• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ-24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

deiyamma

நாட்டாமை
Author
Joined
Sep 6, 2020
Messages
63
Reaction score
101
Location
nagercoil

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ...
அத்தியாயம் 24(a)


காதலித்துப் பார்..
இந்த பூமி அழகாகும்...
வானம் அழகாகும்...
பூக்கும் பூக்கள் ..
இன்னும் என்ன வேடிக்கை.
வெட்டி வீராப்பு, ஈகோ எல்லாம் தூக்கிப்போட்டு , உங்கள் துணையை போய் காதலியுங்கள்...


இதழோடு இதழ் தீண்டி, உடலெங்கும் ஒருவித அவஸ்தை பரவிட, அவனது சுவாசம் அவளது சுவாசத்தில் கலந்திட, காதல் ஹார்மோன் உணர்வுகளை தட்டி எழுப்பியதில், வயிற்றுக்குள் பட்டாம் பூச்சிகள் ஊர்வலம்...!

செய்வது அறியாது பேசா மடந்தையாக விழித்துக் கொண்டிருந்தாள் ஆராதனா.

ஆழ்ந்த முத்தத்தை பரிசளித்தவன், அவள் சுவாசிக்க இடமளிக்க பெண்ணவள் நாணத்தால் நடுங்கி போனாள்.

"ம்ம்ம்ம்... இப்போ கூட உனக்கு அந்த நிழல் தேஜாவூ தான் வேணுமா..? உன் கண் முன்னே நிக்கிற நிஜம் வேண்டாமா..? " இதயத்தை உருக்கும் குரலில் அவன் சொன்னது பெண்ணவளை ஏதோ ஒரு விதத்தில் பாதித்தது. 'நா' மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டு பேச மறுத்தது. எதுவோ ஒன்று அவனிடம் பேச தடையிட்டது.

"அந்த நிலா சாட்சியா...
வானத்துல இருந்து கொட்டுற அந்த புனிதமான மழை போல.. என்னோட காதல் உனக்கு புரியும்... உன்னோட மூச்சு காற்று வெட்பம், இந்த கற்களுக்கு உயிர் கொடுத்தா...

இதுக்கு மேலே நான் எதையும் சொல்லி உன்னை குழப்ப விரும்பலை. நீயே ஒரு நாள் தெரிஞ்சிப்ப, நான் சொன்னது நிஜமா கட்டுகதையான்னு...

அப்போ வாடி நீ எதிர்ல... இத்தனை வருஷமா என்னை தவிக்க விட்டதற்கு எல்லாத்துக்கும் சே..ர்..த்..து 'வச்சி' செய்யுறேன்... " அழுத்தம் திருத்தமாய் சொன்னான்.

மீசையை முறுவி விட்டுக் கொண்டவன் இதழோரம் புன்னகை மலர, அவளுக்கு வழி விட்டான். தப்பித்தால் போதும் என்று அவளும் ஓடிவிட்டாள்.

" ஐ ம் வெயிட்டிங் பேபி.." சத்தமாக இப்போது முறுவலித்துக் கொண்டான்.

அலுவலகத்திலிருந்து வெளியே வந்த ஆராதனாவிற்கு பதற்றம் சிறிதும் குறைந்த பாடில்லை. குழப்பமான மனநிலையில் பெண்ணவள் அவள் பாட்டிற்கு பேருந்தில் அமர்ந்திருந்தாள். அவளது இடம் வந்த பிறகும் இறங்கவில்லை. எண்ணங்கள் எங்கெங்கோ பயணித்து அவன் சொன்ன விஷயங்களிலே வந்து நின்றது.

நினைவுகள் பின்னோக்கி செல்ல... அவள் அமர்ந்திருந்த பேருந்து மட்டுமே இப்போது முன்னோக்கி சென்று கொண்டிருந்தது.

ஆம். அவன் சொன்னது போல் மிட்டாய் காட்டி தன்னை சீரழிக்க இருந்த தருணத்தில் எவனோ ஒருவன் வந்து தன்னை பாதுகாத்து , பத்திரமாக வீடு சேர்த்ததாக அம்மா சொல்லி அவள் கேட்டதுண்டு. நினைவுகளில் அந்த நிகழ்ச்சி அவ்வளவாக இல்லை. ஆனால் அதன் தாக்கம் சிலசமயம் தன்னையும் அறியாமல் வெளிப்படுவதுண்டு.

யாருக்கேனும் தீங்கு நடந்தால்.. அதை தன் வாழ்வோடு ஒப்பிட்டு தனக்கு நடந்தது போல இந்த மனம் கற்பனை செய்து கொள்ளும். அவ்வாறு எங்கேயோ யாருக்கோ ஏதேனும் நடந்தால் பெண்ணவள் கதறி துடித்த சம்பவங்கள் உண்டு. அந்த சமயங்களில் தாயின் அரவணைப்பிலே கழிப்பாள். அம்மா சொன்ன உற்சாக வார்த்தைகள் தான் அவளை அந்த நிலையிலிருந்து படிப்படியாக மீட்டு இயல்புக்கு திரும்ப செய்திருந்தது.

தாயை கடவுள் என்று கவிஞர்கள் வர்ணித்து கேட்டதுண்டு. ஆனால் அதனிலும் மேலான இடம் என்று ஒன்று இருந்தால் அதை தான் நான் பரிசளிப்பேன் என் அம்மாவிற்கு என்று அவளது மனம் அடிக்கடி சொல்லும்.

அவன் சொன்ன இரண்டாவது நிகழ்வு ஓரளவிற்கு நியாபகம் இருக்கிறது. ஆனால் அப்போது தன்னை காப்பாற்றியவனின் முகம் தெளிவாக நினைவில்லை. ராம் குரல் மட்டும் தான் நியாபகம் இருந்தது. ஒருவேளை ராம் பார்த்திருக்கலாம் அவனை. அவனிடம் பேசினால் ஒருவேளை பதில் கிடைக்குமோ...?!

ஆனாலும் அந்த குலோத்துங்கன்... ம்ஹும்...அவ்ளோ பெரிய அரசர் பெயர் இவனுக்கு எதுக்கு... போடா தடியா... எப்போ பாரு என்னை குழப்பி 'ஜாம்'மாக்கி விடுறதே இவன் வேலை... சோ இவனுக்கு வேற பெயர் தான் வைக்கணும்.
என்ன நேம் வைக்கலாம்....??!
மம்ம்ம்ம்...
யோசித்தபடியே ஜன்னல் வழி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே கண்ணில் பளிச்சிட்டது குண்டு குண்டு குலோப்ஜாம் விளம்பர பலகை...

"ஹைய்.....ஐடியா..
ஹா ஹா ஹா...
சிக்கிடிச்சு...

என்கிட்ட வந்து... வம்பு செய்து... குழப்பி... இன்பம் காணுவதால் இன்று முதல் நீ குலோப்-ஜாமூன் என்று அழைக்கப்படுவாயாக..."

ஏதோ அவன் எதிரே இருப்பது போல் கற்பனை பண்ணியபடி கை உயர்த்தி ஆசி வழங்கினாள் ஆராதனா.

"ஹா.. ஹா.. நைஸ் நேம்ல...
ஹா ஹா ஹா..."
தனக்கு தானே புகழ்ந்து கொண்டு கலகல பட்டாசாய் சிரித்துக் கொண்டாள்.

மனதிற்குள் ஒரு வித இன்பம் பரவியது. அவன் முகம் கண்முன்னே வந்து கண் சிமிட்டியது. உடலெங்கும் காதல் அணுக்கள் ஆட்டம் போட துவங்கியது. சற்று முன் அவன் தந்த முத்தத்தின் கதகதப்பின் மிச்சம் உள்ளுக்குள்ளே கொழுந்து விட்டு எரிய துவங்கியது.

இவனிடம் மட்டும் என் மனம் ஏன் அடங்க மறுக்கிறது...? அவன் அருகில் வந்தாலே நான் நானாக இல்லையே... என்னுள்ளே எப்படி இத்தனை மாற்றங்கள்...??! இப்பொழுது எல்லாம் அந்த தேஜாவூ நினைவு வந்தால் கூட இவன் முகம் தானே ஊஞ்சலாடுகிறது... தேஜாவூவிற்கும் இவனுக்கும் என்ன சம்மந்தம்...??! ஒருவேளை அ....வன்... தான் தேஜாவூவாக இருக்குமோ... ஆனால் எப்படி இதை நம்ப...? ஹ்ம்மம்ம்...

குரங்கு மனம் நிலையில்லாமல் அங்கும் இங்கும் தாவியது. பெண்ணவள் மனம் குழம்பியது தான் மிச்சம். தன்னுள்ளே பதிலை வைத்துக் கொண்டு வேறேங்கோ தேடினால் எப்படி கிடைக்கும்...??!

"ஹ்ம்ம்...

அப்புறம் என்ன சொன்னான்....??!" யோசித்தபடியே இருக்கவும் பேருந்து நிற்க்கவும் சரியாக இருந்தது. அவள் இப்போது கடைசியாக மெயின் பஸ் ஸ்டாண்ட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள்.

"ஹைய்யோ கிருஷ்ணா.... இது என்ன விளையாட்டு. என்னை ஏன் இப்படி பாடாய்படுத்துற... நான் எங்க வந்து சேர்ந்திருக்கேன். வீட்டுக்கு போகாம அப்படியே இங்க வரை வந்திருக்கேன்.
ச் ச... வர வர இந்த குலோப்ஜாம் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுறான்..."அலுத்துக் கொண்டாலும் வேறு வழியின்றி இறங்கி, அங்கிருந்த ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி போனாள்.

"டேய் குலோப்ஜாம்... என்...ன...டா... செஞ்ச... உன்னால நட்டு கழந்து போய் திரியிறேன்டா...
போடா விளங்காதவனே..."

புலம்பியபடியே நடையை தொடர்ந்தாள்.

அப்போது தட் தட் தட்... என்ற பலத்த காலடி ஓசை அருகே கேட்கவும் சட்டென திரும்பி பார்க்க, அந்த இருட்டில் எங்கிருந்து அந்த நபர்கள் வந்தார்கள் என உணரும் முன்னே அவளை சூழ்ந்து கொண்டனர்.

