என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ-8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

deiyamma

Author
Author
Joined
Sep 6, 2020
Messages
11
Reaction score
38
Points
13
Location
nagercoil
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ. . .

ஹாய் மக்களே. .

அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இது வரை விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்து என்னை ஆதரித்து வரும் நல் உள்ளங்களுக்கு நன்றிகள்.

அமைதி வாசக பூக்களே. . மௌனம் கலைந்து விருப்பம் தெரிவிக்க அழைக்க படுகிறீர்கள்...

நன்றி...


“ஜீ பூம் பா
ஹேய் ஹேய் ஜீ பூம் பா
எந்தன் தேவதையை நீ காட்டு....

காட்டினாள்
காதல் கூட்டினால்
அவளை கும்பிடுவேன் பூ போட்டு . . .”


இன்னிசை தென்றல் காற்றின் வழி. . செவியில் நுழைந்து மனதை அழகாய் வருடி சென்றது. . . !

“இது என்ன மாயம்.?! அந்நிய ஆடவன் தொடுகை என்னை ஏன் இப்படி தாக்குகிறது.?!” என்று ஏதேதோ நினைவில் இருந்தவள் கொஞ்சமாய் சுதாரித்துக் கொண்டாள். அவன் தன்னை அணைத்த படி இருந்த அந்த வலிய புஜங்களை தன் பஞ்சு விரல் கொண்டு மெதுவாக பிரித்து விட்டாள். இவள் விலக சொல்கிறாளா? இல்லை இறுக்கி பிடிக்க சொல்கிறாளா. . ?!! அப்படி தான் அவள் விரல்கள் அவன் விரல்களோடு நார்த்தனம் ஆடியது...

"ஹ்ம்ம்..." பெருமூச்சுடன் அவனே விலகி விட்டான்.
பெண்ணவள் கொஞ்சம் முகம் வாடினாளோ . . ?

“ஆர் யு ஓ கே மிஸ் ?” என்றபடி புருவம் உயர்த்தினான்.

அந்த குரலில் மயங்கி போனாள் பெண். "அந்த இரு இமைகளும் ஏன் என்னை இவ்வளவு தூரம் தாக்குகிறது...?!”

அம்சமாய் ஒட்ட வெட்டப்பட்ட தலை முடியும் , அகன்ற நெற்றியும், மொழி பேசும் புருவங்களும், காதல் பேசும் அக்கண்களும் , கூரிய நாசியும்,அழகாய் ட்ரிம் செய்த லேசான தாடியும் , அடர்ந்த மீசை காடும் , சிவந்த அதரங்களும் , மினுமினுக்கும் பற்களும், பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தோன்றியது..
“இக்கண்களை நான் எங்கோ பார்த்திருக்கிறேனோ. . ?! இவன் தொடுகை எனக்கு ஏன் பரிட்சியமானதாக தோன்றுகிறது....?”


இதை தானே "தேஜா வூ " என்பார்கள். எங்கோ எப்பவோ பார்த்தது போல இருக்கும். ஆனால் இல்லை.. இது நிஜமும் அல்ல கற்பனையும் அல்ல. . . அது ஒரு வகை உணர்வு..

“ஒரு வேளை எனக்கும் தேஜா வூ வந்து விட்டதா. . . ?!”

“ஷ் ஷ் ஷ் .. இது என்ன சிந்தனை..?” தன் மனதை அடக்கிய படி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

சிரித்த முகம் மாறாமல் நின்றிருந்தான் .

“யெ....ஸ் . . ஜ ம் ஓ கே .” தடுமாறாமல் பேச கொஞ்சம் தடுமாறினாள் பெண்.

“கொஞ்சம் பார்த்து பறக்க கத்துக்கோங்க மிஸ். இல்லைன்னா சேதாரம் தான்..” என்றவன் குறு நகை புரிந்தான்.

அவள் பேந்த பேந்த விழித்தாள்.
“இப்பொழுது எதற்க்காக பறக்க சொல்கிறான்...? யாருக்கு சேதாரம்.?!” குழம்பி போனாள் பெண்.

அவள் குழப்பத்தை கண்டவன், “இப்படி வேகமா போன எங்கயாவது முட்டி மோத வேண்டியது தான். கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.” அக்கறையுடன் சொன்னான்.

“ஓ .. இவன் ஓடி வந்ததை சொல்கிறானா..?”
சட்டென தான் எதற்காக ஓடி வந்தோம் என்பது நினைவு வர
“ஆமா . . . அந்த பலூன் எங்கே. . ?”

பார்வையை சுழல விட்டாள்.

“அந்த பலூன் என்ன கட்டியா வச்சிருந்தீங்க?!! அப்படியே நிக்கிறதுக்கு.. இந்நேரத்துக்கு அது எங்கயாவது பறந்து போயிருக்கும் விடுங்க மிஸ்....” என்று இப்போதும் அவளது குழப்பத்திற்கு பதில் கூறினான்.

