• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ!அத்தியாயம் 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

JULIET

அமைச்சர்
Joined
Jan 26, 2018
Messages
1,590
Reaction score
2,083
Location
Chengalpattu
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ!

அத்தியாயம் 4


கோலங்கள். . . கோலங்கள். . .
அழகான கோலங்கள். . .
கோலங்கள் கோலங்கள். . . .
ஓ. . .ஓ ஓ ஓ ஓ . .. . ஓ. . . .
ஓ . . ஓ. . ஓ . . ஓ . . .ஓ. . .
பெண்ணே! எழுது . . . .
புது கோலம் எழுது. . . .

ஓ . .. ஓ. . . .ஓ .. .
என்று தன் காந்த குரலால் அலறிய படி அக்கோவில் வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட ஆயத்தமானாள் ஆரு. இந்த அலங்கோலத்திற்கு துணையாய் கீது வேறு . .!

"ஹேய் . . ஆரு சரியா போடுடி.. அந்த பூ இந்த புள்ளில இருந்து ஸ்டார்ட் பண்ணா தான் கரெக்ட்டா இருக்கும். ஒழுங்கா பாரு..!"

"ம்ம்ம். . ." என்று தான் வைத்த அந்த டைனோசர் போன்ற முட்டைகளை ஒரு முறை மேலும் கீழும் ஆராய்ந்தாள் அவள்....

பின் ஏதோ முடிவுக்கு வந்தவளாய் . . . "ஆமா . .. நீ சொன்னது சரி தான். . . நான் பாட்டிற்கு இந்த புள்ளில ஆரம்பிச்சிருந்தா கோலமே கன்றாவியா போயிருக்கும்.. . நீ அந்த பக்கம் இருந்து போட ஆரம்பி. நான் இந்த சைடு போடுறேன்.. ஓ . கே வா ?"

என்று முடிவு செய்து ஒரு வழியாய் கோலம் போட ஆயத்தம் ஆனார்கள் தோழியர்.

அப்போது இவர்கள் இருந்த பக்கம் வந்த லட்சுமி பாட்டி (கீதுவின் பாட்டி ) இவர்களிடம்,

"என்ன ராசாத்திகளா . . . ?!!! இன்னுமா கோலம் போட்டு முடிக்கல . . . ?!! ஒரு வாரம் ஆகுமா. . இல்ல வருஷமாகுமா. . . ?!" என அவ்விளம் பெண்களின் மூக்கை அழகாய் உடைத்தார் அந்த காலத்து இளைநி . . . .

"இதோ பார்ரா கிழவிக்கு குசும்ப. . ." -ஆரு

"ஹே சும்மா இருடி . ." -கீது

"போடி இவள . . நாமளே இப்போ தான் புள்ளியை வச்சி ஒரு கண்டத்தை தாண்டிருக்கோம். அதுக்குள்ள மைக் போட்டு ஊருக்கே நம்ம லட்சணத்தை சொல்லுது பாரு . . . இந்த கிழவியை சும்மா விடக் கூடாது! இன்னைக்கு இருக்கு இதுக்கு . . . " என்றபடி தன் துப்பட்டாவை இறுக்கமாய் முடிச்சு போட்டப் படி எழுந்தாள் ஆரு. . .

"நான் கோலம் போட்டு முடிக்கலைன்னா நீ என்ன உன் வீட்டுல விளக்கு வைக்காமையா இருக்க போறா. . ?!? இல்ல . . " என்று மேலே ஏதோ கேட்க போன ஆருவின் வாயை தன் கை கொண்டு மூடியவள். . .

"இதோ பாட்டி. . இன்னும் கொஞ்ச நேரத்தில முடிச்சிடுவோம் . . .நீங்க போங்க பாட்டி . .. " என்றபடி பல்லிளித்தாள் கீது .. .

"சரி தான். . . சீக்கிரம் ஆகட்டும். .. நான் பூஜைக்கு தேவையான சாமான்கள் சரியா இருக்கான்னு ஒரு முறை அர்ச்சகரை போய் பார்த்துட்டு வந்துருதேன். .." என்றபடி அவர் நடையை காட்டினார்.

அவர்கள் இருந்த ஏரியாவின் தெரு முனை பிள்ளையார் கோவிலின் முன் தான் இந்த கச்சேரி நடந்து கொண்டிருந்தது. பாட்டி தான் இவர்களை கோலம் போட அழைத்திருந்தார்.