இது என்னடா வம்பா போச்சி.. நானே நொந்து போய் இருக்கேன் இதுல இவனுங்க வேற...

"யாருடா நீங்க...??"

திடுத்திப்புன்னு எங்கிருந்து வந்தானுங்க... ஒவ்வொருத்தனும் டன் கணக்குல திம்பானுங்க போல... சும்மா கும்...மு..ன்..னு... குண்டு குண்டு குலோப்ஜாமூன் கணக்காலா இருக்காணுங்க... அட... இது அந்த நியூ தேஜாவூ ரவிக்கு வச்ச பெயராச்சே...சோ இவனுங்களுக்கு வேற பெயர்.ர்.ர்.லா.. வைக்கணும்... யோசித்தபடியே இருந்தவளை கலைத்தது அந்த முரடனின் குரல்.

"ஹே பொண்ணு.. சத்தம் போடாமல் நீயாவே எங்க கூட வந்துரு.. இல்லன்னா பேஜராகிடுவா..."

உண்மையாவே இவனுங்க ரவுடி தானா...?

"ஏய்.. என்ன பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு.. நட..."

"டேய்.. இன்னும் என்னடா இவகிட்ட பேசிக்கிட்டு தூக்குங்கடா..."

"ஹே... ஹே... நில்லுங்கடா... யாருடா நீங்க.. என்ன எதுக்கு வர சொல்றீங்க..."

"ஹா ஹா ஹா ஹா......
வேற எதுக்கு ஓடி பிடிச்சி விளையாட தான்... போலாமா..."

"டேய் டேய்... என்னங்கடா நினைச்சிக்கிட்டிங்க.... ஓடி பிடிச்சி விளையாட இதுவாடா நேரம்... போங்கடா.. போங்க.. போய் பிள்ளை குட்டியை படிக்க வைக்க வழிய பாருங்க.." அசால்ட்டாக கூறியபடி நடையை தொடர்ந்தாள் பெண்.

"ஏய்.. எங்கடி போற..."

"நில்லுடி..."

"டேய்.. இன்னும் என்னடா அமைதியா பேசிக்கிட்டு தூக்குங்கடா..."

எல்லோரும் ஒரு சேர பாயவும் அந்த பெண் மான்குட்டி கொஞ்சம் மருண்டு தான் போனது..

இவனுங்க உண்மையாகவே என்னை கடத்த போறாங்களா...?!

அட பாவி தேஜா வூ... எங்கடா போனா...?? டேய்.. தீ வெட்டி மண்டையா... ஏய் குலோப்ஜாமூன் எங்கடா இருக்க.. பெருசா தேஜாவூக்காக காப்புரிமைல்..லா...ம் கேட்டியே...டா.. இப்போ எங்க போய் தொலைஞ்சடா...

அவளை அலேக்காக ஒருவன் தூக்கி கொண்டு செல்லவும் பெண்ணவள் உள்ளம் 'ஃபியர் மோட்'டிற்கு பறந்தது.

டேய் தேஜா வூ.. இது காமெடி ஸீன் இல்லைடா.. டேஞ்சரஸ் சிட்டுயேஷன்.. சீக்கிரம் வாடா.. நாலு வயசுல காப்பத்துனேன்.. பத்து வயசுல காப்பத்துனேன்.. அப்படி இப்படின்னு பீலா வுட்டியேடா... இப்போ தான்டா நீ நிஜமாலுமே காப்பத்தனும்.... வாடா லூசு பயலே..

"டேய் டேய்... மெதுவா போடா.. கொஞ்சம் மேடு பள்ளம் பார்த்து போடா... பாடி ஷேக் ஆகுதுல... நோகமா நொங்கு தின்னு வளர்ந்த உடம்புடா..... தாங்குமா...??!" அவளை தூக்கி கொண்டு செல்லும் ரவுடிக்கு.. கூட சில பாராட்டு பாத்திரங்களை வாசித்தவள் தொடர்ந்து பேசி கொண்டிருந்தாள்.

"டேய்.. சீக்கிரம் நடடா.. இவள் போடுற சத்ததுக்கு எவனாது வந்துருற போறான்".

"டேய் போய் சீக்கிரம் டிக்கிய திறடா..."

"ஏய்... ஏய்... என்னங்கடா நீங்க..
ஆ.. வூ... ன்னா...டிக்கில போட்டு தூக்கிட்டு போறது... தமிழ் சினிமா பார்த்து ரொம்ப கெட்டு போய்ட்டீங்கடா... டிக்கில எல்லாம் என்னால இருக்க முடியாது... போடா போய் டிரைவர் சைடு டோர் ஓபன் பண்ணு... மம்ம்ம்ம்... கம் ஆன்... குயிக்.."

"டேய்..இவள் அடங்க மாட்டா போல.."

"நாங்க உன்னை கடத்திட்டு போறோம்ங்கிற ஒரு பயம் கூட இல்லமா இந்த பேச்சு பேசுற..."

"ஹாங்... அதுக்கு இப்போ என்னங்கிற... நீ என்ன தொழிலுக்கு புதுசா...?"

"ஏய்.. இவ்ளோ அசால்ட்டா சொல்லுற.. இதுக்கு முன்ன எத்தனை முறை உன்னை கடத்திருக்கிறாங்க...??!!! சொல்லுடி.."

"எனக்கு தெரிஞ்சி இதான் ஃபஸ்ட்..." கண்சிமிட்டி சிரித்தப்படி சொன்னாள்.

"என்னடா இந்த பொண்ணு... லூசு மாதிரி சிரிக்கிறா..."

"டேய் முதல பாஸுக்கு போன் பண்ணி இந்த பொண்ணு தானான்னு கன்பார்ஃம் பண்ணு. சரியான மெண்டல் கேஸ்ஸா இருக்கும் போல..."

"டே....ஞ்சரஸ்....டே...ஞ்சரஸ்.....
ஹே.. ஹே...
டே....ஞ்சரஸ்....டே...ஞ்சரஸ்.....

உன் பார்வை.. உன் தேகம்...
உன் கேசம்.... உன் வாசம்...
எல்லாம்....

டே....ஞ்சரஸ்....டே...ஞ்சரஸ்.....
ஹே.. ஹே...
டே....ஞ்சரஸ்....டே...ஞ்சரஸ்.....

மீ மாட்டி... மீ சிக்கி...
மீ முழிச்சி... மீ நொந்து...
எல்லாம்... உன்னால்....
திஸ் பாய்ஸ் ஆர்
டே....ஞ்சரஸ்....டே...ஞ்சரஸ்.....
ஹே.. ஹே...
டே....ஞ்சரஸ்....டே...ஞ்சரஸ்....."

சன்ன குரலில் அழகாய் மைக்கில் ஜாக்சன் பாப் பாடலை உள்டாவாக்கி பாடினாள் பெண். அந்த ரவுடிகளை விமர்சித்தப்படி, தப்பிக்க வழி கிடைக்காத என்றெண்ணத்தில் ஏதேதோ செய்தாள். கிட்டத்தட்ட பையித்தியம் போல. உணர்வுகளை கட்டுப்படுத்த இது ஒரு சிறந்த வழி. வேறு ஏதும் வேலையில் கவனத்தை திசை திருப்புவதன் மூலம், உணர்வுகளை சிந்தாமல் சிதறாமல் கையாள முடியும். அதை தான் ஆருவும் செய்தாள்.

"டேய்..இந்த பொண்ணு தான்டா... பாஸ் கிட்ட கேட்டுட்டேன். சீக்கிரம் தூக்கிட்டு வர சொன்னார். தேவையில்லாம பேசாம வேலையை பாருங்கடா.."

அய்யய்யயோ...... உண்மையாவே தூக்க போறாங்களே.. டேய்... தேஜாவூ வாடா...

உச்சி முதல் பாதம் வரை பாய்ந்தோடி வந்த பயத்தை எச்சில் முழுங்கி அனுபவித்தாள் பெண். குலோப்ஜாமூனும் சரி.. தேஜாவூவும் சரி... யாரும் வரப்போவதில்லை. இனி தானே தான் தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும். எண்ணம் வலுப்பெற பெண்ணவள் மனதில் சில திட்டங்கள் உலா வந்தது.

"ஹ்ம்ம்... ஏறு.. சீக்கிரம் சத்தம் போடாம வண்டியில ஏறு".

"டேய்.. எனக்கு டிரைவர் சீட் இல்லையாடா..." பாவமாய் கேட்டாள்.

அவளை சுத்தி நின்றவர்கள் முறைத்த முறைப்பில்... "ஹே.. நான் நல்லா டிரைவ் பண்ணுவேண்டா... பிலிவ் மீடா ரவுடிஸ்".

அவள் சொன்ன தினுசில் அனைவரும் பக்கென சிரித்து விட்டனர்.

"நாங்களும் எத்தனையோ பேரை கடத்திருக்கோம். ஆனால் உன்னை மாதிரி ஒருத்தியை பார்த்ததே இல்லை. சரியான பீஸ் தான் நீ".

"ஹீ... ஹீ.. ஹீ...."

என்னைய காமெடி பீஸ் ன்னு சொல்லுற.. இருடா மவனே... நான் மட்டும் தப்பிச்சி போகட்டும்.. உனக்கு இருக்குடா வேட்டு... மனதிற்குள் கருவி கொண்டு வெளியே ஜோக்கர் ஸ்மைல் காட்டினாள்.

"டேய் நாம தான் இத்தனை பேர் இருக்கிறோமே.. பின்ன என்னடா....டிரைவர் சீட்ல உக்கார சொல்லு. நம்மள மீறி இவளால் தப்பிக்க முடியுமா என்ன... போற வரைக்கும் கொஞ்சம் என்ட்டயிம்மா ஜாலியா இருக்கும்".