“இவனுக்கு எப்படி நாம் மனதில் பேசுவது எல்லாம் கேட்கிறது. இவன் என்ன மந்திரம் படித்தவனா. .? மாயாஜால வித்தை தெரிந்தவனோ . . .?”

“ஹா ஹா ஹா .. அப்படிலாம் இல்லைங்க .. எனக்கு ஒரு மாயாஜாலமும் தெரியாது. உங்க முகம் தான் உங்க மனசை அப்படியே காட்டுது.” என்றபடி அவள் முகம் பார்த்தான்.

“ஓ. . .”

“அந்த குவிந்த இதழ் மொட்டுகளை ஒரு முறை ஸ்பரிசத்தால் என்ன.. ?” பார்வை ஏக்கமாய் படிந்தது மங்கையவள் இதழ் மீது. . கொஞ்சம் அதிகமாகவே. .
தன் நினைப்பை நொடி பொழுதில் தூக்கி எறிந்தவன் அவளுடன் உரையாடலானான்.
“நீங்க தனியாவா வந்தீங்க.?”

“இல்லை . அக்கா ராம் எல்லாம் சேர்ந்து தான் வந்தோம்.” அவளது வாய் தானாக பதில் அளித்தது.

“அவர்கள் எங்கே?”

“இங்க தான் பக்கத்துல இருப்பாங்க.” கைகளை பிசைந்த படி பதிலளித்து கொண்டிருந்தாள்.

“சரி வாங்க. உங்களை உங்க அக்காகிட்ட விட்டுவிட்டு செல்கிறேன்.” என்றபடி அவன் நடந்தான்.

“இல்லை வேண்டாம். நீங்க கிளம்புங்க. நானே போகிறேன் .”

“ஏன்?”
நாணிலிருந்து புறப்பட்ட அம்பாய் சட்டென கேள்வி பிறந்தது அவனிடத்தில்.
“இது என்ன கேள்வி. .?! எனக்கு எங்க அக்காகிட்ட போக தெரியாதா..?? நான் என்ன சின்ன பாப்பாவா...???” கொஞ்சம் கோவம் வந்து விட்டதோ பெண்ணவளுக்கு.

“அப்படியா...?!! சரி போங்க..” வழியை விட்டு நகர்ந்து நின்றான்.

தலையை ஆட்டி விட்டு ஒரு எட்டு வைத்தவள் அப்படியே அதிர்ந்து நின்றாள்.

“ஹைய்யோ இது என்ன .. இங்கே யாரையும் காண வில்லை .. எல்லோரும் எங்கே மாயமாய் போனார்கள்.??!”

“யாரும் எங்கேயும் போகல. நீங்க தான் நானும் பறக்கிறேன்னு ... ஆள் இல்லாத இடம் வரைக்கும் பறந்து வந்திருக்கீறீங்க . . .” நக்கல் தொனித்தது அவன் குரலில்.

“இப்பாவது புரியுதா. .? நான் ஏன் அப்படி சொன்னேன்னு ..?!” குரலில் அழுத்தம் கூடியது அவனுக்கு..

“ச் ச...!” தன் நிலையை நொந்தபடி.

“சாரி .. பட்டுனு பேசுனதுக்கு .. முன்ன பின்ன தெரியாதவங்க கூட எப்படி சேர்ந்து போறதுன்னு ஒரு சின்ன சங்கடம். அதான் வேண்டாம்ன்னு சொன்னேன்.”

சட்டென இறங்கி வந்தாள்.

“புரியுது..” அவன் பதிலும் இலகுவாய் வந்தது..
அவளது இறக்கத்தில் இவன் கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டதோ . . ?!
“சரி வாங்க. இந்த பக்கமா போனா பத்து நிமிஷத்துல மெயின் ரோடு வந்திரும். அங்க போனா உங்க அக்காவை பிடிச்சிற்லாம்” என்றபடி அவளோடு இணையாக நடந்து வந்தான்.


“உங்களுக்கு இந்த இடம் ரொம்ப பழக்கமோ... நீங்க அடிக்கடி வருவீங்களா..” இவனுக்கு மட்டும் எப்படி வழி தெரியும் என்றெண்ணத்தில் அப்பாவியாய் கேட்டாள் .

“பழக்கம் தான்.எப்பவாது தான் வருவேன்.” எந்த ஒரு தயக்கமும் இன்றி அவர்கள் உரையாடல் தொடர்ந்தது.

“உங்க பெயரை சொல்லலியே .. . .”

“நீங்க கேட்கலையே. .?!” குறும்பாய் புன்னைகைத்தாள் .

அவன் நெளிந்தான்.
பின் அவளே அவன் முகம் பார்த்து சொன்னாள் , “ஆராதனா.”

