• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ -25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

deiyamma

நாட்டாமை
Author
Joined
Sep 6, 2020
Messages
63
Reaction score
101
Location
nagercoil
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ
அத்தியாயம் 25 (a)

உடல் சாய்ந்தாலும்
உன்னை சேர்ந்திடுமே..
என் ஆன்மா..!


மித்தரனுடன் உரையாடிய பின்பு எல்லாம் சுபமாய் முடிந்த திருப்தியில் பெண்ணவள் ஆராதனா சட்டென்று எழ எதிர்பாராமல் கால் வழுக்கி அங்கிருந்த பள்ளத்தில் சரிந்தாள். அங்கிருந்த யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. ரவுடிகளும் மித்ரனும் திகைத்துப் போய் இருக்கையிலே, அவள் பிடிப்பதற்கு எந்த பிடிமானமும் இன்றி வேக வேகமாய் கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தாள். காற்றிலே மிதக்கும் இலையை போல கீழே சரசரவென விழுந்து கொண்டிருந்தாள்.

அப்போது அவள் என்ன நடக்கிறது என உணரும் முன்னே, சட்டென்று காற்றில் மிதக்கும் காகிதம் போல அந்தரத்திலே மிதந்தாள்.

எ..எ..எ..ன்..ன.. நாம் இன்னும் கீழே விழவில்லை?! நமக்கு ஒன்றும் ஆகவில்லையா..? என பயத்தில் மூடியிருந்த கண்களை திறந்து பார்த்தவள் ஆச்சரியத்தில் அதிர்ந்தாள்.

அவள் எந்தவித சப்போர்ட்டும் இல்லாமல் மிதந்து கொண்டிருக்கிறாளா..?? எப்படி..? அவள் ஆராய்ச்சியிலிருக்கும் போதே, அந்த கற்கலிலிருந்து ஒரு மாய ஒளி வீசியது. அது அவளை ஏதோ ஒரு மந்திர உலகத்தில் பயணிக்க வைத்தது. உடல் நடுங்க..இமைகளை மூட மறந்து.. ஆச்சரியத்தில் இதழ்கள் பிரிந்திட.. சுற்றிலும் நிறங்கள் அங்கும் இங்கும் பாய.. கண்கள் கூச.. பெண்ணவள் அதுனுள் தொப்பென விழுந்தாள்.

அவளை சுற்றி இப்போது காலங்கள் பின்னோக்கி ஓடி கொண்டிருந்தது. எதுவும் சரிவர புரியவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ள முடிந்தது அவளால். தாம் ஏதோ கால சக்கரத்தில் பயணிக்கிறோம் என்பதை அவளால் அனுமானிக்க முடிந்தது. ரவி சொன்னதும் அந்த மித்ரன் சற்று முன் கூறியதும் இதை பற்றி தானோ..?! சிந்தனையிலிருக்கும் போதே அந்த வண்ண சுழல் சட்டென ஓரிடத்தில் வந்து நின்றது. சுற்றிலும் ஒரே இருட்டு. கனவு காண்கிறோமா நாம்? பெண்ணவள் தன்னை சுற்றி என்ன நடக்கிறதுவென புரியாமலே கவனித்துக் கொண்டிருந்தாள். சட்டென அந்த ஒளி வெள்ளம் குறைந்து ஓரிடத்தில் வந்து நின்றாள்.

தான் எங்கு இருக்கிறோம் என சுற்றிலும் பார்வையை சுழல விட, அவள் இது வரை பார்த்திராத இடமாக இருந்தது. ஏதோ ஒரு நகரத்தின் வீதியில் நிற்பது புரிந்தது. வீடுகள் மற்ற கட்டிடங்கள் எல்லாம் பழைய அமைப்பில் இருந்தது. நெருக்கடியாக இல்லாமல் கொஞ்சம் இடைவெளிவிட்டு அவை அமைந்திருந்தன. தெரு விளக்குகள் நிலா ஒளிக்கு போட்டியாக ஜொலிக்க அந்த இடமே வித்தியாசமாக பெண்ணவளுக்கு பட்டது.

அப்போது அங்கே தூரத்தே யாரோ நடந்து வரும் அரவம் கேட்கவே பார்வையை அங்கே திருப்பினாள். அந்த ஆள் பார்க்க சைக்கோ மாதிரி இருந்தான். அவன் பின்னே ஒரு சிறுகுழந்தை பின்தொடர்ந்து வருவது தெரிந்தது. அவன் பெண்ணாக இருக்குமோ..? பார்க்க பக்கா குடிகாரன் மாதிரி இருக்கிறான் இவனை நம்பி குழந்தையை தாய்காரி அனுப்பி வைத்திருப்பாளோ. ச்...ச்..ச.. இருக்காது.

இவன் இந்நேரத்தில் எங்கே போகிறான், அதுவும் இருட்டு பக்கமாய். அறிந்து கொள்ளும் ஆவலில் அவன் போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது இவளை நோக்கி அவர்கள் வருவது தெரிந்தது. எதுவோ தோன்ற பெண்ணவள் அவர்களுக்கு தெரியாமல் மறைந்து நின்று கொண்டாள்.

அவன் இவளை கடந்து சென்றான். பின்னால் அந்த சிறுமியும் வந்துக் கொண்டிருந்தாள். அச்சிறுமி இவளை கடந்து செல்கையில் அதிர்ந்து போய் விட்டாள் ஆராதனா. ஏனென்றால் அந்த சிறுமி இவள் தான். ஆம்! ஆராதனாவே தான். இவளது சின்ன வயதில் இருக்கும் அந்த 'குழந்தை ஆராதனா'. சிறு வயது ஆராதனா..! அப்படியென்றால் என் கடந்த காலத்திற்கு நான் வந்திருக்கிறேன்னா?? நான் பெரிய பெண்ணாக இருக்கிறேன். இந்த பெண் சிறுமியாக இருக்கிறாளா?! அப்படியென்றால் இங்கே இருப்பது இரண்டு ஆராதனா ! குழந்தை பருவ ஆராதனா ஒன்று, பெரிய பெண் ஆராதனா ஒன்று.