ரணக்களத்திலும் இவனுக்கு குதூகலம் கேட்குது. அடா பாவி மனுசா.. உனக்கு அறிவே இல்லையா.. நீயெல்லாம் எப்படிடா ரவுடி ஆனா...?? ஆராதனா மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

"ஆமா தலைவா... நாமா இப்படி சிரிச்சி பேசியே எவ்ளோ நாள் ஆச்சு. மனசுல இருக்குற டென்ஷன் இந்த பொண்ணால அப்படியே இறங்கிடிச்சு. இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே சந்தோஷமா இருப்போமே.

"அப்டிங்கிற..." அந்த தலைவன் என அழைக்கப்பட்டவன் சிறிது யோசனைக்கு பிறகு 'சரி' என்றான். தன் சகாக்களை இப்படி சிரித்த முகத்துடன் பார்ப்பது அவனுக்கும் ஆனந்தமே. அதில் வேறு இந்த சின்ன பெண் சரியான சுட்டியாய் இருக்கிறாள். இவளை எதற்கு கடத்தி வர சொன்னர்களோ... ஹ்ம்ம்... இவளுடன் நட்பு வளர்க்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாமே இவளை காப்பாற்றி விட்டாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.

"ஹ்ம்ம்... இந்தா பொண்ணே.. பிடிச்சிக்கோ சாவியை " என்று சொல்லியபடி அத்தலைவன் டிரைவர் சீட் அருகில் ஏறி அமர்ந்து கொண்டான்.

"தலைவா.. என்ட்ற பேரு ஆராதனாவாக்கும். பொண்ணு மண்ணுன்னுலாம் கூப்பிடாண்டாம்".

"அப்புறம் பாய்ஸ் சொல்லுங்க உங்களை பற்றி.." இயல்பாக சொல்லியபடி வண்டியை கிளப்பினாள். அவளையே அவள் கிட்னாப் செய்துகொண்டாளோ..??!

###############
 




deiyamma

நாட்டாமை
Author
Joined
Sep 6, 2020
Messages
63
Reaction score
101
Location
nagercoil
"ம்… ந ந ந ந….
காதல் ஆசை யாரை விட்டதோ..
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ..
காதல் தொல்லை தாங்கவில்லையே..
அதை தட்டி கேக்க உன்னை விட்டால் யாரும் இல்லையே...
யோசனை...
ஓ… மாறுமோ ஓ… பேசினால் ஓ… தீருமோ ஓ…

உன்னில் என்னை போல காதல் நேருமோ..
ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே...
உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்...
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே அன்பே..

நான் பிறந்தது மறந்திட தோணுதே...
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே..
உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே...

காதல் ஆசை யாரை விட்டதோ..
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ...
ஓ… காதல் தொல்லை தாங்கவில்லையே..."

யுவன்ஷங்கர் இசையில் சூரஜ் சந்தோஷ் பாடிய பாடலை... இம்மியும் ஸ்ருதி மாறாமல் மனதை கவர்ந்திழுக்கும்படி பாடிய படியே... கம்பீர துள்ளலுடன்... விரலில் கார் சாவியை ஆட்டியபடியே.. துள்ளி அடங்கிய கேசத்தை மறுகையால் வாரியபடியே.. புன்னகை முகமாய்.. பாந்தவாக பொருந்தியிருந்த ரேய்மேண்ட் சூட்டில்.. ஆணழகனாய் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தான் ரவி வர்ம குலோத்துங்கன்.

பார்த்த மாத்திரத்தில் நெஞ்சில் பச்சக்கென ஒட்டி கொள்ளும் முகம். எந்த பெண்ணிற்கும் ஏக்கத்தை பரிசளிக்கும் தோற்றம்... அத்தனை அழகனாய்.. அதுவும் தன் கண்ணிற்கு எதிரே நடந்து வந்துகொண்டிருக்கும் தன் ஒற்றை ஆசை பேரனை விழிகளுக்குள் நிரப்பியபடி ஜொள்ளு விட்டப்படி பார்த்து... இல்லை இல்லை.. சைட் அடித்துக் கொண்டிருந்தார் அயர்ன் லேடி.

அவன் இப்போது பாட்டியை நோக்கி தான் வந்து கொண்டிருந்தான். இதழ்கள் அதன் பாட்டிற்கு பாடலை ஹம் செய்தது...

"அதை தட்டி கேக்க உன்னை விட்டால் யாரும் இல்லையே..."

"என்னடா பாட்டெல்லாம் பலமா இருக்கு.. யாரடா தட்டி கேட்கணும்..."

அவன் ஒன்றும் சொல்லாமல் பாடியபடி பாட்டியின் கன்னத்தை ஆசையாய் கொஞ்சினான்.

"ஓ… பகலிரவு பொழிகின்ற பனித்துளிகள் நீதானே..
வயதினை நனைக்கிறாய் உயிரினில் இனிக்கிறாய்..."

"டேய்.. இந்த கிழவிக்கு வயசாகிட்டுன்னாடா சொல்லுற..?" அங்கலாய்த்த பாட்டியை கண்டு கொள்ளாமல், அவர் எதிரில் அமர்ந்தபடி அவர் கைகளை தன் கைகளில் கோர்த்து கொண்டே தொடர்ந்தான்....

"நினைவுகளில் மொய்க்காதே.. நிமிடமுள்ளில் தைக்காதே..
அலையென குதிக்கிறேன் உலை என கொதிக்கிறேன்..
வீடு தாண்டி வருவேன் கூப்பிடும் நேரத்தில்.."

"என்னடா... பக்கத்துல தானடா இருக்கேன்.. பின்ன எதுக்குடா வீடு தாண்டி வரணும்..."

"உன்னால் விக்கல் வருதே ஏழு நாள் வாரத்தில்.."

"அச்சச்சோ.. ஏய் லதா.. சீக்கிரம் குடிக்க தண்ணீ கொண்டு வா.. ரவிக்கு விக்கல் எடுக்குதாம்..."

"ஏழு நாள் வாரத்தில்
ஒரு பார்வை பாரு கண்ணில் ஓரத்தில்..."

"டேய்.. தினமும் என்னை பார்த்துட்டு தானடா ஆபிசுக்கே போற.."

அவன் எழுந்து கொண்டு பாட்டியையும் கை கொடுத்து எழுப்பி.. அவன்பாட்டிற்கு ஆட தொடங்கிவிட்டான்...

"ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்..."

"டேய் டேய்.. இந்த கிழவி கூட போய் ஆடுறீயேடா... கல்யாணம் பண்ணிக்கிட்டு பொண்டாட்டி கூட ஆடி பாடுறதை விட்டுப்புட்டு.. ஏன்டா.. என்ன பாடாய் படுத்துற..."

"என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே அன்பே..."

"எம்மாடி நேகா.. இங்க வாமா... உன்னை தான் ரவி கூப்பிடுறான் பாரு.."

"நான் பிறந்தது மறந்திட தோணுதே...
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே..
உன் ஒரு துளி மழையினில் தீராதோ.. என் தாகமே...."

பாட்டியின் கைகளை பிடித்து சுற்றி சுற்றி ஆடியவன்.. அப்படியே பாட்டியை சேரில் உட்கார வைத்துவிட்டு... பின்னே வந்து கொண்டிருந்த நேகாவுடன் அடுத்த ஆட்டத்தை தொடர்ந்தான்...

"ம்… விழிகளிலே உன் தேடல்.. செவிகளிலே உன் பாடல்..
இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல்.".

விரல்களை பிடித்துக்கொண்டு இடுப்பில் மறுகை வைத்தபடி... கால்களை முன்னும் பின்னும் பாட்டிற்கு ஏற்றப்படி அசைத்து அழகாய் ஆடினர் இளையவர்கள்.

"காதலுக்கு விலையில்லை எதை கொடுத்து நான் வாங்க
உள்ளங்கையில் அள்ளித்தர என்னை விட ஏதுமில்லை.."

இப்போது நேகாவும் கூட சேர்ந்து பாடினாள். அத்தனை நளினமாய்.. அழகாய் இருவரும் அவரவர் உலகில் கனவில் மிதந்தபடியே ஆட்டத்தை தொடர்ந்தனர்.

"யாரை கேட்டு வருமோ காதலின் ஞாபகம்...
என்னை பார்த்த பிறகும் ஏன் இந்த தாமதம்...
ஏன் இந்த தாமதம்...
நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம்..!"

நேகாவின் உடல் மொழியில் அவளது ஏக்கம் ரவிக்கு புரிந்தது... "ஹேய்.. ஆர் யூ ஸ்டில் லவ் வித் மாதேஷ்..?!"

(அதான்ங்க முதல் முறை ரவி இந்தியா வந்து அமெரிக்கா திரும்பும் போது மாலில் சந்தித்து கொண்ட ஸ்நேகிதன் ஒருவன் வந்தானே அந்த மாதேஷ் தான் நேகாவின் காதலன். இருவருக்கும் காதல் ஆனால் வெளியில் பகிர்ந்து கொள்ளாத காதல்.)

நேகா ஒன்றும் பேசவில்லை. அவள் கண்கள் மட்டும் 'ஆம்' என்பது போல கண்சிமிட்டி சைகை செய்தது.

"ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்.."

நேகாவின் குரலில் காதல் தெரிந்தது. ஒன்றும் பேசாமல் அவனும் மிச்ச ஆட்டத்தை தொடர்ந்தான்.

"இந்தப்பா ரவி தண்ணீ..."என்று வந்த லதா ஆண்டியையும் அவன் விடவில்லை. அவரையும் இழுத்து கொண்டு வந்து ஒரே ஆட்டம் தான்.

சத்தம் கேட்டு என்ன நடக்குதுன்னு பார்க்க வந்த ராஜசேகரையும் அவன் இழுத்து கொண்டான் தன் ஆட்டத்திற்குள். வீடே பாட்டும் ஆட்டமுமாய் களை கட்டியது.

ஆராதனா தன்னை கடத்த வந்த ரவுடிகளிடம் இலகுவாக பேசி காய் நகர்த்த... இங்கே ரவி வர்மனோ ஆடி பாடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறான். இத்தனை வருடம் மனதிற்குள் வைத்திருந்த காதலை தன் தேவதையிடம் கொட்டிவிட்ட திருப்தியில் மனம் இலகுவாகி மனதிற்குள் மகிழ்ச்சி மாத்தாப்பூ பிரவேசம்.