அக்கோவில் ஒன்னும் அவ்வளவு பெரியது அல்ல. 10 அடிக்கு 15 என்ற ரீதியில் அமைந்திருந்த சின்ன கோவில். அங்கே சுற்றி குடியிருப்பவர்கள் தினம் தினம் பூஜை செய்து வழிபட்டு வந்து கொண்டிருக்கின்றனர்.

" ஒரு புன்னகை பூவே. . !
சிறு பூக்களின் தீவே. . !

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது. . .
உன் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது. . .
லவ் பண்ணு . .. லவ் பண்ணு . . . . "



என்றபடி சிறுவயது குழந்தைகள் ஓட்டும் சிறிய ரக சைக்கிளை ஓட்டியபடி வந்து கொண்டிருந்தான் அக்காதல் ரோமியோ ராஜேஷ்.

ஆருவை நோக்கி . . . ஆருவையே பார்த்தப்படி . . மெதுவாக. . . ஆமை வேகத்தில் ஊர்ந்த படி வந்தவன் மீண்டும் பாடினான் .

"ஒரு புன்னகை பூவே. . . !
சிறு பூக்களின் தீவே. . .!
நீ என்னை மட்டும் காதல் பண்ணு . . "


என்றபடி ஒரு சிவப்பு நிற ரோஜாவை ஆருவை நோக்கி வீசினான்.

கோலம் போட்டுக் கொண்டிருந்த ஆரு தூரத்தில் அவன் வரும் போதே கண்டு கொண்டாள்.

ஏதோ ஒரு பொடியனிடம் சைக்கிளை பிச்சை கேட்டு வாங்கி வந்திருப்பான் போலும். அதையும் ஒழுங்காக ஓட்ட முடியாமல் கஷ்டப்பட்டு அங்கேயும் இங்கேயும் . . முட்டி. . விழுந்து. . . தள்ளாடியபடியே வந்ததை தான் அவள் பார்த்துக் கொண்டிருந்தாளே. . .

அவன் வந்து கொண்டிருந்த தினுசில் அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. கஷ்டப்பட்டு தலை குனிந்தவாறே அதை மறைக்க அரும்பாடு பட்டாள் பெண் . பக்கத்தில் தான் கீது இருக்கிறாளே. . .! நானாக ஏதாவது செய்தால் கண்டிப்பாக இவள் என்னை கொன்றேப் போட்டு விடுவாள். சோ குளோஸ் மௌத்...! என்று கம் போட்டு ஒட்டிக் கொண்டாள் .

ஆனால் அந்த மன்மதனோ விட்டானா . . . ?!

அவள் மீது ரோஜாவை தூக்கிப் போட்டதும் இல்லாமல் . . . காதல் பாட்டு வேறு பாடுகிறான்.

ஹைய்யோ இந்த ரோஜா ஏன் கீதுவின் காலடியில் போய் விழுந்தது. . . பார்த்து விட். . ட். . ட். .டா. . ளோ . . . ? ! சரி தான். பார்த்துட்டாளே பக்கி. . . இனி இவன் செத்தான் . . என்று நினைத்தப்படி கீதுவை நிமிர்ந்து பார்த்தாள் ஆரு .

காதல் ரசம் சொட்ட. . . சொட்ட. . . அங்கே ராஜேஷ் தன் இரு கால்களையும் நிலத்தில் ஊன்றிய படி. . . கைகளை ஆட்டி ஆட்டி மீதி பாடலையும் பாடி க் கொண்டிருந்தான்.

"என் வாலிப நெஞ்சம். .
உன் காலடி கெஞ்சும். . .
சிறு காதல் பிச்சை போடு கண்ணு . .

நான் கெஞ்சி கேட்கும் நேரம் . . .
உன் நெஞ்சின் ஓரம் ஈரம் . . .
அச்சோ . . . அச்சோ. .. காதல் வாராதோ. . ?. . !

சூரியன் வாசல் வந்து ஐஸ்கிரீம் கொடுக்கும். . .
ஓடாதம்மா. . .வீழாதம்மா . . .
சந்திரன் உள்ளே வந்து சாக்லேட் கொடுக்கும். . .
சூதாதம்மா . . . ரீலுதாம்மா. . . "



பொறுத்து பொறுத்து பார்த்த கீது ,

"அடங்க மாட்டானே இவன். . . " என்றபடி எழுந்தே விட்டாள் .