இது எப்படி சாத்தியம்?! அதிர்ச்சியில் ஆராதனாவிற்கு மயக்கமே வரும் போலிருந்தது. இருந்தும் இருக்கும் நிலை எண்ணி தன்னை சுதாகரித்துக் கொண்டவள் மெதுவாக அவர்கள் பின்னே யாருமாறியாமல் மறைந்து சென்றாள். அங்கே அவன் யாருமற்ற இடத்தில் அந்த சிறுமியிடம் தப்பாக நடக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். இவளுக்கு தூக்கிவாரி போட்டது. அய்யோ! இந்நிகழ்ச்சி பார்ப்பதற்க்கு அப்படியே சிறு வயது ஆராதனாவிற்கு நடந்தது போல இருந்தது. எப்படி இது..?? என்று அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே எங்கிருந்தோ ஒரு சிறுவன் ஓடி வந்தான். அந்த சைக்கோ மனிதனை தள்ளி விட்டு அந்த குழந்தையை காப்பாற்ற முயன்றான்.

அவனோ முரடன். இவனோ சிறுவன். அவனிடம் இச்சிறுவனது மோதல் எடுபடுமா என்ன..?? அந்த குடிகாரன் ஒரே தள்ளு. அந்த பையன் இவள் காலடியில் வந்து விழுந்தான். எழுந்தவன் இவள் இருப்பதை பார்த்து,

"ஆன்ட்டி என்ன பார்த்துக்கிட்டு நிக்கிறீங்க. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க". என்று ஆராதனாவின் கைகளை பிடித்து இழுத்து சென்றவன் அவள் கையில் கீழே கிடந்த பெரிய கல்லை கொடுத்தவன் "பிடிங்க ஆன்ட்டி. இதை அவன் மேலே போடுங்க" சொல்லிவிட்டு அவன் அங்கே தூரமாய் கிடந்த கட்டை ஒன்றை எடுத்து வந்தான்.

அதற்குள் அவன் அச்சிறுமியிடம் மீண்டும் தவறாக நடக்க முயல, அந்த குழந்தை பயந்து போய் வீறிட்டு அழ, இங்கே ஆராதனா நொடியும் தாமதிக்காமல் அந்த குடிகாரன் மேல் கல்லை வீசினாள். அது அவனது முதுகை பதம்பார்த்தது.

"அய்யோ!அம்மா!" அலறியபடி கீழே விழுந்தான். அந்த சிறுவனும் இது தான் சமயம் என்று அவனை அடி வெழுத்து வாங்கிவிட்டான். அவன் மயக்கம் போட்டு விழும்வரை அச்சிறுவன் விடவில்லை. அப்படி ஒரு முரட்டு அடி. இந்த சிறுவனுக்குள் இவ்வளவு சக்தியா..?! சிந்தனையிலிருக்கும் போதே ஆராதனாவை அந்த 'குழந்தை ஆராதனா' கட்டி அணைத்துக் கொண்டாள். தேம்பி தேம்பி அழுத குழந்தையை ஆறுதல் படுத்தினாள் பெரியவள்.

"ஒன்றுமில்லைடா. கண்ணை துடை. அதான் நாங்க வந்துட்டோம்ல. அழாத குட்டிமா.. என் அம்மு குட்டியில்ல.." செல்லம் கொஞ்சியபடி கண்ணை துடைத்துவிட்ட அவளது கைகள் அப்படியே நின்றது. என்ன இது...? என்னையே நான் சமாதான படுத்துகிறேனா..? அம்மு என்று எனக்கு நானே கொஞ்சி கொள்கிறேனா..? என்ன நடக்கிறது இங்கே..? ஆயசமாக உணர்ந்தாள் ஆராதனா.

"ஹ்ம்ம்... கொஞ்ச நேரத்துக்கு இவன் எழுந்திருக்க மாட்டான் ஆன்ட்டி, நீங்க வாங்க. அம்மு குட்டியை அவுங்க அம்மாட்ட கொண்டு போய் விட்ருலாம்"

"அம்மு.. உனக்கு ஒன்றும் ஆகலையே...?" குழந்தையின் கண்ணீரை துடைத்து விட்டப்படி கேட்டான் சிறுவன்.

ஆராதனாவிடம் இருந்து பிரிந்து அவனை கட்டி அணைத்துக் கொண்டது. குழந்தையின் முதுகை ஆதரவாய் தட்டிக் கொடுத்தவன்.

"ஷ்.. ஷ்... ஒன்றும் இல்லைடா.. அதான் நாங்க வந்துட்டோம்ல.. அழுகாதடா.. என் அம்முல..?!"

கன்னத்தில் விழுந்த கண்ணீரை தன் கரங்களால் துடைத்து விட்டான் அவன். உதடு பிதுக்கி அழும் குழந்தையை சமாதானப் படுத்தியவனிடன்,

" நா..நா..னு... ரொ...ம்ப பயந்த்துட்டேன் பப்பு..." என்று மீண்டும் விட்ட அழுகையை தொடர்ந்தது அக்குழந்தை.

"முதல அழுவுறதை நிறுத்து.. இப்படி தான் யார் என்ன வாங்கி தாரேன்னு சொன்னாலும் பின்னாடி போயிருவீயா? மம்மிட்ட சொல்ல தெரியாது? இனி ஒரு தரம் இப்படி பண்ணு..!!? உனக்கு இருக்கு. ஹ்ம்ம் எழுந்திரு. வீட்டுக்கு போகலாம்".