“உங்க பெயர் என்ன..?”

“ரவி.”

“ஓ. கே. ரவி .. ஹீ ஹீ ஹீ .. சும்மா பெயரை சொல்லி பார்த்துக்கிட்டேன். . .”

“இதழ் குவித்து
நீயே உன் பெயரை உச்சரிக்கையில். . .
மோகம் கொள்கிறேனடி . .
இதழசைத்து என் பெயரை
நீ அழைக்கையில் . . .
கதிகலங்கி போகிறேன் நானடி. .”


“என்ன பண்றீங்க ஆராதனா ... படிக்கிறீங்களா.. இல்லை வேலை எதுவும் . . .?”

“இப்போ ரீசன்ட்டா தான் ஒரு கம்பெனில ஜாயின் பண்ணியிருக்கிறேன். பெயிண்டிங்ஸ் டெலிவரி பண்ணனும் . கஸ்டமர் கேட்கிற மாதிரி வடிவமைச்சு குடுக்கிற கம்பெனி அது.”

“ஓ அப்படியா.. அப்போ நீங்க நல்லா வரைவீங்கன்னு சொல்லுங்க. . .”

சிரித்து கொண்டாள் அவள்.

அவன் என்ன பண்ணுகிறான் என்று அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. பேச்சு முழுதும் அவளை சுற்றியே இருந்தது.

காலாரா நடந்தபடி அவர்கள் இப்பொழுது கொஞ்சம் ஆட்கள் இருக்குமிடம் வந்திருந்தனர். அங்கே தின்பண்டங்கள் விற்று கொண்டிருந்த ஒருவனின் கைகளில் மின்னிய அந்த பொருள் “என்னை வாங்கி கொள்ளேன்” என்று ஆருவை பார்த்து கண் சிமிட்டியது. . . யாருக்கும் தெரியாமல். .!

அவள் பட்டென ஓடி சென்று அந்த பையனை நிறுத்தி அந்த பொருளை ஆசையாக வாங்கி சுவைக்க ஆரம்பித்தாள்.
அந்த விரல்கள் நாட்டியம் ஆடியது போல இருந்தது, அவள் அதை எடுத்து வாயில் திணிக்கையில்.! இதழ்களோஆனந்தமாய் சிரித்து . . கொஞ்சம் சுழித்து . . கண்களை மூடி .. அதன் சுவையை அனுபவித்தபடி உண்டு கொண்டிருந்தாள். மெய் மறந்து அவள் சாப்பிடும் அழகை அவன் மனதில் சேகரித்துக் கொண்டான்.

இவள் வளர்ந்தாலும் சிறுபிள்ளை தான்.

“அக்கா.. காசு .” என்று அந்த ஏகாந்த நிலையை கலைத்தான் பையன்.

விழி திறந்தவள் சட்டென பார்த்தாள் பக்கத்திலிருந்தவனை. ..

“என்ன காசு இல்லையா. . ?”

பேந்த பேந்த விழித்தாள் பெண்.
“ஹா ஹா ஹா. . காசு கொடுக்காமையே நல்லா சப்பு கொட்டி சாப்பிடுற. . .! என்ன. .?!” கிண்டல் செய்தான் அவன்.

சங்கட பட்டாள் அவள்.
“சரி விடு. . நானே கொடுக்கிறேன். அப்புறமா தா.”என்றபடி வழக்கை முடித்தான்.

அவன் ஒருமைக்கு தாவியிருந்தான் இப்பொழுது. இவ்வளவு தூரம் அவளுடன் பேசியதன் விளைவோ..?

அவன் அவளை அதிகம் சீண்ட வில்லை. ஏதோ சந்தோஷ மனநிலையில் இருந்தான் போலும்.
அவளும் பின் ஏதும் அவனிடம் பேச வில்லை. கையிலிருந்த பொருளுக்கும் வாயிற்கும் மட்டுமே வேலை கொடுத்தபடி இருந்தாள். . .

பின் சட்டென அவன் புறம் திரும்பி . . “நீங்க ஏதும் வாங்கலையா . . உங்களுக்கு வேணுமா..?” தன் கையில் இருந்ததை காட்டி கேட்டாள். .

அவன் பார்வை கைகளை தாண்டி அவள் இதழோரத்தில் ஒட்டியிருந்த இடத்தை பாசமாய் தீண்டி அப்படியே கூடாரம் போட்டு அமர்ந்து விட்டது.

பெண்ணவள் மீண்டும் கைகளை காட்டி கேட்டாள் அவனிடம்.

தலையை மறுப்பாக ஆட்டினான் அக்கள்வன்.

“உங்களுக்கு தெரியுமா. . இது அவ்வளவு சுவை.. இதை ஒரு முறை சாப்பிட்டா வாழ் நாள் முழுதும் கூடவே ஒட்டிக்கிட்டிருக்கும் .. அப்படியொரு சுவை..!”
“அப்படி என்னம்மா இது. ஆமா இதோட பெயரென்ன ?”