அவனோ...
"உன் படுக்கை அறையிலே. . .
ஒரு வசந்தம் வேண்டுமா. . . ?!"


"பார்த்தியாடி நம்ம தெரு ரோமியோவை . . .?!" -கீது

"ஹம்ம்ம்ம்ம்......" இது ஆரு.

அவன்
"உன் குளியறையிலே . . . .
. . . . . . .. . . . . . . . . . . . . .. . . . ."


என்று தன் மீதி பாட்டை தொடர்ந்தவன் மேல். . . . தன் அருகே இருந்த தண்ணீர் நிரம்பிய வாளியை அப்படியே தூக்கி வீசினாள் பெண் கீது.. . !. . . .!

தண்ணீரோடு வாளியும் சேர்ந்து அவன் தலையில் அபிஷேகம் செய்ய. . . ..

"ஹைய்யோ . . . . . . அம்ம்ம் ம் ம் மா. . . . . . .!!!!!!" என்று கதி கலங்கியபடி விழுந்தே விட்டான். . . அந்த காதல் சிற்பம் கேட்பாரற்று தரையில் வீழ்ந்து கிடந்தது.

"எடுடி.. அந்த துடைப்பத்தை. . .! அய்யோ. . ! பாவம் ம் ம் ன்னு . . . சும்மா விட்டா . . . கழுதை பாட்டுலாம் பாடுது. . ."

துடைப்பத்தின் மறுமுனையின் கையில் அடித்தப்படி பஜாரியாய் நின்றிருந்தாள் கீது.

"என்ன திண்ணக்கம். . . உனக்கு. .. ?! என் மேலயே தண்ணீரை அடிக்கிற. . அது மட்டும் இல்லாமல் வாளியை என் தலை மேல போட்டு என்னை கொல்ல வேறு பார்க்கிற. . ?" தன் கை சட்டையை மடக்கியப் படி எழுந்தான் அக்காதலரசன்.

"என்னடா. . . ?! அடி ரொம்ப பலமோ. . ?!"

துடைப்பத்தை மறு கைக்கு மாற்றியப்படி கேட்டாள் அவ்வீராங்கனை கீது.

ஏ ஏ ஏ ய் ய் ய் ய் . . . ! -ராஜேஷ்.

ஏ யே ய் ய் ய் . . . . .!. . . . ! -கீது.

இருவரும் கத்திய கத்தலில் ,யார் குரல் ஓங்கி ஒலித்ததோ தெரியாது.

கோபத்தில் கீது. . . துடைப்பத்தை கொண்டு அவனை அடிக்க ஓ. . ஓ. . ஓ . . ங் . . ங் . .க . .. .. !!

அக்கணம். . . ஆண்மகன் கொஞ்சம் விழித்துக் கொண்டானோ. . ? !

அது நாள் வரை காமெடி பீஸ் போல் இருந்தவன். . . தன் ஐந்தரை அடி உயரத்திற்குமாய் . . அநியாயத்திற்கு நிமிர்ந்த படி நின்றான்.. ! அந்த பரந்து விரிந்த தோள்களும். . . முறுக்கேறிய கைகளும் . . . . முறுக்கி விட்டபடி இருந்த மீசையும் . . . ஆண்மை ததும்பும் வீரனாக காட்சியளித்தான்.

ஒரு நொடி. . . கீதுவினுள் பயத்தின் தென்றல் இதமாக . . . பதமாக. . . பட்டும் படாமலும். . . வீசி சென்றதோ. . . ?!

"ஹ்ம்ம். .. " அதை அலட்சியமாக உதறியபடி அவனை . . . அவளும் நிமிர்ந்து பார்க்க முயன்றாள். கொஞ்சம் கெத்தாகவே. . . !

அப்போது . . . அப்போது. . . எதுவோ இடம் மாறியதோ. . . எதுவோ தடம் புரண்டதோ . . ?! ஆனால் எதுவோ ஒன்று இனம் காண முடியாத நிகழ்வு நடந்தது. . .

மன்மதன் கள் மயக்கத்தில் தன் மலர் மாலையை ஆள் மாற்றி வீசி விட்டானோ. . . ? . . ?!

eiB2FKO57150.jpg

அவனும் நோக்கினான். . . அவளும் நோக்கினாள் . . .