சொல்லிவிட்டு அந்த சிறுவன் நடக்க ஆரம்பித்தான்.

ஆராதனாவும் 'குழந்தை ஆராதனா'வை தூக்கி கொண்டு அவன் பின்னே சென்றாள்.

மனதில் ஆயிரம் கேள்விகள் இருந்தும் பெண்ணவள் ஆராதனா வாய் திறக்கவில்லை. அவளால் நடப்பதை இன்னும் நம்பமுடியவில்லை. தன்னுடன் நடந்து வந்து கொண்டிருக்கும் சிறுவனை பார்த்தாள்.

அந்த கண்கள், மூக்கு, இதழ்கள், தாடை எல்லாம்... எங்கேயோ பார்த்தது போல இருந்தது. இந்த சிறுவன் யாராக இருக்கும்..?? பார்ப்பதற்கு அந்த குலோப்ஜாமூன் ரவி மாதிரியே இருக்கிறானே. எப்படி?!

அவள் வாய் திறந்து எதுவோ கேட்க வரவும், அங்கே ஒரு பெண் பதற்றத்துடன் இவர்களை பார்த்து கூக்குரலிட்ட படியே வந்தாள்.

அ..து.. அ..து..அந்த பெண்மணி கீர்த்தனா தானே. அது ஆராதனாவின் அம்மா தானே.

"அ..ம்..மா.." அதிர்ந்து நின்றாள் பெரியவள் ஆராதனா.

"என் கண்ணே..!" என்று பாய்ந்து வந்தவர், பெரியவள் ஆராதனாவிடம் இருந்து குழந்தை ஆராதனாவை வாங்கி கொண்டார். குழந்தையின் முகத்தை கைகளில் தாங்கியபடி முத்தங்கள் பல கொடுத்தவர், இவளிடம் நன்றி உரைக்கவும் அங்கே கூட்டம் கூட ஆரம்பித்தது. தேவேந்திரன் வதனா மற்றும் சில உறவினர்கள் வந்து விட்டனர்.

இவளை அந்த கூட்டத்திலிருந்து விலக்கி வெளியே கூட்டி வந்த அச்சிறுவன், "ஆன்ட்டி நான் கிளம்புறேன். சான்ஸ் கிடைச்சா மீண்டும் பார்க்கலாம்". சொல்லிவிட்டு அவள் கண்முன்னே அவன் மாயமாய் மறைந்து விட்டான்.

'ஆ..ஆ...இவன் எங்கே போனான்..? என்னை போய் ஆன்ட்டி என்று அழைக்கிறானே. பாவி! நான் உனக்கு ஆன்ட்டியாடா?! வார்த்தைக்கு வார்த்தை ஆன்ட்டின்னு கூப்பிடுறானே. ஹைய்யோ... ஆண்டவா! இந்த கொடுமையை எங்கே போய் சொல்லுவேன்.'

அவள் அவன் மறைந்த அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நிற்கும்போதே அவளும் ஒரு மாய சூழலில் மாட்டிக் கொண்டாள்.

மீண்டும் அவள் எங்கோ சென்று கொண்டிருந்தாள். இந்த முறை கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு சுற்றுப்புறம் நடப்பதை மனதில் உள்வாங்கி பார்த்தாள். அந்த வண்ண சூழல் அவளை இப்போது அவர்கள் காலனிக்கு செல்லும் ஒரு தெருவில் கொண்டு வந்து விட்டது. எங்கே யாரையும் காணோம். எல்லோரும் எங்கே போய் தொலைந்தார்கள்..?

அங்கும் இங்கும் இவள் பார்வையை சுழல விட்டு தேடிக் கொண்டிருக்கையில், கையில் குளிர் கண்ணாடியும், சாம்பல் நிறத்தில் சட்டையும், கருப்பு நிற ஜீன்ஸ்ஸும் அணிந்திருந்த டீன் ஏஜ் பையன் ஒருவன் அங்கே ஓரமாய் நிற்பது தெரிந்தது. அவன் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தான். ஏதோ ஒன்று அவனிடம் இருக்கும் சுற்றுப்புறத்திற்கு பொருந்தாது போல இருந்தது. அவனும் அவன் உடையும் ஒரு தினுசாக இருந்தது. இருந்தும் இப்போது அவள் இருக்கும் சூழ்நிலைக்கு அவனிடம் பேசினால் ஏதாவது தகவல் கிடைக்கும் என்றெண்ணத்தில் அவனை நோக்கி சென்றவள்,

"டேய் பையா!" அழைத்தவள் அவன் திரும்பி இவள் முகம் பார்த்ததும் அதிர்ந்து போய் விட்டாள்.

"ஏ...ய்.. நீ.. நீ.. நீ... ர...வி தானே..??"

"ஆ..ஆ...மா... உங்களுக்கு எப்படி என்ன தெரியும்..??! நீங்க யாருக்கா?!" திணறிய படி கேட்டவனை முறைத்தவள்,

"துறைக்கு எதுவும் நியாபகம் இல்லையோ..?? இப்போ என்னடா சொன்ன... நான் உனக்கு அக்காவா...?? டேய்...!

எல்லாம் என் நேரம்டா.. எல்லாம் உன்னால தான்.. நான் இங்கே வந்து முழிச்சிக்கிட்டு நிக்குறதுக்கு காரணமே நீ தான்.. நீ என்ன..டா.. ன்..னா.. அக்கா... மக்கான்னு.."