அவனது ஆட்டத்தையும் பாட்டையும் ரசித்து பார்த்து கொண்டாடி மகிழ்ந்தது அவனது குடும்பம்.

"போதும்டா பேரா.... எதுக்கு இவ்ளோ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். என்ன விஷயம்டா..."

"சும்மா தான்.." கண் சிமிட்டி தோள் குலுக்கி சொன்னான் ரவி.

"ஏய் ரவி. பொய் சொல்லாத. சம்திங் ஸ்பேஷல். டெல் மீ யா".

"ஆமா ரவி. நேகா சொல்லுறது போல ஏதோ விஷயம் இருக்கு. இத்தனை வருஷத்துல உன் முகத்துல இவ்ளோ சந்தோஷம் நாங்க யாரும் பார்த்ததே இல்லை... ஹப்ப்பா... பார்க்கவே எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா?"

பாட்டி,அப்பா, லதா ஆன்ட்டி, நேகா எல்லோரும் எவ்வளவு கேட்டும் அவன் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. பிறகு நேரம் வரும்போது சொல்கிறேன் என்று போய்விட்டான் அவனறைக்கு.

"லதா நீ ரவிக்கு புடிச்ச இடியாப்பமும் தேங்காய் பால் குர்மாவும் பண்ணுறீயா...? அவனை சந்தோஷமா பார்க்கும் போது எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு".

"கண்டிப்பா பண்ணுறேன். ஆமாம்மா எனக்கும் அவனை இப்படி பார்க்கும்போது ஹாப்பியா தான் இருக்கு".

"ஹ்ம்ம்...இளங்கோ எங்கே? இன்னும் வீட்டுக்கு வரலையா...?"

"ஃப்ரென்ட் ஒருத்தரை பார்க்க போனதா சொன்னார். லேட்டா தான் வருவேன்னு சொல்லிட்டு தான் போயிருக்கார்".

"ஓ.அப்படியா.. சரி நீ போய் வேலையை பாரு".

"ம்ம்ம்ம்...." சொல்லியபடி லதா கிச்சனுக்குள் சென்றுவிட்டார்.

ராஜசேகர் பாட்டியின் அருகில் வந்து..

"அம்மா கவனிச்சீங்களாம்மா. ஏதோ கண்டிப்பா நடந்திருக்கு. அதான் ரவி முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்".

"ஹ்ம்ம்... நானும் அப்படி தான் நினைக்கிறேன்".

"அம்மா. நான் இன்றைக்கு கீர்த்தனா அதான் என்னோட சின்ன வயசுல நம்மளோட எதிர் வீட்ல குடியிருந்தாங்களே... அந்த கீர்த்தியை தான் பார்த்தேன். இன்னும் அப்படியே குழந்தையாட்டம் தான் என் கண்ணுக்கு தெரியுற.. ஆனால் என்னை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டா..." மகிழ்ச்சியாய் சொல்ல தொடங்கி சோகத்தில் முடித்தார்.

"என்னடா சொல்லுற.. எப்படி இருக்குறா அந்த குட்டி.. நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்க வேண்டியது தானே...?"

"பொறுங்கம்மா... ஒரு நாள் குடும்பத்தோட வரதா அவளே சொல்லியிருக்கிறா..."

"அப்படியா...சரி சரி. அவளை பார்த்து எவ்ளோ வருஷம் ஆச்சி...ஹ்ம்ம்.... ஆமா.. உன்னை எதுக்குடா லெப்ட் அண்ட் ரைட் வாங்குனா...?!"

"அதுவா... பார்கவியோட இழப்புக்கு அவள் தான் காரணம்ன்னு நான் தப்பா நினைச்சிட்டேனாம். அவள் பக்கத்துல இருந்து எந்த ஒரு விளக்கத்தையும் கேட்காம அவாய்ட் பண்ணேனாம். சோ எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி கேள்வி மேல் கேள்வி கேட்டு பிண்ணி எடுத்துட்டா..."

"அட... இது வேறயா... அப்புறம் என்ன ஆச்சி.."

"அப்புறம் என்னம்மா... அன்றைக்கு என்னோட சிட்டுயேஷன் என்னன்னு சொன்னேன். அதே மாதிரி அவளும் சொன்னா. அப்புறம் தான் அவள் கோபத்தை இறக்கி வச்சா...."என்றபடி கீர்த்தனவுடன் நடந்த வாக்குவாதத்தை விளக்கமாக கூறினார்.

"டேய்.. இப்போ நீ என்ன சொன்ன...?!!"

"என்னம்மா... என்ன ஆச்சி.. ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க..?"

"ம்ம்ம்.. நான் கேட்டதை மட்டும் சொல்லு. பார்கவி கீர்த்தனா வீட்டுக்கு போகும் போதும் வரும் போதும் என்ன நடந்து. தெளிவா சொல்லு" குரலில் அழுத்தம் வந்திருந்தது. விஷயம் ஏதோ பெரிது என்று மட்டும் ராஜசேகருக்கு புரிந்தது. இருந்தும் அவசரப்பட்டு எதுவும் பேசாமல் அவர் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் கொடுத்து கொண்டிருந்தார்.

அயர்ன் லேடியின் மனம் எஃக்கை விட உறுதியாய் மாறிக்கொண்டிருந்ததை அவர் உடல் இறுகுவதிலிருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது. முகம் ரௌத்திரமாக மாறியது.

அவரது முகமாற்றத்திலிருந்தே ஏதோ ஆபத்து செய்தி என்று ஊர்ஜின படுத்திய ராஜசேகர் பதறியபடி,

"என்னம்மா... ஏன் இவ்ளோ கோபம்? யார் மேல...!?? சொல்லுங்கம்மா...."

கிழட்டு சிங்கம் பதறியதில் அந்த அயர்ன் லேடி செவிகள் கொஞ்சம் லேசானது. இத்தனை நாட்களாய் தான் தேடிக் கொண்டிருந்த விஷயத்திற்கு பதில் கிடைத்த திருப்தியில் ஏதோ பேச தொடங்கவும், மேசை மீதிருந்த தொலைபேசி அலற தொடங்கியது.

எடுத்து பேசிய அயர்ன் லேடி முகத்தில் வர்ணஜாலங்கள் தாண்டவமாடியது. ஒரு கோடி மின்னல் வெட்டியது போல முகம் பிரகாசமானது. அவரையே பார்த்துக் கொண்டிருந்த ராஜசேகரது மனம் செய்தியை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியது.

பேசி முடித்து அலைபேசியை வைத்தவர்... நிம்மதி மூச்சை ஆழ்ந்து சுவாசித்தார். மூடிய இமைகள் வழியே இரு துளி கண்ணீர் துளிகள் வைரமாய் மின்னியது. மெதுவாக இதழ் திறந்து ராஜசேகரை பார்த்தபடியே சொன்னார்,

"பார்கவி இஸ் பேக்".
 




deiyamma

நாட்டாமை
Author
Joined
Sep 6, 2020
Messages
63
Reaction score
101
Location
nagercoil

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ!
அத்தியாயம் 24 (b)



நீண்ட பிஞ்சு விரல்கள் ஸ்டியரிங் வீலில் நடனம் ஆட.. பெண்ணவள் ஆராதனாவின் இதழ்கள் அதன் வேலையை செவ்வனே செய்ய... சுற்றி இருந்தவர்கள் காதில் குருதி மட்டும் வடியாமல்... மூளை கூட மிச்சம் இன்றி உருகி வடிய தொடங்கி இருந்தது. அவள் பேச்சு கொஞ்சம் ரம்பம் போட்டாலும் மனம் லேசானது போன்ற உணர்வு ஏழாமலும் இல்லை.

அமிர்தம் கூட அளவுக்கு மீறினால் நஞ்சு தானே. அப்படி இருக்கையில் எத்தனை நேரம் தான் இவளது அலம்பளை தாங்குவது. கூட்டத்தில் ஒருவன் பொங்கி விட்டான்.

பின்ன.. ரவுடின்னு ஒரு மட்டு மரியாதை இல்லாம இப்படி 'ஜோக், கடி'ன்னு பெயரில் எத்தனை அடிகளை தான் தங்குவான்.

"அண்ணா... என்னால முடியலன்னா. ஒன்று இவளை வாயை மூடிக்கிட்டு வர சொல்லுங்க.. இல்லை என்னை வண்டிய விட்டு இறக்கி விட்ருங்க.." என்று அந்த ரவுடி கும்பலின் தலைவனிடம் முறையிட்டான்.

"டேய் நீ ஏண்டா பொங்குறா. அடங்குடா.. தங்கச்சி நீ சொல்லும்மா" இதை சொன்னது அவளது குறும்பு பேச்சில் கவரப்பட்ட மற்றொருவன்.

"அப்படி சொல்லுங்கண்ணா... " அவனுடன் கைகளை தட்டி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டவள்,

"வாவ்வவ்வே..." என்று வசை பாடியவனை பார்த்து பழிப்பு காட்டியவள் மிச்ச சொச்ச கடி ஜோக்குகளை அள்ளி விட்டாள். பின் கொஞ்சம் நேரம் கழித்து தன்னை வம்பு இழுத்தவனுடன் டீல் பேசலானாள்.

"இப்போ நான் சொல்லுறதை மட்டும் நீ செஞ்சேன்னு வை... இனி கார் ஸ்டாப் பண்ணுற வரை நான் வாயே திறக்க மாட்டேன். உங்க ரவுடி பேபி.. சாரி சாரி முறைக்காத தலைவா.. உன் அழகுல மயங்கி காரை எங்கேயாவது கொண்டு போய் மோதிட போறேன்" என்று அருகில் இருந்த அந்த கூட்டத்து தலைவனை வாரியவள்... தொடர்ந்து சொன்னாள்...