செந்தீயாய் தொடங்கிய தகிக்கும் பார்வைகள். . . கொஞ்ச கொஞ்சமாய். . . தணிந்து . . . காதல் ஜமுக்களத்தில் சுகமாக சாய்ந்து படுத்ததோ. . ? ! அத்தருணத்தை இனிமையாக்க வேண்டி காதல் தேவதைகள் கொஞ்சம் இசை சேர்க்க விரும்பினவோ . . ?! குருவிகளின் பாஷை இசைக்கு வலுவூட்டியதோ . .. ? கொஞ்சம் தித்திப்பாக கரைந்தது நிமிடங்கள். . .

முதலில் சுதாரித்தது மங்கையவள் தான். அப்போது தான் கவனித்தாள் . . தன் துடைப்பம் தாங்கிய கையை அவன் கரம் இரும்பு பிடியாய் பிடித்திருந்ததை.

அவளுள்ளே எழுந்த ரசாயன மாற்றத்திற்கு மேலும் வித்திட்டது அந்த ஆண்மகனின் உஷ்ணம்.. . .

அவனுள்ளும் ஏதோ நடந்ததோ. . .?! ஆனால் அம்முகத்தில் ஏதும் இனம் காண முடியலையே . . ?!?

புரியாமல் பேந்த பேந்த விழித்தாள் பெண்.

இவர்கள் பேசும் காதல் பாஷைகள் . . கரம் பிடித்தவுடன் மலருமா. . ?! இல்லை சருகாகுமா . . ?!

"தொட்டவுடன் மலர்வதென்ன. . .
பூவே. .
தொட்ட ஆண்மகன்
மனம் கவர்ந்ததாலா . . ?!
பார்வை பட்டவுடன்
நாணம் கொள்வதென்ன . . .
மலரே. .

காதல்கொண்டதாலா . . ?!"


____________________________________________________

அந்தி மாலை பொழுது. . . ஒளி என்னும் பெண்ணின் இதழை இருள் என்னும் அரக்கன் இதமாய் அரவணைத்திடும் பொழுது . . ! பறவைகளின் கானம் வேறு. . குழந்தைகளின் விளையாட்டு சத்தம் கூடவே வலு சேர்க்க. . . அந்த இதமான சூழ்நிலையை ஆழ்ந்து அனுபவித்தப் படி தன் வீட்டு பால்கனியில் சுவரோரமாய் இருந்த நாற்காலியில் ஓய்வாக. . கொஞ்சம் சாய்வாக அமர்ந்த படி. . . அன்றைய பொழுதை மெதுவாக அசைப் போட்டபடி இருந்தார் கீர்த்தனா.

இன்று தான் சந்தித்த அந்த வாலிபன் முகமே மனதில் தோன்றிக் கொண்டிருந்தது. ஏதோ நெடுங்காலம் பழகிய உணர்வு. ஏன் என்று தெரியவில்லை ஆனால் அவனிடம் உரையாடிய பின் ஏனோ அவனை வேற்று ஆளாக எண்ண முடியவில்லை. ஏதோ ஒரு உறவு அங்கே கிளர்ந்தெழுவதை அவரால் தடுக்க முடியவில்லை.

"அம்மா. . " என்றழைத்தப்படி ஆபிசிலிருந்து வந்த வந்தனா , அம்மாவின் தோளில் வாகாக சாய்ந்த படி அமர்ந்தாள்.

"என்னம்மா. . .வேலை அதிகமா. . முகம் ஏன் டல்லா இருக்கு ? " என்று கேட்டார் அம்மா.

"அப்படிலாம் எதுவும் இல்லைம்மா. நார்மல் ஒர்க் தான். வரும் போது கொஞ்ச தூரம் காலார நடந்து வந்தேன்.அதான் உனக்கு பார்க்க அப்படி தெரியுது.. . "

"சரிம்மா. . நீ ரெபிரேஷ் ஆகிட்டு வா. . . நான் உனக்கு "டீ " கொண்டு வரேன்."

"ஓ.கே.ம்மா. . . !" என்றபடி தாவி படிக்கட்டுகளின் படிகளை கடந்து சென்றாள்.

மேலே வந்தவள் நேரே தனதறைக்கு செல்லாமல். . . ஆருவின் அறைக்கு சத்தமில்லாமல் சென்றாள்.