"ஷ்.. ஷ்.. அக்கா பிளீஸ் கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க. நானே ரொம்ப நாள் கழிச்சு முக்கியமான ஒரு ஆளை பார்க்க வந்திருக்கிறேன். நீங்க வேற சத்தம் போட்டு, தேவையில்லாத கதை பேசி என்னோட நேரத்தை வீணடிச்சிராதீங்க"

"டேய்... யாரு யாரோட நேரத்தை வேஸ்ட் பண்ணுறது...??! ஆமா.. நான் உனக்கு அக்காவாடா..?? இன்னொரு தடவை அப்படி கூப்பிட்டு பாரு.. அப்போ இருக்கு உனக்கு கச்சேரி" அவன் அக்கா என்றழைத்த அதிர்ச்சியில் ஆராதனா அவனை தாளித்து கொண்டிருக்கையில், அவர்களை கடந்து யாரோ செல்வது தெரிந்தது.

ஆராதனாவும் ரவியும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்று கொண்டிருந்ததால், அவளால் தன் பின்புறமிருந்து தன்னை கடந்து சென்ற அந்த நபரின் முகத்தை பார்க்க முடியவில்லை. அந்த நபர் அணிந்திருந்த யூனிபார்ம் அவள் பள்ளிச் செல்லும் மங்கை என்பதை பறைசாற்றியது.

அது சரி இவன் எதற்கு இப்போ அந்த பொண்ணை இப்படி வெறித்துப் பார்க்கிறான்..?! வில் புருவத்தில் கேள்வி நாண் ஏற்றி எதிரில் நின்றவனை முறைத்தாள். அந்த முறைப்பை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டு விட்டு அவன் அந்த பெண்ணின் மீதே கண்ணாக இருந்தான். முகத்தில் அவ்வளவு மென்மை. ஏதோ பார்க்க கிடைக்காத பொருளை அதிசயித்து பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தான்.

"டேய்.. ஜாமூ! என்னடா பார்க்குற..?" பதிலேதும் சொல்லாமல் அவன் அந்த தேவதையை தரிசித்துக் கொண்டிருந்தான்.

'விளங்கிடிச்சி...! இவன் இப்போதைக்கு திரும்ப போறது இல்லை'. தலையில் அடித்துக் கொண்டவள் தலை திருப்பி அந்த பள்ளி சிறுமியை பார்த்தாள். சாதாரணமாக நடப்பது போல இருந்தாலும் அவள் நடையில் ஏதோ வித்தியாசம் இருப்பது போல தெரிந்தது. 'இந்த பெண் ஏன் ஒரு மாதிரி நடக்கிறாள். எங்கேனும் அடி பட்டிருக்கிறதா...?' யோசனையில் இருக்கும் போதே.. தன் அருகிலிருந்த டீன் ஏஜ் ரவி அந்த பெண் பின் ஓடி சென்றான்.
 




deiyamma

நாட்டாமை
Author
Joined
Sep 6, 2020
Messages
63
Reaction score
101
Location
nagercoil
"டேய் டேய்... எங்கடா போற.. நில்லுடா..." உன்னோட பெரிய ரோதனையா போச்சு. மூச்சிரைக்க ஆராதனாவும் அவன் பின்னே ஓடினாள்.

அங்கே டீன் ஏஜ் ரவி அந்த பள்ளி குழந்தையிடம் ஏதோ பேசிக் கொண்டிருப்பது புரிந்தது. அந்த பெண் எதையோ அசௌவுகரியமாக உணர்வதை போல நெளிந்து கொண்டிருந்தாள் .

'படவா ராஸ்கல்.. ஆபிஸ்ல வச்சி என்கிட்ட லவ் சொல்லி கிஸ் வேற பண்ணிட்டு.. நீ இந்த பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டு இருந்துருக்க. மவனே உனக்கு இருக்குடா கச்சேரி' அவனை அடிக்க கைகள் பரபரக்க, கைகளை தேய்துவிட்டப்படி அவனை நோக்கி சென்றாள்.

அவன் தான் அணிந்திருந்த மேல் சட்டையை கழற்றி அந்த பெண்ணிடம் கொடுப்பது தெரிந்தது.

"அட பாவி மவனே.. பட்டப் பகலில் இப்படி பிகேவ் பண்ணுறீயேடா. வெட்கங் கெட்டவனே..! இருடா.. இதோ வரேன்".

விறு விறுவென சென்றவள் அவனது தோள் பட்டையை அழுத்தி பிடித்து சுட சுட தன் கோபத்தை காட்ட நினைக்கையில் அவன்அந்த டீன் ஏஜ் ரவி சட்டென இவளது துப்பட்டாவை உருவினான்.

"ஹைய்யோ... என்னடா பண்ணுற..?!" அதிர்ச்சியில் ஆராதனா நிற்க்கையிலேயே, அவன் அந்த சிறுமியின் கால்களில் வழிந்தோடிய குருதியை துடைத்து விட்டான். அப்போது தான் ஆராதனாவும் அதை கவனித்தாள், அந்த பெண்ணின் ஆடையை.

'ஷிட்... இது தான் விஷயமா... இதை போய் நான் தவறாக நினைத்து விட்டேனே..??'

நிமிர்ந்து அந்த பெண்ணின் முகம் பார்த்தாள் ஆராதனா. ஹை வால்டேஜ் ஷாக்.. 'ஹைய்யோ... இது நானா... திரும்பவும் நானே தானா..?! நானே என்னை மீண்டும் மீண்டும் சந்தித்துக் கொள்கிறேனா..? என்னோட ஒவ்வொரு பருவத்திலும் எனக்கு நானே உதவி செய்து கொண்டேனா..? அப்படி என்றால் அந்த ரவி கூறியது அனைத்தும் உண்மை என்றல்லவா ஆகிறது..???' அத்தனை குழப்பத்திற்கும் தீர்வு கிடைத்தது போல இருந்தது பெரியவள் ஆராதனாவிற்கு.

அந்த பள்ளி சீருடை அணிந்த ஆராதனா, ரவி கொடுத்த சட்டையை அவளது இடுப்பில் கட்டிக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் கலக்கம் விலகி நிம்மதி திரும்பியிருந்தது.