"உனக்கு நான் பெரிய வேலையெல்லாம் கொடுக்கல.. நான் சொல்லுற ஆளுக்கு லிப் ஸ்டிக் மட்டும் போட்டு விட்டா போதும்".

"ஹா ஹா ஹா... இது என்ன பிஸ்கோத்து.. இவ்ளோ தான் மேட்டர்ரா..."

"பொறுடா என்னை தூக்கிட்டு வந்தவனே...

அந்த ஆள் வேற யாருமில்லை. நல்லமனுஷன் தான்.. "

"ஹ்ம்ம்.. பெயரை சொல்லு முதல.."

"குட் ஸ்னேகாக்கா".

"என்ன சொன்ன.. நம்ம நடிகை ஸ்நேகா அக்காவா..??"

"ஹாங்.." அவனை மேலும் கீழும் பார்த்தவள்.. "துறைக்கு ஆசை தான். நான் சொன்னது 'நல்ல பாம்பு'டா.
இதே ஆசையோடு நல்ல பாம்புக்கு போய் லிப்ஸ்டிக் போட்டுட்டு வா பார்ப்போம்".

'கொள்'ளென்று அனைவரும் சிரித்தனர். முகத்தில் கரி பூசாத குறையாக காலை வாரி விட்டு விட்டாள் பெண். அவனுக்கு சங்கடமாகி விட்டது.

"ஏய்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்".

"சரி சரி.. விடு. உன் ரேஞ்சிற்கு ஒரு சவால்.

நம்ம விநாயகரை உன்னால மடியில வச்சு கொஞ்ச முடியுமா..."

"ஹா ஹா ஹா.. இதெல்லாம் ஒரு சவாலா.. என் ரேஞ்சிற்கு தருவேன்னு பார்த்தா.. பொம்மையை போய் கொஞ்ச சொல்லுற..?!" கிண்டல் தொனித்தது அவன் குரலில்.

"அடங்குடா ரவுடி பையா. நான் சொன்ன விநாயகர்.... யா...யா....யானை பகவான். புரியுதா?" முட்டை கண்ணை விழித்து உருட்டி விளக்கினாள்.

"அய்யய்யயோ.."

"ஹே. அவ்ளோ பெரிய யானையை எப்படிடா மடியில வைக்க முடியும். இதுல வேற கொஞ்சல் குலாவல்ன்னா.. தாங்குமாடா உன் பாடி..? "- ரவுடிகளில் ஒருவன்.

"டேய் நீ சும்மா இரு. இவள் வேணும்ன்னே என்னை வம்புக்கு இழுக்குறா..."

"நான் எப்படிடா உன் ஜாம்பவான் பாடியை இழுக்க முடியும். நானே தூசி மாதிரி இருக்கேன்".- ஆராதனா.

"பாருங்க தலைவா. இவள் என்னையையே வச்சி செய்..ய்..யு..றா"

"ஹா ஹா ஹா..." ஒட்டு மொத்த ரவுடி கூட்டமும் ரவுடி'பேபி'யாக மாறி புன்னகைத்தது.

"சரி விடு. ஒர்ரி பண்ணிக்காத பேபி. இப்போ அடுத்த சவால் சொல்லுறேன். ரொம்ப ஈஸி தான். நம்ம வாம்பயர் இருக்காருலா... டேய் டேய் பேய் முழி முழிக்காதடா.. முழுசா சொல்லி முடிச்சிடுறேன். அதான் நம்ம இரத்த காட்டேரி கொசு அண்ணாச்சி இருக்காருலா அவர்க்கு ஒரே ஒரு தடவை டி...டி..ரஸ் போட்டு விட்டா போதும்". கண்சிமிட்டி சிரித்த படி அப்பாவியாக சொல்லி முடித்தாள் ஆராதனா.

சிரிப்பு வெடி வானுக்கும் மண்ணுக்கும் பறந்தது தான் அடுத்து நடந்தது.

"ஹா ஹா ஹா...."

"ஹைய்யோ அம்மா..."

மானம் போச்சே... என்று கர்சீப்பால் முகத்தை மூடி கொண்டான் அவன். "இனி நான் உன் பேச்சுக்கே வரல. ஆளை விடும்மா..." பெரிய கும்பிடு போட்டு ஒதுங்கி கொண்டான்.

"ஹா ஹா ஹா..."

"சிரிச்சு சிரிச்சே என் வயிறு வெடிச்சிரும் போல... ஹா ஹா ஹா.. "

அவர்களுக்குள் பேசிய படியே, அனைவரும் சிரித்து கொண்டிருந்தனர்.

"சரியான வானரம் நீ.." அதுவரை அமைதியாக இருந்த அவர்கள் தலைவன் இப்படி சொல்லவும் மற்றவர்களுக்கு ஆச்சரியம் ஆகி போனது.

ஆராதனாவிற்கும் கொஞ்சம் நாணம் கலந்த சங்கடமாகி போனது. பதில் என்ன பேசுவது என்று தெரியாமல் வாய் மூடி கொண்டாள்.

சிறிது நேரம் காரில் அமைதி நிலவியது. அது இப்போது அந்த இடத்திற்கு பொருந்தாது போல ஆராதனாவை தவிர அனைவருக்கும் தோன்றியது.

"ஏன் ஸயிலன்ட் ஆகிட்ட...? என்னோட ஆள்களை மட்டும் இவ்ளோ நேரம் கலாய்ச்சியே இப்போ நான் சொல்லுறேன் ஒரு டாஸ்க். அதை முடிஞ்சா செய் பார்ப்போம்". இப்போது பேரம் பேசியது அத்தலைவன்.

என்ன என்பது போல அவன் முகம் பார்த்தாள்.

"இதோ இத்துனுண்டு இருக்கிற எறும்புக்கு அழுத்தமா ஒரு கிஸ் கொடு பார்ப்போம்".

சட்டென கிறீச்சிட்டு நின்றது வண்டி.

"எ..ன்...ன்...ன..ன..து.. எறும்புக்கு கிஸ்ஸ்ஸா... நானா...???"

"ம்ம்ம்.. நீயே தான்".

"என்ன தலைவா சொல்லுறீங்க??".

"ஆமாடா. இவள் வாயை மூட வைக்க அந்த எறும்பால தான் இப்போதைக்கு முடியும். இவள் நான் செஞ்சு காட்டுறேன்னு வீம்புக்கு போய் கிஸ் பண்ணா எப்படியும் அந்த எறும்புகிட்ட கடி வாங்க தான் போற. இதை அவள் செய்யலன்னா அவளோட டீல் படி வாயை மூடிக்கிட்டு வர வேண்டியிருக்கும். சோ எதுனாலும் நமக்கு வசதி தான்".

"தலைவா... நீங்க எங்கேயோ போயீட்டிங்க.."

அவர்களுக்கு முறைப்பை பதிலளித்தவள் அதன் பின் மறந்தும் வாயை திறக்கவில்லை.

"இதோ.. வண்டியை இந்த பக்கம் திருப்பு. ஹ்ம்ம்..."

அவன் வழி சொல்ல சொல்ல அவள் வண்டியை ஓட்டினாள். யாராவது தன்னையே கடத்த தானே வண்டியை ஓட்டி செல்வார்களா.. ? இந்த உலகத்திலே நான் மட்டும் தான் இப்படி செய்திருப்பேன். பெண்ணவள் மனம் நொந்து கொண்டது.

"ம்ம்ம். நிறுத்து வண்டியை. சாவியை குடு". அவள் ஒன்றும் சொல்லாமல் அவன் சொன்னபடி செய்தாள்.

"கீழே இறங்கு". அவன் குரலில் கட்டளை இருந்தது.

பலி ஆடு போல ஒன்றும் பேசாமல் செய்தாள்.

"டேய் அந்த ஆளுக்கு போனை போடுடா. எங்கே இருக்கான்னு கேளு".

"சரி தலைவா".

ஆராதனா சுற்றும் முற்றும் பார்த்தாள். ஆள் அரவமற்ற காலியான இடம். கொஞ்சம் உயரமான இடமாக வேறு தென்பட்டது. ஊரை விட்டு தொலைவில் வந்திருப்பது தூரத்தே தெரிந்த குட்டி குட்டி வெளிச்ச புள்ளிகளின் மூலம் புரிந்தது. கத்தி கூப்பாடு போட்டாலும் ஒரு காக்கா கூட எட்டி பார்க்காது போல.

அட கிருஷ்ணா.. எப்போ வந்து என்னை காப்பாற்றுவ.. அவள் உள்மனம் நம்பியது. நிச்சயம் அவன் வருவான். அது தேஜாவூவோ இல்லை.. அந்த ரவி குலோப்ஜாமுன்னோ.. யாராக இருந்தாலும் சரி. தனக்கு ஒன்றும் ஆகாது. இல்லாத தைரியத்தை எல்லாம் சேர்த்து திடமாக இருக்க பிரயாத்தனப்பட்டாள்.

கண்ணை கூசும் வெளிச்சத்தில் வானில் மின்னல் வெட்டியதில் பெண்ணவள் உள்ளம் கொஞ்சம் நடுங்க ஆயத்தமானது. இதுவரை நண்பர்களை போல சிரித்து பேசிய ரவுடி பேபிஸ் இப்போது இறுகி போய் நின்றிருந்தனர். இவள் பக்கம் திரும்பவே இல்லை. அது வேறு இவள் மனதில் கிலியை பரப்பியது. பொறுக்கமாட்டாமல் வாய் விட்டு கேட்டாள்,

"அட பாவிகளா.. இவ்ளோ நேரம் பல்லை காட்டி சிரிச்சி பேசிட்டு இப்போ யாரோ போல நிக்குறீங்களேடா.. கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா..."

அவர்கள் ஒன்றும் பேசவில்லை.

"நீங்கயெல்லாம் மனுஷ ஜென்மங்களா.. இல்லை காட்டு மிராண்டிகளா.. இப்படி யாருமில்லாத இடத்துக்கு பச்சகுழந்தையை கடத்திட்டு வந்திருக்கீங்க".

