லை. தனக்குள் தானே புதைந்து போய்விட்டான். ஆபிஸ் செல்வதும் வீட்டிற்கு வருவதும் மட்டுமே அவனது வழமையான பணியாயிற்று. காலை சாப்பாட்டு நேரத்தின்போது மட்டுமே அவனை வீட்டினர் காணக்கூடியதாக இருந்தது. அப்போதும் அவன் யாருடனும் ஒட்டாமலேயே இருந்தான். எந்தப் பேச்சிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்து கொஞ்சமாகக் கொறித்துவிட்டு எழுந்து சென்று விடுவான். மதிய உணவிற்கு வீட்டிற்கு வருவதே இல்லை. இரவு வெகு நேரம் கழித்தே வீட்டிற்கு வருவான். சுபத்திராவிற்கே அவனது நடவடிக்கை சற்று கவலையைத் தந்தது. அவனிடம் பேசிப் பார்த்தார். ஆனால், அவன் தனக்கு எந்தவித சஞ்சலமும் இல்லை என்று சொல்லவும் ஓரளவு சமாதானம் ஆனார். எதற்கும் அவனுக்கு ஏதும் மன சங்கடம் இருக்கிறதா என்று சில நாட்கள் அவதானித்தும் பார்த்தார். ஆனால், அவன் எந்தவித மாற்றமுமின்றி வழமை போன்று செயற்படவும் நிம்மதியாக இருந்து விட்டார். பாட்டிக்கும் கவிப்பிரியாவிற்கும் காரணம் தெரிந்த போதும் வெளிக்காட்டாமல் இருந்து விட்டனர்.

பல நாட்களுக்குப் பின் இன்று தனஞ்சயனின் வீட்டில் எல்லோரிடமும் சந்தோசம் தாண்டவமாடியது. அதற்குக் காரணம் இன்று தனஞ்சயனுக்கும் மிருணாளினிக்கும் நிச்சயம் செய்கின்றார்கள். ஆனால் மணமகனாக சந்தோசத்தில் மூழ்க வேண்டியவனோ தனக்கும் இன்று நடக்கவிருக்கும் நிச்சயத்திற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்பதுபோல தனது அலுவலகத்திற்கு புறப்பட்டான்.
அலுவலகம் செல்லத் தயாராகி வந்தவனைக் கண்ட சுபத்திரா
“தனா இன்று ஈவினிங் ஃபைவ்வுக்கு முன்னர் வந்திடு. ஃபைவ் தேர்ட்டிக்கு ஃபங்ஷன் ஆரம்பிக்கணும்” என்றார். அவருக்கு எந்தப் பதிலும் கூறாது வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு நகர்ந்து விட்டான்.

அவனுக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை என்பதை அப் பார்வை உணர்த்திச் செல்ல திகைத்துத் தான் போனார் சுபத்திரா.

எவ்வளவுதான் கண்டிப்பாக இருந்தாலும் சுபத்திராவிற்கு தனஞ்சயன் மீது தனிப்பிரியம். அவனுக்காக எதைச் செய்யவும் தயங்கமாட்டார். தன் மகனுக்கு மிருணாளினியைத் திருமணம் செய்ய வேண்டும் என மாமியார் அவரிடம் கேட்டபோது முதலில் மறுத்து விட்டார்.அவனது குணத்திற்கு மிருணாளினி ஒத்து வரமாட்டாள் என்று தட்டிக் கழித்தார். ஆனால் ராஜலட்சுமி விடவில்லை. ஓயாமல் சுபத்திராவைக் கேட்டுக் கொண்டே இருந்தார். ஒருநாள் மிருணாளினி தனஞ்சயன் மீது கொண்ட காதலால் அவன் கிடைக்கவில்லை எனவும் தற்கொலைக்கு முயற்சிசெய்து மருந்து குடித்துவிட்டதாக ரவிச்சந்திரன் தனது மாமியாருக்கு அழைத்துக் கூறவும் அடித்துப் பிடித்துக் கொண்டு அவளைக் காணச் சென்றனர். இவ்வளவு தூரத்துக்கு மிருணாளினி துணிந்து விட்டதால் தனஞ்சயனை எப்படியாவது அவளுக்குத் திருமணம் செய்து வைத்துவிடுமாறு தனது மருமகளிடம் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டார் ராஜலட்சுமி. இதற்குமேல் சுபத்திராவால் தட்டிக் கழிக்க முடியவில்லை. தனஞ்சயனிடம் பேசிவிட்டுச் சொல்வதாகக் கூறிச் சென்றார். தங்களது திட்டம் வெற்றியளித்த சந்தோசத்தில் தந்தையும் மகளும் கண்களால் ஜாடை காட்டியதையோ இவர்கள் வெளியேறியதும் துள்ளிக்குதித்து மிருணாளினி இறங்கியதையோ சுபத்திரா அறியவில்லை. ஆம், சுபத்திராவை சம்மதிக்க வைப்பதற்கு இப்படி ஒரு நாடகத்தை ரவிச்சந்திரனும் மிருணாளினியும் சேர்ந்து நடத்தியிருந்தனர்.