"ஹ்ம்ம்... இவ்ளோ தான்மா விஷயம். புரியுதா? தைரியமா போ. உன் வீடு வரை உனக்கு துணையா நான் வரேன். சரியா? உன்னை யாரும் தப்பா பார்க்க மாட்டாங்க. அதுக்கு நான் கேரண்ட்டி".

அந்த பள்ளி செல்லும் ஆராதனா முகத்தில் புன்னகை கீற்றின் சாயல். ரவியின் முகத்திலோ எதையோ சாதித்த உணர்வு..

'இதோடா.. இங்க என்ன நடக்குது? கம்பர் சொன்னது போல, "அவனும் நோக்கினான்.. அவளும் நோக்கினாள்.." அப்படிங்கிற ரேஞ்சிற்கு ரெண்டும் விழி வழி காதல் கீதம் பாடுது. ஹ்ம்ம்... என்னடா ரவி.. ஹீரோவாகலாம்ன்னு ட்ரை பண்ணுறீயா...?? எல்லாம் தெரிஞ்ச நான் இங்கே குத்துகல்லாட்டம் நிக்கிறப்போ அப்படி நடக்க விட்ருவேனா...??!

முதல என்னடான்னா என்னை ஆன்ட்டின்னு சொன்ன.. இப்போ உறவு முறையே மாத்தி அக்கான்னு சொல்லுற. இது பியூச்சர்க்கு நல்லது இல்லை..யே ..டா எ..ன்..ன்..னோ..ட ஸ்வீட் குலோப்ஜா..ம்..ம்..மூ...மூ...!

சோ இன்னும் எதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கிற ஆரு... யூ ஸ்டார்ட்டு..டூ..'

என்றபடி அவனை பின் தொடர்ந்து சென்றாள் பெரியவள் ஆராதனா. அதற்குள் அந்த ரவி அந்த பள்ளி மாணவி ஆராதனாவின் வீட்டை அடைந்திருந்தான்.

'டேய்..அதுக்குள்ள போயிட்டியா.. இருடா வரேன்..'

அந்த பள்ளி ஆராதனா இவனிடம் புன்னகை முகமாக விடைபெறுவது தெரிந்தது. 'இப்போது விட்டால் இவனை பிடிக்கமுடியாது. அந்த பெண்ணோடு வீட்டிற்குள் சென்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. அப்புறம் அது இது என்று பேசி வீட்டில் உள்ள அனைவரையும் மயக்கி விடுவான். நான் இருக்கும் வரை அதை நடக்க விட மாட்டேன்'.

குடு குடுவென சென்றவள் ரவியின் காதை பிடித்து திருகினாள்.

"ஆ...ஆ...அம்மா.." தன் காதை பிடித்திருந்த அவள் கையை தடுக்க போராடினான் அந்த இளம் பருவ ஆண்மகன். இவள் விடுவாளா என்ன..?இது தான் வாய்ப்பு என்று அவள் உயரத்திற்கு அந்த பனைமர இளைஞனை குனிய வைத்து துடிக்க வைத்தாள்.

"ஆ...ஆ... வலிக்குது.. ஹே..சொல்றேன்ல.."வலியில் கத்தினான் அவன்.

"வலிக்குதா..?அப்போ எனக்கு எப்படி இருக்கும். நான் உனக்கு அக்காவாடா? முதலில் ஆன்ட்டி.. இப்போ அக்கா.. அப்புறம் அடுத்த தடவை பாட்டின்னு சொல்வீயா...???"

"அய்யோ... நீங்க என்ன சொல்லறீங்கன்னு எனக்கு சத்தியமா புரியல. என்னை விடுங்க. உங்ககிட்ட பேச எனக்கு நேரமில்லை". பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் தன் கைகளில் பற்றிக்கொண்டிருந்தும் அவன் உருவம் காற்றோடு காற்றாய் கலந்தது. எதிர்பாரத இந்த நிகழ்வில் சிற்பி செதுக்கி வைத்த சிற்பம் போல அசைவற்று நின்றாள் ஆராதனா.

'ஹேய்... இது எப்படி... ??? அப்டின்ன்னா??? ரவியும் அவனோட ஒவ்வொரு பருவத்திலயும் டைம் ட்ராவல் பண்ணியிருக்கிறானா...??? ஷ் ஷ் ஷ்... ஷப்பா... கண்ணை கட்டுதே சாமி...'

சுவரின் மீது சாய்ந்த வண்ணம் குழப்பத்திற்கு விடை தேட ஆரம்பித்தாள் அந்த மங்கை ஆராதனா. 'எல்லாம் சரி தான். அந்த ரவி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை தான். நான் இப்போது.. இங்கே.. இப்படி என் நேரத்தை அனுபவித்து கொண்டிருப்பதை பார்த்தால்.. அத்தனையும் நிஜம். அப்படியென்றால் நானும் டைம் ட்ராவல் பண்ணி கொண்டிருக்கிறேனா..??? எனக்கு ஏன் இவன் அக்கா என்றால் அத்தனை கோபம் வருகிறது..? இவன் எப்படி கூப்பிட்டால் எனக்கென்ன என்று என்னால் ஏன் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியவில்லை..??'

நெற்றி புருவம் சுருக்கி யோசித்தவள் அதற்கான காரணம் புரிபடுகையில் ஸ்தம்பித்துப் போனாள். 'அ...அ..ப்..டி..ன்..ன்..னா நா..நா...னும் அவனை விரும்புறேனா...?' அதற்கு மேலே அவளை யோசிக்க விடாமல் அந்த கற்கள் ஒளிர ஆயத்தமானது. ஒரு வித தெளிவுடன் அவள் அந்த கற்களை பார்த்தாள். அவள் பார்வையின் வீரியத்தில் அந்த கற்கள் தயங்கியதோ...? அந்த கற்களை உள்ளங்கையில் வைத்து நெஞ்சுக்கருகில் தூக்கி தன் மூச்சுக் காற்று படும் தூரத்தில் பிடித்தப்படி வைத்து அதனோடு பேச ஆரம்பித்தாள்.