நேராக பாத்ரூமிற்கு சென்றவள் இரு பாக்கெட்களிலும் தண்ணீரை நிரப்பினாள் . பின் அறைக்கு வந்து கட்டிலில் மேலிருந்த பெட்சீட் தலையணை,பெட் அனைத்தையும் எடுத்து மறைவாய் ஓரிடத்தில் வைத்தாள் .

பின் பிளாஸ்டிக் வாட்டர் பூல் கவரை கட்டிலின் மீது கச்சிதமாக பொருந்துமாறு செட் செய்தாள். அதில் தான் பிடித்து வைத்திருந்த தண்ணீரை மெதுவாக ஊற்றினாள். பின் பழையபடி போர்வையை எடுத்து கட்டிலின் மீது தண்ணீர் மீது படாமல் அழகாக பார்க்க படுக்கை மாதிரியே அமைத்தாள்.

"டன் . . முடிஞ்சது. . . .!

ஹா ஹா ஹா. . . ."

வில்லன் . . இல்ல இல்ல வில்லி சிரிப்பு சிரித்துக் கொண்டாள். தன் தோளை தானே தட்டி கொடுத்தபடி....
"சபாஷ். . வது. . . ! இது தான் சரியான தண்டனை... மகளே ஆரு. . . ! உனக்கு வச்சிருக்கேன்டி ஆப்பு. . .! ஐ ம் வைட்டிங் . . . . " என்று தனக்கு தானே சொல்லி கொண்டாள் . . .

"டன் டனக்கா . . . டன் டனக்கா . . . .

னக்கா. . .. னக்கா. . . ."

ஆடியபடியே தன் அறை நோக்கி சென்றாள் வதனா தன் சகோதரிக்கு ஆப்பு ரெடி பண்ணிய மகிழ்ச்சியில் . .



------------------------------------------------------------------



அந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் முன் பிளாக் கலர் ஆடி கார் சத்தமின்றி தரையை முத்தமிட்டு கொண்டு வந்து நின்றது..

அதிலிருந்து புயலாய் இறங்கினான் அவ்வழகிய இளைஞன். தன் முத்து பல் சிரிப்பில் அனைவரையும் கிறங்கடித்தப்படி அந்த அறை நோக்கி வேக எட்டுகளுடன் சென்றான்.

"ஹாய் டாட். . .!" என்றபடி எதிரே நின்றிருந்த தன் அன்பிற்குரிய தகப்பனை ஆர தழுவி கொண்டான். அவன் ரவி. "ரவி வர்ம குலோத்துங்கன்.... " வர்மா குரூப்ஸ் ஆப் கம்பெனியின் இளவரசன். நம் கதையின் நாயகன்.

"ஹாய் மை டியர் சன். . . . !" குரல் தழு தழுக்க . . . அந்த வயதீகம் அடைந்த... தேக்கு மரம் போல் இருந்த. .. அவ்வாலிபன் ஆர தழுவிக் கொண்டான். . . அவர் ராஜ சேகர வர்மா. வர்மா குரூப்ஸின் எம்டி... ரவியின் தந்தை.

வெகு நாள் கழித்து நேரில் பார்க்கிறார்களே. . . சொல்ல வேண்டுமா என்ன. . .?!

"டேய்!எப்படி டா இருக்க. . . ?"

"ஐ ம் பைன் டாட். . "

"இப்போ தான் இந்த கிழவன் நியாபகம் வந்தா. . ?!"

"ஹே. . . பார்ர்ரா.. இங்கே யாரு கிழவன். . பார்ர்கிறதுக்கு இன்னும் வாலிப வயசு பையன் மாதிரி இருந்துகிட்டு பையனுக்கு பேச்சை பாரேன். . " என்று சிரித்தபடியே பதில் கொடுத்தான் ரவி வர்மன். . .

"போடா.. உனக்கு எப்பவும் விளையாட்டு தான்.
தென் . . இது என்னடா கோலம்..?! சாமியார் கணக்கா ... ஆளும் .. மண்டையும்.. . என்னடா இது. . . ?!" என்று தலையில் அடித்துக் கொண்டார்...

"ச் ச். . .டாட். ஐ லைக் இட் . சோ. . ." என்று இதற்கு மேல் இந்த பேச்சு வேண்டாம் என்பது போல் ஷார்ட்டாகவே பதில் கொடுத்தான்.