மறுநாளே சுபத்திரா தன் மகனிடம் தான் எடுத்த முடிவைக் கூறினாள். ஏதோ பேச வாயெடுத்த தனஞ்சயனை பேசவிடவில்லை. அதற்கு முதல் தானே முந்திக்கொண்டு “தனா, நான் முடிவெடுத்து விட்டேன். நீ என் பேச்சை மதித்து நடப்பாய் என்று நம்புகிறேன். வரும் முகூர்த்தத்தில் நிச்சயம் பண்ணலாம் என்று நினைக்கிறேன்” என்றார். தாயின் நம்பிக்கையான வார்த்தைகளை சிதைக்க முடியாமல் தடுமாறி நின்றான். அவனை ஒரு பார்வை பார்த்த சுபத்திரா “தனா, நீ யாரையேனும் லவ் பண்ணுகிறாயா?” என்று கேட்டார். அவன் மனக்கண்முன் நிஷாந்தினியின் முகம் தோன்றியது. ஆனால், தொடர்ந்து அவள் கடைசியாகப் பேசிய வார்த்தைகளும் நினைவடுக்குகளில் மீண்டும் வந்தன.
“தனா, ஏன் எந்த ஆன்ஸரும் சொல்லாமல் நிற்கிறாய்?”
“இல்லையம்மா… நான் யாரையும்… லவ் பண்ணல. ஆனால்..”
“லவ் பண்ணலைதானே? அப்புறம் மிருணாளினியை மேரேஜ் பண்ணிக்கோ. அவள் கொஞ்சம் அவள் அப்பா மாதிரித்தான். பட், நம்ம வீட்டுக்கு வந்ததும் உனக்கேத்த மாதிரி மாறிடுவாள்.” என்றார்.
எதுவும் பேசாது அமைதியாகத் தன் அலுவலகத்திற்குப் புறப்பட்டான்.

நாட்கள் தன் போக்கில் போக இதோ இன்று நிச்சயம் பண்ண நாள் குறித்துள்ளனர்.

தனஞ்சயன் வீட்டில் நிச்சயதார்த்தத்திற்கு தடல்புடலாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிக்கும் போது இங்கே நிஷாந்தினி வீட்டில் ஒரு பிரளயமே உண்டானது. சுபாஷினி மறைந்து ஒரு மாதமே ஆன நிலையில் ராசு ஜெயிலில் இருந்து திரும்பி இருந்தான். அவன் வந்த மறுநாளே திருமணம் செய்வதாக ஏற்பாடாகியிருந்ததால் அவனது குடும்பத்தினர் அவன் ஜெயிலில் இருந்து வந்ததும் உடனேயே அவனையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டனர்.

முதல்நாள் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மிக எளிமையாக கோயிலில் வைத்து தாலி கட்டி கல்யாணத்தை முடிப்பதென பேசினர். வீட்டினரைத் தவிர யாரையும் அழைக்கவில்லை. நிஷாந்தினியோ இவை எதைப்பற்றியும் சிந்திக்காமல் தன் அக்கா மகளுடன் தன் நேரத்தைக் கழித்தாள். அவள் அந்தக் குழந்தையுடன் இருக்கும்போது ராசு அவளுடன் பேச வந்தான். குழந்தையைக் கவனிக்கும் சாக்கில் அவனைத் தவிர்த்து வந்தாள். இது அவனுக்கு எரிச்சலைப் தோற்றுவித்தது. தன் தாயிடம் சென்று சில விடயங்களைப் பேசினான். அவரும் அது குறித்து தனத்திடம் பேசினார். தனம் குடும்பத்தினர் அந்த ஏற்பாட்டுக்கு உடன்பட்டனர். இவை எதையும் அறியாத நிஷாந்தினி குழந்தையே தன் உலகமென அதனுடன் இருந்தாள்.

அன்று மாலை தனம் வந்து குழந்தையைக் கேட்கவும் திகைத்து விட்டாள். அக் குழந்தை பிறந்த நேரம் முதல் இப்போதுவரை தனம் அதன் அருகிலேயே வந்ததில்லை. அவர் மட்டுமல்ல அதன் தந்தையான விக்னேஸ்வரனோ சஞ்யுகதாவோ கூட வரவில்லை. குழந்தை எப்படி இருக்கும் என்று பார்க்கக்கூட ஆசைப்படவில்லை அதன் தந்தை. இன்று திடீரெனக் கேட்கவுமே திகைத்தாள்.

“அத்தை பாப்பா…” என்றவள் மேற்கொண்டு பேசாமல் குழந்தையைத் தூக்கித் தனம் கையில் கொடுத்தாள். அவரும் அதனை வாங்கிக் கொண்டு விறுவிறுவென வெளி வாசலுக்குச் சென்றார். அங்கே வெளியில் செல்வதற்கு ஆயத்தமாக நின்ற கனகவல்லியிடம் கொடுத்தார். பின்னாலேயே வந்து நின்ற நிஷாந்தினி யோசனையுடன்,
“அத்தை பாப்பாவை எங்கே கூட்டிப் போறாங்க?” என்று கேட்டாள்.
“ஆங்.. அது இந்தக் கருமத்தை ஏதாவது அநாதை இல்லத்தின் வாசலில் போட்டுட்டு வரச் சொன்னேன். அதுதான் கொண்டு போறாங்க” என்றார் தனம்.

நிஷாந்தினி அதிர்ச்சியில் உறைந்தே போனாள்.
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,908
Reaction score
4,839
Location
Chennai
தனாவுக்கு நிச்சயம் நடக்குமா. குழந்தை ஆசிரமத்தில்விட போறாங்களா.இருவருமே பாவம் :love: :love: :love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top