"நீ எனக்கு பாதுகாப்பா இருப்பன்னு நான் நம்புறேன். என்னை இப்போ எ..எ..என்னோட தேஜா வூ.. ஹம்ச்...இல்ல இல்ல.. என்னோட ரவிக்கிட்ட இப்பவே கூட்டிக்கிட்டு போ. அது எந்த கிரகம்ன்னாலும் சரி.. எனக்கு இப்பவே அவனை பார்க்கனும்.. பாருடா.. உன்னோட ஆரு உன்னை தேடி.. உன்னை முழுசா நம்பி.. உனக்காகவே வந்திருக்கிறேன்.. அப்படின்னு சொல்லணும். உன்னை புரிஞ்சிக்கிட்டேன், நீ சொன்ன அத்தனையும் நான் நம்புறேன். என்னை ஏற்றுக் கொள்வீயான்னு கேட்கணும். ம்ம்ம்.. போ.. சீக்கிரம் போ.. என்னோட ரவிகிட்ட கொண்டு போ".

காதலை உணர்ந்து கொண்ட மங்கை தன் மனதை எந்தவித தயக்கமும் இன்றி அந்த கற்களிடம் முதல் முறையாக தன் காதலை வெளிப்படுத்தினாள். உணர்ச்சி பெருக்கில் தத்தளித்தவள் அந்த கற்களின் மேல் தன் உதடுகளை பதித்தாள். தூது செல்ல தனக்கு தலைவி கொடுத்த இன்பப்பரிசில் திக்கு முக்காடி போனது அந்த நீல பச்சை கற்கள். முதல்முறை அதுவும் வெகுநாள் கழித்து தனக்கு கிடைத்த முதல் முத்தத்துடன் குதூகலமாய் ஒளிர ஆரம்பித்தது. அந்த ஒளி வெள்ளத்தில் சந்தோசத்துடன் தன் கண்களை இறுக்க மூடிக்கொண்ட படியே தன் பயணத்தை தொடர்ந்தாள் ஆராதனா.

காதல் பயணம்...
கற்கால தோழியுடன்..
காதலனை தேடி சரணடைய!

#######################
 




deiyamma

நாட்டாமை
Author
Joined
Sep 6, 2020
Messages
63
Reaction score
101
Location
nagercoil
ஹாய் மக்களே

அடுத்த பதிவு இதோ. படிச்சி பாருங்கள். கருத்து சொல்லுங்கள்.



நன்றி.



என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம் 25 b



பால் நிலா அந்த அடர்ந்த கருத்த வானில் தன் தோழியரான நட்சத்திரங்களின் கலட்டா இன்றி தன் ரோமியோவை மும்மூரமாய் தேடிக் கொண்டிருந்தது . அந்த நிலாமகளின் ஒளிக்கதிர்கள் பார்ப்பதற்கே ரம்மியமாய் எங்கும் பரந்திருக்க, வழியில் ஓரிடம் வந்ததும் தன்னையும் அறியாமல் வெட்கம் கொண்டது. தன் வெளிச்சத்தை வாரி சுருட்டிக் கொண்டு வான்மேகத்தின் பின்னே ஒளிந்து கொண்டது. நாணத்தால் தேகம் நடுங்க நிலாமகள் முகத்தை ஒரு நொடி மறைத்துக் கொண்டாள் மேகத்தினுள்ளே.

தன்னுள் எழுந்த படப்படப்பை ரசித்தப்படி மேகத்தின் ஜன்னல் வழி விழி விரித்து பார்த்தது அவனை. தன் ரோமியோவை கண்ட மகிழ்ச்சியில் ஒரு நொடி தடுமாறினாலும் பின் சுதாரித்து தன் மனம் கவர்ந்த ஆணழகனை கவரும் பொருட்டு தன்னழகை மிச்சமின்றி வெளிச்சம் போட்டு காட்டியது. இதுநாள் வரை அந்த நிலா இவ்வளவு அழகாக பிரகாசித்திருக்க மாட்டாள் என்பது நிச்சயம். எல்லாம் காதல் செய்யும் மாயம்.




அங்கே மூன்று பக்க கண்ணாடி சுவரும் மேலே ஆகாயம் திறந்தவெளியாகவும் ஒரு புறம் பால்கனி சுவரோடு இணைந்திருக்க, செடிகள் சூழ அமைந்திருந்த அந்த இடத்தில் ஓவல் வடிவ வுட்டன் ஸ்டைலில் ஆன பாத் டப்பின் விளிம்பில் மரத்திலான மெழுகுவர்த்தி தாங்கியில் அழகாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது மூன்று டீ லைட் கேண்டில்கள்.

வேறு எந்த செயற்கை வெளிச்சமும் இல்லாததால் அதன் வெளிச்சம் கண்ணிற்கு இதமாய் இருந்தது. அதன் அழகை பொறாமையுடன் கண்ட நிலாமகள் தன் ஒளிக்கதிர்களின் வீரியத்தை கொஞ்சம் கூட்டினாள் என்றால் இங்கே கேண்டில்லிருந்து வந்த ஒளி காற்றின் வேகத்தில் தன் இடுப்பை வளைத்து உடலை நெளித்து பெல்லி டான்ஸ் ஆடியது.


இவர்களது கூத்தை லவேண்டேர் ஆயிலுலோடு இனிப்பும் கலந்த அந்த இதமான சுடுநீரில் மிதந்து கொண்டிருந்த வெள்ளை ரோஜா பார்த்து பரிகாசித்து புன்னகைத்தது.