“அதுவா.. .?!” என்றபடி அவள் ஆர்வமாய் விளக்க ஆரம்பித்தாள் .

“ஒரு ரூபாய் காயின் அளவே
இருந்தாலும். .
பனைமர நொங்கை போல
தித்திப்பானது தானது தான். .
நாக்கில் பட்டவனுடன். .
அதன் பாட்டிற்கு
சுவை ஊற்றெடுக்கும் . ..
இதன் மூலப்பொருள் இல்லாத இல்லமே இல்லை. .
சுவைகளில் இரண்டை கலந்து. . .
அழகாய் ஜொலிக்கும். . .!
சூப்பர் ஸ்டார் ரஜினியை போல
தகதகவென மின்னும். ..
மின்னுமையா மின்னும். . . .
சும்மா தக தகவென மின்னும்...!”


“இப்போ சொல்லுங்க . . ? அது என்ன பெயர். இந்த தின்பண்ட பொருளின் பெயர் என்ன...?”

(என்ன மக்களே . .
ரெடியா..? சீக்கிரம் யோசித்து சொல்லுங்க... பார்ப்போம் யாரு கண்டு பிடிக்கிறாங்கன்னு. பதில் சொன்னா . . . . எல்லோருக்கும்….?!!! )

என்று சொல்லியவள் கலகலவென புன்னகைத்தாள் . . .
அழகாய் வாய் விட்டு தெத்துப்பல் தெரிய மலர்ந்தாள் பெண்ணவள்.

அப்ப. . .டி. . .யே. . . உள்ளத்தை கொள்ளை கொண்டது அப்புன்னகை.
“இவ. . ளை. . இ. . வ. . ளை என்ன செய்தால் தகும். . . இம்சிக்கிறாளே. . .?!! ஹ்ம்ம்ம்.... முடியாது.. இனி தாக்கு பிடிக்க முடியாது. . .”

அவள் புறம் சட்டென நெருங்கி . . அவள் நீட்டிய கைகளை பிடித்து . . . கொஞ்சம் மங்கையின் வாசத்தை உள்ளிழுத்து கொண்டே. . . அவள் இடை வளைத்தான் . .

சிரிப்பொலி நின்று பெண்ணவள் விழி விரித்து அதிர்ந்து பார்த்தாள் ..

பார்வை முழுதும் அவனே ஆக்கிரமித்திருந்தான். “இது எ . . ன். . ன . . ? இவன். . என்ன செய்கிறான். .” இதயம் துடித்தது. . யுவராஜ் சிங் மட்டையில் பட்ட பந்தாக. . . !

அவன் கண்கள். . இவள் கண்களோடு கலந்து. . . மாய உலகத்திற்கு அழைத்து சென்றது. அவன் மூச்சு காற்று இவள் நாசியில் பட்டு சிலிர்த்து அடங்கியது.. பேதையவள் வசமிழக்க தொடங்கினாள். மீசை முடி அவள் மூக்கின் நுனி பட்டும் படாமலும் இதமாய் தீண்டி சென்றது.. இதழ்கள் அவள் இதழை நெருங்கி ஏதோ பாஷை பேச காத்திருந்தது வேறு அவளை சுகமாய் போதை கொள்ள செய்தது. .

இதோ. .இதோ. . .தீண்ட போகிறது.. . இன்னும் கொஞ்சம் கடந்தால் போதும். . . அவ்விதழ்கள் இரண்டும் இணையவிருந்த வேளையில். . .

அவன் கண் திறந்து. . பெண்ணவளை விழி மூடாமல் ரசித்து பார்த்தான். . . இதழ்கள் தானாக மலர்ந்தது. . . அவன் நுனி விரல் கொண்டு அவள் இதழோரமாய் ஒட்டியிருந்தவற்றை மெதுவாக துடைத்து விட்டான்.

ஏதோ மாயவலை அறுபட்ட உணர்வில் விழி திறந்தாள் அவள்.

“இ…வ்…ளோ… விலாவரியா பேசுனா மட்டும் போதாது கண்ணு. .. ஒழுங்கா சாப்பிட தெரியணும்....” என்று நகைத்தபடி. . மீண்டும் ஒரு முறை அவளிதழை துடைத்து விட்டான்.

பெண்ணவள் கொஞ்சம் குழம்பி போனாள்.

“ஹேய். . ஆரு. . . .” தூரத்தில் வதனா அழைப்பது கேட்டது.. .

“உங்க அக்கா இவங்க தானா. . சரி அப்போ நான் கிளம்புறேன். . பாய். . .”
கை ஆட்டி விட்டு சென்று விட்டான் அவன். அவன் அவளின் தேஜா வூ. அவள் கைகள் தானாக கழுத்து சங்கிலியை தடவி கொடுத்தது. . .