பெரியவரும் அதை புரிந்து கொண்டாரோ என்னவோ அதற்கு மேல் அந்த பேச்சு பேச வில்லை. . .

"தென் வாட் ஸ் யுவர் பிளான்...?"

" வான்ட டு ஸ்பென்ட் சம் டைம் வித் யு . தென் ஒன் கோவா ட்ரிப். நெக்ஸ்ட்..." என்றபடி கையை கீழிருந்து மேல் நோக்கி பறந்தபடி காட்டி "அமெரிக்கா வாசம் தான்" என்றான்.

"ஓ. . .அது சரி.. அப்புறம் எப்போடா எனக்கு ரெஸ்ட் கொடுக்க போற?! என்றார்...

அவனோ " இப்போதைக்கு இல்ல" என்றான்.

"அட.. போடா. . நானும் நீ வந்து பொறுப்பேத்துப்ப , நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு பார்த்தா விட மாட்டியே.. சீக்கிரம் இந்தியாவிலே செட்டில் ஆகிற மாதிரி வாடா . . .! " என்று வாகையாக புன்னகைத்தார்...

அப்புன்னகையின் அர்த்தம் என்னவோ. . ?!

"கண்டிப்பாப்பா . . பட் என்னோட டைம் இன்னும் வரவில்லையே ..." என்று இரு கைகளையும் விரித்து குறும்பாய் சிரித்தான்.

விவிலியத்தில் ஒரு நிகழ்ச்சி வரும். அதில் கன்னி மரியாளும், இயேசு பிரானும், அவர் நண்பர்களும் ஒரு திருமண வைபோகத்திற்கு சென்றிருப்பார்கள்.

அப்போது அங்கே எதிர்பாராத விதமாக திராட்சை ரசம் தீர்ந்து விடும் . (அன்றைய கால கட்டத்தில் திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளின் போது திராட்சை ரசம் பரிமாறப்படும் . இப்பொழுது கூட சில கிறிஸ்தவ திருமணங்களில் இந்த முறை பின்பற்றப்படுகிறது ). இதை அறிந்து கொண்ட மரியாள் , இயேசுவிடம் வந்து " மகனே. .! திராட்சை ரசம் தீர்ந்து விட்டது" என்பார். அதற்கு அவர் " அம்மா! என் நேரம் இன்னும் வரவில்லையே. . .?! " என்று நாசூக்காக மறுப்பார்.

ஆனால் மரியாவோ.. அங்கு இருந்த பணியாட்களை பார்த்து.. இயேசுவை கை காட்டி "இவர் உங்களுக்கு சொல்வதை எல்லாம் செய்யுங்கள்" என்பார் .

அப்புறம் என்னங்க . . .அம்மா சொல் தட்ட முடியாம இயேசுவும் அம்மாவோட ஆசையை நிறைவேற்றுவார். அது ஒரு சுவாரசிய கதை.

ஹ்ம்ம்... அது போல தான் ராஜ சேகர வர்மாவும் மகனிடம் மேலும் வாதாடாமல் அவன் போக்கிலேயே போய் தன் ஆசையை நிறைவேற்ற நினைக்கிறாறோ . . ?!

எது எப்படியோ. . இந்த வாலிப சிங்கத்தை அந்த கிழட்டு வாலிப சிங்கம் தன் செயலால் கட்டி போடுமா என்ன. . . ?
 




JULIET

அமைச்சர்
Joined
Jan 26, 2018
Messages
1,590
Reaction score
2,083
Location
Chengalpattu
Hai friends

Next ud upload paniten. Read and share your thoughts. Thank you all for ur support.

நான் தான்...
டெய்யம்மா.??
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
ஆராதனை பாட வந்தவனை கீதாஞ்சலி பாட வைச்சிட்டீங்களே சிஸ்டர் ??

Going good sister??
 




Shruthi subbu

இணை அமைச்சர்
Joined
Jul 5, 2021
Messages
938
Reaction score
887
Location
Bangalore
முன்னாடி எபில சித்தி
இந்த எபில கோலங்கள்ல.......

ராஜேஷ் 🤣🤣 வெடிக்கபோறணு பாத்தா புஷ்வாணமா போயிட......

ரவி வர்ம குலோத்துங்கன் 👍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top