அங்கும் இங்கும் நடந்தபடி யாரேனும் தன்னை காப்பாற்ற வருவார்வகளா... அதான் அவளோட தேஜா வூ அப்படின்னு தேடி தேடி பார்த்தும் யாரும் வந்த பாடில்லை..

இப்போது வானத்தில் இடியுடன் கூடிய மின்னல் வெட்டியது. மழை பெய்வதற்கான அறிகுறிகள் கண் சிமிட்ட சிமிட்ட... பெண்ணவள் தேகம் தூக்கி வாரி போட்டது.

இவனுங்களை நம்பி பயனில்லை. கஷ்டப்பட்டு ஃப்ரென்ட் ஆகி எப்படியாவது தப்பிச்சிர்லாம்ன்னு பார்த்தா... ஒன்னும் வேலைக்கு ஆக மாட்டுக்குதே. இப்போ என்ன பண்ண...?!

கண்ணை கூசி கொண்டு தூரத்தில் ஒரு வண்டி வருவது தெரிந்தது. ஒரு வேளை தன்னை காப்பாற்ற தான் யாரும் வருகிறார்களோ..?! என்று ஆவலுடன் பார்த்தாள். இவள் மனதிற்குள் யோசித்து கொண்டிருக்கும் போதே வண்டி அங்கு வந்து நின்றது. அதிலிருந்து ஒரு பெரிய மனிதர் இறங்கினார். இறங்கியதும் அந்த ரவுடிகளிடம் ஏதோ பேசியவர் பின் இவளை நோக்கி வந்தார்.

இவருக்கு என் அப்பா வயது இருக்குமா...? பார்க்க அப்படி ஒன்றும் வில்லத்தனமாக இல்லையே. இவரா நம்மை கடத்தி கொண்டு வர சொன்னது?! மனதிற்குள் கேள்விகள் படையெடுத்தது. அதற்குள் இவள் அருகே வந்தவர் இவளை பார்த்து கேட்டார்.

"ஹ்ம்ம்... சொல்லு... எங்கே அந்த பொருள்?" கடினமாய் இருந்தது ஒவ்வொரு வார்த்தைகளும்.

ஏன் இத்தனை கோபம்.?அப்படி என்னிடம் என்ன பொருள் இருக்கு.?

"நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல".

"புரியலையா...?! ஹாங்... இதை என்ன நம்ப சொல்லுறீயா...? கீர்த்தனாவோட பொண்ணாற்றே... அப்பாவியா தான் பேசுவா".

தன் அம்மாவின் பெயரை சொன்னதும் ஆராதனாவிற்கு இவன் தனதன்னைக்கு தெரிந்தவர் என்பதை குறித்துக் கொண்டது.

"எனக்கு இப்போ உன்கிட்ட பேச நேரமில்லை. எனக்கு கண்டிப்பா தெரியும் . அந்த பொருள் உன்கிட்ட தான் இருக்கு. நீயா கொடுத்தா நல்லது. இல்லை நானா எடுக்க வேண்டியிருக்கும்". கொடூரமாய் அவரது முகம் இப்போது மாறியிருந்தது.

"அய்யோ.. சத்தியமா நீங்க என்ன சொல்லுறீங்கன்னு எனக்கு புரியல". கண்ணில் நீர் நிக்காமல் பெருக அதை உதடு துடிக்க அடக்கியபடி அவரிடம் மாஞ்சாடினாள். பெண்ணவள் இப்போது முழுவதுமாக பயந்து விட்டாள் என்பதை அவளது கண்ணீர் துளிகளே சாட்சி சொன்னது.

அங்கிருந்த யாரும் அவளது நிலையை பொருட்படுத்தவே இல்லை. இப்படி கடத்தல் ஸீன் எல்லாம் சினிமாக்களில் பார்த்தது. இப்படி தனக்கு நேரும் என்று கனவா கண்டாள். யாருமில்லா அந்த இரவில்... நிற்கதியாய் ஒரு பெண்ணாய் ஆண்கள் சூழ நிற்கையில் எந்த பெண் தான் ஐயம் கொள்ளாமல் இருப்பாள்.

தொப்பென தரையில் விழுந்து தன் நிலையை எண்ணி அழுதாள் பெண்.

"ஹ்ம்ம்ச்... முதல அழுகிறதை நிப்பாட்டு. உன்னை யாரும் இங்கே தப்பா எதுவும் பண்ண போறது இல்லை. எனக்கு தேவை அந்த பொருள். அதை கொடுத்துட்டா நான் உன்னை விட்ருறேன்".


"நான் அல்ரெடி உன் வீட்டை செக் பண்ணி பார்த்துட்டேன். உன் ரூம்ல இருந்து தான் வித்தியாசமா ஒளி வந்து. சோ கண்டிப்பா அது உன்கிட்ட இருக்கணும்.

இதுல தேவையில்லாம அந்த குர்க்காவ வேற தூக்க வேண்டியதா போச்சி... "

அழுவதை நிறுத்தி விட்டு நிமிர்ந்து அவர் முகம் பார்த்தாள். என்ன?? இவர் அந்த கு...ர்.. க்..கா..வை.. அப்படியென்றால் அன்று எதேச்சையாக எதுவும் நடக்கவில்லையா..??? இவர் எப்போது இருந்து என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார்..??

குழப்பத்துடன் அவள் அவரது கண்களை ஊடுறுவி பார்த்தாள்.

"ஹ்ம்ம்.. உனக்கு விளக்கமா சொன்னா தான் புரியும் போல" சொல்லியபடி அவளேதிரே அத்தரையில் அமர்ந்தவர், சுற்றியிருந்த அந்த ரவுடிகளை கொஞ்சம் தள்ளி நிற்குமாறு பணித்துவிட்டு அவளிடம் ஒரு புகைப்படத்தை கட்டினார்.

அவளது அம்மா அப்பா சேர்ந்திருக்க கூட ஒரு பெண்மணி அவர் அருகில் இன்னொரு ஆண். விழி விரிய பெண்ணவள் அதை பார்த்தாள்.

"ம்ம். சொல்லு. இதுல இருக்கிறது யாருன்னு தெரியுதா?!".

"எங்க அம்மாவுக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்.?"

"சம்மந்தம் எனக்கும் உன் அம்மாவுக்கும் இல்லை. கூட நிற்கிற இந்த பெண்ணுக்கும் எனக்கும் தான் ஜென்ம ஜென்மான பந்தம் ஆக வேண்டியது. உன் அம்மாவோட அவள் சேர்ந்ததால எல்லாத்தையும் இழந்துட்டு, இப்போ இப்படி உன்கிட்ட வந்து பேசிக்கிட்டு இருக்கிறேன்".

"என்ன சொல்றீங்க..?! எங்க அம்மா யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டாங்க".

"யாரு இப்போ இல்லைன்னு சொன்னா..??!"

"அப்படின்னா...?!"

"ஹ்ம்ம்.. உன் அம்மா பக்கத்துல நிக்குற பொண்ணு பேரு பார்கவி. என்னோட பாருவா ஆக வேண்டியவள்".

பார்கவி என்ற பெயரை கேட்டதும் ஆராதனாவின் நினைவடுக்கில் லேசான நினைவு வந்தது. அப்படியென்றால் இந்த பெண்மணி அம்மாவின் ஃப்ரென்ட் ராஜுவோட மனைவியா தான் இருக்கணும். சிறுவயதில் சில சமயம் அவளது அம்மா இவர்களை பற்றி பேசி கேட்டிருக்கிறாள். இவர்கள் சேர்ந்திருக்கும் புகைப்படம் அம்மாவிடம் இருப்பதையும் பார்த்திருக்கிறாள். அதனால் இப்போது இந்த புகைப்படத்தை பார்த்ததும் நியாபகம் வந்தது.

"நீங்க தான் மித்திரன்..னா??!"

அவர் 'ஆம்' என்பது போல் தலை அசைத்தார்.

"அப்போ உங்க பார்கவி ஏன் அந்த ராஜுவோட நிக்கிறாங்க..?"

அவன் முகம் மீண்டும் விகாரமாய் மாறியது. சில நொடிகள் கண் மூடி எதையோ ஜீரணிக்க போராடியவர், பின் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பினார். அவளை கூர்மையுடன் பார்த்து சொன்னார்,

"அப்போ உனக்கு எல்லா விஷயமும் தெரியும்".

"மேலோட்டமான விஷயங்கள் மட்டும் அம்மா சின்ன வயசுல சொல்லியிருக்கிறாங்க. ஆனால் உங்களை பற்றி தான் தெரியல".

"சொல்லுறேன் கேட்டுக்கோ. இந்த பார்கவி என்னோட மனைவியா வர வேண்டியவ..! அ.. ந்த ராஜசேகர் பார்கவியை மட்டும் பார்க்காம இருந்தி...ரு..ந்..தா இந்நேரம் நானும் பார்கவியும் சந்தோஷமா குடும்பம் நடத்திக்கிட்டு இருப்போம். இடையில் உங்க அம்மா வேற வந்து அவளுக்கு நல்லது பண்ணுறதா நினைச்சி எனக்கு கெடுதல் பண்ணிட்டா".

"அப்போ நீங்க அடுத்தவரோட மனைவியை காதலிச்சிருக்கீங்க...?! அவர்களை அடைய ஏதோ தப்பு பண்ண ட்ரை பண்ணியிருக்கிறீங்க"

"ஏய்....!" பாய்ந்து வந்து அவள் கழுத்தை நெறித்தான். தன் காதலை எவ்வளவு ஈசியாக கொச்சை படுத்துகிறாள். ஆராதனாவிற்கு உயிர் பயம் தொண்டை குழியில் மாட்டி கொண்டு தவித்தது.

"அவள் எப்பவுமே என்னோட காதலி தான். இந்த ராஜசேகர் நேத்து வந்த பையன்" என்று கோபத்தில் பொரிந்து தள்ளியவர் அவரது காதல் கதையை சொல்ல ஆரம்பித்தார்.