#################
 
deiyamma

Author
Author
Joined
Sep 6, 2020
Messages
11
Reaction score
38
Points
13
Location
nagercoil
அந்த ரெஸ்டாரண்ட் காலை நேர பரபரப்புடன் படு வேகமாக இயங்கி கொண்டிருந்தது. கடகடவென ஆர்டர் செய்த உணவுகளை தயாரிப்பதில் மும்மூரமாய் இருந்தது அந்த சமையற்கூடம்.

“ஓ கே டன். .” என்றபடி தான் தயாரித்த உணவை அந்த டேபிளில் வைத்தார் கீர்த்தனா.

நெஸ்ட் வேற ஆர்டர் எதுவும் இருக்கிறதா என அறிய அந்த நோட்டீஸ் ஸ்லிப்பை பார்த்தாள் . இப்போதைக்கு ஒன்றும் இல்லை. மற்றவர்கள் அவர்களுக்கான உணவை தயாரிப்பதில் கவனமாக இருந்தனர்.

அப்பொழுது அருகிலிருந்த "குக்"களின் பேச்சு காதில் விழுந்தது. “அப்புறம் என்ன ஆச்சு.. அந்த பொண்ணு இப்போ புரிஞ்சிகிட்டாளா. . ?!”

“முன்னதுக்கு இப்போ மோசம் தான். இது எங்க போய் முடியுமோ. . ?”

“ஏன் அப்படி சொல்லுற..?”

“அவளுக்கு குழந்தை பிறந்து நாற்பது கூட கழிக்கல, ஆனா அந்த பொண்ணுக்கு எதை பார்த்தாலும் வெறுப்பு,கோபம். பெத்த குழந்தைகிட்ட கூட ஒட்டுதல் இல்ல . .. ஒரே சண்டை தான்.”

“அய்யோ.. இந்த காலத்து பிள்ளைகளுக்கு இது எல்லாம் எப்படி புரிய வைக்கிறது. . ? அந்த காலத்துல கூட்டு குடும்பம், பக்கத்து வீட்டு உறவுகள் அப்படின்னு நிறைய சொந்தங்கள் பேச்சு துணைக்கு இருக்கும். சோ நமக்கு இந்த மாதிரி எண்ணமே வராது . . . ஆனால் இப்போ அப்படியா...?”

“ம்ம்ம்ம்... எனக்கும் அந்த பொண்ணோட மனநிலை புரியுது. ஆனா எப்படி அந்த பொண்ணுகிட்ட விலாவரியா சொல்லி புரிய வைக்கிறதுன்னு தான் தெரியல. . .” வருத்தம் கொண்டார் அவர்.

“ஹே கீர்த்தனா. உனக்கு வேலை முடிஞ்சா. . .?” குரல் இவளை பார்த்து கேட்டது.

“யெஸ் ..” என்றவர், அவர்கள் பேசிய சம்பாஷணையை பற்றி தன் கருத்தை சொன்னார்.

“நீங்க பேசுனதை வச்சி பார்க்கும் போ அந்த பொண்ணுக்கு குழந்தை பிறப்பிற்கு பின்னால வருகின்ற மெண்டல் டிப்ரெஸ்ஸன்னு நான் நினைக்கிறேன். இது அந்த காலம் இந்த காலம்..ம்..னு இல்லை. . எல்லா தாய்மார்களுக்கும் வர்ற பிரச்சனை தான்..

இதை மனசு விட்டு பேசுனாலே பாதி மன அழுத்தம் போயிரும்.

குழந்தை பிறந்தவுடன் உடலளவில் ஏற்படும் மாற்றம் தான் பொண்ணுங்களை முதலில் டென்ஷன் படுத்துறது. பிரசவத்துக்கு முன்ன இருந்த உடல் கச்சிதமா இருந்திருக்கும் . ஆனா இப்போ அப்படி இருக்காது. இதுல வேற குழந்தைக்கு பாலூட்டனும் . . .ராத்திரி தூக்கம் இருக்காது.. நல்லா பசிக்க வேறு செய்யும். உடல் சொன்ன பேச்சை கேட்காது. உடல் எடை கூடி கிட்டே போகும். முடி இஷ்டத்துக்கு கொட்டும்.

சோ இது எல்லாம் சேர்ந்து ஒரு வித அழுத்தத்தை அந்த தாய்க்கு கொடுக்கும். அவளும் தனக்குள்ளே அடக்கி பொறுத்து பொறுத்து பார்ப்பா . முடியாதா பட்சத்தில் சுத்தி இருக்கிறவங்க கிட்ட இல்ல குழந்தைகிட்ட காட்டுவ. . . ஏதோ குழந்தையால தான் தனக்கு இப்படி ஒரு நிலைமை அப்படின்னு அந்த தாய்க்குள்ள ஒரு எண்ணம்.

