• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னை மயக்கிய அழகியின் "வண்ணம் கொண்ட வெண்ணிலவே..."???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
@அழகி யின் “வண்ணம் கொண்ட வெண்ணிலவே” ஆன்கோயிங் நாவலாக போகும் போதே ரசித்து படித்திருந்தாலும் சமீபத்தில் முழுநாவலாக வாசித்தேன். வாசித்து கதையில் மூழ்கி தேன் உண்ட வண்டாக, மயங்கிப்போயிருக்கிறேன் நான். சில பதிவுகளை எத்தனை தடவை திருப்பி திருப்பி படித்தேன் என்று எனக்கே தெரியாது. ஒவ்வொரு தடவை படிக்கும் போதும் ஹப்பா! என்ன எழுத்துடா சாமி, என்று என் உதடுகள் என்னை மறந்து உச்சரித்தன. அதேபோல் கதையில் ‘அழுந்த கண்களை மூடித்திறந்தாள்’ என்னும் வார்த்தை க்கு நானும் என் கண்களை மூடித்திறந்தேன். ‘அடிக்குரலில் சிரித்தான் சுதாகரன் ‘ என்று ஆசிரியர் சொல்லும் போது எனக்கும் சிரிக்கத் தோன்றியது (ஹஹஹ... என் நிலைமை கொஞ்சம் கவலைக்குரியது தானோ?)

அழகி தன் மந்திரக்கோலை முதலில் கதாபாத்திரங்களுக்கு பெயர் வைப்பதிலிருந்தே சுழற்றிவிடுகிறார். குந்தவி, தமிழ்ச்செல்வன், இளமாறன், பிரபாகரன், ஆராதனா,விசாலாட்சி சுதாகரன், மாதுமையாள், மகேஷ் என்று அத்தனை கதாபாத்திரங்களையும் நம் மனதில் நிலைநிறுத்தியும் விடுகிறார். அதிலும் இத்தனை கதாபாத்திரங்களிடமும் இணக்கமில்லாத காந்திமதி அம்மா கதாபாத்திரமும் ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ என்று சொன்ன உடன் ஞாபகம் வருகிறது என்றால் அது அழகியின் திறமையன்றி வேறேது?

இந்த கதையைப் பொருத்தவரையில் நட்பு, காதல் என்ற இரட்டை படகில் அழகாகவே சமநிலையில் பயணம் செய்து நமக்கும் ஒரு மறக்க முடியாத பயணமாக்கி இருக்கிறார் அழகியார்.

ஆண், பெண் நட்பு என்பது அசாதாரணமான காலகட்டத்தில் குந்தவி, தமிழ்ச்செல்வன், இளமாறன் மூவரின் பள்ளிக்கால நட்பு, அவர்கள் வெவ்வேறு கல்லூரிகளில், வெவ்வேறு துறைகளில் இணைந்த பிறகும் தொடர்வது அழகு. அதுவும் மருத்துவபடிப்பில் இருக்கும் தங்களின் தோழியின் புதுநட்பு சரியானதாக இருக்க வேண்டுமே என்று கவலைக் கொள்ளும் தமிழ், மாறனின் அக்கறை, வாசிக்கும் நம்மை நட்புன்னா இப்படி இருக்கவேண்டும் என்று எண்ண வைக்கும். அழகான நட்புகள், தங்கள் துணைகளையும் தமது நட்பு வட்டத்துக்குள் இணைத்து தங்கள் நட்புக்கோட்டையை அன்பால் பிணைத்து கொள்வது இன்னும் அழகு.

இவர்களின் நட்பை உறவு என்னும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முயல்கிறார்கள் குந்தவியின் மகன் சுதா என்ற சுதாகரனும், தமிழின் மகளான மது என்ற மாதுமையாளும் .
ஏற்கனவே குந்தவிக்கு தன்மகன் ப்ரபாவை திருமணம் செய்து வைத்த விஷயத்தில் தமிழ்செல்வன் மீதுள்ள உள்ள கோபத்தை நெஞ்சில் நீருபூத்த நெருப்பாக வைத்திருந்த, சுதாகரனின் பாசத்துக்குரிய காந்திமதி பாட்டி தன் செல்லப்பேரனின் திருமணத்தை தமிழின் மகளுடன் நடைபெறவிட்டுவிடுவாரா என்ன? நிச்சயம் வரை வந்த திருமணத்தில் ஏடாகூடமாக தன் தேள் கொடுக்கு நாக்கை சுழற்ற, அதுவரை ஏகாந்தமாய் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் கலைந்து ஏடாகூடமாய் நடைபெற, அதன் உச்சகட்டமாய் காணாமல் போகிறாள் மாதுமையாள்.