தான் பார்கவியின் மேல் வைத்த காதலையும் அதை புரிந்து கொள்ளாமல் ராஜசேகரை அவர் மணந்ததையும், பின் தோழனாக அவருடன் இருந்ததையும்.. அதன் பின்... அந்த டைம் ட்ராவல் பற்றி அவனுக்கு தெரிந்ததை அவளுக்கு புரியும் விதத்தில் அவன் சொந்தகதை சோககதையையும் சேர்த்து... அந்த பயணம் மூலம் தன் காதலை அடைய அவருக்கு தேவையான அந்த பொருளில் வந்து முடித்தார்.
 




deiyamma

நாட்டாமை
Author
Joined
Sep 6, 2020
Messages
63
Reaction score
101
Location
nagercoil
என்ன இது.. ஆள் ஆளாளுக்கு வந்து இன்றைக்கு ஏதேதோ சொல்லிகிட்டு இருக்கிறாங்க. அங்கே ஆபிஸ்ல என்னடான்னா அந்த ரவி பையன் ஒரு கதை சொன்னான். இப்போ இந்த மனுஷர் வந்து ஏதோ உருட்டுக்கட்டை கேம்ன்னு சொல்லுறார். ஒருவேளை அந்த ரவிக்கு இவர் சொல்லுற.. அந்த பொருளுக்கும்.. சம்மந்தம் இருக்குமோ.?

"என்ன... இதை நம்ப சொல்லுறீங்களா.. இந்த காலத்துல போய்... ஏதோ கேம்... மேஜிக் ஸ்டோன்... ப்ளூ ஸ்டோன் அப்படின்னு சொன்னா யாராவது நம்புவாங்களா..?"

"அப்போ நான் சொன்னதை நம்பல. சரி அதை விடு. நீ நம்பு நம்பாம போ. எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் எனக்கு அந்த பொருள் வேணும். அது கண்டிப்பா எங்க இருக்குன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும். ம்ம்ம் சொல்லு.." என்று தொடர்ந்து பேசியவர் சட்டென தன் பேச்சை நிறுத்தினார்.

நெற்றி புருவம் சுருங்க ஒரு நொடி யோசித்தவர்..
"வெய்ட்... வெய்ட்... இப்போ கொஞ்ச முன்ன என்ன சொன்ன....? கேம்.. ஸ்டோன்ன்னு சொன்னாலா...??? நான் கேம்ன்னு மட்டும் தானே சொன்னேன். ப்ளூ ஸ்டோன் அப்படி...ன்...னு எதுவும் சொல்ல...லீ...யே..?!"

ஹைய்யய்யயோ..! அப்போ நானாக தான் உளறிட்டேனா..??! அந்த ரவி பைய சொன்னப்போவே ஒழுங்கா கேட்டுருந்தேனா இந்த நிலைமை வந்திருக்குமா?? அவன் சொன்னது அந்த கல்லா தான் இருக்கும்னு நினைச்சி வாய் தவறி சொல்லிட்டோமே..! அய்யோ.. இப்போ என்ன பண்ண...?! பீதியில் அவளது முகம் கலவரமானது.

"எனக்கே நான் என்ன தேடுறேன்னு தெரியாது. குத்துமதிப்பா எனக்கு தேவையானது உன்கிட்ட இருக்கும்ன்னு நினைச்சி தான் உன்னை கடத்த சொன்னது. ஆனால் நீ சரியா எனக்கு தேவையான பொருள் அந்த கற்கள் அப்படின்னு சொல்லுற.. எப்படி..? "

போச்சி... செத்தேன்...! கரேக்ட்டா பாயிண்ட்ட பிடுச்சிட்டானே..

"என்ன பதிலை காணோம்...? உனக்கு அப்போ அந்த விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சிருக்கு. தெரியாதது போல இவ்ளோ நேரம் அப்பாவியா நடிச்சிருக்க..? அப்படி தானே... ?"

அவள் மாட்டிக்கொண்ட அதிர்ச்சியில் பயந்து போய் நிற்க்கையிலேயே ஓங்கி ஒரு அறை விட்டிருந்தார். கன்னம் எரிந்த பிறகு தான் அவளுக்கு அவர் அடித்ததே உரைத்தது.

"அ...ம்...மா..." வலியில் கத்தினாள்.

"ம்ம்ம்ம்ம்... கத்துடி கத்து.. நல்லா கத்து... நீ இங்கே கத்துறது உங்க அம்மாவுக்கு கேட்கட்டும். அன்றைக்கு மட்டும் புத்திமதி சொல்லி பார்கவியை தடுக்கமா இருந்திருந்தா இந்நேரம் நான் காலத்தையே மாற்றியிருப்பேன். எல்லாம் என்னோட இஷ்டப்படி நடந்திருக்கும்".

அவரது கத்தல் சிங்கத்தின் உறுமலாய் பெண்ணவளை அச்சுறுத்தியது.

"ஆனா எல்லாம் போ..யி... கடைசில என்னோட பா...பா..ர்கவியும் போயிட்டா.. இப்போ வரை அவளுக்கு என்ன ஆச்சின்னு தெரியாம நான் செத்துகிட்டு இருக்கிறேன்" குரல் தழுதழுக்க பேசினார்.

இது அவர் தானா..? குரல் நடுங்க தேம்பி தேம்பி.. சிறு பிள்ளை போல் அழுவது அவர் தானா..?! கொஞ்சம் முன்னே கத்திய கத்தல் எங்கே.. இப்போது இங்கே கண்முன்னே குலுங்கி அழுவது எங்கே...?

ஆராதனா குழம்பி போய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பாவம் மனிதர். இயல்பில் நல்லவர் தான். இந்த காதல் வந்து அவரது நல்ல குணத்தை சோதித்து பார்க்கிறது. அதான் மனிதர் பித்து பிடித்துப்போய் தப்பு வழியில் காதலை அடைய நினைக்கிறார். அப்படி அவர் அடைந்தாலும் அது உண்மையான காதல் சுடராய் ஒளி வீசிடுமா என்ன..?

இயற்கையாக விளைந்த பழங்களுக்கும் செயற்கை முறையில் வளர்ந்த பழங்களுக்கும் எவ்வளவு தான் பார்த்து பார்த்து கவனித்தாலும்.. அதன் சுவை அல்லது போஷாக்கில் கடுகளவேனும் வித்தியாசம் தெரியாமலா போய்விடும்...??? அவர் அழுவதை சிறிது நேரம் வேடிக்கை பார்த்தவள் பின் அமைதியாக கேட்டாள்,

"உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா??"

இவள் என்ன சம்மந்தமில்லாமல் எதையோ கேட்கிறாள் என்று நினைத்தவர் கண்களை துடைத்து தன்னை சரிப்படுத்தியவர் பின் அவளை பார்த்து சொன்னார்,

"ஆமா. ஒரு பெண்ணும் உள்ளாள்".

"உங்கள் மகள் பற்றி சொல்லுங்களேன்.."

மகள் பற்றி கேட்டதும் அவரது முகத்தில் கனிவு வந்திருந்தது.
"சீ இஸ் மை ஏஞ்சல். அவளுடன் இருக்கும்போது மட்டும் தான் என்னோட துக்கம் கவலை எல்லாம் பறந்து போயிடும் அவள் தான் என்னோட உலகமே".

"ஓ.. ஸ்வீட்.. உங்க வைஃப் எப்படி..??"

மனைவியின் நினைவில் புன்முறுவல் பூத்தவர், "அவள் என்னோட எனர்ஜி. வாழ்க்கையில எத்தனையோ முறை நான் அடிப்பட்டாலும் அவள் ஒருபோதும் கலங்குனதே இல்லை. என்னை அவள் எதுக்குமே கவலைப்படவிட்டதே இல்லை. சீ இஸ் மை காட்மாதர், எவ்ரி திங்க்".

"ஏன் கேட்குற..? இப்போ இந்த நேரத்துல இது அவசியமா...??!"

"ஆமா. ரொம்ப அவசியம்". என்று சிறு இடைவெளி விட்டவள் தொடர்ந்தாள்,

"சப்போஸ் நீங்க பார்கவியை மேரேஜ் பண்ணி..யி...ருந்தா இப்போ உங்களோட ஏஞ்சல் அன்ட் காட்மாதர் இன்னொருத்தருக்கு சொ..ந்தமாகி...."

அவரது தாடை இறுகுவதிலே தெரிந்தது அடக்கப்பட்ட கோபம். இருந்தும் அவள் தொடர்ந்தாள்.

"அதாவது இன்னொருத்தருக்கு மனைவியா..."

'ஷிட்.....' சொல்லி முடிக்கவில்லை அதற்குள் கன்னத்தில் விழுந்தது பலமாய் ஒரு அரை. பல்லை கடித்து வலியை தாங்கியவள் நிமிர்ந்து அவர் முகம் பார்த்து மீண்டும் சொன்னாள்.

"யாரோ ஒருத்தருக்கு உங்களோட இன்றைய பொண்டாட்டி, அந்த அவரோட மனைவியாவும்... உங்களோட செல்ல பொண்ணு அந்த முகம் தெரியாதவருக்கு பொண்ணாவும் கூட ஆகியிருக்கலாம் இல்லையா...???"

"என்னடி சொன்ன..??" என்று மீண்டும் அவளை அடிக்க கை ஓங்கியவரை தடுத்தவள்,

"சோ உங்க பொண்ணு, பொண்டாட்டின்னு வர்றப்போ மட்டும் கோபம் பொத்துக்கிட்டு வருதாக்கும்..?! அடுத்தவனுக்குன்னு சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னாலே உங்களுக்கு இவ்ளோ கோபம் வருதே... நீங்க மட்டும் இப்போ என்ன பண்ணுறதா இருந்தீங்க..? அடுத்தவரோட மனைவியை உங்களோட மனைவி இடத்துல வச்சி பார்க்கிறீங்க.. இது எப்படி நியாயம் ஆகும்..? ஹாங்... சொல்லுங்க.. இப்போ மட்டும் ஏன் அமைதியா இருக்கிறீங்க..?

உங்கள் பொண்டாட்டி மட்டும் உங்களுக்கு உத்தமமா இருக்கணும் ஆனால் நீங்க ஊர் மேயனுமா...??"