இந்த மாதிரி நேரத்துல சுத்தி இருக்கிறவங்க தான் பொறுத்து போகணும். அவளை அன்பாய் ஆதரவா அரவணைச்சி வழி நடத்தணும்.

கணவன் கிட்ட முதல் சொல்லுங்க. கூடவே இருந்து பார்த்துக்க சொல்லி. புருஷன் காரன் இந்த நேரத்துல கூடவே இருந்து பொண்டாட்டிய தாங்குன்னா பாதி மனஅழுத்தம் அந்த பொண்ணுக்கு குறைஞ்சிடும்.

அப்புறம் குண்டா இருந்தாலும் நீ அழகு தான். சும்மா ரதியாட்டம் இருக்க. உன் குழந்தை உன்ன மாதிரியே சேட்டை பண்ணுது. . அப்படி இப்படின்னு சொல்லி குழந்தை பக்கம் மனசை நல்ல விதமா திருப்பனும்.

கொஞ்சம் கொஞ்சம் அந்த பொண்ணோட மனசு இதெல்லாம் தாயாக பிறக்க இறைவன் கொடுத்த பரிசுன்னு தானா புரிஞ்சிடும்...”

“சரியா சொன்னீங்க கீர்த்தனா.”

“ஆமாம்.நீங்க சொன்னது கரக்ட் . நான் இனி அந்த பொண்ணோட வீட்ல இப்படியே பாலோவ் பண்ண சொல்றேன்.”

முறுவலித்துக் கொண்டார் கீர்த்தனா.

“மாக்ஸிமம் எல்லா பிரச்சனைக்கும் உங்க கிட்ட சொலுஷன் இருக்குது கீர்த்தனா.. யு ஆர் சோ சூப்பர்... “

அதற்கும் அவரிடம் இருந்து பதில் புன்னகையே....

###########

“இந்த தடி மாடு எங்க போய் தொலைஞ்சா. . ? எவ்வளவு நேரம் தான் இந்த கழுதைக்காக வெயிட் பண்ணறது.. சரியான சோம்பேறி.. போயும் போய் இவள் கூட எல்லாம் என்ன கோர்த்து விட்டு இருக்கிறாரே இந்த மேனேஜர்... ச் ச. . . .. .”

தன் நிலையை தானே எண்ணி.. நொந்த படி வழி மேல் விழி வைத்து காத்து கொண்டிருந்தான் அகில். ஆருவின் அலுவலகத்தில் வேலை செய்பவன் .

கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்தவன் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டான். இவளை. . . என்று பற்களை கடித்தான். போன் போட்டு இவள் எங்க இருக்கான்னு கேட்போம் என்றெண்ணிய படி, பேன்ட் பாக்கெட்டிலிருந்து அவன் போனை எடுக்கவும் . .

மூச்சிரைக்க படி எதிரே ஆராதனா ஓடி வந்து. . இவனருகில் நிற்கவும் சரியாக இருந்தது.

வந்தவள் நேராக பக்கத்தில் இருந்த பெண்மணியிடம் கேட்டாள் .

“டவெல் பி பஸ் வந்தா மேம் ...”

“நோ. . இன்னும் இல்லை..”

“ஓ.கே . தங்க் யூ மேம்...” என்று சொன்னவள்.. அவள் பாட்டிற்கு அங்கே காலியாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

“ஹப்பாடா. . . . என்ன வெயில். . .” என்று சலித்து கொண்டே நீண்ட பெரும் மூச்சுகளை இழுத்து விட்டுக் கொண்டாள்.

இதை குரூரமாய் அவன் கண்கள் பார்த்து கொண்டிருந்தது.

ஆனால் அவளோ.. . இயல்பாய் மூச்சு காற்று எடுக்கவும்.. மிகவும் ஆசுவாசமாக அமர்ந்து கொண்டாள்...

இங்கே ஒருவன் இவளை முறைத்தது முறைத்த படி இருக்க.. எதிரே பெண்ணவள் வெகு இலகுவாய் அமர்ந்து கொண்டிருந்தாள். அதுவும் இவனை இது வரை ஒரு முறை கூட தெரிந்தவன் போல கூட காட்டிகொள்ள வில்லை.

அவன் பற்கள் கடிபடும் சத்தம் பக்கத்தில் இருந்த நாய்க்கு தெரிந்ததோ என்னவோ.. அதுவும் அது பாஷையில் நற. . நற. . வென பற்களை கடித்து குலைக்க ஆரம்பித்தது. . ..

“ஹா ஹா ஹா . . .” அங்கே நின்று கொண்டிருந்த ஒன்று இரண்டு பேர் வாய் விட்டு சிரித்து விட்டனர்.