இப்படியே மாறி மாறி நிலாமகளும் கேன்டில்லும் அந்த ஆண்மகனுக்காக மல்லுக்கட்டி கொண்டிருக்க அவனோ தலையை பின்னோக்கி அந்த பாத் டப்பில் சாய்த்து கண்களை மூடியபடியே எதையோ எண்ணி சிரித்துக் கொண்டிருந்தான். அவன் ரவி வர்ம குலோத்துங்கன்.


வெள்ளை ரோஜாக்களும் லவேண்டேர் மணமும் கேண்டில் வெளிச்சத்தில் கலந்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளித்துக் கொண்டிருந்தது. வலிமையான காதலை எங்கிருந்தாலும் எப்படியாவது சேர்த்து வைக்கும் என்பது இக்குளியலின் கூடுதல் சிறப்பு.


இதமான குளிர் காற்று முகத்தில் வீச, கதகதப்பான சுடுநீரில் உடல் புதைந்திருக்க அந்த நிழவொளியில் அவன் அழகனாய் தெரிந்தான். அவன் மனதில் இருந்த மகிழ்ச்சி முகத்திலும் புன்னகையாய் வெளிப்பட்டு கொண்டிருந்தது. தன் செல்ல காதலி ஆராதனாவிடம் காதலை சொல்லிய மகிழ்ச்சியில் வீட்டில் உள்ளவர்களுடன் ஆட்டம் போட்டு விட்டு அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டி தனிமையை நாடி அவனறைக்கு வந்திருந்தான்.

நொடிகள் நகர நகர அந்த இன்ப அவஸ்தை கூடியதே தவிர குறையவில்லை. அவன் இருக்கும் நிலையில் இரவு என்றும் பாராமல் ஆராதனாவை தேடிச் சென்றிருப்பான். ஆனால் அவளுக்கு கொடுத்த வாக்கு நினைவில் வர அப்படியே விட்டு விட்டான். அவளாக வரும் வரை அவளை எக்காரணம் கொண்டும் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று தான் உறுதி கொடுத்திருந்தானே. தன் காதலிக்காக முதன்முதலில் செய்த சத்தியம் வேறு. அதை எப்படி மீறுவான் அந்த கட்டிளங்காளை?

காதலுக்கும் காமத்திற்கு இடையே ஊசலாடிய அந்த உணர்வை அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் தான் நீருக்குள் வந்து அமர்ந்தான். இருந்தும் அவளது நினைவுகளே அவனை ஆக்கிரமித்து ஆண்டு கொண்டிருந்தது.

இன்றைய நாளின் தொடக்கத்தில் இருந்து தன்னவளுடனான உரையாடல் வரை மனம் அசைப் போட்டுக்கொண்டிருந்தது. அவளிடம் தன் காதலை சொல்லும் பொழுது வந்து போன அந்த மின்னல் பார்வையும், கடந்த கால நினைவுகளை நியாபக படுத்தும் பொழுது அவள் பேந்த பேந்த முட்டை கண் விரிய முழித்ததையும் இப்போது நினைத்தாலும் அவனுக்கு சிரிப்பாய் வந்தது.

'டேய் ரவி. உன்னோட லவ்வர் சரியான டுயுப்லைட்டா இருக்காடா. இவ்ளோ எடுத்து சொல்லியும் இன்னும் மந்திரிச்சி விட்ட கோழியாட்டம் முழிக்கிறா? ஹா ஹா ஹா..' ரவியின் மனசாட்சி அவனை கேலி செய்தது.

"சொல்லுவடா சொல்லுவ. உனக்கென்ன. அவள் பாவம்டா. நான் சொன்னதை நம்ப கஷ்டமா இருந்திருக்கும் அதான் அப்படி நடந்துகிட்டா. அவளுக்கே உண்மை புரியும் போது கண்டிப்பா என்னை புரிஞ்சிப்பா. நீ வேணும்னா பாரு இந்நேரம் அவள் என்னை தான் நினைச்சிக்கிட்டு இருப்பா. ஏன் நாளைக்கே என்னை தேடி வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை. ஏன்னா என்னோட காதல் மேல நம்பிக்கை இருக்குடா".

கொஞ்சம் விசித்திரமானது தான் இந்த காதல். மனதில் நுழைந்தவுடன் அடுத்தவர் மனதையும் அறிந்து கொள்ளும் கலையை கற்றுக்கொடுத்து விடுகிறதே!

இங்கே தன் காதல் மீது கொண்டுள்ள அபார நம்பிக்கையில் காதலன் உரைக்க அங்கே நிஜமாலுமே அவள் காதலுக்காக துடித்துக் கொண்டிருக்கிறாள். இது தான் காதலின் விளையாட்டோ?!

அந்த ஏகாந்த நிலையில் அவன் அப்படியே ஒரு வித காதல் கிறக்கத்தில் மிதந்து கொண்டிருக்க, அந்த இரவு நேரத்தை பகலாக்கும் பொருட்டு கண்ணை கூசும் விதத்தில் எங்கிருந்தோ ஓர் பெருவெளிச்சம் வீசியது. தொப்பென ரவி அமர்ந்திருந்த பாத் டப்பில் எதுவோ ஒன்று விழுந்தது. அதன் அதிர்வில் நீர்த்திவலைகள் சிதற கேண்டில் லைட்டுகளின் உயிர் ஒருநொடி ஆட்டம் கண்டு மீண்டது.

திடீரென ஏற்பட்ட இத்தாக்குதலில் அதுவரை கண்களை மூடியிருந்த ரவி விழிகளால் சுற்றுப்புறத்தை துலாவினான். அங்கே அவன் கண்ட காட்சியில் அந்த சுடுநீரிலும் அவனது தேகம் ஓர் நொடி நடுங்கியது.