"ஏய்.. பேசணும்ன்னு என்ன வேணும்னாலும் பேசாதா..! பல்லை பேர்த்திடுவேன். என்னோட மனைவியையும் பெண்ணையும் யாருக்காகவும் என்னால விட்டுக்கொடுக்க முடியாது. இனி ஒரு தரம் அவர்களை வேற யார்கூடயாவது சேர்த்து வச்சி பேசுனா... நான் மனுஷனா இருக்க மாட்டேன்". விரல் நீட்டி எச்சரித்தவரை அலட்சியமாக பார்த்தவள்,

"ஓ.. அது சரி. அப்போ நீங்க சொன்ன அந்த டைம் ட்ராவல்... அது மட்டும் எதுக்காக..??"

முகத்தில் கோபம் கொப்பளிக்க நின்றிருந்தவர் சட்டென அமைதியாகிவிட்டார்.

"நீங்க காலத்தையே மாற்றி அமைக்கணும்ன்னு தானே ஆசை படுறீங்க.. அப்படி இருக்கும்போது... உங்கள் மனைவி மகள் எதுக்கு..? அவர்களையும் தூக்கி தூர போட வேண்டியது தானே.. உங்களோட காதலி அடுத்தவரோட மனைவின்னு ஆன பின்னும் அவர்களை அடைய நினைக்கிறது மட்டும் எந்த விதத்தில நியாயம்...?? அதுவும் சொல்லாத ஒரு தலை காதல்..!

உங்க காதலி வேணும்னு தானே இவ்ளோ தூரம் தப்பான வழியில நடந்திருக்கிறீங்க.. அப்படி ஒருவேளை நீங்க காலத்தை மாற்றி அமைத்தால்.. நான் சொன்னது தானே நடக்கும்..!

உங்க மனைவியை இன்னொருவருக்கு தாரம் வார்த்து கொடுத்துட்டு.. உங்களோட காதலியோட டூயட் பாடுவீங்களா.. அது தான் உங்களோட ஆசையா..??"

தீக்கங்குகளாய் அவளது கேள்விகள் நெஞ்சில் பாய்ந்தது. துடிதுடித்துப் போனார். இத்தனை நாட்களாய் இதை எப்படி யோசிக்காமல் போனேன்...? அவர்கள் இல்லாமல் என்னால் ஒரு வாழ்வை எப்படி எண்ண முடியும்..?? அப்படியென்றால் என் காதல் பொய்யா..? கலக்கம் சூழ ஆராதனாவை பார்த்தார்.

அவரது குழப்பத்தை புரிந்து கொண்டவள் சொன்னாள்,

"உங்களோட காதல் பொய்யின்னு இப்போ யாரு சொன்னா..? அது உண்மையா இருக்க போயி தானே உங்கள் மனைவி மகள்ன்னு யோசிக்காமல் இத்தனை வருஷமா அந்த டைம் ட்ராவல் பற்றியே யோசித்திட்டு இருந்திருக்கீங்க..!!"

"பின்னே... என்ன தான் சொல்கிறாய்...??"


"காதலிச்ச பொண்ணு கிடைக்கலன்னா அந்த காதல் அதோட முடிஞ்சிடுமா என்ன..?! உங்களோட நெஞ்சுல சாவுற வரைக்கும் பிரெஸ்ஸா இருக்குமா இருக்காதா...? இதே இது அந்த காதல் கல்யாணத்துல முடிஞ்சிருந்தா அதோட முடிஞ்சிருக்கும். ஆனால் காதல் சேராமல் போகும்போது தான் இ..ன்னும் இ..ன்னும் ஆழமா மனசுக்குள்ள வேர் விட்டு நீக்கும். அதுக்கு தான் பவர் அதிகம்.

அந்த காதலை தாண்டி பொண்டாட்டி பிள்ளைன்னு நிறைவா ஒரு வாழ்க்கை வாழலாம். ஆனால் அந்த காதல்.. முதல் காதல்.. நமக்குள்ள ஒரு வித மாயம் பண்ணும். நம்மளோட நினைவுகளை இனிமையாக்கும் ரொம்ப ரொம்ப... அதுக்காகவே அந்த லவ் தோத்துப் போனதுக்கு சந்தோஷ படலாம்.

அபகரிக்கிறது அன்பு இல்லை.. அரவணைக்கிறது தான் அன்பு....!

நீங்க மனசு வச்சா இந்த உணர்வில் இருந்து விடுதலை தரலாம். உண்மையா சொல்லுறேன் உங்களை யாருக்காவது பிடிக்கலன்னா விடுதலை கொடுங்க. சந்தோசமா வாழணும்ன்னு விடுதலை கொடுங்க. அந்த கண்ணு இருக்குதுலா.. நீங்க காதலிச்ச பொண்ணோட கண்ணு.. அதுல இருந்து கண்ணீர் வரவே கூடாது. அப்படி பார்த்துக்கணும்... உரிமையா கிட்ட இருந்து இல்லை. விலகி இருந்து.. அது தான் லவ். அந்த இடத்துல தான் உங்களோட லவ் உசந்து நிக்குது.

அந்த பொண்ணு நல்லா இருந்துச்சின்னு வைங்க.. உங்களோட பொண்ணு இன்னும் நல்லா இருக்கும். பியூச்சர்ல்ல உன் பொண்ணுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா கூட, அது சொல்லும் என் அப்பா...டா.. எவ்ளோ பெரிய ஜென்டில்மேன் தெரியுமா..??! பொண்ணுங்களை மதிக்க தெரிஞ்ச ஒரு ஆண்மகன் எனக்கு அப்பாவா இருக்கிறார்ன்னு சொல்லும்...!

இப்போ சொல்லுங்க.. உங்களோட முடிவு என்னன்னு.. காதலை அடைய தப்பான வழியில போக போறீங்களா..??! இல்லை உங்க பொண்ணோட மனசுல ஹீரோவா இருக்க போறீங்களா..??"

இருளின் நிசப்தம் மட்டுமே சில நொடிகள் அங்கே. தூரத்தே தெரிந்த ஒளி விளக்குகள் நகரத்தின் இரவு நிலையை பிரதிபலிக்க, மனதில் ஏதோ யோசித்தவராய் அதையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அவரிடம் பேச வார்த்தைகள் இல்லை. இதயத்தில் ஆணி அடித்தார் போல கேள்விகளால் துளைத்தவள்.. நிதர்சனத்தை எவ்வளவு அழகாய்... சொல்லி விட்டாள் இந்த பெண்.. அப்படியே அவள் அம்மா கீர்த்தனா மாதிரியே பேசுறா...

தான் செய்ய இருந்த காரியத்தின் வீரியம் நெஞ்சில் அமிலமாய் எரிந்தது. இந்த பெண் மட்டும் வராமல் இருந்திருந்தால்... நா.. நா..நான்.. என்ன காரியம் செய்திருப்பேன்... நினைக்கவே நெஞ்சம் வலித்தது.

நிமிர்ந்து அவள் முகம் பார்த்து சொன்னார்.

"தாங்கஸ்.. ரொம்ப பெரிய உதவி செஞ்ச.. என்னை என் பொண்ணோட மனசுல ஹீரோவா ஆக்குனதுக்கு.. நான் என்னைக்கும் உனக்கு கடமை பட்டுருக்கேன்.

வா.. நானே உன்னை வீட்ல விட்ருறேன். உன் அம்மாட்ட பேசுறேன்".

"சரி. வாங்க போகலாம்" என்று எழ முற்பட்டவள், அவ்வளவு நேரம் கால் மடக்கி அமர்ந்து இருந்ததால் கால் மரத்து போயிருக்க.. நிலை தடுமாறி.. அருகிலிருந்த பள்ளத்தில் எதிர்பாரமல் விழுந்தாள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அவரும் அந்த ரவுடிகளும் திகைத்துப் போய் நிற்க... அங்கே காலத்தின் விதி மேகப் பெண்ணை பிரசவிக்க செய்து தனது இருப்பை மழையாக அறிவித்தது.

பிடிக்க பிடிமானம் ஏதும் இல்லாமால் அவள் சரசரவென கீழே போய் கொண்டே இருந்தாள். வானத்திலிருந்து கொட்டும் மழை மட்டுமே இப்போது அவளை கட்டி தழுவியது. நெஞ்சம் படபடக்க... உள்ளத்தில் தங்கியிருந்த பயம் வீறு கொண்டு எழ.. பெண்ணவள் உள்ளம் தானாக அவனை தேடியது. நெஞ்சோடு கைகளை இறுக்கி பிடித்திருந்தவள் தேஜா வூ நினைவாக அவள் கழுத்தில் அணிந்திருந்த அந்த கற்களை உள்ளங்கையில் தாங்கி பிடித்தபடி,

"தே....ஜா வூ..! நான் நம்புறேன்.. உ...ன்னை நம்புறேன்.. பிளீஸ் சேவ் மீ..! ர..ர...வி....!" உயிரை குரலில் தேக்கியப்படி அந்த கற்களுக்கு தன் மூச்சு காற்று மூலம் உயிர் கொடுத்தாள்.

அந்த நிலா ஒளியில், மழை துளிகள் அந்த கற்களில் பட்டு சிதற... உள்ளங்கையின் கதகதப்பில் அந்த கற்களுக்கு வெட்பம் கிடைக்க... அவள் மூச்சு காற்று தூங்கி கிடந்த கற்களுக்குள் உயிர்மூச்சினை பரப்பியது...

அது வெறும் சாதாரண கல் என்று நினைத்திருந்தவள் சிறிதும் அறிந்திருக்க மாட்டாள். அது ஒரு மாய சக்தி கொண்ட கல் வடிவத்தில் உள்ள 'நண்பன்' என்று.

அவள் 'ரவி'... 'தேஜா வூ'.. என்று மாற்றி மாற்றி புலம்பி கொண்டே ... அந்த மலைச் சரிவிலிரிந்து கீழே விழுந்து கொண்டிருந்தாள்.

"வீழ்கிறேன் நான்...
உன்னுடன் வாழ்வதற்கே..!"
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
டெய்யம்மா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top