அவனுக்கு தான் சங்கடம் ஆகி போயிற்று.

எல்லாம் இவளால் வந்தது. “இவளை எல்லாம் . . . ?!!?”

“என்ன நீ பெரிய இவன்னு நினைச்சிட்டு இருக்கியா.. ரொம்ப ஓவர் ஆ தான் பண்ற.. வேலைக்கு சேர்ந்து இன்னும் இரண்டு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள இவ்வ்ளோ கெத்து காட்டுறது எல்லாம் ரொம்ப . . . ரொம்பவே ஓவர்.. ஒழுங்கா இரு பார்த்துக் கோ. . . .” அவன் பாட்டிற்கு தாளித்து கொண்டிருந்தான்.

ஆருவோ இவன் யாரோ வேறு யாரிடமோ பேசுகிறான் என்ற ரீதியில் முகைத்தை வைத்து கொண்டிருந்தாள்.

கைகளை தோள் பையினுள் விட்டு ஒரு குச்சி மிட்டாயை எடுத்து. . வாயிற்கு வேலை கொடுக்க ஆரம்பித்து விட்டாள். . .

இங்கே இவனது கோபம் வானத்திற்கும் பூமிக்கும் பறந்து கொண்டிருந்தது..

“ஏய். . நான் உன் ட தான் பேசிட்டிருக்கேன்.” கோபத்தில் கத்தி விட்டான்.

அவள் காதுகளை தேய்த்து விட்டு கொண்டாள்.

“ஷ் ஷ் ஷ் ... ஏன் இப்படி கத்துற.. நாலு பேர் பாக்குற இடத்துல இருந்துகிட்டு இப்படியா பிகேவ் பண்ணுவா. . . ஒரு டீசென்ஸி வேணாம்..? இது தான் இவ்ளோ வருஷமா நீ வேலை பார்த்த லட்சணமா. . .?!”

கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது அவனுக்கு.. “இவளை . . ச் ச. . .” இப்போதைக்கு இவளை ஒன்றும் செய்ய இயலாத நிலையை எண்ணி நொந்து கொண்டான்.

இவள் வரைந்த படங்கள் அத்தனையும் அருமை. முதன் முதலில் பார்த்த பொழுது அவனுக்கே ஆச்சரியம் தான். இந்த சின்ன பெண்ணிற்குள் இத்தனை திறமையா. . மேனஜர்க்கு முன்பாகவே வாழ்த்து தெரிவித்தவன் இவன் தான். மானேஜரும் இவள் பெயிண்டிங்கில் சாய்ந்து விட்டார். இவள் இப்பொழுது எல்லாம் அகிலை விட முன்னுரிமை பெறுவதாய் அவனுக்கு பட்டது. கொஞ்சம் அதிக பிரசங்கி தனமாக தோன்றியது. தன்னை விட சிறப்பாக இவள் செயல் படுவதில் பொறாமை எல்லாம் இல்லை.

ஆனால் இவள் பண்ணும் அலம்பலை தான் அவனால் துளி அளவும் தாங்க முடிவதில்லை. வேலை என்று வந்து விட்டாள் இருவரும் சமத்தாய் மாறி விடுவார்கள். ஆக மொத்தத்தில் இருவரும் நண்பர்களும் அல்ல..எதிரிகளும் அல்ல. . .

அப்படி தான் இப்போது புதிதாக வந்த ஒரு கஸ்டமர்க்கு தங்கள் நிறுவனம் சார்பில் பேச இன்று ஒரு இடத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. இது ஒரு முக்கியமான ப்ராஜெக்ட். ஆர்டர் கிடைத்தால் நல்ல லாபம். இவனுக்கு ப்ரோமோஷனுக்கு கூட வாய்ப்பு உள்ளது .

அந்த இடத்திற்கு வர சொல்லி விட்டு , எதிரே இருந்த ஒரு பேருந்து நிலையத்தில் இவளுக்காக இவன் காத்து கொண்டிருக்க... இவனை காக்க வைத்து விட்டு அம்மணி மெதுவாக வந்தாள். வந்ததும் வராததுமாய் நக்கல் நையாண்டி வேறு. . .

“ஆரு. . . . இது என்னது. . . லேட்டா வருவேன்னு ஒரு போன் கால் பண்ணி சொல்ல தெரியாதா.. இவ்ளோ நேரமா மனுஷனை காக்க வைக்கிறது..?” கோபத்தை கட்டு படுத்தி கொண்டு கேட்டான்.

“ஹேய். . போன் ஹாண்ட் பாக்ல இருக்குப்பா. . உன்ன வர சொன்னதே மறந்து போச்சி... சாரி . கோவிச்சிக்காத. .. நான் தான் சேர்ந்து போகலாம்னு சொன்னேன். பட் என்னன்னு தெரியல எனக்கு அது நியாபகத்துக்கே வரல. இனி இப்படி பண்ண மாட்டேன் சரியா. . .?!”