அதன்பின் மாதுமையாளை சுதா கண்டுபிடித்து, தன்னை, தன் காதலை நிரூபித்தானா? அவர்கள் திருமணம் நடைபெற்றதா? திருமணம் நடைபெற்றிருந்தால், அந்த திருமணத்திற்கு பிறகு காந்திமதியின் நிலைபாடு என்ன? அதற்கு சுதாகரனின் எதிர்வினை என்ன? என்று அழகாக அழகியார் அவரது பாணியில் அழகாகச் சொல்லியிருப்பார்.
கதையில் இந்த காந்திமதி அம்மா பேசுற பேச்சு இருக்கே...அதுவும் தன் மருமகளான அந்த புகழ்பெற்ற கைனகாலஜிஸ்ட் குந்தவியை ‘ஒன்னுக்குமத்த குந்தவி’ ன்னு சொல்லும் பாருங்க, நான் மட்டும் குந்தவி இடத்தில் இருந்திருந்தேனென்றால் அந்த அம்மாவிற்கு எப்பவோ ஒரு ‘பாயாசத்தை’ போட்டுருப்பேன்.

இளமையின் ஆரவாரக்காதலை சுதாகரன்- மாதுமையாள் ஜோடி மூலமும், மத்திமவயதின் பக்குவக்காதலை மாறன்- விசாலாட்சி மூலமும், திருமணத்திற்கு பின்பான புரிதலோடு கூடிய காதலை தமிழ்- ஆராதனா, குந்தவி- ப்ரபாகரன் ஜோடி மூலமாகவும் அழகி காட்சிபடுத்தியிருந்த விதம் அழகு. அதிலும் ப்ரபாவின் குந்தவிக்கான ‘டாலி’ என்ற அழைப்புக்கு நான் ரசிகை.

கதையில் காந்திமதி பாட்டியை எதிர்த்து பேசும் ஒரே ஆள் மகேஷ். அதனாலேயே எனக்கு ஸ்பெஷல் மகேஷ். அப்புறம் நம் அழகியின் “மயங்காதே மனமே”கதை யின் ஹீரோ அபியின் அதிரடியும் கதையில் உண்டு.
இப்போ ரொம்ப முக்கியமான ஒருத்தரை பற்றி சொல்லப் போறேன். அது தாங்க அழகி கதையின் நிரந்தர கதாபாத்திரம் “ப்ளாக் ஆடி...” இம்முறை இந்த கறுப்புக்குதிரை தன் நாயகனின் கரங்கள் தவிர்த்து நாயகியின் கரங்களிலும் உலா வந்தது. (ம்ஹும்...குடுத்துவச்சது தான்)

இவ்வளவு அழகான ‘அழகியின்’ நாவல் சமீபத்தில் எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ் மூலம் புத்தக வடிவில் வெளிவந்துள்ளது என்பதை இந்த தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் தோழமைகளே.
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Excellent... Superb Review Suvi... எவ்வளவு தூரம் ரசிச்சுப் படிச்சிருக்கீங்க அப்படிங்குறது உங்க வார்த்தையிலேயே தெரியுதுப்பா
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
இந்த reviewல அழகிக்கா மயங்கி.. ஒரு புன்னகை எபியும் ஒரு அழகா இருக்க எபியும் தர போறாங்க.. :p:p:p
ஹஹஹ...காவ்யா, அப்படி ஒரு லக் நமக்கு அடிக்குங்கிற:D
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. (திருக்குறள்)

பொருள்: நட்பின் அரியணை எதுவென்றால், எப்போதும் மாறாமல் முடிந்த போதெல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.

இந்த விஷயத்தில் நான் பாக்கியசாலி. ஆண்டவனுக்கு நன்றி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top