அங்கே எதிரே அவனது ஆருயிர் காதலி ஆராதனா அவனுக்கெதிரே பாதி உடை நனைந்தபடி அமர்ந்திருந்தாள். விழிவிரித்தப்படி இதழ் மலர இவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

'அதெப்படி இவள் இங்கே வரமுடியும்?' என்று அவன் யோசித்து கொண்டிருக்கும் பொழுது அவன் கண்ணில் பட்டது அவள் நெஞ்சில் ஒட்டிக் கொண்டிருந்த நீல பச்சை வண்ண கற்கள். இவன் புரிந்து கொண்டதை அறிந்த அந்த கற்களும் ஒரு முறை ஒளிர்ந்து அணைந்தது.

ரவி யோசனையிலிருந்து வெளிவரும் போது பாய்ந்து வந்து அவனை அணைத்துக் கொண்டாள் ஆராதனா. இப்போது அவள் அவனது ஆராதனாவாக.

தன்னை பாய்ந்து வந்து இறுக கட்டிக் கொண்டிருக்கும் ஆராதனாவை கண்ட ரவி ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்று விட்டான்.

"ர..ர..வி.. ரவி.. என்னோட ரவி! நீ சொன்னதை நான் நம்பாம போயிட்டேனே டா. ஆனா இப்போ நான் தெளிவா புரிஞ்சிகிட்டேன். நான் வந்துட்டேன் ரவி. உன்னை தேடி வந்துட்டேன். என்னோட தேஜா வூ யாருன்னு நான் கண்டு பிடிச்சிட்டேன்.

ர..ர..ரவி! எனக்கு இப்போ எல்லா விஷயமும் தெரியும். நீ சொன்னது சரின்னு இப்போ ஒத்துக்கிறேன் ரவி. என்னை வெறுத்திட மாட்டியே? என்னை ஏத்துப்பல்..ல்..ல்..ல?!

ரவி.. ரவி.. நான் முதல நீ சொன்னதை நம்பல ரவி. ஆனால் அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் எனக்கு என்னோட தேஜா வூ யாரு? என்னோட ரவி யாருன்னு சொல்லிடிச்சி. ஐ ம் சாரி ரவி. உன்னை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா?"

அழகிய கண்கள் தண்ணீரில் மிதக்க உதடு துடிக்க பெண்ணவள் கேட்டதில் ஆண்மகன் நெஞ்சம் விம்மியது. 'இவளை நான் வெறுப்பதா? அது கனவில் கூட நடக்காதே'. அவளை தழுவி ஆறுதல் சொல்ல முயன்ற கைகளை பிடித்தவள் தன் கண்களில் ஒற்றி அழுகையின் ஊடே இதழ் பதித்தாள். பின் தன் கழுத்திலிருந்து டாலரை அவனிடம் காண்பித்தவள்,

"இ..தோ.. இ..தோ.. இந்த கல்லு இருக்குல்ல.. அது உனக்கும் எனக்குமான உறவை வெளிச்சம் போட்டு காட்டிடிச்சி. நான் உன்னை பார்த்தேன் ரவி. சின்ன பையனா.. டீன் ஏஜ் ரவியா.. இப்படி நீ எனக்காக தேடி வந்து என் மேல கேர் பண்ணுனதை நான் பார்த்தேன் ரவி. இதுக்கும் மேலயும் என்னால உன்னை விட்டு இருக்க முடியாதுன்னு தோணிச்சி.

எனக்குள்ள ஏன் உன்னைப்பார்க்கும் போதெல்லாம் படபடப்பா வித்தியாசம ஒரு உணர்வு வந்ததுன்னு இப்போ நான் புரிஞ்சிகிட்டேன். ரவி நான் சொல்லுறதை நம்புற தானே?" என்று அவனை பேச விடாமல் தொடர்ந்து பிதற்றிக் கொண்டிருப்பவளை என்ன சொல்லி சமாதான படுத்துவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான் அந்த பிசினஸ் மக்னேட்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த இரு வெளிச்ச மங்கைகளான நிலாவும் கேன்டிலும் அழுது கரைந்தனர். தங்கள் காதல் பொய்த்து போனதை விட, தங்களை விட வெகு அழகாய் ஜொலித்தபடி இருந்த இந்த மானுடப் பெண் விசும்புவதை அவர்களால் தாங்க முடியவில்லை போலும்.

தங்கள் சோகத்தை துடைத்துவிட்டு பெண்ணவள் ஆராதனாவை தேற்றும் பொருட்டு தங்கள் ஒளிக்கதிர்களை அள்ளி வீசினர் அவர்கள் மீது. அந்த பாத் டப்பில் ரோஜா இதழ்களின் நடுவில் காதலர்களின் சம்பாஷனைகளை கேட்டப்படி அவர்கள் காதலுக்கு குடை பிடிக்க ஆரம்பித்தனர்.

தன் கன்னங்களை வருடி தோள் தடவி தனக்கு வெகு அருகில் பிதற்றிய படி இருக்கும் தன் காதலியை அதற்கு மேலும் சகிக்க முடியாமல் அவளை இழுத்து தன் கைவளைவில் நிறுத்தி காற்றுக்கு அவசர அவசரமாய் விடுமுறை கொடுத்துவிட்டு அவள் இதழை சிறைசெய்தான் தங்களுக்கான அழகான காதல் சிறையில். அதில் அவர்கள் இருவரும் கைதிகளாக இருக்கவே பிரியப்பட்டனர்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
டெய்யம்மா டியர்
 




honey1207

இணை அமைச்சர்
Joined
Mar 16, 2020
Messages
844
Reaction score
1,001
Location
chennai
Afte a long time I had time to read surprisingly so many uds to read ?..just kidding sis , very nice romantic ?..well narration
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top