இரண்டு கைகளையும் காதை பிடித்த படி அவள் மன்னிப்பு கேட்கும் தோரணையின் அழகில் அவனும் தான் என்ன செய்வான். இவள் செய்யும் சேட்டைகள் எல்லாம் அவனுக்கு.. இப்படி ஒரு தங்கை நமக்கு இருந்தால் என்ன... என்ற எண்ணம் தான் தோன்ற வைக்கும். அவளை பிடிக்கும். ஆனால் வெளியே சொல்ல மாட்டான். சொன்னால் அம்மாவை தான் கையில் பிடிக்க முடியுமா. . ?!!


“சரி சரி.. வா.. கரக்ட் டைம்க்கு என்ட்ரி ஆகணும்.” சொல்லியபடி இருவரும் அந்த வானுயர்ந்த கட்டிடத்தை நோக்கி சென்றனர்.

###########
 
deiyamma

Author
Author
Joined
Sep 6, 2020
Messages
11
Reaction score
38
Points
13
Location
nagercoil
“டேய் பேராண்டி. . . நில்லுடா... எங்கே.. ஆபிஸ் கிளம்பிட்டியா. . .”

“ஆமா பாட்டி.”

“கொஞ்சம் பொறு . இன்னைக்கு நானும் வரேன்.”

அவன் விழிகளில் ஆச்சர்யம்.

“ஏன் தீடிர்ன்னு..” விழிகளில் ஆராய்ச்சி.

“எவ்ளோ நாள் தான் நானும் வீட்டுக்குள்ளே அடைஞ்சி இருக்கிறது.. அதுவும் இல்லாம நீ பிஸினெஸ் எப்படி பார்த்துகிறான்னு நானும் நேர்ல பார்த்து தெரிஞ்சிக்கணும்ன்னு நினைக்கிறேன்.. சரி வா. போகலாம்.”

பேரனும் எதுவும் சொல்லவில்லை. ஏதோ யோசனையில் இருந்தான். கார் ஆபிஸ் நோக்கி பறந்தது.

நேராக தனது கேபின் நோக்கி சென்றவன் பாட்டியை கூடவே அமர வைத்து கொண்டான்.

அவனது ஒவ்வொரு ப்ரோக்ராமையும். . . அதை அவன் கையாளும் விதத்தையும் பார்த்தவர்..

“பரவாயில்லைடா .. பிடிக்காம நீ தொழிலை பார்த்துக்கிறியோன்னு நினைச்சேன். ஆனால் அப்படி இல்லைங்கிற போது ரொம்ப சந்தோஷம்.”

“பாட்டி. நீங்க எதுக்கும் வருத்தபட தேவையே இல்லை. .” என்றபடி அவரை அணைத்து கொண்டான்.

“கம் ஆன் மை அயர்ன் லேடி. . .” என்று கை பிடித்து பாட்டியை எழுப்பியவன்.. “நாம் புதுசா கட்டிக்கிட்டு இருக்கிற ரெஸ்டாரண்ட்க்கு தேவையான பெயிண்டிங்ஸ் ஆர்டர் கொடுக்க நீங்களே நல்லா கம்பெனியா செலக்ட் பண்ணுங்க.. உங்களுக்கும் கொஞ்சம் நல்லா மாதிரி பீல் இருக்கும்.... வாங்க போகலாம்...”

என்று பேசிய படி அந்த மீட்டிங் ஹாலிற்குள் சென்றனர். கதவை திறந்த படி பாட்டி முதலில் நுழையவும் அடுத்து அவன் நுழையவும் சரியாக இருந்தது.

பாட்டியை அவர் இருக்கையில் அமர உதவி செய்தவன், பின் அவன் இருக்கையில் வந்து அமர்ந்து , எதிரே இருந்தவளை நிமிர்ந்து பார்க்கவும் . . . அவன் விழிகள் பளிச்சிட்டன. . .

அங்கே ஆராதனாவோ அதிர்ச்சியில் அந்த மேசையில் இருந்த பெயர் பலகையை ஒரு முறை வாசித்தாள் . .

“ரவி வர்ம குலோத்துங்கன்.” பெயர் பலகை அழகாய் புன்னகைத்தது. கூடவே கிழட்டு அயர்ன் லேடியும்...!
 
honey1207

Well-known member
Joined
Mar 16, 2020
Messages
814
Reaction score
1,112
Points
93
Location
chennai
Wow lovely ..romantic too but vijay pada dialogue madhri edho genmathil parthu vittu pona lovers ah 😘
 
KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
10,548
Reaction score
28,819
Points
113
Age
35
Location
Tirunelveli
Saon pupdi ya irukkumo🤔🤔🤔🤔

Interesting sister 👍👌
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top